சிவ சக்தியின் தத்துவங்கள்

Standard

சிவ சக்தியின் தத்துவங்கள்
உலகம், உயிர்கள் என்று அனைத்துமே ஒரு மூலப்பொருளில் இருந்தே தோன்றியது. உலகப்பிலானே எல்லா உலகமுடைய ஒரு மூர்த்தி திருவாய்மொழி, அதுவே பரப்பிரம்மம் எனப்பட்டது. அது ஆன், பெண், என்ற பலவேறுபாடு அற்றது. “ஆணல்லன், பெண்ல்லள்” (திருவாய் மொழி 2-5-10), அந்தப் பிரப்பிரம்மமே சிவம் என்று பிறகு சுட்டப்பட்டது. அந்தப் பரப்பிரம்மம் உலகசிருஸ்டியை நினைத்து ஆண, பெண் என்று தன்னையே பிறப்பித்தது, “பெண்ணாகி ஆணாய்” – திருவாசகம்
சிவம் என்ற மூலப்பொருள் சிவன் ஆனது. சக்தி பெண்வடிவமாக மாறியது, இந்த நிலையில் சிவத்துள் சக்தியும், சக்தியுள் சிவமும் ஒன்றை ஒன்று மருவி உலகின் படைப்பு ஆரம்பம் ஆனது. இந்த உலகம் முதல் அனைத்துமே சிவ-சக்தியின் தத்துவமே ஆகும், (கீதை 14-3-4) சிவசக்தி ஐக்கியத்தை குறிக்கும், அர்த்த நாரீசுவர வடிவம் சிவனின் ஒருகூறு. இதனை மாதொரு பிரான் – என்கிறார் திருவாசகம் மாணிக்கவாசகர் பெருமானார். சிவ சக்தியின் தத்துவத்தில் சிவனிடத்தில் சக்தி சமபங்காக அடங்கியுள்ளதாக காட்டுகிறது. இதைப் போலவே சக்தி தத்துவத்தில் யோகமாயைத் தத்துவம் , சக்திக்குள் சிவம் போலவே சக்தி தத்துவத்தில் யோகமாயைத் தத்துவம் சக்திக்குள் சிவன் அடங்கிய தத்துவமாக குறிக்கிறது. இதனை யோகமளை என்று குறிப்பது வழக்கம்.
“சிவ” என்ற சொல் சிவனையும், சக்தியையும் குறிக்கும், “சி” என்பது சிவனையும் “வ” என்பது சக்திையும் குறிக்கும், சி வலிமையானது, வ மென்மையானது. சிவ சொரூபம் அனைத்து பொருட்களிலும் காணப்படும், நமது சமய ஆலயங்களில் ஒரு நீண்ட வெள்ளைக்கோடும் ஒரு நீண்ட சிவப்புக்கோடும் கலந்தவாறு வர்ணம் பூசியிருப்பதை காணலாம் அல்லவா? அது இதன் தத்துவத்தைக் குறிப்பதே ஆகும். சிவம் சக்தி இன்றி உலகமும் உடலும் இல்லை என்பதே இதன் தத்துவம். முதலில் தாவம் பற்றி காண்போம், உலகில் ஒரே வடிவத்தில் ஆண் (சிவம்) இயல்பும், பெண் (சக்தி) இயல்பும் இரண்டுமே சேர்ந்திருக்கின்றன, ஒரே மலரிலும் ஆண்பாகம்,(மகரந்தம்) பெண்பாகம் (சூலகம்)இரண்டுமே கலந்து இருக்கிறது. இவ்விரண்டின் சரிபாதிக் கூட்டுறவால் புதிய விதை உண்டாகிறது, சங்கமங்களுள் ஒவ்வொரு உயிரும், அதனதன் தாய் தந்தையரின் பாதிப்பாதி அம்சத்தைப் பெற்றே உண்டாகிறது. சைத்தன்யம் – ஜடம் ஆகிய இரண்டு தத்துவங்களை உடையது. “உயிர்த்தத்துவம் சிவம், உடல் தத்துவம் சக்தி, உயிரும் , உடலும் சேர்ந்ததே இயற்கையின் திட்டத்தை அமைக்கின்றன என்பார் சுவாமி சித்பவானந்தர்,
ஆலயங்களின் சுவர்களில் மட்டும் வெள்ளையும் சிவப்பும் மாறி இருக்கவில்லையா? இல்லங்களில் இடப்படும் கோலங்களில் கூட வெள்ளைக் கோலத்துடன் காவி என்ற சிவப்பும் கலந்துதானே கோலம் போடுகின்றனர், கோலத்தில் முதலில் இடப்படும் புள்ளிகள் சிவதத்துவம் ஆகும், பிறகு இடப்படும் கோலமும் காவியும் சக்தி தத்துவமாகும்.
நம் உடலில் வெள்ளை அணுக்களும், சிவப்பு அணுக்களும் சேர்ந்ததே நமது உடல் இயக்கம், அதுமட்டுமா ஜீவ (சக்தி) பொருள் வெண்ணிறமான சுக்கிலம் என்பட்டன, பெண்மையில் கருப்பையில் உள்ள சுரோணிதம் சிவப்பு நிறம், இவை இணைந்தால் ஆலயத்தின் கர்ப்பக்கிருகத்தில் பரப்பரும்மம் உண்டாகிறது, (தாயின் கருவறையிலும் இதுதானே)
இல்லறத்தில் கணவன் மனைவி இணைந்தால் ஒரு தாயின் கர்ப்பக்கிருகத்தில் (கர்ப்பத்தில்) ஆணு மற்ற பெண்ணுமற்ற பரப்பிரம்மம் உண்டாகிறது. பிறகுதான் ஆண் – பெண் என்ற நிலையை பெறுகிறது. சிவம் – சக்தி என்ற இரண்டு (இவையின் ) வடிவமே நம் உடலின் உறுப்புகள் ஆகும்.

நமது உடலில் ( சிவம் – உயிர், சக்தி – உடல்) சிவசக்தி செயல்கள் இரண்டு
மூளை இரண்டு – பெருமூளை, சிறுமூளை
கண் இரண்டு – இடது, வலது
காது இரண்டு
இமை இரண்டு – மேல் இமை, கீழ் இமை
மூக்கு இரண்டு வலது, இடது
கண்ணம் இரண்டு – வலது, இடது
வாய் இரண்டு – மேல் வாய் கீழ்வாய்
பல்வரிசை இரண்டு – மேல், கீழ் வரிசை
நாக்கு இரண்டு – வெளிநாக்கு உள்நாக்கு
தொண்டை குழாய் இரண்டு – உணவுக்கு, காற்றுக்கு
நுரையீரல் இரண்டு – வலது இடது
குடல் 2 – பெருங்குடல் , சிறுகுடல்
கால்கள் இரண்டு – வலது, இடது
தோல் இரண்டு – அகத்தோல் புறத்தோல்
குருதி – வெள்ளை, சிவப்பு
இதயம் 2 – வலது ஆரிக்கள், இடது ஆரிக்கள்

இடது புறம் சக்தியின் இருப்பிடம், அதில் இருதயம் மண்ணீரல் முதலிய உறுப்புகளும் வலதுபுறத்தில் சிவபெருமானின் இருப்பிடம், இங்கு கல்லீரல், பித்தப்பை, குடல் வால், ஆகிய உறுப்புக்கள் இருப்பது இயற்கை நமக்கு கொடுத்த வரப்பிரசாதம், உடலில் இருக்க வேண்டிய உறுப்புக்ள் அனைத்துமே சரியாக இருந்தால் நாம் ஆரோக்கியமாக இருக்க முடியும், இந்த புவியை கொஞ்சம் நோக்குவோம், தட்பமும், வெப்பமும் சேர்ந்து எங்கும் காணப்படுகிறது. இதுவும் சிவசக்தி தத்துவமாகும் தட்பவெப்ப நிலை
ஒரு மலர் மலராக இருக்க வேண்டும் என்றால் குளிர்ச்சியும், சூடும் சமமாக இருக்க வேண்டும், மலர் வாடினால் குளிர்ச்சி ( சக்தி) குறைந்து விட்டது என்றும், மலர் அழுகிவிட்டால் சூடு (சிவம்) குறைந்துவிட்டது என்றும் அர்த்தம். எனவே சூடு ஆகிய சிவமும், குளிர்ச்சி ஆகிய சக்தியும், ஒன்றையொன்று விட்டுவிடாமல் கலந்து மலரில் இருந்தால்தான் மலர் அழகுடன் இருக்கும், என்பது சிவசக்தி தத்துவம்.
நமது சரீரத்தில் தட்பமும் ( சக்தியும்) வெப்பமும்( சிவனும்) அமைந்திருக்கின்றன, சூடு குறைந்தால் உயிர் உடம்பில் (சக்தியில்) நிலைபெறுவதில்லை. சூடு குறைய சிவமாகிய உயிர் சவமாகிவிடுவார், சூடும் குளிர்ச்சியும் எல்லையற்றிருக்குமானால் அங்கு உயிர்கள் தோன்றுவதில்லை. உதாரணமாக, சூடு (சிவம்) குறைந்த, வடதுருவப்பிரதேசங்களிலும், குளிர்ச்சி (சக்தி) குறைந்த சகாராவிலும் உயிர்கள் இடர்ப்பட்டுத்தான் வாழ்கின்றன, “பேதை ஒரு பால் திருமேனி ஒன்றல்லன்” – திருவாசம் 7-10,
தட்பத்தின் சூக்கும ஆற்றல் சக்தி – வெப்பத்தின் சூக்கும ஆற்றல் சிவம், இந்த இரு பொருள்களும் ஒரே பொருளின் இரு பகுதிகள் ஆகும். உடலில் குளிர்ச்சி அதிகமானால், சளி சம்பந்தமான நோய்களும், சூடு அதிகமானால் சுரம், மஞ்சள் காமாலை, முதலிய நோய்களும் தோன்றும், ஆகவே சக்தியும சிவமும் சமமாக இருப்பதே ஆரோக்கியம் ஆகும்.
“எது ஒன்றுமில்லையோ அதுதான் உலகம்” ” எது உலகமோ அது ஒன்றில்லை” என்பதே சிவசக்தியின் மூலத் தத்துவமாகும், இந்த வாக்கியம் வேதத்தின் சாரம் ஆகும், ஆயிரம் ஆயிரம் செலவு செய்து பலமணி நேரம் உழைத்து ஒரு திருமணம் நடக்கிறது, அதன் சாரன் என்ன? திருமாங்கல்யத்தின் மூன்று முடிச்சுக்களுக்குத்தான், அதை நினைத்துப்பார்த்தால் ஒருசில நிமிட உறவுதான், அந்த சில நிமிட உறவு இல்லை என்றால் உலகம்இல்லை. ஆனால் அதுவே வாழ்க்கையில்லை, சிவமும் சக்தியுமே உலகம் ஆகும். அரிசி – பொருள், உமி – ஒன்றுமில்லை இப்படி இருந்தாலும், அரிசியை விடடு உமி பிரித்துவிட்டால் அரிசியை நிலத்தில இட்டால் முளைப்பதில்லை, உமியும் முளைப்பதில்லை, உமியின் துணைகொண்டு அரிச முளையாகிறது, ஒன்றுக்கும் பற்றாத பூஜ்யத்தை ( சிவத்தை) துணை கொள்வதால் எண் ( சக்தி) வளர்ச்சியடைகின்றது, என்பார் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள். பல மணி நேர உழைப்பின் சாரம் சம்பளமே ஆகும், அது வடிவத்தில் சிறியது,மதிப்பு பெரியது. ஆண் , பெண் சமம்,பெண்ணுக்கு ஆண் சமம், ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுத்து வாழ்வதே வாழ்வின் சாரம்சம், தனித்த நிலையில் சக்தியை வழிபடும் மரபு பண்டைய சைவ உலகில் காணப்படவில்லை. சிவபெருமானின் ஒரு கூறாகவே சக்தியை கொள்வார்கள்.
திருக்கயிலையில் சிவபெருமானின் அருகில் காளையும், பராசக்தியும் அருகில் சிங்கமும் அமர்ந்திருப்பதைக் காணலாம், சிறிது சிந்தித்துப் பார்த்தால் இதில் வினோதம் ஒன்று இருப்பது விளங்கும், அவற்றின் இயல்புகள் ஒன்றுக்கு ஒன்று முரன்பட்டவை, ஒரே உலகில் அவைகள் வாழ்கின்றன அல்லவா?
இது கயிலையில் மட்டுமல்ல, காணும்இடம் எங்கும் இயற்கையில் இதே காட்சிதான், பகல்-இரவு, துன்பம்- இன்பம், உயர்வு-தாழ்வு, தட்பம்-வெப்பம், என்ற சிவசக்தி தத்துவமே உலகம் ஆகும். சிவத்திடம் சக்தியையும், சக்தியிடம் சிவத்தையும், ஒன்றாகவே உள்ள தத்துவத்தை தேவாரம், திருவாசகம், திருமந்திரம், திருப்புகழ், கம்பராமாயணம், மற்றும் பல்வேறு திருமுறைகளில் இன்றும் காண முடிகிறது. ஆகவே நாமும், சிவ -சக்தியை வழிபட்டு தெய்வீக குணங்களை கடைப்பிடித்து ஞான ( சிவ-சக்தி) நிலை அடைவோம்.
திருச்சிற்றம்பலம் – ஒம் நமசிவாயம்
மேலும் பல ஆன்மீகத்தகவலுக்கு
http://vpoompalani05.blogspot.in/
https://vpoompalani05.wordpress.com
http://www.vpoompalani05.weebly.com

Advertisements

சித்தர் போகர்

Standard

பூனையை வேதம் சொல்ல வைத்த சித்தர் போகர்
பழனி முருகன் கோவிலில் உள்ள முருகன் சிலை நவ பாசானத்தால் ஆனது என்று நமக்கெல்லாம் தெரியும், ஆனால் அந்த சிலை யாரால் செய்யப்பட்டது என்பது தெரியாது. சதுரகிரி தலப்புராண நூலில் கூறப்பட்டுள்ள வரலாற்றை படித்துப் பார்த்தால் முருகன் சிலை போகர் என்ற சித்தரால் உருவாக்கப்பட்டது என்பது தெரிகிறது.
சித்தர் போகர், இறந்தவர்களை பிழைக்க வைக்கும் சஞ்சீவினி மந்திரம் அறிந்தவர். உலோகங்களை ரசவாதத்தினால் பொன்னாக்கும் வித்தை அறிந்தவர், திருசெங்கோட்டில் உள்ள அர்த்தநாரீஸ்வர் நவபாசானத்தால் உருவாக்கியவர் போகரே. அவருடைய பூர்வீகம் சீன நாடு. தாய் தந்தையர் சலவைத் தொழிலாளிகள் என்றும் வரலாற்றில் காணலாம். எதனால் அப்படி குறிப்பிட்டு இஇருக்கிறார்கள் என்றால் அவர் எழுதியுள்ள தமிழ் மொழியில் எழுதியிருப்பதை விட சீன மொழியில் எழுதி இருப்பது அதிகம், போகர் எப்படி சித்தர் ஆனார் என்பதைப் பார்ப்போம்.
மேருமலையில் சுற்றி போகர் வந்து கொண்டு இருந்தபோது ஒன்பது சித்தர்கள் ஐயக்கியமாகி இருந்த இடம் கண்ணில் பட்டது, அவர் மனதில் ஏதோ தோன்ற அந்த சமாதிகளின் முன்பு அன்ன ஆகாரமின்றி அமர்ந்து மனதை ஒருநிலைப்படுத்தி தவம் இருந்தார், சில காலம் கழித்து சமாதியில் இருந்து 9 சித்தர்களும் அவருக்கு தரிசனம் கொடுத்து இறந்தவர்களை பிழைக்க வைக்கும் காயகல்ப முறையை உபதேசம் செய்தார்கள்.
இந்த சஞ்சீவி மந்திரத்தை யாரால் மக்களுக்கு நன்மை கிடைக்குமோ அவர்களுக்கு மட்டுமே உபதேசம் செய் என்று கூறி மீண்டும் சமாதியில் ஐயக்கிமாகிவிட்டார்கள். பின் போகர் அங்கிருந்து கிளம்பி சிவலிங்கம் உள்ள தலங்களை தரிசித்து வந்துகொண்டிருந்தார். அடர்ந்த காட்டை கடந்து வரும்போது ஒரு புற்று கண்ணில் பட்டது புற்றின் அருகே சென்றபோது மூச்சுக் காற்று வருவதை உணர்ந்தார். புற்றின் முன்னே ஏன், எதற்கு என்று அறியாமலேயே மனத்தின் கட்டளைப்படி தியானத்தில் அமர்ந்தார். பல நாட்கள் தியான நிலையிலேயே அமர்ந்து இருந்தார். ஒருநாள் காலை பொழுதில் புற்றை உடைத்துக் கொண்டு ஒரு முனிவர் வந்து போகரின் தியானத்தை கலைத்தார். கண்களை கூசச் செய்யும் பிரகாசமான முகத்தையுடைய அந்த முனிவரைப் பார்த்ததும் போகர் வணங்கினார். அந்த முனிவர் ” போகரே உன்னால் மக்களுக்கு நன்மை உண்டாகட்டும்” என்று கூறி அருகே இருந்த மரத்தை காட்டி மரத்திலுள்ள பழங்கள் பழுத்து குலுங்கி இருந்த நிலையைக் காட்டி அந்த பழத்தை சாப்பிட்டால் பசி என்பதே அணுகாது. நீ செய்யும் தவத்திற்கு பெரும் துணையாக இருக்கும் என்று கூறி பேசும் சிலை ஒன்றையும் கொடுத்து விட்டு மீண்டும் புற்றில் அமர்ந்து தியானத்தில் அமர்ந்தார்.
சிலையை கையில் வாங்கிக் கொண்ட போகர் அருகிலுள்ள முனிவர் காட்டிய மரத்தின் பழங்களை எடுத்து சாப்பிட்டார். மனம் மட்டுமல்ல, உடலும் இளமையாக மாறியது. கையில் இருந்த சிலை, இளமையான மாற்ற வைத்த பழத்தின் ரகசியத்தையும், மற்றும பல மூலிகைகளின் ரகசியத்தையும் கூறியது,ஆச்சிரயத்தில் ஆழ்ந்த போகர், சிலையை தரையில் வைத்து விடடு அருகே அமர்ந்தார், அந்த இடத்தில் பள்ளம் ஏற்பட்டு பள்ளத்தில் அந்த சிலை மறைந்தது.
சிவன் சித்தத்தை தெளியவைத்தார், எனறு நினைத்துக் கொண்டு நடக்க ஆரம்பித்தார். அவர் பெரிய சித்தர் என்பதை அறியாமல் எதிரில் வந்த அந்தனர்கள் சிலர் போகரின் கோலத்தைக் கண்டு ஏளனம் செய்தனர், போகரோ அவர்களின் ஏழ்மையை போக்க எண்ணினார், ஞானத்தை உபதேசிக்க வேண்டும்என்று நினைத்தார், உடனே சற்று தூரத்தில் ஒரு பூனை ஒன்று கண்ணில் பட்டது, பூனை அருகே அமர்ந்து வேதத்தை அதன் காதில் ஓதி, பேசும் திறனை கொடுத்தார்.
பூனை வேத மந்திரங்களை வீதியில் அமர்ந்து கூறத் தொடங்கியது. இதைப் பார்த்த அந்தணர்கள் போகர் பித்தனல்ல. சித்தர் என்பதை புரிந்து கொண்டு எங்களை மன்னிக்க வேண்டும் என்று கூறி அவர்கள் போகரை தங்கள் இல்லத்திற்கு அழைத்துச் சென்றனர், அவருக்கு அன்னமிட்டு மகிழ்வித்தனர். மனதில் சந்தோசத்துடன் அவர்கள் வீடுகளில் இருந்த உலோக பொருட்களை ரசவாதத்தினால் தங்கமாக மாற்றினார், அந்தணர்கள் சித்தரின் திறன் கண்டு அதிசயத்தினர். வேதங்களை உபதேசித்து எல்லோரையும் மேன்மையுறச் செய்தார். பழனிமலையில் தவம் செய்யும் போது முருகப் பெருமான் அவருக்கு காட்சி கொடுத்து என்னை விக்ரமாக செய்து இந்த இடத்தில் பிரதிஸ்டை செய் என்று கூறி மறைந்தார். அதன் படி நவபாசானம் என்ற ஒன்பது வித மூலிகை கலவையால் முருகனின் மூல விக்ரகத்தை பிரதிஷ்டை செய்தார். அதன் பின் பழனி மலையிலேயே வாழ்ந்த சித்தர் அங்கேயே ஜீவ சமாதி ஆனார். இன்றும பழனி மலையில் உள்ள கோவிலின் உட்பிரகாரத்தின் தென்மேற்கு மூலையில் சித்தர் போகரின் ஜீவசமாதி உள்ளது. நவக்கிரகங்களில் செவ்வாய் பகவானின் ஆதிக்கம் நிரம்ப பெற்றவர் சித்தர் போகர், செவ்வாய் தோசம் உள்ளவர்கள் செவ்வாய் கிழமைகளில் இவரை வழிபட்டால் செவ்வாய் தோசம் நீங்கி நல்அருள் பெறுவர்.
திருசிற்றம்பலம்
மேலும் பல ஆன்மீகத் தகவலுக்கு
http://vpoompalani05.blogspot.in/
https://vpoompalani05.wordpress.com
http://www.vpoompalani05.weebly.com.

Salem Appa Paithiyam Swamy Guru Poojai on 27/01/2015

Standard

My guru Arulmigu Sri Sadhananda Swamigal

Salem Appa Paithiyam Swamy Guru Poojai 

on 27/01/2015 

Appa Paithiyam Swamy was born in the Zamin family of Karur Fort in the year 1859. In his 16th year, he is said to have left home and gone to Palani. While he was roaming around in the hills of Palani, he is said to have met his Gnana Guru, Sri Azhukku Swamigal of Vettaikaaran pudhur. Together they travelled the length and breadth of India. After Azhukku Swamigal attained Samadhi at Pollachi, Sri Appa Paithiyam Swamigal moved to several places like Tiruvannamalai, Tindivanam, Cuddalore, Pondicherry and finally to Salem where he attained Samadhi in the year 2000 when he was 141 years old.

Why did he come to be known as Appa Paithiyam? Since he was like a father to those who had faith in him, he was lovingly called Appa by his devotees. He often referred to himself as “Paithiyam”( mad…

View original post 372 more words

திருவொற்றியூர் பட்டினத்தார் சித்தர் கோவில் கும்பாபிஷேகம் 26–ந் தேதி

Standard

My guru Arulmigu Sri Sadhananda Swamigal

March uzhavarappani at  pattinathar temple, tiruvottiyur, chennai

திருவொற்றியூர் பட்டினத்தார் சித்தர் கோவில் கும்பாபிஷேகம் 26–ந் தேதி

சென்னை திருவொற்றியூரில் எண்ணூர் விரைவுச்சாலையில், கடற்கரைக்கு மேற்கே அமையப்பெற்ற கோவில் ஸ்ரீபட்டினத்து அடிகள் கோவில் என்று அழைக்கப்படும் பட்டினத்தார் கோவில் 1,100 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இங்குள்ள பழைய ஜீவசமாதியின் மீது கட்டப்பட்டிருந்த கட்டிடம் சேதமடைந்ததால், பழைய கட்டுமானத்தை நீக்கி புதிதாக திருப்பணிகள் நடந்து வருகிறது.

26–ந் தேதி கும்பாபிஷேகம்

விழாவையொட்டி நாளை (வெள்ளிக்கிழமை) காலை 8 மணிக்கு கணபதி ஹோமத்துடன் பூஜைகள் தொடங்குகிறது. தொடர்ந்து நவக்கிரக ஹோமம், கோபூஜை நடக்கிறது. வரும் 24–ந் தேதி காலை 7.30 மணிக்கு சாந்தி ஹோமமும், அன்று மாலை 5 மணிக்கு முதல்கால யாக சாலை பூஜையும் தொடங்குகிறது. 25–ந் தேதி காலை 8 மணிக்கு 2–ம் கால யாகசாலை பூஜையும், அன்று மாலை 6 மணிக்கு 3–ம் கால யாகசாலை பூஜையும் நடக்கிறது.

வரும் 26–ந் தேதி (திங்கட்கிழமை) காலை 5 மணிக்கு 4–ம் கால யாகசாலை பூஜையும், காலை 6 மணி முதல் காலை 7 மணிக்குள் மூலஸ்தானம் ஸ்ரீபட்டினத்தார் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து விசேஷ அபிஷேகமும், இரவு 7 மணிக்கு பட்டினத்தார் திருவீதி உலா நிகழ்ச்சியும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்து வருகின்றனர்.

பட்டினத்தார் வரலாறு

காவிரி பூம்பட்டினத்தில் சிவநேசர்–ஞானகலை தம்பதிகளுக்கு குபேரனே பட்டினத்து அடிகளாக தோன்றினார். திருவெண்காடர் என்ற இளமை பருவத்து பெயருடன் வளர்ந்தார்…

View original post 112 more words

திருமுறைகளில் வாழ்வியல்

Standard

திருமுறைகளில் வாழ்வியல்
இந்த உடம்பும் உலக வாழ்வும் நிலையில்லாதன என்பதை யாவரும் அறிவோம். பலப்பல நூல்களும் இதைச் சொல்கின்றன. பத்தாவது தமிழ்வேதமாகிய திருமந்திரமும் யாக்கை நிலையாமையைப் பற்றி கூறுகின்றது,

ஊரெலாங் கூடி ஒலிக்க அழுதிட்டுப்
பேரினை நீக்கி பிணமென்று பேரிட்டு
சூரையங் காட்டிடைக் கொண்டு போய்ச் சுட்டிட்டு
நீரினில் மூழ்கி நினைப் பொழிந்தார்களே. திருமந்திரம்

நிலையில்லா இந்த உடம்பையும் உலகையும் இறைவர் நமக்கு அளித்துள்ளார் என்றால், அதில் ஒரு நோக்கம் கட்டாயம் இருக்கும், இறைவருடைய செயல் நமக்கு எப்பொழுதும் நன்மையையே அளிக்கும், நிலையில்லா இந்த உடம்பையும் உலகையும்பயன்படுத்தி நிலையான புண்ணியங்களை பெற்றிட வேண்டும். புண்ணியத்தின் பயனாக ஆன்மாக்கள் மேல் நிலை அடையும்,

இன்று கொல் அன்று கொல் என்றுகொல் என்னாது
பின்றையே நின்றது கூற்றம் என்று எண்ணி
ஒருவுமின் தீயவை ஒல்லும் வகையால்
மருவுமின் மாண்டார் அறம்.

இறப்பு இன்றுவரும் நாளைவரும் என்று எண்ணி இருக்க வேண்டாம், எமன் பின்புறத்திலேயே நின்று கொண்டிருக்கின்றார், என்று நினைத்துத் தீய செயல்களை விட்டு விலக வேண்டும், அவரவர் தகுதிக்கு ஏற்ப மாண்புடைய சான்றோர் போற்றிய தருமங்களை செய்ய வேண்டும்.

குந்தி நடந்து குனிந்தொருகை கோலூன்றி
நொந்து இருமி ஏங்கி நுரைத் தேறி – வந்துந்தி
ஐயாறு வாயாறு பாயாமுன் நெஞ்சமே
ஐயாறு வாயால் அழை. ஐடிகள் காடவர்கோன் திருமுறை 11

கோழை (சளி) தொண்டையில் மிகுதியாகி அடைத்து வாய்வழியே வந்து உயிர் உடலைவிட்டு பிரிவதன் முன் திருவையாற்றில் எழுந்தருளியுள்ள சிவபொருமானாரை வழிபட்டு சிவபுண்ணியத்தை பெருக்கிக் கொள்ள வேண்டும் என்கிறார் நாயனார்,

நிலையில்லா இந்த உடலைப் பெற்ற நாம் வாழும்வழி:
எப்போதும் புண்ணியங்களையே செய்தல் வேண்டும்
பாவங்களை செய்யாமலிருக்க வேண்டும்
நல்லவர்களுடன் மட்டுமே சேர வேண்டும்
நல்லவர் அல்லாதவர்களுடன் ஒருபோதும் சேரக்கூடாது
அகந்தை இன்றி இருக்க வேண்டும்
ஆடம்பரமின்றி இருத்தல் வேண்டும்
இரவில் சுற்றுவதும் பகலில் தூங்குவதும் கூடாது
ஐம்புலங்களையும் கட்டுபாட்டில் வைத்திருக்க வேண்டும்
அதிக உணவு உட்கொள்ளல் உண்ணாமல் இருத்தல் கூடாது
கொலை களவு கெட்ட பழக்கவழக்கங்கள் செய்யாதிருக்க வேண்டும்
தற்புகழ்ச்சி கூடாது
பிறரை நிந்தித்தல் கூடாது
கிடைத்ததைக் கொண்டு மன நிறைவுடன் வாழ வேண்டும்
தமிழ் வேதங்கள் அன்றாடம் ஓதுதல் வேண்டும்
பிறருக்கு நன்மை தரக்கூடியதையே செய்தல் , பேசுதல் வேண்டும்
எந்த உயிருக்கும் தீமை செய்யாதிருக்க வேண்டும்
எல்லோரிடமும் எளிமையாக பழகுதல் வேண்டும்
இனிமையாக பேச வேண்டும்
உண்மையையே பேச வேண்டும்
ஏழைகளுக்கு உதவ வேண்டும்
வரும் துன்பங்களை நம் வினையால் வந்தவை என்ற தாங்கிக் கொள்ள வேண்டும்
பிறரிடம் உள்ள நல்லனவற்றை மட்டுமே பார்க்க வேண்டும்
யாரைக் கண்டும் பொறாமைப் படாமலிருக்க வேண்டும்
பிறருக்கு தானம் கொடுக்கும் பொழுது , கர்வம் இல்லாமல் கொடுக்க வேண்டும்
அன்னையை தெய்வமாக போற்ற வேண்டும்
தந்தைத் தெய்வமாக போற்ற வேண்டும்
குருஅல்லது ஆசிரியரை தெய்வமாக போற்ற வேண்டும்
வீட்டிற்கு வரும் புதியவரை (எளியவர்) தெய்வமாக போற்ற வேண்டும்
சிவ நாமத்தை( சிவாயநம) எப்போதும் சொல்லிக்கொண்டிருக்க வேண்டும்
ஆவை அனைத்தும் தமிழ் வேதங்களில் ஆங்காங்கே கூறப்படும் கருத்துக்கள்

அழியும் இவ்வுடம்பைக் கொண்டு அழியாத – உடன் வரும் புண்ணியங்களைச் செய்து பலப்பல நன்மைகளையும் இனி பிறா நிலையும் வீடு பேறும் அடையலாம்,
திருச் சிற்றம்பலம் – ஒம் நமசிவாய நம
நன்றி: தமிழ் வேதம்
மேலும் பல ஆன்மீகத்தகவலுக்கு
http://vpoompalani05.blogspot.in/
https://vpoompalani05.wordpress.com
http://www.vpoompalani05.weebly.com

பாம்பாட்டிச் சித்தர் / வரலாறு

Standard

பாம்பாட்டிச் சித்தர் / வரலாறு

தமிழகம் போற்றும் சித்தர் பெருமக்களில் பாம்பாட்டிச் சித்தரும் ஒருவர் ஆவார். பாம்புகளைப் பிடிப்பது, படமெடுத்து ஆட வைத்து வேடிக்கை காட்டுவது இவரது தொழிலாகும். எத்தகைய பெரிய, கொடிய பாம்பாக இருந்தாலும் அதனை இவர் வெகு எளிதாகப் பிடித்து விடும் ஆற்றல் பெற்றவர். பாம்பு விஷத்தை முறிக்கும் மூலிகைகள் பலவற்றை இவர் நன்கறிந்திருந்தார். இவர் கோவைக்கு அருகிலுள்ள மருதமலையில் அந்தக் காலத்திலேயே விஷமுறிவு வைத்தியம் மற்றும் ஆய்வுக் கூடம் ஒன்றை நடத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது.ஒரு நாள் மலை மீது பெரிய நாகப்பாம்பு ஒன்றைப் பிடிக்க வேண்டி விரைந்து சென்றபோது இவர் சட்டை முனியைக் கண்டார்.
இவ்விருவரின் சந்திப்பு பற்றி போக முனிவர் தம் போகர் 7000-ல்,
புற்றருகில் சென்றுமல்லோ சித்தர் தாமும்
பனிதமுள்ள நவரத்தினப் பாம்பு தன்னை
வெற்றியுடன் தான் பிடிக்கப் போகும்போது
வேதாந்தச் சட்டைமுனி அங்கிருந்தார்.
என்று கூறுகிறார்.
மேலும் சட்டை முனி தாம் கண்ட பாம்பாட்டிக்கு உபதேசம் செய்தருளினார். இதனால் காடுகளில் கொடிய பாம்புகளை பிடித்து நாடு நகரங்களில் சென்று பாம்புகலை ஆட வைத்து வேடிக்கை காட்டிப் பிழைப்பு நடத்தி வந்த பாம்பாட்டி சட்டை முனியின் பேரருளால் மெய்ஞ்ஞானப் பாலூண்டு நானிலம் போற்றும் சித்தராக மாறினார். சிறிது காலத்துக்கு சமாதி நிலையில் இருந்த பாம்பாட்டிச் சித்தர் பின் வெளிவந்து சித்துக்கள் பல புரிந்தபடி தேச சஞ்சாரம் செய்து வந்தார்.
ஒருநாள் அந்நாட்டு மன்னர் இறந்து போனார். அது கண்ட இவர் அவனுடம்பில் கூடு விட்டு கூடு பாய்ந்து அவரது மனைவியுடன் இருந்தபோது செத்த பாம்பு ஒன்றை உயிர்ப்பித்து ஆட வைத்தார். அதனால் இவர் பாம்பாட்டிச் சித்தர் என்ற பெயரைப் பெற்றார் என்று கூறுவோரும் உண்டு. வேறு சிலர் இவர் மன்னரது மனைவியுடன் அதிக நாட்கள் தங்கி விட்டதால், இவரது சீடர்கள் பாம்பாட்டிகளைப் போன்று வேடமிட்டு அரண்மனைக்குள் புகுந்து பாம்புகளை ஆட வைத்துப் பாடிய பாடல்களைக் கேட்டுத் தாம் யார் என்ற உண்மையை உணர்ந்து தம் பழைய உடம்பினுள் பிரவேசித்தார் என்று கூறுகின்றனர்.
எது எப்படி என்றாலும் இவரது வாழ்க்கை மிகவும் சுவாரஸ்யமானது என்றே கூறலாம். ஒரு சமயம் பாண்டிய நாட்டின் எல்லைப் பகுதியில் இருந்த காடு ஒன்றில் ஏராளமான கொடிய பாம்புகள் இருந்தன. அப்போது பயந் என்பதை அறியாத இளைஞன் ஒருவன் அக்காட்டு வழியே வந்தான். படமெடுத்து ஆடிய நாகம் ஒன்றினை அவன் வரும் வழியில் கண்டான். அதன் ஆட்டம் அவனை வெகுவாகக் கவர்ந்தது. வெகுவாக ரசித்துச் சிரித்தான். அப்போது அக்கொடிய நாகம் அவன் மீது சீறிப் பாய்ந்தது. அது கண்டு கலங்காத அவன் அதனைப் பிடித்துத் தரையில் ஓங்கியடித்தான். அதனால் அப்பாம்பு இறந்து போனது.
ஊர் திரும்பியவன் தன் நண்பர்களிடம் காட்டில் நடந்ததைக் கூறிப் பெருமைப்பட்டுக் கொண்டான். அப்போது அவனது நண்பர்கள் மிரண்டு, “அடேய்! அந்தக் காட்டு வழியே இனிமேல் போகாதே! கொடிய விஷப் பாம்புகள் அங்கு ஏராளமாக உள்ளன” என்று எச்சரித்தனர். ஆனால் அவனோ அவர்களது கூற்றை அலட்சியம் செய்தான்.

அடுத்த நாள் அவன் மீண்டும் காட்டுக்குள் வந்தான். அவனெதிரே சில பாம்புகள் வந்தன. அவற்றையும் அவன் கொன்றான். காலப்போக்கில் அவன் பாம்புகளைக் கொல்வதைத் தன் பொழுது போக்காகவே கொண்டான். ஒருநாள் மருத்துவர்கள் சிலர் வந்து இவனைச் சந்தித்தனர். “தம்பி!! நவரத்தினம் போன்று ஜொலிக்கும் குட்டையான பாம்பு ஒன்றிருக்கிறது. அதன் தலைப்பகுதியுள் மாணிக்கம் இருக்கும். அப்பாம்பு இரவுப் பொழுதில் மட்டுமே நடமாடும். அதனுடைய விஷம் ஒரு மருந்துக்குத் தேவைப்படுகிறது. பாம்புகளை எளிதில் பிடிப்பவனான நீ அப்பாம்பைப் பிடித்துக் கொடு” என்றார்.
அதற்குச் சம்மதித்த இளைஞன் உடனே காட்டுக்கு விரைந்து சென்றான். கண்ணில் தென்பட்ட புற்றுகளை எல்லாம் இடித்து அப்பாம்பைத் தேடினான். ஆனால் அது அவனுக்குக் கிடைக்கவில்லை. அதனால் அப்பாம்பைத் தேடி மேலும் அவன் காட்டுக்குள் முன்னேறிச் சென்றான். சற்று நேரத்தில் எவரோ வாய் விட்டுச் சிரிக்கும் சிரிப்பொலி காடு முழுவதுமாக எதிரொலித்தது. அதுகேட்ட அவன், “யார் அது? சிரித்தது யார் ? எவராக இருந்தாலும் சரி…. என் முன்னே வா….. என்று உரக்கக் கத்தினான்.”
அப்போது ஒளியுடம்போடு சித்தர் ஒருவர் அவன் முன்பாக வந்து நின்றார். தன் எதிரே வந்து நின்றவரைக் கண்டதும் இளைஞன் வியந்தான். “இப்படியும் ஓர் உடம்பு இருக்குமா? என்று எண்ணியவாறு, நீங்கள் யார்? எதற்காக நீங்கள் சிரித்தீர்கள்? என்று வினவினான். அதற்க்கு அவர் “இளைஞனே! நான் சித்தர் பரம்பரையில் வந்தவன்! எதற்கும் உதவாத உன் செயலைப் பார்த்தேன். சிரிக்கத் தோன்றியது சிரித்தேன்” என்றார்.
சித்தர் கூறியதைக் கேட்ட இளைஞன், ஐயா… மாணிக்கக் கல்லைக் கொண்ட பாம்பைத் தேடி அலைவது பயனற்ற செயலா? என்று கேட்டான். அதற்கு அச்சித்தர், இளைஞனே…. பயம் என்னவென்றே தெரியாதவன் நீ.. வீரனான நீ விவேகம் இல்லாது இருக்கலாமா? உல்லாசமான உயர்ந்த ஒரு பாம்பு உன் உடம்பில் குடியிருக்கிறது. மனித உடம்புள் இருக்கும் அப்பாம்பை எவருமே அறியவில்லை. உனக்கும் தெரிய வில்லை. அதை ஆட்டுவிப்பவனே அறிஞன் ஆவான். அப்பாம்பை அடக்கி ஆளும் சிறப்பைப் பெற்றவர்களே சித்தர்கள். மற்றவர்கள் எல்லாரும் அப்பாம்புக்கு அடிமைப்பட்ட பைத்தியங்களே… என்றுரைத்துச் சிரித்தார்.
பயம் என்றால் என்னவென்றே அறியாத அந்த இளைஞன், முதன் முதலாக அச்சம் கொண்டு சித்தர் பெருமானை நோக்கினான். நடுக்கமுடன் அவரை வணங்க முயற்சித்தும் அவனால் இயலவில்லை. சட்டென அவரது பாதங்களில் வீழ்ந்து வணங்கியவன் “சுவாமி! எனக்குள் ஓர் பாம்பு உள்ளது என்ற தகவலை இன்றுதான் உங்களால் நான் அறிந்தேன். ஆனால் அது என்ன பாம்பு என்று எனக்குப் புரியவில்லை. தயவு கூர்ந்து எனக்கு அது பற்றி விளக்குவீர்களா?” என்று வேண்டினான்

அவனது வேண்டுதலை ஏற்ற சித்தர் பெருமான், “மனித உடல் ஓர் அற்புதம்ப் படைப்பு! இவ்வுடம்புள் காலம் காலமாக ஓர் பாம்பு உறக்க நிலையில் மூலாதாரச் சக்கரத்தில் உள்ளது. அதனை குண்டலினி என்ரு கூறுவர். சிவத்தை உணர்வு நிலையில் வாழும் பண்பாளர்களுக்கு சுவாசம் ஒடுங்கும். சுவாசம் ஒடுங்கினால் குண்டலினி என்னும் அப்பாம்பு சீறி எழும். தியானத்தின் வாயிலாக அதனை ஆட்டிப் படைக்கலாம். இதனால் ஆன்மா சித்தி அடையும்” என்றார்.
“சுவாமி, மாபெரும் இரகசியத்தை நான் இன்று மாதவச் சீலரான தங்கள் மூலம் அறிந்து கொண்டேன். தாங்கல் காட்டியருளிய வழியை இனி நான் கடைப்பிடிப்பேன். இது சத்தியம்!” என்றான்.
“மகனே! அவ்வாறு செய்தாயானால் நீ வெற்றி பெறுவாய்!” என்றுரைத்த சித்தர் பெருமான் அருள் ஒளியை அந்த இளைஞன் மீது பாய்ச்சியருளிவிட்டு சட்டென மறைந்தருளினார். அந்த இளைஞன் சந்தித்த சித்தர் பெருமானே சட்டைமுனி ஆவார்.
சித்தர் பெருமான் சென்ற திசை நோக்கி வணங்கிய இளைஞன் அங்கிருந்த அத்தி மரத்தடியில் அமர்ந்து, சித்தர் பெருமான் உரைத்து அருளியபடி தியானத்தில் அமர்ந்தான். தியான முடிவில், குண்டலினி சக்தியை முற்றிலுமாக உணர்ந்து அனுபவித்தான். “ஆஹா! பரமானந்தம் அளிக்கும் இந்த மெய்ஞ்ஞான சுகத்தை இதுநாள் வரையில் நாம் அறியாது இருந்தோமே!” என்று வேதனைப்பட்டான். அப்போது அவனுக்கு உபதேசித்தருளிய சித்தர் பெருமானான சட்டைமுனி அவன் முன்பாகத் தோன்றி, “மகனே! நான் உனக்கு உபதேசம் செய்தருளினேனே தவிர உன் பெயரைக் கூட நான் தெரிந்து கொள்ளவில்லை! நீயாவது உன் பெயரைக் கூறியிருக்கலாமே?” என்றார்.
அதற்கு அவன் “சுவாமி! கொடிய பாம்புகளை மட்டுமே பிடித்து ஆட வைத்துக் கொண்டிருந்த நான் குண்டலினிச் சக்தியால் உலகையே என்னுள் காணும் சக்தியை உபதேசித் தருளியவர் தாங்கள்! தங்களிடம் என் பெயரை என்னவென்று நான் கூறுவது? முன்பும் (பாம்பு) இப்போதும் (குண்டலினிப் பாம்பு) பாம்பைத் தான் பிடித்து என் விருப்பப்படி ஆட்டுவிக்கிறேன். அதனால் சுவாமி! என் பெயர் பாம்பாட்டி என்றே வைத்துக் கொள்ளுங்கள்” என்றான். அது கேட்டுச் சிரித்த சட்டைமுனி “ஆஹா! நீ நல்ல பெயரைக் கூறினாய். நீ பாம்பாட்டிச் சித்தனே! நீ வாழ்வாயாக!” என்றுரைத்து மறைந்தருளினார்.

தம் குருதேவரான சட்டையின் அருளாசியால் பாம்பாட்டிச் சித்தர் தியானத்தில் மீண்டும் ஆழ்ந்தார். சிறகடித்துப் பறந்து வந்து சித்திகள் அவரிடம் இரண்டறக் கலந்தன. கண்களைத் திறந்தார். அவருள் இருந்த சித்திகள்யாவும் வெளிப்பட்டன. இரும்பு செம்பானது, செம்பு பொன் ஆனது, மணல் சுவை மிகுந்த சர்க்கரையானது. தன் கரங்களால் கூழாங்கற்களை எடுத்து உற்றுப் பார்த்தார். உடனே அவை ஒளி வீசும் நவரத்தினக் கற்களாக மாறின.
அது கண்டு பாம்பாட்டிச் சித்தர் சிரித்தார். என்ன வாழ்க்கை இது… நவரத்தினக் கல் கொண்ட பாம்பைத் தேடி நான் அலைந்தேன். அது கிடைக்கவே இல்லை. இப்போது சாதாரண கூழாங்கற்களையே நவரத்தினக் கற்களாக மாற்றிடும் சித்து வேலை தானாக என்னிடம் வந்துள்ளது. இதுதான் காலத்தின் கோலம் போலும். ச்சே…. வேண்டவே வேண்டாம் இவை… என்று கூறி அக்கற்களை வீசியெறிந்தார்.

தான் சந்தித்த மானிடர்களுக்குப் பாம்பாட்டிச் சித்தர் உபதேசம் செய்தருளினார். ஆனால் அவரிடம் வந்தோர் அனைவரும் அவரிடம் நடித்துத் தங்களது வாழ்வை வளமாக்கிக் கொண்டார்களே தவிர, நல்லவற்றை கடைப்பிடிப்பதில் அவர்கள் முயலவில்லை. அது கண்டு பாம்பாட்டிச் சித்தர் பெரிதும் வேதனைப் பட்டார். என்ன மனிதர்கள் இவர்கள்…. வயிற்றுப் பசிக்கு மட்டுமே இவர்கள் அலைகிறார்களே ஒழிய ஆன்மா என்று ஒன்று உண்டு. அதன் பசியை போக்க வேண்டும் என்று எண்ணம் துளியளவு கூட இல்லாதிருக்கிறார்களே… என்று அவர் வருந்தினார்.
இரவு, பகல் என அலைந்து திரிந்தார். பலரின் வியாதிகளைப் போக்கியருளினார். வறுமையால் வாடித் துன்புறும் ஏழை எளியோருக்கு இரசவாதம் மூலம் பொன்னைச் செய்து அவர்களது வறுமையைப் பாம்பாட்டிச் சித்தர் போக்கியருளினார்.
மன்னர் ஒருவர் கீழ்மக்களது சேர்க்கையால் செய்யத் தகாதவற்றை எல்லாம் செய்தார். இதனால் அம்மன்னரது உடல் இளைத்து மெலிந்தது. அடையாளமே தெரியாதவாறு அவர் உடல் இளைத்ததால் மிகவும் அவதிப்பட்டார். ஒருநாள் அம்மன்னர் நடந்து செல்லும் போது, கால் இடறிக் கீழே விழுந்தார். விழுந்தவர் எழுந்திருக்கவில்லை. ஆம்… இவர் இறந்து போனார். கலைகள் பலவற்றைக் கற்றறிந்த உத்தமக் குல மகளான அரசி, ஐயோ, எவ்வளவோ சொல்லியும் நீங்கள் திருந்தவே இல்லையே, இப்போது என்னைத் தனியே தவிக்கவிட்டுவிட்டுச் சென்று விட்டீர்களே… என்று கதறி அழுதாள். அரசியின் துயரைக் கண்டு குடிமக்களும் அமைச்சர்களும் மிகவும் வருந்தினர்.
அரண்மனையில் இருந்து வெளிவந்த அழுகை ஒலி விண்ணை எட்டியது. பாம்பாட்டிச் சித்தரின் செவிகளில் இந்த அழுகை ஒலி விழுந்தது. உடனே அவர் விண்ணில் இருந்து பூமிக்கு வந்தார். பூமியை அடைந்ததும் அவர் தம் உடலை ஒருபுறமாக வைத்துவிட்டு, செத்த பாம்பு ஒன்றை எடுத்து இறந்த மன்னர் உடலைச் சுற்றி அழுது கொண்டிருந்தவர்களின் மத்தியில் வீசியெறிந்தார். தங்களிடையே விழுந்தது செத்த பாம்பு என்பதை அறியாது அனைவரும் அலறியடித்து ஓடினர். பாம்பாட்டிச் சித்தர் அருவமாக இறந்த மன்னர் உடலருகே வந்தார். உடனே மன்னர் உடம்பினுள் அவர் கூடு விட்டு கூடு பாயும் கலைப்படி புகுந்தார்

உடனே இறந்த மன்னரின் உடம்பு உயிர் பெற்று மெல்ல அசைந்தது. கண்கள் சட்டெனத் திறந்தன. அரசர் எழுந்து அமர்ந்தார். அது கண்டு அரசியும், அமைச்சர்களும், கூடியிருந்தோரும், மன்னர் இறக்கவில்லை. உயிருடன்தான் உள்ளார், என்று மகிழ்ந்து கூவினர். அரசி தன் கழுத்தில் அணிந்திருந்த திருமாங்கல்யத்தை எடுத்துத் தன் கண்களில் ஒற்றிக் கொண்டாள். மிகவும் மகிழ்ந்த அவள் அவரைத் தழுவிடத் தனது கரங்களை நீட்டினாள்.
அதுகண்டு சட்டென விலகிய மன்னர் அங்கு தரையில் கிடந்த உயிரற்ற பாம்பின் உடலைப் பார்த்து, எழு பாம்பே… நான் எழுந்து விட்டேன். நீயும் எழுந்திருக்கலாமே என்றார். உடனே செத்த பாம்பு உயிர் பெற்று மெல்ல நெளிந்து நகர்ந்தது. அனைவரும் அது கண்டு வியந்தனர்.
பாம்பு வெளியே செல்ல முற்படுவதைக் கண்ட மன்னர், பாம்பே… எங்கே போகிறாய் நீ.. என்ன அரவரம் உனக்கு உன் மனைவி, மக்கள் நினைவு வந்து விட்டதோ.. சீச்சீ…. செத்துப் போன நீ இப்போது உயிர் பெற்றுச் செல்கிறாய் ஏமாறாதே உருப்படும் வழியைப் பார் என்றார். அவரது கூற்று ஆடு பாம்பே, ஆடு பாம்பே… என்று முடியும் பாடல்களாகவே வெளி வந்தன. அரிய உபதேசங்களைக் கொண்ட அப்பாடல்களுக்கு ஏற்றபடி அப்பாம்பும் படமெடுத்து ஆடியது. மன்னரது பாடல்களையும் அவர் பாடியதற்கு ஏற்ப பாம்பு படமெடுத்து ஆடியதையும் கண்டு அனைவரும் வியந்தனர். மன்னர் உருவில் இருப்பவர் பாம்பாட்டிச் சித்தரே என்பதை உணராது அவர்கள் குழப்பம் அடைந்தனர்.
மன்னரது பாடல்களைக் கேட்ட அரசி, ஒரு நாட்டையே ஆளும் நம் மன்னர் செத்துப் பிழைத்த பின் தத்துவமழையாகப் பொழிகிறாரே… இது எப்படி. என்று புரியாது தவித்தாள். அரசியின் எண்ணத்தை உணர்ந்த மன்னர், செல்வத்தில் மூழ்கிச் சீர் கெட்டுப் போவதில் என்ன லாபம் உண்டாகப் போகிறது. பரமனையே நினை. பேரின்பம் கிட்டும். என்று பாடலாகப் பாடினார். என்ன விந்தை இது. நான் உள்ளத்தில் நினைத்ததைப் பாடலாகப் பாடுகிறாரே… எப்படி. பாலும், பழமும் உண்டு எந்நேரமும் பெண் மோகத்தில் மூழ்கிய இவர், பரமனை சிந்தையில் வை, என்று கூறுகிறாரே… என்று வியந்தாள் அரசி.

உடனே மன்னர் உருவிலிருந்த சித்தர் பாலும், பழமும் விழுங்கிய வாய், உயிர் போன பின், மண்ணையும் விழுங்கும் இதனை நீ மறக்கலாகுமா. என்று பொருள்படுமாறு பாடினார். அதுகேட்டு அரசி ஓர் முடிவுக்கு வந்தவளாய், சுவாமி உண்மையை மறைக்காது கூறுங்கள் தாங்கள் எங்களின் மன்னர் தானா அல்லது உத்தமமான ஓர் ஆத்மா என் மன்னரின் உடம்புள் புகுந்துள்ளதா. என்று பணிவுடன் கேட்டாள்.
அதற்கு மன்னராக இருந்த சித்தர், அரசியை நீ ஒரு விவேகி, அதனாலேயே நீ உண்மையை உணர்ந்து கொண்டாய். அறிவு என்ற அங்குசம் கொண்டு கோபம் என்னும் மதயானையைக் கொன்றவர்கள் நாங்கள், உன் கணவன் இறந்ததால் அழுது கொண்டிருந்த உனது அவல நிலையை மாற்றவே யாம் இறந்த உன் மன்னரது உடம்புள் புகுந்தோம் எமது பெயர் பாம்பாட்டிச் சித்தன் என்பதாகும், என்று கூறினார்.
அதுகேட்டு அரசி மெய்சிலிர்த்து சுவாமி என் துயரத்தை போக்கியருள வந்த தெய்வம் தாங்கள், இனி இந்த என் அரசரின் உடலின் நிலை என்னவாகும். நான் உய்ய என்ன செய்ய வேண்டும். வழிகாட்டி அருளவேண்டும் என்று பணிவுடன் வேண்டினாள்.
மனம் என்னும் குதிரையை அறிவு என்ற கடிவாளம் கொண்டு அடக்கிடு கோபத்தை விட்டொழி தெளிவு உனக்கு தானாக வரும், என்று சித்தர் உபதேசித்தருளினார். அவர் உபதேசம் செய்து முடித்ததும் மன்னரது உடல் உயிரற்ற உடலாகச் சட்டெனக் கீழே விழுந்தது. மன்னரது உடம்புள் இருந்து நீங்கிய பாம்பாட்டிச் சித்தர் மீண்டும் தம் உடம்புள் புகுந்தார். அதுவரை படமெடுத்து ஆடிக் கொண்டிருந்த பாம்பும் அங்கிருந்து அகன்று சென்றது.
அங்கிருந்த அனைவரும் பயத்துடனும், வியப்புடனும் நிகழ்ந்தவை அனைத்தையும் கண்டனர். சித்தர் உபதேசத்தைத் தன் சிந்தையில் வைத்த அரசி, முறைப்படி மன்னரின் இறுதிக் கடன்களைச் செய்து முடித்தாள். பின் சித்தரது வழியில் வாழ்ந்து முக்தியடைந்தாள்.
பாம்பாட்டிச் சித்தர் விருத்தாசலத்தில் சித்தி அடைந்தார் என்றும் துவாரகையில் சித்தியடைந்தார் என்றும் பல செய்திகள் கூறப்படுகின்றன. திருக்கோகா்ணத்தில் பிறந்த பாம்பாட்டி சித்தர் பாண்டிய நாட்டில் வாழ்ந்தார் என்றும் மருத மலையில் வாழ்ந்தார் என்றும் முரண்பட்ட பல தகவல்கள் உள்ளன. ஆனாலும் அவர் மருதமலையில் வாழ்ந்தவர்தான் என்பதற்கு ஆதாரமாக அங்கு பாம்பாட்டிச் சித்தர் குகை, சுனை முதலானைவை உள்ளன.
திரு சிற்றம்பலம்
நன்றி ; தமிழ் கடல்
மேலும் பல ஆன்மீகத் தகவலுக்கு
http://vpoompalani05.blogspot.in/
https://vpoompalani05.wordpress.com
http://www.vpoompalani05.weebly.com.

Standard

திருமந்திரம் முதல் தந்திரம்
1. உபதேசம்
பதிபசு பாசம் எனப்பகர் மூன்றிற்
பதியினைப் போற்பசு பாசம் அனாதி
பதியினைச் சென்றணு காப்பசு பாசம்
பதியணு கிற்பசு பாசம் நிலாவே.

(ப. இ.) தொன்மையிலுள்ள பதியாகிய இறையும், பசுவாகிய உயிரும், பாசமாகிய தளையும் என்று சொல்லப்படும் மூன்றினுள் இறையின் தொன்மையினை எல்லா நெறியினரும் சொல்லாலு.ம் பொருளாலும் ஐயந்திரிபின்றி மெய்க்காட்சியான் உடன்படுகின்றனர். அப் பதியினைப் போல் பசு பாசமும் தொன்மையே. பதியினைச் சென்று அணுகுந்தன்மையில்லாத உயிரியும் தளையும் பதி அருளால் எழுந்தருளிவரின் பசுத் தன்மையாகிய முனைப்பும் செயலும் மருளலும், இவற்றிற்கு முறையே வாயிலாகிய ஆணவம் கன்மம் மாயை என்னும் பாசமும் முனைத்து நில்லாது ஒடுங்கும். பசுத் தன்மை – தளையினுட்பட்ட தன்மை. இதனைத் தளையி எனலாம். நிலா – முனைத்து நில்லா; அடங்கியிருக்கும்.

சூரிய காந்தமுஞ்3 சூழ்பஞ்சும் போலவே
சூரிய காந்தஞ் சூழ்பஞ்சைச் சுட்டிடா
சூரியன் சந்நிதி யிற்சுடு மாறுபோல்
ஆரியன் தோற்றமுன் அற்ற மலங்களே.

(ப. இ.) ஞாயிற்றின் கதிரை ஏற்றுப்புறத்தே விடும்கல் சூரிய காந்தக்கல் எனப்படும். அக்கல் சூரியன் முன்னன்றித் தன்னைச் சூழ்ந்துள்ள பஞ்சினைச் சுடமாட்டாது. அதற்குச் சுடும் ஆற்றலை நல்குவது ஞாயிறே. ஆயினும் அச் சூரியனும் இக்கல்லின் வாயிலாக அன்றிச் சுடான். அதுபோன்று சிவபெருமான் மும்மலத்தார் மலங்களை அகற்றச் சிவகுருவாய் வெளிப்படுவன். வெளிப்பட்டுத் திருவைந் தெழுத்து ஓதியருள்வன். அங்ஙனம் ஆட்கொண்ட போதே ஆணவம் கன்மம் மாயை என்னும் மும்மலங்களும் அற்றொழியும். இதுபோல் திருவைந்தெழுத்தும் நாட்டிலுள்ளார்க்கு ஏட்டிலுள்ளதேனும் ஆசான் கூட்டினாலல்லாமல் பயனெய்தாதென்க. ஏட்டிலுறும் ஐந்தெழுத்தும் எம்மான் அருட்குருசொற், கூட்டிலன்றிப் பேறின்றாம் கூறு. ஆரியன் : பேரறிவு நிறைந்தோன்; சிவன்; குரு மும்மலக் கட்டுடைய நம்மனோர்க்குச் சிவபெருமான் நம்முடன் போக்கும் வரவும் புணர்வுமிலாப் பின்னலாயிருப்பினும் அவன் கொள்ளும் குருஉருவின் வழியாகவே மலமகலும். அத்துவிதம்.