திரு நீரு

Standard

திரு நீரு
மங்கல மங்கையருக்கு அழகு – நெற்றியில் குங்குமம்
ஆன்மீக அழகனுக்க அழகு – நெற்றியில் திருநீரு
சிவ அடையாளம் திருநீரு, உத்திராட்சம், சடைமுடி. இதில் சைவ மதத்தின் முதன்மை அடையாளமாக முன்னிருப்பது திரு நீரு.
வேதத்தில் உள்ளது – நீரு.வெந்துயிர் நீக்குவது – நீரு. போதம் தருவது – நீரு. புண்ணியமாவது – நீரு, முக்தி தருவது – நீரு. முனிவர் அணிவது நீரு. சத்தியமாவது – நீரு. தத்துவ மாவது – நீரு. பரவ இனியது – நீரு. பக்தி தருவது – நீரு. சக்தி தருவது – நீரு. கீர்த்தி தருவது நீரு. காண இனியது – நீரு. பெருமை கொடுப்பது, மானம் தருவது, பூச இனியது, மதியைதருவது, புண்ணியமாவது, ஆசை கெடுபபது, பேசஇனியது, தேசம் புக்ழ்வது, அவலம் கெடுப்பது, பாவம் தொைல்ப்பது, வேதம் புகழ்வது -நீரு, இதுபோன்ற திரு நீருன் பெருமையை நால்வர் திருநீற்று பதிகத்தின் மூலம் இதன் தனி சிறப்பை விள்க்குகிறது,
சிவன் – பித்தன் – அக்னியாக இருப்பதால் அக்னியின் முதிர்ச்சி சாம்பல் எனவே அக்னி சொருபவமான சிவனுக்கு சாம்பல் கொண்ட விபூதியே பிரசாதமாக வழங்க்படுகிறது, திருஞான சம்பந்தர் கூற்றின்படி காடுடைய சுடலை பொடி பூசி உள்ளம் கவர் கள்வன்- சுடுகாட்டுசாம்பலை உடலில் பூசியவர் என்கிறார்
விஷ்ணு – வாதம் – நீர் வடிவம் – திருபாற்கடலில் பள்ளிகொண்டவர் எனவே வாதம் – நீர் கொண்ட தீர்த்தம் பிரசாதமாக வழங்க்ப்படுகிறது.
இதன்படி சைவத்ததின் – சிவத்தின் முன்னின்ற அடையாளமான திரு நீரு எவ்வாறு தயாரித்து பிரசாதமாக வழங்கப்படுகிறது என்பதை மிஸ்டிக் செல்வம்ஐயா தனது விபூதி பிரயோகம் என்ற ஆன்மீக சொற்பொழிவு மூலம் தெள்ளத் தெளிவாக விளக்கியுள்ளார்கள்.
விபூதிக்கு முக்கிய ஆதாரமாக உள்ளது பசுஞ்சாணம், கோமாதா என்று தெய்வமாக கொண்டாடும் பசுஞ் சாணத்திலிருந்து தான் சாம்பல் தயாரிக்கப்படுகிறது. இதற்காக கோவில்களில் பேணப்படும் கோசாலை ஆதாரவற்ற பசுமாடுகள் பராமரிக்கப்படும் இடம்- இங்குள்ள பசுஞ்சாணத்தின் மூலம் சாணம்சேகரித்து அதனை உருண்ட கவலங்களாக உருட்டி நெருப்பிட்டு சாம்பல் பஸ்பமாக கொள்ளப்படுகிறது, இந்த சாம்பல்பஸ்பம் 2 கிலோ. இவற்றுடன் கீழ்கண்ட படிகாரங்கள் சமவிகதத்தில் சேர்த்து கலவை செய்யப்படுகிறது,
சேர்க்கப்படும் படிகாரங்கள் :
படிகார பஸ்பம் , குங்குலிய பஸ்பம், சங்கு பஸ்பம், ஆமை ஓடு பஸ்பம், பவள பஸ்பம், சிரா பஸ்பம், சிரஞசி பஸ்பம், முத்து சிப்பிபஸ்பம், நத்தை ஒடு பஸ்பம், ஆகிய பஸபங்கள் ஒவ்வொன்றும் சரியாக 2 கிராம் வீதம் கலந்து ஒரு அகன்ற தாம்பாளத்தட்டில் நன்றாக கலந்து அதற்கு ஓம் சிவ சிவ ஓம் என்ற மந்திர உருவேற்றி பின் ஏதேனும்ஒரு சிவன் கோவிலில் விபூதி அபிசேகம் செய்து இந்த மந்திர விபூதியை தயார் செய்து பயன்படுத்தலாம்
இருப்பு வைத்தல்: இதனை சுத்தமான ஈரமற்ற பட்டர் பேப்பர் அல்லது காந்தமில்லாத பாத்திரம் அல்லது பட்டு துணி கொணட பை இவற்றில சேமித்து வைக்கலாம், இதனைபிரசாதமாக அனுப்ப வேணடுமெனில் பூவரசு இலையில் மடித்து அனுப்பவது மிகுந்த சக்தியை யும் பாதுகாப்பையையும் தரவல்லது, இன்னும் சில சிவலாய்ங்களில் இது போன்றுதான் விபூதி பிரசாதம் அனுப்பப்படுகிறது,
அணிதல்:
திரு நீரை பெருவிரல், ஆள்காட்டி விரல் நடுவிரல் ஆகியமூன்று விரல்களால் எடுத்து , வாழ்த்து பெறுவோருக்கு பூசுவதனால் பெருவிரலால் பூச வேண்டும் தனக்கு தானே பூசி வேண்டுமெனில் நீரில் கொழைத்து பட்டையாக நெற்றியில் பூசிக் கொள்ள வேண்டும் விபூதியைஉடலில் எங்கு வேண்டுமாலும் யார் வேண்டுமானலும் பூசிக் கொள்ளலாம், தற்போதும் பிணிகண்டவர்கள் விபூதியை மந்திரித்து பிணி கண்ட இடங்களில் பூசிக் கொள்வதைகாணலாம், திரு நீரு பூசும் போது கீழே சிதறாமல் முகம்ஆகாயத்தை பார்த்து கொண்டு ஓம் சிவ சிவ ஓம் என்று மந்திரம் ஜெபித்துக்கொண்டுபூசினால் நம்மை பிடித்த பிசாசுக்ளவிலகும் பிணகள் அகலும்,நற்பலன் கிடைக்கும், மந்திர விபூதியை இளம் குழந்தைகளுக்கு தவிர்ப்பதுநன்று, ஏனெனின் மந்திர விபூதியின் சக்தி அதிகம் குழந்தைகள் தாங்காது,

நன்றி ஆன்மீக ஆராய்ச்சியாளர் மிஸ்டிக் செல்வம் ஐயா அவர்களுக்கு அன்றாரின் விபூதி பிரயோகம் என்ற ஆன்மீக சொற்பொழிவு ஒலிபேழை மூலம் விபரம் சேகரிக்கப்பட்டது,படம்படம்

Advertisements

வித்தியாசமான லிங்கரூபங்களில் இறைவன், காட்சி அளிக்கும் சில திருத்தலங்கள்

Standard

Om siva siva Om! Om siva siva Om!!

vidhai2virutcham-விதை2விருட்சம்

லிங்கரூபமாய் எழுந்தருளியிருக்கும் முழுமுதல் இறைவன், சில திருத்தலங்களில் வித்தியாசமாகவும் திகழ்கிறார்.

பிருங்கி முனிவர் வண்டு வடிவம் எடுத்து சிவபெருமானை வழிபட் டார். அதன் அடிப் படையில் வண்டு துளைத்த குறியுடனுள்ள சிவலிங்கத்தை திரு நல்லூரில் காணலாம்.

நீடூர் திருத்தலத்தில் நண்டு ஒன்று அருள் சோமநாதரை வழிபட்ட தால், இங்குள்ள

View original post 505 more words

Aside

திருஞானசம்பந்தர், தமிழ்நாட்டில், சைவ சமயத்தவர்களால் நாயன்மார்கள் என அழைக்கப்படும் அறுபத்து மூவருள் முதலாக வைத்து எண்ணப்படும் நால்வருள் ஒருவராவார். இவர் கி.பி. ஏழாம் நூற்றாண்டில், சீர்காழி என்னும் ஊரில், பிராமணக் குடும்பத்திற் பிறந்தார். இவரது தந்தையார் சிவபாதவிருதயர், தாயார் இசைஞானியார்.
திருஞான சம்பந்தரும், திருநாவுக்கரசரும் பல சிவத்தலங்களுக்கும் ஒன்றாகவே சென்று பாடல்களால் இறைவனை அர்ச்சித்துள்ளனர். திருஞான சம்பந்தரும், திருநாவுக்கரசரும் திருமறைக்காடு (வேதாரண்யம்) என்கிற திருத்தலத்தில் இருந்தபோது மதுரையில் அரசாண்ட பாண்டிய மன்னன் சமணமதத்தில் பற்றுக் கொண்டிருந்தான். அவனுடைய மனைவி மங்கையர்க்கரசியோ சைவ மதத்தில் பற்றுக் கொண்டிருந்தார். பாண்டிய நாட்டில் சமண மதம் ஓங்குவதைத் தடுக்கும் பொருட்டு திருஞான சம்பந்தர் மதுரைக்கு எழுந்தருளி அங்கே சைவம் தழைக்க உதவ வேண்டும் என்கிற வேண்டுகோளுடன் அவருக்கு அழைப்பு விடுத்தார். அரசியாரின் அழைப்பினை மதுரை ஏவலர்கள் திருமறைக்காடு வந்து திருஞான சம்பந்தரிடம் தெரிவித்தனர். திருஞான சம்பந்தர் மதுரை செல்ல உடன்பட்டு திருநாவுக்கரசரிடம் விடைபெறச் சென்றார். திருநாவுக்கரசர், அந்தக் கணத்தில் கோள்களின் அமைப்பும் அன்றைய நாளும் தீமை பயக்கும் அறிகுறிகள் காட்டுவதாகக் கூறி சம்பந்தரின் பயணத்தை ஒத்திப்போடச் சொன்னார்.

“சிவனடியையே சிந்திக்கும் சிவனடியார்களை நாளும் கோளும் என்ன செய்து விடும்? அவை நன்மையே பயக்கும்” என்று கூறி பத்து பாடல்கள் பாடினார் திருஞான சம்பந்தர். அந்தப் பாடல்களின் தொகுப்பான பதிகமே (பத்து பாடல்களின் தொகுப்புக்குப் பதிகம் என்று பெயர்) கோளறு பதிகம் எனப் பெயர் பெற்றது. (பதிகப்பயனுடன் சேர்த்து மொத்தம் பதினொரு பாடல்கள்)

கிரகங்கள் அவற்றின் பெயர்ச்சிகள் என்கிற பெயரால் பல்வேறு நம்பிக்கைகளில் தம்மை இழக்கும் மக்கள், இந்தப் பதிகத்தைப் படித்தால் கோள்கள் எந்த நேரத்திலும் நன்மையே பயக்கும் என்பது சைவ சமயத்தாருக்கு ஞான சம்பந்தரால் சொல்லப்பட்டிருக்கும் செய்தி. இன்றும் ஏதாவது முக்கிய காரியமாகக் கிளம்பும் போதும், சகுனம் சரியில்லாத போதும், நல்லபடியாக முடிய வேண்டும் என்கிற வேண்டுகோளுடன் இந்தப் பதிகத்தை முழுதாகவோ முதல் பாடலை மட்டுமோ அவசரமாக முணுமுணுத்து விட்டுச் செல்லும் வழக்கம் பலரிடம் உண்டு. ஒவ்வொரு செவ்வாய் மற்றும் வெள்ளி கிழமைகளில் கோளறு பதிகத்தினை பாராயணம் செய்துவரவும்

Video

வேய் உறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன் மிக நல்ல வீணை தடவி மாசறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்து என் உளமே புகுந்த அதனால் ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழம் வெள்ளி சனி பாம்பிரண்டு முடனே ஆசறு நல்லநல்ல அவை நல்ல நல்ல அடியார‌ வர்க்கு மிகவே. தேனமர் பொழில்கொள் ஆலை விளைசெந்நெல் துன்னி வளர் செம்பொன் எங்கும் திகழ நான்முகன் ஆதியாய பிரமா புரத்து மறைஞான ஞான முனிவன் தானுறு கோளும் நாளும் அடியாரை வந்து நலியாத வண்ணம் உரைசெய் ஆன சொல்மாலை யோதும் அடியார்கள் வானில் அரசாள்வர் ஆணை நமதே.

ஆலய தரிசன முறைகள்

Standard

ஆலய தரிசன முறைகள்

தெய்வ வழிபாட்டில் நிலையான நம்பிக்கையான பக்தி இருக்க வேண்டும். வீண் விளம்பரத்துக்கான போலி பக்தி கூடாது. நம் குலதெய்வத்தை ஒருபோதும் மறக்கக்கூடாது. மாதந்தோறும் குலதெய்வத்திற்கு நம்மால் இயன்ற அளவு வழிபாட்டிற்கு பணம் அனுப்ப வேண்டும். மாதா, பிதா, குரு, தெய்வம் என்பதனை நிலையாகக் கொள்ள வேண்டும்.

தாயிடம் காட்டுகின்ற பக்தி இம்மைக்கும், தந்தையிடம் காட்டுகின்ற பக்தி மறுமைக்கும் புண்ணியத்தைச் சேர்க்கும். குருவிடம் காட்டுகின்ற பக்தி பிரம்ம பதவியைத் தரும். இறைவனிடம் பக்தி இருப்பதுடன், இறைவனிடம் பயமும் இருத்தல் வேண்டும். இறைவனின் அடியார்களை, சித்தர்களை சத்புருஷர்களைச் சித்தத்திலே கொண்டு வழிபடுவோர்க்கு இறைவனின் கிருபா கடாட்சம் வெகுவிரைவில் கிடைக்கும்.

வேதத்தினால் ரிஷிகளையும் ஹோமத்தினால் தேவர்களையும், சிரார்த்த காரியங்களினால் பித்ருக்களையும், அன்னத்தினால் அதிதிகளையும், மலரினால் பஞ்சபூதங்களையும், தியானத்தினால் தெய்வத்தையும் ஆராதிப் போர்க்கு அஷ்ட ஐசுவரியங்களும் பொங்கிப் பெருகும். நாம் தினமும் நீராடி நெற்றியில் திருநீறு – தரித்துத் கோயில்களுக்குச் செல்ல வேண்டும்.

மார்கழி மாதம் மட்டும் காலையில் எழுவது என்ற நிலை இல்லாமல் எல்லா மதங்களிலும், அதிகாலையில் எழுந்து குளித்துத் தெய்வ தரிசனம் செய்யும் பழக்கத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். ஆலயங்களுக்குச் செல்லும் நாம், சில முக்கியமான தூய நெறிகளைக் கடைப்பிடிக்க வேண்டும். கோயிலுக்குச் செல்லும் போது நமக்கு அகத்தூய்மையும், புறத்தூய்மையும் வேண்டும்.

நித்ய கர்மானுஷ்டானங்களை முடித்து, அவரவர்கள் குலவழக்கப்படி நெற்றிக்கு இட்டுக் கொள்ளுதல் அவசியமாகும். வெறும் நெற்றியுடன் கோயிலுக்குச் செல்லுதல் ஆகாது. திருக்கோயில் அருகே வந்ததும் உச்சிமீது கைகளை உயர்த்தி, கூப்பி உயர்ந்து காணப்படும் கோபுரத்தைத் தரிசிக்க வேண்டும்.

கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்பது ஆன்றோர் வாக்கு. கோயிலுக்கு உள்ளே சென்றதும் முதலில் துவஜ ஸ்தம்பத்தின் முன்னால் நின்று, பகவானைப் பிரார்த்தித்து சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்ய வேண்டும். நமஸ்காரம் செய்யும் பொழுது வடக்கு நோக்கி நமஸ்காரம் செய்ய வேண்டும். உள்பிராகாரங்களில் வீழ்ந்து வணங்குதல் கூடாது.

ஆண்கள் நமஸ்காரம் செய்யும்பொழுது அஷ்டங்கமும் பெண்கள் நமஸ்காரம் செய்யும்பொழுது பஞ்சங்கமும் தரையில் படும்படியாக நமஸ்கரிக்க வேண்டும். கோயிலில் தரும் குங்குமம், விபூதி, துளசி போன்ற பிரசாதத்தை, கீழே சிந்துவதும் வேறெங்காவது கொட்டுவதும், சண்டீசுவரர் மீது நூல் இடுவதும் அபசாரமாகும்.

சிவலிங்கத்திற்கு நந்தி தேவருக்கும் நடுவே செல்லுதல் கூடாது. நிவேதனங்களை சாப்பிட்டு விட்டுத் தூண்களில் துடைக்கக்கூடாது. மறக்காமல் துவார பாலகர்களை வணங்க வேண்டும். கோயிலுக்குச் செல்லும் போது தர்மம் செய்வது தான் முறை.

தரிசனம் முடித்துத் திரும்பி வரும்போது தர்மம் செய்வதால் கோயிலில் நாம் சம்பாதித்த புண்ணியங்களை அவர்களுக்குத் தாரை வார்த்துக் கொடுப்பது போலாகிவிடும் என்றொரு கருத்து நிலவுகிறது. ஆனால் சிலர் தானம் செய்யலாம் என்கிறார்கள். கோயிலில் படுத்து உறங்குபவர்கள் மறுபிறப்பில் மலைப்பாம்பாகப் பிறப்பார்கள் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.

கர்ப்பகிரகத்தில் இறைவனை இரு கண்களாலும் பார்த்து மகிழ வேண்டும். அவனது திருவடி முதல் அலங்கார வைபங்களைப் பார்த்துப் பார்த்து அவனுடன் ஐக்கியமாக வேண்டும். அவ்வாறு இல்லாமல் இறைவன் முன்னாள் கண்ணை மூடிக் கொண்டு ஜபிப்பதோ, தியானம் செய்வதோ முறையாகாது. கோயில் வழிபாடு முடிந்த பின்னர் சண்டிகேசுவரரிடம் விடைபெற்றுப் புறப்பட வேண்டும்.

கொடி மரத்தின் அருகே சென்று வடக்கு முகமாக அமர்ந்து தியானம் செய்ய வேண்டும். பின்னர் வடக்கு நோக்கி நமஸ்காரம் செய்ய வேண்டும். கோயிலுக்குச் சென்று வீடு திரும்பும் வரை இறைவனின் திருநாமத்தை சொல்லிக் கொண்டே வர வேண்டும்.