சிவனோடு கலந்து சிவமாகி சிவானந்தத்தை நுகருதல்

Standard

சிவனோடு கலந்து சிவமாகி சிவானந்தத்தை நுகருதல்

“முத்திநெறி அறியாத மூர்க்கரொடு முயல்வேனைப்
பத்திநெறி அறிவித்துப் பழவினைகள் பாறும்வண்ணஞ்
சித்தமலம் அறுவித்துச் சிவமாக்கி எனையாண்ட
அத்தனெனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே.” –

திருமுறை 8 / அச்சோபதிகம்மாணிக்கவாசகர்

இப்பாடலை நெஞ்சுக்குள் நிறுத்தி உள்ளத்தால் உருகி படித்தால் இப்பாடலில் சூட்சுமமாக சொல்லப்பட்டுள்ள உண்மை புலனாகும்.

முத்திநெறி அறியாத மூர்க்கரொடு முயல்வேனை -முக்திநெறி அறியாத மூர்க்கரோடு இருந்த என்னை என்பது பொருளாகும். அதாவது ஆணவமலத்துள் அழுத்தி கண்ணில்லாத தேனீபோல் தத்தளித்து துன்பப்பட்டுக்கொண்டிருந்த என்னை என்று பொருள் கொள்க.

பத்திநெறி அறிவித்துப் -பக்தி வழியைக் காட்டி -தனு,கரண,புவன போகங்களைப் படைத்தருளி அதனை அனுபவிக்கச் செய்து மண்ணில் நல்ல வண்ணம் வாழ வழிதந்து பக்தி மார்க்கம் தந்து அதனூடாக

பழவினைகள் பாறும்வண்ணஞ் சித்தமலம் அறுவித்து-பழைய வினைகள் எல்லாம் கெட்டொழியும்படி அறிவை பற்றியுள்ள மூலமலத்தை(ஆணவமலத்தை) போக்கி

சிவமாக்கி எனையாண்ட – சிவமாக்கி என்னை ஆட்கொண்ட – சிவத்தன்மையாக்கி என்னை ஆட்கொண்ட

அத்தனெனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே – இறைவன் பெருங்கருணையினால் தானே வந்து தனக்கு அருளிய அத்தகைய அருமையை யார் தான் பெறுவர்!

ஆணவமலத்துள் சிக்கித்தவித்துக் கொண்டிருந்த தன்னை அதிலிருந்து விடுவிக்கும் பொருட்டு இறைவன் ஆன்மாவாகிய தன்மீது கொண்ட பெருங்கருணையின் நிமித்தம் தன்னை தனு,கரண,புவன போகங்களை அனுபவிக்கச் செய்து பிறவிகள் தந்து அதனூடாக பக்குவப்படவைத்து இன்பம்-துன்பம் இரண்டையும் சமமாக பாவிக்கின்ற அருமையை ஏற்படவைத்து கன்மம்,மாயை ஆகியவற்றை உதரியபின் மூலமலமாகிய ஆணவமலத்தை தானே முன்வந்து நீக்கி சிவமாக்கி நிலையான பேரின்பத்தை தந்தருளிகின்றான் என்பதை சூட்சுமமாக இப்பாடலில் உணர்த்துகின்றார் மாணிக்கவாசகர்.

சிவமாக்கி என்னை ஆண்ட என்ற பதமும் அத்தன் எனக்கு அருளியவாறு என்கின்ற பதமும் நமக்கு தெளிவாக ஒருசெய்தியை உணர்த்துகின்றது. அது யாதாயின்; இறைவனே நமக்குள் இருக்கின்ற சிவத்தன்மையை உணரவைத்து(ஒன்றாய்,வேறாய்,உடனாய் ஆன்மாக்களோடு இறைவன் கலந்திருக்கின்ற தன்மையை) நமக்கு வீடுபேறு அருளி நிலையான முக்தியை தந்தருளிகின்றான் என்பதையாகும்.

தொகுப்பு ; வை.பூமாலை
மேலும் பல ஆன்மீகத்தகவலுக்கு
https://vpoompalani05.blogspot.in/
https://vpoompalani05.wordpress.com/

Advertisements

தமிழ் வேதப்பாடல்கள் பாடுவதே சிவவழிபாடு ஆகும்

Standard

தமிழ் வேதப்பாடல்கள் பாடுவதே சிவவழிபாடு ஆகும்

இந்த மாபெரும் சைவ சமய உண்மையை நாம் மனத்தில் இறுத்த வேண்டும். தமிழ் வேதப் பாடல்கள்யாவும் முழுமுதற் பொருளாய் விளங்கும் சிவனாரின் உயர் நலன்களை போற்றுபவை ஆகும். இந்தப் பாடல்களைப் பாடுவதும் அல்லது மனம் ஒன்றி பதிகப் பாராயணம் செய்வதும் சிவவழிபாடு ஆகும் என்கிறார் மூன்றுவயதில் ஞானப்பால் ஊட்டப்பெற்ற திருஞானசம்பந்தர்.

   படிக்கத் தெரியதவர்கள் உள்ளன்புடன் காதினால் இப்பாடல்களை கேட்பதும் சிவ வழிபாடு ஆகும்.தமிழ் வேதப்படாலடகள் யாவும் சிவமணம் கமழும் தன்மை வாய்ந்த அற்புத பாடல் ஆகும். சிவ புண்ணியத்தை நிறைய அளிக்கும் மகததான ஆற்றல் உடையவை இப் பாடல்கள்.

இதனை கருத்தில் கொண்டே சம்பந்தர்  ” சக்கரம் சீர் தமிழ் விரகன் தான் சொன்ன தமிழ° தரிப்போர் தவம் செய்தோரே ” எனப்பாடியுள்ளார்.

பல பிறவிகளில் தவம் செய்த புனிதர்களே இந்த தமிழ் வேதப் பாடல்களை மனம்ஒன்றி பாராயணம் செய்யும் உள்ளம்வாய்க்கப் பெறுவார்கள், அத்தகைய புண்ணியம் இல்லாதவர்கள் வழியில்லாத வழியில்தான் செல்வார்கள்.

“நல்ல புனற்புகலித்தமிழ்ஞான சம்பந்தன்நல்ல

அல்லி மலர்க்ழனி ஆரூர் அமர்நதானை

வல்லதோர் இச்சையினால் வழிபாடி வைபத்து் வாய்க்க

சொல்லதுல் கேட்டல் வல்லார் துன்பந் துடைப்பாரே.  த,தி.மு 1

நாம் செய்த புண்ணியம் தமிழகத்தில் பிறந்தம்,தமிழ் வேதங்களை படிக்க இறையருள் கூட்யதும் என்றுணர்தல் வேண்டும்.

தமிழால் தமிழ்திருமுறைகளை பாடாது நாம் வேண்டுவதை அர்ச்சர்களிடம் கூறி அர்ச்சனை செய்யச் சொல்வது இடைத்தரகரகள் கொண்டு வேண்டுவதுபோல்அல்லவா? இதனையே பெரியபுராணத்தில் சேக்கிழார்

” அற்சனை பாட்டே ஆகும் ஆதலால் மண்மேல்நம்மைச் சொற்றமிழ் பாடு கென்றார் ”

தேங்காய் பழம்கற்பூரம் பழம் முதலியவற்றை அற்சகரிடம் கொடுத்துவிட்டால் நம் வழிபாடு முடிந்து விட்டது என நினைந்து கொண்டு திரும்பி விடுகிறோம். இது வழிபாடு ஆகிவிடாது. இன் தமிழ் பாக்கள் வாயினால் பாடித் துதிபப்பது மிகவும் அவசியம் என்கிறார் சேக்கிழார்.

” பண்ணான்ற இசைபாடும் அடியார்கள் குடியாக

மண்ணின்றி விண்கொடுக்கும் மணிகண்டன்”  சம்பந்தர்

” பண்ணின் மொழி சொல்ல, விண்ணும்தமதாமே ” (1,95,3)

வாயினால் தீந்தமிழ் பாக்களை பாடுங்கள் நீங்களும் உங்கள் சுற்றமும் இவ்வுலகில் வளமாக வாழலாம். பிறகு விண்ணுலகும் எய்தலாம் என்கிறார் சம்பந்தர்

பாட்டினால் பணிந்தேத்திட வல்லவர்

ஓட்டினார் வினையொல்னலயே   (1.57.5)

செந்தமிழ் பாக்களால் இறைவரை எவர் அற்சித்து வணங்கு கிறார்களே அவர்களுடைய வினைகள் யாவும் விரைவில் அழிந்தொழியும்.

“இன்னிசை பாடுவார்பால் மன்னினார்   (1.8.5)

இன்னிசை தமிழ் பாடல்களை இன்னிசையால் பாடும் தொண்டர்களின் பால் நிலைபெற்று நிற்பார் சிவபெருமான்

நாமெல்லாம் உய்யும் பொருட்டு இறைவரால் கயிலாயத்திலிருந்து இம்மண்ணுலகிற்கு அனுப்பட்டவவர் சுந்தர மூர்த்தி சுவாமிகள். இவர் சொல்கிறார். ” தமிழ் மாலை பாடவல்வர்கள் எப்போதும் என் தலைமேல் இருத்தற்குரியர் ஆவர். என்கிறார். இதிலிருந்து திருமுறை பாக்களின் அருமை பெருமை அளவிடற்கு அரியது. என்பதை நாம் உணர வேண்டும், அத்தகைய பாடல்கள் இறைவரைப் பாடி துதிப்பது தான் அற்சனை

ஆகும் இதுவே புனித சிவவழிபாடாகும்.

திருச்சிற்றம்பலம்

தாெகுப்பு வை.பூமாலை,

மேலும் பல ஆன்மீகத்தகவலுக்கு

https://vpoompalani05.blogspot.in/

https://vpoompalani05.wordpress.com/

கனியிருப்பக் காய் கொள்ளும் பேதமை

Standard

கனியிருப்பக் காய் கொள்ளும் பேதமை

கனியிருப்பக் காய் கொள்ளும் பேதமை
நம் சிவலாயங்களில் மூலவர் இருக்க, அவருக்கு சிறப்பான வழிபாடுகள் செய்யாமல் பரிவார தேவதைகட்கும், நவக்கிரக மூர்த்ததிகளுக்கும் சிறப்பு அபிடேக ஆராதனை செய்வதும் வழிபாடு செய்வதும் நாம் காணும் அவலக்காட்சி, இது ஒரு சிவநிந்தை செய்யும் செயல்கள் அல்லவா?  இது கனியிருக்க காய் கொள்ளும் பேதமை அல்லவா?
  ஆன்மீகப்பயணத்தில் தொடக்கத்தில் உள்ள இளம்சிவ உள்ளங்கள் திருநாகேச்சுரம் சென்றனர். அங்கு அவர்கள் கண்ட காட்சியாக கூறியது அங்கே சிவலிங்க மூலவரே இல்லையே ? அங்கே ராகு ேகது வழிபாடுதான் பிரதானமாக வழிபாடாக உள்ளதைக் கண்டு சிவலிங்கத்திருமேனியான மூலவரை தரிசனமே செய்யாது பரிகார தெய்வங்களான ராகு கேது வழிபாட்டடன் திரும்பிவிட்டனர்.இத்தனல் திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரரர் ஆகிய மூவராலும் பாடல் பெற்ற தலம்
“சந்திரன்னோடு சூரியர் தாமுடன்
வந்து சீர் வழிபாடுகள்செய் …….
…….. நாகேச்சரவரே  ……  திருமுறை 5 அப்பர் பாடியது
சூரியன் சந்திரன், இவர்கள் எல்லாம் வந்து வழிபட்டுச் செல்வார்கள் மூலவராய் எழுந்தருளியுள்ள சிவலிங்கத்திரு மேனியை  என்கிறார் அப்பர் சுவாமிகள்
” நாளு நாதன் அமர்கின்ற நாகேச்சரம் நண்ணுவார்
கோளுநாளும் தீயவேனும் நான்காம் குறிக்கொள்மினே ” சம்பந்தர்
திருநாகேச்சரப் பெருமானாரை வணங்கினால் கோள்களும் (நவக்கிரங்களும்) நட்சத்திரங்களும் நல்லதையே செய்யும், சிவ பெருமானாரின் கட்டுப்பாட்டில் இயங்குபவை நாளும் கோளும் . சிவனரை சார்ந்து சிவனையே பூசித்து வாழும் இவைகள் சிவனடியார்களுக்கு எப்படி தீமைகளை செய்து விடமுடியும், மாவட்ட ஆட்சியர்க்கு வேண்டியவர் என்றால் அவருடையகட்டுப் பாட்டில் வேலை செய்பவர்கள் அவருக்கு எப்படி தீமைகளை செய்து விட முமுடியும்? மாவட்ட ஆட்சியருக்கு கீழ் பணிபுரியும் பணியாளர்கள் அவர் கட்டுப்பாட்டில் வேலை செய்பவர்கள் அவருக்கு வேண்டியவருக்கு வணக்கம் சொல்லுவார்கள் இதுதானே உலக இயல்பு
   மூலவரை வணங்காமல் வணங்கமுடியாதவாறு செய்துவிட்டு, ராகு கேதுகையே வணங்கச் செய்வதும், நம்மவரகள் சொல்பவர்களின் பேச்சைக்கேட்டு இராகு கேதுவை மட்டும் வணங்குவது என்பது நம்முடைய அறியாமையே ஆகும். இத்தலத்தில் நடக்கும் ஏழாம் நூற்றாண்டிலேயே எண்ணிப் பார்த்து இப்பதிகத்தில் மூலவரை வணங்கினால் நாளும் கோளும் நல்லன செய்யும் எனப்பாடியுள்ளார் சம்பந்தர்.
“ஞாயிறு திங்கள்………
சனி பாம்பிரண்டும் உடனே
ஆசறு நல்ல நல்ல அவை நல்ல
அடியார்அவர்க்கு மிகவே ”  சம்பந்தர் கோளாறு பதிகம்
  காளத்தி ஆலயத்திலும் இப்படியே பாமர மக்கள் ஏமாந்து போகிறார்கள்.கஞ்சனூரில் மூலவரை வணங்க முடியாதவாறு இரும்புத்தடைகள் போடப்பட்டுள்ளன. மூலவரைத் தேடிபிடித்து வணங்கச் சென்றாலும் வெகு தொலைவிலிருந்தே வணங்கும்படி செய்துள்ளார்கள். மூலவரே கண்களுக்கு தெரியவில்லை. இத் தலத்து பதிகத்தில் தான் திருநாவுக்கரசு சுவாமிகள்  ” கஞ்சனூர் ஆண்ட கோவை கற்பகத்தைக் கண்ணாரக் கண்டுய்ந்தேன் ” எனப் பாடியுள்ளார்.
 கஞ்சனூர் ஆலயத்தினுள் நுழைந்த உடன் சுக்கிரனைத் தவறாமல் வணங்குமாறு இரும்புத்தடைகள் அமைத்துள்ளனர்.
  திருநள்ளாறு ஆலயத்தினுள்இது பற்றி கேட்கவே வேண்டாம் அங்கே தாம் தோன்றியவரான (சுயம்பு மூர்த்தி) தர்பாரண்யேஸ்வரர் ஆலயம் என்று சொன்னால் பலருக்கு தெரியவே இல்லை. சனிக்கோவில் என்றால் மட்டுமே தெரிகிறது. சனிக்கோயில் என்றால் தான் தெரிகிறது. நளன் முன் வினையால் துன்பப்பட்டான் பரத்வாச முனிவர் திருநள்ளாறு சென்று நள்ளாற்றீசுவரரை வழிபடும்படி உபாயம் கூறினார். வினையை போக்கக் கூடிய ஒரே ஒரு கடவுள் சிவபெருமானார் தான் என்பதை முனிவர் உணர்ந்து சொன்னார். சிவனாருக்கு ” வினைகடியும் (நீக்கும் ) விமலன் ” என்ற ஒரு பெயரும் உண்டு.
Image result for saneeswarar templeImage result for saneeswarar temple
   சிவாலயத்திற்கு செல்லு்ம் பொழுதும் வயதானவர்கள், முக்கிய பிரமுகர்கள், நோய்வாய்ப்பட்டவர்களைக் காணச் செல்லு்ம் போது ஏதாவது கைப்பொருட்கள் கொண்டு போக வேண்டும் என்று சான்றோர்கள் வகுத்த உண்மை.அப்படி நள் திருநள்ளாறு பெருமானாரைக் கண்டு வழிபடச் சென்றபோது தீபம், தூபம், மலர் ஆகியவற்றைக் கொண்ட சென்றான் என்று முக்காலமும் உணர்ந்த நிறைஞானி திருஞான சம்பந்தர் கூறியுள்ளார்.
” வளங்கெழுவு தீபமொடு தூபமலர் தூவி
 நளன் கெழுவி நாளும் வழிபாடுசெய் நள்ளாறே ” … சம்பந்தர்
Image result for saneeswarar temple
இதன் வழிபாட்டினால் மூலவரை வழிபட்டு துன்பத்திலிருந்து /சனியின் பிடியிலிருந்து விடுபட்டான்நளன் என்பது வரலாறு, சனிக் கிரகத்திற்கு அருள்புரிந்த சிவபெருமானாரை வணங்கினால் சனி நமக்கு நன்மையையே செய்யும்.
   நம்வினைக்கு ஏற்றவாறு இன்பங்களும் துன்பங்களும் நமக்கு வருகின்றன. பிறப்பும் இறப்பும் இல்லாத முழுமுதற் பொருளாகிய சிவனார் ஆனைப்படி செயல்படுபவன் தான் சனி, சனி ( துன்பம்) விலக வேண்டுமானால் மூலவராகிய தர்ப்பான்யேசுவரரை தான் வணங்க வேண்டும்.
   இதைப்போலவே திருவாரூருக்கு அருகில் உள்ள கொள்ளிக்காடு என்னும் தலம் சம்பந்த சுவாமிகளால் பாடல் பெற்றுள்ளது. அக்கினி வழிபட்டு பேறு பெற்ற தலம். இத்தலத்து
மூலவரை அக்கினீசுவரப் பெருமானாரை வழிபட்ட சோழ மன்னன் ஒருவனுக்கு சனிதோசம் நீங்கியது என்பது வரலாறு.
  மேலும் தற்சமயம் சிவலாயங்களில் இராகு கால வழிபாடு என்று சொல்லி, மூலவருடைய கதவைத்திறக்காமலே சுற்றுப் பாதையில் உள்ள துர்க்கைக்கு அபிசேக ஆராதனையும் செய்வது சர்வ சாதாரணமாகிவிட்டது. இன்னொரு வேடிக்கை சிவலாயங்களில் பைரவர் வழிபாடு என்று சொல்லி, மூலவரை விட்டுவிட்டு காவல் தேவதைக்கு சிறப்பு அபிடேக ஆராதனைகள் செய்யப்படுகின்றன. இதற்கெல்லாம் எந்த விதி இடம்தருகின்றதோ கடவுளுக்கே தெரியும்.
ஒரு ஊரில் எண்பது வயதான ஆலய பூசகர் ஒருவர் ஒரு கிராமத்து தம்பதிகள் வந்து அவரிடம் சனிக்கிரகத்திற்கு ஒரு அபிசேகம் அருச்சனை செய்ய கேட்டனர், அதற்கு அந்த பூசகர் ஐயா நான் முழுமுதற் பொருளாம் சிவபெருமானாரைத் தொட்டு நான்கு வேளையும் பூசை செய்பவன் அந்த சனியனை நான் தொட முடியாது நீயே போய் அபிசேகம் எல்லாம் செய்து கொள் என்று மறுத்தும் அவ்வழியே தன் வாழ்நாளையும் முடித்துக்கொண்டார்
  மூலவர் இருக்க, அவருக்கு சிறப்பான வழிபாடுகள்செய்யாமல் பரிவார தேவதைகளுக்கு சிறப்பு அபிடேக ஆராதனை செய்வதும் வழிபாடு செய்வதும் சிவநிந்தையே ஆகும், கனியிருப்ப காய் கொள்ளும் பேதமை இதுவே ஆகும்..
சைவர்களாகிய நமக்கு எந்த நிலையிலும் சிவபெருமானாரை அன்றி வேறு ஒரு தெய்வத்தையும் கனவிலும் நினையாத உறுதிதான் தேவை. குங்கிலிக் கலய நாயனார் இளையான்குடி மாற நாயனார் புகழ்த்துனை நாயனார் மெய்ப்பொருள்நாயனார் இப்படி அறுபத்து மூன்று நாயன்மார்கட்கு இறைவர் எளிமையான அன்போடு இறங்கி வந்து அருள் செய்ததன் காரணம் அவர்களிடமிருந்த உறுதிதானே.இதனையே காரைக்கால் அம்மையார்
” இடர் களையாரேனும் எமக்கு இரங்கா ரேனும்
 படரும் பணியாரேனும் சுடர் உருவில்
 என்பறாக் கோலத்து எரியாடும் எம்மானாருக்கு
 அன்பறாது என்நெஞ் சவர்க்கு   திருமுறை 11 … அம்மையார்
 எப்படிப்பட்ட துன்பங்கள் வந்தாலும் தீவண்ணராம் சிவபெருமானாரை அன்றி வேறு ஒரு தெய்வத்தை நினைய மாட்டேன், என்பது கொண்டு அம்மையாரின் மன உறுதியைக் காணலாம், அதுபோல் சுந்தரரரும்
 “….. மழப்பாடியுள் மாணிக்கமே
அன்னே உன்னையல்லால் இனி யாரை நினைக்கேனே ”  தி,7
    ஒன்றை நாம் சிந்திக்க வேண்டும், முழு முதற் கடவுளான சிவனாரால் முடியாதையா மற்ற அவரை வழிபடும் சிறு தெய்வங்கள் செய்துவிடப் போகின்றன என்ற சிந்தனை வேண்டும்
  சிவபெருமான் ஒருவரே நமது வினைகளை நீக்கி இன்பம் அருளும் பெற்றிமை உடையவர் என்று தெளிய வேண்டும். மற்றைய சிறு தெய்வங்களில் ஒன்றானதாக சிவபெருமானாரை எண்ணக்கூடாது பிறப்பும் இறப்பும் இல்லாத இவர் ஒருவரே முழு முதற்பொருள் என்று உணர வேண்டும், இவர் ஒருவரே கடவுள் என்று போற்றப்படக்கூடியவர் அவர் ஆவார்
திருச்சிற்றம்பலம்
கருத்து  / நன்றி ; தமிழ் வேதம்
தொகுப்பு ; வை. பூமாலை, சுந்தரபாண்டியம்
மேலும் பல ஆன்மீகத்தகவலுக்கு

சிவனருள் பெற செய்ய வேண்டுவன

Standard

சிவனருள் பெற செய்ய வேண்டுவன

 

(திருநாவுக்கரசர் பெருமான் சிவனடியார்களுக்கு வேண்டும் கடமைகளும் கட்டளைகளும்)

சிவனருள் பெற செய்ய வேண்டுவன

 

திருநாவுக்கரசர் பெருமான் சிவனடியார்களுக்கு வேண்டும் கடமைகளும் கட்டுப்பாடுகளும்

” திருநாமம் அந்தெழுத்தும் செப்பாராகில் தீவண்ணர் திறம்ஒருகால் பேசாராகில்
ஒருகாலும் திருக்கோவில் சூழாராகில் உண்பதன் முன் மலர் பறித்திட்டு உண்ணாராகில்
அருநோய்கள் கெட வெண்ணீறு அணியாராகில் அளிவற்றார் பிறந்தவாறு ஏதோ என்னில்
பெருநோய்கள் மிக நலிய பெயர்த்தும் செத்தும் பிறப்பதற்கே தொழிலாகி இருக்கின்றாரோ ”

சைவ சமயக் கோளாரிகளான எம்பெருமான் நால்வர் அறுபத்து மூவர் மற்றும்கருணைக் கடலாய் பார்வதியம்மையுடனமர் சிவபெருமான் திருவுருவப்படம் ஒவ்வொருவருடைய இல்லத்திலும் பூசை அறையில் கட்டாயம் இருக்க வேண்டும். சிவபெருமான் திருவுருவப்படம் தான் மற்ற தெய்வப்படங்குளுக்கு மேல் இருக்க வேண்டும்.

வழிபாட்டின் போது திருவிளக்கு எற்றி, கீழேஅமராமல் ஆசனத்தில் வடக்கு திசை நோக்கி அமர்ந்து திருமுறைகளைப் பாராயணம் செய்ய வேண்டும்.
(விளக்கு ஏற்றும் போது இல்லக விளக்கது இருள் கெடுப்பது)

ஒவ்வொரு நாளும் ஐந்தெழுத்தை ( நமசிவாய,சிவாயநம, ) மறவாது எண்ணல் வேண்டும்
(நற்றவா உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாவே)

ஒவ்வொரு நாளும் இறைவனது புகழை யாராவது ஒருவரிடமாவது பேச வேண்டும்
(தீவண்ணர் திறம்ஒருகால் பேசல் வேண்டும்)

ஒரு நாளுக்கு ஒருமுறையேனும் சிவலாயத்திற்கு சென்று கட்டாயம் வழிபாடு செய்தல் உண்ண வேண்டும்.
நாம் காலையில் உணவு உண்பதற்கு முன் இறைவருக்கு மலர் பறித்து இ்ட்டே உண்ண வேண்டும்

அருநோய்கள் நீங்கும் ஆற்றலுடைய திரு ஆலவாயான் திருநீற்றை எப்போதும் மங்காமல் பூசுதல் வேண்டும்

 

இது திரு நாவுக்கரசர் சைவர்களுக்கு இடும் அன்பு (கட்டளை) வேண்டுதல்
திருச்சிற்றம்பலம்

சுந்தரபாண்டியம் மண்ணின் மைந்தர் முதல் பட்டதாரி BDO karuppasamy

Standard

சுந்தரபாண்டியம் மண்ணின் மைந்தர் முதல் பட்டதாரி BDO karuppasamy

எனது மற்றும் எங்கள் ஆசான். எங்கள் சாலியர் சமுதாய விடிவெள்ளி பிடிஒ கருப்பசாமி அவர்கள் 6,10,2017 அன்று அன்னாரின் 86 வது வயதில் இறைவனடி சேர்ந்து விட்டார் என்பதையும் அன்னாரின்  ஆன்மா சாந்தி அடைய எங்களது இதய அஞ்சலி தெரிவித்துக்கொண்டாடிய ேபாது வெளியிட்ட பதிவை அவரின் நினைவாகவும் இன்றும் அவர்களுக்கு காணிக்கையாக வௌியிடுகிறேன்.

தனது 80 வது வயதில் சதா அபிசேகம் கொண்டாடிய சுந்தரபாண்டியம் மண்ணின் மைந்தர் முதல் பட்டதாரி எங்கள் ஊரின் மண்ணின் மைந்தர் முதல் பட்டதாரி
சுந்தரபாண்டியம் திரு பிடிஓ கருப்பசாமி அவர்களின் 80 வயது தாண்டி சதா அபிசேக விழா கொண்டாடிய போது முகநூலில் வெளியிடப்பட்ட கட்டுரை
வாழ்த்துவோம் ! வணங்குவோம்!!
சுந்தரபாணடியம் பிடிஒ கருப்பசாமி-பார்வதி தம்பதியரின் சதாபிசேக விழா
விருதுநகர் மாவட்டம் -ஸ்ரீவில்லிபத்தூர் வட்டம் சுந்தரபாண்டியம் மண்ணிற்கு பெருமை சேர்த்தவர்களில். சுந்தரபாண்டியம் சாலியர் மூக வம்சா வழியில் முதல் பட்டதாரி ஆகி தான் பெற்ற கல்வியின் பயனை கற்றறிவு இல்லாதவ்ர்கள் எல்லோரும் பய்ன்பட வேண்டுமென்ற நல்லெண்ணம் கொண்டு. தான் பெற்ற வறுமை. க்ஸ்டங்களை வரும் சந்ததியர்களும் வம்சாவழியினிர்களும் கஷ்டப்படக்கூடாது என்ற எண்ணத்தில் தன்க்கு கிைட்த்த வாய்ப்பு தனது திறமை. பொருள் உதவி கள் வழங்கி, இன்றுவரை தன்னால் இயன்ற அளவில் முடியாது என்று மறுக்காத நிலையில், ஆடம்பரமற்ற உதவிகள் செய்து, அதனால் முன்னேறிய குடும்பங்களை கண்டு தானும் மகிந்து, இன்று 80 அகவை கடந்து சதாபிஷேக விழா காணும் ” சுந்தரபாண்டியம் பட்டியாவீட்டு பிடிஒ கருப்பசாமி ” என்ற புகழோடு சுந்தரபாண்டியத்திற்கு பெருமை சேர்த்து, ஏழுர் சாலியர் குலத்தில் ஆண்டிபட்டி என்றால் சடையாண்டி, ஸ்ரீவி என்றால் தரகனார் மற்றும் பிஏ கோவிநத்ன், புனல்வேலி என்றால் கிருஷ்ணமூப்பர், சத்திரபட்டி என்றால் பண்ணையார் என்பது போல் சுந்தரபாண்டியம் என்றால் பிடிஒ கருப்பசாமி என்ற அளவிற்கு சுந்தரபாண்டியத்திற்கு பெருமை சேர்த்து கொடுத்த இம்மண்ணின் மைந்தர் உயர்திரு க,கருப்பசாமி – உமையாள்பார்வதி தம்பதியரின் 80 அகவை தாண்டி சதாபிஷே விஷா காணும் இம்மண்ணின் மைந்தரிடம் 3,6,2013 அன்று சுந்தரபாண்டியம் சாலியர் சமுதாய திருமண மண்டபத்தில் நடைபெறும் சதாபிஷேக விழாவில் நாமும் கலந்து அன்னாரை வாழ்த்தி , வணங்கி ஆசி பெறுவோம்,
இன்று 80 அகவை தாண்டி சதாபிஷேகம் காணும் மதிப்பிற்குரிய பெரியவர் திரு,பிடிஒ கருப்பசாமி அவர்களின் நற்குண்ங்களை இந்நாளில் நினைவுகொள்வது அன்னாரின் பெருமை சேர்ப்பதாகும், இளம் வயதில் மிகவும் ஏழை-வறுமை படிப்பறிவற்ற குடும்பத்தில் தோன்றியதால் தான் பெற்ற வறுமை, படிப்பறிவின்மை என்பது தங்களின் சந்ததியர்களுக்கு அறவே இருக்கக் கூடாது என அன்றே முழு முயற்சி, தன்னம்பிக்கை விடாமுயற்சி போன்ற எண்ணங்களின் சிந்தனையுடன் பேராடி சுந்தரபாண்டியம் நெசவாளர் – சாலியர் மக்களின் முத்ல பட்டதாரியாகி,அரசுப்பணியில் சேர்ந்து, வெற்றி கண்டு தன் வறுமைக்கும், படிப்பறிவற்ற தனது குடும்பத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்தார், இளம் பருவத்தில் தொட்கக கல்வி கூட பள்ளி மூலம் தொடர முடியாத சூழ்நிலையில் தனியார் ஆசிரியர் ஒருவர் மூலம் இஎஸ்எல்சி என்ற 8வகுப்பு அரசு தேர்வு எழுதி அதன் பின் ஸ்ரீவி, சிஎம்எஸ் பள்ளியில் எஸ்எஸ்எல்சி பயின்று இன்டர் மிடிேய்ட மதுரை தியாகராஜா கல்லூரியில பயின்று பின் அங்கேயே பிஏ பட்டம் பெற்றார்,இவ்வாறு பள்ளி வாழ்க்கை தொடர இதுதான் வழி என வழிகாட்டல் வழியின்றி தானே தனக் கென்று வழிசெய்து தாய் தந்தையரின் குறைந்த வருவாய் பொருளாதார நிலையில் படிப்பதற்கென்று சரியான ஒளிவிளக்கோ இடவசதியோ இல்லாத சூழலில் அன்றைய வசதி கொண்ட தெறகுகீழ்த்தெருவிலுள்ள அழகு மூப்பனார் அவர்களின் வீட்டு மேல் மாடி வரண்டாவில் சிறிய மண்ணெண்ணை சிமினி விளக்குடன் தனது படிப்பு காலத்தை கழித்து வெற்றி கண்டார், அன்னார் கல்லூரி வாழ்க்கையில் இருந்த போதும் எளிய உடை எல்லோரிடமும் அன்பாக பழகும் தன்மை தனது வயதிற்கு குறைந்தவர்கள் பள்ளி படிப்பை முடிகக கையாளும – வழிகாட்டல் முயற்சி என்பது அன்றிலிருந்து இன்றுவரை மாறா தன்மை கொண்டது,
அன்னாரின் உயர்ந்த பண்புகளை சீரிய நல்வழிகளையும் பெற அவர் குருவாகவும், நான் சிஷ்யனாகவும் அடைய இரண்டு வாய்ப்புகள் எனக்கு கிடைத்தது,அதை இன்றளவும் என்னால் மறக்கமுடியாது. அதில் ஒன்று நான் சுந்தரபாணடியம் அரசு உயர்நிலைப்பள்ளியில் 5வது படிவம் (அதாவது 10ம்வகுப்பு)படிக்கும் போது எங்கள் பள்ளியில் எஙக்ள வகுப்பிற்கு ஆங்கிலப்பாடம் நடத்தும் துணை ஆசிரியராக பணியாற்றிய போது, அவரிடம் பயிலும் மாணவனாக இருந்த பெருமை எனக்கு சேரும், அன்னார் அன்றைய நாளில் பாடம் நடத்திய விதம் எல்லோரையும் ஆங்கிலப் பாடத்தின் மேல் கொண்ட பயம் விலகியது, 2வது முறையாக அன்னார் பஞ்சாயத்து யுனியன் வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றிய காலத்தில் அன்னார் காரியபட்டி வட்டார வளர்ச்சி அலுவலகராக இருந்த போது நான் அங்கு வேளாண்மை பண்டகசாலையில் உதவி வேளாண்மை அலுவலராக பணியாற்றிய காலத்தில் அன்னரின் நிர்வாக கட்டுபாட்டில் பணிபுரியும் வாய்ப்பு கிடைத்து, அன்னார் காரியபட்டியில் பிடிஒ வாக பணியாற்றிய போது அன்னார் அருப்புககோட்டை கோட்டத்திற்கே கோட்ட வளர்ச்சி அலுவலராக நியமனம் செய்யப்பட்டார், பின் நானும் அக்கோட்டத்தில் அருப்புக்கோட்டையில் உதவி விதை அலுவலராக பணியாற்ற வாய்ப்பு கிடைத்து,அன்னார் உயர் அலுவலராக பணியாற்றிய போது சக பணியாளர்களிடம் தன் க்டடுப்பாட்டில் உள்ள பணியாள்ர்களிடமும் எப்போதும் அன்புடனும் அரவணைப்புபடனும் நேர்மை, காந்திய கொள்கையான சத்திய சமதர்ம கடமை உணர்வுடன் பணியாற்றிய சிறப்பு அன்னாரின் புகழுக்கு பெருமை சேர்ததது, அவர் சென்று பணியாற்றி ய இடமெல்லாம் சீரும் சிறப்பும் பெற்றவர்
” ஊருனி நீர்நிறைத் தற்றே உலகவாம்
பேரறி வாளன் திரு,
என்ற வள்ளுவர் வாக்கினுக்கிணங்க அன்னார் தான் பெற்ற கல்வி பயன் சுந்தரபாண்டியம் சாலிய வம்ச வழியினரும் அடைய வேண்டுெம்ன்ற தனியாத தாகத்தால் எங்கள் தெருவிலுள்ள இளம் வயதினரை அவர் கல்விக்காக வழிகாட்டிய நிகழ்வுகள் எங்களால் மற்கக முடியாது, அவரவர் வசதிக்கேற்ப என்ன படிப்பு எங்கு படிக்கலாம் என்ற வழிகாட்டும் தூண்டிதல் அன்னாருக்கேஉயரிய பண்பாக அமைந்தது, அதும்ட்டுமன்றி தன்னால் முடிந்த பொருள் உதவிகளும்செய்து அன்பு காட்டியுள்ளார், எஙக்கள் பகுதியில் வாசகசாலையுடன் இணைந்த பொது மண்டபம் கட்ட ஆலோசனை பெற அன்னாரிடம் சென்ற போது அன்னார் குடும்பமே தானே முன்வந்து மண்டபத்திற்காக பெரும் தொகை வழங்கி அன்னாரின் தாய்தந்தையரின் நினைவாக மண்டபம் கட்ட உதவி செய்தது அவருடைய ஈகை குணத்தை தெள்ளத தெளிவாக காட்டும்,
அது ம்டடுமன்றி அன்னார் இன்று வரை பணியாற்றும் கலசலிங்கம் பல்கலையில் உயர் கல்விக்காக செல்லும் ஏழை எளிய விபரமற்ற மாணவர்களுக்கு உகந்த துறையினை எடுத்துக் கூறி படிப்பதற்கும் கல்வி வள்ளல் அவர்களிடம் அறிமுகப்படுத்தியும்,குறைந்த நன்கொடையில் சேர்த்து அவர்களை சிறந்த பட்டதாரிகளாக ஆக்கிய பெருமை அவருக்கேசேரும், மேலும் உடலால், உழைப்பால் இயலாதருக்கு வயதான முதியோருக்கு தன்னால் முடிந்த உதவிகளை இன்றளவும் செய்து வருகிறார், நெசவு தொழில் நலிவடைந்த போது கல்வி தந்தையிடம் நேரிடையாக கூறி பல்கலை கல்லூரிகளில் வேலை வாய்ப்புகளை பெற்றுத்தந்துள்ளார்
அய்யா அவர்கள் சிறந்த பகுத்தறிவு சிந்தனையாளர் எழுத்தாசியர் தன்னை கொண்டவர், அன்னார் தன் இளமைப்பருவத்திலேயே எழுத்தாளாராக இருந்தவர் தன்னுடைய மைத்துனர் ஆர்,வி,பி, கரிகாலன் அவர்கள் நடத்திய திரைமுழக்கம் என்ற திங்கள் இதழில் எழுதிய பெருமை படைத்தவர், அன்னார் இன்றளவும் இதனை தொடர்ந்து வருகிறார் நம் கல்வி வள்ளலின் சாலியர் குரலில் இன்றளவும் அன்னாரின் சிற்ந்த க்டடுரைகளை காணலாம்,அப்பணி இனறும் தொடர்கிறது, அதும்ட்டுமன்றி பெரியாரின் முற்போக்கு சிந்தனையாளர், சுயமரியாதை சிந்தனையில் மிகுந்த நாட்டம் உள்ளவர் தன்னுடைய திருமணத்தை அக்காலத்திலேயே ஆன்மீக முறைப்படி நடப்பதை தவிர்த்து புரோகிதர்,ஒதுவார்கள் இல்லாமல் கட்டிமேளம் சடங்கு சாஸ்திர முறைகள் இல்லாமல் பேராசிரியர் தலைமையில், பெரியோர்கள் முன்னிலையில் மேடை நிகழ்ச்சியாக மணமக்கள் மாலை மாற்றும் முறையில் திருமணத்தை நடத்தி சீர்திருத்த முறை கல்யாணமாக ஆக்கி சீர்திருத்த சிந்தனையாளர், முற்போக்கு கருத்தில் தீவிர சிந்தனை இருந்தாலும் ஊர் நடைமுறை பழக்க வழக்கங்களுக்கு ஏற்ப தெய்வீக காரியங்களுக்கும் மரியாதை கொடுப்பவர், கோவில் திருப்பணிகளுக்கு நன்கொடை வழங்க்ல் தெய்வீக நிகழ்வுகளில் ஊரார் உறறார் மனம் சுழியாது அதற்கேற்ப பங்கு கொள்ளும் தன்மை கொண்டவர்,
பொது வாழ்வு மற்றுமன்றி தனது சொந்த வாழ்விலும் தனது வாரிசுகளை வளமுடன் வாழச் செய்தவர்,
“தந்தை மகற்காட்டும் நன்றி அவையத்து
முந்தி இருப்பச செயல்” என்ற வள்ளுவன் வாக்கிணங்க தனது புதல்வர்கள் புதல்விகளை நன் முறையில் ஏனையோருக்கு எடுத்துக்காட்டாக விளங்கச் செய்தவர்,
அதற்கொப்ப அன்னர் புதல்வ மக்களும்
” மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவண்தந்தை
என்றோற்றான் கொல் ” என்ற வள்ளுவன் வாக்கிற்கிணங்க அன்னாரின் மக்களும் இன்று கல்வி தொழில் பதவிகளில் உயர்ந்து குன்றின்மேல்இட்ட தீபமாக திகழ்கின்றனர், எனவே அன்னார் தற்போதும் எந்த கவலையும் இன்றி சேவை மனபான்மையில பணியுடன் அமாந்த பணியை இன்னும் செய்து கொண்டு சிற்ப்புடன் வாழ்ந்து வருகிறார்,
சுந்தரபாண்டியம் சாலியர் தெற்குத் தெருவில் அவர்களின் கொடைத்தன்னைக்கு எடுத்துக்காட்டாக அவருடைய விடாமுயற்சியால் ஓட்டுக்கட்டிடமாக இருந்த பொதுச்சாவடியை தனது அரிய சாதனையால், பக்கா கட்டிடமாக ரூபாய் ஒரு லட்சம் நன்கொடை வழங்கி வாசக சாலையாகவும், சமுதாய கூடமாகவும், அமைத்து கருப்பசாமி பார்வதி அம்மாள் கட்டிடமாக கட்டிக்கொடுத்த பெருமை அவரின் குடும்பத்தாரையே சாரும், இந்த தெரு, சமுதாய மக்கள் இதனை இன்னும் நினைவு கூறும்படி அமைந்துள்ளது.
கட்டிட திறப்பு விழாவின் போது எடுத்த புகைப்படம்
அன்னார் இன்னும் நுாறு அகவை தாண்டி நூற்றாண்டு விழா கொண்டாடும் வாய்ப்பினை அளிக்க ஆண்டவனை வேண்டி நாமும் அன்னாரிடம் ஆசிபெற்று நாமும் சிறக்க, அவரும் சிறக்க ஆசி பெறுவோம்,
Poomalai Vaikundaram’s photo.

இவருடைய பணியில் மிகவும் சிறப்பு அருள்மிகு கருப்பசாமி / பார்வதி அம்மாள் பொது நல அறக்கட்டளை சுந்தரபாண்டியம் என்ற அறக்கட்டளை மூலம் இன்றளவும் இலவச எல்லா நோய்களுக்கும், மருந்துகளுடன் மருத்துவ சேவை வழங்கி வருவது இது வரை யாரும் செய்திடாத ஒன்றாகவே எங்களுக்கு தெரிகிறது. அந்த அறக்கட்டளையின் நோயாளியின் மருத்துவ சீட்டு இதோ !
அவர்களின் பணி தொடரட்டும், அவர்களின் குடும்பம் ஆலபோல் பெருகி, அருகுபோல் வேர் ஊன்றி செழிக்கட்டும், பேரரறிவாளன் ஊரணி போல் எப்போதும் நீர் நிறைந்து சாலிய சமுதாய மக்களின் துயர் துடைக்கவும் பணி சிறக்கவும் வாழ்த்தி வணங்குகிறேன்,
இவண்: வை, பூமாலை சுந்தரபாண்டியம்

காசி, ராமேஸ்வரம்” என தீர்த்த யாத்திரை

Standard

 

“காசி, ராமேஸ்வரம்” என தீர்த்த யாத்திரை

ராமேஸ்வரம் காசிக்குச் சென்றால் ஏதாவது விட்டுவிட்டு வரவேண்டும் என்று சொல்வது ஏன் என்பதற்கான காரணத்தை கீழே பார்க்கலாம்.

இந்தப்பழமாெழியை வைத்து நாம் அங்கு சென்று தீர்த்தங்களில் நீராடிவிட்டு தான் கட்டிய ஆடையை விட்டு விட்டு வரும் பழக்கம் அநேகர் கையாண்டு வருகின்றனர், ஆனால் அதுவல்ல விட்டு விட்டு வருவது. நம் ஆசைகளை அரவே விட்டுவிட வேண்டும் என்பதற்குத்தான் அந்த பழமொழி
பற்று அற்ற நிலைக்குச் செல்ல வேண்டும் என்பதே இதன் அர்த்தம். அக்காலத்தில் குடும்பப் பொறுப்பினை நடத்தி முடித்தவர்கள் காசிக்குச் செல்வது வழக்கம். எந்த ஒரு பொருளின் மீதும் அதிக பற்றோ அல்லது விருப்பமோ இருக்கக்கூடாது, எதன் மீதும் எந்த ஒரு ஆசையும் இன்றி இறைவன் ஒருவனையே மனதில் சதா தியானித்து இருக்க வேண்டும் என்பதற்காக உண்டான பழக்கம் இது.

பிள்ளைகளுக்கு திருமணம் முடித்து பேரன், பேத்திகளைக் கொஞ்சி மகிழ்ந்து தன் இல்வாழ்க்கைக் கடமையைச் செவ்வனே செய்து முடித்தவர்கள் காசி, ராமேஸ்வரம் என தீர்த்த யாத்திரை மேற்கொள்வர். மோட்சகதியை வேண்டி இறைவனின் திருத்தலங்களை நாடிச் செல்வோர் இந்துக்களின் புனிதத்தலமாக விளங்கும் காசியில் புண்ணிய நதியாம் கங்கையில் ஸ்நானம் செய்து முன்னோர்களுக்காக பிண்டம் வைத்து ஆராதனை செய்வர்.

கங்கையில் ஸ்நானம் செய்தால் செய்த பாவங்கள் அனைத்தும் தொலையும் என்பது நம்பிக்கை. கங்கையில் ஸ்நானம் செய்து புதுமனிதனாக வெளிவரும்போது எதன் மீதும் அதிகப் பற்று இருக்கக்கூடாது என்பதற்காக மிகவும் பிரியமான வஸ்துக்களை இனிமேல் உபயோகிப்பதில்லை என விட்டுவிடுவர்.

எனக்குப் பிரியமான கத்தரிக்காயை காசியில் விட்டுவிட்டேன், இனிமேல் சாப்பிடமாட்டேன் என்று பெருமை பேசுவதால் மட்டும் எந்தப் பலனும் கிடைத்துவிடாது. அதன் உண்மையான பொருளைப் புரிந்துகொண்டு எந்த ஒரு பொருளின் மீதும் அதிக ஆசையோ, பற்றோ வைக்காமல் வாழவேண்டும். அவ்வாறு வாழ்பவனுக்கு ஆணவமும், அகம்பாவமும் தானாகவே அழிந்துவிடும். ‘ஆசை துறந்தால் அகிலம் உனக்கு’ என்ற வைரமுத்துவின் வரிகளை அனுபவத்தில் உணர முடியும்.

திருச்சிற்றம்பலம்