உய்வார்கள் உய்யும் வகை:

Standard

உய்வார்கள் உய்யும் வகை:

நமச்சிவாய என்பார் உளரேல் அவர

தம் அச்ச நீங்கித் தவநெறி சார்தலால்

 அமைத்துக் கொண்டதோர் வாழ்க்கையனாகிலும்

 இமைத்து நிற்பது சால அரியதே.

உய்வார்கள் உய்யும் வகை:

“வாய்த்தது நந்தமக்கு ஈதோர் பிறவி. மதித்திடுமின்!” என்று அறைகூவினர் நாவினுக்கு அரசர். இப்பிறவி பாவமானது அல்ல. இது இறைவன் நமக்குக் கொடுத்த பெருங்கொடை. அரியதாகிய இந்த மனிதப் பிறவியை நாம் பயன்படுத்த முதற்கண் நாம் இதன் நோக்கத்தைப் புரிந்து கொள்ளவேண்டும்.

இவ்வுலக வாழ்வு காரணம் இன்றி இறைவனால் ஏற்படுத்தப்பட்டதன்று. இங்கு நமக்குக் கிடைக்கும் நல்லனவும் தீயனவும் யாவையும் காரணம் இன்றி ஏற்படுவதன்று. இறைவன் காரணம் இன்றி பலவிதமான துயரங்கள் நிலவும் இவ்வுலகில் நம்மை வைத்திருந்தால் அவரை நாம் எப்படிக் “கருணை வடிவானவர்” என்று அழைக்க முடியும்?

சைவ நன்னெறி இதற்குத் தகுந்த விடை கூறி நம்மை உய்விக்கிறது. ஆன்மாக்களாகிய நாம் யாராலும் படைக்கப்படவில்லை. (இறைவனால் படைத்தார் எனில், அவர் படைக்காமல் இருந்திருந்தால் நாம் துன்பத்திற்கு ஆளாயிருக்க மாட்டோம். எனவே அவர் செய்தது கருணை உடையவராகச் செய்ததாக இருக்க முடியாது.) தொன்று தொட்டே ஆணவம் என்ற மலம் ஒட்டுண்ணி போல அழுத்த அழுந்தி இருந்தோம். எப்போதும் பேரின்ப மயமாக உள்ள இறைவன் இவ்வாறு மலத்தால் துன்புறும் உயிர்களுக்கு இரங்கி அவை அம்மலத்தின் பற்றை விட்டு இன்பமயமான தன்னைப் பற்றுதல் பொருட்டு உடல், கருவிகள், உலகங்கள் மற்றும் போகங்களைப் படைத்தார். இறைவன் எல்லா வல்லமை¨யும் உடையவர் என்றாலும் அவரால் இன்பத்தை ஊட்ட முடியுமே அன்றி அவ்வின்பத்தை நாம் தான் நுகர்ந்து / சுவைத்து அனுபவிக்க வேண்டும். அந்த இன்பத்தைப் பருகுதலுக்கு நாம் நம்மை ஆயத்தப் படுத்திக் கொள்ளவேண்டும். (இனிப்பினைப் பிறர் தர வல்லவர் எனினும் நாமே அதன் சுவையை உணரவேண்டும். அச்சுவை பிறரால் நமக்குத் தரமுடியாதது.) அவ்வாறு நாம் சிறிது சிறிதாகப் பக்குவப் படுதல் பொருட்டே மேற்கூறிய உடல் முதலானவை படைக்கப்பட்டன. இவை நமக்குத் தண்ணீரில் தத்தளிக்கும் எறும்புக்கு நீட்டிய குச்சி போல இன்பக் கரை அடைய இறைவன் நமக்கு அளித்த பெருங்கொடைகள் ஆகும்.

இறைவன் இத்தகு கருணை செய்த போதும் நாம் அதன் பெருமை உணராது, குச்சியில் ஏறிய எறும்பு கரை சேரக் கருதாது ஆடி மீண்டும் நீரில் விழுவது போல், நாம் செல்ல வேண்டிய நெறியைப் பற்றாது, இவ்வுடலே நாமென்று மயங்கி, வேண்டிக் கொண்டுவந்த தோண்டியைக் கூத்தாடிப் போட்டுடைக்கின்றோம். இம்மயக்கத்தில் பலர் சேரவேண்டிய சிவகதிக்கும் முயல்வதில்லை, இவ்வுலக வாழ்வையும் அழியாத இன்பமாக்கிக் கொள்வதில்லை. இவ்வாறு நாம் எண்ணும் எண்ணங்களே, செய்யும் செயல்களே நல்வினை மற்றும் தீவினைகளாக இறைவனால் நமக்கு ஊட்டப்படுகின்றன. இறைவன் நமக்கு இவ்வினைகளை ஊட்டுவதன் காரணம் தண்டிப்பதல்ல, திருத்துவதே. (தவறுகளை எல்லாம் தண்டித்தால் அவர் எப்படி அருள் நிறைந்தவர் என்பது?) எவ்வாறு ஒரு தாய் தவறு செய்யும் குழந்தையைப் பழி வாங்கும் எண்ணமின்றித் திருத்தும் நோக்கத்தில் மட்டுமே கடிந்து கொள்கின்றாளோ அது போன்றே தாயினும் நல்ல சிவபெருமான் நம்முடைய பெரிய வினைக்கூட்டத்திலிருந்து சிறிது நமக்கு ஊட்டுகிறார்.

இதனை உணர்ந்து நமது உடல் மற்றும் நமக்குக் கிடைத்த எல்லாமும் நமது அன்று, சிவபெருமானுடையன என உணர்ந்து, அவர் நம் மேல் பொழிந்துள்ள கருணையை நினைந்து நினைந்து பெருகுகின்ற அன்பு என்னும் ஒட்டுப் பொருளினால் அவரைப் பற்றிக்கொண்டால் – இன்பமே எந்நாளும்; துன்பமில்லை.

இத்தகு பெருமக்கள் எப்போதும் இன்பமே வடிவான இறைவனின் தொடர்பிலேயே உள்ளதால் பிற துன்பங்கள் அவர்களால் நுகரப்படுவதில்லை. இவ்வுலக வாழ்விலே சிவ மயமாக – இன்ப மயமாகத் திகழ்ந்து, பின்னர் அவ்வின்பம் அடையத் தேவைப்பட்ட உடல் முதலியன வேண்டாது இன்பம் நீங்காத சிவகதி அடைகின்றனர்.

கரும்பு தின்னக் கூலியுமா வேண்டும்? சிவபெருமானின் தூல மந்திரமான, “நம:சிவாய” என்ற திருஐந்தெழுத்தை ஓதி அவர் மேல் அன்புற்று இன்புறுவோம்.

 தண்பொழில் சூழ் சண்பையர்கோன் தமிழ்ஞான சம்பந்தன்

        விண்பொலிவெண் பிறைச்சென்னி விகிர்தனுறை வெண்காட்டைப்

        பண்பொலி செந்தமிழ் மாலை பாடிய பத்திவை வல்லார்

        மண்பொலிய வாழ்ந்தவர் போய் வான் பொலியப் புகுவாரே.

உலகம் முழுமையும் பரவியிருந்த – காலம் கடந்த சமயம் சைவமே. எல்லாம் கடந்தவரும் நம்மை உய்விக்கும் ஒளி வடிவானவரும் ஆன இறைவன் மேல் நம் அன்பை ஒருமுகப்படுத்தும் பொருட்டு சுடர்க்குறியாக (இலிங்கம்) இயல்பாக இறைவனைத் தந்தது இச்சைவம். இச்சைவத்தின் அடிப்படைக் கூறுகள் பலவாறாக – எடுப்போர் வண்ணத்திற்கேற்பவும், காலத்தால் திரிந்தும் உலகின் பலபல சமயங்களில் உள்ளதை ஆய்ந்து உணரலாம்.

இவ்வாறு முதன்மையானதும் தூய்மையானதுமான சைவத்தில் வழிவழியாக வந்தவர்கள் தங்களுக்குக் கிடைத்தது, தொட்டதெல்லாம் பொன்னாக்கும் மணியென்று உணராது, பழைய கல் என்று மயங்கி, பயன் பெரிதில்லாத கூழாங்கற்கள் பல தேடி அலைகின்றனர். அத்தகு நமக்கு, “மகிழ்தி மட நெஞ்சே! மானிடரில் நீயும் திகழ்தி!! பெருஞ் சேமம் சேர்ந்தாய்!!!” என்று சைவத்தின் பெரியோர்கள் நம்மைக் காலந்தோறும் இறைவனின் திருவருளால் உண்மை உணர்த்தி வழிப்படுத்தி வருகின்றனர். 

திருச்சிற்றம்பலம்

Advertisements

சிங்கப் பெருமாள் ஆலயம்

Standard

சிங்கப் பெருமாள் ஆலயம்

பகவான் சிவன் மற்றும் பகவான் விஷ்ணு என்ற இருவருமே ஒருவரே என்ற தத்துவத்தை நிலை நாட்டும் விதத்தில் அமைந்துள்ளது சிங்கப் பெருமாள் ஆலயம்

தமிழ்நாட்டின் சென்னையில் இருந்து சுமார் எட்டு கிலோ மீட்டர் தொலைவில், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ளது பகவான் நரசிம்ம பெருமாளின் சிங்கப்பெருமாள் கோவில். இந்த ஆலயம் சுமார் 1500 முதல் 1800 ஆண்டுகளுக்கு முன்னர் பல்லவ மன்னர்கள் ஆண்ட காலத்தில் கட்டப்பட்டது எனக் கூறப்படுகின்றது. ஆலயம் முழுவதும் மலையின் குகைக்குள் அமைந்து இருக்க ஆலய மூர்த்தியும் அதனுள் மலையின் பாறையில் செதுக்கப்பட்டு உள்ளது. இந்த ஆலயத்தின் விஷேசம் என்ன எனில் பகவான் நரசிம்மர் அவதரித்தது பிரதோஷ காலத்தில் என்பதினால் பிரதோஷ காலத்தில் இங்கு பகவான் நரசிம்மருக்கு திருமஞ்சனம் செய்யப்படுகின்றது. திருமஞ்சனம் என்பது அபிஷேகத்தை குறிக்கும் சொல் ஆகும். சிவ ஆகம முறைப்படி பகவானின் சிலை மீது தண்ணீர் அல்லது வேறு ஏதாவது பொருளை ஊற்றி செய்யும் புனித நீராட்டுதலை (குளிப்பாட்டுவதை) அபிஷேகம் என்பார்கள். அதையே வைஷ்ணவர்கள் திருமஞ்சனம் என்பார்கள். ஆகவே இரண்டுமே ஒரே செயலைக் குறிப்பிடுவது ஆகும்.  

பிரகலாத சரித்திரத்தில் ஹிரண்யகசிபுவை அழிக்க பகவான் நரசிம்மர் ஹிரண்யகசிபுவின் அரண்மனைத் தூணை உடைத்துக் கொண்டு வெளிவந்து அவரை அழித்ததாக கதை உள்ளது. அந்த நிகழ்ச்சி நடைபெற்ற இடம் தற்போது சிங்கப் பெருமாள் உள்ள இடமே என சிலரும், இல்லை அந்த நிகழ்ச்சி நடைபெற்ற இடம் வேறு என்று சிலரும் கூறுகிறார்கள். முன்னொரு காலத்தில் தற்போது சிங்கப் பெருமாள் ஆலயம்  உள்ள இடம் மிகப் பெரிய காடாக இருந்ததாகவும், அங்கு வந்த மகரிஷி ஜாபாலி பகவான் மஹாவிஷ்ணுவின் தரிசனம் கிடைக்க வேண்டும் என்ற தபத்தில் இருந்தார் என்றும், அப்போது அவர் பகவான் நரசிம்ம அவதாரம் எடுத்த நிகழ்ச்சியை கேட்டறிந்தவுடன் பகவானின் அதே கோலத்தைக் காண வேண்டும் என ஆசை ஏற்பட, அவர் பகவான் விஷ்ணுவிடம் அவர் ஹிரண்யகசிபுவை அழிக்க எடுத்த உக்ராஹ பகவான் நரசிம்மர் கோலத்தை தனக்கு அங்கு காட்ட வேண்டும்  எனவும்,அதன் பின் அவர் அங்கேயே ஒரு ஆலயத்தில் அமர்ந்து  கொண்டு பக்தர்களுக்கு அருளாசி தர வேண்டும் எனவும் வேண்டினார். இதனால்தான் சிங்கப் பெருமாள் ஆலயம் இங்கு எழுந்தது  என்பதாக கதை உண்டு. 

பகவான் சிவன் மற்றும் பகவான் விஷ்ணு என்ற இருவருமே ஒருவரே என்ற தத்துவத்தை நிலை நாட்டும் விதத்தில் அமைந்துள்ளது இந்த ஆலயத்தின் சிறப்பாகும். புராணங்கள் மற்றும் வேதங்களின்படி தெய்வங்களில் பகவான் சிவபெருமானுக்கு மட்டுமே மூன்று கண்கள் உள்ளது என்பது தெரிய வரும். ஆனால் பகவான் சிவபெருமானின் அத்தகைய தனித்தன்மை கொண்ட முக்கண்ணை சிங்கப் பெருமாள் ஆலயத்தில் மூன்று கண்களைக் கொண்ட உருவில்  பகவான் நரசிம்மர் வெளிப்படுத்துவதினால் ஹரியும், ஹரனும் (பகவான் சிவனும் பகவான் விஷ்ணுவும்) ஒன்றே என்ற தத்துவத்தை நிலைநாட்டவே அப்படிப்பட்ட காட்சியை பகவான் விஷ்ணு வெளிப்படுத்தினார் என்பதாக பண்டிதர்கள் கூறுகின்றார்கள்.

பகவான் சிவபெருமானும் தானும் ஒருவரே எனும் உண்மையை மகரிஷி நாரத முனிவருக்கு பகவான் விஷ்ணுவே கூறியதாக சில கிராமியக் கதைகளும் உண்டு.  இந்தியாவில் நிலவும் புராணக் கதைகளை விட இந்து சமய மேன்மைக் கதைகளும் கருத்துக்களும் இலங்கையில் பெருமளவில் உண்டு. அங்கு ஒரு காலத்தில் பகவான் சிவபெருமானின் வழிபாடு மற்றும் வரலாற்று மேன்மை மிக்க பல ஆலயங்கள் பெருமளவில் இருந்ததினால் கிராமிய புராணக் கதைகளும் அதிகம் உலவின. அவற்றில் பல ஆலயங்கள் அன்னியர்களினால் பின்னர் அழிக்கப்பட்டு விட்டாலும்  மக்களின் எண்ணங்களையும்   வாய்மொழிச் செய்தியாக காலம் காலமாக தொடர்ந்து கொண்டிருந்த  பல புராண தெய்வீக கதைகளையும் அழிக்க முடியவில்லை. அவற்றில் ஒன்றுதான் பகவான் விஷ்ணுவானவர் நாரத முனிவருக்கு கூறியதாக கூறப்படும் இந்தக் கதையும்.

முன்னொரு காலத்தில் மும்மூர்த்திகளுக்குள் யார் மேன்மையானவர் என்ற போட்டி ஏற்பட்டு முடிவுற்றதும் பல காலம் பொறுத்து மகரிஷி நாரதருக்கு ஒரு சந்தேகம் ஏற்பட்டது. பகவான் சிவபெருமானிடம் சென்று அவர் கேட்டார் “ஐயனே எமக்கோர் சந்தேகம் உண்டு. நீங்களும்  பகவான் விஷ்ணுவும் ஒருவரேதானா? எமது சந்தேகத்துக்கான காரணம் உலகில் படைப்பதற்கு பகவான் பிரம்மனும், படைத்தவர்களைக் காப்பதற்கு பகவான் விஷ்ணுவும், படைத்தவற்றில் உள்ள தீமைகளை அழிப்பதற்கு தாங்களும் படைக்கப்பட்டு உள்ளதாக அல்லவா நாம் அறிகின்றோம். ஆனால் எங்கெல்லாம் தீமைகள் இருந்தாலும் அவற்றை அழிக்க பகவான் விஷ்ணு அல்லவா அவதாரம் எடுக்கின்றார். நீங்கள் அப்படிப்பட்ட அவதாரங்களை எடுக்கவில்லை. அவ்வளவு ஏன், தீமைகள் பெருகிடும்போது அவற்றை அழிக்க பகவான் விஷ்ணு கல்கி அவதாரம் எடுப்பார் என்றல்லவா புராணங்கள் கூறுகின்றன. அப்படி என்றால் படைத்தவற்றில் உள்ள தீமைகளை அழிப்பதற்கு படைக்கப்பட்டு உள்ளதாக கூறப்படும் உங்களுடைய  தொழிலான அழித்தலை, படைத்தவர்களைக் காப்பதற்காக படைக்கப்பட்டதாக கூறப்படும் பகவான் விஷ்ணு ஏன் செய்கின்றார்?  நீங்கள் ஏன் எதையுமே நேரடியாக அழிக்க எந்த ஒரு அவதாரமும் எடுக்கவில்லை?”  அதைக் கேட்ட சிவபெருமான் சிரித்துக் கொண்டே அந்த கேள்வியை பகவான் விஷ்ணுவிடம் சென்று கேட்குமாறு கூறி அனுப்பினார்.

பகவான் விஷ்ணுவிடம் சென்று அதே கேள்வியை மகரிஷி நாரதர் எழுப்ப அமைதியாக பகவான் விஷ்ணு அவருக்கு கூறினார் ‘நாரதா இந்த உலகில் படைப்பதற்கு பகவான் பிரம்மனும், படைத்தவர்களைக் காப்பதற்கு நானும், படைத்தவற்றில் உள்ள தீமைகளை அழிப்பதற்கு பகவான் சிவபெருமானும் படைக்கப்பட்டு உள்ளது உண்மைதான். அனைத்து தெய்வங்களும் ஒரு சக்தியில் அதாவது பரமாத்மனில் இருந்து அதாவது பரமாத்மன் எனும் சிவசக்தியின் இருந்து வெளிவந்தவர்கள்.   அதனால்தான் நாங்கள் பரமாத்மாவின்  உடலில் இருந்து வெளிப்படும்  உருவங்களாக இரு பக்கங்களிலும் இரண்டு தலைகளுடன் காணப்படுகின்றோம். தெய்வங்கள் எனப்படும் அனைவருமே பரமாத்மன் எனும் சிவசக்தியின் மாய உருவங்கள். படைத்தவற்றைக் காக்க வேண்டும் எனில் முதலில் தீமைகளை அழிக்க வேண்டும். ஒவ்வொரு கட்டத்திலும் தீய சக்திகள் வெளிப்படும்போது அவற்றை அழிக்க வேண்டும் எனில் புதிய மற்றும் விசேஷ சக்திகளை பெற்ற அவதாரங்கள் உருவாக வேண்டும் என்பது அவர்கள் பெற்று இருந்த வரங்களின் கடுமையான விதியாக இருக்கும். ஆண் தெய்வங்களில் அப்படிப்பட்ட புதிய அவதாரங்களை ஒவ்வொரு யுகத்திலும் நான் எடுக்க வேண்டும் என்ற நிலையை எண்ணெய் படைத்த பரமாத்மன் ஏற்படுத்தினார். தீயவர்களை அழித்து அனைவரையும் காப்பாற்றச் செல்லும் இடங்களில் எல்லாம் முதலில் தீமைகளை அழிக்க வேண்டி உள்ளது.  நானோ  அழிக்கும் சக்தியைக் கொண்டவராக படைக்கப்படவில்லை. ஆகவே நான் புதிய அவதாரம் எடுத்து தீமைகளை அழித்து படைப்புக்களைக் காப்பாற்றச் செல்லும்போது, தீமைகளை அழிக்கும் தன்மையை தன்னிடம் இருந்து எனக்கு பகவான் சிவபெருமான் கொடுத்து அனுப்புவதினால் அவருடைய சக்தியைக் கொண்டே நான் தீமைகளை அழித்து படைப்புக்களைக் காப்பாற்றுகிறேன்.  ஆகவே நான் ஒவ்வொரு அவதாரம் எடுக்கும்போதும் பகவான் சிவபெருமானின் சக்தியையும் அடக்கிக் கொண்டுதான் செல்கின்றேன். அவர் சக்தி இல்லாமல் நான்  இல்லை என்பதே உண்மை என்பதால் நானும் பகவான் சிவபெருமானின் வெளிப்பாடே. இந்த பிரபஞ்சத்தில் தெய்வங்களுக்கு விதிக்கப்பட்டு உள்ள விதியின்படி அந்தந்த தெய்வங்கள் சில நாடகங்களை நடத்திக் காட்டி படைப்புக்களை நல்வழிப்படுத்த வேண்டும் என்பதினால் நாங்கள் அனைவரும் வெவ்வெறு தன்மைகளைக் கொண்ட, வெவ்வெறு கருத்துக்களைக் கொண்ட நிலைகளை வெளிப்படுத்திக் கொண்டு இருக்கின்றோமே தவிற  மற்றபடி நாங்கள் அனைவருமே பரமாத்மன் எனும் சிவசக்தியின் மாய பிம்பங்களே. ஆகவே இனியும் நீங்கள் குழப்பம் அடையாத தேவை இல்லை’ என்றார்.  அதைக் கேட்ட நாரதர் மனக் குழப்பம் நீங்கிச் சென்றார். 

இதனால்தான் பகவான் சிவபெருமான் மற்றும் பகவான் விஷ்ணு இருவரும் தாங்கள் வெவ்வெறானவர்கள் அல்ல எனும் தத்துவத்தை மீண்டும் மீண்டும் எடுத்துரைக்க சில ஆலயங்களில் இருவரின் தன்மையை சேர்த்தே காட்சி தருகின்றார்கள். அவற்றில் ஒன்றுதான் சிங்கப்பெருமாள் ஆலயமும் ஆகும். இந்த ஆலயத்தில் பகவான் சிவபெருமானுக்கே உரிய மூன்றாவது கண்ணுடன் காணப்படும் பகவான் நரசிம்மருடைய மூன்றாவது கண்ணை பூஜையின்போது பண்டிதர்கள் காட்டுவார்கள். அப்படியாக அந்தக் கண்ணை பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தால், அதை பார்ப்பவர்களின் பல தீய பலன்களும் அழிந்து விடும் என்பது நம்பிக்கை.இந்த ஆலயத்து மூலவரை கடன் தொல்லைகள் தீரவும், திருமண தடைகள் விலகவும் மற்றும் சனி பகவானின் தோஷம் விலகவும் வழிபடுவார்கள்.

ஆலயத்தின் அனைத்து பகுதிகளும் மலையை குடைந்து அமைக்கப்பட்டு உள்ளன. அந்த மலைக்குகையில் பாறையில் பகவான் பாடலாத்ரி நரசிம்மர் செதுக்கப்பட்டு உள்ளார். ஆகவே கற்பக்கிரகத்தை  பிரதர்ஷணம் செய்ய வேண்டும் எனில் அந்த சிறிய மலை குன்றை சுற்றியே பிரதர்ஷணம் செய்ய வேண்டும். அதற்கு உதவிடும் வகையில் மலையை சுற்றிவர படிக்கட்டுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. 

திருச்சிற்றம்பலம்

முத்தாலம்மன்

Standard

முத்தாலம்மன்

சுந்தரபாண்டியம் கிராமத்து அருள்மிகு முத்தாலம்மன் பொங்க்ல் திருவிழா
முகநூல் அன்பர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.
சுந்தரபாணடியத்தில் அருள்பாலித்து நம்எல்லாம் காக்கும் கிராம தெய்வமாகக் கொண்டப்படும் கிராம தெய்வம் அருள்மிகு முத்தாலாம்மன்
நம் முத்தாலம்மன் வரலாறு இளைய தலைமுறையினருக்கு தெரிய வாய்ப்பிருந்திருக்காது எனக் கருதி அம்மன் வரலாற்றினை எனக்கு தெரிந்த வரையில் இவ்வாண்டும் தெரிவித்துக்கொள்கிறேன்.

                                                                                         முத்தாலம்மன் வரலாறு விஷ்ணுவின் தசாவாதாரத்தில் பரசுராம அவதார நிகழ்வின் ஒரு அங்கமாகும்.அதன்படி திருமால் பரசுராம அவதாரமாக இவ்பூவுலகில் தீயவைகளை அழிக்க தோன்றினார் என்பது யாவரும் அறிந்ததே

பரசுராமர் அல்லது பரசுராம பார்கவர் என்பவர் இந்து புராணங்களில் விஷ்ணுவின் ஆறாவது அவதாரம் ஆவார். இவரது காலம் திரேத யுகம் ஆகும். இவர் ஜமதக்கினி – ரேணுகா இணையரின் மகன் ஆவார். பரசு என்றால் கோடாரி என்று பொருள். இவர் கடுந்தவம் செய்து சிவ பெருமானிடம் இருந்து ஒரு கோடாலியைப் பெற்றார். அதனால் இவர் பரசு-ராமர் என்று அழைக்கப்படுகிறார்.
தன் தந்தை ஜமதக்கினி முனிவர் வளர்த்த தேவலோகப் பசுவை கவர்ந்து சென்ற கார்த்தவீரிய அருச்சுனனை கொன்றவர். மேலும் சத்திரிய மன்னர்களின் 21 தலைமுறைகளைக் கருவறுக்க சபதம் பூண்டவர்.
ஜமதக்கினி (Jamadagni) சமக்கிருதம்: , இந்து தொன்மவியலின் படி சப்த ரிசிகளில் ஒருவரும், விஷ்ணுவின் ஆறாவது அவதாரமான பரசுராமரின் தந்தையும், ரேணுகாவின் கணவரும் ஆவார். [1] ஜமதக்கினி முனிவரின் ஐந்து மகன்கள் வசு, விஸ்வா வசு, பிருகத்யானு, பிருத்வான்கண்வர் மற்றும் இராமபத்திரன் எனும் பரசுராமர் ஆவர்.
   பிருகுவின் வழித்தோன்றலான ஜமதக்கினி முனிவர், ரிசிக முனிவருக்கும், மன்னர் காதியின் மகள் சத்தியவதிக்கும் பிறந்தவர். [2] ஜமதக்கினி என்பதற்கு நெருப்பு என பொருள்படும். வேதமனைத்தும் கற்ற ஜமதக்கினி, பிரஸ்னசித் என்ற சூரிய குல மன்னர் மகளான ரேணுகாவை மணந்து, வசு, விஸ்வா வசு, பிருகத்யானு, பிருத்வான்கண்வர் மற்றும் பரசுராமர் ஆகிய ஐந்து குழந்தைகளின் தந்தையானார்.
ரேணுகாவை கொல்லுதல்
ரேணுகா தன் பதிபக்தியின் மேன்மையால், நாள்தோறும் பச்சைக் களிமண் பானையில் ஆற்று நீரை எடுத்து வருவாள்.
ஒரு நாள் ஆற்றுக்குச் சென்று களிமண் பானையில் நீர் எடுக்கையில், வானத்தில் தேரில் ஏறி வந்த அழகிய கந்தவர்களைக் கண்டு சில நொடிப் பொழுது வரை மயங்கினாள். இதனால் அவளது கற்புக்குக் களங்கம் ஏற்பட்டதால், பச்சைக் களிமண் உடைந்தது. எனவே வீட்டிற்கு திரும்பாமல் ஆற்றங்கரையிலே ஜமதக்கினி முனிவரின் வருகைக்காகக் காத்திருந்தாள்.
ஆற்றங்கரையில் நடந்த நிகழ்வுகளை ஞானக்கண்ணால் உணர்ந்து, கோபமுற்ற ஜமதக்கினி முனிவர், ரேணுகாவை வெட்டிக் கொல்ல தன் மூத்த மகன்களுக்கு ஆணையிட்டார். அவர்கள் மறுக்கவே, அவர்களைக் கல்லாகப் போகும்படி சபித்தார். தன் கடைசி மகன் பரசுராமர் முன்வந்து, தந்தையின் ஆணைக் கிணங்க, தனது தாயைக் கோடாரியால் வெட்டித் தலையைத் துண்டித்தார்.
பின்னர் அமைதியடைந்த ஜமதக்கினி, பரசுராமருக்கு வழங்கிய வரங்களின் படி ரேணுகாவின் துண்டிக்கப்பட்ட தலை, உடலுடன் இணைந்து உயிர்  பெறச் செய்ய அவரிடம் சில மந்திரங்களைக் கூறி இறந்த உடல்மற்றும் தலையை  இணத்து தான் கூறிய மந்திரங்களைக் கூறினால் உனது தாய் உயிர் பெறுவாள்  என்று கூறி அனுப்பினார், அதன் படி பரசுராமரும் தன் தாய் தலை வெட்டப்பட்ட இடத்திற்கு சென்று இறந்த தாயின் தலையையும் அதன்  உடலையும் தேடி ஒட்ட வைக்கும் போது அவசரத்தில் தாயின் தலையையும் இதேபோன்று தலைவெட்டப்பட்ட பரரையர் குலப் பெண்ணின் உடலுடன் ஒட்ட ைவத்துவிட்டார்,. வேறொரு உடலுடன் கொண்ட தனது தாய் உயிர் பெற்றாள். கல்லான மூத்த சகோதர்கள் மீண்டும் உயிர் பெற்றனர். அவ்வாறு உயிர் பெற்ற தாய் தன் இருப்பிடம் வந்தவுடன் தான் தெரிந்தது், அந்த அம்மையே முத்தாலம்மனாக கிராமத்தில் அன்றே தோன்றி கிராம மக்களுக்கு அருள் தந்து மீண்டும் மறைந்திட தோன்றும் அருள்பெற்று கிராம மக்களைக் காக்கும் அம்மனாக உருவெடுத்து நம் ஊரிலும் தோன்று நமக்காக அருள் பாலிக்க வந்தவளே அம்மன் முத்தாலம்மன்
 இந்த வரலாற்றுப்படி தான் அம்மன் செவ்வாய் இரவு தோன்றி மறுநாள் இந்நேரம் வருவதற்குள் மீண்டும் சென்றுவிடுவதாக வரலாறு, இதன்படி தான்  புதன் கிழமை அன்று இரவு 9,00 மணிக்குள் அம்மனை வழியனு்ப்பி  அம்மனை கரைத்து விடுவார்கள், அதன்படிதான் அம்மன் கரைக்கும்போதும், அம்மனின் உடலை பரரையர் குலத்தாருக்கு கொடுத்துவிடுவார்கள் அ்வ்வுடலை அவர்கள் தான் கரைக்க வேண்டும், முகத்தை வேதர் ( ஆரியர்) வம்சவழியினருக்காக அவர்கள் சார்பாக பூசாரிகளே அம்மன் முகத்தை கரைத்து விடுவர், இதுதான் முத்தாலம்மன் பொங்கலின் ஐதிக வரலாறு.
சுந்தரபாண்யம் பொங்கலும் கிராம எல்லா சமுதாயத்தாரின் பங்கு கொண்டு கொண்டாடி அம்மனின் அருள் பெற்று வரப்படுகின்றோம்,
நன்றி; செவிவழிக் கதையாக கேட்டறிந்தது.
திருச்சிற்றம்பலம்

அருந்தவத்தோர் தொழும் அடிகள் வேடங்கள்

Standard
அருந்தவத்தோர் தொழும் அடிகள் வேடங்கள்
மருந்து வேண்டில் இவை மந்திரங்கள் இவை
புரிந்து கேட்கப்படும் புண்ணியங்கள் இவை
திருந்துவேதன்குடித் தேவர் தேவெய்திய
அருந்தவத்தோர் தொழும் அடிகள் வேடங்களே, 3-25-1
திருந்து தேவன்குடியில் (நண்டாங்கோயில்) எழுந்தருளியுள்ள தேவர்கட்கெல்லாம் தலைவராய் விளங்கும் சிவபெருமானார் அருந்தவத்தோர்களால் தொழுப்படுபவர்
1. இப்பெருமானாருடைய திருவேடங்கள் ( திருவெண்ணீறு, உத்திராட்சம், சடைமுடி) மருந்து வேண்டுவோருக்கு மருந்தாகும்.
2, மந்திரங்கள் வேண்டுவோருக்கு மந்திரமாகும்
3,சிவபுண்ணியங்களை அளிப்பனவாகவும் அமையும்
மானம் ஆக்குவ்வன மாசு நீக்குவ்வன
வானை உள்கச் செலும் வழிகள் காட்வ்வன
தேனும் வண்டும் இசைபாடும் தேவன்குடி
ஆனஞ்சாடும் முடி அடிகள் வேடங்களே, 3-25-3
4, நமக்க பெருமையை அளிப்பன
5, அறியாமையால் மனத்தில் ஏற்படும் தீய எண்ணங்களை அகற்றுவன
6, முத்திக்குரியவழிகளைக் காட்டுவன
இதே கருத்தினை திருநாவுக்கரசர் சுவாமிகள் கூறியுள்ளதைக் காண்போம்
வேடம் பரவித் திரியும் தொண்டர்
ஏதப் படாவண்ணம் நின்றார் போலும் 6-89-6

சிவ வேடங்ளான திருநீறு, உருத்திராக்கம், சடைமுடி, துவர் ஆடை, ஆகியவற்றை கண்ட சிவபெருமானாரை நினைந்து வணங்கும் தொண்டர் துன்பப்படாவண்ணம் காத்து நிற்பவர் சிவனார். என்பது நாவுகரசர் சுவாமிகளுடைய அனுபவ வாக்கு ஆகும்.
மெய்ப்பொருள் நாயனாரும், ஏனாதி நாத நாயனாரும் தம்மைக் கொல்ல வந்தவர் திருவெண்ணீறு அணிந்திருந்ததைக் கண்ட உடன் சிவபெருமானாரையே நினைந்தார்கள்.
புகழ் சோழர்தமது படைத்தலைவர் ஒரு சடைமுடியுடைய தலையைக் கொண்டு வந்ததைக் கண்டவுடன் தீயில் முழ்கி இறைவனடி சேர்ந்தார்,
சலவைத் தொழிலாளி உடம்பு உவர் மண்ணினால் வெண்மை நிறமாகத் தெரிந்தது. பேரரசராகிய சேரமான் பெருமான் நாயனார் இவரைக் கண்டவுடன் மண்ணில் வீழ்ந்து வணங்கினார். காரணம் திருவேடத்தைக் கண்ட மாத்திரத்தில் சிவபெருமானாருடையநினைவு வந்தது.
வரகுண பாண்டிய மன்னர்திருடன் நெற்றியில் திருநீறு கண்டவுடன் சிவபெருமானாரைக்கண்டதாக நினைவு பெற்றார், ஆதலால் அத்திருடனை தண்டிக்காமல் அனுப்பி வைத்தார்.
திருவேடக் சிறப்பினைக் கூறும் அப்பர் அடிகள் பாடல்
எவரேனும் தாமாக இலாடத்திட்ட
திருநீறுஞ் சாதனுமும் கண்டால் உள்கி
உவராதே அவரவரைக் கண்ட போதே
உகந்தடிமைத் திறம் நினைந்து அங்கு உவந்து நோக்கி
இவர்தேவர் அவர்தேவர் என்று சொல்லி
இரண்டாட்டாது ஒழிநது ஈசன்திறமே பேணிக்
கவராதே தொழும் அடியார் நெஞ்சி னுள்ளே
கன்றாப்பூர் நடுதறியைக் காணலாமே. 6-வது திருமறை
திருநீறுயம் உரத்திராட்சமும் அணிந்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை வெறுக்காமல் இவர் அவர் என்று வேறுபாடு கருதாமலும், அவர்களை கண்ட பொழுதே உள்ளத்தில் மகிழ்ச்சி ஏற்பட வேண்டும். அவர்களை சிவமாகவே எண்ணி, மனம் ஒன்றுபட்டு வணங்க வேண்டும். அவ்வாறு தொழும் அடியார் நெஞ்சினுள்ளே சிவபெருமான் எழுந்தருளுவார்
சிவசின்னங்களை அணிவதாலும், அணிந்தவர்களை காணும் பொழுதே வணங்குவதாலும், சிவபொருமானாருடைய மனங்களளையே இறைவர் கோயிலாக கொள்வார். முத்தி நிச்சியமாகும்.
சிவ நினைவால் மற்ற அவ நினைவுகள் மனதில் தோன்றுவதில்லை. அதனால் மனம் அலைவதில்லை. மனம் அலைய வில்லையானால் சக்திகள் பல உண்டாகும் இதனால் வாழ்வு நீண்ட வாழ்நாள் முடிவில் பிறாவா நெறி ( முத்திப் பேறு) பெறலாம்,
திருச்சிற்றம்பலம்
தொகுப்பு : வை. பூமாலை, சுந்தரபாண்டியம்
நன்றி : தமிழ் வேதம்

 

பசுபதாஸ்திரம்

Standard

பசுபதாஸ்திரம்

(விஜயன் வில்லடி பெற்றது, சிவபுராண கதை)

மகாபாரதக் காலம்;

துரியோதனன் பாண்டவர்களை

கானகத்திற்குத் துரத்தியக் காலம்;

பாண்டவர்கள் காட்டில்

வாழ்ந்து வந்தக் காலம்;

அப்பொழுது ஒருநாள்,

வியாசமுனி வந்தார்;

பாண்டவர்களைச் சந்தித்தார்;

சிவனைச் சிந்தனையில் வைத்துத்

தவம் செய்ய அர்ச்சுனனுக்கு அறிவுறுத்தினார்;

அதற்கென ஒரு அரிய மந்திரத்தை அவனுக்கு ஓதினார்;

பாகிரதி நதி கரையிலுள்ள இந்திரகிலா மலைக்குச் சென்று

இத்தவம் இயற்ற இயம்பினார்;

அர்ச்சுனனும் தவம் செய்யச்அம்மலை அடைந்தான்;

களிமண்ணால் சிவலிங்கம் செய்தான்;

சிவனை எண்ணித் தவம் செய்தான்;

வியாசர் விவரித்த மந்திரத்தை

இடைவிடாது சொல்லி வந்தான்;

அர்ச்சுனன் தவம் செய்த இடத்திற்கு பன்றி ஒன்று வந்தது;

தன் தவத்தை கலைக்க வந்த பன்றியோ ?

தன் எதிரியால் ஏவப்பட்ட பன்றியோ ?

ஏதாவது அசுரன் பன்றி வடிவில் வந்திருக்கிறானோ ?

என்று பலவாறு எண்ணினான்;

பன்றியை தன்னிடம் விட்டுத் துரத்த முயற்சித்தான்;

முடியாது போகவே,

ஒரு அம்பு எடுத்து விடுத்தான்;

பன்றியை ஒரே அடியில் கொன்றுவிடத் துடித்தான்;

தன்னை எண்ணித் தவமியற்றும் அர்ச்சுனனை

சோதிக்க எண்ணினான் சிவன்;

ஒரு வேடன் வடிவம் எடுத்தான்

அவன்;

அவன் வைக்கும் சோதனையிலிருந்து

தப்பிக்க முடிந்தவன் எவன்;

தன்னை எண்ணித்

தவமியற்றும் அர்ச்சுனனை

சோதிக்க எண்ணினான்

சிவன்;

ஒரு வேடன் வடிவம் எடுத்தான்

அவன்;

அவன் வைக்கும் சோதனையிலிருந்து

தப்பிக்க முடிந்தவன் எவன்;

வேடனாய் உருவெடுத்து

வேகமாய் வந்தான்,

பார்த்திபன் கொல்ல எண்ணிய

பன்றியின் மேல் பானம் விடுத்தான்;

இருவரின் கணையும் இரையைத் தாக்க

அக்கணமே அப்பன்றி அசைய முடியாது உயிர் விட்டது;

பன்றி இறந்த இடத்திற்கு

பரமேஸ்வரனும் வந்தான்,

பார்த்திபனும் வந்தான்;

இறந்தது எனக்கே சொந்தமென்று

இருவரும் வாதிட்டனர்;

இதனைத் தொடர்ந்து

இருவரும் அம்பெடுத்துச் சண்டையிட்டனர்;

இரு தரப்பிலும் அம்பு

இல்லாது போகவே,

மல்யுத்தச் சண்டை இட்டு ஒருவர்

மற்றவரைச் சாய்த்து விட எண்ணினர்;

மலைக்காது போரிட்டான் குந்தி மைந்தன்;

சளைக்காது அவனை எதிர் கொண்டான்

சர்வேஸ்வரன்;

சிறிது நேரம் கழித்து தன் வேடம் மறைத்து

சுய உருவம் எடுத்தான்;

ஆரண்யத்தில் எவனை எண்ணி தவம் செய்தென

அவனிடமே சண்டை இட்டதை அறிந்து

அர்ச்சுனன் வருந்தினான்,

தன்னை மன்னிக்கும்படி வேண்டினான்;

‘கவலை எதற்கு அர்ச்சுனா, உன் பானங்கள் எல்லாம்

என்மேல் மாலைகளாகவே விழுந்தன;

எனவே வருத்தம் விடு, பசுபதாஸ்திரம் பிடி,

எல்லாப் புகழும் பெறு;’

வாழ்த்தி மறைந்தான் விஷ்வேஷ்வரன்.

வணங்கி நின்றான் விஜயன்

திருச்சிற்றம்பலம்

தொகுப்பு வை.பூமாலை, சுந்தரபாண்டியம்

திருவாசகமென்னும் தேனின் துளிகள்

Standard

திருவாசகமென்னும் தேனின் துளிகள்

” ஈர்த்து என்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே “

இறைவனை எந்தை என்றும் பெருமானே என்றும் அழைப்பது சிந்திப்பதற் கென்றாகும். அனைத்து உலகையும் படைத்தவன்என்ற கருத்தில் எந்தை என்று கூறுவது பொருத்தமாயினும் அந்த சொல்லை இங்கே பயன் படுத்துவதற்கு ேவறு காரணமும் உணடு, முன்பின் சிந்தியாமல் தன் வழியே செல்லும் மகனை தடுத்து நிறுத்தி தன்வழிப்படுத்துகிறான் தந்தை அடிகளாரைப் பொருத்தட்டில் ஈர்த்து என்னை ஆட்கொண்டாய்என்று கூறுவது ஆழமான கருத்துடையதாகும். திருவாதவூரில் பிறந்து, பாண்டிமன்னனுக்கு அமைச்சு  பூண்டு, அம்முறையில் குதிரை வாங்கவே பெரும்பொருளோடு போகின்றார், உலகில் வாழ்க்கையில் பெரிதும் ஈடுபட்டு இருந்தாரே தவிர வாழ்க்கையை துறந்து துறவியாக மாற நினைக்கவே இல்லை, இறைத் தொடர்பு கொள்ள வேண்டும் என்று சிந்தித்து துறவு கொள்ளவும் இல்லை, பாண்டியமன்னனின் அமைச்சராககுதிரை வாங்குவதற்கு புறப்பபட்டு செல்கின்ற அவர் திரு்ப்பெருந்துைற எல்லையை அடைகின்ற வரை அமைச்சராகத்தான் இருந்தார். அவருடைய ஒரே சிந்தனை கடற்கரைப் பட்டினம் ( தொண்டி) ெசன்று நல்ல குதிரைகள் வாங்க வேண்டும் எ்ன்பதுதான். திருப்பெருந்துறை எல்லையில்  ஒரே விநாடியில் அவர் எ்ல்லாவற்றையும்துறக்க நேரிடுகின்றது. இதுவரை  இருந்த வந்த அவரது லெளவீக வாழ்வு இந்த நொடியிலிருந்து ஆன்மீக துறவு வாழ்விற்கு வித்துவிடுகிறது.

  இது அவராக விரும்பி நீ்ண்ட நாளாக சிந்தனை செய்து ஏற்றுக் கொண்ட முடிவன்று. என்று உறுதியாக கூறலாம். ஆகவே மதுரையிலிருந்து துறைமுகப் பட்டிணம் ஆகிய தொண்டி செல்கின்ற அமைச்சரை வழியே குருந்த மரத்தடியில் இருக்கின்றஒருவர் ஈர்த்து கொண்டார். கை தட்டியோ ஒரு பணியாளரை அனுப்பியோ அழைக்கவில்லை. இவை ெசய்யப் பெற்றிருந்தால்  திருவாதவூரார் அழைக்கப்ட்டார் என்று சொல்லலாம். ஈர்த்தல் என்பது இவ்விரண்டு செயல்களிலும்மாறுபட்ட ஒன்றாகும்.

   காந்தத்தால் ஈர்ககப்படுதல் என்பதைச்சேர்ந்தது. காந்தத்தின் எதிரே வைக்கப்படும் இரும்பு கொஞ்சம் கொஞ்சமாகநகர்கிறது. நகர்கிறது என்ற எணணம் இரும்புக்கு இல்லைவே இல்லை.ஆனால் காந்தம் எவ்வித புறச்செயலுமின்றி இரும்பை இழுக்கின்றது. அந்த இரும்புக்கு தன்னைதடுத்தி நிறுத்திக் கொள்ளும் ஆற்றல் இல்லை. காந்தத்தின் வலுவுக்கு ஏற்ப இரும்பு மிக விரைவாக சென்று காந்தத்துடன் ஒட்டிக்கொள்கிறத.

    அதுபோல திருவாதவூரருடையஉள்ளத்தில் துறவு பற்றிய எந்த எண்ணமும் இல்லாத நிலையில்எங்கோ இருக்கின்ற குரு அவரை ஈர்க்கின்றார் காந்தம் இழுப்பது போல, இங்கேயும்தாம் இழுக்கப்படுவதை அமைச்சராகிய வாதவூராருக்கு தெரியவில்லை. அறியப்படுவதுமில்லை. எல்லாம் நடைபெற்ற பிறகு நினைத்து பார்க்கின்றார் அமைதியாக இருந்து நினைக்கும் போதுதான் தம்மையும் அறியாமல் தாம் ஈர்க்கப்டடது நினைக்க வருகிறது. ஆகவே பல்லாயிரக் கணக்கானவர்கள் வாழ்கின்ற இந்த உலகில் தம் ஒருவரை மட்டும் ஈர்த்து அருள் செய்த ஒருவரை எந்தை என்றுசொல்லக் கூடிய அந்த உறவுமுறை  காரணமாக குருவின் பெருமையினை உணராமலே அடிகளார் ஆகிவிடக்கூடும் , அந்த தவறும் நிகழாமல் இருப்பதற்காகவேதான் பெருமானே என்கிறார் அவர் செய்தது ஒரு தந்தை செய்த காரியம் எனவே எந்தை என்று அறிவித்தார். ஆனால் இறைவன் உலகிடை  அப்படிப்பட்ட தன்ைம உடையவனாகஇருப்பதோடு மட்டும் அல்லாமல் கற்பனை கடந்து நிற்கின்றவன் ஆதலாலே பெருமானே என்று முடிக்கின்றார்.

திருச்சிற்றம்பலம்

தொகுப்பு ; வை.பூமாலை, சுந்தரபாண்டியம்

சுதர்சன சக்கரம்

Standard

சக்கராயுதம்.jpg

சுதர்சன சக்கரம்
தந்தது – ஈசன் – ஹரன்
கொண்டது – மால் – ஹரி
ஹரியும் – சிவனும் ஒன்றுதான் என்பர் ஆன்மீக பெரியோர். வேத வியாசர் எழுதிய பதிணெண் புராணங்களும் இந்த தத்துவத்தையே வலியுறுத்துகின்றன. ஆனாலும் ஹரி வேறு சிவன் – ஹரன் – வேறு.
விஷ்ணுவின் சக்தி சிவனிடமும் சிவனின் சக்தி விஷ்ணுவிடமும் இருப்பதை விளக்கும் மகா சுதர்சன சக்கரம் பற்றிய ஒரு புராணக்கதை உண்டு,
சுதர்சன சக்கரம் என்றதும் நம் நினைவில் வருவது ஸ்ரீமத் நாராயணன்தான் தன் நான்கு கரங்களிலும் முறையே சங்கு, சக்கரம், கதை, பத்மம் ஆகியவற்றை தாங்கியிருப்பவனும் ஆவார் திருமால், தனது சுதர்சன சக்கரத்தை அதர்மத்தை அழத்து தர்மத்தை நிலை நிறுத்துவதுதான் அவர் திருக்கரத்திலுள்ள சுதர்சன சக்கரம், பக்தர்களை தீமையிலிருந்து காக்க வல்லது.
சுதர்சனம் தோன்றி விதம்
சிவனாரைத் தரிசிக்க இந்திரன் ஒருமுறை திருக்கையலாத்திற்கு சென்று கொண்டிருந்தான், பார்க்கிற பொருள் எல்லாம் பரம்பொருள் என்பதை இந்திரன் என்பதை இந்திரன் உணர்ந்திருக்கின்றானா? என்பதை இறைவர் சோதிக்க திருவுளம் கொண்டார். ஈஸ்வரன் மகா ருத்ர கொரூபத்துடன் இந்திரனுக்கு முன்னே காட்சி தந்தார். அதை உணராத இந்திரன் தன்னை மறித்து நிற்பது அரக்கன் என்று எண்ணி ரூத்திரன் மீது தன் கையிலிருந்த வஜ்ராயுத்தை எறிந்தான். அந்த ஆயுதம் ரூத்திரன் மீது பட்டதும் அவர் உடல் சிலிர்த்தது.கோபாக்கினி உண்டாகி, வியர்வைத்துளிகளாக மாறி கடலில் சிதறி விழுந்தது.
பிறகு தன் முன் வந்திருந்ததுசிவன் தான் என்பதை உணர்ந்த இந்திரன் மனம் வருந்தி அவரின் திருவடியில் விழுந்தான், கடலில் விழுந்த ருத்திரனின் வியர்வைத்துளிகள் ஒன்று சேர்ந்து அரக்கனாக வடி வெடுத்தது. இந்த அரக்கன் பிரம்ம தேவனால் ஆசீர்வதிக்கப்பட்டு சமுத்திர ராஜனால் வளர்க்கப்பட்டது. அந்த அசுரன் ஜலந்திரன் என அழைக்கப்பட்டான். ஆக இந்திரனின் அறியாமையால் அவசரத்தாலும் தோன்றினான் ஜலந்திரன் என்ற அரக்கன்.
ரூத்திரனின் வியர்வை துளியில் இருந்து தோன்றியவன் பிரம்மாவிடம் வரம் பெற்றவன் என்பதால் தன்னை எவராலும் அழிக்க முடியாது என இறுமாப்புக் கொண்டான். மூவுலகமும் வென்று தேவர்களை அடிமைப்படுத்தினான், நாளாக ஆக அவனது ஆணவமும் அதிகரித்தது.
பிரம்மாவையும் திருமாலையும் வெற்றி கொண்டான், கொடுமைகள் பல செய்தான். முடிவில்தன்னை படைத்த ஈஸ்வரனைவிட தான்தான் உயர்ந்தவன் எனக் கர்வம் கொண்டான். சிவனாரையும்அடிபணியச் செய்யும் முயற்சியாக திருக்கைலாயம் வந்தான், வழியில் வேதியர்வடிவில் அவனுக்கு முன்னே தோன்றினார் இறைவர். சிவனாருக்கு அடுத்த ஸ்தானத்தில் நான் இருக்கிறேன் என ஆணவத்தால் கர்ஜித்தான். என்னை வெல்ல வேண்டுமென்றால் என்னால் நிர்மானிக்கப்படும் சக்தி வாய்ந்த ஆயுதம் ஒன்றை அழிக்கும் சக்தி உனக்கு இருக்கிறதா? என்று பார்ப்போம் என்றார் சிவனார். அதனை அவனும் ஏற்றுக் கொண்டான்.
வேதியராக வந்த சிவனார் தன் பாத விரல்களால் பூமியை கிளறி மகா சுதர்சன சக்கரத்தை வரிவடிவாக உருவாக்கினார். இந்த மகா சக்கரத்தை எடுத்து, உன் சிரசில் வைத்துக் கொள் பார்ப்போம் என்றார்.
உடனே ஜலந்திரன் அந்த சுதர்சன சக்கரத்தை அப்படியே பெயர்தது எடுத்தான் அதனை தன் சிரசின்மீது வைத்துக் கொண்டான். ஆணவமும் காமமும் மிகுந்த அவனது உடல் அழிந்தது. ஆனாலும் அழியா வரம் பெற்ற அவனது ருத்திர சக்தி, சுதர்சன் சக்கரத்தில் ஒன்றாகக் கலந்தது. அதன் பிறகு மகா சுதர்சனம் மகேஸ்வரின் திருக்கரத்தில் அமர்ந்தது. இதுவே சுதர்சன சக்கரம் பிறந்த கததை.
கோலோகத்தில் திருமாலின் சேவையே பெரிதென கருதி வாழ்ந்துவந்தவள் துளசிதேவி. அவள் ஒரு சாபாத்தர் பூவலகில் பிருந்ததை என்பவளாக மிக்க அழகுடன் காலநேமி என்ற அரக்கனுக்கு மகளாகப் பிறந்து அவளே ஜலந்திரனுக்கு மனைவி ஆனாள். அவளது பதிவிராத சக்தியால்தான் அழியா வரம்பெற்றிருந்தான் ஜலந்திரன் , முடிவில் சிவபெருமானால் அவன் அழிந்ததும் பிருந்ததை தீக்குளித்தாள். எப்போதும்திருமாலுடன் வாசம் செய்யும் வரம் பெற்று மீண்டும்துளசியாக சேவையாற்றி வந்தாள்.
ஜலந்திரனுடன் வாழந்தவள் துளசி, எனவே அவன் உறைந்திருக்கும் சுதர்சன சக்கரத்தில் பிருந்ததையும் சங்கமிக்க வைத்து பிருந்தா – ஜலந்திரன் சுதர்சன சக்கரத்தை தன் திருக்கரத்தில் திகழ விரும்பினார் திருமால், இதற்காக சிவனாரிடமிருந்து இதனை பெற ஈஸ்வரனை பூஜிக்க துவங்கினார் ஸ்ரீமத் நாராயணன். அதற்காக ஆயிரத்தெட்டு தாமரை மலர்களைக் கொண்டுஅதி சிவனாரை அர்ச்சித்து வழிபடலானார் அப்போது சிவனாரின் சங்கல்பத்தால் ஒரேயொரு மலர் மறைந்திட மந்திரம் ஒன்று க்கு மலர் ஒன்று குறைந்தது கண்டு, தன் வலக் கண்ணையே பெயர்த்து மலராக சமர்ப்பித்தார். இதனாலேயே இவருக்கு கண்ணன் என்ற நாமம் வந்தது. அந்த பூஜையில் மகிழ்ந்த சிவனார் மகாசுதர்சன சக்கரத்தை திருமாலுக்கு தந்து துஸ்டர்களை சம்கரித்து பக்தர்களை ரட்சிக்கும் பணியை அவரிடம் தந்தார், ஆக சங்கரநாராயணன் என்ற உக்கரதாரி ஆனார் திருமால்,

உலகில் உள்ள எந்த தீய சக்தியையும் எதிர்த்து அழிக்க வல்லது மகா சுதர்சனம் மந்திர தந்திர யந்திர அஸ்திர சஸ்திர ஆகிய அனைத்தையும் அழித்து நல்லோரை துயரில் இருந்து காக்க வல்லது இந்த மகா சுதர்சன சக்கரம். பெரியோர்களை இழிவாக பேசிய சிசுபாலனை அழித்தது இதுவே.
விஷ்ணு பத்தரான அம்பரீஷனை துர்வாசகரின் கோபாஸ்திரத்திலிருந்து காத்து ரட்சித்தது இதுவே.
குருசேத்திரப் போரில் அர்ச்சுனனுக்கு துணை புரிந்ததும் இதுவே.
அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்டுவது மகா சுதர்சன சக்கரம், இதனை வழிபடுவர்கள் சிவனையும் ஸ்ரீமத் நாராயணனையும் வழிபட்ட பலனைப் பெறுகின்றனர்.
ஹரியும் ஹரனும் உறையும் அற்புத சக்திதான் அந்த சுதர்சன சக்கரம்.
திருச்சிற்றம்பலம்
தொகுப்பு வை.பூமாலை, சுந்தரபாண்டியம்