ஆன்மீகத்துளிகள் / சித்தியும் முத்தியும்

Standard

ஆன்மீகத்துளிகள் / சித்தியும் முத்தியும்
தர்மத்தை உணர பூர்ண அனுபவம் வேண்டும்
அனுபவம் பழுக்க அறிவு வேண்டும்
அறிவு தெளிய மாயை மயக்கம் தீர வேண்டும்
மாயையை உணர மனம் வசப்பட வேண்டும்
மனம் வசப்பட அகத்தூய்மை வேண்டும்
அகத்தூய்மை உண்டாக சத்திய விரதம் வேண்டும்
சத்திய விரதம் உண்டானால் நிஜவாழ்வு உண்டாகும்
நிஜவாழ்வு உண்டானால் பொய் வாழ்வு அற்றுப்போகும்
பொய் வாழ்வு அற்றுப்போனால் பொய்யுலப் பற்று விடும்
பொய் உலகப் பற்று விட்டால் மெய்யுலகு சித்திக்கும்
மெய்யுலகு சித்திப்பதே முத்தி யெனும் பிறவா நிலை பிறக்கும்

திருச்சிற்றம்பலம்

Advertisements

வன்னி மரம்

Standard

http://sadhanandaswamigal.blogspot.in/2014/09/vanni-tree-special.html
வன்னி மரம் மிகவும் வசீகரமான மரம். இதனுடைய இலைகள் முத‌ல் அனைத்தும் சிறப்பு வாய்ந்தது. வன்னி மரம் பாலைவனப் பகுதியில் கூட வளரக்கூடியது. வன்னி மரம் என்று சொன்னாலே விருதாச்சலம் என்றுதான் அனைவருக்கும் ஞாபகம் வரும். விருதாச்சலம் விருதகிரி ஆலயத்தில் பழமையான வன்னி மரம் இருக்கிறது. இந்த வன்னி மரத்தின் இலைகளைப் பறித்துதான் அந்தக் கோயிலைக் கண்டினார்கள் என்று சொல்வார்கள்.

எப்படி என்றால், அங்கு விபசித்தி முனிவர் என்று ஒருவர் இருந்தார். அந்த முனிவர் அங்கேயே வாழ்ந்து அங்கேயே ஒரு கோயிலைக் கட்டிவிட்டு ஜீவ சமாதியும் அடைந்திருக்கிறார். அவர் என்ன செய்வாரென்றால், தினசரி வேலையாட்களுக்கு அந்த வன்னி மரத்தின் கீழ் உட்கார்ந்து வன்னி இலைகளை உருவி அந்த வேலையாட்களுக்கு கொடுப்பாராம். அவர்கள் எந்த அளவிற்கு உழைத்தார்களோ அந்த அளவிற்கு அது பொன்னாக மாறுமாம். ஒன்றுமே உழைக்காமல் சுற்றிக் கொண்டிருந்தால் அது இலையாகவே இருக்குமாம். கடினமாக வேர்வை சிந்தி அனைத்தும் செய்தவர்களுக்கு அத்தனையும் தங்கமாக மாறுமாம். இது வரலாற்றுச் சான்றுகளில் இருக்கிறது. கல்வெட்டுச் சான்றுகளில் இருக்கிறது. அப்படியொரு சக்தி இந்த வன்னி மரத்திற்கு உண்டு.

இன்றைக்கும், குழந்தைப் பேறு இல்லாதவர்கள், மனநலம் குன்றியவர்களை அந்தக் கோயிலிற்கு அழைத்துச் செல்லலாம். அங்கு இன்னமும் அந்த பழமையான வன்னி மரம் இருக்கிறது. அதற்குக் கீழே விபசித்தி முனிவருடைய உருவமும் இருக்கிறது. அதை வழிபட்டால் எல்லா வகையிலும் சிறப்புகள் உண்டாகும். இந்த வன்னி மரப்பட்டையினுடைய கசாயம் குடித்தால் குழந்தை பாக்கியம் உண்டாகும். குறிப்பாக ரத்தத்தை சுத்தப்படுத்தக்கூடிய தன்மை இந்த வன்னிக்கு உண்டு. வன்னி மரக்காற்று பட்டால் கூட மிகவும் நல்லது. அந்தக் காற்றிலேயே தொடர்ந்து இருந்தால் சுவாசக் கோளாறுகள் எல்லாம் நீங்கும்.

வன்னிக் காயை பொடி செய்து சாப்பிட்டால் மாதவிலக்குப் பிரச்சனை, அதிகமா ரத்தப் போக்குப் பிரச்சனையெல்லாம் தீரும். அந்த அளவிற்கு மருத்துவ குணம் அதில் இருக்கிறது. இதேபோல, இந்த வன்னிக்காய் பொடியை சாப்பிட்டால் விந்தணுக்களுடைய நீர்ப்புத் தன்மை திடப்படுத்தும். ஏனென்றால் நல்ல விந்தணு, கருவுறுவதற்கான விந்தணு என்றால், டி.என்.ஏ., ஆர்.என்.ஏ. நல்ல விதத்தில் இருக்க வேண்டும். நீர்த்துப்போன விந்தணுவில் இதெல்லாம் நல்ல விதத்தில் இருக்காது. மிகக் குறைவாகவும் இருக்கும். இந்தப் பொடியை தொடர்ந்து சாப்பிட்டால் விந்து கட்டும். கருவுறும் தன்மையை அதிகப்படுத்தும்.

திருச்சி மற்றும் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த வன்னிய சமுதாய மக்கள் வன்னி மரத்தைப் புனித மரமாகக் கருதுகின்றார்கள். வன்னிய சமுதாய மக்கள் மரணம் அடைந்தபின் வன்னிமரக்கட்டைகளின் மீது பூத உடலை வைத்து எரித்து சாம்பலாக்கும் பழக்கம் இன்றும் காண முடிகிறது.

இந்தியப் பாலைவனங்களின் தங்க மரம்’ எனச் சிறப்பிக்கப்படுவது வன்னி மரம். பாலைவனங்களிலும் வானிலை அதிகம் வறண்டிருக்கும் பகுதியிலும் தாக்குப்பிடித்து வளரக் கூடிய பசுமை மாறாத மரம் வன்னி. இதன் அனைத்துப் பகுதிகளுமே பயன்படுவதால், ‘கற்பகதரு’ என்றும் சொல்வார்கள்.

சனி பகவான் கோவிலில் வணங்கப்படும்வன்னி மரம் (PROSOPIS SPICIGERIA LINN) திருஞானசம்பந்தர் பாடிய தேவாரம் பாடல் :வம்பார் கொன்றை வன்னி மத்தம் மலர்தூவி நம்பா வென்ன நல்கும் பெருமான் உறைகோயில் கொம்பார் குரவு கொகுடி முல்லை குவிந்தெங்கும் மொய்ம்பார் சோலை வண்டு பாடும் முதுகுன்றே வன்னி மரத்தைப் பற்றி ரிக்வேதம், மகாபாரதம் மற்றும் ராமாயணத்திலும் கூறப்பட்டிருக்கின்றது. மார்ப்புச் சளியையும் இந்த வன்னிக்காய் பொடி எடுக்கும். இந்த வன்னி இலையை அம்மியில் அரைத்து அப்படியே புண் இருக்கும் இடத்தில் கட்டினால் அப்படியே சரியாகிவிடும். எல்லா மரத்தையும் கரையாண் அறிக்கும். ஆனால் இதை மட்டும் கரையாண் தொடாது. நெருங்கவே முடியாது. அப்படியென்றால் பார்த்துக் கொள்ளுங்கள் இந்த மரத்தினுடைய அமைப்பு எவ்வளவு வலிமையானது என்று.
vruddhachalam top Sri Vruddhagireeswarar Temple – Vruddhachalam
பல ஆலயங்களில் தலவிருட்சமாக இருப்பதே இந்த வன்னி மரம்தான். விருதாச்சலத்தை எடுத்துக்கொண்டால் வன்னி மரம்தான் தலவிருட்சம். இராம பிராண் இராவணை நோக்கி போர் தொடுக்கப் போகும் முன்பாக வன்னி மரத்தை தொட்டு வணங்கி வலம் வந்து சென்றதாக ஐதீகம். அதேபோல, வள்ளிக் குறத்தியை மணப்பதற்காக முருகன் வன்னி மர வடிவில் காட்சியளித்ததாகவும் ஐதீகம்.

அதேபோல, பஞ்ச பாண்டவர்கள் அஞ்ஞானவாசம் செல்வதற்கு முன்பாக நிராயுதபாணியாக இருக்க வேண்டுமல்லவா, அப்பொழுது அவர்களுடைய ஆடை, அணிகலன்கள், ஆயுதங்கள் அனைத்தையும் ஒரு பெரிய துணியில் வைத்துக் கட்டி, மரஉறி தறித்து கிளம்புவதற்கு முன்பாக, வன்னி மரத்தடியில் வைத்துச் சென்றதாகவும் ஐதீகம். அப்படியானால், இது ஒரு பாதுகாப்பிற்கு உரிய மரம், சத்தியத்திற்கு கட்டுப்பட்ட மரம் என்ற அதன் தன்மை நமக்குத் தெரிகிறது.

வன்னிமரம் ஜெயதேவதையின் வடிவமாக போற்றப்படுகிறது. அது துர்கை கோயில் கொண்டிருக்கும் இடமாகும்.

உமா தேவி வன்னிமரத்தடியில் வாசம் செய்வதாகவும், தவம் இருந்ததாகவும் புராணங்கள் தெரிவிக்கின்றன.

வன்னிமரம் விநாயப்பெருமானுடைய பஞ்சபூத சொரூபத்தை உணர்த்தும் ஐந்து வகையான மரங்களில் அக்னி சொரூபம் ஆகும். பொறையாருக்கு அருகில் உள்ள சாத்தனூர், பாசிகுளம் விநாயகர் சாஸ்தாவுக்கு அக்னி சொரூபமாக வன்னிமர வடிவில் காட்சி கொடுத்ததாக ஸ்தல மகாத்மியம் கூறுகிறது.

வன்னிமர இலையை வட மொழியில் சமிபத்ரம் என்று கூறுவார்கள்.
இது விநாயகருக்கும், சனீஸ்வரனுக்கும் விருப்பத்திற்குரிய இலையாகும்.

விஜயதசமியின் போது துர்க்காதேவி மகிஷனை அழிக்க வேல் வாங்கும் நிகழ்ச்சி வன்னி மரத்தடியில் நடக்கும். வன்னி வெற்றியை தரும் மரம் என்பதால் அந்த மரம் இருந்தால் அங்கு வேல் வாங்குவது விஷேசம்.
நவக்கிரங்களில் இது சனி பகவான் (SATURN PLANET) தொடர்பு கொண்டது.

பெண் தெய்வம் நீலாதேவிக்குப் படைக்கப்படுகிறது.விருத்தாசலத்திலுள்ள விருதகிரீஸ்வரர் கோவிலிலுள்ள வன்னி மரத்தை பக்தர்கள் 9 முறை சுற்றி வந்து மரத்தின் தண்டில் நூலைக் கட்டி நேர்த்திக் கடன் செலுத்துவார்கள். இதனால் அவர்களுக்கு ஆண் குழந்தை பிறக்கும். சொத்து சுகம் கிடைக்கும் என்றும் நம்புகின்றனர். இம்மரத்தின் பட்டையைத் துண்டு செய்து சாப்பிடுகின்றனர். இதனால் குழந்தை பாக்கியம் கிடைக்கிறது என்று நம்புகின்றனர்.

வேலூர் மாவட்டம் பொன்னை அருகே உள்ள விநாயகபுரம் ஒட்டநேரியிலுள்ள அருள்மிகு ஸ்ரீநவக்கிரக கோட்டை ஆலயத்தில் வன்னி மரத்திற்கு பூஜை செய்யப்படுகிறது. சனி பகவான், நீலாதேவி பெண்அம்மன், காக வாகனத்தில் கருப்பு நிற ஆடை அணிவித்து எள் தானியத்துடன்,

நவரத்தினத்தில் நீலக்கல் பதித்து, வன்னி மரத்தின் அடியில் மேற்கு திசையை நோக்கி மகரம், கும்ப ராசியில், இந்த ஆலயத்தில் சிறப்பான பூஜைகள் நடைபெறுகின்றன.

மராட்டிய போர் வீரர்கள் போருக்குப் புறப்படும் முன் வன்னி மர இலைகளைப் பிரசாதமாகப் பெற்றுக் கொண்டு புறப்படும் பழக்கமிருந்தது. வன்னி மரத்தைச் சுற்றி பூஜை செய்து வந்தால் குழந்தை பிறக்கும

சிறப்பு வாய்ந்த வன்னி மரம்:

வன்னி மரம் மிகவும் வசீகரமான மரம். இதனுடைய இலைகள் முத‌ல் அனைத்தும் சிறப்பு வாய்ந்தது. வன்னி மரம் பாலைவனப் பகுதியில் கூட வளரக்கூடியது. இன்றைக்கும், குழந்தைப் பேறு இல்லாதவர்கள், மனநலம் குன்றியவர்களை அந்தக் கோயிலிற்கு அழைத்துச் செல்லலாம். அங்கு இன்னமும் அந்த பழமையான வன்னி மரம் இருக்கிறது.

அதற்குக் கீழே விபசித்தி முனிவருடைய உருவமும் இருக்கிறது. அதை வழிபட்டால் எல்லா வகையிலும் சிறப்புகள் உண்டாகும். இந்த வன்னி மரப்பட்டையினுடைய கசாயம் குடித்தால் குழந்தை பாக்கியம் உண்டாகும். குறிப்பாக ரத்தத்தை சுத்தப்படுத்தக்கூடிய தன்மை இந்த வன்னிக்கு உண்டு. வன்னி மரக்காற்று பட்டால் கூட மிகவும் நல்லது. அந்தக் காற்றிலேயே தொடர்ந்து இருந்தால் சுவாசக் கோளாறுகள் எல்லாம் நீங்கும்.

வன்னிக் காயை பொடி செய்து சாப்பிட்டால் மாதவிலக்குப் பிரச்சனை, அதிகமா ரத்தப் போக்குப் பிரச்சனையெல்லாம் தீரும். அந்த அளவிற்கு மருத்துவ குணம் அதில் இருக்கிறது. இதேபோல, இந்த வன்னிக்காய் பொடியை சாப்பிட்டால் விந்தணுக்களுடைய நீர்ப்புத் தன்மை திடப்படுத்தும்.

ஏனென்றால் நல்ல விந்தணு, கருவுறுவதற்கான விந்தணு என்றால், டி.என்.ஏ., ஆர்.என்.ஏ. நல்ல விதத்தில் இருக்க வேண்டும். நீர்த்துப்போன விந்தணுவில் இதெல்லாம் நல்ல விதத்தில் இருக்காது. மிகக் குறைவாகவும் இருக்கும். இந்தப் பொடியை தொடர்ந்து சாப்பிட்டால் விந்து கட்டும். கருவுறும் தன்மையை அதிகப்படுத்தும்

சும்மா இரு ….. சொல் அற

Standard

சும்மா இரு ….. சொல் அற !
நாம் யாரும் நிகழ்காலத்தில் வாழ்வதே கிடையாது. பழைய கால நினைவுகளை அசைபோடுகிறோம் , வருங்கால கனவுகளில் மிதக்கிறோம், நம்மனமும் உடலும் நிகழ்கால செய்கையில் ஒன்றுபடுதோ நிகழ்கால வாழ்வாகும்,அலைபாயும் மனத்தை நிகழ்காலத்திற்கு கொண்டுவருவதில் கடந்த கால, எதிர்கால கனவு நினைவு அலைகளிலிருந்து விடுபட்டால் தான் நம் மனம் முழுவதும் இறைவனிடம் நிலைபெறவும் அவன் அருள் பெறவும் வழிவகுக்கும், நம் மனம் பேசிக் கொண்டே இருக்கும் இயல் புடையது அதற்கு ஓய்வில்லை, அதனாலேயே பழங்கால நினைவுகளும் எதிர்கால கனவுகளும் நமக்கு ஏற்படுகின்றன, நாம் மனம்வழிப் பேச்சை குறைக்க வேண்டும். நம்மனம் அமைதியாக இருக்கும் சூழலை உருவாக்க வேண்டும். அப்போது தான் மனம் பேசாதநிலையை நாம் உணர முடியும்.
நாம் இறைவனது அபிசேக அலங்காரங்களை காணும் போதும் இறை மந்திரங்களை உச்சரிக்கும் போதும் நம்மனம் அதிலேயே ஒன்றியிருக்கும். அப்போது அது பேசுவதை தவிர்த்துவிடும். இதனையே ” சிந்தனை நிந்தனுக்கு ஆக்கி” என்கிறார் மாணிக்கவாசகர். நம்மனம் முழுவதும்இறையழகே நிறைந்திருந்தால் மறுபேச்சுக்கே அங்கு இடமில்லை அல்லவா? இப்படி மறு சிந்தனையே எண்ணித் தன்மனத்துள் அவனுக்குக் கோவில் கட்டி குடமுழுக்கும் செய்வித்து முத்தி பெற்றவர் பூசலார் நாயனார்.
பிராணாயாமம், தியானம் செய்பவர்கள் தங்கள் சிந்தனையை மூக்கின் முனியில் அல்லது இதயத் தானத்தில் இருத்தி செய்யும் போது மனஓட்டம் அடங்கும். மனமும் பேசாது ஒடுங்கும்.
இதனைச் ” சும்மா இரு சொல் அற ” என்கிறார் அருணகிரியார். ஆகவே இறைவனை வணங்கும் போதும் எண்ணும்போதும் தியானிக்கும் போதும் நாம் நம் மன ஓட்டத்தை நிறுத்தலாம். அவ் வழியில் நிகழ்காலத்தில் வாழலாம், இதுவே சும்மா இருந்து மன நிம்மதியுடன் சுகத்தை – பேரின்பத்தை காணலாம்,

பிறந்த ராசிக்கேற்ற சித்தர் வழிபாட்டு ஸ்தலங்கள்

Standard

பிறந்த ராசிக்கேற்ற சித்தர் வழிபாட்டு ஸ்தலங்கள்
***********************************************************************
1.அசுவினி (மேஷம்) = ஸ்ரீபோகர்,பழனி
2.பரணி(மேஷம்) – ஸ்ரீகோரக்கர் – வடக்குப்பொய்கைநல்லூர்(நாகப்பட்டிணம்), ஸ்ரீபோகர் – பழனி.
3.கார்த்திகை1(மேஷம்) – ஸ்ரீபோகர் – பழனி, ஸ்ரீதணிகைமுனி & ஸ்ரீசம்ஹாரமூர்த்தி – திருச்செந்தூர், ஸ்ரீபுலிப்பாணி – பழனி.
கார்த்திகை2,3,4(ரிஷபம்) – ஸ்ரீமச்சமுனி – திருப்பரங்குன்றம்; ஸ்ரீவான்மீகர் – எட்டுக்குடி; ஸ்ரீஇடைக்காடர் – திரு அண்ணாமலை.
4.ரோகிணி(ரிஷபம்) – ஸ்ரீமச்சமுனி – திருப்பரங்குன்றம், ஸ்ரீலஸ்ரீசிவானந்த மவுனகுரு யோகீஸ்வரர் – திருவலம்
5.மிருகசீரிடம்1,(ரிஷபம்) – சிவானந்த மவுனகுரு யோகீஸ்வரர்
மிருகசீரிடம்2(ரிஷபம்) – ஸ்ரீசட்டைநாதர் – சீர்காழி & ஸ்ரீரங்கம் , ஸ்ரீபாம்பாட்டி சித்தர்,மருதமலை & சங்கரன்கோவில்
மிருகசீரிடம்3(மிதுனம்) – ஸ்ரீபாம்பாட்டி சித்தர்,மருதமலை & சங்கரன்கோவில்
மிருகசீரிடம்4(மிதுனம்) – அமிர்தகடேஸ்வரர் ஆலயம்,திருக்கடையூர்
6.திருவாதிரை(மிதுனம்)- ஸ்ரீஇடைக்காடர் @ திரு அண்ணாமலை,ஸ்ரீதிருமூலர்@ சிதம்பரம்,ஸ்ரீஅமுதானந்தர் @ மணியாச்சி கிராமம்,ஸ்ரீசற்குரு @ எம்.சுப்புலாபுரம்,தேனிபகுதி.
7.புனர்பூசம்1,2,3(மிதுனம்) – ஸ்ரீதன்வந்திரி,ஸ்ரீவசிஷ்டர் @ வைத்தீஸ்வரன்கோவில்,
புனர்பூசம் 4(கடகம்) – ஸ்ரீதன்வந்திரி,வைத்தீஸ்வரன்கோவில்
8.பூசம்(கடகம்) – ஸ்ரீகமலமுனி,திருவாரூர்;ஸ்ரீகுருதட்சிணாமூர்த்தி, திருவாரூர்(மடப்புரம்)
9.ஆயில்யம்(கடகம்) – ஸ்ரீகோரக்கர்,வடக்குப்பொய்கைநல்லூர், நாகப்பட்டிணம் அருகில்;ஸ்ரீஅகத்தியர்,ஆதிகும்பேஸ்வரர்கோவில், கும்பகோணம்;ஸ்ரீஅகத்தியர்,திருவனந்தபுரம்,பொதியமலை,பாபநாசம்.
10.மகம்(சிம்மம்),பூரம்(சிம்மம்) – ஸ்ரீராமதேவர்,அழகர்கோவில்,மதுரைஅருகில்.
11.உத்திரம்1(சிம்மம்) – ஸ்ரீராமத்தேவர்,அழகர்கோவில்,மதுரை அருகில்,ஸ்ரீமச்சமுனி,திருப்பரங்குன்றம்.
உத்திரம்2(கன்னி) – ஸ்ரீஸ்ரீசதாசிவப்ரும்மேந்திரா – நெரூர்;
ஸ்ரீகரூவூரார் – கரூர் பசுபதீஸ்வரர் கோவில்
ஆனிலையப்பர் கோவில் – கருவூர்; கல்யாணபசுபதீஸ்வரர் கோவில் – தஞ்சாவூர்.
12.அஸ்தம்(கன்னி) – ஆனிலையப்பர் கோவில் – கரூவூர்,ஸ்ரீகரூவூரார் – கரூர்.
13.சித்திரை1,2(கன்னி) – ஸ்ரீகருவூரார் – கரூர்,ஸ்ரீசச்சிதானந்தர் – கொடுவிலார்ப்பட்டி.
சித்திரை3,4(துலாம்) – ஸ்ரீகுதம்பைச் சித்தர் – மாயூரம்
14.சுவாதி(துலாம்) – ஸ்ரீகுதம்பைச் சித்தர் – மாயூரம்
15.விசாகம்1,2,3(துலாம்) – ஸ்ரீநந்தீஸ்வரர் – காசி,ஸ்ரீகுதம்பைச்சித்தர் – மயிலாடுதுறை
விசாகம்4(விருச்சிகம்) – ஸ்ரீகுதம்பைச் சித்தர் – மயிலாடுதுறை,ஸ்ரீவான்மீகர் – எட்டுக்குடி, ஸ்ரீஅழுகண்ணிசித்தர் – நீலாயதாட்சியம்மன்கோவில்,நாகப்பட்டிணம்
16.அனுஷம்(விருச்சிகம்) – ஸ்ரீவான்மீகி – எட்டுக்குடி, தவத்திரு.சிவஞான குருசாமிகள் என்ற அரோகரா சாமிகள்,தோளூர்பட்டி,தொட்டியம்-621215.திருச்சி மாவட்டம்.
கேட்டை(விருச்சிகம்) – ஸ்ரீவான்மீகி – எட்டுக்குடி, ஸ்ரீகோரக்கர் – வடக்குப் பொய்கைநல்லூர்,நாகப்பட்டிணம் அருகில்.
17.மூலம்(தனுசு) – ஸ்ரீபதஞ்சலி – ராமேஸ்வரம்,சேதுக்கரை,திருப்பட்டூர்
18.பூராடம்(தனுசு) – ஸ்ரீபதஞ்சலி – ராமேஸ்வரம், ஸ்ரீசித்ரமுத்துஅடிகளார் – பனைக்குளம்(இராமநாதபுரம்), ஸ்ரீபுலஸ்தியர் – ஆவுடையார்கோவில்.
19.உத்திராடம்1(தனுசு) – ஸ்ரீகொங்கணர் ,திருப்பதி,ஸ்ரீதிருவலம் சித்தர் ,திருவலம்(ராணிப்பேட்டை),ஸ்ரீலஸ்ரீமவுனகுருசாமிகள் ,தங்கால் பொன்னை(வேலூர் மாவட்டம்)
உத்திராடம்2,3,4(மகரம்) – ஸ்ரீகொங்கணர் ,திருப்பதி
20.திருவோணம்(மகரம்) – ஸ்ரீகொங்கணர் ,திருப்பதி,ஸ்ரீசதாசிவப்ரும்மேந்திரால் ,நெரூர், ஸ்ரீதிருமூலர் ,சிதம்பரம்,ஸ்ரீகருவூரார் ,கரூர், ஸ்ரீபடாஸாகிப் @ கண்டமங்கலம்
21.அவிட்டம்1,2(மகரம்);அவிட்டம் 3,4(கும்பம்) – ஸ்ரீதிருமூலர் – சிதம்பரம்(திருமூலகணபதி சந்நிதானம்)
22.சதயம்(கும்பம்) – ஸ்ரீதிருமூலர் – சிதம்பரம், ஸ்ரீசட்டநாதர் – சீர்காழி. ஸ்ரீதன்வந்திரி – வைத்தீஸ்வரன் கோவில்.
23.பூரட்டாதி1,2,3(கும்பம்) – ஸ்ரீதிருமூலர் ,சிதம்பரம்,ஸ்ரீதட்சிணாமூர்த்தி – திருவாரூர்.
ஸ்ரீகமலமுனி – திருவாரூர், ஸ்ரீகாளாங்கிநாதர் – திருவாடுதுறை – சித்தர்கோவில், சேலம் ஸ்ரீசதாசிவப்ரும்மானந்தஸ்ரீசிவபிரபாகர சித்தயோகி – பரமஹம்ஸர் ,ஓமலூர் & பந்தனம்திட்டா.
பூரட்டாதி4(மீனம்) – ஸ்ரீசுந்தரானந்தர் – மதுரை,ஸ்ரீஆனந்த நடராஜ சுவாமிகள் – குட்லாம்பட்டி(மதுரை),பரம்மானந்த ஸ்ரீசித்தயோகி பரமஹம்ஸர் – ஓமலூர்.
24.உத்திரட்டாதி(மீனம்) – சுந்தரானந்தர் – மதுரை; ஆனந்த நடராஜ சுவாமிகள் – குட்லாம்பட்டி(மதுரை), ஸ்ரீமச்சமுனி – திருப்பரங்குன்றம்.
25.ரேவதி(மீனம்) – ஸ்ரீசுந்தரானந்தர் – மதுரை. திபாவளிக்கு முந்தையநாள் அன்று குனியமுத்தூர் சுவாமிகள் என்ற சிவ சுப்ரமணிய சுவாமிகள் ஜீவசமாதி

சித்தர்கள் வாழு்ம் அருள்மிகு சதுரகிரி மலையில் நவராத்திரி கொலு திருவிழா

Standard

சித்தர்கள் வாழு்ம் அருள்மிகு சதுரகிரி மலையில் நவராத்திரி கொலு திருவிழா
சதுரகிரியில் உள்ள சுந்தரமகாலிங்கம் திருக்கோவில் ஆனந்தவல்லி அம்மன் கொலு பூசை விழா நவராத்திரி அமாவாசை மறுநாள் பிரதமை திதியில் தொடங்கி 9ம் நாளான விஜயதசமி அன்று மகிசாரவர்த்தினி வேடம் கொண்டு சூரனை அம்பு விட்டு வதம் செய்யும் நிகழ்ச்சியுடன் முடிவடையும், இந்த பிரதமை திதியில் நடு நிசியில் சுத்தமான தளத்தில் வாழையிலைபரப்பி அதில் நெல் பரப்பி அதன் மேல் திருநூல் சுற்றிய தீர்த்த கும்பத்தை வைத்து அக்கும்பத்தின் மீது மாவிலையுடன் மஞ்சள் தடவிய தேங்காய் ஒன்றை வைத்து அதன் மேல் மஞ்சணத்தில் தேவி உருவம் செய்து வைத்து ( தற்போது தங்கத்தால் ஆன முகம்) முன்பாக வாழை இலை விரத்து தேங்காய் பழம், வெற்றிலை பாக்கு ைவத்து நெய்வேத்தியம் செய்து முனைமுறியாத மஞ்களை ஒரு கயிற்றில் கட்டி தூபம் ஏற்றி அந்த கயிற்றை அம்மன் காப்பாக வலக்கையில் கட்டி மான் தோல் ஆசனத்தில் வடக்கு நோக்கி அமர்ந்து தேவியின் பஞ்சாச்சர மந்திரத்தை ஒரு செம்புத்தகட்டில் வரைந்து கும்பத்தின் முன்பு வைத்து கொண்டு அம்மந்திரத்தை நாள் ஒன்றுக்கு ஆயிர்தெட்டு முைற உருச்செய்து மணமலர்களால் அஸ்ட்டோத்திர அர்ச்சனைகள் செய்து முடித்து அன்றிரவு வடை, அதிரசம் பாயசம் அவல் கடலை தேங்காய் பழம் முதலியன படயல் படைத்து கற்பூர தீபம் ஏற்றி நமஸ்கரிக்க பிரம்ம முனிவரின் உபாசனா பூசா விரத்திற்கு இரங்கி அக்கும்பத்தில் இருந்து அலங்கார மங்ைகப் பருவக்குறு நகையானந்த மதிமுக விலாசரூபத்தோடு செகன் மோகன மாதாவாகிய ஆதிபராசக்தியாகிய ஆனந்தவல்லி பிரசன்னமாகி திருக்காட்சி தந்தருளிகிறாள்,
இவ்விதம் திருக்காட்சி தந்தருளி சதுரகிரியில் திருக்கோவில் கொண்டிஇருக்கும் சர்வ வல்லமை பொருந்திய தேவி அன்னை பராசக்தியாம் ஆனந்தவல்லியை சர்வ சக்தியான சகல செளபாக்கியங்களையும் தந்தருள தோத்திரப்பாடல்களும் கொலுப்படால்களும் அம்மன் அஸ்ேடாத்திரங்கள் பாடி துதிப்பாடல்கள் அனுதினமும் பாடி அம்மனை வாழ்த்தி வழிபாடு செய்யும் ஏழுர் சாலியர் சமூகத்தினரால் அம்மனுக்கு முளைப்பாரியும் அமைத்து இவ் விழாவினை கொண்டாடி வருவது வழக்கம், நவராத்திரி கடைசி நாளுக்குமுன் தினம் சரஸ்வதி அம்பிகையாகவும், மறுநாள் விசயதசமியன்று அம்மன் உற்சாவ மூர்த்தியாக சூரனை வதம் செய்ய புறப்பாடு நடைபெறும், சித்தர் சுந்தரமூர்த்தி சுவாமிகள் அடிவாரத்தில் சூரன் வாழை மரமாக இருப்பதை ஸ்ரீேதவியான ஆனந்தவல்லி அம்பு ஏய்தி சூரனை வதம் செய்யும் காட்சி மிக அற்புதமான நிகழ்ச்சியாக நடைபெறும், அன்னாளில் சிவனடியார்கள் திருக்கூட்டம் உருவாக்கப்பட்டு இந்த திருக்கூட்டத்திற்கு விழாவிற்கு வந்த குடும்பத்தினர் அனைவரும் தங்கள் உணவு சமையலில் முதலி்ல் திருக்கூட்டத்திற்கு உணவளித்த பின்னே தங்கள் உணவு உண்ணும் பழக்கம் இன்றளவும் நடைபெறுகிறது, ஸ்ரீலஸ்ரீ காளிமுத்து சாமிகள் கஞ்சிமடத்திலு்ம் அன்னதானம் மிக விமரிசையாக நடைபெறும்.
இதனை கண்ட ஆன்மீக அன்பர்கள் இத்திருவிழாவினை இதுவரை காணாதவர்கள் கண்டு மகிழலாம், நவராத்திரி 9 தினங்களிலும் அபிசேக ஆராதனைகள் துதிப்பாடல் பசனை ஆகியன நடைெபறும்
கண்டு மகிழ்வீர் அம்மன் அருளும் சுந்தரமகாலிங்கத்தின் அருளும் பெற்று வாழ்வாங்கு வாழலாம். ஆனால் இவ்வாண்டு தண்ணீர் பற்றாக்குறை இருக்கும் என எண்ணப்படுகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாகவே சரியான மழையின்மையால் மலையே வரண்டு கிடக்கிறது. ஆனாலும் உண்ண உணவு மலையில் தராளமாக கிடக்கும் என்பது சற்றும் ஐயமில்லை,
திருச்சிற்றம்பலம்
தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவருக்கும் இறைவா போற்றி
https://vpoompalani05.wordpress.com,
http://poomalai-karthicraja.blogspot.in,
http://poompalani.weebly.com

திருக்கோவிலும் சொற்கோவிலும் / தோத்திரமும் இறைவரும்

Standard

திருக்கோவிலும் சொற்கோவிலும் / தோத்திரமும் இறைவரும்
திருக்கோவிலில் எழுந்தருளி மனிதர்களுக்கு அருள் பாலித்து வரும் இறைவர் மேலும் எளிவந்த பிரானாக சொற்கோவில்களையும் தமது இருப்பிடமாக கொண்டு உள்ளார், அந்த சொற்கோவில்கள் தான் பன்னிரு தமிழ் வேதங்களாகும்,
தனது தோத்திரப்பாடல் களால் இறைவரைக் கவர்ந்து அவர்களின் திருவடியினைப் பெற்று இனி பிறவா நிைல பெற்ற நால்வர்களில் திருநாவுக்கரசர் அவர்கள் தனது தோத்திரப்பாடலில்
சாலம்பூவொடு தூபம் மறந்தறியேன் தமிழோடு இசை பாட மறந்தறியேன் என்று இறைவறை வழிபாடு செய்யும் போது பண்ணோடு இசை பாடுவதன் கருத்தினை தோத்திரப் பாடல் வரிகளில் வலியுறுத்தியுள்ளார் , இதுபோல சம்பந்தரும் மறைகலந்த ஒலி பாடலோடும் என்றும் தோத்திரமும் சாஸ்திரமுமாக இருந்தார்தாமே என்றும் சொல்லும் பொருளுமாய் ஆனார் தாமே திருவரங்கப் பெருமான் திருவரங்கத்தில் சம்பந்தரின் கூற்றை அறியாலம், அதுபோல தில்ைல சிற்றம்பலத்தில் மணிவாசகர் திருவாக்கிலிருந்து வந்த பாடல்கள் யாவும் தில்லை சிதம்பரனாரின் கூற்றாகவும் அவரே எழுதியதாகவும் காணலாம், தோத்திரங்களை பண்ணோடு இசைத்து பாடி இறைவரின் அன்புக்கு ஆளாகினர்,
பண்ணார் இன் தமிழாய் பரமாய பரஞ்சுடர் என்கிறார் சுந்தரர்
பண்ணும் பதம் ஏழும் பலவோசைத் தமிழ் அவையும்
……………
…………….
விண்ணும் முழுதானான் இடம் வீழிம்மிழலையே என்கிறார் சம்பந்தர்

பண்ணிறைந்த பாடல்களாய் இறைவர் விளங்கின்றனர் சமயச் செல்வர்கள் நால்வர். திருமுறைகள் யாவும் பண் அமைந்த பாடல்களாகும். பண் என்பது இசைமரபாகும். மொத்தம் 103 பண்கள் இருந்ததாக கூறப்படுகின்றன. பண் என்பது பாவோடு அணைதல் என்பர். பண்ணுதல் என்னும் வினையடியாக பிறந்தது பண். இறைவரோடு ஆன்மாக்களை ஒன்று சேர்ப்பது ஒன்று பண்ணுவது அல்லது ஒன்றச் செய்யும் திறம் வாய்ந்தது பண் .தமிழ்வேதப்பாடல்கள் யாவும் நம்மை சிவபொருமானாருடன் இணைக்கும் பாலம் என்பதை உணர்ந்து ஓதி நலம் பெறுவோம்.
திருச் சிற்றம்பலம்
நன்றி தமிழ் வேதம்
https://vpoompalani05.wordpress.com,
http://poomalai-karthicraja.blogspot.in,
http://poompalani.weebly.com

சிவ வழிபாடு முழுமை பெற வணங்க வேண்டிய கடவுள்கள்

Standard

சிவ வழிபாடு முழுமை பெற வணங்க வேண்டிய கடவுள்கள்

சிவ வழிபாடு என்பது மிகப் பெரிய செயல் ஆகும். அதற்கு தடைகளும், இடையூறுகளும் வருவது இயற்கையே.இதற்கு காரணம் நமது கர்மவினைகளே. கர்மவினைகளை அழிக்க பல எளிய வழிகள் உண்டு. கர்மவினைகளை அழிக்கும் செயலே இயற்கைக்கு மாறான ஒன்றாகும். நாம் பிறந்த இந்த பூமியானது ஒரு கர்ம பூமி. இதில் பிறந்த ஒவ்வொருவரும் அவரவர் தம் கர்ம வினைகளை தொலைக்க பிறந்தவர்களே. இந்த கர்மவினைகள் இரண்டாகும்.அவை நல்வினை மற்றும் தீவினை ஆகும். நல்வினை மற்றும் தீவினை இவற்றை நாம் அனுபவித்தே ஆக வேண்டும். இது தான் விதி என்று அழைக்கப்படுகிறது.
ஆனால் விதியை மதியால் வெல்லலாம். ஆம் மதி என்பது இங்கே முதலில் சந்திரனையும் பின்பு அதே சொல் நமது அறிவையும் குறிக்கிறது. ஒருவரின் பிறந்த ஜாதகத்தில் மதி என்கிற சந்திரன் நல்ல நிலையில் இருந்தால் அவர் தம் அறிவின் துணை கொண்டு விதியை வெல்லுவார் என்பது திண்ணம். சந்திரன் ஒருவரது ஜாதகத்தில் நல்ல இடத்தில் இருப்பது என்பது நல்ல நிலை என்று எடுத்துக்கொள்ள இயலாது. ஷட்பல நிர்ணயம் என்றொரு கணக்கீடு இருக்கிறது. அதன் படி சந்திரனின் பலம் நன்றாக இருந்தால் அவர் விதியை மதியால் வெல்லுவார்.
மதி என்கிற சந்திரனை சூடிய கடவுள்கள் வழிபாடு நமது கர்மவினைகளை போக்கக்கூடியது. பிறைசூடிய தெய்வங்கள் சிவபெருமானை பிரதிபலிக்கும் தெய்வங்கள் ஆகும். அவ்வாறு இருக்கும் தெய்வங்கள் சிவபெருமானின் அம்சம் பொருந்தியவையே. நமது சிவ வழிபாட்டில் வரும் தடைகளும், இடையூறுகளும் முதலில் நமது மனதை பாதிக்கக்கூடியவை. இவ்வாறு வரும் இடையூறுகளை களைந்து சிவ வழிபாடு முழுமை பெற இரண்டு சிவ வடிவங்களின் அருள் மிகவும் தேவை.
முதலில் வரும் சிவ வடிவம் அமைதியே உருவான தென்முகக்கடவுள் (தட்சணாமூர்த்தி). இறுதியாக வரும் சிவ வடிவம் பைரவர். பைரவர் என்றால் எந்த பைரவர் வேண்டுமானாலும் இருக்கலாம். இந்த இரண்டு சிவ வடிவங்களின் துணையின்றி சிவ வழிபாடு முழுமை பெறாது. இந்த இரண்டு சிவ வடிவங்கள் மொத்தம் உள்ள 64சிவ வடிவங்களிலும், வழிபாட்டிற்குரிய 25 சிவ வடிவங்களிலும் மிக மிக முக்கியமானவை. தட்சணாமூர்த்தி மற்றும் பைரவர் ஆகிய இரு சிவ வடிவங்களும் ஒவ்வொரு சிவாலயங்களிலும் தனித்தனி சந்நிதி கொண்டு அருள் வழங்கும் வடிவங்கள் ஆகும். தட்சணாமூர்த்தி மற்றும் பைரவர் ஆகிய சிவ வடிவங்களும் சென்னியில் பிறையை சூடியவர்கள். இவர்களது தலையில் மூன்றாம் பிறை சந்திரனை நாம் காணலாம்.
தட்சணாமூர்த்தி சிவபெருமானின் யோகவடிவம். ஞானகுரு என்றழைக்கப்படும் தட்சணாமூர்த்தி அமைதியே உருவானவர். சிவ வடிவங்களில் மிகவும் சிறப்பானவர். தென் திசையை நோக்குபவர். இவரை வழிபடுவது மிகவும் எளிது. இவரை வழிபட கடினமான வழிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகள் ஏதும் கிடையாது. இவரை தொடர்ந்து வழிபட ஞானமும், செல்வமும், வெற்றியும் உண்டாகும். நமது கர்மவினைகள் படிப்படியாக நீங்கும். மந்திர செபம் செய்பவர்களுக்கு உகந்த கடவுள் இவரே. இவரை வழிபட மனம் அமைதி பெறும். இவரிடம் வேண்டிய கோரிக்கைகள் மட்டுமல்லாமல் வேண்டாமல் மறந்து போன கோரிக்கைகளும் நிறைவேறும். மந்திர செபம் செய்பவர்களின் மந்திர செபங்களுக்கு சக்தியை தருபவரும் இவரே. மனநிம்மதியை தருபவரும் இவரே.
“ஓம் நமோ பகவதே தக்ஷ்ணாமூர்த்தயே மஹ்யம் மேதாம் ப்ரஞ்ஞாம் ப்ரயச்ச ஸ்வாஹா”
மேற்கண்ட மந்திரம் தட்சணாமூர்த்தியின் சிறப்பான மந்திரம் ஆகும். இதற்கு பெரிய கட்டுப்பாடுகள் ஏதும் இல்லை.அசைவம் ஒன்று மட்டும் சாப்பிடக்கூடாது. மேற்கண்ட மந்திரத்தை வியாழக்கிழமை மாலை 6 மணிக்கு மேல் 7மணிக்குள் 21 முறை சிவத்தலத்தில் உள்ள தட்சணாமூர்த்தி சந்நிதியில் செபிக்க வேண்டும். பின்பு வீடு வந்து இரவு8 மணிக்கு மேல் 9 மணிக்குள் 108 முறை செபிக்க வேண்டும். பின்பு தினமும் 108 முறை அல்லது 54 முறை அல்லது 27 முறை செபிக்க வேண்டும். இந்த மந்திரம் சகல தோஷங்களையும், சகல பாவங்களையும் நீக்க வல்லது. தட்சணாமூர்த்தியின் முன்பு எவ்வித தோஷமும், பாவமும்ங நில்லாது ஓடும். இவ்வாறு தொடர்ந்து செபித்து வர நமது கர்மவினைகள் முற்றிலுமாக நீங்கி 16 பேறுகளையும் பெறுவது திண்ணம்.
கடைசியாக வருபவர் கர்மவினைகளை தன் பார்வையாலே எரிக்கும் வல்லமை கொண்ட பைரவர் ஆவார். இவரே சிவத்தலத்தில் இறுதி சிவ வடிவம் ஆவார். பைரவர்களுள் சொர்ணபைரவரே வீட்டில் வைத்து வழிபாடு செய்யத்தக்கவர். மற்ற அனைத்து பைரவ வடிவங்கள் கோவிலிலோ அல்லது காடுகளிலோ அல்லது மலைகளிலோ வைத்து வழிபடத்தக்கன. பைரவ வடிவம் சிவ வழிபாட்டில் ஏற்படும் கர்மவினை பாதிப்புகளை நீக்க வல்ல வடிவம் ஆகும். பைரவரை தொடர்ந்து வழிபடுவதால் மட்டுமே நாம் செய்யும் சிவ வழிபாட்டின் பலனை அடையமுடியும்.பைரவரே நவக்கோள்களின் அதிபதி ஆவார். சிவ வழிபாட்டின் பலனை நமக்கு தருமாறு நவக்கோள்களுக்கு ஆணையிடும் தலைவரும் பைரவரே ஆவார். இவரை வழிபடாமல் இருந்தால் நமக்கு சிவ வழிபாட்டின் பலன் கிடைக்காது.பைரவரே காலத்தையும், காலனையும் வென்றவர். காலகாலர் என்ற பெயரை கொண்டவரும் பைரவரே ஆவார். தெற்கு திசை நோக்கும் பைரவர் மிகவும் சக்தி வாய்ந்தவர்.
பைரவர் சிவபெருமானின் கோபமே உருவான ருத்ர வடிவம். பைரவர் நம்மை நவக்கோள்களின் பாதிப்பிலிருந்து காப்பார். கர்மவினைகளை வேரோடு சாய்ப்பார். இவரிடம் வேண்டிய கோரிக்கைகள் மட்டுமல்லாமல் வேண்டாமல் மறந்து போன கோரிக்கைகளும் நிறைவேறும். சிவ வழிபாட்டின் இறுதி நிலையே பைரவர் வழிபாடு ஆகும்.எத்தனையோ பிறவிகளில் புண்ணியம் செய்தவர்கள் மட்டுமே பைரவர் வழிபாடு செய்கின்றனர். முதலில் காலபைரவரை வழிபாடு செய்யும் அனைவரும் படிப்படியாக சொர்ணபைரவர் வழிபாடும் செய்வார்கள். பின்பு இரண்டு வழிபாடுகளும் தொடர்ந்து செய்வார்கள். இறுதியில் சொர்ணபைரவர் வழிபாடு மட்டும் செய்வார்கள். இது தான் பைரவர் வழிபாட்டின் ரகசியம் ஆகும். தன் கர்ம வினைகளை முற்றிலும் நீக்கி பிறவியில்லா பெருநிலையை அடைய தகுதி படைத்தவர்களே பைரவர் வழிபாட்டை தொடர்ந்து செய்கிறார்கள். கர்மவினைகளை அழித்து முக்தியை அடைகிறார்கள். பைரவரை வழிபாடு செய்வது மிகவும் எளிது.
“ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் சொர்ணபைரவாய ஹும் பட் ஸ்வாஹா”
மேற்கண்ட மந்திரம் சொர்ணபைரவரின் சிறப்பான மந்திரம் ஆகும். இதற்கு பெரிய கட்டுப்பாடுகள் ஏதும் இல்லை.அசைவம் ஒன்று மட்டும் சாப்பிடக்கூடாது. மேற்கண்ட மந்திரத்தை வியாழக்கிழமை மாலை 6 மணிக்கு மேல் 7மணிக்குள் 21 முறை சிவத்தலத்தில் உள்ள தட்சணாமூர்த்தி சந்நிதியில் செபிக்க வேண்டும். (ஆம் தட்சணாமூர்த்தி சந்நிதியில் தான் செபிக்க வேண்டும்). பின்பு வீடு வந்து இரவு 8 மணிக்கு மேல் 9 மணிக்குள் 108 முறை செபிக்க வேண்டும். பின்பு தினமும் 108 முறை அல்லது 54 முறை அல்லது 27 முறை செபிக்க வேண்டும். இந்த மந்திரம் சகல தோஷங்களையும், சகல பாவங்களையும் நீக்க வல்லது. சொர்ணபைரவரின் அருள் கிட்டினால் சகல தோஷங்களும், பாவங்களும் நில்லாது ஓடும். இவ்வாறு தொடர்ந்து செபித்து வர நமது கர்மவினைகள் முற்றிலுமாக நீங்கி 16 பேறுகளையும் பெறுவது திண்ணம்.

தென்னாடுடைய சிவனே போற்றி…!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!!
ஓம் அண்ணாமலையே போற்றி…!!!
ஓம் சிவ சிவ ஓம்

https://vpoompalani05.wordpress.com,
http://poomalai-karthicraja.blogspot.in,
http://poompalani.weebly.com