திருமுறை ஓதினால் கருவறைப் ( பிறப்பு அறுத்தல் ) புகுவதில்லை

Standard

திருமுறை ஓதினால் கருவறைப் ( பிறப்பு அறுத்தல் ) புகுவதில்லை

பன்னிரு திருமுறைகளுள் திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிய பதிகங்கள் “திருக்கடைக்காப்பு ” என்றும் , திருநாவுக் கரசு சுவாமிகள்ள அருளிய பதிகங்களை “தேவாரம் ” என்றும், சுந்தரமூர்த்தி சுவாமி அருளி பதிகங்களை “திருப்பாட்டு” என்றும் கூறுவது மரபாக இருந்து வந்துள்ளது.
தேவாரம் திருமுறை இரண்டையும் சேர்த்து ” தேவாரத் திருமுறை ” எனக் கூறுகிறோம்.
திருமுறை எனும் சொல் சிவமாம் தன்மையைப் பெறச் (முக்தி பேறு) செய்யும் நூல் என்பது பொருளாகும். (திரு … முக்திச் செல்வம், முறை .. நூல் ) சிவபரம் பொருளை அடைய உதவும் நூலே திருமுறை எனப்படும்.
திருமுறைகளுள் திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகிய மூவர் அருளிய பாடலகளைத் ” தேவாரம் ” என்று அழைக்கின்றோம். இவர்களை மூவர் முதலிகள் என்று போற்றும் வழக்கு இன்றும் உள்ளது.
தே / தேவர் / சிவபெருமானார், ஆரம் / மாலை, பரம் பொருளாகிய சிவபெருமானாருக்கு வாடாத பாமாலையாக சூட்டப்படுவது என்று ஒரு பொருள்.
தே … சிவபெருமானார், வாரம் … அன்பு, சிவபெருமானாரி டத்து அன்பினை விளைவிப்பது என்று பொருள், வாராய் (அன்புடன்) வணங்கிவார் வல்வினை மாயுமே ” என்பது திரு ஞானசம்பந்த சுவாமிகளின் திருவாக்கு ஆகும்.
தில்ைல சிற்றம்பலத்தில் வைக்கப்பட்டிருந்த திருமுறைகள் எழுதப்பட்ட ஓலைச் சுவடிகள் செல் அரித்திருந்தமை உணர்ந்த முதல் குலோதுங்கள் (கி.பி.1070.. 1120) படைத்தவர்களுள் ஒருவனான “மணவிற்கூத்தன் காளிங்கராயன் ” என்பவன் மூவர் அருளிய தேவாரத் திருப்பதிகங்களைச் செப்பேடுகளில் எழுதுவித்தான் என்பதை தில்லை கோவில் கல்வெட்டு மூலம் அறிய முடிகிறது.
திருஞான சம்பந்தர் காலத்தில் அவருடனே இருந்த அவர் பாடல்களையெல்லாம் ஓலைச் சுவடிகளில் எழுதியவர் ” சம்பந்த சரணாலயர்” ஆவார்.
இவ்வளவு அருமையும் பெருமையும் உடைய திருமுறைப் பாடல்களைத் தமிழ் மக்கள் பயன்படுத்திக் கொண்டு இம்மையிலும் மறுமையிலும் நலம் பெற வேண்டும்.
திருமுறைப் பாடல்கள் யாவும் அறிவுகொண்டு பாடப்பட்டவை இல்லை. இறைவருடைய அருளால் பாடப் பட்டவை என்பதை பலகாலும் எழுதியுள்ளோம்.
திருமயேந்திரப் பள்ளிப் பதிகத்தில் திருஞானசம்பந்தர் அருளியுள்ள ஒரு பாடல் நாம் சிந்திக்க வேண்டிய ஒன்றாகும்.
“வம்புலாம் பொழிலணி மயேந்திரப்பள்ளியுள்
நம்பனார் கழலடி ஞானசம்பந்தன்சொல்
நம்பரம் இதுஎன நாவினால் நவில்பவர்
உம்பரார் எதிர்கொள உயர்பதி அணைவரே.” திருமுறை 3/31

கருத்து ; நறுமணம் கமழும் சோலைகள் சூழ்ந்த மயேந்திரப் பள்ளியில் எழுந்தருளியிருக்கின்ற சிவபெருமானாருடைய வீரக் கழலணிந்த திருவடிகளைப் போற்றி ஞான சம்பந்தன் அருளிய இத்தலத்து பதிகத்தை நம்முடைய கடமை என்ற மன உறுதியுடன் வாயினால் பாடித் துதிப்பவர்கள் தேவர்கள் எதிர்கொண்ட அழைக்க உயர்ந்த இடத்தினை / சிவலோகத்தினை அடைவர்.
திருஞானசம்பந் சுவாமிகள் பின்னால் சுமார் நூறு அல்லது நூற்றுஐம்பது ஆண்டுகட்கு பின்னால் அவதரித்தவர் சுந்தர மூர்த்தி சுவாமிகள். இப்பெருமானார், திருஞானசம்பந்தர் மற்றும் திருநாவுக்கரசர் அருளிய தமிழ் வேதப் பாடல்களை பாடுவதை தமது கடமையாய் கொண்டிருந்தார். என அவரே அருளியுள்ள பாடல்களால் நாம் உணர முடிகின்றது.
“நல்லிசை ஞானசம்பந்தனும் நாவிலுக் கரையனும்
பாடிய நற்றமமிழ் மாலை
சொல்லியவே சொல்லி ஏத்துகப் பானை”

ஞானசம்பந்தரும் , நாவுக்கரசரும் அருளிய திருமுறைப் பாடல்களை எத்தனை முறை பாடினாலும், இறைவர் கேட்டு மகிழ்பவர் என்பதே இப்பாடலின் கருத்து.

சுந்தரர் அருளிய கேதாரப் பதிகத்தில் , நாவுக்கரசருக்கும், தமிழ் ஞான சம்பந்தருக்கும் தான் அடித்தொண்டன் என்று கூறியுள்ளார்.
“நாவின்மிசை யரையன்னொடு தமிழ் ஞானசம்பந்தன்
யாவர் சிவனடியார்களுக்கு அடியான் அடித்தொண்டன்”.

ேமலும் நாளும் இன்னிசையால் தமிழ் பாடலை எல்லா இடங்களிலும் பரவச் செய்த திருஞான சம்பந்த சுவாமிகளுக்கு அவருடைய பாடலுக்கு இரங்கி, உலகவர் காணப் பொன்னாலாகிய தாளம் அளித்தார் சிவபெருமானார் என்று போற்றுகிறார் சுந்தரர்.

” நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும்
ஞானசம்பந்தனுக்கு உலகவர் முன்
தாளம் ஈந்து அவன் பாடலுக்கு இரங்கும்
தன்மையாளன்…………….. ”

இவற்றையெல்லாம் காணும் பொழுது, சுந்தர மூர்த்தி சுவாமிகள் தமக்கு முன்னே வாழ்ந்து பதிகப் பெருவழி காட்டிய ஞானசம்பந்தர் மற்றும் நாவுக்கரசர் பாடல்களை உள்ளம் ஒன்றி பாடியவர் என்று உறுதியாக அறிய முடிகின்றது.
வானிலிருந்து தேவர்கள் வந்து சுந்தரரை எதிர் கொண்டு அழைத்து சென்று சிவனுலகத்தி்ல் சேர்த்தனர் என்பதையும் சுந்தரர் பாடல் மூலமே அறிய முடிகின்றது.
“இந்திரன் மால் பிரமன் எழிலார்மிகு தேவர் எல்லாம்
வந்து எதிர் கொள்ள என்னை மத்தயானை அருள்புரிந்து
மந்திரமாமுனிவர் இவனார்என எம்பெருமான்
நந்தமர் ஊரன் என்றான் நொடித்தான் மலை உத்தமனே.”

கருத்து ; இந்திரன், திருமால், பிரமன், எழுச்சி மிகுந்த தேவர்கள் ஆகிய எல்லோரும் இம்மண்ணுலகிற்கு வந்து என்னை (சுந்தரரை) சிவனுலகிற்கு அழைத்தார்கள். யானையைக் கொண்டு வந்து என்னை அதன் மேல் ஏறறி அழைத்துச் சென்றார்கள்.அச்சமயம் வானுலகில் இருந்த மந்திரங்கள் ஓதும் முனிவர்கள் ” இவன் யார்? ” என்று வினவ , இவன் நம் தோழன் , ஆரூரான், என்னும் பெயருடையான் என்று திருவாய் மொழிந்தார் சிவபெருமான்.
ஞானசம்பந்த்ர் மற்றும் திருநாவுக்கரசர் பாடிய தமிழ் வேதப் பாடல்களைப் பாடி பரவிய சுந்தர மூர்த்தி சுவாமிகள் பெற்ற பெரும் பேற்றிலிருந்து தமிழ் ேவதப் பாடல்கள் யாவும் சத்திய வாக்கு என்பதையும், மண்ணுலக மக்களின் வாழ்விற்கு ஒப்பற்ற வழித்துணை என்பதையும் அழுத்தமாக மனதில் கொள்ள வேண்டும்.
ஒரு முறை திருமுறை ஓதினால் மறுமுறை கருவறைப் புகுதல் இல்லை ( மறு பிறப்பு இல்லையாகும்).

திருச்சிற்றம்பலம்
நன்றி ; தமிழ் வேதம்
மேலும் பல ஆன்மீகத் தேடலுக்கு
http://vpoompalani05.blogspot.in/
https://vpoompalani05.wordpress.com
http://www.vpoompalani05.weebly.com

Advertisements

மூன்று வழிபாடுகள் முக்கியமானவை

Standard

மூன்று வழிபாடுகள் முக்கியமானவை

மூன்று வழிபாடுகள் முக்கியமானவை
வழிபாடுகள்
—————–
இந்து சமயம் மூன்று வழிபாடுகள் முக்கியமானவை என்று திட்டவட்டமாக வரையறுக்கிறது.இம்மூன்று வழிபாடுகளை முறைப் படிச் செய்யாமல் எந்தப் பரிகாரம் செய்தாலும் ,எவ்வளவு பயனும் கிடைக்காது என்பது ஒட்டு மொத்தச் சாத்திரங்களும் ஓங்கிய குரலில் சொல்லும் தலையாய உண்மையாகும்.

மூன்று முக்கியம்:…

வாழையடி வாழையாக நாம் பிறந்த குலம் வளங்களைக் காண வழி செய்பவை மூறு வழிபாடுகளாகும்.

அவை:

குலகுரு வழிபாடு ,
குல தெய்வ வழிபாடு ,
குல முன்னோர் வழிபாடு.

ஒவ்வொரு குடும்பத்துக்கும் குலகுரு ஒருவர் இருப்பார்.அவரே அவர் குலத்துக்குச் சமயம் சார்ந்த வாழ்வியலுக்கு வழிகாட்டி ;ஞானம் அளிப்பவரும் கூட .உங்கள் குலகுரு யார் என்பதை அறிந்து ,அவரை இயலும் போதெல்லாம் வழிபட வேண்டும்.குலகுரு யார் என்பது தெரீயவெ இல்லை என்றால் ,உங்கள் மனம் ஈடுபடக்கூடிய மரபு வழிபட்ட துறவியைக் குருவாக ஏற்கலாம்.எது எப்படி ஆனாலும் குலகுரு வழிபாடு மிக முக்கியமானது ஆகும்.

அடுத்தது குலதெய்வ வழிபாடு,ஒவ்வொரு குடும்பத்துக்கும் தனித்தனியே குல தெய்வங்கள் உண்டு.அவை கிராம தேவதைக் கோவில்களாகவே இருக்கும்.அவரவர் தம் குல தெய்வ கோயில்களுக்கு இயலும் போதெல்லாம் செல்ல வேண்டும்.வருடம் ஒரு முறையாவது செல்ல வேண்டும்.

மூன்றாவது முக்கியமான வழிபாடு நீத்தார் வழிபாடாகும் .இறந்து போன முன்னோர்கள் நீத்தார் எனப்படுவர்.தாத்தா ,பாட்டி,அம்மா,அப்பா முதாலான முதியவர்களை வாழும் காலத்தில் வயதான நிலையில் ஆதரிக்க வேண்டும்.
அவர்களைப் பேணிப் பாதுகாக்க வேண்டும்.இருக்கும்போது உதவியோடு இறந்த பின்னரும் அவர்களை நினைவு கூற வேண்டும்.

ஒருவர் இறந்த நாள்,திதி அடிப்படயில் நினைவு கூற வேண்டியதாகும்.எந்த மாதத்தில் இறந்தார்கள் ,வளர்பிரையிலா ,தேய் பிறையிலா என்று பார்க்க வேண்டும்.அதன் பின் எந்த திதியில் இறந்தார்கள் என்பதைக் குறித்துக் கொண்டு ,அந்தத் திதி நாளில் திதி தர்ப்பணம் திவசம் செய்வது முக்கியமான கடமையாகும்.

தென்புலத்தார் :

இறந்து போன முன்னோரைப் “பிதிரர்”என்பர்.இவர்கள் வாழுமிடம் பிதிர்லோகன் எனப்படும்.இதனை வள்ளுவர்
“தென்புலம்”என்பார்.தென் புலத்தில் வாழும் முன்னோர்களுக்கு வழிப்பாடு செய்வதற்கு முதனை தருகிறார் வள்ளுவர்.

தென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல் தான் என்று ஆங்கு

ஐம்புலத்து ஆறு ஓம்பல் தலை.
என்பது குறள்.

நீத்தருக்கு நீர்க் கடன் தருதல்,தமிழர்களிடம் வழக்கத்தில் இருந்து மிகவும் பழமையான வழியே ஆகும்.இடைச் சங்க காலத்தில் இருந்த பாண்டிய மன்னரால் ஒருவன் ,பளுஆக சாலை முது குடுமிப்பெருவழுதி என்பவன்.இவன் காலத்தில் இருந்த புலவருள் ஒருவர் நெட்டிமையார் என்ற புலவர்.இவர் ‘புதல்வர்கள் பொன் போன்றவர்கள் தம்முன்னோருக்கு நீர்க்கடன் தருவதால் இப்பெருமைக்கு இவர்கள் உரியவர்கள் ஆகிறார்கள்’ என்கிறார்.

தென்புல வாழ்நாக்கு அருங்கடன் இகுக்கும்
பொன்போல் புதல்வர்’ என்கிறார் அவர் .
முறைப்படி செய்யும் நீத்தார் கடன்கள் முன்னோரை மகிழ்விக்கும்.பிதுர் ஆசி இருப்பின் எல்லா நலன்களும் விளையும்.

தர்ப்பண நாட்கள் :
எள்ளும்,நீரும் முன்னோருக்கு அளித்தால் நீர்க்கடன் தருதல் எனப்படும்.இதனைத் தர்ப்பணம் தருதல் என்பர்.முன்னோருக்குரிய இறந்தநாளில் திவசம் தருதல் வேண்டும்.படையால் இடுவது உண்மையான தமிழர் வழிபாடாகும்.இறந்தநாள் மட்டுமில்லாமல்,இன்னும் பலநாட்களும் முன்னோர் வழிபாட்டுக்குரிய நாட்களாக தர்ம சாத்திரத்தில் சொல்லப்பட்டுள்ளன.

அமாவசை நாட்கள்,மாதப்பிறப்பு நாட்கள் ,மாளய பட்ச நாட்கள் என்பன முன்னோரை வழிபடுவதற்குரிய நாட்களாகும்.இந்த எல்லா நாட்களிலும் நீர்க்கடன் தராவிட்டாலும் ஆடி,தை மற்றும் மாளய பட்ச அமாவாசை நாட்களிலாவது நீர்க் கடன் தருதல் வேண்டும்.

மாளய பட்சம் :

மண்ணுலகின் தென்திசையில் வாழும் முன்னோர்கள்,தாம் வாழ்ந்த பகுதிக்கு வருகை தரும் நாட்கள் மாளய பட்ச நாட்களாகும்.புரட்டாசி மாத அமாவாசை மாளய அமாவாசை ஆகும்.அதற்கு முன் உள்ள நாட்கள் மாளய பட்சம் எனப்படும்.இந்த நாட்களில் நீர்க்கடன் தருவது நல்லது.தமுன்னோருக்குரிய திதி நாளில் திவசம் தரலாம்.குடும்ப வழக்கப்படி படையலும் இடலாம்.

நீர்க்கடன் முக்கியம்:
மாளய பட்ச நாட்கள்;இல் தகுந்தவர் துணையுடன் நீர்க்கடன் தருவது மிகவும் முக்கியமானதாகும்.இந்த நாட்களில் ஆறு அல்லது குளங்களில் ,ஈர உடையுடன் நீரினை இரண்டு கைகளாலும் எடுத்து,தெற்குப் பார்த்து முன்னோரை நினைத்து நீரினை நீர்நிலையில் சேர்க்கலாம்.ஆறு குளத்தில் குளிக்க வாய்ப்பு இல்லாதவர்கள் ,முன்னோரி நினைத்துக் கொண்டு ஒரு பெரிய பாத்திரத்தில் இருந்து இரண்டு கைகளாலும் நீரினை எடுத்து தெற்குப் பார்த்து வணங்கி இன்னொரு பாத்திரத்தில் சேர்க்கலாம்.வசதி வாய்ப்புள்ளவர்கள் ராமேஸ்வரம் ,பூம்புகார் போன்ற கடல் துறைகளுக்கு சென்று திதி தர்ப்பணம் தருவது புன்னியப் பலனைக் கொடுக்கக் கூடியதாகும்.

ஆதிபரப்பிரம்ம சக்தி என்ற மனோன்மணி

Standard

ஆதிபரப்பிரம்ம சக்தி என்ற மனோன்மணி

இந்திய அரசு அமைப்பின் படி வி.ஏ.ஓ.தான் ஆணிவேர்;அவருக்கு மேல் வருவாய் ஆய்வாளர் எனப்படும் ஆர்.ஐ.அவருக்கு மேல் மாவட்ட துணை ஆட்சியாளர்;அவருக்கும் மேல் மாவட்ட ஆட்சியாளர்;ஆளுநர்,ஜனாதிபதி;ஐநா சபை என மிகப்பெரிய நிர்வாக இயந்திரம் செயல்பட்டுவருகிறது.
அதே போல்,நம்மை இயக்குவது நவக்கிரகங்கள்.நாம் முற்பிறவி அல்லது முற்பிறவிகளில் செய்த பாவபுண்ணியங்களுக்கேற்ப நாம்பிறக்கும் நேரத்தில் ஒன்பது கிரகங்களும் குறிப்பிட்ட ராசியில் நின்று நமது வாழ்க்கைப் பயணத்தை இயக்கும்.அனுபவமுள்ள ஜோதிடர்களுக்கு இது புரியும்.

இந்த நவக்கிரகங்களை இயக்குவது 27 நட்சத்திரங்கள்.(நட்சத்திரங்களுக்கும் கிரகங்களுக்கும் உள்ள தொடர்பை விளக்குவதே வேத ஜோதிடம்!)இந்த 27 நட்சத்திரங்களையும் கட்டுப்படுத்தி இயக்குபவை பஞ்சபூதங்கள் எனப்படும் நிலம்,நீர்,காற்று,ஆகாயம்,நெருப்பு.(நட்சத்திரங்களுக்கும் பஞ்சபூதங்களுக்கும் இடையே உள்ள தொடர்பை விளக்குவதே பஞ்சபட்சி சாஸ்திரம்)

இந்த பஞ்சபூதங்களை இயக்கும் மண்டல நிர்வாகிகளே மும்மூர்த்திகள் எனப்படும் பிரம்மா,விஷ்ணு,சிவன்.

பிரம்மா ஒரு உயிரைப் படைத்தால்,அந்த உயிருக்குத் தேவையான கல்வியைத் தரும்பொறுப்பு பிரம்மாவின் துணைவியான கலைவாணிக்குத் தரப்பட்டுள்ளது.

மகாவிஷ்ணு ஒரு உயிரைக் காத்தால்,அப்படிக் காக்கும்பொறுப்பு அவரது துணைவியான மகாலட்சுமிக்குத் தரப்பட்டுள்ளது.

சிவன் ஒரு உயிரை அழித்தால்,ஒருவரது பிறப்பு இறப்பை நிர்ணயிப்பவராக இருப்பதால்,அந்த உயிருக்கு முக்திஎனப்படும் இறவா நிலையைத் தருவது சிவனின் துணையாகிய பார்வதிக்குத் தரப்பட்டுள்ளது.

இந்த மூவருக்கும் மேலே சதாசிவம் இருக்கிறார்.அவரைப் பற்றி யாராவது தெரிந்தால் சொல்லுங்கள்.
சதாசிவத்திற்கும்மேலே இருப்பவள்,இந்த மும்மூர்த்திகளை இயக்குபவள் ஆதி பரப்பிம்ம சக்தி என்ற மனோன்மணி ஆவாள்.
அவளின் வடிவம் வாலை எனப்படும் 12 வயதுச்சிறுமியைப் போன்றது.அவளை நாம் ஒவ்வொருவரும் தரிசிக்கலாம்.

தினமும் ஒரு மணிநேரம் தனிமையில்,சப்தமில்லாத இடத்தில் ஒரு விரிப்பு விரித்து அமர்ந்துகொண்டு,நமது காதுகளுக்குப் பஞ்சுவைத்து அடைத்துக்கொள்ள வேண்டும்.மனதுக்குள் இம் என்ற மந்திரத்தை ஜபிக்க வேண்டும்.எவ்வளவு உரத்து(ஆனால் மனதுக்குள்,வாய்விட்டுச் சொல்லாமல்)க்கூறுகிறோமோ,அவ்வளவு நல்லது.இப்படி இரண்டு ஆண்டுகள் ஜபித்துவந்தால்,மனோன்மணியைத் தரிசிக்கலாம்.

இன்னொரு வழிமுறை உண்டு.இங்கு அதை விரிவாக வார்த்தைகளால் விவரிக்க இயலாது.ஒரு குறிப்பிட்ட தியான முறையினால்,மூக்குக்கும் நுரையீரலுக்கும் இடையில் செய்யும் பிராணயாமத்தை,நுரையீரலுக்கும் வயிற்றுக்கும் இடையில் மாற்றிட வேண்டும்.அப்படிச் செய்தவாறு,ஒரு வரி மந்திரம் உண்டு.அதை எந்த குருவும் வாயால் நமக்கு உபதேசிக்க மாட்டார்;மனதால் உபதேசிப்பார்;அதை ஒருமுறை சொன்னாலே மனோன்மணி நேரில் காட்சியளிப்பாள்.
காட்சியளித்து,நம்மை தன்னுடன் கைபிடித்து அழைத்துச் செல்லுவாள்;இந்த பிரபஞ்சத்தில் அவள் படைத்துள்ள அத்தனைப் படைப்புகளையும் நமக்குக் காட்டுவாள்;காட்டியப்பின்னர்,அவள் தன்னுடைய இருப்பிடத்துக்கு நம்மை அழைத்துச் செல்லுவாள்.அப்படிச் சென்றதும்,எதற்காக என்னைத் தேடினாய்? எனக் கேட்பாள்.நம்மால் அவளைப் பார்த்தப்பின்னர் எந்தக் கேள்வியும் கேட்கமுடியாது

தமிழகத்து சிவஞானியர் / குமரகுருபர சுவாமிகள்

Standard

தமிழகத்து சிவஞானியர் / குமரகுருபர சுவாமிகள்

தூத்துக்குடி மாவட்டம், திரு வைகுண்டம் தலத்தின் வடபால் திருக்கையாலம் என்னும் பகுதியில் 17ம் நூற்றாண்டில் அவதரித்தவர் அருளாளர் குமரகுருபர சுவாமிகள், இவருடைய தந்தை சிகாமணிக் கவிராயர், தாயார் சிவகாம சுந்தரி அம்மை.

குமரகுருபர சுவாமிகள் ஐந்தாம் வயது முதற்கொண்டே மெய்ஞ்ஞானம் கைவரப் பெற்றவர், தமக்கு ஞானாசிரியர் ஒருவர் அமைய வேண்டும் என்று திருவருளைச் சிந்தித்தார். அச் சமயத்தில் ஆகாயத்தில் ” அன்பனே நீ இவ்விடத்தை விட்டுப் புறப்பட்டு வடதிசை யாத்திரை செய்யுங்கால் எந்த இடத்தில் உன் வாக்குத் தடைபடுமோ அவ்விடத்தில் ஞான உபேதசம் ெபற கடவாய்” என்று
ஓர் அசரீரி வாக்கு எழுந்தது.
பின்னர் மதுரையை நோக்கிப் புறப்பட்டார். மதுரை மீனாட்சி அம்மையின் பேரில் ” மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் ” என்ற நூலை பாடினார். இந்நூல்அச்சமயத்தில் மதுரையை ஆண்டு வந்த திருமலை நாயக்கன் முன்னிலையில் மதுரை மீனாட்சியம்மன் ஆலயத்தில் அரங்கேற்றம் செய்யப்பட்டது. மன்னன் மிக்க மகிழ்ச்சியுற்று குமரகுருபரருக்கு கனகாபிசேகம் செய்து, சிவகை குடை, யானை, குதிரை முதலிய வற்றை அளித்து வணங்கி மகிழ்ந்தார்.
மேலும் மதுரையில் இவர் தங்கியிருந்த பொழுது ” மதுரைக் கலம்பகம்” எனும் நூலையும் அருளிச் செய்தார்.
இந் நூலில் திருவிளையாடல் புராணச் செய்திகள் கற்பனை வளத்துடன் கூறப்பட்டுள்ளன.
இப்பெருமகளார் பாடியுள்ள மற்றொரு நூல் ” நீதிநெறி விளக்கம்” என்பதாகும். மனித இனத்திற்கு அவசியமான நீதி நெறிகள் இந்நூலில் அழகாக கூறப்பட்டுள்ளது. இக்காலத்திற்கு வேண்டிய கருத்துக்கள் இந்நூலில் பொதிந்து கிடக்கின்றன.
பின்னர் குமரகுருபர சுவாமிகள் திருவாரூர் சேர்ந்தார்கள். அங்கே சில நாட்கள் தங்கி , அங்கு “திருவாரூர் நான்மணிமாலை ” எனும் நூலை பாடினார்கள். இந்நூல் கற்பவர் மனத்தை சிவபெருானார் பால் நிற்க செய்யும் ஆற்றல் உடையது எனலாம்.
திருவாரூரில் எழுந்தருளியுள்ள இறைவருக்கு தியாகராசர் என்ற பெயர் வந்ததன் காரணத்தை இப்பெருமமானார் கூறி
உள்ளதை காண்போம், சிவபெருமானார் இந்த உலகத்தைப் படைத்து முழுவதையும் திருமாலுக்கு அளித்தார். ஒன்பது வகையான நிதியங்களையும குபேரனுக்கு அளித்தார். சிறந்த அடியவரான குமரகுருபரருக்கு ( சிவனடியார்க்கு) வீடு பேறு அளிக்கிறார். தன் திருமேனியில் பாதியை உமையம்மைக்கு அளித்துள்ளார். எனவே இவருக்கு தியாேகேசர் (தியாகராசர்) என்பது முகத்துதி அல்ைல எனப் பாடியுள்ளார்.
பிறகு குமரகுருபரர் தருமபுரத்திற்கு வந்து தருமபுர மடத்தில் பீடாதிபதியாக எழுந்தருளியிருந்த அருள் திரு மாசிலமணி ேதசிகர் சுவாமிகளை பணிந்து நின்றார். அன்னார் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் குமரகுருபரர் விடடையளித்து வந்தார். முடிவில்சுந்தரமூர்த்தி சுவாமிகள் தில்லையில்அருள் நிறை நடராசப் பெருமானாரை வணங்கியது பற்றிய பெரிய புராணப்பாடல் ” ஐந்துபேர் அறிவும் ” எனத் தொடங்கும் பாடலுக்கு பொருள் கேட்டருளினார்கள். மிகச் சாதுர்யமாக பொருளை விளக்கினார்.
அப்பாடலுக்கு அனுபவ பொருளைச் சொல்லுமாறு கேட்ட பொழுது குமரகுருபர சுவாமிக்கு வாக்குத் தடைப்பட்டது, ” வாக்கு தடைப்படும் இடத்தில் ஞானஉபதேசம் பெறப்படுவாய் என அசரீரி வாக்கு நினைவு வந்தது.
அருளாளர் திருமிகு, மாசிலமணி ேதசிக சுவாமிகளின் திருவடிகளில் குமரகுருபரர் வீழ்ந்து ” எம் பெருமானாரே எளியேனை அடிமை கொள்ள வேண்டும் என விண்ணப்பித்தார்.
திருமிகு மாசிலமணி தேசிகர் அவர்கள் ” சிதம்பரம் சென்று ஒரு மண்டலம் வசித்து வருக ” எனப் பணித்தருளினார். குருவருளை சிரமேற் கொண்ட குமரகுருபரர் சிதம்பரம் வந்தடைந்தார். இச்சமயத்தில் சிதம்பர மும்மணிக் கோவை, சிதம்பர செய்யுட் கோவை ஆகிய நூல்களை பாடினார்.
சிதம்பரத்தில் 48 நாட்கள் தங்கி வழிபாடாற்றிய பிறகு தரும புரம் வந்து, அருளாளர் மாசிலமணி தேசிகர் திருவடியில் வீழ்ந்து வணங்கி துறவறம் பெற்றார். அப்போது ” பண்டார மும்மணிக்கோவை ” எனும் நூலை இயற்றினார்.
திருமலை நாயக்க மன்னன் குமரகுருபரருக்கு சமர்ப்பித்த பரிசுப் பொருட்கள் அனத்தையும் தருமபுர ஆதினத்திற்கு அளித்து, ஆதினத்தின் நான்காவது குருமூர்த்தியாக உள்ள மாசிலமணி தேசிக சுவாமிகள் மூலம் கொடுத்து அருளாளர்,
அருளாளர் மாசிலாமணி தேசிக சுவாமிகள் ” இப்பொருள்களை எல்லாம் காசிக்கு கொண்டு சென்று தமிழையும் சைவத்தையும் தழைத்ததோங்க செய்க” எனக் குமரகுருபர சுவாமிகட்கு ஆணையிட்டு அருளினார்.

திருச்சிற்றம்பலம்
நன்றி ; தமிழ் வேதம்
மேலும் பல ஆன்மீகத் தகவலுக்கு
http://vpoompalani05.blogspot.in/
https://vpoompalani05.wordpress.com
http://www.vpoompalani05.weebly.com

குரு பக்தியின் அவசியம்

Standard

குரு பக்தியின் அவசியம்

பக்தி மூன்ற வகைப்படும். அவை
1. சிவபெருமானாருக்கு நேராக செய்யும் பக்தி அது சிவபக்தி
2. அடியார்கட்கு செய்யும் பக்தி அது அடியார் பக்தி
3. குருமார்களிடம் செய்யும் பக்தி அது குருபக்தி எனப்படும்..

இவற்றில் சிறந்தது குருபக்தி ஆகும். எனவே இதைப் பற்றி சிந்திப்போம். குருபக்தி சிறந்தது என்பதன் காரணங்கள்

1. திருமாலிடம் செய்த பாவம் சிவபெருமானாரிடத்துத் தீரும். சிவபெருமானாரிடத்துச் செய்த பாவம் குருவினிடத்துத் தீரும்.
குருவினிடத்தில் செய்த பாவம் எங்கும் தீராது.

2, 110 டிகரி வெயில் . இந்த வெயிலில் வேட்டியை வைத்தால் தீ பிடித்து எரிந்து சாம்பலாகாது. சூரியகாந்தக் கண்ணாடி என்ற பூதக்கண்ணாடியை வெயில் வைத்து, இதன் கீழ் வரும் வெயிலில் வேட்டியை வைத்தால் தீப்பற்றி எரிந்து சாம்பலாகிவிடும்.

சூரியனிடமிருந்து வரும் வெயிலுக்கு வேட்டியை எரிக்கும் ஆற்றல் இல்லை. ஆனால் சூரிய காந்தக் கண்ணாடியின் கீழ் வரும் வெயில் வேட்டியை எரித்துச் சாம்பலாக்கி விடுகிறது.
காரணம் ஆயிரம் ஆயிரம் கிரணங்களைத் தன்பால் ஈர்த்து ஒன்று கூட்டி அனுப்புகின்றது சூரிய காந்தக் கண்ணாடி.
நேராக வரும் வெயில் மாதிரி இறைவரைக் குறித்து செய்யும் பக்தி, சூரிய காந்தக் கண்ணாடியின் கீழ் வருகின்ற வெயில் மாதிரி குருபக்தி.

இப்பிறவியில் குருவாக அமைவதற்கு பல பிறவிகள் புண்ணிணம் செய்து, அந்த திருவருளைச் சேர்த்து வைத்திருக்கிறவர் குரு . அதனை பலருக்கும் அளிக்கிறார்.
2,குருநாதரும் நம்மை ப் போன்று உண்டு, உடுததி இருப்பார். அவரை நம்மைப்போ ல நினைத்து விடக்கூடாது. உலகில் பலகோடி உயிரிணங்கள் உண்டு. அவை உண்டு, வெளியே வந்தால் மலம் என்று பெயர். பசுவின் கழிவு மட்டும் சாணம் எனப்படுகிறது. இறைவருடைய அபிடேகத்திற்கு (பஞ்சகவியம் ) ஆக பயன்படுகின்றது. குழந்தை மலம் கழித்தால் பசுஞ் சாணம் போட்டு மெழுகுவார்கள். பிறமலங்கள் போக்குவது பசுவின் சாணம். இதைப் போல குருவின் உடம்பு பசுவின் சாணம் போலவாகும். நம்முடைய கருமேனியைச் சுத்திகரிக்க வந்தது குருநாதரின் திருமேனி எனவே நம்மைப் போலத்தானே அவரும் என்று எண்ணிவிடக் கூடாது. இக்கருத்தை வலியுறுத்தும் திரு மூலரின் பாடலைக் காண்போம்.
“தெளிவு குருவின் திருமேனி காண்டல்
தெளிவு குருவின் திருநாமம் செப்பல்
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
தெளிவு குருவுரு சிந்தித்தல் தானே.” திருமந்திரம்

4. தங்கம் வைரம் முதற்கொண்டு எல்லாப் பொருட்களையும் கடையில் வாங்கலாம். அறிவை / நல்ல ஞானத்தை கடையில் வாங்க முடியுமா? இப்பிறவியில் பெறும் ஞானம் இனி எடுக்கின்ற பிறவிகள் தோறும் தொடருவதாகும். அப்படிப்பட்ட உயர்ந்த ஞானத்தைக் கொடுப்பவர் குருநாதர்.

5. ெபருமிழலைக் குறும்பர் ஒரு குறுநில மன்னர். சுந்தரமூர்த்தி நாயனாரை குருவாகக் கொண்டவர். சுந்தரரையே மனத்தில் வைத்து தியானம் செய்து அட்டமா சித்திகளைப் பெற்றார். சுந்தரர் திரு அஞ்சைக் களத்திலிருந்து கொண்டு திருக்கயிலை போக வேண்டும் என்று எண்ணினார், மிழலையில் இருந்த பெருமிழலைக் குறும்பருக்கு தெரிந்தது. ” நாளைக்கு குரு போகப் போகிறார் நாம் இன்ேற போக வேண்டும் என்று முன்னதாகச் சென்றார் கயிலைக்குதன்னுடைய யோக தியான முறையில்

“அப்பூதி அடிகள்” திருநாவுக்கரசு சுவாமிகளைக் குருவாகக்
கொண்டவர், திருநாவுக்கரசு சுவாமிகளின் பெயரைச் சொல்லியும் எழுதியுமே சிவபதம் பெற்றவர் அப்பூதி அடிகள். இந்த உண்மையை சிவப்பிரகாச சுவாமிகள் நால்வர் நான் மணிமாலையில் அருளியுள்ளார்.
“உற்றான் அலன் தவம் தீயில் நின்றான் அலன் ஊண் புனலா
அற்றான் அலன் நுகர்வும் திருநாவுக்கரசு எனும் ஓர்
சொல்தான் எழுதியும் கூறியுமே என்றும் துன்பில் பதம்
பெற்றான் ஒருநம்பி அப்பூதி என்னும் பெருந்தகையே ”

சென்னை மயிலாப்பூரில் வாழ்ந்த சிவநேசன் செட்டியாருடைய மகள் பூம்பாவை என்பவள் திருஞான சம்பந்த சுவாமி களுடைய பெயரைச் சொல்லியே முத்தி பெற்றாள். புத்தூர் சடங்கவி சிவாச்சாரியார் மகள் நம்பியாரூரர் (சுந்தரர்) எனும் திருப்பெயரை சொல்லியே முக்தி பெற்றார்.

6. இறைவரை நேரே வணங்கினால் ஒரு நன்மை. குருவை வணங்கினால் இரண்டு நன்மைகள். குருநாதர் உள்ளத்தில் இறைவர் இருக்கிறார், எனவே, குருநாதரை வணங்கினால் இறைவரையும் வணங்கிய புண்ணியம் கிடைக்கும்.

குரு நிந்தை கூடாமை.
இதனைத் திரமூலநாயனார் ஐந்து பாடல்களால் விளக்கியுள்ளார், இங்கு ஒரு பாடலை மட்டும் காண்போம்,
“மந்திரம் ஒன்றை உரைசெய்த மாதவர்
சிந்தையில்நொந்திடத் தீமைகள் செய்தவர்
பிந்திச் சுணங்கனாய்ப் பிறந்தொரு நூறுரு
வந்து புலையராய் மாய்வர் மண்ணிலே” திருமந்திரம்

தெளிவுரை; மந்திரங்கள் பலவற்றுள் ஒரு மந்திரத்தை உப ேதசித்தவராயினும், அவருடைய மனம் வருந்தும்படி தீமைகள் செய்தவர்கள் இம்மண்ணுலகில் நாயாய் நூறு முறை பிறந்து, பின் மக்களாய் பிறந்தாலும் புலையராய் பிறப்பர். இம்மை மறுமைகளில் எந்த வித ந்னையும் அடையாமல் இறந்தொழிவர்.

ஒரு பிறப்பில் குருவை இகழ்ந்தவர் பல பிறப்புகளில் பலராலும் இகழும் நிலையை அடைவர்.
திருவண்ணாமலையில் வாழ்ந்த குரு நமச்சிவாயர் தருமபுரம் மடத்தை நிறுவிய குருஞானசம்பந்தர் ஆகியோர் குருவிற்கு தொண்டு ெசய்து சிமமாம் தன்மையை பெற்றவர்கள் என்பதை நினைவில் கொள்வோமாக.

ஆலயங்களில் இறைவரை வணங்குகிறோம், அவருடைய அருள் அப்பெருமானார் குருவாக வந்து நலம் புரிகிறார். கப்பலில் பிரயாணம் ெசய்ய மாலுமி எப்படி அவசியமோ அப்படியே பிறவி எனும் கடலைக் கடக்க குருநாதர் அவசியம்.
தாய், தந்தை குரு, ெதய்வம், என்று வரிசைப்படுத்தி யுள்ளதை உணர வேண்டும். தாய் தந்தையைக் காட்டுகிறாள். தந்தையார் குருவைக் காட்டுகிறார். குரு கடவுளைக் காட்டுகிறார்.
ஒரு பறவை பறப்பதற்கு இரண்டு இறக்கைகள் வேண்டும். நம்முடைய பிறவி ஒழிய குருவருளும் திருவருளும் தேவை.
திருச்சிற்றம்பலம்

நன்றி ; தமிழ் வேதம்
ேமலும் பல ஆன்மீகத் தகவலுக்கு
http://vpoompalani05.blogspot.in/
https://vpoompalani05.wordpress.com
http://www.vpoompalani05.weebly.com

சித்தர் / நந்தியம் பெருமான்

Standard

சித்தர் / நந்தியம் பெருமான்

நந்திதேவர் ; சிவன் கோவில்களிலெல்லாம் சிவலிங்கத்திற்கு நேர் எதிரில் லிங்கத்திற்கு சம உயரத்தில் லிங்கத்தையே பார்த்தபடி நந்திதேவர் அமர்ந்திருப்பதைக் காணலாம். நந்தியின் அனுமதி பெற்றுத்தான் சிவதரிசனம் செய்ய ேவண்டும் என்பதும் நந்திக்கும் சிவலிங்கத்திற்கும் இடையே நந்தி தேவரை மறைத்து நின்று சுவாமி தரிசனம் செய்யக்கூடாது என்பதும் சைவ மரபு, காரணம் நந்தி சிவத்திடமிருந்து பிரிக்க முடியாத ஓர் அங்கம்.
ஆதிகுரு தட்சீணாமூர்த்தியாகிய பரம்பெருளிடம் முதலில் தீட்சை பெற்றவர்கள் எண்மர். அவர்களில் நந்திகள் நால்வர், என திருமூலர் குறிப்பிடுகிறார். நால்வர் முறையே, சனகர், சனந்தனர், சனாத்தனர், சனத்குமாரர், என்பவராவர். இந்த நந்திகள் நால்வரும் குருதட்சண மூர்த்தியும் மோகன தீட்சை பெற்றவர்கள், இவர்கள் நால்வரில் நந்திதேவர் ஒரவரல்லர் என்பதை அறிதல் வேண்டும். நந்திதேவர் திருக் கையிலாய பரம்பரையைச் சேர்ந்தவர். இவர் சிவனாருக்குவாயில் காப்பாளனாகவும், வாகனமாகவும் இருப்பவர், எப்போதும் சிவ சிந்தனையிலேயே இருப்பவர்.

தோற்றம் ; தஞ்சை திருவையாறு தலத்தில் மகா தவயோகிய சிலாத முனிவர் அவருடைய மனைவி சாருட்சன என்ற சித்திரவதி என்பவர்கள் இல்லறம் என்னும் தவ சிந்தனையில் நல்லறம் நடத்தி வந்தனர், அவர்களுக்கு மக்பேறு இல்லை. இத் தருணத்தில் சப்த ரிஷி கள் அவருடைய ஆசிரமத்திற்கு வந்தனர், அவர்களை வரவேற்று அமுதுண்ண அழைத்தனர் தம்பதியர், ஆனால் அவர்களோ குழந்தை யில்லாத இல்லத்தில் உணவருந்த மாட்டோம் என்று திரும்பிவிட்டனர். இதனால் மனம் உடைந்த சிலாத முனிவர் சூரிய புஷ்கரணியில் தவமிருந்தார். அவருடைய தவத்திற்கு மனம் இரங்கிய சிவனார், முனிவரே கவலை வேண்டாம் உமக்கு கருவில் இருந்து பிறக்காத திருமகன் ஒருவன் கிடைப்பான், அவன் சொர்ப்ப ஆயுள் உள்ளவன் என்றும், அவன் எனக்கு சமமானவன் என்றும் அவனும் தவம் இருந்து மரணமில்லா வாழ்வைப் பெறுவான் எனவும் அருள் புரிந்தார், அதன் படி சிலாதர் பூமியைத் தோண்டியபோது நந்தி தேவர் கிடைத்தார்.
நந்திக்கு எட்டு வயதானவுடன் மரணமில்லா வாழ்வு பெற எட்டுக்கோடி ஜபம் செய்து அழிவில்லா வாழ்நாளைப் பெற்றதுடன் , கயிலையில் சிவதொண்டு செய்யவும், காவனாகவும், சிவனாருக்கு வாகனமாகவும் இருக்கும் வாய்ப்பு பெற்றார்.
எப்போதும் சிவ சிந்தனையிலேயே இருக்கும் நந்தி தேவருக்கு சிவனாரே பூமிக்கு வந்து பெண் பார்த்து திருமணம் முடித்து வைத்தார். திருமழப்பாடியில் வசிஷ்டரின் பேத்தியான சுயசையை திருமணம் முடித்து வைத்தார். அதுமுதல் இன்று வரை சிவபக்தர்கள் யாவரும் தன்னை வழிபட்டு தன் அனுமதி பெற்றே சிவதரிசனம் செய்ய ேவண்டுமென்ற நியதி உண்டாயிற்று.
சிவபக்தர்கள் சிவனை வழிபட நந்தி தேவர் துதி செய்து நந்தியின் அருள் பெற்று சிவனருள் பெற கீழ்கண்ட துதி பாடல் பாடி வழிபடலாம்.

” வந்திறை அடியில் தாழும் வானவர் மகுட கோடி
பந்தியில் மணிகள் சிந்த வேத்திரப் படையால் தாக்கி
அந்தியும் பகலும் தொண்டர் அலகிடும் குப்பையாக்கும்
நந்தியெம்பெருமான் பாத நகைமலர் முடிமேல் வைப்போம்”
திருவிளையாடல் புராணம்

(மனதில் சதா சிவதாபத்தை உடைய நந்தி தேவரே அம்மையப்பரைக் கண்டு வழிபட விடை தந்தருள்வாயாக ) என்று மனம் உருக வேண்டுதல் வேண்டும்.

திருச்சிற்றம்பலம்
http://vpoompalani05.blogspot.in/
https://vpoompalani05.wordpress.com
http://www.vpoompalani05.weebly.com

தத்துவக்கதை – மங்கை கண்டு மயங்காதவனுக்கே மரியாதை

Standard

தத்துவக்கதை
மங்கை கண்டு மயங்காதவனுக்கே மரியாதை

மகாலட்சுக்கு சுயம்வரம்
சாதாரண மனிதகுல லட்சுமிக்கே திருமணம் என்றால் ஊர் எவ்வளவு அல்லோகல்லோ படுகிறது.
பத்திரிக்கைகளில் எல்லாம் அந்த செய்தி தானே வருகிறது.
செல்வத்திற்கே அதிபதி மகாலட்சுமிகே சுயம்வரம் என்றால் ஏழு உலகங்களும், தேவாதி தேவர்களும் திரளாகக் கூடிவிடும் அல்லவா?
முப்பத்து முக்கோடி தேவர்களும் கழுத்தை நீட்டினார்கள். ஆனால் மகாலட்சுமி ஒரு நிபந்தனை வைத்தாள்.
என்னை எவன் விரும்ப வில்லையோ, அவனைத்தான் மணப்பேன் என்றாாள்
அவளை விரும்பாதது போல் தேவர்களால் நடிக்ககூட முடியவில்ைல.
ஏழு உலகங்களிலும் நடந்தாள் மகாலட்சுமி
கடைசியில் பாற்கடலில் நடந்தாள்
அங்கே பள்ளி கொண்டிருந்தது ஒரு கரிய திருமேனி
மகாலட்சுமியை கண்டு கொள்ளவே இல்லை அத்திருமேனி
அவளை லட்சியம் செய்யவே இல்லை திருமால்
” என்ன? உங்களுக்கு பெண்களைக் கண்டால் ஆசையே இல்லையா? ” என்றாள் மகாலட்சுமி
” நீ யாரம்மா? ” என்றார் திருமால் அழகர்
நான்தான் மகாலட்சுமி ” என்றாள்
” அப்படி என்றால் ” என்றார் திருமால்
மகாலட்சுமிக்கு சிரிப்பு வந்தது.
” உன்னை அறிவதுதான் என் வேலையா? உலகத்தில் எனக்கு வேறு வேலை இருக்கிறது ” என்றார் திருமால்
உடனே கிடைத்த வாய்ப்பை நழுவ விடக் கூடாது என்று எண்ணிய மகாலட்சுமி அவர்கழுத்தில் மாலையை போட்டுக் காலடியில் அமர்ந்து விட்டாள். இவ்வாறு தானே விரும்பி தன்னை விரும்பாத திருமாலை மணம்முடித்தாள் மகா.
உலகரட்சகன் எதிலும் மயங்கி விடுவதில்லை, என்பதையும் மனிதனும் அப்படி மயங்காமல் இருக்கும் வைர தான் மரியாதை என்பதையும் இந்த கதை எவ்வளவு தெளிவாக எடுத்துக் காட்டுகிறது.
திருச்சிற்றம்பலம்
படித்ததில் பிடித்தது ; ” கண்ணதாசனின் ஞானத்தை தேடி” என்ற புத்தகத்திலிருந்து கண்டது.
http://vpoompalani05.blogspot.in/
https://vpoompalani05.wordpress.com
http://www.vpoompalani05.weebly.com