உண்மை உயர்வு தரும்.

Standard

உண்மை உயர்வு தரும்.

(கதையும் கருத்தும்)

ஒரு ஊரில் பல பாவங்களையும் அஞ்சாமல் ஒருவன் செய்து வந்தான். அவனுடைய குருநாதர் பலமுறை இப்படி பாவங்களை செய்யக்கூடாது என்று அறிவுரை கூறிவந்தார், அவன் அதற்கு செவி சாய்க்கவில்லை. கடைசியில் ஒன்றை மட்டும்கடைப்பிடிக்குமாறு கூறினார். செய்யும் பாவத்தொழில்களில் பொய் சொல்வதையாவது விட்டு விடு என்று அழுத்தமாகக் கூறினார்.  சீடனும் இதற்கு ஒப்புக்கொண்டான். ” எந்த நிலையிலும் பொய் சொல்ல மாட்டேன்” என்று சத்தியமும் செய்து கொடுத்தான். ஒருநாள் இரவு அந்த ஊர் அரண்மனையில் திருடுவதற்கு சென்று ஒரிடத்தில் ஒளிந்திருந்தான்.

  அந்த நேரத்தில் நகரச் சோதனைக்காக மாறு வேடத்தில் அங்கு வந்த அரசன் திருடனைக் கண்டார். ஏன் இங்கே ஒளிந்திருக்கிறாய் என கேட்ட அரசனுக்கு அவன் ” அரண்மனையில் திருடுவதற்காக வந்தேன் ” என்று உண்மையைக் கூறினான் திருடன்.

அரசன் திடுக்கிட்டான்,இவனுடைய செயல் முழுவதையும் கவனிக்க நினைத்த  அரசன் ” நானும் இங்கே திருடுவதற்காகத்தான் வந்துள்ளேன். நீ திருடிக்கொண்டு வருவதில் பாதியை எனக்கு கொடு நான் உன்னை காட்டிக் கொடுக்க மாட்டேன் ” என்றான் அரசன்.

திருடன் அதற்கு உடன்பட்டு, மாறுவேடத்ததில் இருந்த அரசனைக் காவல் வைத்துவிட்டு, அரண்மனைச் சுவரில் துளைபோட்டு உள்ளே நுழைந்தான். அங்கே இருந்த ஒரு இரும்பு பெட்டியை உடைத்தான், உள்ளே இருந்த விலை உயர்ந்த 5 இரத்தினக்கற்களுள் நான்கினை மட்டும் எடுத்துக் கொண்டான். பங்கு போட வசதிக்காக 4 எடுத்துக் கொண்டான். மீத முள்ள இரத்தினக் கல்லை பெட்டியிலேயே வைத்து விட்டு வெளியே வந்தான். மாறு வேடத்தில் இருந்த அரசனுக்கு 2 கற்களை கொடுத்து விட்டு திரும்பினான். இவனுடைய முழு முகவரியையும் அரசன் கேட்டுத் தெரிந்து கொண்டான். பிறகு அரன்மனைக்கு சென்று பெட்டியைப் பார்த்தான் ஒரு இரத்தினக்கல்இருக்க கண்டு மகிழ்ந்தான்.

மறுநாள் காலையில் மந்திரியை அழைத்து, ” நம் அரன்மனையில் திரு்ட்டு போயிருப்பதாக தெரிகிறது. பெட்டியை திறந்து பார் ” என்றார் அரசர். மந்திரி அவ்வாறே பெட்டியை திறந்து பார்த்தார் அதிலிருந்த ஒரு இரத்தினக்கல்ைல தான் எடுத்துக் கொண்டு அரசனிடம் ” பெட்டியிலிருந்த இரத்தினக்கற்கள் எல்லாம் திருடு போய் விட்டன ” என்றார்.

அரசன் இரவு நடந்தவற்றை எல்லாம் மந்தரிக்கு எடுத்துரைத்தார். மந்திரியை வேலையிலிருந்து நீக்கி விட்டு, உண்மையைச் சொல்லிய அந்த திருடனை அழைத்து வந்து மந்திரியாக்கினார்.

கருத்து ; உண்மை உயர்வைத் தரும் எனும் என்னும் தத்துவத்தை யாவரும் மனதில் இருத்த வேண்டும். குழந்தைகளுக்கு இளமை முதலே இதுபோன்ற கதைகளை சொல்லி அவர்களை நல்வழிப்படுத்தி வரவேண்டும். அவர்களுடைய வாழ்வு உயரும். செல்வம் சேர்த்து வைப்பது மட்டும்தான் பெற்றோருடைய கடமை என்று தற்காலத்தில் எண்ணுவதால் தான் இளைஞர் சமுதாயம் குறிக்கோள் இன்றி திசைமாறிச் செல்கிறது.

திருச்சிற்றம்பலம் / ஓம் நமசிவாய ஓம்

தொகுப்பு ; வை. பூமாலை, சுந்தரபாண்டியம்

நன்றி ; தமிழ் வேதம்

Advertisements

சித்தருக்குக் கிட்டிய சித்தி (சதாசிவ பிரம்மேந்திரர்)

Standard


சித்தருக்குக் கிட்டிய சித்தி

                 (சதாசிவ  பிரம்மேந்திரர்)

நெரூரில் சமாதி கொண்ட சித்தர் சதாசிவ பிரம்மேந்திரர். இவரைப் பற்றி பல வரலாற்றுச் செய்திகள் சொல்லப்படுகின்றன. தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் பிரதிஷ்டை செய்தவர் இந்த சதாசிவ பிரம்மேந்திரர் என்கிறார்கள். இவர் நிகழ்த்திய அற்புதங்கள் இன்றும் பேசப்படுகின்றன. இவருடைய சமாதியின் மேல் வளர்ந்திருக்கும் விருக்ஷம் பட்டுப் போனது, இப்போது மீண்டும் துளிர்த்து வளர்வதைக் காண மக்கள் வந்து போகிறார்கள். நெரூர் காவிரிக் கரையில் அமைதியான சூழலில், வயல்களும், தோட்டங்களும் சூழ்ந்த இயற்கை அழகு கொஞ்சுகின்ற இடத்தில் அமைந்திருக்கிறது இவரது சமாதி. இவரது சித்துக்களில் ஒன்றை பார்க்கலாம்.

காவிரியாறு ஈரோட்டைத் தாண்டி கொடுமுடி எனும் தலத்துக்கு வருகின்ற இடத்தில், ஆற்றின் இடைப்பட்ட பகுதியில் அமைந்துள்ளது அகத்தியம்பாறை எனும் இடம். ஆற்றின் நடுவே அமைந்துள்ள இந்தப் பாறையின் மீது மோதி காவிரி வெள்ளம் கிழித்துக் கொண்டு இருபுறமாக விரைந்து செல்லும் அழகைப் பார்த்து ரசிக்கலாம். அந்த பாறையின் மீதுதான் சதாசிவ பிரம்மேந்திரர் வந்து அமர்ந்து தியானத்தில் இருப்பாராம். பிறரால் தொல்லை ஏற்படாத ஏகாந்தமான இடமாக இந்த இடத்தை பிரம்மேந்திரர் தேர்ந்தெடுத்ததில் வியப்பில்லை. அப்படி அவர் தியானத்தில் தன்னை மறந்து, இவ்வுலக புறவாழ்வை, தன் உடலை மறந்த நிலையில் பிரம்மத்தில் ஈடுபட்டிருக்கும்போது சுற்றுப் புறத்திலோ, தன் உடலுக்கோ எது நேரினும் அதனை உணரமுடியாத ஆழ்ந்த தியான நிலை. அப்போது அவர் உடல் வெறும் கட்டை, அதற்கு ஏற்படும் துன்பம் அவரை எட்ட முடியாத நிலை.

அப்படியொரு நாள் ஆழ்ந்த தியானத்தில் இருந்த சதாசிவ பிரம்மேந்திரரை ஆற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஒவ்வொரு நாழிகைக்கும் அதிகரித்து இறுதியில் பாறையின் மீது ஆழ்நிலை தியானத்தில் இருந்த யோகியாரை அடித்துக் கொண்டு போய்விட்டது. அவர் உடல் என்னாயிற்று. அவர் உயிர் என்னவாயிற்று என்பது ஒருவருக்கும் தெரியவில்லை. சில நாட்களில் ஆற்று வெள்ளம் வற்றியதும், பாறையில் அமர்ந்து தியானத்திலிருந்த அந்த யோகி எங்கே, என்னவானார் என்று சிலர் தேடத் தொடங்கினார்கள். ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட அவர் எங்கு சென்றாரோ, கரை ஏறினாரோ, தன்னை மறந்து இருந்த நிலையில் நீரில் மூழ்கி இறந்து போய் உடல் எங்காவது கரை ஒதுங்கியதோ. அல்லது ஆற்று நீரோடு போய்விட்டதோ? தேடிப் பார்த்தும் அவர் கிடைக்கவில்லை என்றதும், மக்களும் சோர்ந்து போய் தேடுதலை விட்டுவிட்டார்கள். மறந்தும் விட்டார்கள்.

சில காலம் ஆனபின்பு ஆற்றில் மணல் அள்ள மாட்டு வண்டிகள் வந்த வண்ணம் இருந்தன. மணல் கொள்ளை என்பது இப்போதுதான், ஆனால் அந்த நாளில் வீடு கட்ட, மற்ற கட்டடங்கள் கட்ட மணலை ஆற்றிலிருந்து வண்டிகளில் எடுத்துப் போனார்கள். அப்படி மணல் எடுத்துப் போக வந்த ஆட்கள் ஆற்றில் நல்ல மணல் மேடிட்டுக் கிடந்த இடம் நோக்கிப் போய் அங்கு மண்வெட்டியால் மணலைத் தோண்டி எடுத்து வண்டிகளில் கொட்டிக் கொண்டிருந்தார்கள். மேடு கரைந்தது. வண்டிகளில் மணல் நிறைந்தது. சற்று ஆழத் தோண்டிய ஒரு இடத்தில் மணல் எடுத்தவன் ஓங்கி மண்வெட்டியால் வெட்டியபோது, மணல் அல்லாத ஏதோவொரு பொருளின் மீது மண்வெட்டி பட்டதை உணர்ந்தான். உடனே அந்த இடத்தை ஜாக்கிரதையாக தோண்டி மணலை விலக்கிப் பார்த்தான். அங்கு ஒரு மனிதரின் தலை. அதில் மண்வெட்டியின் வெட்டுப் பட்டு குருதி கசிந்தது.

சுற்றிலும் இருந்த மணலை விலக்கி அந்த மனிதரை வெளியே எடுத்தனர். ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பாறையின் மீது யோகத்தில் ஆழ்ந்திருந்த சதாசிவ பிரம்மேந்திரர்தான் அவர். இத்தனை நாள் மணலுக்கடியில் தன்னுணர்வு இன்றி சதா சிவ தியானத்தில் ஆழ்நிலையில் உறைந்திருந்திருக்கிறார். பரப்பிரம்மமான ஞானி ஒருவர் மணலுக்கடியில் யோக நிலையில் இருந்தவர் தலையில் மண்வெட்டி பட்டு இரத்தம் கசிகிறது, அந்த ஞானி உயிருடன் தான் இருக்கிறார் எனும் செய்தி ஊருக்குள் கசிந்தது.

கூட்டம் கூட்டமாக மக்கள் வந்து பார்த்தனர். செய்தி சுற்றுப்புறங்களுக்கும் பரவியது. கொடுமுடிக்கருகில் ஆற்றுக்கிடையே இருந்த பாறையில் ஒரு ஞானி தவத்தில் இருந்தார். அவரை வெள்ளம் அடித்துச் சென்றுவிட்டது என்றார்கள். இவர் அவராகத்தான் இருக்க வேண்டும். இவர்தான் சதாசிவ பிரம்மேந்திரர். ஞானி அல்லவா, உணவு, நீர் இன்றி உயிர்வாழும் சக்தி வேறு யாருக்கு உண்டு. அவரை மணலுக்குள்ளிருந்து வெளியே கொணர்ந்து, உடலுக்கு சூடேற்றி, உண்ண ஆகாரம் கொடுத்து அவரை மக்கள் சுயநிலைக்குக் கொண்டு வந்தார்கள்.

சுய நினைவு திரும்பி சுற்றிலும் நிற்கும் மக்களை ஒருமுறை சுற்றுமுற்றும் பார்த்து தான் எங்கிருக்கிறோம், தனக்கு என்னவாயிற்று என்பதை உணராமல், உடனே புறப்பட்டு யாரிடமும் எதையும் கேட்காமல் மெளனியாக கால்போன போக்கில் வேகமாகச் சென்று மறைந்து விட்டார் இந்த ஞானி சதாசிவ பிரம்மேந்திரர். இப்படியொரு வரலாறு இந்த யோகியைப் பற்றி இன்றும் பேசப்படுகிறது.

புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில்.

தஞ்சாவூர் மாரியம்மன் என்று பெரும்பாலான மக்களால் அழைக்கப்படும் இந்த மாரியம்மன் கோயில் இருக்குமிடம் புன்னைநல்லூர். தஞ்சையிலிருந்து கிழக்கே சுமார் 3 கி.மீ. தூரத்தில் இருக்கும் இவ்வூர் வழியாகத்தான் திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய ஊர்களுக்குச் செல்லும் பேருந்துகள் செல்லும். இந்த மாரியம்மன் மிகவும் பிரசித்தி பெற்ற மாரியம்மன். இவ்வாலயம் எழுந்த வரலாற்றையும், இவளை வழிபட்டு பலனடைந்த பலருடைய வரலாற்றுச் செய்திகளும் ஏராளம். ஒரு ஆங்கிலேய அதிகாரிகூட இவளை வழிபட்டு தன் கண்பார்வை பெற்றதாக செவிவழிச் செய்திகள் உண்டு. இன்னொரு சிறப்பும் இந்த கோயிலுக்கு உண்டு. நாகூர் தர்காவுக்கு இந்துக்களும் சென்று வழிபடுவது போல, இந்த மாரியம்மனை இதர மதத்தாரும் வந்து வழிபடுவதை நாம் பார்க்க முடிகிறது.

ஒரு முறை மராத்திய மன்னன் தன் குதிரையிலேறி தன் சிறு பெண் குழந்தையுடன் இராமேஸ்வரம் சென்று திரும்பினார். ஊர் திரும்பிய பின் அந்தப் பெண் குழந்தையின் கண்களிலிருந்து இரத்தம் கசியத் தொடங்கியது. அரச குடும்பத்தினர் கவலையில் ஆழ்ந்தனர். அரண்மனையில் சித்த வைத்தியம், யுனானி வைத்தியம், ஆயுர்வேதம் ஆகியவைகள் இருந்தும் எந்த வைத்தியராலும் எதுவும் செய்ய முடியவில்லை. அப்போது சமயபுரம் மாரியம்மனின் நினைவு மன்னனுக்கு வந்தது. சமயபுரத்தாள் பக்தன் மன்னன். உடனே அந்த மாரியம்மனிடம் வேண்டிக் கொண்டான், தன் மகளின் கண் உபாதையை அம்மா சரிசெய்ய வேண்டுமென்றும், தங்கத்தால் ஒரு கண் செய்து அம்மனுக்குக் காணிக்கை அளிப்பதாகவும் அம்மனிடம் வேண்டிக் கொண்டான். அப்போது அவன் கனவில் சமயபுரம் மாரியம்மன் தோன்றி, நீ சமயபுரம் தேடி அத்தனை தூரம் வருவானேன், உன் அருகிலேயே புன்னைமரக் காட்டில் நான் இருக்க வெறு இடம் தேடி போவானேன், என்றாள். கண் விழித்துப் பார்த்த மன்னனுக்கு மர்மம் புரியவில்லை. தன் ராஜ்யத்திலேயே புன்னைமரக் காட்டில் இருப்பதாகச் சொன்னாளே, அது எங்கிருக்கிறது. அங்கு அன்னை மாரியம்மா எங்கிருக்கிறாள் என்பதை அறியாமல் போனேனே என்று வருந்தி, அந்த இடத்தைக் கண்டுபிடிக்கத் தன் புரவியில் ஏறி புன்னைமரக் காடு இருக்கும் திசை நோக்கிச் சென்றான்.

தஞ்சை நகரத்திலிருந்து சில கல் தொலைவிலேயே இருந்த ஒரு பகுதி புன்னை மரக்காடாக இருந்து வந்தது. அந்த காட்டிற்குள் அன்னை சொன்ன இடம் எது என்றறிய மன்னன் தேடிப் போனான். அப்போது வழியில் ஒரு சிறு பெண் நின்று கொண்டிருக்க, அந்தப் பெண் அந்தக் காட்டிற்குள் எப்படி வந்தாள் என்று வியந்து மன்னன் அந்தப் பெண்ணை விசாரிக்க, அவள் தன்னுடைய இருப்பிடம் இங்குதான் என்று ஓரிடத்தைக் காண்பித்து ஓடிவிட்டாள். அந்த இடத்தில் ஒரு புற்று வளர்ந்திருந்தது. அதனருகில் ஒரு மரத்தினடியில் அவதூதராக ஒரு சித்தர் ஆழ்ந்த தியானத்தில் இருப்பதைக் கண்டான். அவரைக் கண்டதுமே அவர் ஒரு மகான் என்பதை உணர்ந்த மன்னன் அவரை வணங்கி தொழுது நின்றான். கண்விழித்துப் பார்த்த அவரை மீண்டும் மன்னன் வணங்கி அவர் ஆசி வேண்டி நின்றான். தன்னுடைய கனவில் சமயபுரம் மாரியம்மன் தோன்றி சொன்ன செய்தியையும் சொல்லி, பின்னர் தன்னை அங்கு ஒரு சிறு பெண் அழைத்து வந்து தன் இருப்பிடம் இதுதான் என்று அந்த புற்றைக் காட்டிவிட்டு மறைந்து போனாள் எனும் செய்தியைச் சொல்ல, அந்த மகான் எழுந்து அந்த புற்றை மாரியம்மனாக உருவாக்கினார். மன்னனுடைய எண்ணத்தை உணர்ந்த அந்த மகான் அஷ்ட கந்தங்கள் எனும் எட்டு வாசனை திரவியங்களான சாம்பிராணி, புனுகு, ஜவ்வாது, கஸ்தூரி, கோரோஜனை, அகில், சந்தனம், குங்குமப்பூ, பச்சை கற்பூரம் ஆகியவைகளைக் கொண்டு அந்த புற்று மண்ணோடு கலந்து புற்றை மாரியம்மன் உருவம் சமைத்தார். உடனே சர்வ சக்தி படைத்த ஜன ஆகர்ஷண சக்கரம் ஒன்றை தயார் செய்து அம்மன் முன்பாக வைத்து அதனைத் தொடர்ந்து பூஜை செய்து வருவோர்க்கு மனக்குறை தீரும் என்று சொன்னார். சமயபுரம் மாரியம்மனே இங்கும் வந்து கொலுவீற்றிருப்பதையும், மருந்துகளாலும், ஆகர்ஷண சக்கரத்தாலும் சக்தி படைத்த அந்த புற்று மாரியம்மன் வேண்டிய வரம் தருவாள் என்பதை மன்னன் உணர்ந்தான். அப்படி புற்றை அம்மனாக மாற்றியவர்தான் சதாசிவ பிரம்மேந்திரர். சித்தர் பெருமான் சொன்னபடி அந்த மாரியம்மனைப் பணிந்து வேண்டி வந்த மன்னனுக்கு அவன் மன சஞ்சலம் விலகும்படி அவன் பெண் குழந்தையின் கண் பார்வை சரியானது. மாரியம்மனின் சக்தியையும், சித்தரின் திருவிளையாடலையும் எண்ணி மன்னன் மனம் மகிழ்ந்தான்.

அந்தப் புற்றின் மேல் ஒரு ஆலயத்தை எழுப்பச் செய்தான் மன்னன். அங்கு முறையாக பூஜைகள் நடைபெற கட்டளை பிறப்பித்தான். மன்னன் குடும்பத்தாருக்குக் குல தெய்வமாக இருந்து புன்னைநல்லூர் மாரியம்மன் காத்து வந்தாள். இந்த அம்மனுக்கு ஐந்தாண்டுகளுக்கொரு முறை தைலாபிஷேகம் எனும் புனுகுச் சட்டம் அணிவிப்பது நடைபெறுகிறது.

இங்கு வந்து வேண்டிக் கொண்டவர்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேறுவதைக் கேள்விப்பட்டு மக்கள் வெள்ளம் போல இங்கு வந்து தரிசித்துச் செல்கிறார்கள். சதாசிவ பிரம்மேந்திரரின் அருள் விளையாட்டுக்களில் இந்த புன்னைநல்லூர் மாரியம்மன் உருவமும் ஒன்று என்பதை இன்றும் மக்கள் வியந்து போற்றி வணங்கி வருகிறார்கள்.

தொகுப்பு ;வை.பூமாலை,சுந்தரபாண்டியம்

நன்றி ;தமிழ் ஹிந்து

கொடுப்பவர் கொடுத்தே தீர்வர், கிடைப்பது கிடைத்தே தீரும்,

Standard

கொடுப்பவர் கொடுத்தே தீர்வர்  கிடைப்பது கிடைத்தே தீரும்,

யாருக்கு எதைத் தர வேண்டும், எப்படித் தர வேண்டும் என்பது இறைவனுக்குத் தெரியும். இறைவன் கொடுக்க வேண்டுமென்று தீர்மானித்ததை, யாராலும் தடுத்து நிறுத்த முடியாது.

காசியபர் எனும் அந்தணர், கல்வி கேள்விகளில் சிறந்தவர். என்ன காரணத்தாலோ, அவருக்கு பார்வை குறை ஏற்பட்டு, ஒரு கட்டத்தில், முழுவதுமாகவே தெரியாமல் போனது.

இதனால், பார்வை திரும்ப கிடைக்க வேண்டி, திருச்செந்தூர் முருகப் பெருமானை சரணடைந்தார். அதிகாலையில் எழுந்து, கடல் மற்றும் நாழிக்கிணற்றில் நீராடுவதும், அவன் நாமத்தை பாராயணம் செய்வதுமாக திருச்செந்தூரான் சன்னிதியே கதியென்று கிடந்தார்.

பிரார்த்தனையின் பலனாக, திடீரென்று ஒரு நாள், அவருக்கு மங்கலாகப் பார்வை தெரியத் துவங்கியது. மகிழ்ச்சியில் கூத்தாடினாலும், ‘திருச்செந்தூரா… உன் அருளால், என் பார்வை முழுமையாகத் தெரியாதா…’ என வேண்டி, கண்ணீர் விட்டார்.

அப்போது, கோவிலுக்கு வந்த பக்தர் ஒருவர் அருளாடி, ‘காசியபா… என் பக்தனும், இந்நாட்டு அரசனுமான ஜகவீரன் இங்கு வருகிறான்; அந்த உத்தம பக்தனின் கை, உன் மீது பட்டதும், உனக்குப் பார்வை முழுமையாகத் தெரியும்…’ என்றார்.

அதைக் கேட்டதும், அளவு கடந்த மகிழ்ச்சி ஏற்பட்டாலும், அதேசமயம் கலக்கமாகவும் இருந்தது. காரணம், பார்வையற்றவர்களை அரசர் பார்க்க கூடாது என்பது அக்கால சம்பிரதாயம்.

இந்த மனப் போராட்டத்தில் காசியபர் அமர்ந்திருக்க, சிறிது நேரத்தில்,கோவிலுக்கு வந்தார் அரசர் ஜகவீரன். அவரிடம் அருள் வாக்கு பற்றிய தகவல் எடுத்துரைக்கப்பட்டது. ஆனால், அரசரோ, ‘நான் அரசன் என்பதால், அதிகாரம் வேண்டுமானால் என்னிடம் இருக்கலாமே தவிர, அற்புதம் செய்யக் கூடிய அளவிற்கெல்லாம் என்னிடம் சக்தி கிடையாது…’ என்று சொல்லி, சாமி தரிசனம் செய்வதில் முனைப்பாக இருந்தார்.

அன்றிரவு, அரசர் ஜகவீரன், கோவிலிலேயே தங்க வேண்டி இருந்ததால், சண்முக விலாச மண்டபத்தில் வந்து அமர்ந்தார். திடீரென்று அவருக்கு என்ன தோன்றியதோ, ‘அந்த பார்வையற்றவரை அழைத்து வாருங்கள்…’ என்றார்.

அரசு பணியாளர்கள், சம்பிரதாயத்தை எடுத்துச் சொல்லி மறுத்த போதும், பிடிவாதமாக அவரை அழைத்து வரச் சொன்னார் அரசர்.

காசியபரைப் பார்த்ததும், மனம் கசிந்த அரசர், ‘நீங்கள் நாளைக் காலை நீராடி, முருகன் சன்னிதிக்கு வாருங்கள்; அவன் திருவருள்படி நடக்கட்டும்…’ என்றார்.

மறுநாள் காலையில், ‘முருகா… உன் சொற்படி இவருக்குப் பார்வை வராவிட்டால், நான், என் தலையை அறுத்துக் கொண்டு இறப்பேன்…’ என்று கூறி, விபூதியை எடுத்து காசியபரின் கண்களில் ஊதி, அவர் கண்களை, தன் கைகளால் மெல்ல வருடினார் அரசர்.

அடுத்த வினாடி, காசியபருக்கு பார்வை திரும்பியது. அனைவரும் அரசரை வாழ்த்த, அவரோ, ‘முருகன் எனக்களித்த உயிர்ப்பிச்சை இது; ஆறுமுகனின் அருள் இதை விடப் பெரியது…’ எனக் கூறி, அமைதியாக வெளியேறினார்.

அரசரின் கரங்களால், காசியபரின் துயர் தீர்த்த ஆறுமுகன், நம் துயரையும், எவர் மூலமாகவாவது களைவார்.

ஜகவீரன் எனும் அந்த அரசரின் மகன் தான், வீரபாண்டிய கட்டபொம்மன்! 

தொகுத்தவர்;வை.பூமாலை, சுந்தரபாண்டியம்

சில வகை கீரைகளின் மருத்துவ குணங்கள்

Standard

பாட்டி வைத்தியம்

சில வகை கீரைகளின் மருத்துவ குணங்கள்

முருங்கைக்கீரை- இது ஒரு சத்து நிறைந்த கீரை, ஆண்மையை வளர்ப்பது, குருதியை தூய்மைப்படுத்தும் இரும்புச் சத்துக் காெண்டது, உடல் வெப்பத்தை தணிப்பது, மலச்சிக்கலை பாேக்குவது. மாதவிடாய் தறுவாயில் வலியிருந்தால்

முருங்கைக்கீரை சாற்றில் உப்பு போட்டு அருந்தினால் வலி மறையும். வயிற்றுப்புண் ஏற்படாமல் தடுக்கும். பிற மருந்துகளின் பக்க விளைவுகளை அகற்ற இதன் சாறு உதவும். தாெடர்ந்து சாப்பிட்டு வந்தால் இருதய நாேய்களின் தாக்குதலிலிருந்து தப்பிக்கலாம். சிறு நீரை பெருக்குவதால் உயர் ரத்த அழுத்த நோய் உள்ளவர்கள் பக்க விளைவுகள் ஏற்படுத்தும் மாத்திரைகளை நினமும் எடுத்துக் காெள்வதிலிருந்து தப்பிக்கலாம். கருவுற்றாேர் வாரம் ஒரு முறை சாப்பிட்டால் நீர் இறங்கும். கை பாத வீக்கத்தை தடுக்கும்.சோகையை பாேக்கும்.

புளிச்ச கீரை: உடலுக்கும் குடலுக்கும் வளமூட்டும். வயிற்றுப் புண்ணை ஆற்றும். வயிற்றுக் கடுப்பு உள்ளவர்கள் இக்கீரையை ெவங்காயம், வெந்தயம் போட்டு மூன்று வேளை சாப்பிட்டு வந்தால் உடனே நிவாரணம் ெதரியும்.

குடல் பலவீனத்தால்  ஏற்படும் பேதி நிற்கும், குருதிப் பாேக்கை குறைக்கும்.

சிறுகீரை – உடல் தளர்ச்சியை  பாேக்கி ஊக்கமூட்டுவது, மலச்சிகலை போக்குவது, குடலின் பலத்தை அதிகரிப்பது, உடல் பித்தத்தை குறைப்பது.

வெந்தயக்கீரை – முருங்டகை போலவே இரும்புச் சத்துடையது. உடலுக்கு ஊக்கத்தை அளிப்பது, வயிற்றுப்புண்ைண

ஆற்றுவதில் சிறந்தது, கண்ணிற்கு மிகவும் நல்லது,பேதி சயமயத்தில் சப்பிட்டால் பேதியை கட்டுபடுத்தவல்லது.

அரைக்கீரை : நீலிக்கு அடுத்து விஷங்களை முறிக்கும் ஆற்றல் அரைக்கீரைக்கு  உண்டு. ஆங்கில மருந்துகளின் வேகத்தை பக்க விளைவிகளை முறியடிக்கும், தேமல், சாெறி சிரங்கு உள்ளவர்கள் இந்தக்கீரையை தினசரி உணவுப்பழக்கத்தில் சேர்த்துக் கொண்டால்  குணமாகிவிடும்.

அகத்திக் கீரை  ;  வெப்பத்தை தணிக்கும், உள் சூட்டை அகற்றுவதால் இதற்கு அகத்தி என்ற பெயர் ஏற்பட்டது, அனைத்து வகையான சத்துக்களையும் உடையது இந்தக் கீரைதான்.குடல் குருதியை தூய்மைப்படுத்தும், குடற்புழுவை கொல்லும், பித்தத்ைத தணிக்கும். தலைச்சுற்று, மயக்கம் ஆகியவற்ைறப் ேபாக்கும், உடலில் எந்த வகையில் விஷம் ேசர்ந்திருந்தாலும் அதை முறிக்கும் தன்மை இதற்குண்டு, ஆனால் இதை அடிக்கடி சாப்பிட்டால் பேதி ஏற்படும்.

பசலக்கீரை -பருப்புக்கீரை / 

குளிர்ச்சி தருவதில் சிறந்தது, நீர் உடலினர் அடிக்கடி சாப்பிடக்கூடாது. நீரைப் பெருக்கும். பால் சுரக்கும். வயிற்று புண்ணாற்றும், கண்ணாெளி தரும்.

மணத்தக்காளி கீரை – அல்சரை ஆற்றுவதில் முதன்ைமயானது, குடலுக்கு பலமளிப்பது,பெண்மையை வளர்ப்பது, மங்ைகயருக்கு மார்பை வளரச்செய்வது, கருப்பை குறைபட்டை  நீக்குவது, குடற்புழுவை அகற்றுவது.

பாலக்கீரை – உடலுக்கு வலுவூட்டுவது, மலச்சிக்கலைப் ேபாக்கும். குளிர்ச்சியைத்  தரும். குடல் நாேய்களுக்கு நல்லது.

குமட்டிக் கீரை – இது தாமிரச் சத்துடையது. குருதியை தூய்ைமப் படுத்துவது மலத்தை இளக்கும் தன்மை உடையது கருவுற்ற மகளிருக்கு இது நல்லது, உடல் நீரை அதிகரிக்கவல்லது.

தொய்யல் கீரை: – தொய்ந்து  போன  நாடி நரம்புகைள வலுவாக்கும், உடலுக்கு ஊக்கமூட்டுவது, குளிர்ச்சியானது, செரிப்பாற்றலை மிகுவிக்கும், மலச்சிக்கலை பாேக்கும், வாத நாேயாளிக்கு ஏற்றது, பேறு காலத்திற்கு பின்பு மகளிர் சாப்பிட ஏற்றது. உடலைத் தேற்றும்.

மருந்துக்கு பதில் கீரை வாங்கி சாப்பிடுங்கள் :

காய்கறி வகைகளில் கீரை வகைகளுக்கு  முக்கிய இடம் உண்டு. மருந்துக் கடைகளுக்குச் ெசன்று அதிக விலையில்  சத்து மருந்துகைள வாங்கிச் சாப்பிடுவதற்கு பதிலாக கீரை சாப்பிட்டால் பாேதும்.

தேவையான சத்துக்கள் தானாகவே கிடைத்து  விடும். விலையும் குறைவு. இதில் பக்க விளைவுகளுக்கு இடமே இல்லை.

அந்தளவுக்கு கீரைகளில்  அற்புதமான மருத்துவ குணங்கள் பாெக்கிஷமாக பாெதிந்து கிடக்கின்றன.

    கீரை உணவு அனைவருக்கும் ஏற்றது. ஆனால் பெரும் பாலான குழந்ததைகள் கீரையை பார்த்தால் ஏதோ இலை தழை என்று நினைத்து  பயந்து ஓடி விடுகின்றன. குழந்ைதகள் மட்டுமல்ல, இளம் சிறுவர்களும், சிறுமிகளும் கூட கீரை வைத்தால் 

 தாெட்டு கூட பார்ப்பதில்லை. இதை பொற்றாேர்தான் மாற்ற வேண்டும்.

சின்ன வயதில் இருந்தே குழந்தைகளுக்கு கீரை உணவுகளை கொடுத்து பழக்க வேண்டும். கீரை உணவு எந்தளவுக்கு சா்பிடுகிறோமோ அந்தளவுக்கு ஆரோக்கியம் அமையும்.

தொகுப்பு ; வை.பூமாலை,சுந்தரபாண்டியம்

ஏழ்மை வெட்கத்திறிகுரியது அல்ல !

Standard

ஏழ்மை வெட்கத்திறிகுரியது அல்ல !

இந்தியா முழுவதும் ஜெகஜோதியாக நடந்து கொண்டிருப்பது கல்வி வியாபாரமும், கல்யான சந்தையில் வரதட்சணை என்ற பெயரில் நடக்கும் மணமகள் வியாபாரமும் தான்.

தனியார் சுயநிதிக்கல்லூரிகள் வந்தபின் மருத்துவம், பொறியல்  படிப்பவர்கள் எண்ணிக்கை பலமடங்காக பெருகிவிட்டது. இதில் படிப்பவர்கள் அனைவரும் கல்வி நோக்கோடு படிப்பவர்களா? என்பது சந்தேகம் தான்? அவர்களும் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற குறிக்கோளையே கொண்டவர்களாகவே திகழ்கின்றனர்.

இன்றைய கல்வி சந்தையில் பணக்காரர்களின் பிள்ளைகளுக்கும், ஏழை மாணவர்களுக்கும் இடையே பொருளாதார இடைவெளி பூதாகரமாக தெரிகிறது.

தினந்தோறும் ஒரு புதிய சுடிதாரில்  வரும் பணக்கார மாணவிகளும், வருடம் முழுவதும் ஆறு சுடிதாா் கூட இ்ல்லாத ஏழை மாணவிகளுக்கும் பளி்ச சென்று வித்தியாசம் தெரிகிறது. பைக்கிலும், காரிலும் வரும் பணக்கார இளைஞனுக்கும் ,தினம் பஸ்ஸிலும், சைக்கிளிலும், இரயிலும் வரும் ஏழை இளைஞனுக்கும் இடைவெளி கூடிவிட்டது.

எவ்வளவு கெட்டாலும், தாங்கிப் பிடிக்கும் பணவசதி உடைய பிள்ளைகளைப் பற்றி கவலை இல்லை. நடுத்தர, ஏழை மாணவ, மாணவியர் தாழ்வு மனப்பான்மை கொள்வது தடுக்கப்பட வேண்டியது அவசியமே.

பணத்தை வீசுயெறயும் ஒருவன் பின்னால் பத்துபேர் நிற்கிறார்களே என்று கூச்சப்படாதீர்கள், படிப்பில் கெட்டிக்காரராய் உங்களை நிரூபித்தால் அதே பத்துப் பேர் உங்கள் பின்னால் சந்தேகம் கேட்டு வருவார்கள் என்பதை உணர வே்ண்டும்.

பணக்கார பிள்ளைகள் மகாலட்சுமியால் பலரை ஆளுகிறார்கள்,

ஏழைப்பிள்ளைகள் சரஸ்வதியால் பலரை ஆளட்டுமே.

இராமேஸ்வரத்தில் சிறு வயதில் வீடு வீடாக பேப்பர் போட்டு படித்து மேதையானவர்தான் பாரதப் பிரதமரும், அணு விஞ்ஞானியுமான திரு அப்துல்கலாம்,

வயலில்வேலை பார்த்தபடியே மண்வெட்டியில் கரித்துண்டால் எழுதி எழுதிப் படித்தவர்தான் ஆப்ரகாம் லிங்கன்.  ஆப்ரகாம் லிங்கனின் தாடியை பற்றி மட்டும் தெரிந்தால் போதாது. அவரின் தன்னம்பிக்கையையும் தெரிய வேண்டாமா?

   ஆப்ரகாம் லிங்கனின்  தந்தை ஒரு செருப்பு தைக்கும் தொழிலாளி, ஆனால் அவரது மகனோ அமெரிக்க நாட்டின் ஜனாதிபதியானார்.

உழைப்பாலும், முயற்சியாலும் உயர்ந்த ஜனாதிபதி லிங்கனை அவமானப் படடுத்தும் எண்ணத்துடன் அமெரிக்க பாராளு மன்றத்தில் ஒருவர், ” மிஸ்டர் லி்ங்கன் உங்களை இங்கே பலபேர் பராட்டி பேசினார்கள், அதுகுறித்து நீங்கள் மகிழ்ந்து விட வேண்டாம், உங்கள் பழமை, வறுமை, குறித்து நினைவு கொள்ளுங்கள்,உங்கள் அப்பா எனக்கு தைத்துக் கொடுத்த   “சூ” இன்னும் எனது காலில் இருக்கிறது, ஞாபகம் இருக்கட்டும் ” என்று லிங்கன் தந்தை செருப்பு தைக்கும் தொழிலாளி என்பதை குத்திக் காட்டினார்.

இதற்கு லிஙகனோ சற்றும் பதட்டப் படாமல், எழுந்து, ” நண்பரே, என் தந்தை மறைந்து பல காலம் ஆயிற்று, ஆனால் அவர் தைத்துக் கொடுத்த “சூ”

இன்னும் உங்களிடம்உழைக்கிறது என்றால் அவர் எவ்வளவு தேர்ந்த சிறந்த தொழிலாளி என்பது தெரிகிறது. அவருக்கு மகனாகப் பிறந்தது குறித்து நான் பெருமை அடைகிறேன். அதுமட்டுமல்ல இப்போது உம் ” சூ” கிழிந்து போனாலும் என்னிடம் கொடுங்கள் அதை நான்சரி செய்து தைத்துக் தருகிறேன். அந்தத்  தொழிலும் நான் நன்கு அறிவேன். எனக்கு செருப்பு தைக்கவும் தெரியும், நாடாளவும் தெரியும், இரண்டுமே நன்றாகத் தெரியும் என்றார்.  ஏழ்மையிலும் தனது தானும் உயர்ந்தவன் தான் என்ற தன்நம்பிக்கையும் விடாமுயற்சியும் அவருக்கு அவ்வாறு சபையிலேயே தைரியம் அளித்தது கண்டு யாவரும் வியந்தனர்.

ஏழ்மையோ வறுமையோ வெட்கத்திற்குரியது அல்ல, தாழ்வு மனப்பான்மையை தூரம் தள்ளினால் வெற்றி நிச்சயம்.

படித்ததில் பிடித்தது ” சுகி சிவத்தின் / வெற்றி நிச்சயம்  கட்டுரை

தொகுத்தவர் ; வை.பூமாலை, சுந்தரபாண்டியம்

பாபநாசம் திருத்தலம்

Standard

பாபநாசம் திருத்தலம்

Standard

பாபநாசம் திருத்தலம்

இறைவர் அருள்மிகு பாபநாசநாதர்:

பாவங்கள் நீங்க பாபநாச ஈஸ்வரர் ,இத்தலத்தில் முன்னோர்களின் ஈமக் கரிகைகள் செய்ய இராமேஸ்வரம் போன்று மிக பிரசித்தி பெற்ற தலங்களில் இது மிகவும் சிறப்பு பெற்ற தலமாகும். திதிகள் ெசய்து பாவங்கள் கரைய புண்ணிய நதியாம் தாமிரபரணி நதியில் நம்மை தூய்மைப்படுத்தி புண்ணியம் தரும் ஸதலமாகும். நவகைலாயத் தலங்களில் முதல் தலம் பாபநாசம் பாபநாசநாதர் கோவில். தாமிரபரணியின் கரையில் அமைந்த இங்கு அகத்தியர் சிவபார்வதியின்திருமணக் கோல தரிசனம் பெற்றார். கருவறையின் பின்புறம் உள்ள பிரகாரத்தில் கல்யாண சுந்தரர் என்ற பெயரில் சிவபார்வதி திருமணக் கோலத்தில் உள்ளனர். இங்கு அம்பிகை உலகம்மையாக வீற்றிருக்கிறாள். கங்கை நதி தன்னிடம் சேரும் பாவத்தை ஆண்டுக்கு ஓருமுறை தாமிரபரணிக்கு வந்து நீராடி போக்கிக் கொள்வதாக ஐதீகம். பாபநாசநாதர் லிங்கம் ருத்திராட்சத்தால் ஆனது. ஆடி அமாவாசையன்று தாமிரபரணியில் நீராடி முன்னோர் வழிபாடு செய்வது சிறப்பு.

இறைவர் திருப்பெயர் : பாவநாசர், பாபவிநாசகர். இறைவியார் திருப்பெயர் : லோகநாயகி, உலகம்மை. தல மரம் : களா மரம். தீர்த்தம் : தாமிரபரணி, வேத தீர்த்தம், கல்யாண தீர்த்தம், பைரவ தீர்த்தம். வழிபட்டோர் : அகத்தியர். வைப்புத்தலப் பாடல்கள் : சம்பந்தர் – பொதியிலானே பூவணத்தாய் (1-50-10), அயிலுறு படையினர் (1-79-1);அப்பர் – தெய்வப் புனற்கெடில (6-7-6), உஞ்சேனை மாகாளம் (6-70-8).

தல வரலாறு[தொகு]

பாபநாசம், பொதியின்மலை பாபநாசம் என்னும் இரண்டும் ஒன்றே. மக்கள் ‘பாவநாசம்’ என்றும் வழங்குகின்றனர்.

பொதிய மலைச் சாரலில் உள்ள பாபநாசம் என்னும் தலமே இவ் வைப்புத் தலம். சிவபெருமானுடைய திருக்கல்யாணத்தைத் தரிசிக்கச் சென்ற தேவர்கள் முனிவர்கள் முதலியோர் கூட்டத்தைத் தாங்கமாட்டாது வடதிசை தாழ்ந்து தென்திசை உயர அதைச்சமன் செய்யுமாறு திருவுளங்கொண்டு அகத்திய முனிவரை அழைத்து தென் திசைக்கு ஏகும்படிச் சிவபெருமான் கட்டளையிட, அவ்வாணையின்படி பொதிய மலைக்கு எழுந்தருளீய அகத்தியருக்கு கையிலையிலிருந்த தம்முடைய திருக்கல்யாணக் கோலத்தைக் காட்சி கொடுத்தருளியது பாபநாசம் என்னும் இத்தலத்தில், பாபநாசத்திற்கு மேற்கே ஒரு மைல் தூரத்தில் உள்ள நீர்வீழ்ச்சியும் இதனால் ‘கல்யாண தீர்த்தம்’ என்று பெயர் பெற்றது.

அகத்தியர் கோயில் உள்ள இடம் பழைய பாவநாசம் என்றழைக்கப்படுகிறது. மலையுச்சியில் உற்பத்தியாகும் தாமிரபரணி சமபூமியில் இறங்குமிடமே பழைய பாவநாசமாகும்.

விக்ரமசிங்கபுரத்தில் – “நமசிவாயக் கவிராயர்” என்பவர் (ஸ்ரீமத் சிவஞான சுவாமிகளின் சிறிய தந்தையார்) வாழ்ந்து வந்தார். இவர் அம்பாள் – உலகம்மை மீது அளவிறந்த பக்தி கொண்டு வாழ்ந்து வந்தார். இவர் தினந்தோறும் அர்த்தசாமத்தில் பாவநாசத் திருக்கோயிலுக்குச் சென்று அம்பிகையைத் தொழுதுவிட்டு வருவதை வழக்கமாக கொண்டிருந்தார். அப்போது பரவசத்தில் பக்திப் பாடல்களைப் பாடிகொண்டே வருவார். ஒரு நாளிரவு இவர் பாடியவாறே வீடு திரும்பும்போது அம்பாள் இவர் பாடல்களைக் கேட்டவாறே இவருக்குத் தெரியாமல் பின்தொடர்ந்தார். கவிராயர் தரித்திருந்த தாம்பூலத்தின் எச்சில் அவர் பாடி வரும்போது தெரித்து அம்பிகையின் மீது பட்டது. அக்கோலத்துடனேயே அம்பிகையும் கோயிலுக்கு எழுந்தருளினாள். மறுநாள் காலை அர்ச்சகர் அம்பாள் ஆடையில் படிந்திருந்த எச்சில் திவலைகளைக் கண்டு மனம் வருந்தி, மன்னனிடம் முறையிட, அரசனும் பிராயச்சித்தம் செய்யப் பணித்து, இப்பாதகச் செயலைச் செய்தவரைத் தண்டிப்பதாகக் கூறினான். அன்றிரவு மன்னன் கனவில் அம்பிகை தோன்றி, நடந்ததைக் கூறினாள். விழித்த மன்னன் மறுநாள் காலை கவிராயரை அழைத்து வரச்செய்து, அவருடைய பக்தியை அளவிட எண்ணி, அம்பாளின் கரத்தில் பூச்செண்டு ஒன்றை வைத்துப் பொன் கம்பிகளால் சுற்றிக்கட்டி, அப்பூச்செண்டு வருமாறு பாடக் கவிராயரைப் பணித்தான். அவரும் கலித்துறையில் அந்தாதி யொன்றை அமைத்துப் பாடினார். அம்பிகையின் கரத்தில் கட்டப்பட்டிருந்த பொன் கம்பிகள் கவிக்கொருச் சுற்றாக அறுந்து கவிராயரின் பெருமையை வெளிப்படுத்தியது.

இங்குள்ள அகஸ்தியர் அருவி ஆண்டு முழுவதும் தண்ணீர் கொட்டும் சிறப்புடையது.

சிறப்புகள்;

இத்தலம் சம்பந்தர், அப்பர் வாக்கில் இடம்பெற்றுள்ள – வைப்புத் தலமாகும்.

தமிழ் முனியான அகத்தியருக்கு அம்மையும்-அப்பனும் திருக்காட்சி கொடுத்த இடம் இதுதான்.

இங்கு அகத்திய முனிவருக்கு தனிக்கோயில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் உள்ளூர் கோயிலில் நடைபெறும் திருக்கல்யாணத்தின் போது அகத்திய முனிவர் அவரது கோயிலில் இருந்து அழைத்து வரப்படுவார். அவர் வந்து சேர்ந்தபிறகுதான் அம்மையப்பர் திருக்கல்யாணம் நடைபெறும்.

நெல்லையிலிருந்து 60 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது பாபநாசம் திருத்தலம்.

இத்தலம் மாணிக்கவாசகரின் (திருவாசகத்திலும்) திருவாக்கிலும் இடம் பெற்றுள்ளன.

பெரிய கோயில், கோயிலின் முன் தாமிரபரணி ஆறு (பொருநையாறு) அழகாகப் பாய்ந்தோடுகிறது. நீராடும் வசதியுள்ளது.

சந்தனச் சோலைகளும் மூலிகைகளும் நிறைந்து தென்றலின் பிறப்பிடமாய்த் திகழும் பொதியமலை உச்சியில் தாமிரபரணி உற்பத்தியாகின்றது.

ஆண்டு முழுவதும் இடையறாது பாய்ந்தோடும் தாமிரபரணியில் மூலிகைச் சத்துக்கள் நிறைந்திருப்பதால் அருவி வீழ்ச்சியில் நீராடுவோருக்கு உடல் நலத்தைத் தருவதாகச் சொல்லப்படுகிறது.

பெருமான் கல்யாண சுந்தரராக எழுந்தருளி அகத்தியருக்கும் அவர் மனைவி லோபாமுத்திரைக்கும் திருமணக் கோலக் காட்சித் தந்தருளிய தலமிதுவாகும்.

தீர்த்தம் – தாமிர பரணி, வேத தீர்த்தம், கல்யாண தீர்த்தம், பைரவ தீர்த்தம் முதலியன. (இவற்றுள் கல்யாண தீர்த்தமும் பைரவ தீர்த்தமும் மலையுச்சியில் உள்ளன.

சுவாமிக்கு பாவநாசர், வைராசர், பழமறைநாயகர், முக்களாமூர்த்தி, பரஞ்சோதி எனப் பல பெயர்கள் சொல்லப்படுகின்றன.

தன்னையடைந்தாரது பாவங்களைப் போக்குபவர் – பாவநாசர்; விராட்புருடன் வழிபட்டதால் – வயிராசர்; மூன்று வேதங்களும் களாமரங்களாக நின்று வழிபட்டதால் – பழமறை நாதர், முக்களாமூர்த்தி; மேலான சோதி வடிவாக விளங்குபவர் – பரஞ்சோதி என்பன பெயர்க் காரணங்களாம்.

சுவாமியின் கர்ப்பக் கிருகத்தைச் சுற்றிலும் அருமையான வேலைப்பாடமைந்த மிக நுண்மையான சிற்பங்கள் காணப்படுகிறன.

இக்கோயிலில் எண்ணெய் சாதம் என்ற ஒருவகை பிரசாதமும், அதற்கேற்ற துவையலும் நிவேதனம் செய்யப்படுகிறது.

பங்குனியில் தெப்பத் திருவிழாவும், தேர்த் திருவிழாவும், சித்திரை முதல் நாள் அகத்தியருக்குத் திருமணக் காட்சி தரும் விழாவும் சிறப்பாக நடைபெறுகின்றன.

அகத்தியர் நீர்விழ்ச்சி இதன் அருகில் உள்ளது. நன்கு நீர் குளிக்க சிறந்த நீர்வீழ்சசி

அமைவிடம் ;திருநெல்வேலி, அம்பாசமுத்திரம், தென்காசி முதலிய இடங்களிலிருந்து பேருந்து வசதி உள்ளது

திருச்சிற்றம்பலம்

தொகுப்பு . வை.பூமாலை

இறையும் இசையும்

Standard

இறையும் இசையும்

இசை என்பது இசைப்பது என்னும் பொருளையுடையது. ஒருவரது எண்ணங்களை , கருத்துக்களை, அறிவியலை மற்றொரு வருடைய கருத்தாகிய அறிவுடன் இசைப்பது. அறிவே இயற்றமிழ், அவ்வறிவை இசைப்பாடல்களால் மற்றவருக்கு இசைவிக்கும் பாடல்களே இசைத்தமிழ் பாடல்களாகும். நடிப்பால் மெய்ப்பாட்டால் அறிவைப் புரிந்து கொள்வதற்கு இசைப் பாடல்களும், நாடகமும் பெரிதும் துணைபுரிவன. இசைத்தமிழும் நாடக் தமிழும் இயலாகிய அறிவியலைத் தொல்காப்பியர் காலம் முதல் இன்று வரை வளர்த்து வந்துள்ளது. காமத்தை வளர்ப்பதே இசை என்ற சமணர்கள் வாதத்தையும், கடந்து நமது சைவ சமயாச்சாரியார்கள் இசைப் பாடல்களாலேயே சைவத்தை , சிவபக்தியை வளர்த்தனர்.

      இசையையும் நாடங்களையும் பயன்படுத்துவோரைப் பொறுத்துப் பயன்களும் விளையும் . இக்கருத்தைத் தெளிவிக்க நீதி வெண்பாவில் ஒரு பாட்டு உண்டு.

” வல்லவர்பாற் கல்வி மதமா ணவம் போக்கும்

அல்லவர்பாற் கல்வி யவையாக்கும் – நல்லிடத்தில்

யோகம் பயில்வார் உயர்ந்தோர் இழிந்தோர்கள்

போகம் பயில்வார் புரிந்து. ”

நீதி வெண்பா – 70

 எனவே சைவர்கள், சைவக் கருத்துக்களையும் தத்துவ அறிவியலையும் வளர்ப்பதற்கு இசைக்கலையைப் பெரிதும் பயன் படுத்தி கொண்டார்கள். இந்நிலை கி.பி. 3ஆம் நூற்றாண்டு காரைக்கால் அம்மையார் காலத்திலிருந்தே தொடங்கியிருக்கிறது. அவர் தான் தமிழ் இசைப்பாடல்களின் முன்னோடியாக திகழ்ந்துள்ளார். கி.பி. 7ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இசைத்தமிழை திரு ஞானசம்பந்தர் வளர்த்தார். ஏறத்தாள பத்தாம் நூற்றாண்டின் இறுதிவரை வாழ்ந்த திருமாளிகைத்தேவர் முதல் சேதியாராயர் வரை திருவிசைப்பா, திருப்பல்லாண்டு ஆசிரியர்கள் இசைத்தமிழையும், இன்னுயிரான சைவத்தையும் வளர்த்தனர்.

    இறைவனே ஏழிசையாயும், இசைப்பயனாயும் இருக்கின்றான் என்பார் சுந்தரர், கீதத்தை மிகப்பாடும் அடியார்கள் குடியாகவும், பண் ஒன்றே இசைபாடும் அடியார்கள் குடியாக திருபுள்ளிருக்கு வேளூரில் இருப்பவன் என்று சம்பந்தரும், ” நரம்பை அடுத்த இசை வடிவாய் நின்ற நாயகி ” (அபிராமி அந்தாதி 49,) என்று அபிராமி அம்மையை அபிராமிப் பட்டரும் போற்றியுள்ள திறத்தால், இறையும் இசையும் இசைந்துள்ள பாங்கை நாம் உணரலாம். சைவ மதத்தினர் மட்டுமன்றி வைணவ அடியவர்களும் இசை மூலம் இறைவரை கவர்ந்தள்ளனர். ஆண்டாள் பாடிய திருப்பாவை இறைவரின் அவதாரமாகிய ஆண்டாள் நாச்சியாரே இசையைப்பாடி இறைவரைக் கவர்ந்துள்ளார் என்பது யாவரும் அறிந்ததே. இறைவர் துயில் எழுப்ப திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளி எழுச்சி பாடல்கள் அனைத்தும் இறையும், இசையும் இணைபிரியாத தன்மையினை விளக்கும்,

   இறைவன் அந்தணன் உருக்கொண்டு மாணிக்கவாசகரிடம் வந்து, திருவாசகம் முழுவதையும் மாணிக்கவாசகர் சொல்லி பாட ஏடும் எழுத்தாணியும் கொண்டுஎழுதினார், மாணிக்கவாசகர் பாட அதையும் இறைவரே தானே எழுதியது, இறைவர் தமிழ் இசையில் கொண்ட அளப்பரிய பந்தத்தைக் காட்டுகிறது. இத்துடன் இறைவரை தன் பக்தி நெறியில் ஆழ்படுத்த ஈர்க்க மூவர் பாடிய தேவாரப்பாடல்கள் அனைத்தும் இறையும், இசையும் சேர்ந்த பண்பினை காட்டுகிறது. வாய்வழிச் செய்தியாக ஆன்மிக ஆன்றோர்கள் இறைவர் கூறியதாக  கூறுவது

 “அப்பர் என்னைப் பாடினார்,

சம்பந்தர் தன்னைப்பாடினார்,

சுந்தரர் பொன்னைப்பாடினார்.”

 “அடியாரையும் பாடினார்”

என்ற கூற்றை நாம் இசைப்பாடல்களில் இறைவருக்கு தந்த ஈர்ப்பைக் காணலாம்.

“தமிழோடு இசைப்பாட மறந்தறியேன்,” என்ற திருநாவுக்கரசரின் பாடல்வரிகள் தமிழ் இசையின் மூலம் இறைவரை ஆட்கொள்ள முழு ஆயுதம் தமிழ் இசைப்பாடல்களே என்பதை உணரலாம். தோத்திரப் பாடல்கள் யாவும் இறைவரின் திருவாக்குகளே என்று இறைவரே கூறியது என்பதும் காணலாம், இவ்வலிமை அறிந்த செந்தமிழ் மந்திரங்கள் பன்னிரண்டும் திருமறைகளாக தோன்றின,

 இறைவரை தம் பாடல்களால் வசப்படுத்தி அரிய பெரிய செயல்களை செய்துகாட்டிய சமயக்குறவர்களின் பெருமையை சொல்லவும் வேண்டுமோ என்று திருவிளையாடல் புராண அருளாசிரியர் பரஞ்சோதி முனிவர் கூறும் பாடல்;

“தொண்டர் நாதனைத் தூதிடை விடுத்ததும் / முதலை

உண்ட பாலனை அழைத்ததும் எலும்பு பெண் உருவாக்

கண்டதும், மறைக் கதவினைத் திறளந்ததும் / கன்னித்

தண்டமிழ்ச் சொலோ? மறுபுலச் சொற்களோ ? சாற்றீர் ” என்கிறார்.

பரவை நாச்சயாரிடம் சுந்தரர் பொருட்டு இறைவனே தூது சென்றார்,

அவிநாசியில் முதலை உண்ட பார்ப்பனச் சிறுவனை, சுந்தரர் செந்தமிழ் பாட, மாண்டவன் மீண்டான்,

எரிக்கப்பட்ட அங்கம், திருஞானசம்பந்தரின் பசுந்தமிழால் பூம்பாவைப் பெண்ணாக உருக்கொண்டு மீண்டு வந்தது,

திருமறைக்காட்டில் பூட்டிய திரு்க்கோவில் கதவம் திறக்க திருநாவுக்கரசர்  செந்தமிழ் பாடித் திறக்கச் செய்தார்,

திறந்த திருக்கதவும் திருக்காப்பிடவும், திறக்கவும் ஆளுடைய பிள்ளையார் செந்தமிழ் மந்திரமாக பாடியுள்ளார்,

இவை எல்லாம் கன்னித்தணடமிழ் பாக்களின் சிறப்பினையும், இப்பாடல்களால் இறைவர் கட்டுண்டு, பாடிய அடியார்கள் வேண்டியதை அருளியது, தமிழ் இசைப்பாடல்களால் அன்றோ  இசையில் மயங்கிய இறைவர் வேண்டுவோர் வேண்டதக்கது அருளியது இசையின் மகத்துவம் அன்றோ!  அதுவும் திருமறை தேவாரப்பாடல்கள் அனைத்தும் இறைவரை ஈர்த்து,ஞான ஒளியையும், அருள் மழையையும் தருவன என்பதைக் காணலாம்.

என்னதான் ஆகம விதிப்படி அபிசேக ஆராதனைகள் செய்து வழிபட்டாலும், இறைவரை வாயாரப்பாடி, சுலோகங்களால் துதிபாடி, தோத்திரங்களால் இசைபாடி இறைவனை போற்றுதலுக்கு ஈடாகுமா? இசைக்கு மயங்காதார் யார் உளர், இறைவர் மட்டும் என்ன விதிவிலக்கா? இறைவரே

” சொல்லும் பொருளுமாய் இருநதார் தாமே, தோத்திரமும் சாஸ்திரமும் ஆனார்தாமே  ” என்று திருத்தாண்டவர் திருவரங்கப்பாடல்களில் கூறியதைக் காணலாம். தோத்திரங்கள் யாவும் சிவனாரின் திருவாக்குகளே என்கிறார் ஞானசம்பந்தர், தோத்திரப்பாடல்கள் எல்லாம் வழிபாட்டிற்கான இசைப்பாடல்கள் தானே. நால்வரின் தேவாரப்பாடல்கள் யாவும் இறைவனைத் துதிக்கும் தோத்திரங்கள் மற்றும் அல்ல, அல்லல் போக்கும் அருமருந்து,அதுவே திருமருந்து. நால்வரின் தேவாரப்பாடல்கள், மொழிக்கு மொழி தித்திக்கும் இன்னிசைப் பண்கள் ஆகும். அவை எழுத்திற்கு எழுத்து, சொல்லுக்கு சொல் பதியத்திற்கு பதியம் பாட்டுக்கு பாட்டு அமையும் ஏற்றம் தரும் ஏணிப்படிகளாகும். நால்வர் பாடிய தேவார திருமறைப்பாடல்களுக்கு ஈடு இணையே இல்லை எனலாம்.

  எனவே இறையும், இசையும் ஒன்ரோடென்று இணைந்து, இறைவழிபாட்டிற்கு மிக முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை அறிந்து, செந்தமிழ் மந்திரப்பாடல்கள் பாடி இறையோடு இணைவோம்.

 திருச்சிற்றம்பலம் ஓம் நமசிவாய ஓம்

தொகுப்பு ; வை.பூமாலை,சுநதரபாண்டியம்.

மேலும் பல ஆன்மிகத்தகவலுக்கு

 https://vpoompalani05.wordpress.com