தியானம் எளிய விளக்கம்

Standard

தியானம் எளிய விளக்கம்
எல்லா வகை தியானங்களும் எல்லோருக்கும் ஏற்றதல்ல. அவரவர் தன்மைக்கு ஏற்ப சில வகை தியானங்கள் சிலருக்கு மிக எளிதாகவும், சில வகை தியானங்கள் மிக கஷ்டமானதாகவும் இருக்கலாம். அவை தியானம் செய்யும் ஆரம்ப நாட்களிலேயே தெரிந்து விடும்.

உங்களுக்கேற்ற ஒரு தியானத்தை ஏற்றுக் கொண்டு தொடர்ச்சியாக அதைச் செய்வது மிக முக்கியம். முதலில் ஒரு தியானம் நம் மனதில் வேரூன்ற ஆரம்பிக்க குறைந்த பட்சம் 21 நாட்கள் அவசியம். எனவே 21 நாட்களாவது தேர்ந்தெடுத்த தியானத்தை ஒரு நாள் கூட தவறாமல் செய்வது முக்கியம்.

அதன் பின் ஒரிரு நாள் விட்டுப் போனாலும் பரவாயில்லை. (அந்த ஓரிரு நாட்கள் பல நாட்களாக மட்டும் அனுமதிக்காதீர்கள்). உற்சாகமாக தியானம் செய்ய ஆரம்பித்து அதைத் தொடர்ந்து செய்ய முடியாமல் கைவிட்டு விடும் மனிதர்கள் ஏராளம்.

கைவிரலிடுக்கில் விழும் மணல் குறைய ஆரம்பித்து பின் தீர்ந்து விடுவது போல் ஆரம்ப உற்சாகம் சொற்ப காலத்தில் காணாமல் போகிறது. பலரும் ஏதாவது ஒரு காரணம் சொல்லி தியானத்தைக் கைவிட்டு விடுகிறார்கள். சில சமயங்களில் கைவிடா விட்டாலும் தியானம் எந்திரத்தனமான ஒரு வேலை போல ஆகிறது.

ஆரம்ப காலங்களில் அரைமணி நேரம் தியானப் பயிற்சி செய்வோமானால், அதில் ஒருசில வினாடிகள் மனம் தியானத்தில் லயிக்குமானால் அதுவே பெரிய வெற்றி. உண்மையில் தியானம் வெற்றிகரமாக கைகூடினால் மனதில் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத ஒருவித அமைதி கண்டிப்பாக உணரப்படும்.

அது தொடருமேயானால் உங்கள் முகத்தை மாற்றும். உங்கள் பேச்சை மாற்றும். நீங்கள் வாழ்க்கையைப் பார்க்கும் விதத்தை மாற்றும். நீங்கள் செயலாற்றும் முறையை மாற்றும். நீங்கள் அறிகிறீர்களோ இல்லையோ உங்களிடம் பழகுபவர்கள் அதை உங்களிடம் உணர ஆரம்பிப்பார்கள்.

தியானம்

உற்சாகமாக தியானம் செய்ய ஆரம்பித்து அதைத் தொடர்ந்து செய்ய முடியாமல் கைவிட்டு விடும் மனிதர்கள் ஏராளம். பலரும் ஏதாவது ஒரு காரணம் சொல்லி தியானத்தைக் கைவிட்டு விடுகிறார்கள். சில சமயங்களில் கைவிடா விட்டாலும் தியானம் எந்திரத்தனமான ஒரு வேலை போல ஆகிறது. அதற்கு பல காரணங்கள் உள்ளன. அவை என்னவென்று பார்க்கலாம்….

• நாம் தியானம் செய்ய ஆரம்பிக்கிறோம். நிறைய எதிர்பார்ப்புகளுடன் ஆரம்பிக்கிற தியான அனுபவம் நாம் எதிர்பார்க்கிற விதத்திலும், எதிர்பார்க்கிற வேகத்திலும் நமக்குக் கிடைப்பதில்லை. அதனால் அலுப்பு தட்ட ஆரம்பிக்கிறது. சிலர் வேறு குருவைத் தேடிப் போவதுண்டு.

வேறு சில பயிற்சி முகாம்களை நாடிப் போவதுண்டு. அங்கும் ஆரம்பத்தில் ஒரு உற்சாகம், ஒரு எதிர்பார்ப்பு பின் ஏமாற்றம், அலுப்பு என்று தொடர்கிறது. யதார்த்தத்திற்கு ஒத்து வராத நம் எதிர்பார்ப்புகளே தியானம் தொடர முடியாமைக்கு முதல் காரணம் என்று சொல்லலாம்.

• இரண்டாவது, தியானத்திற்குப் பொருத்தமான சூழ்நிலைகள் பயிற்சி இடங்களில் கிடைக்கின்றன. அங்கு தியானத்தின் மூலம் நல்ல அமைதி கிடைப்பது போல பயில்பவர்கள் உணர்கிறார்கள்.

• மூன்றாவது, சடங்குகளிற்கு அளவுக்கதிக முக்கியத்துவம் தந்து சத்தான விஷயங்களை புறக்கணிப்பது. நான் தினமும் அரை மணி நேரம் தியானம் செய்கிறேன் என்று சொல்லி பெயருக்கு ஆண்டாண்டு காலம் தினமும் அரைமணி நேரம் தியானத்திற்காக அமர்ந்தாலும் பயன் இருக்காது.

தொடர்ந்து தியானத்தில் ஈடுபடுவது என்பது வேறு, தொடர்ந்து தியானம் என்ற பெயரில் எந்திரத்தனமாய் அமர்ந்திருப்பது என்பது வேறு. தியானம் வெறும் சடங்காகும் போது அர்த்தமில்லாததாகப் போகிறது.

• ஆரம்ப காலங்களில் அரைமணி நேரம் தியானப் பயிற்சி செய்வோமானால், அதில் ஒருசில வினாடிகள் மனம் தியானத்தில் லயிக்குமானால் அதுவே பெரிய வெற்றி. உண்மையில் தியானம் வெற்றிகரமாக கைகூடினால் மனதில் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத ஒருவித அமைதி கண்டிப்பாக உணரப்படும்.

அது தொடருமேயானால் உங்கள் முகத்தை மாற்றும். உங்கள் பேச்சை மாற்றும். நீங்கள் வாழ்க்கையைப் பார்க்கும் விதத்தை மாற்றும். நீங்கள் செயலாற்றும் முறையை மாற்றும். நீங்கள் அறிகிறீர்களோ இல்லையோ உங்களிடம் பழகுபவர்கள் அதை உங்களிடம் உணர ஆரம்பிப்பார்கள்.

தியானத்தில் நீங்கள் வேரூன்றிய பின் தியானத்தின் போது நீங்கள் அனுபவித்த அமைதி உங்கள் தினசரி வாழ்க்கையிலும் தொடரும். காலப்போக்கில் நீங்கள் எங்கும், எப்போதும் உங்கள் விருப்பப்படி தியான நிலைக்குள் புக முடியும் என்ற நிலை ஏற்படும்.

ஓஷோ சொல்வது போல சந்தையில் கூட நீங்கள் தியானத்தில் மூழ்க முடியும். சில நாட்கள் நல்ல முன்னேற்றம் இருந்து திடீரென்று ஓரிரு நாட்கள் ஆரம்பத்தில் இருந்ததை விட மோசமான சறுக்கலை ஒருவர் சந்திக்க நேரிடலாம். மன அமைதி காணாமல் போய் தியானத்திற்கு எதிமாறான உணர்ச்சிக் கொந்தளிப்பை உணரலாம்.

தியான நிலைக்கே மனம் போகாமல் போகலாம். அதைக் கண்டு ஒருவர் பின்வாங்கி விடக்கூடாது. உள் மனதில் உறங்கிக் கிடந்த ஏதோ ஒரு குப்பையை மனம் மேல் தளத்திற்கு எறிந்திருக்கின்றது என்று அர்த்தம். அதைக்கவனியுங்கள்.

அதற்கான காரணம் உங்களுக்குள்ளே இருந்திருக்கின்றது என்பதை அங்கீகரியுங்கள். விருப்பு வெறுப்பில்லாமல் ஆராயுங்கள். பின் அது குப்பை என்பதை உணர்ந்து, தெளியுங்கள். இதை ஒழுங்காகச் செய்தீர்களானால் இனி அந்தக் குப்பை திரும்பி வந்து உங்களைத் தொந்திரவு செய்யாது. மறுபடி முன்னேற்றம் தொடரும்.

திடீரென்று இன்னொரு நாள் இன்னொரு குப்பை மேலே வரலாம். இதுவும் சறுக்கல் போல் தோன்றலாம். முதல் குப்பையைக் கையாண்டது போலவே இதையும் நீங்கள் கையாண்டு விலக்கி விடுங்கள். உள்ளே ஆழத்தில் உள்ள குப்பைகள் முழுவதுமாக நீக்கப்படும் வரை இந்த அனுபவங்கள் நிச்சயமாய் தொடரும்.

ஆனால் தியானத்திற்கான பயணத்தில் இது போன்ற அனுபவங்கள் சகஜம் என்பதைப் புரிந்து கொண்டு தியானத்தைத் தொடருங்கள். விடாமுயற்சியோடு தொடர்ந்தால் உங்களுக்குக் கிடைக்கக் கூடிய பலன்கள் அளவிட முடியாதவை.

எளிய முறையில் தியானம் செய்யும் முறை

* உங்கள் இஷ்ட தெய்வத்தை தேர்ந்தெடுத்துக் கொள்ளவும்.

* தியானத்திற்காக ஒரு நாளில் இரண்டு நேரங்களை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். (எடுத்துக்காட்டாக காலை 5 அல்லது 6 மணி. மாலை 6.30 அல்லது 7.30 மணி) முடிந்தவரை குறிப்பாக அந்த நேரத்திலேயே தியானம் செய்ய முயற்சி செய்யவும்.

* வீட்டில் ஒரு இடத்தை தியானத்திற்காக தேர்ந்தெடுங்கள். அது அமைதியான இடமாக இருக்க வேண்டும்.

* அங்கு ஆசனத்தை விரித்து அதில் அமரவும். தலை, கழுத்து மற்றும் முதுகெலும்பு நேராக இருக்கும்படி பார்த்துக் கொள்ளவும். கைகள் மடி மீது இருக்கட்டும். கண்களை மூடிக் கொள்ளவும்.

* சூரியன், நிலவு, நட்சத்திரங்கள், மேகங்கள் எதுவும் இல்லாத பரந்த எல்லையற்ற ஆகாயம் மங்கிய ஒளியில் இருப்பதாக சில நிமிடங்கள் கற்பனை செய்யவும். இது உங்கள் உடலையும், உள்ளத்தையும் தளர்த்தி அமைதிப்படுத்த உதவும்.

* இப்போது உங்கள் உணர்வு மையத்தை இதயத்திற்கு எடுத்து செல்லவும். அங்கு பன்னிரெண்டு இதழ்கள் கொண்ட சிவப்பு தாமரையை அங்கு கற்பனை செய்யவும். உங்கள் இஷ்ட தெய்வம் அதில் உயிருணர்வுடன் அமர்ந்திருப்பதை எண்ணவும்.

* இப்போது உடல், அமைதியான மனம், நம்பிக்கை, பக்தி, விவேகம், ஆகியவற்றிற்காக பிராத்திக்கவும்.

* ஐந்து, பத்து நிமிடங்கள் இஷ்ட தெய்வத்தை தியானிக்கவும். மனம் அங்கும் இங்கும் ஓடினாலும் அதை இழுத்து வந்து இஷ்ட தெய்வத்திடம் நிறுத்தவும்.

* பின்பு இஷ்ட தெய்வத்தின் நாமத்தை ஜபம் செய்யவும். உங்கள் இஷ்ட தெய்வம் ராமராக இருந்தால் “ராம, ராம” என்று தொடர்ந்து ஜெபம் செய்யவும். குறைந்த பட்சம் 108 முறையாவது ஜபம் செய்ய வேண்டும். அதிகமாக செய்ய விரும்பினால் அது 108 இன் மடங்காக இருக்க வேண்டும்.

* தியாத்திற்கு பிறகு உடனடியாக எழுந்திருக்க வேண்டாம். தொடர்ந்து சிறிது நேரம் அமர்ந்து மனதுக்கு அமைதி தரும் ஆன்மீக புத்தகங்களை படியுங்கள்.

இராஜயோக தியானம்

ஒளிப்புள்ளியாக விளங்கும் மனதை இறைவனிடம் ஒரு நிலைப்படுத்தி அமைதி சக்தியை அனுபவம்செய்வது! பேரானந்தத்தில் மூழ்கியிருப்பது! தன்னை ஆன்மீகம், மனம் மற்றும் உணர்வு ரீதியில் சக்திசாலியாக ஆக்கிக் கொள்வது தன்னுள் அடங்கிக் கிடக்கும் கலைகளை, திறன்களை வெளியில் கொண்டு வருவது உயர்ந்த சிந்தனைகளையே சிந்தித்து, பண்பாளராய் விளங்குவது!
தியானத்தின் பலன்கள்……… கவலை, பயம், கோபம், மன அழுத்தம் போன்றவைகளிலிருந்து விடுதலை கிடைக்கிறது. மனம் மற்றும் உடல் ஆரோக்கியமடைந்து நலமும், வளமும் பெருகுகிறது.

எதிர்மறை உணர்வுகள் மறந்து, ஆக்கப்பூர்வ சிந்தனை மற்றும் எளிமையான சுபாவம் பரிமளிக்கிறது. போட்டி நிறைந்த இவ்வுலகில் தன்னம்பிக்கை வளர்ந்து சிந்தனை, சொல், செயல் வளம் அதிகரிக்கிறது.

அமைதியும் ஆனந்தமும் கிடைத்து, அலுவல் மற்றும் தொழில் செயல் திறன் கூடுகிறது. தியானம் செய்வோம்! வாழ்வில் நலமும் வளமும் பெறுவோம்!
நன்றி ;
https://suzhimunai.wordpress.com/category/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/

Advertisements

மரப்பொந்தில் தவம் இருந்த அகப்பேய் சித்தர்

Standard

மரப்பொந்தில் தவம் இருந்த அகப்பேய் சித்தர்
கரு என்பது பெண்ணின் உடம்பில் மட்டும் தோன்றுவதல்ல. கரு ஆனின் உடலில் தோன்றி இரண்டு மாதகாலம் வளர்கிறது. இதைத் தத்துவங்கள் அறிந்த சித்தர்கள் வெளிப்டுத்தி இருக்கிறார்கள். கணவனும் மனைவியும் கலந்து இன்புறும் காலத்தில் அந்த ஜீவன் முன்பு விட்டுச் சென்ற வினையை அனுபவிப்பதற்காகப் பெண்ணின் கருக்குழியில் புகுகிறது. எடுக்கும் பிறவியில் தங்க வேண்டிய கால அளவும் அப்போதே தீர்மானிக்கப்பட்டு விடுகிறது. பெண்ணின் கர்ப்பத்தினால் மாயை, நினைவுகளை ஏற்படுத்துகிறது. ஒரு மனிதனின் ஆயுட் காலத்தில் சுமக்க வேண்டிய நொய்நொடிகள் , எப்படிப் பட்ட வாழ்க்கை என்பதையெல்லாம் உடல் உருப்பெறும் காலத்தில் இறைவன் அமைத்து விடுகிறான்.
இந்த பிரபஞ்சத்தில் உடல் என்ற கூடு வெளிவந்து உடம்பைச் சுமையாய் சுமந்து , அந்த உடம்பினால் ஏற்படும் ஆசாபாசங்களோடு வாழ்ந்து இறப்பு என்ற நிலையை அடைகிறோம், திரும்பவும் பிறவி என்ற காட்டில் சிக்கிக் கொண்டு தவிக்கிறோம், சிததர்கள் கூறிய யோக ஞானப் பயிற்சிகள் பெறுவது சித்தி பெறுவதற்கு அடிப்படையாக விளங்குகிறது. சித்தர் காட்டிய ஞான வழியில் செல்லும் போது உடம்பும், மனமும், உயிரும், தெளிவும், வலிமையும் சக்தியும் பெற்று பிரகாசிக்கின்றன.
” காயமே இது பொய்யடா, காற்றடைத்த பையடா” என்பதை சிந்தித்தால் உண்மை விளங்கும். காற்றின் ஓட்டம் நின்று விட்டால் உயிர் போய்விடும், உடலும் சக்தியிழந்து மிக விரைவில் அழிந்து போய்விடும். காற்றற்ற நிலையைச் சூன்யம் என்று சொல்வது உண்டு. நாசித்துவாரத்தில் சுவாசம் இடப்பக்கம் வரும்போது வலப்பக்கம் அடைபட்டு இருக்கும், வலப்பக்கம் வரும்போது இடப்பக்கம் அடைபட்டிருக்கும், இதனையோ வடகலை, பின்கலை என்றும் இந்த பயிற்சியை பிராணயமம் என்றும் சித்தர்கள் கூறுவர். இதுவே வாசியின் அம்சம்,வாசிப்பழக்கத்தால் இருபக்கமும் மூச்சு சமமாக இயங்கும். இப்பழக்கத்தால் பல நாட்கள் மூச்சை அடக்கி மண்ணில் புதைந்தும், நீரில் மூழ்கியும் யோகிகளால் இருக்க முமடியும்.
அப்படிப்பட்ட தியானத்தில் இருக்கும் போது, மெய் மறந்து பேரானந்த நிலையை அடைவார்கள். அந்த நிலை எப்படிப் பட்டது என்றால் ஐம்புலன்களும், உளப்பகைவர்களும், முக்குணங்களும், இல்லாத நிலையாகும. அந்த நிலையில் அருள் பாலிக்கிறான்.
” காணாது கிட்டாது எட்டாது அஞ்சில்
காரியமில்லை என்றே நினைத்தால்
காணாததும் காணலாம் அஞ்செழுத் தாலதில்
காரியமுண்டு தியானம் செய்தால்”

என்று ஒரு சித்தர் பாடி இருக்கிறார், இறைவன் நம் கண்ணில் காணமாட்டான் என்றோ கைக்கு எட்ட மாட்டானென்றோ நினைக்க வேண்டாம் ஐந்தெழுத்தால் அவனைக் காணலாம். தியானம் செய்வதன் மூலம் அவனைப் பிடிக்கலாம், என்ற அர்த்தம்நம்மை ஈர்க்கிறது.
திருவள்ளுவரின் பரம்பரையில் உதித்தவர், அகப்பேய் சித்தர். குலத்தொழிலான நெசவுத் தொழிலைச் செய்து வந்தார். ஒருநாள் அவருடைய மனதில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக பரம்பொருளைக் காணவேண்டும் என்ற எண்ணம் உதித்தது. ஞானத்தை போதிக்கும் குருவைத் தேடி காடுகளில் அலைந்தார்.
இயற்கையால் உண்டாகும் புயலை விட மனதில் உண்டாகும் புயல் மிகவும் கொடுமையானது. மன நோயால் ஏற்படும் புயல் மனித இனத்தையே அழிக்கும் எல்லாவற்றுக்கும் காரணம் மனப்பழக்கம் தான். உலகத்தை நலமுறச் செய்வது அன்பு ஒளியே. அந்த அன்பு ஒளியைத் தேடி அலைந்தார் அகப்பேய் சித்தர்.
சிததம் தெளியவைக்கும் மருந்தாக அவர் கண்ணில் ஒரு மரம் பட்டது. ஆயிரம் வருடங்களாக மனிதர்களுக்குப் பலன் கொடுத்து வந்த மரத்தின் அடிப்பாகம் இருபேர் கட்டிபிடிக்க முடியாத பருமன் கொண்டது. அவ்வளவு பெரிய மரம். அந்த மரத்தின நடுவே குகை போன்ற பொந்து தென்பட்டது. மரப்பொந்தின் உள்ளே போய் அமர்ந்தார், எதிலும் கிடைக்காத நிம்மதி அவருக்கு கிடைத்தது. தியான நிலையில் தவம் செய்து வந்தார். அவருடைய தவத்திற்கு பறவை மிருகங்களால் யாதொரு தொந்தரவும் கிடைக்கவில்லை. கடும் தவத்தில் இருந்த அகப்பேய் சித்தருக்கு வியாசமுனிவர் நேரில் காட்சி அளித்தார், அவர் தனக்காக எதையும் கேட்கவில்லை. மாய உலகில் வாழும் மனிதர்களின் தீய எண்ணங்களையும், தீய செயல்களையும் போக்கி, நல் எண்ணங்கள் உடையவர்ளாக மாற்றி இறைவனை காணும் வழியை போதிக்க வேண்டும் என்று கேட்டார். தனக்கென வாழாமல் பிறருக்காக கேட்கும் நல்ல உள்ளத்தை வாழ்த்திய வியாச முனிவர் யோக மந்திரங்களையும், அரிய உபதேசங்களையும் கற்பித்து மறைந்தார்.
அகப்பேய் சித்தர் பல ஊர்களுக்கும் சென்று நல்நெறிகளை மக்களுக்கு போதித்தார்,மண்ணுக்குள் சமாதி நிலையில் பல இடங்களில் தவம் செய்தார். அவருடைய பாடலகள் உள்ள முக்கிய கருத்துக்கள் யாவரையும் கவரும் தன்மை கொண்டது.
அங்கம்இங்கும் ஓடும் மனதை கட்டுப்படுத்தினால் நஞ்சுண்ணவும் வேண்டாம் நாதியற்று திரியவும் வேண்டாம்,, இறைவன் உனக்கு காட்சி கொடுப்பான்.
இவருடைய பாடல்கள் இன்றைய காலத்துக்கு மட்டுமல்ல எல்லாக் காலத்துக்கும் ஏற்புடையதாக இருக்கின்றன. அகப்பேய் சித்தர் என்பதே அகப்பை சித்தர் என்று மருவி உள்ளது. இவர் திருவையாறு , எட்டுக்குடி ஆகிய இடங்களில் ஜீவ சமாதியானதாகக் கூறப்படுகின்றது. இவர் குருபகவானின் அம்சமாக இருப்பதால் வியாழக்கிழமை இவரை வணங்கினால் குருபகவானால் ஏற்படக்கூடிய தோசங்கள் நீங்கி நலம் பெற்று வாழலாம்.
திருச்சிற்றம்பலம்
ஒம் நமசிவாயம்
மேலும் ஆன்மீகத் தகவலுக்கு
http://vpoompalani05.blogspot.in/
https://vpoompalani05.wordpress.com
http://www.vpoompalani05.weebly.com.

தியானம்

Standard

நீங்கள் தினமும் உடற்பயிற்ச்சி செய்யனம்னு நினைக்கறீங்க. ஆனால் செய்ய முடியல. தியானம் பண்ணனம்னு கண்ணை மூடரீங்க. ஆனால். மனத்தை ஒருமுகப்படுத்தி தியானம் செய்ய முடியவில்லை. உங்கள் அன்றாட வேலைகளையே மாணவர்கள் என்றால் படிப்பு, பெரியவர்கள் என்றால் உழைப்பு. கவனம் சிதராமல் உங்கள் வேலைகளை உங்களால் செய்ய முடிவதில்லை. சரி. மனத்தை ஒருமுகபபடுத்த என்ன வழி. மனோ தத்துவத்தில் PHD வாங்கிய திரு சூரியன் அவர்கள் தனது நூலில் குறிப்பிட்டு உள்ள மிக சிறந்த வழிமுறைகளை பார்ப்போம்.

1]புத்தகத்தை நாம் அனைவருமே இடது பக்கத்தில் இருந்து வலது பக்கமாக படிப்போம். அவ்வாறு இல்லாமல் வலதிலிருந்து இடது பக்கமாக முதலில் படித்து, பின்னர் இடமிருந்து வலமாக படியுங்கள்.
2]அதே போல் முதலில் நீங்கள் தலை கீழாக புத்தகம் படித்து, பின்னர் நேராக படியுங்கள். இவ்வாறு செய்வது, நீங்கள் வேகமாக படிக்கும் திறனை அதிகரிப்பதோடு உங்கள் மனப்பாடம் செய்யும் திறனையும் அதிகரிக்கும்.

3] உலகில் பெரும்பாலான மக்கள் வலது கையால் எழுதும் பழக்கம் உடையவர்கள். வலது கையால் எழுதுபவர்கள் இடது கையாலும், இடது கை பழக்கம் உடையவர்கள் வலது கையாலும் எழுதி பழகுங்கள்.

4] பின்னர் சிவாஜி த பாஸ் போல் இரண்டு கைகளாலும் எழுதி பழகுங்கள்.

5] இது அவர் சொல்லாதது. என் சொந்த முயற்ச்சியில் உணர்ந்தது. ஒரே நேரத்தில் வலது கையில் ஒரு வார்த்தையையும், இடது கையில் மற்றொரு வார்த்தையையும் எழுதி பழகுங்கள். வலது கையில் குளிர் என்று எழுதினால், இடது கையில் வெய்யில் என்று எழுதுங்கள்.

6] இதே போல் உங்களுக்கு ஏதேனும் புதிய வழிமுறை தோன்றினாலும் செய்யலாம். நமது தன்னம்பிக்கையை அதிகரிக்கும் விதமாக, நேர்மறை எண்ணங்களை மனத்தில் வளர்க்கும் விதமாக தினமும் எந்த அளவு புது, புது விசயங்களை கற்க்கிரோமோ, கேட்கிறோமோ. அந்த அளவு மூளையில் புரத சக்த்து அதிகமாகும் என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட உண்மை.

ஒரே நேரத்தில் இரண்டு கைகளாலும் நீங்கள் எழுதும் பொழுது. வலது, இடது இரண்டு பக்க மூளையும் ஒரே நேரத்தில் இயங்கும். அதன் மூலம் உங்கள் IQ, EQ இரண்டும் உயரும். இந்த பயிற்ச்சி யார் வேண்டுமானாலும் செய்யலாம். அதிலும் குறிப்பாக மாணவர்களுக்கு இந்த பயிற்ச்சி ஒரு வர பிரசாதம். வெறும் நாலே நாட்களில் எனது தம்பியின் அறிவாற்றலை மேம்படுத்திய பயிற்ச்சி இது

ஆதி சங்கரருக்கு அருள் செய்த சங்கரன்

Standard

ஆதி சங்கரருக்கு அருள் செய்த சங்கரன்
எவன் பிரம்மத்தைப் பிரம்மமாக அறிகிறானோ அவன் பிரம்மாமாயிருந்தே பிரம்மத்தை அடைவான் என்பது சிவனார் வாக்கு. அந்த வாக்கியத்தின்படி நடந்த சித்தர்கள் முக்காலமும் உணர்ந்தவர்களாக இருந்தார்கள். அவர்கள் நெருப்பிலும், தண்ணீரிலும் முட்களிலும் சாதாராணமாக நடக்கும் ஆற்றலையும் பிராணிகள் பேசுவதையும் அறியும்சக்தியும பெற்று இருந்தார்கள்.

ஆதிசங்கரருக்கு வேதத்தை போதித்தவர் சிவபெருமான். ஒரு முறை ஆதி சங்கரர் ஆற்றில குளித்து விட்டு வரும்போது அருவருப்பான தோற்றத்தோடு கள் (மது) குடத்தை தூக்கிக் கொண்டு ஒரு புலையன் வந்தான். அவனை சுற்றி நான்கு நாய்கள் வந்து கொண்டு இருந்தன. அவனையும் நாய்களையும், பார்த்த ஆதி சங்கரர்” எட்டிப்போ” என்றார், அதற்கு அந்த புலையன் ” சாமி, எதிலிருந்து எதை விலகிப் போகச் சொல்கிறீர்கள்?”
“சாப்பாட்டினால் ஆன எலும்பு , சதை இவற்றால் ஆன கூட்டை விட்டு போகச் சொல்கிறீர்களா?கூட்டில் இருக்கும் ஞான மயமான ஆத்மாவை விட்டு விலகிப் போகச் சொல்கிறீர்களா? நீர் என்ன வேதாந்த பாடம் கற்றீர்? அதில் அவன் வேறு இவன் வேறு என்று சொல்லி இருக்கிறதா? நீயும் கடவுள், நானும் கடவுள், ஒரு பிரம்மம் இன்னொரு பிரம்மத்தில் இருந்து எப்படி வேறுபடும்? என்றான் புலையன்.

அந்த வார்த்தையை கேட்ட ஆதிசங்கரர், புலையன் சாதாரணமான மனிதன் அல்ல என்று எண்ணி அவன் காலில் விழுந்தார். தலையைத் தூக்கிப் பார்த்தார் அப்போது புலையன் இருந்த இடத்தில் சிவபெருமான் என்ற சங்கரர் புன்னகையோடு நின்று ஆசீர்வதித்தார். அவர் வைத்து இருந்த கள் குடம், கங்கையாக மாறியது, அவரோடு இருந்த நாய்கள் வேதங்களாயின. வேதங்களை ஆதிசங்கரருக்கு உபதேசித்து மறைந்தார் சிவபெருமான்.

வேதங்களை அறிந்த ஆதிசங்கரர் எழுதிய பஜகோவிந்தம் என்ற நூலில் உடல் தத்துவத்தையும், மனித வாழ்க்கையைப் பற்றியும் கூறி இருப்பது நாம் அறிய வேண்டிய தத்துவமாகும்.

பிராணாயாமம் என்னும் மூச்சுக் காற்றை அடக்குவதையும், பிரத்தியாஹாரம் என்னும் புலனடக்கத்தையும் , நிலையான பொருள் எது – நிலையற்ற பொருள் எது என்ற பாகுபாட்டை யோசித்தலையும் ஜபத்தையும், சமாதி என்னும் அசையா நிலையையும் மனதின் ஒருநிலைப்பாட்டையும், நீ ஏற்று செய்தல் வேண்டும் என்று கூறி இருக்கிறார்.

மனித வாழ்க்கையை பற்றி கூறியதைப் பார்ப்போம். ” தாமரை இலை மீது ஒட்டாமல் அசைந்தோடிக் கொண்டிருக்கும் நீர் போல், மனித வாழ்க்கை நிலையற்றது. உலகில் எங்கு பார்த்தாலும் நோயும், செருக்கும் தான் காணப்படுகிறது. எவனும் தான் சுகமாக இருப்பதாக நினைப்பதில்லை.

ஒருவன் பணம் சம்பாதிக்கும் போது மட்டும் தான் அவனிடம் மனைவி, மக்கள், உற்றார் உறவினர்கள் ,நண்பர்கள் அன்போடு பழகுகிறார்கள், அவன் உடல் தளர்ந்து பணத்தை இழந்தாலோ, அவன் சம்பாதிப்பதை விட்டுவிட்டாலோ அவனை மனிதனாகக் கூட அன்பு செலுத்துவதில்லை. அவனும் யாரும் பேசவும் மாட்டார்கள்
இந்த உடலோடு உயிர் ஒட்டிக் கொண்டிருக்கும் வரைதான் உன் சேமத்தைப் பற்றி விசாரிக்கிறார்கள். உன் உயிர் உன் உடலிலிருந்து போய் விட்டால் அந்த உடலுக்கு பெயரில்லை, சுற்றமில்லை, பந்த பாசமில்லை, அவனுக்குள்ள பெயரும் இல்லை, அவனையே சவம் அல்லது பாடி , பிணம் என்று தான் கூறுகிறார்கள், உயிருடன் இருக்கும் போது அவனோடு ஒட்டி உறவாடிய மனைவியும் அவன் உடலை தொடு அஞ்சுகிறாள். அவளும் அந்த உடடலைப் பார்த்து பயப்படுகிறாள். ஆகவே உறவை சதமென நினைக்காதே !
நீ யார்? நான் யார்? நான் எங்கிருந்து வந்தேன்? என் தாய் யார்? தந்தையார்? இதெல்லாம் கனவுக் காட்சி போன்ற மாயை அல்லவா? என்று உன் மனதில் பாவனை செய்து இந்த உலகம் சாரமற்ற பொருள் என்று முடிவு செய்,
நீ உண்மைப் பொருளை அறிந்த நல்லோர்களுடன் சேர்ந்து பழகினால் உலகப் பற்றை அறுப்பாய். உலகப் பற்று நீங்கினால் உன் மயக்கம் தொலையும், மயக்கம் தொலைந்தால் சாசுவதமான பரம்பொருளை அறிவாய், அதை அறிந்தால் நீ இந்த உலகில் வாழ்ந்திருக்கும் போதே ஞானியாக அதாவது ஜீவன் முக்தனாக ஆகிவிடுவாய், இவ்வுலகிலேயே பேரின்பத்தை அடைவாய் என்று ஆதிசங்கரர் கூறி இருக்கிறார்,
சித்தர் வாக்கு சிவன் வாக்கு என்பதைப் போல சிவனருள் கிடைத்த ஆதிசங்கரரின் வாக்கு உண்மையின் தத்துவத்தை அப்படியே படம் பிடித்து காட்டுகிறது அல்லவா?

இதைப் போன்ற கருத்தை சிவவாக்கியர் என்ற சித்தர் அவரது பாடலில் குறிப்பிட்டு இருக்கிறார்,
” ஆன்மா நுழைக்க பெற்ற பச்சை மண் பதிப்பு இந்த மானிட தேகம், ஆன்மாவாகிய வேட்டுவன் நினைக்கின்றவாறே மனிதன் இயங்குவான். உடம்பு அழிந்தபின் உயிரானது பறந்து போகின்ற தும்பியைப்போல பறந்து போகும். பித்தர்களே சிருஸ்டியின் விளையாட்டை அறிந்து கொள்ளுங்கள், மஞ்சன நீரும் இறைவனும் நமக்குள்ளே இருப்பதை உணருங்கள். காலையும் மாலையும் தியானம் செய்வீர்களானால் சகஸ்ர தளத்தில் இருக்கிற ஜீவத்மா முக்தி அடையும், மண்பாண்டம் உடைந்தால் உதவுமென்று ஓட்டை அடுக்கி வைப்பார்கள் எவரும் உண்டோ? வெண்கலம் உடைந்தால் வேண்டிய பொருளாக உருக்கி படைப்பார்கள், நன்கலமாகிய உடம்பு அழிந்தால் அது நாறும் என்று மண்ணில் புதைப்பார்கள். இந்த எண் ஜான் உடம்புக்குள்ளே இருக்கிற மாயமாவது என்ன? என்று கேட்கிகறார் சித்தர.
மனிதன் மனதை சுத்தப்படுத்த ஏற்றவாறு சித்தர்களின் பாடல்கள் அமைந்துள்ளன. சித்து விளையாட்டுகளால் மட்டும் அவர்கள் பெருமை அடைந்து விடவில்லை. உடல்கூறுகளின் வழியால் இறைவனைக் காண முடியும் என்றே உணர்த்தினார்கள்.
திருச்சிற்றம்பலம
ஒம் நமசிவாயம்
மேலும் ஆன்மீகத் தகவலுக்கு
http://vpoompalani05.blogspot.in/
https://vpoompalani05.wordpress.com
http://www.vpoompalani05.weebly.com.

ஓம்சிவசிவஓம் ஏன் ஜெபிக்க கூடாது

Standard

http://sivanadimai.blogspot.in/2013/03/blog-post_1037.html

ஓம்சிவசிவஓம் ஏன் ஜெபிக்க கூடாது
ஓம் நமசிவாய

ஓம்சிவசிவஓம் ஏன் ஜெபிக்க கூடாது

1.நமசிவாய – தூல ஐந்தெழுத்து
2.சிவாய நம – சூக்கும ஐந்தெழுத்து
3.சிவயசிவ – அதி சூக்கும ஐந்தெழுத்து
4.சிவசிவ – காரண ஐந்தெழுத்து
5. சி – மகா காரண ஐந்தெழுத்து

ஓம் சிவசிவ ஓம் ஜெபம் பண்ண சொல்பவர் கள் அதற்கு கொடுக்கும் பிரமாணம் என்ன ? ஏதாவது திருமுறைகளிலோ அல்லது மெய் கண்ட சாத்திரங்களிலிருந்தோ மேற்கோள் காட்டமுடியுமா? பின் எதை வைத்து அதை நம்புவது ?
ஓம் நமசிவாய ஜெபம் பண்ண தீட்சை பெற வேண்டும் என்பதே அவர்கள் சொல்லும் வாதம் வாகனம் ஓட்ட உரிமம் வேண்டும் என்றால் பெற்றுக் கொள்வதில் தவறில்லை. அதை விடுத்து காவலர்கள் இல்லாத வழியில் அழைத்து செல்கிறேன் என்பது போல் உள்ளது இவர்கள் செய்யும் இச்செயல் நம் முன்னோர் சமயகுரவர்கள் நால்வர் சம்பந்தர்பெருமான் அப்பர்சுவாமிகள் சுந்தர மூர்த்தி சுவாமிகள் மாணிக்கவாசக சுவாமிகள் மற்றும் சந்தான குரவர்கள் நால்வர் மெய்கண்டார் , அருள்நந்தி சிவாசாரியார், மறைஞானசம்பந்தர் உமாபதிசிவம் ஆகியோர் அருளியது பொய் என்று சொல்லுவது போல் உள்ளது இவர்கள் வாக்கினை எனதுரை தனதுரையாக சிவபெருமானே ஏற்றுக்கொண்டுள்ளார் நமது சமயத்தில் இவர்கள் அருளியது சிவபெருமான் அருளியது போலவாகும் இவர்கள் வாக்கே பிரமாணம் ஆகும் .
வேதத்தையும் பதினென் புராணங்களையும் நமக்கு தொகுத்தளித்த வியாச மாமுனிவர் வார்த்தைகளே நமக்கு நம் சைவத்தில் பிரமாணம் இல்லை .அப்படி இருக்கும் போது அவர்களை மிஞ்சிய ஞானிகள் யார் உளர் ?
ஓம் நமசிவாய ஜெபம் பண்ண சமய தீட்சை ஒன்றே போதும் ,சிவாயநம ஜெபிக்க அடுத்த கட்டமான விசேட தீட்சை பெற வேண்டும், சிவயசிவ ஜெபிக்க அதற்கும் அடுத்த கட்டமான நிர்வாண தீட்சை பெற்று ஜெபிக்கவேண்டும்,சிவ சிவ ஜெபம் செய்ய ஆச்சார்யா அபிசேகம் பெற்ற மகான்களால் மட்டுமே முடியும் .ஏனெனில் அது முக்தி பஞ்சாட்சரம் எனப்படும் .அதாவது துறவு நிலை உள்ளவர்களும் இனி உலக வாழ்க்கையில் கடமை இல்லை என்பவர்களும் ஜெபிக்க வேண்டிய மந்திரம், சிவசிவ மந்திரத்திற்கு ஓம் எனும் பிரணவம் சேர்க்க வேண்டியதில்லை .
ஓம் சிவ சிவஒம் நூற்றுக்கணக்கில் ஜெபிக்க வேண்டுமாம் ஆனால் ஓம் நமசிவாய 108 முறை ஜெபித்தால் போதும் ,ஏனெனில் நாம் ஒரு நாளைக்கு 21600 முறை சுவாசிக்கின் றோம் அதில் இரவு உறக்கம் போக பாதி நாளுக்கு 10800 முறை சுவாசிக்கின்றோம் எனவே அதில் 100 மூச்சில் ஒரு மூச்சு என 108 முறை ஜெபித்தால் போதும் அதற்கு மேல் இல்லறவாசிகளுக்கு தேவையில்லை என்பதே பெரியோர்கள் வாக்கு .
ஏக ருத்ராட்சம் (ஒன்று ) எப்போதும் அணியவேண்டும் சிவசின்னங்களில் ஒன்றான ருத்ராட்சம் அணிந்து எப்போதும் உடலில் இருக்கவேண்டும் .கையில் ஜெபம் செய்து வீட்டில் எடுத்து வைப்பது தவறு .
மந்திர ஜபம் என்பது நம் பாவமாகிய வினை தீர்க்கவும் அடுத்து பிறவி இல்லா நிலை பெற்று முக்தி எனும் வீடுபேறு அடையவும் இருக்கவேண்டும். காசுக்காகவோ கடன் கட்டவோ கார் வாங்கவோ அல்ல ,ஆன்மிகம் என்பது ஆன்மா நற்கதி பெறவே .
காத லாகிக் கசிந்துகண் ணீர்மல்கி
ஓது வார்தமை நன்னெறிக் குய்ப்பது
வேதம்நான்கினும்மெய்ப்பொருளாவது
நாதன் நாமம் நமச்சிவாயவே – சம்பந்தர்
சொற்றுணை வேதியன் சோதிவானவன்
பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக்
கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்
நற்றுணை யாவது நமச்சி வாயவே. – அப்பர்

மற்றுப் பற்றெனக் கின்றி நின்திருப்பாத மேமனம் பாவித்தேன்
பெற்ற லும்பிறந் தேன்இ னிப்பிறவாத தன்மைவந் தெய்தினேன்
கற்ற வர்தொழு தேத்துஞ் சீர்க்கறையூரிற் பாண்டிக் கொடுமுடி
நற்ற வாஉனை நான்ம றக்கினுஞ்சொல்லும்நா நமச்சி வாயவே. – சுந்தரர்

போற்றிஓம் நமச்சி வாய புயங்கனே மயங்கு கின்றேன்
போற்றிஓம் நமச்சி வாய புகலிடம் பிறிதொன் றில்லை
போற்றிஓம் நமச்சி வாய புறம்எனைப் போக்கல் கண்டாய்
போற்றிஓம் நமச்சி வாய சயசயபோற்றிபோற்றி

-மாணிக்கவாசகர்

இது போன்று http://www.thevaaram.org காரண பஞ்சாக்கரம் பற்றி அறிந்து கொள்ளலாம்.

எவ்வளவோ காரணங்களை முன்னிட்டு மக்கள் எதிர்பார்ப்புகளோடு பிரார்த்திப்பார்கள் சரியான படி நிரூபணம் இல்லாத பிரமாணம் இல்லாத ஒரு மந்திரம் கண்டுபிடித்து ஆளாளுக்கு தான் பேர் வாங்க இது ஒன்றும் விஞ்ஞான கண்டுபிடிப்பு அல்ல இறை நம்பிக்கை மக்களின் நம்பிக்கை ஆன்மீகம் என்பது மக்களின் ஆன்மாவோடு ஒன்றியது நாத்திகர்களுக்கும் இவர்களுக்கும் என்ன வித்தியாசம் சொல்லக்கூடாத உதாரணம் யூத மதத்தில் பிறந்த இயேசு புது மதம் உருவாக்கியது போல் உள்ளது

சிவஞானபோதம் 9 ஆம் சூத்திரம், சிவஞான சித்தியார் சிவபிரகாசம் திருவருட்பயன் என 14 சாத்திரங்களுமே பஞ்சாக்கரத்தின் மேன்மையை எடுத்து கூறுகின்றன

முதல் வகுப்பு படிக்காமல் ஆராய்ச்சி படிப்பு போல் உள்ளது மக்கள் போலி சாமியார்கள் பிடியில் இருந்து தப்பி பிழைப்பதே அரிதாக உள்ள நிலையில் தவறான மந்திரமே அலைக் கழிக்கும் .

நமசிவாய என்பது 36 தத்துவங்களையும் கடந்த சதாசிவமூர்த்தியின் மூலமந்திரம் ஐந்தெழுத்து மந்திரம் ஸ்ரீகண்ட பரமேஸ்வரனை அதிதெய்வமாக கொண்டது

மேற்சொன்ன காரணங்களால் தான் ஓம்சிவசிவஓம் என்பது நம்பிக்கைக்கு உகந்த மந்திரம் அல்ல அது முடிவான முடிவை கொண்ட சைவ சமயத்தின் சிவபெருமானின் மந்திரம் அல்ல

போற்றி ஓம் நமசிவாய
திருச்சிற்றம்பலம்

சிவ ரூபமே சித்தர்களின் சிந்தனை

Standard

சிவ ரூபமே சித்தர்களின் சிந்தனை
உலகம் தோன்றவும், உயிர்கள் தோன்றவும், மூலப் பொருளான தொண்ணூற்றாறு தத்துவங்கள் தேவைப்படுகின்றன. இந்த தத்துவங்கள் நீங்கினால் யாவும்அழிந்து விடும். மறுபடியும் உலகம் தோன்ற இந்த தத்துவங்கள் தோன்ற வேண்டும். தத்துவங்களுக்கெல்லாம் காரணமானவர் ஐந்தெழுத்தாகிய இறைவன். இறைவனின் ஒரே மூலமந்திரம் ஐந்தெழுத்தான ” நமசிவாய ” என்ற மந்திரப் பொருள்.

ந – பிரம்மன் படைக்கும் தொழிலை செய்பவர்
ம – திருமால் காக்கும் தொழிலை செய்பவர்
சி – உருத்திரன் அழிக்கும் தொழிலை செய்பவர்
வா – மகேஸ்வரன் மறைத்தல் தொழிலை செய்பவர்
ய – சதாசிவம் அருள் புரியும தொழிலை செய்பவர்.

நமசிவாய என்று உச்சரித்துத் தியானம் செய்தாலே இறைவனைக் காண முடியும் என்று உணர முடிகிறது அல்லவா?

உலக இச்சையையும், உடல் இச்சையையும் கடந்தவன் ஞானி. உடலின் பஞ்ச பூதங்களை அடக்கித தன்னுள் இறைவனைக் கண்டு இறைவனைக் காணும் வழியினை மக்களுக்கு உபதேசிப்பவர்கள் சித்தர்கள். பலனைக் கருதி தெய்வத்தை நினைப்பவன் ஞானத்தை அடையமுடியாது. ஞானத்தை அடைய விரும்பி, தெய்வத்தை நினைப்பவனுக்கு சித்தி கிடைக்கிறது.
மண், பெண், பொன் என்ற மூவாசைகளில் மனதை பறி கொடுத்தால் இறைவன் அருள் பெறுவது எப்போது? பற்றற்றவரகளை பற்றிக் கொள்வான் இறைவன் என்பது சித்தரின் வாக்கு, சித்தர்களின் சிந்தனை எப்போதும் சிவ ரூபத்திலேயே நிலைத்திருக்கும்.
ஆசையின் ஆரம்பமே துன்பத்துக்கு ஆரம்பம். ஆசையை மனதில் இருந்து துரத்திவிட்டால் அதுவே இன்பத்தின் ஆரம்பமாக அமைந்து விடும். மனிதனுக்கு துன்பம் நேர்ந்தால் விதி என்கிறோம். நாம் செய்த பழியை விதியின் மேல் போடுகிறோம், ஆசைக்கு காரணமான துன்பத்ததைத் தவிர்க்க நம்மால் முடியும், அதுதான் மதி. ஆசையை மதியுடன் சேர்ந்து விரட்டினால் விதியால் என்ன செய்யமுமுடியும். சிந்தித்துப் பார்த்தால் தெளிவு பெறும்.
சித்தர்கள் சிரஞ்சிவித்தன்மை பெற்றவர்கள் என்றும், இன்றும் அரூபமாக நடமாடிக்கொண்டிருக்கிறார்கள் என்றும் நம்பப் படுகிறது. மலைகளிலும் காடுகளிலும், மனிதர்கள் ஆரவாரமான கூச்சல் சத்தம் இல்லாத இடங்களில் சித்தர்கள் இருக்கின்றனர் என்று பார்த்தவர்கள் கூறுகின்றனர். திருவண்ணாமலை, மலைப்பகுதிகளிலும், ஸ்ரீவில்லிபுத்தூர் மகாலிங்க மலை என்ற சதுரகிரி மலைகளிலும் சித்தர்கள் நடமாட்டத்தை பார்த்ததாகவும் அவர்கள்மனிதர்களைக் கண்டு கொள்ளாமல் நடந்து சென்றார்கள் என்று ஆதிவாசிகள் கூறுகின்றனர்.
மலைகளில் மாடு மேய்க்கச் சென்ற சிறுவர்கள், யாரோ இலைகளின் மேல் நடந்து செல்லும் சத்தத்தைக் கேட்டதாகக் கூறி இருக்கிறார்கள். அதனால் அவர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. அரூபமாக சித்தர்கள் நடந்து செல்லும் காலடி ஓசை என்று பெரியவர்கள் கூறுகிறார்கள், சித்தர்கள் எப்போதும் ஒரே இடத்ததில் இருப்பதில்லை, தங்குவதும்இல்லை. அவர்கள் சுற்றிக்கொண்டே இருப்பார்கள். ஒரு மனிதன் வாழ்நாளில் சித்தரை சந்தித்து ஆசி பெற்று விட்டால், தெய் கடாட்சகம் கிடைத்ததைப் போன்று பலன்களை பெறுவான், சித்தர்கள் உடற்கூற்றை பற்றி ஆராய்ந்து வரும் நோய்களையும், அதற்குரிய சிகிச்சைகளையும் நூல் வடிவில் தந்து இருக்கிறார்கள். சித்தர்கள் எழுதிய மருத்துவக் குறிப்பு பற்றியும், வசிக, மாந்திரக, தந்திர யோகங்களைப்பற்றியும் கண்ட நூல்கள் சில கிடைத்தனவற்றை கீழ்கண்ட “இ “வலைதலத்திலிருந்து தரவிரக்கம் செய்து கற்றுப்பாருங்கள், சித்தர்களின் அரிய பெரிய கருத்துக்களை காணலாம்,

http://www.siththar.com/home/upload/kokoham.pdf
http://www.siththar.com/home/upload/thirumantheramalai.pdf

http://www.siththar.com/home/upload/mantheram.pdf

http://noolaham.net/project/46/4598/4598.pdf

http://www.subaonline.net/thfebooks/THFagathiyarkarpachasthiram.pdf

https://ia700202.us.archive.org/22/items/Manikkavasagar/Manikkavasagar.pdf

https://ia700602.us.archive.org/22/items/ManthirangalEndralEnna/ManthirangalEndralEnna.pdf

http://www.siththar.com/home/upload/agathiyarAntharankaTheedchaavethi.pdf

http://www.siththar.com/home/upload/siththarmaiporul.pdf
http://www.siththar.com/home/upload/akathiyar12000.pdf
http://www.siththar.com/home/upload/amuthakalasam.pdf
http://www.siththar.com/home/upload/muppukuru.pdf
http://www.siththar.com/home/upload/agasthiyarPanneruKaandam200.pdf
http://www.siththar.com/home/upload/agathiyarGhanakaviyam1000.pdf

http://www.siththar.com/home/upload/agasthiyarPanneruKaandam200.pdf

http://www.tamilwin.info/home/upload/nayanavethe.pdf

http://www.tamilwin.info/home/upload/amuthakalaigynam.pdf
http://www.tamilwin.info/home/upload/akathiyarPooranaSuthiram.pdf
http://www.tamilwin.info/home/upload/bogharSarakuVaippu.pdf

http://www.tamilwin.info/home/upload/siththarThathuvam.pdf – with Murali Krishnan.
http://www.tamilwin.info/home/upload/akathiyar300.pdf – with Murali Krishnan.

http://www.tamilwin.info/home/upload/ganasaranool.pdf – with Murali Krishnan.

http://www.tamilwin.info/home/upload/nantheesar300.pdf – with Murali Krishnan.
http://www.tamilwin.info/home/upload/bogharJannashagara.pdf

மனிதனுக்கு ஏற்படும் சாதாரண நோய் முதல் அசாதாரண நோய்கள் வரை ஆராய்ந்தறிந்து அவர்களுக்கு வைத்திய முறைகளை கூறயுள்ளார்கள், இதில் மிகவும் பிரபலமானது அகத்தியர் வைத்திய சித்தர்வைத்திய முறைகள்.
மனிதன் பிறக்கு போதே இறக்கும் நாளும் நிர்ணயிக்கப்பட்டு விடுகிறது. எத்தனை யோ, விதமான மனிதர்களின் தலையெழுத்தை பனை ஒலைகளில் அகத்தியர், காகபுஜண்டர், போகர், வசிஸ்டர் ப்ருகு போன்ற சித்தர்கள் எழுதி வைத்து இருக்கின்றாரகள். சில ஒலைச்சுவடிகள் கிடைத்து இருக்கின்றன. அவைகளில் நமது தலையெழுத்தை துல்லியமான முறையில் அவர்ரவர்களுக்கு உண்டான நிகழ்வுகள் கூறப்பட்டு இன்றும் அகத்தியர் ஜீவநாடி சோதிடம் என்று அறிந்து வருகிறோம்,
பிறக்கும் போதே, சித்தர்களாக எவரும் பிறப்பதில்லை. வாழும் முறையில் இறைவனை அறிந்தே தீருவது என்ற வைராக்கியத்துடன் உடலையும், மனதையும், வசப்படுத்திக் கொண்டவர்களே சித்தர்கள்.
எத்தனையோ, மனச்சஞ்சலங்களுக்கு இடையே வாழும் நாம் சித்தரகளாவது கடினம், ஆனால் சித்தர்கள் செய்து காட்டிய யோகப்பயிற்சிகளையும, தியானப் பயிற்சிகளையும் செய்து, உடலையும் ,மனதையும், சுத்தமாக்கி நிம்மதியான வாழ்க்கை வாழ முடியும், சித்தி தரும் சித்தர்களின் வாழ்க்கை நமக்கு பாடமாக அமையும் என்பதில் சந்தேமில்லை. எனவே சித்தர்களின் சிந்தனை எப்பொழும் சிவரூபமே என்பதை உணர்வோம். சித்தர்களின் வாக்கு தெய்வ வாக்கு !!
சித்தர்களின் சிந்தனையை ஏற்போம்,! சிவ ரூபத்தை தரிசிப்போம் !!
திருச்சிற்றம்பலம்
ஓம் நமசிவாயம்
மேலும் பல ஆன்மீகத் தகவலுக்கு
http://vpoompalani05.blogspot.in/
https://vpoompalani05.wordpress.com
http://www.vpoompalani05.weebly.com.

சித்தர்களுக்கு வித்திட்ட ஞான குருவானர்கள்

Standard

சித்தர்களுக்கு வித்திட்ட ஞான குருவானர்கள்
பதினென் சித்தர்களின் வரலாற்றை நோக்கும் போது சித்தர்களுக்கெல்லாம் மூல காரணமாக ஆனவர்கள் மூன்று ஞானிகளான குருமார்கள்
1, குரு தட்சணாமூர்த்தி
2. சுப்பிரமணியம் ( சித்தர் )
3.நந்தி தேவர் ஆகிய மூவர்
இவர்கள் மூன்று பேரும் சித்தர் பரம்பரை சேர்ந்தவர்கள் அல்லர். இவர்கள் சித்தர் பரம்பரை தோன்றியதற்கே மூல காரணமானவர்கள்.
குருதட்சணாமூர்த்தி :
இவர் ஆதியும் அந்தமும் அருவமும், உருவமும், அருவுருவமும் அல்லாத ஞான மயமான மூலப்பொருள்களின் வெளிப் பாடே ஆவர். இவர் குருதட்சணாமூர்த்தி வடிவத்தில் முதல் ஞானாசிரயனாக வெளிப்பட்டு சனாதி முனிவர்கள் (நந்தி நால்வர்) நால்வருக்கும் கல்லால மரத்தடியில் மோன நிலையில் இருந்து சூன்ய மயமான சுத்த பரஞானத்தை சொல்லாமல் சொல்லி புரிய வைத்ததே. பிரபஞ்சத்தின் முதல் உபதேசமாகும். இவர் சித்தர் பரம்பரையை சேர்ந்தவர் அல்ல என்றாலும் சித்தர்கள் தோன்றுவதற்கு முதல் வித்திட்டவர் ஆவார்.
சிவ பரம்பொருளின் முதல் அவதாரமே குருதட்சணாமூர்த்தி. இவர்தான் முதன்முதலில் ஞான உபதேசம் எட்டு சீடர்களுக்கு ஆன்மீக ஞானத்தை உபசேம் செய்திருக்கிறார், நந்திகள் நால்வர் , சிவயோக மாமுனி, பதஞ்சலி, வியாக்ரம பாதர், திருமூலர் என்பது திருமூலர் பாடல் வாயிலாகவே அறியலாம்.
” நந்தி அருள் பெற்ற நாதனை நாடினன்
நந்திகள் நால்வர் சிவயோக மாமுனி
மன்று தொழுத பதஞ்சலி வியாக்ரமர்
என்றிவர் என்னொடு எண்மரும் ஆமே.” – திருமூலர் திருமந்திரம்

இரண்டாவதாக சுப்பிரமணியர்
சிவனாரின் தவஞான நிலையில் ஆக்ஞை பீடமான அவருடைய நெற்றிக்கண்ணிலிருந்து ஆறு தீப்பொறிகளாக வெளிப் பட்ட ஞான ஒளி விளக்கே சுப்பிரமணிய சித்து. பஞ்ச முக சிவத்தின் ஆக்ஞை மையத்திலிருந்து பிரபஞ்ச ஆற்றலின் உன்னத நிலையான ஆறுமுகச் சிவமாக இந்தச் சித்து வெளிப்பட்டது. இந்த சித்து மனித இதயமான அகத்திற்கு உணர்த்திய உன்னத ஞானமே சுப்பிரமணிய ஞானம். ஒரு உண்மை குரு முகமாக இந்த ஞானத்தை பெறுபவர்கள் யாவரும் அகத்தியர்கள்தான். அகத்தியா என்ற சொல் ஒரு காரணப் பெயர், அதை அகம் – தீ – அர் என பிரித்தால் அது ” ஞானத்தீயையே இதயமாக கொண்டவர் ” என்ற பொருள் படும். இந்த அகத்தீயை தன்மயமாக கொண்டவர் சுப்பிரமணியர். இந்த காரணப்பெயர் சு – பிரம்மம் – மணி – அர் என்று பிரிந்து ” தூய பரவெளி முழுவதும் ஊடுருவி நிறைந்துள்ள இரத்தின மயமான ஞானப் பேரொளியாக உள்ளவர் ” என்று பொருள் படும். இவரது அகத்தீயை முழுவதுமாக உள்வாங்கி எங்கும் பிரதிபலித்து வரும் பண்பின் உருவக வெளிப்பாடே “அகத்தியர்” . அகத்தியம் என்பது ஒவ்வொரு மனிதனின் உண்மையான ஆன்ம தரிசனமே ஆகும். இதுவே மகா நட்சத்திரமாக ஒளிவீசிக்கொண்டிருக்கிறது இன்றுவரை. அதுவே அகத்தியர் என்ற மாமுனிவர். சுப்பிரமணி ஞானத்தை முழுமையாக தெரிய வைப்பதே இந்த அகத்தியர் வரலாறு.
திருச்சிறறம்பலம்

சிவலாயங்களில் சித்தர்களின் அருள்

சிவன் கோவில்களில் உள்ள சிவன், நந்தி, முருகன்( சுப்பிரமணியர்) ஆகிய மூவருமே மூலப்பரம் பொருளின் புறவடிவங்கள் தான் என்பது எளிதில் விளங்கும். சித்தர்களில் பெரும்பாலோர் பிரசித்தி பெற்ற தமிழக கோவில்களில் சமாதி பூண்டோர் அல்லது சிவத்துடன் கலந்தோ இருந்து, அந் கோவில்களில் மூலவராகவே இருந்து அருளாட்சி செய்து வருகின்றனர். சில சித்தர்கள் தனித்தனியே சமாதிக் கோவில்களும் கொண்டுள்ளனர்.
இக்கோவில்களில் ஏதேனும் அருகில் வாழும் மக்களோ, அல்லது அக்கோவிலுக்கு வழிபாடு செய்யச் செல்லும் பக்தர்கள் அக்கோவிலில் எழுந்தருளியுள்ள சிவனையோ, முருகனையோ, அம்பாளையோ, சித்தரையோ, உண்மையான பக்தியுடன் அந்தக் கோவில் வளாகத்தில் உட்கார்ந்து தினமும், அரைமணி நேரம் கண்மூடி தியானம் செய்து வந்தால், கால்ப்போக்கில் அங்கு அருள் ஆட்சி செய்து வரும் சித்தர் பரம்பொருளின் திருவருள் துணைகொண்டு அந்த பக்தருக்கு அமைதியான வாழ்வை அளிப்பதுடன், மரணமில்லா பெருவாழ்வு பெறுவதற்கான தவ நெறியை தொட்டுக் காட்டி அருள்புரிவார்
திருச்சிற்றம்பலம்