பட்டினத்து அடிகள்

Standard

பன்னிரு திருமுறைகளில் பதினொன்றாம் திருமுறையில் உள்ள பிரபந்தங்களை அருளிச்செய்த ஆசிரியர்கள் பன்னிருவராவரில் பட்டினத்து அடிகள் ஒருவராவார். இவர் ஒரு சிறந்த சிவனடியார். இவருடைய குருபூஜை நாள் 30.07,2015
இன்றைய நாளில் அன்னாரின் துறவர வாழ்க்கை பற்றி நாம் சற்று நினைவு ெகாள்வோம்.
காவிரிப்பூம்பட்டினத்தில் வணிகர் குலத்தில் இவர் அவதரித்தார். பெற்றோர் திருவெண்காடர் எனப் பெயர் சூட்டி வளர்த்தனர். திருவெண்காடர் வளர்ந்து சிறந்து வாணிகத்தால் பெரும் பொருள் ஈட்டி சிவபத்தியில் சிறந்தவராய், சிவனடியார்களுக்கு வேண்டுவன அளிக்கும் பண்பினராய் விளங்கினார். நிறைந்த செல்வம் உடையவராய் வாழ்ந்து வந்த இவருக்கு இளம் வயதிலேயே துறவர வாழ்வு கொண்டதால் இவருக்கு மக்கட் செல்வம் வாய்த்திலது.
திருவெண்காடரின் மகனாக வந்தடைந்த மருதவாணர் வளர்ந்து சிறந்து வாணிபத்தில் வல்லவராய்ப் பெரும் பொருள் ஈட்டித் தம் பெற்றோரை மகிழ்வித்து வந்தார். வணிகர் சிலருடன் கடல் கடந்து சென்று வாணிபம் புரிந்து பெரும் பொருள் ஈட்டி திருக்கோயில் பணிகட்கும், சிவனடியார்கட்கும் அளித்து வந்தார். அவ்வாறு கடல் வாணிபம் செய்து வரும்போது ஒருமுறை வணிகர்கள் பலரோடு கடல் கடந்து சென்றவர் அங்கிருந்து எருமுட்டைகளையும் தவிட்டையுமே வாங்கித் தம் மரக்கலத்தில் நிரப்பிக்கொண்டு ஊர் திரும்பினார்.

வழியில் அனைவர் மரக்கலங்களும் காற்றில் திசைமாறிப் போயின. உடன் வந்த வணிகர்கள் உணவு சமைத்தற்கு இவரிடம் கடனாக எரு மூட்டைகளை வாங்கிப் பயன்படுத்தி உணவு சமைத்தனர். சில நாட்கள் கழித்து அனைவரும் காவிரிப்பூம்பட்டினம் மீண்டனர்.
அவருடன் சென்ற நண்பர்கள் தான் கொண்டு சென்ற செல்வத்தை எல்லாம் செலவழித்து விட்டு மருதவாணர் எருமூட்ைடகளை வாங்கிவந்துள்ளார் என கேலி செய்தனா். ஆனால் அவரின் தந்தையார் அதனை நம்பாமல் மூட்டைகளை பிரித்து பார்த்ததில் அதில வைரமும் தங்கத்தூள்களும் இருப்பதை அறிந்தாா். சில நாட்கள் கழித்து அதுவும் மறைந்து மறுபடியும் எரு மூட்டைகளாக மாறியது.இதனால் கோபம் கொண்ட தந்தையார் மகனை திட்ட அதனால் பற்றற்ற நிலை ெபற்று துறவறம் கொண்ட மருதவாணர் என்ற பட்டிணத்து அடிகளார், காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே என எழுதிய ஓலையினைக் ெகாண்ட பேழையை தன் தாயிடம் கொடுத்து விட்டு துறவறம் பூண்டார்.

சிவசமாதி
திருவெண்காட்டு அடிகள் திருஒற்றியூரில் தங்கியிருந்த போது, கடற்கரையில் விளையாடும் சிறுவர்களோடு தாமும் சேர்ந்து மணலில் புதைதல் பின் வெளிப்படல் போன்ற விளையாட்டுக்களை நிகழ்த்தினார். முடிவில் சிறுவர்களைக் கொண்டு மணலால் தன்னை மூடச் செய்தார். நெடுநேரம் ஆகியும் அவர் வெளிப்படாதிருத்தலைக் கண்டு சிறுவர்கள் மணலை அகழ்ந்து பார்த்தபோது அடிகள் சிவ லிங்கமாக வெளிப்பட்டருளினார்.

செல்வந்தராக வாழ்ந்த பட்டிணத்து அடிகள் பாடிய எளிய பாடல்கள் அனைவரையும் மனம்உருக வைக்கும் பாடல்கள்
பொல்லாதவன், நெறி நில்லாதவன், ஐம்புலன்கள்தமை
வெல்லாதவன், கல்வி கல்லாதவன், மெய்யடியவர்பால்
செல்லாதவன், உண்மை சொல்லாதவன், நின்திருவடிக்கன்பு
இல்லாதவன், மண்ணிலேன்பிறந்தேன் ! கச்சியேகம்பனே

கல்லாப் பிழையும், கருதாப் பிழையும், கசிந்துருகி
நில்லாப் பிழையு நினையாப் பிழையும், நின்னஞ்செழுத்தைச்
சொல்லாப் பிழையுந், துதியாப் பிழையுந், தொழாப் பிழையும்
எல்லாப் பிழையும் பொறுத்தருள்வாய் கச்சியேகம்பனே. 9

ஊருஞ் சதமல்ல, உற்றார் சதமல்ல, உற்றுப்பெற்ற
பேருஞ் சதமல்ல, பெண்டீர் சதமல்ல, பிள்ளைகளும்
சீருஞ் சதமல்ல, செல்வஞ் சதமல்ல, தேசத்திலே
யாருஞ் சதமல்ல, நின்தாள் சதங்கச்சி யேகம்பனே

தனக்கென்று எதுவும் வேண்டுமென்று வைத்துக் கொள்வது இல்லை. ஒரு பாடலில் தனக்கு உடுத்த, வெயில் மழை, குளிருக்கு, பழைய வேட்டி ஒன்று உண்டு, பசித்தபோது உணவு கொடுக்க சிவனுண்டு, உறங்க திண்ணை உண்டு என்று பாடியுள்ளார்.

பட்டிணத்து அடிகளாரின் பற்றற்ற வாழ்வுக்கு அளவே கிடையாது, ஒரு தடவை அடிகளார், அறுவடை செய்த வயலில் வரப்பில் தலை வைத்து படுத்திருந்தார், அவ்வழியே வந்த பெண்கள் இருவர், அடிகளா்ர் படுத்திருப்பதை முற்றும் துறந்த பின்னும் இன்னும் தன் ெசல்வ செழிப்பில் தூங்குவது ேபால், தலையை வரப்பில் வைத்தல்லவா படுத்துள்ளார் என்றனா், உடனே இதனை கேட்ட அடிகளார், தலையை தரையில் வைத்து படுத்திருந்தார், மீண்டும் இப்ெபண்கள் அவ்வழியே திரும்பி வரும் போது இதனைக் கண்டு, மேலும் அடிகளார், நாம் பேசுவதைத்தானே கவனிததுள்ளார், துறவிக்கு ஏன் நாம் பேசுவதை கேட்டார் என்றனா். அவர்களின் கூற்றையும் அடிகளார் எடுத்துக் கொண்டு பிணம் போல் வாழவேண்டிய இந்த ஊன் உடம்பிற்கு வம்பு பேசுவதை ேகட்பது தவறுதானே என உணர்ந்தார். இதன் பொருட்டு அவரின் பாடல்
பட்டினத்தார் கூறுகிறார் கேளுங்கள் …
“”பேய்போல் திரிந்து பிணம்போல் கிடந்து இட்ட பிச்சை எல்லாம்
நாய்போல் அருந்தி நரிபோல் உழன்று நன் மங்கையரைத்
தாய்போல் கருதி தமர்போல் அனைவருக்குந் தாழ்மை சொல்லி
சேய்போல் இருப்பர் கண்டீர் உண்மை ஞானம் தெளிந்தவரே

மேலும் தனது உடம்பை நரி, புழு, கழுகு,மண் திண்பதற்கான புழுத்துப்போகும் உடலை வீணே வளர்ப்பது ஏனோ ? என்கிறார்.
திருச்சிற்றம்பலம்
ேமலும் பல ஆன்மீகத்தகவலுக்கு
http://vpoompalani05.blogspot.in/
https://vpoompalani05.wordpress.com
http://www.vpoompalani05.weebly.com

Advertisements

நாள் என்செய்யும் கோள் என் செய்யும் நமச்சிவாயத்தை நினைப்பவருக்கு

Standard

நாள் என்செய்யும் கோள் என் செய்யும் நமச்சிவாயத்தை நினைப்பவருக்கு

நாளும் கோளும் நளிந்தோருக்கு இல்லை என்பது நாட்டு வழக்கு. இதனையே ஞானப்பால் உண்ட திருஞான சம்பந்தரும் உறுதிபடுத்துகிறார்.
ஒரு சமயம் தென்பாண்டிநாட்டில் சமண மதம் தலைவிரித்தாடிய ேபாது, சைவ மதத்தினரை ஓர் இழிந்த சமுதாயத்தை சார்ந்தவர்கள் போலவும் அவர்களை கண்டுமுட்டி என்று அழைத்தும் சைவ மதத்தினரை கேவலமாக நடத்தி ஆட்டிபடைக்கும் சமண மத்தினரை பழி தீர்ககவும் எண்ணிய , பாண்டிய மன்னனின் இளவரசி இதனை பொருக்காமல் இதன் ஆதிக்கத்தை தடுக்க ஞான சம்பந்தரின் பெருமையினை அறிந்து, அன்னார்தான் நம் நாட்டில் சைவ மதத்தை மீட்ெடடுக்க முடியும் என உணர்ந்து அந்த இளம் சைவ மத ஞானியை பாண்டிய நாட்டிற்கு அழைத்து வர ஏற்பாடுகள் செய்தார்கள். அப்போது திருவாதவூரில் திருநாவுக்கரச சுவாமிகளுடன் இருந்த சம்பந்தர் பாண்டிய மன்னனின் அரசியார் மங்கையர்கரசியின் வேண்டு ேகாளினை ஏற்று அங்கு செல்ல அப்பர் பெருமானிடம் கூறினார், அப்போது சமணர்களால் துயர் பல பெற்ற அப்பர் பெருமானார், தான் பட்ட துன்பங்களை மனதில் எண்ணி , தாங்கள் மதுரை செல்லவதானால் நல்ல நேரம் கண்டு / நாளும் கோளும் கண்டு செல்க என வேண்டினார் , அப்போது, சிவனேயே சிந்தைதனில் கொண்டு நாளெல்லாம் சிந்தித்திருப்போருக்கு நாளும் கோளும் நல்வினையே செய்யும் என்று கூறு கோளாறு பதிகம் பாடினார் அப்பர் சுவாமிகளிடமிருந்து விடை பெற்றார்,
அப்பதிக பாடல்களை பாடினால் நவக்கோள்களும் நம்மை அணுகா என்றும் அவைகள் எல்லாம் நல்லனவற்றையே செய்யும் , மேலும் இப்பதிக பாடல்களை பாடும் அடியார்கள் அரசனைப்போன்று உயர்வார்கள் என்பது இது திருஞான சம்பந்தனின் ஆனண என்கிறார்.
கோளாறு பதிகம்
“”வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன்
மிகநல்ல வீணை தடவி
மாசறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்து என்
உளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள் செவவாய் புதன் வியாழன் வெள்ளி
சனி பாம்பிரண்டும் உடனே
ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே “.

இப்பாடலில் ஒன்பது கிரகங்களையும் நல்லவனவே செய்யும் என்கிறார்

என்பொடு கொம்பொடாமை யிவைமார் பிலங்க
எருதேறி யேழை யுடனே
பொன்பொதி மத்தமாலை புனல்சூடி வந்தென்
உளமே புகுந்த அதனால்
*ஒன்பதொ டொன்றொடேழு பதினெட்டொ டாறும்
உடனாய நாள்க ளவைதாம்
அன்பொடு நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே.
02
*இரண்டாவது தேவாரம் மூன்றாவது சரணத்தில் பிரயாணத் துக்காகாத
12-நட்சத்திரங்களைக் குறித்திருக்கின்றது.
விவரம்: நட்சத்திரங்களில் முதலுற்பத்தி கிருத்திகையாம்.
ஆதலாலதனை முதலாகக்கொண்டு பார்க்கில் 9-வது
நட்சத்திரம் பூரம். ஒன்றென்றது கிருத்திகை, 7- ஆயிலிய
நட்சத்திரம், 18 பூராடம் ஆறுமுடனாய நாள்கள் என்றது
மேற்கூறிய நான்கும் அல்லாத 8 நட்சத்திரங்களுமாம்.
12 நட்சத்திரங்களாவன: பூரம், பூராடம், பூரட்டாதி, மகம்,
கேட்டை, பரணி, கிருத்திகை, சுவாதி, ஆயிலியம், விசாகம்,
ஆதிரை, சித்திரை என்பவைகளாகும்.

மேலேகண்ட நட்சத்திரங்கள் எல்லாமே நல்ல நாட்களாகும்

உருவளர் பவளமேனி யொளிநீ றணிந்து உமையோடும் வெள்ளை விடைமேல்
முருகலர் கொன்றைதிங்கண் முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால்
திருமகள் கலையதூர்தி செயமாது பூமி திசைதெய்வ மான பலவும்
அருநெதி நல்லநல்ல வவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே.

பொழிப்புரை :

அழகிய பவளம் போன்ற திருமேனியில் ஒளி பொருந்திய திருவெண்ணீற்றை அணிந்து மணம் பொருந்திய கொன்றை , திங்கள் ஆகியவற்றை முடிமேல் அணிந்து சிவபிரான் உமையம்மையாரோடு வெள்ளை விடைமீது ஏறிவந்து என் உளம் புகுந்துள்ள காரணத்தால் திருமகள் , துர்க்கை , செயமகள் , நிலமகள் , திசைத் தெய்வங்கள் ஆன பலரும் அரிய செல்வங்களையே நல்லன வாகத் தரும் . அடியாரவர்கட்கும் மிகவும் நல்லனவாகவே தரும் .

பாடல் எண் : 4

மதிநுதன் மங்கையோடு வடபா லிருந்து மறையோது மெங்கள் பரமன்
நதியொடு கொன்றைமாலை முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால்
கொதியுறு காலனங்கி நமனோடு தூதர் கொடுநோய்க ளான பலவும்
அதிகுணம் நல்லநல்ல வவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே
பொழிப்புரை :

பிறைபோன்ற நுதலை உடைய உமையம்மையா ரோடு ஆலின்கீழ் இருந்து வேதங்களை அருளிய எங்கள் பரமன் கங்கை , கொன்றைமாலை ஆகியனவற்றை முடிமேல் அணிந்து என் உளம் புகுந்துள்ள காரணத்தால் , சினம் மிக்க காலன் , அக்கினி , யமன் , யமதூதர் , கொடியநோய்கள் முதலிய அனைத்தும் மிக்க குணமுடை யனவாய் நல்லனவே செய்யும் . அடியவர்களுக்கும் மிகவும் நல்ல னவே செய்யும் .

பாடல் எண் : 5

நஞ்சணி கண்டன்எந்தை மடவாள்த னோடும் விடையேறு நங்கள் பரமன்
துஞ்சிருள் வன்னிகொன்றை முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால்
வெஞ்சின அவுணரோடு உருமிடியும் மின்னும் மிகையான பூத மவையும்
அஞ்சிடு நல்லநல்ல வவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே
பொழிப்புரை :

நஞ்சணிந்த கண்டனும் , எந்தையும் , உமையம்மை யாரோடு விடையேறி வரும் எம் தலைவனுமாகிய சிவபிரான் , இருள் செறிந்தவன்னிஇலை , கொன்றைமாலை ஆகியவற்றை முடிமேல் அணிந்து என் உளம் புகுந்துள்ள காரணத்தால் கொடிய சின முடைய அவுணர் , இடி , மின்னல் , செருக்குடைய பூதங்கள் ஆகியன நம்மைக் கண்டு அஞ்சி நல்லனவே செய்யும் . அடியவர்கட்கும் மிக நல்லனவே செய்யும் .
திருச்சிற்றம்பலம்.

ரவுவார் (வணங்குபவர்) உலகில் அரசராவாரே !

Standard

பரவுவார் (வணங்குபவர்) உலகில் அரசராவாரே !
மூன்று வயதில் ஞானப்பாலூட்டப்பெற்ற திருஞான சம்பந்த சுவாமிகள் திருமுதுகுன்றத்து இறைவரை வணங்கி பாடியருளிய ஒரு பதிகத்தின் பொருளை இக்கட்டுரையில் காணலாம்.
1, சிவபரம்பொருளைப் போற்றி வணங்குபவரகள் உலகினில் அரசர் ஆவர்,( எல்லோரும் நாட்டிற்கு அரசர் ஆக முடியுமா? என நினைக்காலாம், அவரரவர் சிவனை வணங்கினால் அரசர் போன்ற அதிகாரத்தினையும், நல்ல செல்வத்தினையும் தமது வீட்டிலேயே அடையாலம் என்பது தான் இதன் உட்கருத்து. அவரவர் புண்ணியத்திற்கு ஏற்ப அரசபோகத்துடன், வாழலாம், பெரிய அழகான வீடு, தேவையான வேலையாட்கள், பொன் விளையும் பூமி, வாகனங்கள், சமுதாயத்தில் உயர்ந்த அந்தஸ்து, இராசபோக வாழ்க்கை என்பன பெறுவர் என்பது தான் இதன் உட்பொருள்)

“பரசுஅமர் படையுடையீர் உமைப் பரவுவார்
அரசர்கள் உலகில் ஆவாரே.” தமிழ் திருமுறை 3,பதிகம் 99

பரசு என்னும் ஆயுதத்தை உடைய சிவபெருமானாரே! உம்மைப் போற்றி வணங்குபவர்கள் உலகினில் அரசர் ஆவர்.

2, நாள்தோறும் நன்மைகளையே பெறுவர்
” பையரவம் அசைத்தீர் உமைப் பாடுவார்
நைவிலர் நாள்தொறும் நலமே ” திருமுறை 3 -பதி 99
பாம்பைக் கச்சாசையாக அரையில் கட்டியுள்ள சிவபெருமானாரே! தங்களைத் தீந்தமிழ் பாடல்களால் பாடி வணங்குபவர் எவ்வித குறையும் இலாதவர் (நைவிலர்) நாள்தொறும் நன்மைகளையே பெறுவர்.

3. பழியும், பாவமும், இல்லாதவர் ஆவர்
“மழவிடை யதுவுடையீர் உமை வாழ்த்துவார்
பழியொடு பகையிலர் தாமே”.
இளமை வாய்ந்த இடபத்தை வாகனமாகவும், கொடியாகவும் கொண்ட தங்களை வாயார வாழ்த்துபவர்கள், பழியும், பாவமும் இல்லாதவர் ஆவர்.

4. செல்வமும், புகழும் உடையவர் ஆவர்
“உருவமர் சடைமுடியீர் உமை ஓதுவார்
திருவொடு தேசினர் தாமே”
அழகு பொருந்திய சடைமுடியினை உடையவரே தங்களைப் போற்றி செய்து வணங்குபவர்கள் செல்வமும், புகழும் பெறுவர்.

5. உயர்ந்த உள்ளம் வாய்க்கப் பெறுவர்
” பத்து முடியடர்த்தீர் உமைப்பாடுவார்
சித்த நல்லவ் அடியாரே”

இராவணனுடைய பத்துத் தலைகளையும் நெறித்த தங்களைப்பாடி வணங்குவோர் உயர்ந்த உள்ளம் படைத்த அடியார் ஆவார்கள்.

6. முத்தியும், பெறுவர்
“கட்டமண் தேரைக் காய்ந்தீர் உமைக் கருதுவார்
சிட்டர்கள் சீர் பெறுவாரே”

சமணர்களையும், புத்தர்களையும் அடக்கியருளிய தங்களை உள்ளத்தில் வைத்து தியானிப்பவர்கள் சிறந்த அடியார்கள் பெறுவதற்குரிய முத்திப் பேற்றினையும் பெறுவார்கள்.

சிவபெருமானாரை வாயினால் பாடி, மனத்தினால் தியானித்தால் இம்மையில் எல்லா நலன்களையும் பெற்று, இறுதியில் முத்தியும் அடையலாம் என்பது திண்ணம் இது சிவனருள் பெற்று ஞானப்பால் உண்ட சம்பந்தர் திருவாக்கு.
நாமும் வாயாரப் பாடி, மனதார நினைந்து சிவனருள் பெறுவோம்.
திருச்சிற்றம்பலம்
நன்றி தமிழ் வேதம்
மேலும் பல ஆன்மீகத் தகவலுக்கு
http://vpoompalani05.blogspot.in/
https://vpoompalani05.wordpress.com
http://www.vpoompalani05.weebly.com

ஞானம்

Standard

ஞானம்
பலவற்றை அறிந்து கொள்வது அறிவு. அறிந்து கொண்டதை நடைமுறையில் பயன்படுத்துவது புத்திசாலித்தனம்.
அறிவும், புத்திசாலித்தனமும் எங்கு தோன்றுகிறதோ, அங்கு ஞானம் பிறக்கிறது.

மனிதப் புலன்களுக்கு உட்படாத, மனிதனால் உணரமுடியாத, கேட்டு உணரமுடியாத, நுகர்ந்து உணர முடியாத, தொட்டு உணர முடியாத, விசயங்களை புரிந்து கொண்டு, அறிந்து கொண்டு, அதனை நோக்கி செல்லுதலே ஞானம், அதுவே தெய்வீக ஞானம்.
அடுத்து மனித உடலோடு, இருந்தாலும் உடல் சார்ந்த இச்சைகளுக்கு அதிக முக்கியத்துவம் தராமல், உள்ளத்தை இறையை நோக்கி வைத்துக் கொண்டு பற்றற்று, தெய்வீக விழிப்புணர்வோடு வாழ்ந்து இந்த உடல் கூட ஒரு பாரம் போல் எண்ணி, தன்னையே மூன்றாம் மனிதனைப்போல் பார்த்து , நல்லதை மட்டும் எண்ணி, நல்லதையே செய்து, நல்லதையே உரைத்து வாழ்வதே உண்மையான தெய்வீக ஞானம்.

இதை நோக்கி செல்வதே சித்த மார்க்கம் ஆனால் இதனை உங்கள் வேகத்தை தடுப்பதே உங்கள் கர்ம வினையின் பயன். இதனை மீறி செல்வதற்குத்தான் யோக நிலை . இதற்கும் பற்றா பற்றி வாழ முனைதல் இறை அருளும், ஞானசக்தியும் கிடைக்கும்.
கடமை ஆற்றுவது என்பது வேறு, கவலை கொள்ளுவது என்பது வேறு.
இல்லிற்கும், ஏனையோருக்கும் ஆற்ற வேண்டிய கடமைகளை ஆற்றியே ஆக வேண்டும்.

கடமையை தட்டிக் கழிக்க கூடாது.
கடமையை சுமையாக ஆக்கிக் கொள்ளக் கூடாது. வாழ்வை எளிமையாக மாற்றிக் கொளல் வேண்டும்.
இன்பம், துன்பம் என்ற நிலை தாண்டி வாழ முயல்வதே மெய்ஞானமாகும்.

ஞானத்தைப்பற்றி திருமந்திரத்தில் உள்ள கருத்து

“ஞானத்தின் மிக்க அறநெறி நாட்டில்லை
ஞானத்ததின் மிக்க சமயமும் நன்றன்று
ஞானத்தின் மிக்கவை நல்முத்தி நல்காவாம்
ஞானத்தின் மிக்கார் நரரிமிக் காரே.”

பொருள்: உண்மை ஞானத்தை விட, அதாவது இறைஞானத்தை விட மிக்க தர்ம நெறி உலகில் வேறு எதுவும் இல்லை. அதைவிட சிறந்த சமயமும் இல்லை. இந்த பரஞானத்தை விட மிக்கவை என்று சொல்லப்படுபவை , எவையாயினும் நல்ல மோட்ச இன்பத்தை தரமாட்டா. ஆகவே மெய் ஞானத்தில் மிக்கவர் மண்ணுலக மக்களே ஆயினும் உயர்ந்தவரகளே ஆவர். என்கிறது திருமந்திரம்

ஞானம்அடைய வேண்டும், ஞானத்தை நோக்கி செல்ல வேண்டும் என்றாலே தாய், தந்தை உற்றார் , உறவினர், சூழல் எதுவாக இருந்தாலும், கர்மத்தின்படி நடக்கிறது என்று அமைதியாக இருக்க வேண்டும். தாய்,தந்தை சிரமப்படுகிறார்கள் என்று எண்ணும் பொழுதே மீண்டும் மனிதன் மாயை வலைக்குள் சிக்கி விடுகிறான். எனவே எல்லாம் அவரரவர் கர்ம வினைகளின் படி வாழ்வின் போக்கும் சிந்தனைகளும் , இன்ப, துன்பங்களும் அமைகின்றன. எனவே துயரங்களை எல்லாம் களைந்து வாழ வேண்டும.
இவற்றுக்கெல்லாம் ஒரே வழி பிராத்தனை,
மனிதனின் துன்பத்திற்கு காரணம் முன்வினை – முன்வினை குறைய குறைய துன்பம் குறையும்.

வினைப்பயனை அனுபவித்து தீர்ப்பது என்பது ஒருவகை.
வினைப்பயனை தர்மத்தால் தீர்ப்பது என்பது மற்றொரு வகை
வினைப்பயனை இறைவழிபாட்டால் தீர்ப்பது என்பது இன்னொரு வகை,

எனவே தத்தம் வினைப்பயனை நீக்க இப்பிறவியிலே இவற்றில் ஏதேனும் ஒன்றை கடைப்பிடித்து முன் வினைப்பயன்
நீக்கி ஞான ஒளி பெற வேண்டும்.
திருச்சிற்றம்பலம் – ஓம் நமசிவாய ஓம்

சைவராகப் பிறந்தது மேலான புண்ணியம் / சைவத்தின் தத்துவார்த்தம்

Standard

சைவராகப் பிறந்தது மேலான புண்ணியம் / சைவத்தின் தத்துவார்த்தம்

எல்லாப் பிறப்புகளையும் தப்பி மானிடராய் பிறப்பது பெரும் புண்ணியம்,அதிலும் சைவராகப் பிறப்பது பலகோடி புண்ணியம். இதனை தமிழ்முறை வேதங்களிலும் ஆங்காங்கே காணலாம். பிறவி ஞானி , ஞானப்பால உண்டு அரும் பெரும் தெய்வீக ஞானி,
திருஞானசம்பந்த சுவாமிகள் பாடிய மூன்றாம் திருமுறை திருக்குடி பதிகத்தின் பத்தாவது பாடலில்ஓர் அரிய ெசய்தியை கூறியுள்ளதை அறிந்து நாம் பெருமகிழ்ச்சி கொள்ள ேவண்டும். சிவ பெருமானாருக்கு தலையால் வணங்கி நன்றி கூறவேண்டும்.
“அருந்திரு நமக்கு ஆக்கியஅரன் ” சம்பந்தர்
நம்மைச் சைவ சமயத்தில் பிறக்கச் ெசய்தது மிகப் பெரிய செல்வம் நமக்கு அளித்ததாகும் என்பதை நாம் உணர ேவண்டும்.
உலகில் உள்ள அனைத்திலும் ( உயிர உள்ளவை, உயிர் அற்றவை) இறைமை கலந்துள்ளது என்றும், பிற உயிர்கட்கு எந்த வகையிலும் துன்பம் செய்யக்கூடாது என்று முதலில் கூறுயது, தற்போதும் கூறிவருவது, சைவ சமயமே ஆகும், எல்லா மதக் கோட்பாடுகளையும் உள்ளடக்கியது சைவ சமயம், சைவ மதமே
ஒரு இந்து மகாசமுத்திரம், இவற்றிலிருந்து இதன் கொள்கை கோட்பாடுகளை அடிப்படையாகக் ெகாண்டு தோன்றியதே ஏனைய மதங்கள் அத்தனையும், உதாராணமாக எடுத்துக் கொண்டால், கொல்லாமையை வலியுறுத்தும் பெளத்த, சமண மதங்களும் இந்து மத கொள்கை த்த்துவத்தை கொண்டே வேறுண்ணின. அன்பை அடிப்படையாகக் ெகாண்ட கிருஸ்துவ மதமும், இந்து மதத்தின் அன்பே சிவம், என்ற அடிப்படைத் தத்துவ்த்தை ெகாண்ட தோன்றியது. நம்இந்து மதம் பிரதான நதி, மற்றவையெல்லாம் இத்ன் கிளை, நதிகள், மற்றும் வாய்க்கால்கள் தான்.

போகின்ற வேகத்தில் அடி விழுந்தால் நின்று யோசிக்கிறான்ந அப்போது அவனுக்கு தெய்வஞாபகம் வருகிறது. அனுபவங்கள் இல்லாமல, அறிவின்மூலமே, தெய்வத்தைக் கண்டு கொள்ளும்படி போதிப்பதுதான் இந்து மத்த்தத்துவம். ‘பொறாமை, கோபம்’ எல்லேமே ஆசை பெற்றெடுத்த குழந்தைகள்தான். வாழ்க்கைத் துயரங்களுக்கெல்லாம் மூலகாரணம் எதுவென்று தேடிப் பார்த்து, அந்தத் துயரங்களிலிருந்து உன்னை விடுபடச் செய்ய, அந்தக் காரணங்களைச் சுட்டிக் காட்டி, உனது பயணத்தை ஒழுங்குபடுதும் வேலையை, இந்து மதம் மேற்கொண்டிருக்கிறது.

இந்து மதம் என்றும் சந்நியாசிகளின் பாத்திரமல்ல.

அது வாழ விரும்புகிறவர்கள், வாழ வேண்டியவர்களுக்கு வழிகாட்டி.

வள்ளுவர் சொல்லும் வாழ்க்கை நீதிகளைப் போல இந்து மதமும் நீதிகளையே போதிக்கிறது. அந்த நீதிகள் உன்னை வாழவைப்பதற்கேயல்லாமல் தன்னை வளர்த்து கொள்வதற்காக அல்ல. உலகத்தில் எங்கும் நிர்பந்தமாக, வெண்மையாக, தூய்மையாக, இருக்கிறது என்றதற்கு அடையாளமாகவே அது ‘திருநீறு’ பூச்ச் சொல்லுகிறது. உன் உடம்பு, நோய் நொடியின்றி ரத்தம் சுத்தமா இருக்கிறது என்பதற்காகவே, ‘குங்கும்ம்’ வைக்கச் சொல்கிறது. ‘இவள் திருமணமானவள்’ என்று கண்டுகொண்டு அவளை நீ ஆசையோடு பார்க்காமலிருக்கப் பெண்ணுக்கு அது ‘மாங்கல்யம்’ சூட்டுகிறது. தன் கண்களால் ஆடவனுடைய ஆசையை ஒருபெண் கிளறிவிடக்கூடாது என்பதற்காகவே, அவளைத் ‘தலைகுனிந்து’ நடக்கச் சொல்கிறது.

கோவிலிலே தெய்வ தரிசன்ம் செய்யும்போது கூட கண் கோதையர்பால் சாய்கிறது. அதை மீட்க முடியாத பலவீன்னுக்கு, அவள் சிரித்துவிட்டால் எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றியதுபோல் ஆகிறது. “பொம்பளை சிரிச்சா போச்சு; புகையிலை விரிச்சாப் போச்சு” என்பது இந்துக்கள் பழமொழி. கூடுமானவரை மனிதனைக் குற்றங்களிலிருந்து மீட்பதற்கு, தார்மீக வேலி போட்டு வளைக்கிறது இந்துமதம். அந்தக் குற்றங்களிலிருந்து விடுபட்டவனுக்கே நிம்மதி கிடைக்கிறது. அந்த நிம்மதியை உனக்கு அளிக்கவே இந்துமதத் தத்துவங்கள் தோன்றின.

மனிதன் எப்போது சிந்திக்க தோன்றினானே அன்றே தோன்றியது இந்து மதம், இந்து மதத்தை தோற்றுவித்தவர் யாரென்று யாருக்கும் ெதரியாது, ஆனால் மற்ற மதங்களை தோற்றுவித்தவர்களின் பெயர்களைக் ெகாண்ட மற்ற மதங்கள் விளங்குகின்றன, எனவே இந்து சைவ இந்துமதம் ஆதியும் அந்தமும் இல்லாத ஒன்று, ஒரு மதம் வளர, அதனை சார்ந்தவர்கள் நமக்கு தந்த வேதங்களும், அவர்களின் அறிவுரைகளும் தான், இவற்றில் தான் நம் சைவம் தலைதூக்கி நிறகிறது, தமிழ் முறை தந்த சிவ சைய சமயக்குறவர்களும், பன்னிரு திருமுறைகள் தந்த அடியார்களின் தோத்திரப்பாடல்கள் தான் சைவத்தின் வளர்ச்சிக்கு வித்திட்டன என்றால் மிகையாகாது. சைவ சமயத்தின் உயிர் நாடியாக உள்ள பன்னிரு தமிழ் வேதங்களில் சொல்லப்பட்டிருக்கின்ற அனைத்துக்கருத்துக்களும் எல்லா மத்தவர்கட்கும் எல்லா இனத் தவர்களுக்கும் பொருந்துனவே ஆகும், தான் பெற்ற இன்பத்தை வளர்ச்சியை தானும் வளர்ந்து, பிற இனத்தவரையும் சிறக்க செய்வதே நம் சைவ மதத்திற்கு கிடைத்த வரப்பிரசாதம், ” நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வயகம். ” இதுதானே தமிழ் வேதத்தின் உட்கரு, இதைத்தானே தந்துள்ளது. நம் தமிழ் வேதங்கள், இத்தகைய சமயத்தில் நம்மைப் பிறக்க செய்ததை மதித்து போற்ற வேண்டும் என்கிறார் திருநாவுக்கரசர் ,
” வாய்த்தது நம்தமக்கு ஈதோர் பிறவி மதித்திடுமின்.” த,வே, 4

முழுமுதற் பொருளாம் சிவபெருமானாரை வணங்கி, இனிப் பிறவாமையைப் பெறுவதற்கு வழி வகுப்பது சைவ சமயமே ஆகும், ஆதலால் தான் சைவ சமயத்தில் பிறக்கச் செய்ததைப் ” அருந்திரு ” (மிகப் பெரிய செல்வம்) என்கிறார் சம்பந்தர், இதனை உணர்ந்து இச் சைவ மதத்தில் பிறந்ததின் பயனை பெற்று உய்தி, இன்னும் பிறவாமை பிறக்கவும், அப்படி இன்னும் ஒரு பிறவி பிறக்க நேர்ந்தால் , இந்த சைவ சமயத்திலேயே பிறந்து, என் ஈசனை மறவா நிலையை அடைந்திட அருள் வேண்டுவோம்,
திருச்சிற்றம்பலம் / ஓம் நமசிவாய ஓம்
ேமலும் பல ஆன்மீகத் தகவலுக்கு
http://vpoompalani05.blogspot.in/
https://vpoompalani05.wordpress.com
http://www.vpoompalani05.weebly.com

Standard

நாயன்மார் வரலாறு
மூர்க்க நாயனார்
சோழ நாடு சோறுடைத்து, ( கோவில்கள் – பக்திநெறி ) பாண்டியநாடு முத்துயுடைத்து,(முத்திபெற்ற சித்தர்கள்) தொன்டை நாடு சான்றோருடைத்து, ( சான்றோர்கள் – சித்தர்கள்) இப்படி சான்றோர்கள் பலர் வாழும் தொண்டை நன்னாட்டில் உள்ள வளம் நிறைந்த ஊர் திருவேற்காடு. இவ்வூர் பூவிலிருந்தவல்லியிலிருந்து மூன்று கி,மீ. தொலைவில் உள்ளது.
இவ்வூரில் வேளாளர் மரபில் தோன்றியவர் மூர்க்க நாயனார். திருவெண்ணீற்றையும் மெய் பொருளாகக் கருதி தினமும் திருவெண்ணீர் அணிந்து சிவனடியார்கட்கு மிகச் சிறந்த உணவளித்து பின் தான் உண்ணும் குணம் கொண்டு சிவநெறி யை அணிதினமும் சிவனடியார்கள் சேவை செய்து வந்தார். சிவனடியார்கள் சிவமாகவே நினைத்து வணங்கி, இன்னுரை கூறி அகமும் முகமும் மலர்ந்து அன்புடன் அமுது செய்விப்பார்.
இப்படி இவரது செல்வம் யாவும்செலவழிந்தன. நிலம், வீடு, முதலிய யாவும் விற்றாயிற்கு. வறுமை வந்த போதும் தமது குறிக்கோளினின்று நாயனார் மாறவில்லை. தாம் முன்பு கற்றிருந்த சூது ஆட்டத்தில் பொருளீட்டி அடியார்கட்கு அமுதூட்டத் திட்டமமிட்டார். பல ஊர்கட்கு சென்று அங்குள்ள சிவலாயங்களை தொழுவார். அங்கு சூதாடி அதனால் வரும் பொருளை கொண்டு அடியார்கட்கு அன்னம் அளித்து மகிழ்ந்தார்.
சூதாடுவது பெரும்பாவம் என்று தெரிந்தும், அவர் அதனால் தான் கொண்ட குறிக்கோள் நன்மையானது புண்ணியமானது என்று உணர்ந்து இந்த பாவச்செயலில் கிடைத்த பொருளையும் சிவனடியார்கட்கு அன்னம் அளித்து புண்ணியம் செய்து வந்தார். நாம் சொல்லும் பொய்யினால் ஒரு நன்மை நடக்குமானால் அது உண்மையாகும் என்பதையும் செய்யும்தொழில் பாவத்தொழிலானாலும் அதன் விளைவு நன்மை பயக்குமானால் அதுவும்புண்ணிய செயலே என்று உணர்ந்திருந்தார்.
தான் வாழ வேண்டும் என்ற எண்ணத்தில் சூதாடினால் அது தவறே, தான் செய்யும் ஒப்பற்ற சிவபுண்ணியச் செயலுக்காக சூதாடியது புண்ணியமே ஆகும். பன்னிரு ஆழ்வார்களில் திருமங்கை ஆழ்வார் வழிபபறி செய்து திருமாலயடியார்கட்கு உணவளித்தார். என்ற வரலாற்றையும இத்துடன் வைத்து நாம் எண்ணி பார்க்க வேண்டும்.
நாயனார் திருக்கடந்தை தலத்தை அடைந்து அங்கே எழுந்தருளியுள்ள பிறைசூடிய பெருமானாரை அளவிலா அன்புடன் வணங்கினார். அத்தலத்தில் பல நாட்கள் தங்கினார். ஈட்டிய பொருளை கொண்டு பணியார்கள் மூலம் சிவனடியார்கட்கு அறுசுவை உணவளித்தார். அடியார்கள் யாவரும் உணவருந்திய பிறகு முடிவில் இவர் உணவு உண்பார். சூதாடியதால் இவர் மூர்க்கர் எனப்பெயர் பெற்றார்.
குணத்தால் மூர்க்கர் இல்லை. தூய உள்ளமும், இனிமையான சொல்லும், உயர்ந்த செயலும், கொண்டவர். மண்ணில் பிறந்தவர்கள் பெறும் பயன் மதிசூடும் அண்ணலார் அடியார்தமை அமுது செய்வித்தலாகும்.. இத்தகைய மேலான தொண்டினை செய்து முடிவில் சிவபதம் எய்தினார்.
திருச்சிற்றம்பலம்
நன்றி :தமிழ் வேதம்
http://vpoompalani05.blogspot.in/
https://vpoompalani05.wordpress.com
http://www.vpoompalani05.weebly.com

திருமுறைகளில் காணும் வாழ்வியல் கருத்துக்கள்

Standard

திருமுறைகளில் காணும் வாழ்வியல் கருத்துக்கள்

1. பிறரைப்பற்றி புறங்கூறும் கொடுஞ் செயலை விட வேண்டும்
“பேச்சொடு பேச்சு கெல்லாம் பிறர்தமைப் புறமே பேசக்
கூச்சிலேன் ஆதலாலே கொடுமையை விடுமாறு ஓரேன்
நாச்சொலி நாளும் மூர்த்தி நன்மையை யுணர மாட்டேன்
ஏச்சுளே நின்று மெய்யே யென்செய்வான் தோன்றி னேனே. ” – அப்பர் பிரான் திருமுறை 4 பதி.78

பேசும் பொழுதெல்லாம் பிறரைப் பற்றி அவதூறு பேசும் கொடுஞ் செயலை விடுமாறு அறியேன். நாவினால் இறைவருடைய பெருமைகளை பேசி நன்மைகள் அடைவதையும உணரவில்லை. இகழ்ச்சிக்கு இடமான இந்த உடம்பினுள் இருந்து கொண்டுள்ளேன். யாது செய்வதற்காகப் பிறந்தேன் நான்?
மாணவர்கள்பொருட்டு ஆசிரியர் விரல் விட்டு எண்ணுவது (கூட்டுவது) போல், நம் பொருட்டு நம்முடைய செயல்களைத் தம் செயல்களாகவே பாடியுள்ளார் திருநாவுக்கரசு சுவாமிகள்.
ஒருவர் இல்லாத சமயத்தில் அவரைப் பற்றி புறங்கூறுவது மிகக் கொடிய பாவச் செயல் என்பதை நான்காவது தமிழ் திருமுறை கூறுகின்றது என்பதை உணர வேண்டும். பிறரைப பற்றி புறங்கூறுவதால், நம்முடைய புண்ணியங்கள் குறையும். யாரையும்புறங்கூறிப் பேசினோமோ அவர் செய்த பாவங்களில் ஒரு பகுதி நம்மை வந்து சேரும். இது ஒன்றே நம் வாழ்க்கையை அழிப்பதற்குப் போதும். அதனால் தான் இதனைக் ” கொடுஞ்செயல்” என்கிறார் சுவாமிகள்.
இதற்கு மாறாக இறைவருடைய பெருமைகளை பேசினால் பல நன்மைகள் நம்மை வந்தடையும். என்பதை இப்பாடல் கூறியுள்ளதைக் கண்டு மகிழலாம்.
வேண்டியவர்களை பற்றி நல்லது மட்டுமே பேசுங்கள்
வேண்டாதவர்களைப் பற்றி எதையுமே பேசக்கூடாது.

” அவ்வியம் பேசி அறங்கெட நிலலன்மின்” தமிழ் வேதம் 10 திருமந்திரம்
புறங்கூறி நம் பெற்ற புண்ணியத்தை இழக்காதீர்

2, நாம் வாழும் உலகிற்கு அன்றாடம் ஏதாவது கொடுக்க வேண்டும்.
நம்முடைய வாழ்வு என்பது இருவழிப்பாதை ஆகும். ஒரு வழி இல்லவே இல்லை. அவரவர் தகுதிக்கு ஏற்ப பிறமனிதர்கட்கோ, பிராணிகளுக்கோ, கொடுத்தே ஆக வேண்டும்.
ஏற்கனவே சேர்த்து வைத்துள்ள புண்ணியங்களால் நாம் தற்போது சுகத்தை அனுபவித்து வருகின்றோம். அந்த புண்ணியங்கள் காலியாகிவிட்டால் நம்முடைய இன்பங்கள் தொலைந்து துன்பங்கள் சூழ்ந்துவிடும். இது எப்படி எனில் வங்கியில் நாம் சேர்த்து வைத்துள்ளவற்றை எடுத்து ச் செலவு செய்து வருகிறோம். சேமிப்பு காலியாகி விட்டால் துன்பம்தான். இதற்கு என்ன செய்கிறோம். அவ்வப்போது சேமிப்பில் பணம் போட்டு வருகிறோம். சேமிப்பு குறையாமல் பார்த்துக் கொள்கிறறோம். இதைப்போலத்தான் புண்ணியமும்.ஏற்கனவே நாம் சேர்த்து வைத்துள்ள புண்ணியங்கள் குறையாம் அன்றாடம் புண்ணியங்களைச் செய்து கொண்டே வர வேண்டும். அன்றாடம் உலகத்திலிருந்து காற்றை, சூரியஒளி, தண்ணீர் ஆகியவற்றை பெறுகிறோம். இதன் பொருட்டு உலகிற்கு அன்றாடம் ஏதாவது நாம் கொடுத்தே ஆக வேண்டும்.
வாங்கினால் கொடுக்கத்தானே வேண்டும். பிறந்தால் இறக்கத்தான் வேண்டும். இதுதான் இயற்கையின் நியதி அல்லது கடவுளின் கட்டளை. இதை மீறக்கூடாது. அப்படி இயற்கைக்கு மாறாக பெற்றுக் கொண்டே இருந்து, கொடுக்காமல் வாழ்ந்தால் துன்பமே சூழும். இதனை திருநாவுக்கரசர் நான்காவது தமிழ் திருமுறையில் கூறியதைக் காண்போம்.
” படைகள்போல் வினைகள் வந்து பற்றியென்பக்கல் நின்றும்
விடகிலா ஆதலாலே விகர்தனை விரும்பி ஏத்தும்
இடையிலேன் என்செயகேன் நான் இரப்பர் தங்கட்கு என்றும்
கொடையிலேன் கொள்வதே நான் கோவல் வீரட்டனீரே.” தி, மு. 4. பதி 69

3, மன இறுக்கம் (டென்சன்) இல்லாமல் வாழும்வழி
மனஇறுக்கம் பல நோய்களுக்கு காரணமாக அமைகின்றது என்று தற்கால அறிவியலார் கூறுகின்றனர். மன இறுக்கம் இல்லாது போனால் நோய்கள் வரா. இதற்கு வழியை திருஞானசம்பந்தர் கூறுவது,
” உருகும் மனம் உடையார் தமக்கு உறுநோய் அடையாவே”

மன இறுக்கம் நோயைத்தரும். மன உருக்கம் நோய் வாராமல் தடுக்கும்.
“உள்ளம் உருக உணருமின்கள் உறுநோய் அடையாவே” சம்பந்தர்.

திருவலஞ்சுழி என்னும் தலத்தில் எழுந்தருளியுள்ள வள்ளல் சிவபெருமானாரை உடலால் வணங்கியும், உள்ளத்தால் நினைத்தும், உள்ளம் உருக வேண்டும். அத்தகைய உருகும் உள்ளம் உடையவருக்கு நோய்கள் வாரா. இறைவழிபாட்டில் நம்முடைய உள்ளம் உருகுவதில்லை. காரணம் பொருள் வேண்டி, இம்மை போகம் வேண்டி, வழிபாடு செய்கிறோம். மனத்தில் பேராசை நிறைந்துள்ளதால் உள்ளம் உருகுவதில்லை.
” ஈசனோடாயினும் ஆசை அறுமின்கள் ” திருமுறை 10

4, சிவாய வழிபாடு அவசியம் தேவை
“பூந்தண் நறுவேங்கைக் கொத்திறுத்து மத்கத்திற் பொலிய வேந்திக்
கூந்தற் பிடியும் களிறும் உடன் வணங்கும் குறும்பலாவே.” சம்பந்தர் தி,மு 2 பதி 71

குற்றாலத்தில் எழுந்தருளியுள்ள குறும்பலா ஈசரை வணங்கும் குறிக்கோளுடன் ஆண்யானையும்பெணயானையும் வருகின்றன. இறைவருக்கு சாத்துவதற்கு என்று வருகின்ற வழியில் உள்ள வேங்கை மரத்துப் பூங்கொத்துக்களை ஒடித்து மத்தகத்தில் வைத்துக் கொண்டு வருகின்றன. ஆணும் பெண்ணும் சேர்ந்து களிறும் பிடியும் குறும்பலா ஈசரை வணங்குகின்றன. இதில் நாம் உணறும்கருத்து.
1,சிவ வழிபாடு தேவை. விலங்குகளே சிவவழிபாடு செய்கின்றன.மனிதர்களாக பிறந்த நாம் இவ்வழிபாட்டை வாழ்வின் குறிக்கோளாகக் கொள்ளவேண்டும்.
2, குடும்பமே சிவ வழிபாட்டில் ஈடுபட வேண்டும் என்பதை இப்பாடலில கணலாம். அப்போதுதான் குடும்ப நலமாகவும் வளமாகவும் திகழும், சந்ததிகளும் செம்மையாக திகழ்வார்கள்.
3. சிவாலயம் செல்லும் பொழுது இறைவழிபாட்டிற்குரிய பொருட்கள்மலர் நல்லெண்ணெய் , நெய், பால், இளநீர், இப்படி இறைவருக்கு வேண்டிய பொருட்களை கொண்டு செல்லவேண்டும்.

இதனால்தான் அன்றே நமது பெரியோர்கள் இறைவர், பெரியோர் நோய் வாய்ப்பட்டவர், கருவுற்றதாய், வயது முதிர்ந்தோர், குரு முதலியவர்களிடம் செல்லும் போது வெறுங்கையுடன் செல்லக்கூடாது என்று கூறியுள்ளனர்.
திருஞான சம்பந்த சுவாமிகள் திருவலஞ்சுழி பதியத்தின் முதல் பாடலில் ” வண்டெலாம் நசையால் இசைபாடும் வலஞ்சுழி” என்கிறார் , வண்டுகளே பாடும்போது நாமும் பாடி வணங்க வேண்டாமா?
திருமுறைகள் மனித குலத்திற்கு தேவையான வாழ்வியல் கருத்துக்கள் அரிய வரலாறுகள், அறிவியல் உண்மைகள் இயற்கை எழில் நலம், முத்தி பேற்றுக்குரிய எளிய வழிகள் ஆகியவற்றைக் கூறுவனவாகும்.
திருச்சிற்றம்பலம்
நன்றி : தமிழ்வேதம்
மேலும் பல ஆன்மீகத்தேடலுக்கு
http://vpoompalani05.blogspot.in/
https://vpoompalani05.wordpress.com
http://www.vpoompalani05.weebly.com