அருள்மிகு முப்பிடாரியம்மன்

Standard

இன்று(31.05.2016 செவ்வாய் இரவு) சுந்தரபாண்டியம் சாலியர் சமூகத்தாரால் கொண்டப்படும் அருள்மிகு முப்பிடாரியம்மன் பொங்கல் திருவிழா.

அருள்மிகு முப்பிடாரியம்மன் பற்றி ஒரு பார்வை

கிராமங்களில் கொண்டாடப்படும் அம்மன் திருவிழாக்களில் மாரியம்மன், காளியம்மன், முத்தாலம்மன், மீனாட்சியம்மன் போன்று முப்பிடாரியம்மன் திருவிழாவும் ஒன்று. இத்திருவிழா தென்மாவட்டங்களில் தான் அதிகம் இந்த முப்பிடாரியம்மன் கொண்டப்படுகிறது. முப்பிடாரி என்பது மூன்று சக்தி தெய்வங்களைக் குறிக்கும், மாரியம்மன், காளியம்மன், துர்க்கையம்மன் என்றும் கூறப்படுகிறது, மூன்று சக்தியான இச்சாக சக்தி,கிரயாசக்தி, ஞானசக்தி என்றும், முப்பெரும் தேவியர்களான, பராசக்தி,இலட்சு, சரஸ்வதி என்றும் பலவாறு கூறப்படுகிறது, எப்படியோ மூன்று சக்திகளை கொண்ட ஆதிபராசக்தியாக அன்னை முப்பிடாரியம்மன் ஒருநாள் மட்டும் (24 மணி) கொண்டப்படும் பண்டிகையாக செவ்வாய் தோன்றி புதன் இரவில் மறையும்
அன்னையாக வணங்கப்படும், இந்த பராசக்தியுடன் வலம் வரும் சக்தியின் காவல் தெய்வமாக உள்ள பைரவர் ( வைரவர் என்று சொல்வழக்காக உள்ளது) கடவுளும் சிறப்பு பூசையாக முதல் பூசைசெய்து, அம்மன் எழுந்தருளச் செய்யப்படும். பைரவர் உடன் வர ஆதிபாராசக்தி யாகிய முப்பிடாரியம்மன் ஊர்வலம் சுந்தரபாண்டியம் சாலியர் சமுதாய குடியிருப்பு தெருக்களில் வலம் வந்து அம்மன் அருள்காட்சியம் வழங்கி நம்மையெல்லாம் அம்மன் காட்சி தருகிறார்.அம்மனுடன் வீதிவலம் வரும் பைரவர் வரலாறும் ஆதிபராசக்திக்கு பைரவர் எவ்வாறு காவல் தெய்வமானார் என்பது ஆன்மீக அன்பர்கள் யாவரும் அறிந்திருப்பீர்களென எண்ணுகிறேன், இருப்பினும் பைரவர் வரலாறும் அம்மனுக்கு காவல் தெய்வமானது பற்றிய சிறு வரலாற்றுக் குறிப்பு

பைரவர் பிறப்பு: அபிதான சிந்தாமணி என்ற நூலில் பைரவர் பிறப்பு பற்றி கூறப்பட்டுள்ளது. தாருகாசுரன் என்பவன் இறவா வரம் வேண்டும் என சிவனிடம் வரம் கேட்டான். உயிருக்கு இறப்புண்டு என்ற சிவன், ஏதோ ஒரு பொருளால் இறப்பை வேண்டும்படி அவனிடம் சொன்னார். அவன் அகங்காரத்துடன், ஒரு பெண்ணைத் தவிர தன்னை யாரும் அழிக்கக் கூடாது என்று வரம் பெற்றான். பலம் மிக்க தன்னை ஒரு பெண் என்ன செய்துவிட முடியும் என்பது அவனது எண்ணம்.

பல அட்டூழியங்கள் செய்த அவன் அழியும் காலம் வந்தது. தேவர்கள் சிவனிடம் முறையிட்டனர். உடனே, பார்வதிதேவி சிவன் விழுங்கிய ஆலகால விஷத்தின் கறை படிந்த ஒரு சுடரை உருவாக்கினாள். அந்தச் சுடர் ஒரு பெண்ணாக வடிவெடுத்தது. “காளம்’ என்ற விஷம்படிந்த அந்த பெண்ணுக்கு “காளி’ என பெயர் சூட்டினாள் பார்வதி. காளிதேவி கடும் கோபததுடன் தாருகாசுரன் இருக்கும் திசைநோக்கி திரும்பினாள். அந்த கோபம் கனலாக வடிவெடுத்து, சூரனை சுட்டெரித்தது. பின்னர் அந்தக் கனலை காளிதேவி ஒரு குழந்தையாக மாற்றி அதற்கு பாலூட்டினாள். அதன்பிறகு சிவபெருமான் காளியையும், அந்தக் குழந்தையையும் தன் உடலுக்குள் புகச்செய்தார். அப்போது அவரது உடலில் இருந்து காளியால் உருவாக்கப்பட்டது போல, எட்டு குழந்தைகள் உருவாயின. அந்த எட்டையும் ஒன்றாக்கிய சிவன் குழந்தைக்கு “பைரவர்’ என்று பெயர் வைத்தார்.
என்ற மேற்கண்ட வரலாற்று அடிப்படையில் தான் ஆதிபராசக்தியாகிய நம் முப்பிடாரியம்மனுக்கு பைரவர் கடவுளும் உடன் வலம் வந்து நம் பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்,
அன்னை ஆதிபராசக்தியாகிய முப்பிடாரியம்மனின் அருளும், பைரவர் கடவுளின் ஆசியும் பெற்று நலம் பெறுவோம்,
அம்மன் திருவிழா சிறக்க நல் வாழ்த்துக்கள்
அன்புடன் . வை. பூமாலை, சுந்தரபாண்டியம்
திருச்சிற்றம்பலம் / ஓம் நமசியவாய

Advertisements

அருள்மிகு முப்பிடாரியம்மன் பற்றி ஒரு பார்வை

Standard

இன்று(31.05.2016 செவ்வாய் இரவு) சுந்தரபாண்டியம் சாலியர் சமூகத்தாரால் கொண்டப்படும் அருள்மிகு முப்பிடாரியம்மன் பொங்கல் திருவிழா.

அருள்மிகு முப்பிடாரியம்மன் பற்றி ஒரு பார்வை

கிராமங்களில் கொண்டாடப்படும் அம்மன் திருவிழாக்களில் மாரியம்மன், காளியம்மன், முத்தாலம்மன், மீனாட்சியம்மன்  போன்று முப்பிடாரியம்மன் திருவிழாவும் ஒன்று. இத்திருவிழா தென்மாவட்டங்களில் தான் அதிகம் இந்த முப்பிடாரியம்மன் கொண்டப்படுகிறது. முப்பிடாரி என்பது மூன்று சக்தி தெய்வங்களைக் குறிக்கும், மாரியம்மன், காளியம்மன், துர்க்கையம்மன் என்றும் கூறப்படுகிறது, மூன்று சக்தியான இச்சாக சக்தி,கிரயாசக்தி, ஞானசக்தி என்றும், முப்பெரும் தேவியர்களான, பராசக்தி,இலட்சு, சரஸ்வதி என்றும் பலவாறு கூறப்படுகிறது, எப்படியோ மூன்று சக்திகளை கொண்ட ஆதிபராசக்தியாக அன்னை முப்பிடாரியம்மன் ஒருநாள் மட்டும் (24 மணி) கொண்டப்படும் பண்டிகையாக செவ்வாய் தோன்றி புதன் இரவில் மறையும்

அன்னையாக வணங்கப்படும், இந்த பராசக்தியுடன் வலம் வரும் சக்தியின் காவல் தெய்வமாக உள்ள பைரவர் ( வைரவர் என்று சொல்வழக்காக உள்ளது) கடவுளும் சிறப்பு பூசையாக முதல் பூசைசெய்து, அம்மன் எழுந்தருளச் செய்யப்படும். பைரவர் உடன் வர ஆதிபாராசக்தி யாகிய முப்பிடாரியம்மன் ஊர்வலம் சுந்தரபாண்டியம் சாலியர் சமுதாய குடியிருப்பு தெருக்களில் வலம் வந்து அம்மன் அருள்காட்சியம் வழங்கி நம்மையெல்லாம் அம்மன் காட்சி தருகிறார்.அம்மனுடன் வீதிவலம் வரும் பைரவர் வரலாறும் ஆதிபராசக்திக்கு பைரவர் எவ்வாறு காவல் தெய்வமானார் என்பது ஆன்மீக அன்பர்கள் யாவரும் அறிந்திருப்பீர்களென எண்ணுகிறேன், இருப்பினும் பைரவர் வரலாறும் அம்மனுக்கு காவல் தெய்வமானது பற்றிய சிறு வரலாற்றுக் குறிப்பு

பைரவர் பிறப்பு: அபிதான சிந்தாமணி என்ற நூலில் பைரவர் பிறப்பு பற்றி கூறப்பட்டுள்ளது. தாருகாசுரன் என்பவன் இறவா வரம் வேண்டும் என சிவனிடம் வரம் கேட்டான். உயிருக்கு இறப்புண்டு என்ற சிவன், ஏதோ ஒரு பொருளால் இறப்பை வேண்டும்படி அவனிடம் சொன்னார். அவன் அகங்காரத்துடன், ஒரு பெண்ணைத் தவிர தன்னை யாரும் அழிக்கக் கூடாது என்று வரம் பெற்றான். பலம் மிக்க தன்னை ஒரு பெண் என்ன செய்துவிட முடியும் என்பது அவனது எண்ணம்.

பல அட்டூழியங்கள் செய்த அவன் அழியும் காலம் வந்தது. தேவர்கள் சிவனிடம் முறையிட்டனர். உடனே, பார்வதிதேவி சிவன் விழுங்கிய ஆலகால விஷத்தின் கறை படிந்த ஒரு சுடரை உருவாக்கினாள். அந்தச் சுடர் ஒரு பெண்ணாக வடிவெடுத்தது. “காளம்’ என்ற விஷம்படிந்த அந்த பெண்ணுக்கு “காளி’ என பெயர் சூட்டினாள் பார்வதி. காளிதேவி கடும் கோபததுடன் தாருகாசுரன் இருக்கும் திசைநோக்கி திரும்பினாள். அந்த கோபம் கனலாக வடிவெடுத்து, சூரனை சுட்டெரித்தது. பின்னர் அந்தக் கனலை காளிதேவி ஒரு குழந்தையாக மாற்றி அதற்கு பாலூட்டினாள். அதன்பிறகு சிவபெருமான் காளியையும், அந்தக் குழந்தையையும் தன் உடலுக்குள் புகச்செய்தார். அப்போது அவரது உடலில் இருந்து காளியால் உருவாக்கப்பட்டது போல, எட்டு குழந்தைகள் உருவாயின. அந்த எட்டையும் ஒன்றாக்கிய சிவன் குழந்தைக்கு “பைரவர்’ என்று பெயர் வைத்தார்.

                          

 

   என்ற மேற்கண்ட வரலாற்று அடிப்படையில் தான் ஆதிபராசக்தியாகிய நம் முப்பிடாரியம்மனுக்கு பைரவர் கடவுளும் உடன் வலம் வந்து நம் பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்,

அன்னை ஆதிபராசக்தியாகிய முப்பிடாரியம்மனின் அருளும், பைரவர் கடவுளின் ஆசியும் பெற்று நலம் பெறுவோம்,

அம்மன் திருவிழா சிறக்க நல் வாழ்த்துக்கள்

அன்புடன் . வை. பூமாலை, சுந்தரபாண்டியம்

திருச்சிற்றம்பலம்  / ஓம் நமசியவாய

 

Standard

கீதையில் மனித மனம்
அர்ஜுனனுக்குப் பரந்தாமன் உபதேசித்தது பகவத் கீதை.

மனிதனின் மனதைப்பற்றி அர்ஜுனனுக்கும் கண்ணனுக்கும் வாக்குவாதம் நடக்கிறது.

கண்ணன் சொல்கிறான்:

“அர்ஜுனா, எவன் தன்னையே உதாரணமாகக் கொண்டு இன்ப துன்பங்கள் இரண்டையும் சமமாகப் பார்க்கிறானோ, அந்த யோகிதான் சிறந்தவன் என்பது துணிவு.”

அர்ஜுனன் கேட்கிறான்:

“மதுசூதனா! உன்னால் கூறப்படும் சமநோக்கத்துடன் கூடிய யோகத்தின் ஸ்திரமான நிலையை என்னால் உணர முடியவில்லை; காரணம், உள்ளம் சஞ்சலமுடையது.

கிருஷ்ணா! மனித மனம் சஞ்சலமுடையது; கலங்க வைப்பது; வலிமையுடையது; அடக்க முடியாதது; காற்றை அடக்குவது போல் அதை அடக்குவது கடினமானது.”

பகவான் கூறுகிறான்:

“தோள் வலி படைத்த காண்டீபா! மனம் அடக்க முடியாதது; சலனமடைவது; இதில் ஐயமில்லை. ஆனால் குந்தியின் மகனே! பழக்கத்தால் அதை அடக்கமுடியும்.”

இதையே ராமகிருஷ்ண பரமஹம்சர் இப்படிக் கூறுகிறார்:

“கீழே கொட்டிய கடுகைப் பொறுக்கி எடுப்பது வெகுசிரமம். அதுபோலப் பல திசைகளிலும் ஓடும் மனத்தை ஒருமைப் படுத்துவது எளிதன்று. ஆனால், வைராக்கியத்தால் அதைச் சாதித்துவிட முடியும்.”

மனித மனத்தின் சலனங்களை, சபலங்களை, எப்படி அடக்குவது, என்பதுபற்றி பரந்தாமன் அர்ஜுனனுக்கு உபதேசித்த பகுதி, பகவத் கீதையின் தியான யோகமாகும்.

சகல காரியங்களுக்கும், இன்பத்திற்கும், துன்பத்திற்கும், நன்மைக்கும், தீமைக்கும், இருட்டுக்கும், வெளிச்சத்திற்கும், பாவத்திற்கும், புண்ணியத்திற்கும், அன்புக்கும், வெறுப்புக்கும் மனமே காரணம்.

மனத்தின் அலைகளே உடம்பைச் செலுத்துகின்றன.

பகுத்தறிவையும் மனம் ஆக்கிரமித்துக் கொண்டு வழி நடக்கிறது.

கருணையாளனைக் கொலைகாரனாக்குவதும் மனம்தான்; கொலைகாரனை ஞானியாக்குவதும் மனம்தான்.

அது நோக்கிச் செல்லும் தடங்களின் அனுபவத்தைப் பெற்றுப் பேதலிக்கிறது; அப்போதுதான் அறிவு வேலை செய்கிறது.

எந்த அனுபவங்களையும் கொண்டுவருவது மனம்தான்.

இது சரி, இது தவறு என்று எடை போடக்கூடிய அறிவை, மனத்தின் ராகங்கள் அழித்துவிடுகின்றன.

உடம்பையும் அறிவையும் மனமே ஆக்கிரமித்துக் கொள்வதால், மனத்தின் ஆதிக்கத்திலேயே மனிதன் போகிறான்.

என்ன இந்த மனது?

காலையில் துடிக்கிறது; மதியத்தில் சிரிக்கிறது; மாலையில் ஏங்குகிறது; இரவில் அழுகிறது.

“இன்பமோ துன்பமோ எல்லாம் ஒன்றுதான். நடப்பது நடக்கட்டும்” என்றிருக்க மனம் விடுவதில்லை.

ஒரே சீரான உணர்ச்சிகள் இந்த மனத்துக்குத் தோன்றுவதில்லை.

எவ்வளவு பக்குவப்பட்டாலும் மனத்தின் அலைகளாலேயே சஞ்சரிக்கிறான்.

கடிவாளம் இல்லாத இந்த மனக்குதிரையை அடக்குவது எப்படி?

“வைராக்கியத்தால் முடியும்” என்கிறது கீதை.

அதையே சொல்கிறார் பகவான் ராமகிருஷ்ணர்.

அது என்ன வைராக்கியம்?

உள்ளத்தை ஒருமுகப்படுத்துவது; எந்த நிகழ்ச்சிகளுக்கும் அசைந்து கொடுக்காமல் இருப்பது.

மெழுகு போல் இருக்கும் மனதை மரக்கட்டை போல் ஆக்கிவிடுவது

திருச்சிற்றம்பலம
தொகுப்பு ; வை. பூமாலை, சுந்தரபாண்டியம்

இரத்த சர்க்கரையின் அளவை சீராக்க

Standard

கெல்த் டிப்ஸ்

30 நாட்களில் இரத்த சர்க்கரையின் அளவை சீராக்க உதவும் உணவுகள்!!!

இந்தியாவில் ஏராளமான மக்கள் நீரிழிவு என்னும் சர்க்கரை நோயினால் கஷ்டப்படுகிறார்கள். இப்பிரச்சனைக்கு பரம்பரை மட்டுமின்றி உணவுப் பழக்கங்களில் ஏற்பட்ட மாற்றமும் முக்கிய காரணமாகும். ஒருவருக்கு நீரிழிவு வந்துவிட்டால், அவர் எந்த ஒரு உணவையும் யோசிக்காமல் சாப்பிட முடியாது.  சர்க்கரையை நோயை வீட்டிலேயே குணப்படுத்த உதவும் சில வீட்டு சிகிச்சைகள்!!! ஏனெனில் சில உணவுகள் இரத்த சர்க்கரை அளவை அதிகரித்துவிடும். எனவே கவனமாக இருக்க வேண்டியது அவசியம். நீரிழிவு பிரச்சனைக்கு நிறைய தீர்வுகள் உள்ளன. அதில் உணவுகளும் ஒன்று. உங்களுக்கு சர்க்கரை நோய் உள்ளது என்பதை சுட்டிக் காட்டும் அறிகுறிகள்!!! உணவுகளின் மூலம் எந்த ஒரு பிரச்சனைக்கும் தீர்வு காண முடியும். இங்கு நீரிழிவு என்னும் சர்க்கரை நோய்க்கு தீர்வு காண உதவும் உணவுப் பொருட்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. அந்த உணவுப் பொருட்களை தொடர்ந்து உட்கொண்டு வந்தால், 30 நாட்களில் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்பாட்டுடன் வைப்பதோடு, இன்சுலின் அளவையும் சீராகப் பராமரிக்கலாம். சர்க்கரை நோய் உள்ளவர்கள் சர்க்கரையை முற்றிலும் தவிர்க்க வேண்டுமா?

30 நாட்களில் இரத்த சர்க்கரையின் அளவைக் குறைக்க உதவும் உணவுகள்!!!

கேரட் கேரட்டினை தினமும் தவறாமல் உட்கொண்டு வந்தால், அதில் உள்ள பீட்டா கரோட்டீன் இரத்த சர்க்கரை அளவைக் குறைத்து, இன்சுலினை சீராக சுரக்க உதவும்.

மீன் மீனில் உள்ள ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் இன்றியமையாதது. ஏனெனில் இது இன்சுலினை சீராக சுரக்க உதவும். எனவே வாரம் 2 முறை உணவில் மீன் சேர்த்து வருவது, சர்க்கரை நோயாளிகளின் ஆரோக்கியத்திற்கு நல்லது.

ஆலிவ் ஆயில் சர்க்கரை நோய் உள்ளவர்கள் ஆலிவ் ஆயிலை தினமும் உணவில் சேர்ப்பதன் மூலம், அதில் உள்ள நல்ல கொழுப்புக்கள் இன்சுலின் சுரப்பை சீராக்கி, நீரிழிவின் தாக்கத்தில் இருந்து பாதுகாக்கும்.

பிரட் பொதுவாக வெள்ளை பிரட் உடலுக்கு நல்லதல்ல. ஆனால் தானியங்களால் செய்யப்படும் பிரட்டை உணவில் சேர்த்து வந்தால், செரிமானம் மெதுவாக நடைபெறுவதோடு, கலோரிகளும் குறைவாக இருப்பதால், உடல் எடையைக் கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளலாம்.

சிட்ரஸ் பழங்கள் சிட்ரஸ் பழங்களில், ஆரஞ்சு நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. எனவே தினமும் ஒரு ஆரஞ்சு பழத்தை சாப்பிட்டு வந்தால், அதில் உள்ள பைட்டோ நியூட்ரியண்ட்டுகள் நீரிழிவைக் கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ள உதவும்.

பாதாம் பாதாம் நீரிழிவு நோயாளிகளின் நண்பன் எனலாம். ஏனெனில் இதில் உள்ள அதிகப்படியான நார்ச்சத்து மற்றும் புரோட்டீன், அவர்களின் இரத்த சர்க்கரையின் அளவை குறைத்து, இன்சுலின் அளவை சீராகப் பராமரிக்க உதவும். எனவே சர்க்கரை நோயாளிகள் அன்றாடம் சிறிது பாதாமை உட்கொண்டு வருவது நல்லது.

க்ரீன் டீ க்ரீன் டீயில் உள்ள பைட்டோ நியூட்ரியண்ட்டுகளான கேட்டசின்கள் மற்றும் டேனின்கள் இரத்த சர்க்கரையின் அளவை சமநிலையுடன் வைத்துக் கொள்ள உதவும். எனவே தினமும் காலை மற்றும் மாலை என இரு வேளைகளில் க்ரீன் டீ குடிக்கும் பழக்கத்தைக் கொண்டால், நீரிழிவைக் கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளலாம்.

ஆப்பிள் தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டு வந்தால், உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைப்பதோடு, இரத்த சர்க்கரையில் உள்ள ஏற்றத்தாழ்வையும் குறைக்கலாம்.

ஓட்ஸ் சர்க்கரை நோயாளிகள் ஓட்ஸை காலை உணவாக எடுத்து வருவது நல்லது. ஏனெனில் ஓட்ஸ் செரிமான நொதிகளுக்கும், உணவில் உள்ள ஸ்டார்ச்சுக்கும் ஒரு பாலாமாக விளங்கும். எப்படியெனில் ஓட்ஸை உட்கொள்ளும் போது, உணவில் உள்ள கார்போடிஹைட்ரேட்டை மெதுவாக உறிஞ்சி இரத்த சர்க்கரையாக மாற்றும். இதனால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு ஒரே நேரத்தில் அதிகரிப்பது தடுக்கப்படும்.

தொகுப்பு வை.பூமாலை,சுந்தரபாண்டியம்

நன்றி ;கெல்த் டிப்ஸ்

நம் நினைவில் கலைவாணர்

Standard

நம் நினைவில் கலைவாணர் 

கலைவாணரால் எம்.ஜி.ஆர்-ரிடம் ஏற்பட்ட மாற்றம் 

 

செருப்பை வைத்து எம்.ஜி.ஆர்-க்கு கலைவாணர் புகட்டிய பாடம் என்ன? – அழியாத நிகழ்வுகள்!

என்.எஸ்.கிருஷ்ணன் என்ற இவரது இயற் பெயரைவிட “கலைவாணர்” என்றாலே இவரை பெரும்பாலானோருக்கு தெரியும். நகைச்சுவை என்றால் சிரிக்க மட்டுமல்ல சிந்திக்கவும் கூட என்று உணர்த்தியவர். இவரது இந்த தனி பாணி, அக்காலத்து மக்கள் அனைவரையும் ஈர்த்தது. மற்றும் இவர் வள்ளல் குணம் கொண்டவரும் கூட, தன்னிடம் இருப்பதை மற்றவருக்கும் பகிர்ந்து கொடுத்து வாழ்ந்தவர். 

   நகைச்சுவை நடிகர்கள் வாழ்வில் நடந்த நெகிழ வைக்கும் சம்பவங்கள்!!! எம்.ஜி.ஆர். நடிக்க வந்த ஆரம்ப கட்டத்தில் கலைவாணர் அவர்கள் உதவியுள்ளார் மற்றும் நல்ல நண்பராகவும் பொறுப்பாளராகவும் இருந்து கவனித்து கொண்டார். எம்.ஜி. ஆருக்கு ஓர் நல்ல வழிகாட்டி என்று கூட கலைவாணர் அவர்களை கூறலாம்.

எம்.ஜி.ஆர். நடிக்க வந்த ஆரம்ப கட்டத்தில் கலைவாணர் அவர்கள் உதவியுள்ளார் மற்றும் நல்ல நண்பராகவும் பொறுப்பாளராகவும் இருந்து கவனித்து கொண்டார். எம்.ஜி. ஆருக்கு ஓர் நல்ல வழிகாட்டி என்று கூட கலைவாணர் அவர்களை கூறலாம்.

இவர்கள் இருவருக்கு மத்தியில் நடந்த ஓர் நிகழ்வு, எம்.ஜி.ஆர்-க்கு ஓர் நல்ல பாடத்தை கற்பித்தது. அது என்ன நிகழ்வு, அந்த நிகழ்வின் காரணமாக எம்.ஜி.ஆர் அவர்கள் என்ன பாடம் கற்றுக்கொண்டார் என்பதை இனிக் காணலாம்…. 

கலைவாணர் என்.எஸ்.கே அவர்கள் எம்.ஜி.ஆர்-இன் காலணிகளை தைத்துக் கொடுத்த நிகழ்வு!!! 1/10 

கல்கத்தாவில் படப்பிடிப்பு எம்.ஜி.ஆர்-க்கு அது திரையுலகில் ஆரம்ப காலக்கட்டம். ஒரு படப்பிடிப்புக்காக கல்கத்தா சென்று இருந்தார்கள். எம்.ஜி. ஆர்-வும், கலைவாணர் அவர்களும் ஒன்றாக தான் பயணம் செய்துக் கொண்டிருந்தார்கள்.

ஓடையை கடக்க வேண்டிய நிலை ஒருநாள் படப்பிடிப்புக் குழுவினர்கள் ஓர் ஓடையை தாண்டி செல்ல வேண்டிய நிலை நேர்ந்தது. அனைவரும் ஓடையில் இறங்கி, கடக்க ஆரம்பித்தனர், கலைவாணர் உட்பட.

தாவிக் குதித்த எம்.ஜி.ஆர். தனக்குரிய அந்த துடிப்பான முறையில், அனைவரையும் போல ஓடையில் இறங்கி கடக்காமல், அந்த ஆறடி ஓடையை ஒரே தாவில், தாவிக் குதுத்தார் எம்.ஜி.ஆர் அவர்கள்.

செருப்பு அறுந்தது தாவி குதித்த மறு நொடி எம்.ஜி.ஆர் அவர்களது செருப்பு அறுந்துப் போனது. உடனே கலைவாணரிடம், “வாங்கண்ணே ஒரு புது செருப்பு வாங்கி வரலாம்..” என்று கூறியருக்கிறார் எம்.ஜி.ஆர்.

கலைவாணர் மறுப்பு. இன்று வேண்டாம், நேரமாகிவிட்டது, நாளை போய் வாங்கிக்கொண்டு வரலாம் என்று எம்.ஜி.ஆர்-க்கு பதில் அளித்திருக்கிறார் கலைவாணர் அவர்கள்.

மீண்டும் மறுநாள் அழைத்த எம்.ஜி.ஆர். மறுநாள் காலை மீண்டும் கலைவாணரின் அறைக்கு சென்று, “வாங்க போகலாம்..” என்று செருப்பு வாங்க அழைத்திருக்கிறார் எம்.ஜி. ஆர்., அப்போதும், உடன் கிளம்பவில்லை கலைவாணர் அவர்கள். அதற்கு பதிலாக எம்.ஜி.ஆரிடம் ஓர் பார்சல் கொடுத்தார்.

கலைவாணரே தைத்த செருப்பு கலைவாணர் கொடுத்த பார்சலை திறந்த பார்த்த எம்.ஜி.ஆர்-க்கு ஆச்சரியமாக இருந்தது. அதில், அவரது அறுந்த செருப்பு தைத்து வைக்கப்பட்டிருந்தது. உடனே, “என்ன அண்ணே, புது செருப்பு வாங்கலாம்’னு கூப்பிட்டா, பழசையே தரீங்களே” என்று கலைவாணரிடம் வினா எழுப்பினார் எம்.ஜி,.ஆர்., Show Thumbnail

கலைவாணர், எம்.ஜி.ஆர்-க்கு புகட்டிய பாடம் “உங்க அம்மா, உன்னையும், உன் அண்ணனையும், அனுப்பியது பணம் சம்பாதிக்க தான். பழைய செருப்பு நல்லா தான் இருக்கு, அத நானே தைத்து வெச்சுட்டேன். எந்த பொருளாக இருந்தாலும் அதை முழுமையாக பயன்படுத்த வேண்டும்” என்று கூறினாராம் கலைவாணர்.

எம்.ஜி.ஆர்-ரிடம் ஏற்பட்ட மாற்றம் கலைவாணர் கூறிய நாள் முதல் அவர் இறக்கும் தருவாயின் வரையிலும் எந்த பொருளாக இருந்தாலும் அதை முழுமையாக பயன்படுத்தும் பழக்கத்தை பின் தொடர்ந்து வந்தார் எம்.ஜி.ஆர் அவர்கள்.

ஆடம்பரத்தை தவிர்த்த எம்.ஜி.ஆர் மற்றும் இந்த நிகவுக்கு பிறகு, தான் எவ்வளவு உயரத்திற்கு சென்ற போதிலும் கூட ஆடம்பரத்தையும் தவிர்த்தார் எம்.ஜி.ஆர். மற்றும் இந்த நிகழ்வு எம்.ஜி.ஆர்-இன் ஆள் மனதில் அவர் இறக்கும் வரையிலும் பதிந்து இருந்ததாக கூறப்படுகிறது

தொகுப்பு ; வை.பூமாலை,சுந்தரபாண்டியம்

திருமூலரும் திருமந்திரமும் – உபதேசம் 16 இறைவனை அடையும் மார்க்கங்கள்

Standard

திருமூலரும் திருமந்திரமும் – உபதேசம் 16
இறைவனை அடையும் மார்க்கங்கள்
இறைவனுடைய திருவருளை அடைவதற்கு உரிய வழிகள் பற்பல, அவற்றுள் சத்புத்திர மார்க்கம், தாசமார்க்கம், சகமார்க்கம், சன்மார்க்கம் எனும் நான்கு அடங்கும், சத்புத்திர மார்க்கம் என்பது இறைவனை தந்தையாக எண்ணி ஆன்மா புத்திரனாக அமைந்து வழிபடும் வழி ஆகும்,

திருஞானசம்பந்தர் காட்டிய வழிஇதுவே. தாசமார்க்கம் என்பது இறைவனை எசமானனாக் பாவித்து உயிர்கள் பணியாளனாக இருந்து வழிபடும் நெறியாகும்,

இது திருநாவுக்கரசர் காட்டி வழி, சகமார்க்கம் என்பது இறைவன் தன் சகதோழன் என்று கொண்டு சிவனை வழிபடும் வழியாகும், இது சுந்தரரர் காட்டி வழி, சன்மார்க்கம் என்பது இறைவனை ஞான ஆசிரியனாகக் கொண்டு , ஆனமா சீடனாக இருந்து வழிபடும் வழியாகும்,

இது மாணிக்கவாசகர் காட்டிய வழி. இறைவழிபாட்டிற்கு ஆன்மா தியான வகையில் சுத்தி செய்து கொள்ளல் தவம் என்பது காடுகள் இருந்து கொண்டு கனிகளைகளை உண்டு வாழ்தல் மட்டுமன்று.

இறைவனை தியானம் செய்து, கொண்டு தம்மால் எவ்வுயிருக்கும் தீங்கினை செய்யாது இறைவனை தந்தையாகவோ, ஞான ஆசிரியனாகவோ, எஜமானனாகவோ, நட்பின் – பாசத்தின் மிகுதியால்நண்பனாகவோ கொணடு தன்னை அவனுடன் கொணடு தியானித்திருத்தலே இறையருளை பெறும வழிகள் ஆகும்,

இதனை திருமந்திரம் ஐநதாம் தந்திரத்தில் சாதகர்கள் உகந்து பற்றக்கூடிய நெறிகள் பற்றி தெளிவாக கூறப்பட்டுள்ளது.
1) சன்மார்க்கம்:
இது ஒளிநெறி எனப்படும் இதனை மகான் இராமலிங்க அடிகள் இறைவனை ஒளிவடிவமாகவே கண்டார், மன எழுச்சிகளுக்கு இடமளிக்காமல் நிலைத்த சித்தத்துடன் சிவயோகத்திருக்க வேண்டும், என்கிறார் திருமூலர்,

சைவப் பெருமைத் தனிநாயகன் நந்தி
உய்ய வகுத்த குருநெறி ஒன்று உண்டு
தெய்வச் சிவ நெறி சன்மார்க்கம் சேர்ந்து உய்ய
வையத் துள்ளார்க்கு வகுத்து வைத்தானே.
சைவ நெறியை சிவனே அமைத்து தந்தான் என்கிறது பாடல்.

ஆன்மாக்கள் ஈடேற வேண்டும் என்பதற்காகவே இந்த ஒளிநெறியை இறைவன் ஏற்படுத்தினான் இதுவே தெய்வச் சிவநெறி சன்மார்க்கம் என்பது, தன்னுடைய சரீரமல்ல தான் உணர்ந்த ஞானியர் பற்றும் நெறியிது.

சிவனது வியாபகத்தை அறியாதவர் மனத் தெளிவு பெறாதவராவர், தெளிவில்லாத காரணத்தால் அவர்கள் சீவனது வியாபகத்தையும அறியமாட்டார்கள், சீவனை அறிந்தாலதான் சிவத்தை அறியமுடியும்,
ஐம்மலங்களாலும் நீங்கப்பெற்ற ஆன்மா சிவம் ஆகும், தன்னிலை மறந்து சிவனாதல் சன்மார்க்கம் பாடல்: தெளிவறியாதார் சிவனை அறியார்……………
ஆணவத்தால் ஏற்படும் தன் முனைப்பும் பாசமும் நீக்கி, முழுமுதற் கடவுளாகிய சிவத்துடன் கூட்டுவிப்பது சன்மார்க்கம், மெய்பொருளுடன் ஒன்றியிருத்ற் கேதுவாய் கனியாத மனத்தை கனிய வைக்கிற மார்க்கமிது, சிவத்தை அறியும் ஞானம் சன்மார்க்கம் என்கிற சாதனம் ஆகும்,

2) சகமார்க்கம்:
இது தோழமை நெறி,, இந்த சாதனம் வீடு பேற்றை யும் சித்தியையும் தருவதாகும், சகமார்க்கத்தில் நிட்டையில் இருப்பார்க்கு அவர்தம் உள்ளத்தில் பரத்த உலகங்கள் காணப்டும், அது போல் உள்ளொளியாகிய பேரோளி தோன்றும், அவ்வொளியில் சிவமும் சக்தியும் உண்டு.

சித்தர்கள் விரும்பி மேற்கொள்ளும நெறியிது, சமயக்குறவர்கள் நால்வரில் சுந்தரர் பின்பற்றி இறைவனிடம் அடைந்த வழி, ஆறு ஆதாரங்களையும் திருவருள் துணையால் கண்டு மேல்நோக்குதல் நாடி சுத்திகளாகும், அதனால் அகரம் முதலான பதினாறு கலைகளில் விளங்கும் ஆகாயமும் அதில் விளங்கும் ஒளியும் காணற்காகும்,

ஆன்மாவின் ஐம்புலங்களும் ஐம்பொறிகளும் புத்தியும்தம்முடைய இயல்பான கீழே இழுக்கும் தனமமையை விட்டு நிற்பதே சகமார்க்கம்,
பொறிகளை அடக்கும் யோகியின் மனதில் சிவன் வந்து பொருந்துவான்,
3) சற்புத்திரமார்க்கம்:
மகன் தந்தைக்கு செய்யும் தொண்டுபோல் பூசனைகள் செய்வது – கிரியை நெறி. சற்புத்திர மார்க்கம் எட்டு உறுப்புகளை கொண்டது

அவை:
1, பூசை செய்தல், 2,, பாராயணம் செய்தல், 3. இறைவனை போற்றித் துதித்தல், 4, மந்திரஸ்மரணை, 5, தவ ஒழுக்கம், 6, உண்மை பேசுதல், 7. காமம் குரோதம் கோபம், மோகம் மதம், மாற்சரியம் என்கிற ஆறு பகைகளை நீக்குதல், 8. அன்புடன் அம்ச பாவனை மேற் கொள்ளல் , இவற்றை சற்புத்திரமார்க்கத்தின் இயல்புகள் எனலாம்,
பாடல் : பூசித்தல,, வாசித்தல், போற்றல்….
திருமூலர் கூறுகிறார் நான் நின்று தொழுவேன் எம்பிரானை நாளும் தொழுதபடி இருப்பேன் நீங்களும் அவனை மலர் கொண்டு வணங்குங்கள் சிவபெருமான் தன்னை தொழுவார் சிந்தையில் தோன்றி நிற்பார் என்று இந்த பாடலில் கூறுகிறார், பாடல்: நின்று தொழுவன், கிடந்து எம்பிரான் தன்னை……
4) தாசமார்க்கம்:
திருக்கோவில் சென்று தொணடு செய்யும் நெறி, கோவில்களில் உழவாரப்பணி செய்து முத்தி பெறுதல்
கோயிலில் நல்ல விளக்கினை ஏற்றுதல், பூக்கொய்தல், அன்போடு மெழுகுதல், திருவலகு இடுதல், இறைவனை வாழ்த்துதல், பூசைக்காலங்களில் மணிகளை ஒலிக்க செய்தல், திருமஞ்சன நீர் முதலியன கொணர்தல் இவை தாசமார்க்கப்பணிகள் என்கிறது திருமந்திரம்
தெய்வம் ஒன்றென்றியிருப்பதே இவரகளின் கொள்கை, தங்களுக்கு எதில் பற்று இருக்கிறதோ அதை ம்ட்டுமே இவர்கள் விரும்பி வழிபடுகிறவர்கள்,
சிவன் ஆயிரம் திருநாமம் கூறி வழிபடும் தேவர்கள் பக்கம் திரும்பாமல், தன் திருவடியை சிந்தையில் இருத்தி தன்னை கண்ணெனப் போற்றும் அடியார்க்கு பேரன்புடன் வெளிப்பட்டு அருள்கிறான் என்கிறார் திருமூலர், இறைவனை அன்புடன் இடைவிடாது சிந்தித்திருங்கள் அன்புக்கு ஆட்படுவான் நீலகண்டன்
தென்னாடுடைய சிவனே போற்றி ! என்னாட்டவற்கும் இறைவா போற்றி
திருச்சிற்றமபலம் – ஓம் நமசிவாய ஓம்

மாணிக்கவாசகர் வரலாறு

Standard

மாணிக்கவாசகர் வரலாறு

     “திருவாசகம் அருளிய மாணிக்க வாசகர்

       திருவாசகத்துக்கு உருகாதார் ஒருவாசகத்துக்கும் உருகார் “

               

அம்மையே அப்பா! ஒப்பிலா மணியே!

அன்பினில் விளைந்த ஆரமுதே!

பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்

புழுத்தலைப் புலையனேன் தனக்குச்

செம்மையே ஆய சிவபதம் அளித்த

செல்வமே! சிவபெருமானே!

இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்

எங்கெழுந்தருளுவதினியே!

   மாணிக்கவாசகரின் மணிமொழிகள் திருவாசகத்தின் தேன் துளிகள்.

         

வான்கலந்த மாணிக்க வாசகநின் வாசகத்தைநான்

கலந்து பாடுங்கால் நற்கருப்பஞ் சாற்றினிலே தேன்கலந்து

பால்கலந்து செழுங்கனித்தீஞ்சுவை கலந்தென்ஊன்கலந்து

உயிர்கலந்து உவட்டாமல் இனிப்பதுவே” –

                                                                                                  வள்ளலார்

         மாணிக்கவாசகர் சைவ சமயக் குரவர்கள் நால்வருள் ஒருவர். சிவனடியார்கள் பலர் இருந்தாலும் சிவனுக்கு மிக நெருக்கமானவர்களுள் முக்கியமானவர்.இவர் பாண்டிவள நாட்டில் வைகை ஆற்றங்கரையிலுள்ள திருவாதவூர் என்னும் ஊரில் அமாத்தியர் மரபில் சம்புபாத சரிதருக்கும், சிவஞானவதிக்கும் மகனாகப் பிறந்தார். இவருக்கு பெற்றோர் இட்ட பெயர் வாதவூரர் என்பதாகும். இவர் 9ம் நூற்றாண்டைச் சார்ந்தவர். பதினாறு ஆண்டுகள் நிரம்புமுன் இவர் கல்வி, கேள்வி, ஒழுக்கம், அறிவு, ஆற்றல் இவற்றில் சிறந்து விளங்கினார். இவர் வேத வித்தகர். நமசிவாய என்னும் ஐந்தெழுத்து மந்திரத்தை, எப்பொழுதும் கூறிக் கொண்டிருப்பார். 

இவரது அறிவாற்றலைக் கேள்விப்பட்ட மன்னன் அரிமர்த்தன பாண்டியன், இவரை வரவழைத்து அமைச்சர் பதவியை அளித்து தென்னவன் பிரமராயன் என்ற பட்டத்தையும் அளித்தான். உயர்ந்த பதவி, செல்வம் அனைத்தும் இருந்தும் இவை வாழ்வின் இறுதி நோக்கமல்ல என்பதை உணர்ந்து சைவ சித்தாந்தத்தை ஆராய்ந்து சிவ வழிபாட்டை பின்பற்றினார். ஒருசமயம், சோழநாட்டில் நல்ல குதிரைகள் வந்திருக்கின்றன என்று கேள்விப்பட்ட மன்னன் வாதவூராரை குதிரைகள் வாங்கி வரும்படி பணித்தான். அதற்குத் தேவையான பொன்னைக் களஞ்சியத்தில் இருந்து எடுத்துக் கொண்டு படைவீரர்களுடன் புறப்பட்டார். இதைத் தான் எதிர்பார்த்தேன் என்பது போல, சிவபெருமான் தன் திருவிளையாடலை நிகழ்த்த ஆரம்பித்து விட்டார். அவர் ஒரு குருவைப் போல வேடம் பூண்டு திருப்பெருந்துறை என்னும் தலத்தில் போய் ஒரு குருந்த மரத்தடியில் அமர்ந்து கொண்டார். திருப்பெருந்துறையை அடைந்து விட்ட வாதவூரார் அங்கேயே தங்கும் படி தன் படையினருக்கு உத்தரவிட்டார். இங்குள்ள ஆத்மநாதர் கோயிலுக்குள் சென்றார்.

 இந்தக் கோயிலில் ஒரு விசேஷம் என்னவென்றால், இங்கு மூலஸ்தானத்தில் லிங்கம் கிடையாது. ஆண்டவன் உருவமின்றி இருக்கிறான் என்பது இங்கு தத்துவம். ஆவுடையார் மட்டும் இருக்கும். மேலே லிங்கம் இருக்காது. லிங்கம் இருக்க வேண்டிய இடத்தில், அடையாளம் தெரிவதற்காக ஒரு குவளையை வைத்திருப்பார்கள். அங்குள்ள புஷ்கரணியில் நீராடி, உடலெங்கும் வெண்ணீறு பூசி, சிவப்பழம் போல் காட்சியளித்த வாதவூரார், கோயிலுக்குள் சென்று உருவமற்ற இறைவனை, மனதுக்குள் உருவமாக்கி உருகி உருகி வணங்கினார்.

பின்னர் பிரகாரத்தை வலம் வந்தார். பிரகாரத்திலுள்ள குருந்தமரத்தடியில் தெட்சிணாமூர்த்தியாய் அமர்ந்திருந்த சடை தாங்கிய சிவத்தொண்டரைக் கண்டார். அவர் முன் விழுந்து வணங்கி பாமாலை பாடினார். அவர் தான் சிவம் என்று வாதவூராருக்கு உறுதியாகத் தெரிந்தது. அதற்கேற்றாற் போல், தன் திருவடியைத் தூக்கிய சிவன், தன் முன்னால் பணிந்து விழுந்து கிடந்த வாதவூராரின் சிரசில் வைத்துத தீட்சை வழங்கினார். 

அவரது திருவடி பட்டதோ இல்லையோ, வாதவூரார் மெய் சிலிர்த்து பாடல்கள் பாடத் தொடங்கினார். அவரது பாடல்களைக் கேட்டு இறைவன் உருகிப் போனார். அப்பா! நீ செந்தமிழால் என்னைத் தாலாட்டினாய். ஒவ்வொரு வார்த்தையையும் முத்தென்பேன்… இல்லையில்லை… மாணிக்கமென்று தான் சொல்ல வேண்டும். நீ மாணிக்கவாசகனப்பா… மாணிக்கவாசகன், என்றார் பெருமான். அன்றுமுதல் வாதவூரார் மாணிக்கவாசகர் ஆகி விட்டார். 

மாணிக்கவாசகருக்கு மீண்டும் ஆசியளித்து விட்டு, சிவன் மறைந்துவிட்டார். சிவன் தனக்கு காட்சி தந்த அந்த ஊரிலேயே தங்கி சிவகைங்கர்யம்செய்ய மாணிக்கவாசகர் முடிவு செய்தார். படையினரை அழைத்தார். குதிரை வாங்குவதற்கான ஏற்பாடுகளை நான் செய்து விட்டேன். குதிரைகளுடன் நான் ஆடிமாதம் மதுரைக்கு வருவதாக மன்னரிடம் சொல்லுங்கள். நீங்கள் எல்லாரும் இப்போது ஊருக்கு கிளம்பலாம், என்றார். படையினரும், அமைச்சரின் கட்டளையை ஏற்று ஊருக்குப் புறப்பட்டனர். பின், தான் கொண்டு வந்த பணத்தைக் கொண்டு கோயிலைத் திருப்பணி செய்து கும்பாபிஷேகம் நடத்தினார். கையில் இருந்த செல்வமும் வேகமாகக் கரைந்தது. இதனிடையே ஆடி பிறந்துவிட்டது. குதிரை வாங்க வந்த ஞாபகமே மாணிக்கவாசகருக்கு மறந்து போனது. அவர் எப்போதும் சிவாயநம..சிவாயநம என உச்சரித்தபடியே இருந்தார்.

பாண்டியமன்னன், தன் அமைச்சரின் வரவை எதிர்நோக்கிக் காத்திருந்தான். திருப்பெருந்துறையில் அவர் தங்கியிருக்கிறார் என்பதை ஏற்கனவே வந்த படைவீரர்கள் மூலம் தெரிந்திருந்த அவன், அவருக்கு ஒரு வீரன் மூலமாக ஓலை அனுப்பினான். ஓலையைப் படித்த பிறகு தான், அவருக்கு பழைய நினைவே திரும்பியது. நேராக ஆத்மநாதர் சன்னதிக்கு ஓடினார். ஐயனே! மன்னன் என்னை நம்பி, குதிரை வாங்க அனுப்பினான். நானோ, உன் திருப்பணிக்கென செல்வம் அனைத்தையும் செலவிட்டேன். இப்போது, குதிரைகளை அங்கு கொண்டு சென்றாக வேண்டுமே! நீ தான் வழிகாட்ட வேண்டும் என்று இறைஞ்சினார். அப்போது அசரீரி ஒலித்தது. 

கவலைப்படாதே மாணிக்கவாசகா! விரைவில் குதிரைகளுடன் வருவதாக பதில் ஓலை அனுப்பு. மற்றதை நான் பார்த்துக் கொள்கிறேன், என்றது அக்குரல். இறைவனின் குரல் கேட்ட மாணிக்கவாசகர், அவர் சொன்னபடியே மதுரைக்கு குதிரைகளுடன் வருவதாகப் பதில் ஓலை அனுப்பினார். அரிமர்த்தன பாண்டியனும் ஓலையைப் படித்து மகிழ்ந்தான். மன்னன் குறிப்பிட்டிருந்த காலம் நெருங்கியது. குதிரைகள் எப்படி வரும் என்ற கவலையில் இருந்த மாணிக்கவாசகரின் கனவில், மாணிக்கவாசகா! நீ உடனே கிளம்பு. நான் குதிரைகளுடன் வருகிறேன், என்றார். இறைவனை வேண்டி மாணிக்கவாசகர் பாண்டியநாட்டுக்கு கிளம்பினார். அரண்மனைக்குச் சென்ற மாணிக்கவாசகரிடம், அமைச்சரே! குதிரைகள் எங்கே? எத்தனை குதிரை வாங்கினீர்கள்? என்று கேட்ட மன்னனிடம்,அரசே! தாங்கள் இதுவரை பார்த்திராத குதிரை வகைகள் வரிசையாக வந்து சேரும், என்று பதிலளித்தார் மாணிக்கவாசகர். 

நீண்டநாட்களாகியும் குதிரைகள் வராததால் மன்னனுக்கு சந்தேகம் ஏற்பட்டு, நம்மை ஏமாற்றிய இவனைச் சிறையில் அடைத்து சித்ரவதை செய்யுங்கள், என ஆணையிட்டான். காவலர்கள் அவர் முதுகில் பெரிய பாறாங்கற்களை ஏற்றி கொடுமைபடுத்தினர். அரசுப் பணத்தைக் கொள்ளையடித்ததாக ஒப்புக்கொள்ளாவிட்டால் மறுநாள் தண்டனை அதிகரிக்கும் என்று எச்சரித்து சென்றனர். இதற்குள் மன்னன் விதித்த கெடு காலமான ஆடி முடிந்து ஆவணி பிறந்துவிட்டது. அம்மாதத்தில் வரும் மூலம் நட்சத்திர நாளன்று சிவபெருமான் நந்தீஸ்வரரை அழைத்தார். நந்தி! என் பக்தன் மாணிக்கவாசகன், குதிரை வாங்கித்தராத குற்றத்திற்காக பாண்டியநாட்டு சிறையில் அவதிப்படுகிறான். நீயும், நம் பூதகணத்தவர்களும் காட்டிலுள்ள நரிகளை குதிரைகளாக்கி அங்கு கொண்டு செல்லுங்கள். நான் குதிரை வீரனாக உங்களுடன் வருவேன், என்றார். நந்தீஸ்வரரும் மகிழ்ச்சியுடன் அவ்வாறே செய்தார். 

 ஆயிரக்கணக்கான குதிரைகள் மதுரை நகருக்குள் அணிவகுத்து வந்தது பற்றி மன்னனுக்கு தகவல் சென்றது. அந்த அழகான, விலைமதிக்க முடியாத குதிரைகளைக் கண்டு மன்னன் ஆச்சரியப்பட்டான். அன்று இரவே அந்த குதிரைகள் அனைத்தும் நரிகளாகி ஊளையிட்டன. தன்னை ஏமாற்றி விட்ட மாணிக்கவாசகரை சுடுமணலில் நிற்க வைத்தனர். தூரத்தில் தெரிந்த மீனாட்சியம்மன் கோபுரத்தைப் பார்த்து, இறைவா! இதென்ன சோதனை! குதிரைகளை நரிகளாக்கிய மர்மம் என்ன? இத்தகைய கொடுமைக்கு ஏன் என்னை ஆளாக்கினாய்? என்று கண்ணீர் விட்டார். சுடுமணல் நிறைந்து கிடந்த அந்த ஆற்றில் மழையே பெய்யாமல் திடீரென வெள்ளம் பெருகி வந்தது. காவலர்கள் அடித்து பிடித்துக் கொண்டு கரைக்கு ஓடினர். ஆனால், மாணிக்கவாசகரைக் கட்டியிருந்த கற்கள் உடைந்தன. அவர் எழுந்தார். அவர் நின்ற பகுதியில் மட்டும் வெள்ளம் அவரது பாதங்களை நனைத்துக்கொண்டு மூழ்கடிக்காமல் ஓடியது. சற்றுநேரத்தில் வெள்ளத்தின் அளவு மேலும் அதிகரித்து கரை உடைத்தது.

மாணிக்கவாசகர் இருந்த இடத்தை விட்டு அசையவில்லை. எம்பெருமானைப் புகழ்ந்து பாடியபடி குளிர்ந்த நீரில் நடப்பது நடக்கட்டுமென நின்றார். வைகை நதியின் வெள்ளப் பெருக்கு மதுரை நகரை அலைக்கழித்தது. வீட்டுக்கு ஒருவர் கரையை அடைக்கும் பணிக்கு வரவேண்டுமென முரசறைந்து அறிவிக்கப்பட்டது. மதுரையில் வந்தி என்னும் மூதாட்டி பிட்டு விற்று பிழைப்பவள். அவள் தினமும் முதல் பிட்டை சுந்தரேஸ்வரருக்கு நைவேத்யம் செய்வாள். அதை சிவனடியார் ஒருவருக்கு பிரசாதமாகக் கொடுத்து விடுவாள். வந்திக்கிழவிக்கும் கரையை அடைக்கும் பணியின் ஒரு பகுதி தரப்பட்டது. கூலிக்கு ஆள் தேடினாள். சுந்தரேஸ்வரப் பெருமான் தனக்கு தினமும் பிட்டிட்டதுடன் தர்மமும் செய்து வணங்கிய அந்த பெருமூதாட்டிக்கு உதவி செய்ய முடிவெடுத்து கூலி ஆள் போல பாட்டி முன் வந்து நின்றார். 

 
 

சர்வலோக நாயகனான இறைவன் மண் சுமக்க வந்த காட்சியை திருவாதவூரடிகள் புராணம் (மண்சுமந்த சருக்கம் 29)

ஆடையும் துணிந்த சீரையாக்கியே கூலியாளாய்

கூடையும் தலைமேல் கொண்டு கொட்டுடைத் தோளராகிப்

பீடை கொண்டயர்வாள் காணப் பெரும்பசியுடையார் போல

வேடைகொண்டொல்லை வந்தார் வேண்டிய வடிவம் கொள்வார்

என்று விவரிக்கிறது.

பாட்டி! உனக்கு பதிலாக நான் கரையை அடைக்கிறேன், பதிலுக்கு நீ எனக்கு பிட்டு மட்டும் கொடுத்தால் போதும் என்றார். பாட்டியும் ஒத்துக் கொண்டாள். பின் ஒழுங்காக பணி செய்யாமல், மண்ணை வெட்டுவது போலவும், பாரம் தாங்காமல் அதே இடத்தில் கூடையை கீழே தவற விட்டது போலவும் நடித்தார். அப்போது அரிமர்த்தனபாண்டியனே பணிகளைப் பார்வையிட அங்கு வந்ததைக் கண்ட சுந்தரேஸ்வரர், ஒரு மரத்தடிக்குச் சென்று, உறங்குவது போல பாசாங்கு செய்தார். யாரோ ஒருவன் வேலை செய்யாமல், தூங்குவதைக் கவனித்து விட்ட மன்னன், அங்கு வந்து அவரை பிரம்பால் அடித்தான். அந்த அடி உலக உயிர்கள் அனைத்தின் மீதும் விழுந்தது. உடனே அந்த கூலியாள் ஒரு கூடை மண்ணைக் கரையில் கொட்டியதும் வெள்ளம் வற்றிவிட்டது. 

இதைக் கண்ட மன்னன் அதிசயித்தான். இந்த அதிசயம் நிகழக்காரணமாய் இருந்த மூதாட்டி வந்தியைக் காணச் சென்ற போது, வானில் இருந்து புஷ்பக விமானத்தில் வந்த சிவகணங்கள் தங்களை அழைத்து வரும்படி சிவபெருமானே உத்தரவிட்டார், தாங்கள் எங்களுடன் வாருங்கள், என்று அழைத்துச்சென்றனர். அவளும் மகிழ்வுடன் சிவலோகத்துக்குப் பயணமானாள். உடனே பாண்டியன், எனக்கெதற்கு இந்த அரசாங்கம்? இதனால், என்ன பலன் கண்டேன். என புலம்பினான். அப்போது அசரிரீ ஒலித்தது. அரிமர்த்தனா! திருவாதவூராரின் பொருட்டு இந்த லீலைகளைப் புரிந்தது நானே! என்றார். தனது தவறை உணர்ந்து அவரிடம் மன்னிப்பு கேட்ட மன்னன், மீண்டும் அமைச்சர் பொறுப்பேற்க வேண்டினான்.

 மாணிக்கவாசகரோ அதை ஏற்காமல் அவனை ஆசிர்வதித்து விட்டு, தில்லையம்பலமாகிய சிதம்பரத்துக்குச் சென்று விட்டார். 

அங்கு வேதியர் போல அமர்ந்திருந்த சிவபெருமான், மாணிக்கவாசகர் பாடப்பாட ஓலைச்சுவடியில் எழுதத் தொடங்கினார். எழுதி முடித்த சிவபெருமான் அந்த ஓலைச்சுவடியின் மேல் மணிவாசகன் சொன்ன திருவாசகத்தை எழுதியது அழகிய திருச்சிற்றம்பலமுடையான் என்று கையொப்பமிட்டு சிதம்பரம் கனகசபையில் வைத்து விட்டு மறைந்து விட்டார்.

 அப்போது தான் மாணிக்கவாசகருக்கு தான் கூறிய திருவாசகத்தை எழுதியது சிவபெருமான் என்பது தெரியவந்தது. பன்னிரு திருமுறைகளில் 8ம் திருமுறை மாணிக்கவாசகரால் பாடப்பட்ட திருவாசகமும், திருக்கோவையாரும் ஆகும்.ஞானநெறியைப் பின்பற்றிய இவர் 32 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்து ஆனி மாதம் மகம் நட்சத்திரத்தில் சிவனடி சேர்ந்தார்

திருவாசகம் பாடிய மாணிக்கவாசகர், சிவன் கோயில்களில் தேவாரம் பாடிய மூவருடன் இருப்பார். இவருக்கு தனிச் சன்னதி அமைந்த சில கோயில்கள்.

1. ஆவுடையார்கோயில் (புதுக்கோட்டை மாவட்டம் திருப்பெருந்துறை) ஆத்மநாதர் கோயில் – மாணிக்கவாசகருக்கு சிவன் குருவாக இருந்து உபதேசித்த தலம்.

2. மதுரை திருவாதவூர் – மாணிக்கவாசகர் பிறந்த ஊர்

3. சின்னமனூர் (தேனி மாவட்டம்) – தமிழ் மொழியின் பெருமையை உணர்த்தும் பொருட்டு அமைக்கப்பட்ட கோயில். இங்கு மாணிக்கவாசகரே மூலவர். சிவன், அம்பாள் ஆகியோர் பரிவார மூர்த்திகளாக இருக்கின்றனர்.

4. உத்தரகோசமங்கை மங்களநாதர் – சிவன், மாணிக்கவாசகருக்கு ஆகமங்களை உபதேசித்த தலம்.

5. சிதம்பரம் நடராஜர் – மாணிக்கவாசகர் சொல்லச்சொல்ல இறைவனே, திருவாசகத்தை எழுதிய திருத்தலம். சிவனுடன் மாணிக்கவாசகர் ஐக்கியமான இங்கு, தில்லைக்காளி கோயில் அருகில் இவருக்கு தனிச்சன்னதி இருக்கிறது.

திருச்சிற்றம்பலம்

ஓம் நமசிவாய ஓம்

தொகுப்பு ; வை.பூமாலை, சுந்தரபாண்டியம்