உயிர்கள் சார்ந்ததன் வண்ணம் ஆதல்

Standard

உயிர்கள் சார்ந்ததன் வண்ணம் ஆதல்( சைவ சித்தாந்த துளிகள்) உயிர்கள் கேவல / சகல நிலையில் மும்மல / மாயா மலத்தோடு சேர்ந்து அறவு மயங்கி நிற்கும். முக்தி / சுத்த நிலையில் இறையைச் சார்ந்த வண்ணம் ஆகும். இவ்விரு வகை சார்புகளுள் இறைச் சார்பே ேமலானது. ஏனென்றால் இறைச் சார்பு இன்பம் தருவது. உலக சார்பு / மாயா மலத்தின் சார்பு துன்பம் தருவது. உலக சார்பு உடைய உயிர்கள் அவற்றின் பற்றுக் கொண்டு அவ்வனுபவங்களை சுமை என்று உணராது சுகமெனக் கருதும். இப்பாரம் குறையக்குறைய இறைவனை அணையும் ஆசை மிகும். அதுவரை ஆணவத்தோடு ஒன்றித்து நின்று அறிவிழந்த உயிர் அதன் கண் உவர்ப்படைந்து விட்டு பின்னர் மெஞ்ஞானத்தை தாணுவினோடு ஒன்றித்து நிற்கத்தலைப்படும். இதனை காளத்தி மலையை கண்டு அதனை அணுகி செல்லும் தோறும் தம்மேல் உள்ள பாரம் குறைவது போல அனுபவம்உண்டானதாக கண்ணப்பர் (பெ,பு, 97) கூறுவதால் அறியலாம். கட்டு நிலையில் உயிர்கள் வினைகளை செய்யும் அதன் பலன்களையும் துய்க்கும்.இறைவனிடம் அன்பு கொள்ளும் ேபாது ( இறைவழிபாட்டில்) பாரம் குறைவது போல் உணர காரணமாவதை அறியலாம். அவ் உயிர்களின் வினைகளையும் பலன்களையும் இறைவன் ஏற்றுக் கொள்வான். எனவே அவனை எடுத்து சுமப்பான் ( திருவருட்பா 65) என்பார் உமாபதி சிவம். உயிர் சார்ந்ததன் வண்ணமாம் தன்மையுடையது என்பது சைவ சித்தாந்த கோட்பாடு. அன்பு சிவம் இரண்டென்பர் அறிவிலார் அன்பே சிவமாவது யாரும்அறிகிலார் ….. என்ற திருமந்திரம் கூறியபடி அன்புதான்சிவம்/ சிவனைச் சார்ந்த சீவனான உயிர்கள் அவனது உருவமாகிய அன்பு உருவ மானதை உணர்த்தும்.திருச்சிற்றம்பலம்

சிவபோக சாரம் ( சைவ சித்தாந்த துளிகள்)

Standard

சிவபோக சாரம் ( சைவ சித்தாந்த துளிகள்) உலகப் பற்றினை விடுவதற்கு குரு கூறும் உபாயம் “துரத்தி யுன்னை ஆசை தொடராமல் என்றும் விரத்தியினர் ஆங்கவற்றைவிட்டு / பரத்திலன்பு செய்யடா செய்யடா சேரப்ரபஞ்ச மெலாம்பொய்யடா பொய்யடா பொய் ” //// பாடல் 107 ஸ்ரீ குருஞானசம்பந்தரின் சிவபோக சாரம்இப் பிரபஞ்ச மெல்லாம் ஒருசேர பொய் பொய் என்று உணர்ந்து அவற்றின்ேமல் உள்ள ஆசை உன்னைத் துரத்தித் தொடராத வண்ணம் அவற்றை உவர்த்து நீக்க, என்பெருமானிடத்து என்றும் நீங்காத அன்பை வைப்பாயாக, குருவின் உபதேசமாக அமைந்துள்ளது இந்தப் பாடல். இறைமீது வைக்கின்ற அன்பும் வழிபாடுமே பற்றை விடுவதற்கு வழி என்பதை வலியுறுத்துகிறார். பிரபஞ்சம் என்றால் உலகம், இந்த உலகமெல்லாம் ஒருசேரப் பொய் என்கிறார். பொய் என்றால்இல்லாதது என்று அர்த்தமன்று. பொருளின் நிலையற்ற தன்மையையே பொய் என்கிறது சைவ சித்தாந்தம். அதாவதுமாறுதலுக்கு உட்பபட்டதாய், ஐம்பொறிகளால் சுட்டி அறியப்படுவதாய் கால எல்லைக்கு உட்பட்டதாய் உள்ள அனைத்தும் பொய் என காட்டப்படுகிறது. அவை தோன்றி, நின்று, அழியும் தன்மையுடயது. இந்த பொய்யான பிரபஞ்சத்தை பற்றிக் கொண்டுதானே நாம் வாழ முடியும், அப்படி பற்றிக் கொ ள்வதால் அதுவே ேமலும் மேலும் நமக்கு ஆசை ஏற்படுகிறது. அந்த ஆசையே வினைத் துன்பமாக நம்மைத் துரத்தி துரத்தி தொ டர்வதற்கு காரணமாகிறது. யான் எனது என்னும் இருவகைப் பற்றினால் இந்த பிரபஞ்சத்தை இறுகப்பற்றிக் கொண்டு விடாதவர்களை துன்பமும்இறுகப்பற்றிக் கொண்டு விடாத என்கிறார். நம் உடம்போடு நம் உடமைகளோடும் எளிதல் பிரிக்க முடியாதபடி அவ்வளவு பற்றுக் கொண்டிருக்கும் நமக்கு விரத்தியோ நிறைவோ எளிதில்வராது. எனவே நம் எண்ணத்தை இறைவன் பால் நாம் திருப்பி விட வேண்டும், இறைவனது கருணையை நினைக்க நினைக்க அவன் மீது அன்பு மிகுந்து இறைபத்தியின் மூலம் இப் பிரபஞ்ச இன்பம் மிக மிக சிறுமையானதாக புலப்படும். பத்தி நெறியில் சிவத்தை நினைந்து நினைந்து நெஞ்சம் நெகிழ்ந்து உள்ளம் உருகும் அன்பே பிரபஞ்ச பற்று விட காரணமாக அமையும் என்று தேவார திருவாசக அருளாளர்கள் அனுபவித்து பாடியுள்ளதை பார்க்கிறோம். தாயின் அன்பைப்போன்றே இறை அன்பு என்று உணர்த்தும் அப்பர் அடிகளைப் போல ஸ்ரீகுருஞானசம்பந்தரும்உபதேசமாக பரத்தில் அன்பு செய்யடா செய்யடா இந்த பிரபஞ்சமெல்லாம் பொய்யடா பொயயடா பொய் என்று வலியுறுத்தியுள்ளார் ஆக குருவுபேசத்தின் வழியாக இறைவனிடத்து அன்பு செய்யச் செய்ய இப்பிரபஞ்சம் நிலையானது என்றும் உண்மை புரியவரும். அதனால் அவற்றின் உவர்ப்பு வர ஆசையும் துன்பமும் துரத்தி தொடராது என்று இறையின்பத்தினை வலியுறுத்துகிறார் குருநாதர்.திருச்சிற்றம்பலம்

கருமேனி கழிக்க வந்த திருமேனி

Standard

கருமேனி கழிக்க வந்த திருமேனி சைவ சித்தாந்தக் கொள்கையின்படி உயிர்கள் எழுவகை பிறப்புக்களில் உழன்றுஇன்ப துன்பங்கள்அடைகின்றன. எழுவகையிலும் எண்ணிலாடங்கா பிறவிகள் எடுக்கின்றன. மனிதப்பிறவி எடுத்த நாமெல்லாம் கருமேனி அதாவது கருவிலிருந்து தோன்றியவர்கள் பிறவியே ஒரு துன்பம் எனவே அதனை பிணி என்கிறார்கள் அருளாளர்கள். ஆணவம், கன்மம், மாயை எனும் பாசமாகி மலங்கள் உயிர்களை பிணித்திருக்கும் மும்மலங்களையும் சிவ பெருமான் தன் திருவருள் சக்தியால் நீக்கி முக்தி நிலைக்கு பக்குவப்படுத்துகிறார் எனவே அவர் திருமேனி , அறிவின் தெளிவே தவம், ஆணவ மலம் தவத்தில் ஒடுங்கும் , அறிவு தெளிவு பெறும் வரை பிறவி வந்து கொண்டே யிருக்கும். பிறவியாக்கை பெரியோனாகிய நம் சிவ பெருமானுக்கு மட்டுமே உயிர்களின் பிறவிப் பிணியை துடைக்க முடியும். தொழுவார்க்கு அருளுபவன் சிவபெருமான் என்பது தொல்லோர் வாக்கு. ” பெரும் பெருமான் என்பிறவியை வேரறுத்து பெரும்பிச்சு தரும் பெருமான் ” என்கிறார் மாணிக்க வாசகர் ” தொழுகை துன்பம் துடைப்பாய் போற்றி ” என்கிறார் அப்பர் அடிகள் “சாதலும் பிறத்தலும் தவிர்த்து எனை வகுத்து தன் அருள் தந்த எம்தலவனை ” என்கிறார் சுந்தரர் ” கருவரையிற் புகாதவர் கைதொழும் ஒருவரை தொழுது உள்ளம் உவந்துபோம் ” என்கிறார் சேக்கிழார் இடைவிடாது எடுத்த பிறவி வேரறுத்து உன் இனிய தாள்அளிப்பது ஒரு நாளே” என்கிறார் அருணகிரிநாதர் ” மாதா உடல் சலித்தாள் வல் வினையேன் கால் சலித்தேன் வேதா உன் கை சலித்தே .. நாதா இலுப்பையூர் வாழ் சிவனே இன்னும்ஓர் அன்னையின் கருப்பையுள் வாராமல் கா ” என்கிறார் பட்டினத்தடிகள் இப்பிறப்பின் நோக்கமே பிறவாமை எனும் வரம் பெறுவதே “பிறந்தார் பெறுவது பெருகிய துன்பம்”பிறவார் பெறுவது பெரும் பேரின்பம்” ” சிவபெருமான் நம்கருமேனி கழிக்க வந்த திருமேனி ” ” ஓதுவோம் ஐந்தெழுத்து போக்குவோம் கருவாசம்”திருச்சிற்றம்பலம்