தூங்காமல் தூங்கி சுகம் பெறுவது எவ்வாறு?

Standard

தூங்காமல் தூங்கி சுகம் பெறுவது எவ்வாறு?
நம் உடம்பிலுள்ள எதிர்மறை சக்திகளை ஆத்ம சக்தியில் அடக்கி ஒடுக்கி உடன்பாட்டு சக்திகளை அபிவிருத்தி செய்து தன் அறிவைக் கொண்டு சமனப்படுத்தி ஒளியை அதாவது ஜோதியை காண்பதே மெய்யறிவின் சாதனையாகும், அஷ்டாங்க யோகத்தின் ஐந்தாவது நிலை ” ப்ரத்தியாகாரம்” என்ற சாதனையின் விளக்கத்தையும் அறிய வேண்டும், தன்மனதினை ஒன்று கூட்டவோ, பிரிக்கவோ சக்தி பெற்றவன் தான் ப்ரத்தியாகாரம் எனும் கட்டுப்பாட்டினை அடைய முடியும், இந்த பலன்களை ஆசையுடைய பொருள்களை நிதர்ஸனம் செய்தும், புலன்களை தன் கட்டுப்பாட்டுக்கு கொண்டுவரும் பயிற்சியாகும், இதனையே திருவள்ளுவர்
பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்திர்
ஒழுக்கம் நெறி நின்றார் நீடுவாழ்வார் – என்கிறார்
ஐம்புலங்களை அடக்கி ஒழுக்க நெறி நிற்பவர் நீண்டகாலம் தன்மையர் என்கிறார், இன்னும் ஒருபடி மேல் சென்று பத்திரகரியார் ஆங்காரம் உள்ளக்கி ஐம்புலங்களை சுட்டருத்து தூங்காமல் தூங்கி சுகம் பெறுவது எக்காலம் என்று புலம்புகிறார். எனவே தூங்காமல் தூங்கி சுகம் பெற தன் இச்சையை இச்சைப்படி விடாது கட்டுக்குள் கொண்டுவரும் சாதனைதான் ப்ரத்தியாகாரம் என்பது, இப்படி ஆற்றல் ஒன்றுபடுத்தி சாதனை புரிந்தால் எல்லாமே கட்டுக்குள் அடங்கும்.
உடல், உள்ளம், அறிவு இம்மூன்றம்ஒன்றோடொன்று ஒன்றி நின்றால் சாதனையில் வெற்றி பெறமுடியும், இந்திரியங்களையும் பல விஷயங்களிலிருந்தும் விலகி ஆண்டவனிடம் திருப்ப வேண்டும், அப்பர் தேவராத்தில் தலையே நீ வணங்காய், கண்களே இறைவனை காண்க என்றெல்லாம் பாடியிருப்பதும் உடல் உறுப்புகளை பரமேஸ்வரன் பால் ஈடுபடுத்தும் பிரத்தியாகாரமே, இதனால் விஷப்பற்று அறவே நீங்கும், சிவஞான சித்தர் இலக்கண விளக்க பரம்பரை ஸ்ரீ சிதம்பரநாத தேசிகர் உரையில் பின்கண்ட பாடல் அதை விளக்கிறது.
1, சகமார்ககம் புலனொடுங்கி
2,தத்துவ வொளி இரண்டு சலப்பற்று
3,முச்சதுர மூலாதாரங்கள் அகமார்க்க மறிந்து
4,அவற்றின் அரும்பொருள்கள் உணர்ந்து அனைந்து போய் மேலேற
5,அலர்மதி மண்டலத்தின் முகமார்க்க அமுதுண்டு
6, அலமுட்டத் தேக்கி
7, முழுச் சோதி நினைத்திருந்து
8,தன்முதலாக வினைகளுக்கு
9, மார்க்க அஷ்டாங்கயோக முற்றும்
10, உழத்தலுந்தவர் சிவன் தன் உருவத்தை பெறுவர்,
என்றபடி சகமார்க்கம் புலனொடுக்கம் சாதனையால் நாம் செய்யமுடியாதது எதுவுமில்லை, சகமார்க்கம் என்பது பக்தி மார்க்கத்தினைவிட கஷ்டமானது ஏனெனில் அந்நிலை உலகத்தோடு ஒட்டியும், ஒட்டாமலும் கத்திமேல் உட்கார்ந்து சாதனை புரிவது போல், ஏனனெனின் ஆமை எப்படி புலன்களை நினைத்த மாத்திரத்தில் தன் அவயங்களை உள்ளடக்கி கொள்கிறதோ அதுபோல் புலன்களின் ஆசைகள் நிஷ்காமியம் செய்யக் கூடிய நிலைதான் ப்ரத்தியாகாரம், சைவ சமய குருமார்களில் சுந்தரரர் இரு மனைவியர்கள் இருந்தும் இந்த மார்க்கத்தை அனுஷ்டிக்கிறார் என்றால் அவரின் திண்மை என்னவென்பது? தன்னிலைக்கு கட்டுபட்டு கொண்டுவருபவனுக்கு கைவல்யம் ஆகாதது எதுவுமில்லை, எனவே ஐம்பொறிகளின் சுவை, ஒளி, ஊறு, ஒசை, நாற்றம், என்ற ஐந்தினைதத்துவங்களால் ஒடுக்க வேண்டும், என்று ஒளவை பராட்டியாரும் கூறுகிறார்,
நினைப்பு மறுப்பு நெடும் பசியும் மற்றால்
அனைத்துலகும் வீடாமது – ஒளவை குறள்

தேகத்ததின் கண்ணுண்டாகும் சங்கல்பமும் யாவற்றையும் அறிய வொட்டாது மறைத்திருக்க கூடியது, பசியும் ஒழித்த விடத்த எல்லா உலகுக்கும் தேகமானது உறைவிடமாகும்,

நினைப்பு: சங்கற்ப பலத்ததினால் எண்ணிய கருமத்தை முடிக்கலாம்
ஞானத்தினால் : சங்கற்ப நாசத்தால் மனம் வலவையடையும் பிந்து பலம்படும் ஞான கர்மத்துக்கு உதவி செய்யும்

மறப்பு: மனம் வாக்கு காயங்களாலுண்டாகும், உழைப்புக்கு ஆறுதல் செய்வதில் பேர்பெற்றது.
ஞானத்தினால் மறப்பாற்றால்தான் 14 உலகங்களையும் தன்னையுமறியலாம்,

பசி : பசியானது உணவு சுவை உட்கொள்ளுவதற்கு சமிக்ஞையாக விருப்பத்தோடு உண்ட உணவை ஜீரணித்து அதை பக்குவம் செய்து சுக்கிலம், நாதம், மலமாக பிரிக்கும் பசியின்மை நேரிட்டால் மேற்சொன்னவைகளுக்கு எதிரிடையை உண்டாக்கும்,
ஞானத்தினால் பசி யொழிந்தால் அமுத தன்மை உண்டாகிறது, பலம் தேகபலம் உண்டாகிறது, பஞ்சேந்திரயங்களை அகமுக விவகாரத்தில் செலுத்தும் சூட்சும தத்துவங்களுக்கும் ஸ்தூல தத்துவங்களக்கும் பலத்தை கொடுக்கும் அமிர்த ஊற்று சுரக்கும்
எனவே இறவாமல் வாழும் வழி ஜீவ அமிர்தத்தை பருகுவதே, அந்த அமிர்தம் நம் உடலில் பெருக்கி பசிதாகம் கால ம்ருத்யு ( பற்றாததும் ) என்றும் சிரஞ்சீவியாக வாழும் வழியினை நம் சங்கற்ப பலத்தால் பெற வேண்டும் நாம் இச்சிக்கப்படும் பொருளுடையது ஆனது காமியதவம் அப்படி இச்சிக்கப்படாத விரும்பும் தவம் நிஷ்காமமிய தவம் எனப்படும், காமிய தவம், சித்தியும், நிஷ்காமிய தவம் முத்தியும் கொடுக்கும், வைராக்கியம் என்ற மனேசக்தி பெருகினால் ஆத்ம சாதனையால் வெற்றியடைய முடியும்,
ஆசை அடக்கி ஐம்புலங்களை இழுத்து பிடித்தால் அடங்காத குதிரைகளான புலன்களை கடிவாளம் போட்டு இழுத்து பிடித்து சாதனை புரியலாம், வெளி விவகாரத்தில் இந்திரியங்களை பலத்காரமாக உள்முகப்டுத்துதல் ப்ரத்தியாகாரம், எதிலும் பலனை எதிர்பார்க்காமல் கரும பலனை அனுஷ்சித்து ப்ரத்தியாகாரம், எதை பார்த்தாலுமு அதையெல்லாம் ஆத்மா என பாவிப்பது ப்ரத்தியாகாரம்,
எனவே ஆசைஅடக்கி ஐம்புலங்களையும் வென்று, மனத்தினை கட்டுப்டுத்தி சும்மா இருந்து சுகம் பெறுவதே தூங்காமல் தூங்கும் நிலை,
திருச்சிற்றம்பலம்
மேலும் பல ஆன்மீகத் தேடலுக்கு
http://vpoompalani05.blogspot.in/
https://vpoompalani05.wordpress.com
http://www.vpoompalani05.weebly.com.

Advertisements

சிவம் காக்கும்

Standard

சிவம் காக்கும்
நாகேந்திரன் திடுக்கிட்டார். அவருடைய அதுநாள் வரையிலான ஜாதகம் படித்தலில் இப்படி ஓர் அதிர்ச்சி அவருக்கு ஏற்பட்டதேயில்லை. மீண்டும் கட் டங்களைத் தன் ஆள்காட்டி விரலால் தடவித்தடவி, சுற்றிச் சுற்றி வந்து சோதித்தார். இல்லை; வாய்ப்பே இல்லை. அன்றிரவு அந்த ஜாதகக்காரன் மரணத்தைத் தழுவுவதை யாராலும் தடுக்கமுடியாது. இன்னும் சில மணிநேரத்தில் தன் விதி முடியப்போவதை உணராமல் அவன்தான் எவ்வளவு வெகுளியாக அவரை ஆவலுடன் பார்த்துக்கொண்டிருக்கிறான்! அவனிடம் எப்படி உண்மை யைச் சொல்வது? தன்னுடைய தர்மசங்கடத்தை மிகவும் உன்னிப்பாக அவனுடைய ஜாதகத்தை ஆராய்வது போன்ற முகபாவனையில் மறைத்துக் கொண்டார் நாகேந்திரன்.

அவனைத் தவிர்க்க வேண்டும். இன்னும் ஒரு சில மணிநேரங்களுக்குள் அவனுக்குதான் என்ன நற்பயன்கள் விளைந்துவிடப் போகின்றன? அப்ப டியே விளைந்தாலும் அதை அனுபவிப்பதற்குள்தான் அவனுடைய வாழ்வு முடிந்துவிடுமே! ஆனால் இந்த துர்ப்பலனைத் தன் வாயால் சொல்லத்தான் வேண்டுமா? தன் மனதைத் திடப்படுத்திக் கொண்டு அவனைப் பார்த்து, “இந்தாப்பா, உன்னோட ஜாதகத்தை நான் ரொம்பவும் அலசிப்பார்க்க வேண்டியிருக்கு. அதனால் இப்ப உடனே உனக்கு உன் ஜாதகப் பலன்களை முழுமையாகச் சொல்ல என்னால் முடியலே. அதனால நாளைக்குக் கார்த்தால நீ வா. உனக்கு விவரமா சொல்றேன்” என்று கூறி அனுப்பி வைத்தார்.

அவன் போனதும், நாகேந்திரனின் மனைவி அவரை எதிர்கொண்டாள். “நீங்க என்ன சொன்னாலும் அது நடக்கும். ஒரு ஜாதகத்தைப் படித்து பலிக் கக்கூடிய பலனா சொல்ற உங்க வாய், அவனை நாளைக்கு வரச்சொல்லியிருக்கு. அவனோட ஜாதகத்தை நீங்க கூட்டி, கழிச்சுக் கணக்குப் போட்டுத் தடுமாறிண்டிருந்ததை நான் உள்ளேருந்து கவனிச்சுண்டுதான் வந்தேன். அவனை அனுப்பினதுக்கும் ஏதோ உள்ளர்த்தம் இருக்கு. ஏன், அவனுக்கு என்ன கெடுதல் நேரப்போறது?” என்று பதைபதைப்புடன் கேட்டாள். “கெடுதலா? இந்த ஜாதகப்படி அவன் இன்னிக்கு ராத்திரியே எமனுக்கு விருந்தாளியாய் போகப்போறான். அதை என் வாயால சொல்ல எனக்குத் திராணியில்லே. அதான், இன்றுபோய், நாளை வான்னுட்டேன்” தயங்கியபடி சொன்னார் நாகேந்திரன்.

http://vpoompalani05.blogspot.in/
https://vpoompalani05.wordpress.com
http://www.vpoompalani05.weebly.com.
“அடக்கடவுளே!” என்று பதறித் துடித்தாள் மனைவி. “நாளைக்கா வரச் சொன்னீங்க? அப்படியானால் அவன் ஜாதகப்படியான மரண சம்பவம் இன் னிக்கு ராத்திரி நடக்காதா? உங்க வாக்கு இதுவரைக்கும் பலிச்சது போல, அவன் நாளைக்கு நிச்சயம் வருவானே…” “அதெப்படி, அதெப்படி?” நாகேந்திரன் தடுமாறினார். என் வாக்கு பலிக்கணும்னா அவன் நாளைக்கு வரணும். அவன் ஜாதகம் பலிக்குமானா அவனால வரமுடியாது. அதாவது, என் கணக்கு சரியாகும். கணக்கு சரியாகுமா; வாக்கு பலிக்குமா? மொத்தத்தில் அன்றிரவு அவருக்கும் சரி, அவருடைய மனைவிக்கும் சரி, தூக்கம் போச்சு! விஜயன் தன் கிராமத்தை நோக்கி நடந்தான்.

மாலை வேளை மயங்கிக் கொண்டிருந்தது. இரவுக்குள் கிராமத்துக்குப் போய்விடலாம். இரவு தூங்கிவிட்டு, காலையில் மீண்டும் புறப்பட்டு ஜோதிட ரைப் பார்க்க வேண்டியதுதான் என்று தீர்மானித்துக் கொண்டான். இருட்டு கருமையை அதிகரித்துக் கொண்டே வந்தது. இருட்டுக்குக் கார்மேகமும் துணை புரிந்தது. நட்சத்திரங்களும் சந்திரனும் மேகங்களை ஊடுருவ முடியாமல் தவித்தன. கருமை வலுக்க வலுக்க, அந்தப் பிராந்தியமே கொஞ்சம் சொஞ்சமாகக் குளுமைக்கு வந்தது. சில்லென்று வீசிய காற்று, மண்வாசனையையும் சுமந்து வந்தது. மழை, பன்னீர்த்துளித் தூறலாய் சுகமாய்த்தான் ஆரம்பித்தது. ஆனால் அதுவே நீள் கம்பிகளாகி வானத்தையும் பூமியையும் இணைக்க ஆரம்பித்த போதுதான் அவன் புகலிடம் தேடினான். மழையோடு மின்னலும் இடியும் சேர்ந்து கொண்டு அவனை விரட்டி மகிழ்ந்தன.

அதோ! ஒரு மண்டபம். பாழடைந்த மண்டபம்தான். ஆனாலும் பரவாயில்லை. ஆபத்துக்குப் பாவமில்லை. நனையாமல் தன்னைக் காத்துக்கொண்டால் தான் மறுநாள் மீண்டும் வந்து ஜோதிடரைப் பார்க்க முடியும். ஒரு வேளை மழை, குளிர் காரணமாக உடல் சுகவீனமுற்று அவரைப் பார்க்க முடியாம லேயே போய் விடுமோ? அவன் கண்களில் இப்போது மழை. ஆனால் ஒதுங்கப் போன இடமும் அவனைப் பார்த்து கேலி செய்தது. கலகலத்துப் போயிருந்த அந்தப் பாழடைந்த மண்டபத்தின் விரிசல்களினூடே மின்னல் அவனை மிரட்டியது. ஓர் இடி விழுந்தாலும் போதும் பொலபொலவென்று உதிர்ந்துவிடும் அந்த மண்டபம்.
ஆனால் அந்த மண்டபத்துக்குள்ளே- அது என்ன பீடம்? ஓ! அது ஒரு சிவலிங்கம். என்ன கொடுமை இது? சிலந்திக்கூடுகள் தம் இழைகளால் லிங்கத்தைச் சுற்றிக்கொண்டு, எந்த மார்க்கண்டேயனுக்காகப் போரிட்டுக் கொண்டிருக்கின்றன?

எமனுடைய பாசக் கயிறு போலத் தோற்றமளித்த அந்த சிலந்தி வலைப்பின்னல்களை அவன் தன் கைகளாலேயே அறுத்து அகற்றினான். லிங்கத்தின் மீது படிந்திருந்த தூசிகளும் தும்பும், மேலே நேராக விதான ஓட்டை வழியாக விழுந்து கொண்டிருந்த மழைத்தண்ணீரில் கரைந்தோடி லிங்கத்திற்குப் புதுப்பொலிவு கொடுத்துக் கொண்டிருந்தது. “அடடா… இந்த சிவாலயம் இப்படி எழில்கெட்டுப் போயிருக்கிறதே! எனக்கு மட்டும் வசதி இருந்தால், இந்த ஆலயத்தை உடனே புனருத்தாரணம் செய்வேனே!” என்று அங்கலாயத்துப் புழுங்கினான் விஜயன். நான் உழைப்பேன். அதிகம் சம்பாதிப்பேன். என் வருவாயைக் கொண்டு இந்தப் பாழடைந்த மண்டபத்தைப் புதுப்பிப்பேன். இந்த சிவலிங்கத்தைத் தூய்மைப்படுத்துவேன்.

மண்டபத்தைச் சுற்றிலும் நந்தவனம் அமைப்பேன். ராஜகோபுரம் கட்டுவேன். கோபுரம், ராஜகோபுரம், உட்பிராகாரங்கள், பெரியமணி மண்டபம், புதுப்பிக்கப்பட்ட ஆவுடையார், அதன்மீது புதுமெருகு கொண்ட சிவலிங்கம்… அடடா… புதிய கோயிலுக்கு கும்பாபிஷேகம் செய் வேன். மங்கல ஒலி முழங்க, வேதியர் புடைசூழ திருக்குடம் ஏந்தி கோயிலை பவனி வருவேன். சாரத்தில் ஏறி திருமஞ்சனம் செய்வித்து கும்பாபிஷே கம் செய்வேன். சுற்றுவட்டார கிராமத்து மக்களெல்லாம் திரண்டு வந்து கூடுவார்கள். அடடா… அப்போதுதான் எவ்வளவு பிரமாண்டமாக இந்தக் கோயில் வளர்ந்திருக்கும்! எத்தனை லட்சம் பக்தர்கள் இந்தக் கோயிலுக்கு வருவார்கள்! அவர்களுடைய துயரெல்லாவற்றையும் இங்கு எழுந்தருளியி ருக்கும் எம்பெருமான் எப்படியெல்லாம் தீர்த்துவைப்பார்! எம் நாயகன்தான் எவ்வளவு கம்பீரமாக கொலுவீற்றிருப்பார்!

தினசரி ஆகமங்கள் என்ன, திரு விழாக்கள் என்ன, பண்டிகைகள் என்ன, எவ்வளவு கோலாகலமாக இந்தக் கோயில் கொண்டாடப்படும்! எவ்வளவோ தருமங்கள் இக்கோயில் மூலமா கச் செய்யப்படும்! அதில் உள்ளூர்வாசிகள் மட்டுமின்றி வெளியூர் பக்தர்களும்தான் எத்தனை ஆயிரம்பேர் பயனடைவார்கள்.விஜயனின் கற்பனை எல்லை கடந்து போயிற்று. மானசீகமாகவே கோயில் கட்டி கும்பாபிஷேகமும் நடத்திவிட்டான். அந்த சிவனுக்கு பிரதோஷ காலத் தில் பாலால், பன்னீரால், பச்சரிசிமாவால், கரும்புச்சாறால் அபிஷேகம் பண்ணி ஆனந்தம் கொண்டான். பளீரென்று ஒரு மின்னல். கற்பனை கலைந்தது. அதிர்ச்சியுடன் கண் விழித்தான். விரிசல் விட்ட விதானத்திலிருந்து மின்னல் பேரொளி. அந்த ஒளியில் அவன் கண்டதுதான் என்ன?

மிகப் பெரியதாகப் படமெடுத்தபடி அவனைப் பார்த்து சீறிக்கொண்டிருந்தது ஒரு கருநாகப் பாம்பு. அவன் சுதாரித்துக் கொள்வதற்குள் எம்பி அவன் மீது பாய்ந்தது.
பளிச்சென்று ஒதுங்கி, அந்த மண்டபத்தைவிட்டு வெளியே ஓடி வந்து விழுந்தான் விஜயன். பேரிடி ஒன்று விழுந்தது. அந்த அதிர்ச்சியில் மண்டபம் கிடுகிடுத்து, லேசாக முட்டு கொடுத்து கொண்டிருந்த தூண்கள் நழுவ, ஏற்கனவே சிதிலமடைந்திருந்த மேல்விதானம் அப்படியே ‘பொக்’கென்று கீழே விழுந்தது. எந்த பாதிப்பும் இல்லாமல் சிவலிங்கம் மட்டும், கொட்டும் மழை அபிஷேகத்தில் திளைத்தபடி அவனைப் பார்த்துப் பாசமாய் சிரித்தது. அப்போதைக்குத் தான் உயிர் தப்பிவிட்டாலும், மறுநாள் பொழுது விடிந்ததும் ஜோதிடரைப் போய்பார்த்து அவர் குறித்துக் கொடுக்கும் ஆகம விதி களின்படி இந்தக் கோயிலைக் கட்டி, கும்பாபிஷேகமும் செய்ய வேண்டும் என்று தீர்மானமாக நினைத்துக் கொண்டான் விஜயன்.

தன் கிராமத்தை நோக்கி மழையையும் பொருட்படுத்தாமல் நடந்தான். பொழுது புலர்ந்தது. வாசல் கதவைத் திறந்த நாகேந்திரன் திடுக்கிட்டார். வாசலில் காத்திருப்பது யார்? நேற்று யாருடைய ஜாதகத்தைப் படித்து யாருடைய விதி நேற்றோடு முடிந்ததென்று மனசுக்குள் கணக்குப் போட்டு அனுப்பி வைத்தாரோ, அதே கிராமத்தான். இவன் சாகவில்லை. என் கணக்கு தப்பா? இதுநாள் வரை நான் படித்த ஜோதிடக்கலை, தன் அனுபவம், இதுவரை கொஞ்சம்கூடப் பொய்க்காத தன் கணிப்பு, அதெல்லாம், அந்த ஜோதிட அறிவெல்லாம் இவனுடன் ஏற்பட்ட அனுபவத்தில் மாயையாகிவிட்டதா? படித்ததெல்லாம் வீணா? ஆனாலும் அவனை வரவேற்று, முன்னறையில் அமர்த்தி, தன் ஜோதிட ஆய்வு கூடத்திற்குப் போனார் நாகேந்திரன்.

உயரே வைத்திருக்கும் அவனு டைய ஜாதகத்தை எம்பி எடுக்க முனைந்தபோது ஒரு ஓலைச்சுவடி கீழே விழுந்தது. விழுந்து பிரிந்தது. குனிந்து அதை எடுக்கப்போன நாகேந்திரன், பளிச்சென்று தெரிந்த வாசகங்களைப் படித்தார். “எவன் ஒருவன் மானசீகமாக சிவன் கோயிலுக்கு ராஜ கோபுரம் கட்டி கும்பாபிஷேகம் செய்கிறானோ அவனுக்கு மரணம் தள்ளிப்போகிறது.” உடலே சிலிர்த்தது அவருக்கு. விஜயன் மரணத்தை அப்போதைக்கு வென்றுவிட்டான். அப்படியானால் அவன் மானசீகமாக சிவன் கோயில் ஒன்றிற்கு கும்பாபிஷேகம் நடத்தியிருக்கிறான். ஆவல் பொறுக்க மாட்டாமல் அவன் தன்னை சந்தித்த இரண்டு வேளைகளுக்கு இடையே நடந்ததென்ன என்று கேட்டார்.

விஜயன் விரிவாக நடந்ததை விளக்கிச் சொன்னான். தன்னைத் தழுவி இறையருள் வேண்டிய மார்க்கண்டேயனை யமனுடைய பாசக்கயிற்றிலிருந்து மீட்டார் சிவன். விஜயனைப் பொறுத்தவரை தன்மீது படர்ந்திருந்த சிலந்தி வலைக் கயிற்றை அறுத்துத் தள்ளிய சேவைக்காக அவனை மண்டப இடிபாட்டிலிருந்து விரட்டி அவன் உயிரையும் காத்திருக்கிறார் என்பதை ஜோதிடர் நாகேந்திரன் புரிந்து கொண்டார்.

உலகையே வெல்லும் சக்தி

Standard

உலகையே வெல்லும் சக்தி
காமமாகிய இச்சை தோன்றாமற் செய்து தக்க ஆசனத்திலிருந்து, நாம ரூபத்தை நாடும் மனத்தை இருதயம்பரத்திலிருந்து, புற விடயங்களை நீக்கி விகற்பமில்லாமல் தன் சொரூபத்தை நாடி வெளி ஒலி தானே தானாய் ஒத்து வரும் நிலைதனை நிருவிகற்ப மாகுதல் தியான நிலையாகும்.
நீண்ட நேரம் ஆசனத்திலிருந்து தியானம் செய்ய வேண்டுமாதலால், தக்க ஆசனம் அமைத்துக் கொள்ள வேண்டும், உடலுக்கு ஊறு விளைவிக்காதும், உஷ்ணததை கொடுக்காததும், தியானத்தினால் உடலில் காந்த சக்தி பாய்வதாலும், அந்த சக்தி பூமியில் ஆகர்ஷணம் செய்யாமலும், ஆசனம் அமைத்துக் கொள்ள வேண்டும்,நாடி நரம்புகள் வேறுபாட்டை அடைந்து புது இயக்கம், உடலில் தோன்றும், இது பெரும்பாலும் இது முதுகெலும்புப் பகுதியில் உண்டாகும், ஆதலால் தலையும் உடலும், மார்பும் ஒரே நேர்கோட்டில் இருக்கத்தக்க ஆசனமே ஏற்றது,இதில் பத்மாசனமே மிகச் சிறந்தது.
தியானம் செய்யவதற்கு சரியான இடம் மிக அவசியம் இயற்கை சூழ்நிலையில் நல்ல காற்றோட்டமான சஞ்சலனமற்ற நிசப்தமான இடமும், ஏற்றதாகும், தர்பை ஆசனம்,உடலில் ஏற்படும் ஆற்றலை பூமிக்குள் ஈர்க்காது, இலகுவான பத்மாசனம் சித்தாசனம் போன்றவைகளில் எதேனும் ஏன்றை கைக் கொள்ள வேண்டும், புலித்தோல், துணி ஆசனமும் யோகசனம் செய்ய சிறப்புடையது, எண்ண அலைகளை ஆர்ப்பரிக்காது ஒரே மனமாக முனைப்பட்டு சாதனை புரிய வேண்டும், சபல எண்ணங்களையெல்லாம் நசிக்க செய்து நீண்ட தவமிருந்து வெற்றியடைய வேண்டும், இப்படி நீண்ட காலமாக சாதனை புரிந்து இறையருள் பெற்றவர்கள் முனிவர்களும் ஆச்சாரியர்களும் ஆழ்வார்களும் ஆவர்,
வேகமாக ஓடும் மனிதன், திடீரென்று ஓடுதிசையில் இருந்து மறுதிசைக்கு உடனே மாறமுடியாது, சிறிது சிறதாக வேகம் குறைத்துத்தான் திசை திருப்ப வேண்டும், அதுபோல இந்திரயங்கள் மிக வேகத்துடன் விஷசுகத்தில் சஞ்சரித்துக் கொண்டிருப்பவர்களளை திசை திருப்பி, மாற்றி தியானத்தில் ஈடுபடுத்தவே ஆசனங்கள்.
நான்காம் நிலை பிராணாயாமம் சாதனையால் தோஷங்களை போக்கி மனதில் உண்டாகின்ற சஞ்சலமாகின்ற கில்மிஷத்தை களைகின்றது, கில்விஷத்தை நீக்கின் பவித்ராமான ஆத்மாவை சிந்திக்க வைக்கிறது, அப்படி சிந்தனையுடன் மூச்சை உள்ளிழுத்து,நிறுத்தி வெளியிடும் சாதைக்கு பூரகம் – கும்பகம்- ரேசகம் என்ற மூன்று பிரிவுகளாக உடையதுதான் பிராணயாமம்.
இந்த உடலுக்கு உயிர் முக்கியம், அதுதான் காற்று எனப்படும் ப்ராணன் , அது நாடி நரம்பு 96 தத்துவத்தையும் மயிர்க்கால்கள் வழியாகவும் பாய்ந்து கொண்டிருக்கிறது. அதை வீணாக்ககாமல் பிராணயாமம் என்ற முறையில் பதனப்படுத்தினால் நீண்ட காலம் உயிர் வாழலாம், பிராணனை வசப்படுத்தினால் பசி, தாகம், முதலியன அடக்க முடியும், எப்பேர்ப்பட்ட குளிரையும், கடுமையான உஷ்ணத்தையும், தாங்கும், சக்தி கிடைக்கும்,எனவே பிராணயாமம் சித்தியடைந்தவர்களின் சக்தி அபூர்வமானது,
வெளியே உள்ள காற்றை குறிப்பிட்ட நேரம் வரை உள்ளே இழுப்பது பூரகம் எனப்படும், அதேபோல் உள்ளே இழுக்கப் பட்ட காற்றை குறிப்பிட்ட நேரம் நிறுத்தி, சாதனை புரிவது கும்பகமாகும், உள்ளே தடுத்து நிறுத்தி வைத்த காற்றை குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகு வெளியேற்றுவது ரேசகமாகும், நாம் உள்ளே வாங்கிய காற்றை நான்கு விநாடி நேரமாவது இழுக்க வேண்டும், அப்படி உள்ளே காற்றை எட்டு விநாடியாவது கும்பகம் செய்ய வேண்டும், பின்னர் கும்பித்த வாயுவை எட்டு விநாடி நேரம் ரேசகம் செய்யது மூச்சுக் காற்றை வெளியேற்ற வேண்டும், இப்படி செய்யும்பயிற்ச ஒரு மனிதன் முதலில் கைக் கொள்ள வேண்டி சராசரி பயிற்சியாகும், ஆனால் பயிற்சி சாதனையால் கைவல்லியாகி அதே உள்ளே இழுக்கும் வாயுவை பதினாறு விநாடியாகவும், கும்பகத்தை நிறுத்தி வைப்பதை அறுபத்தி நான்கு விநாடி கும்பித்து, பின்னர் வெளியே விடும் ரேசகத்தை முப்பத்திரண்டாக பயிற்சியில் கொண்டு வரமுடியும் என்று திருமந்திரத்தில் திருமூலர் விளக்குகின்றார்,
“ஏறுதல் பூரகம் ஈரெட்டுவாமகத்தால்
ஆறுதல் கும்பகம் அறுபத்து நாலதில்
ஊறுதல் முப்பத்தி ரண்டதி ரேசகம்
மாறுதல் ஒன்றின் கண் வஞ்சகமாமே, —– என்கிறார்.

மனம் பிராண வாயுவின் சஞ்சாரத்திற்கு ஏற்ப விஷ சுகங்களில் சஞ்சரிக்கும், அந்த சலனத்தை நிறுத்தவே நல்ல காற்று பிராணாயாமத்தின் மூலம் உள்ளே நிறைய தேக்கி வைக்கிறது, ப்ராணன் நமக்கு உணவு நீர், காற்று சூரியன் மூலம் கிடைக்கிறது, அது எங்கும் நிறைந்த பொருள், அது நிலை சக்தியாகவோ சலன சக்தியாகவோ இருக்கலாம், நரம்பு மண்டலங்களின் மூலம் பிராணன் உட்கிரகித்து கொள்ளப்படுகிறது, நம் தேவைக்கு வேண்டியது போக எஞ்சிய பிராணன் மூளையிலும், நரம்பு மண்டலத்திலும் சேர்த்து வைக்கப்படுகிறது.பிராணயமம் ,மனோமயம் ,அன்னமயம், இம் மூன்றும் சுத்தப்படுத்தப்பட்டால் எதுவும் சாத்தியமாகும், பிராணயாமம் தெய்வீக முக்கியத்துவம் வாய்ந்தது, தெய்வீக சக்திகளை விழிக்க செய்கிறது. பிராணயாமம் செய்ய செய்ய மின் சக்தி பாய்வதை உணரலாம், மனதில் உற்சாகம் உண்டாகும், மனதில் நினைத்ததை சாதிக்கக் கூடிய சித்தியுண்டாகும், ப்ராணன் உடலில் தொழிலாகவும், நரம்பிலுள்ள ஓட்டமாகவும், வலிமையாகவும் தோன்றுவது, பிராணசக்தி எண்ணம், முதலான இழிந்த சக்தி அனைத்தும் பிராணனின் வெளித்தோற்றம், நாம் மூச்சு விடும் காற்று ஒரு நாளைக்கு எண்ணிக்கை 21600 மூச்சாகும், இம் மூச்சுக்களை ஆறு ஆதாரங்களில் ஒவ்வொன்றிலும் கணக்கிட்டுள்ளார்கள், இதைத்தான் சித்தர்கள் வேகாக்கால், சாகாக்கால் என்று சொல்வது வழக்கம், அழியாத காற்று என்று அர்த்தம், இது பிராணாயமத்தின் தத்துவத்தை குறிக்கிறது, இதனையே சித்தர்களின் பரிபாசையாக கூறியுள்ளார்கள், இதனை ராமலிங்க சுவாமிகள் தனது பாடல் வரிகளில்
” சாகா கல்வித்தரம் அறிதல் வேண்டும்
வேகாது கால் உணர்தல் வேண்டும் உடன் சாகாத்
தலையறிதல் வேண்டும் தனியருளில் உண்மை
நிலையடைதல் வேண்டும் நிலத்து ” என்கிறார்,

சுவாசிக்கின்ற காற்று பனிரெண்டு மாத்திரை அளவு வெளியேற்றியபின் எட்டு மாத்திரை அளவே மீளத்திருப்பி உட்புகுகிறது, இதனால் பதினாலு மாத்திரை காற்று நஷ்டமாகிறது, இதை திருமூலர்
“ஈராறு கால் கொண்டு எழுந்த புரவியை
பேராமல் கட்டிப் பெரிதுண்ண வல்லீரேல்
நீராயிரமும் நிலமாயிரத் தாண்டும்
பேராது காயம் பிரான் நந்தி ஆணையே. என்கிறார்,

பதினாறு மாத்திரை அளவு சுவாசம் உள்ளிழுக்கப்பட்டால் சமனம் ஆகும், நஷ்டமாகும் வாயுவை நான்கு மாத்திரை அளவு உள்ளே அதிகப்படியாக உட்கொள்வதால் பெறலாம், இதனால் சுவாசத்தின் அளவை சமனப்படுத்தி விடலாம், நல் காற்றோட்டமுள்ள அரையைதேர்ந்தெடுத்து கொள்ள வேண்டும், வயிற்றில் நிறைவான உணவு உண்ட நிலை தவிர்க்கப்பட வேண்டும், உடலை மிகவும் சுத்தமாக வைத்துக் கொள்ள ேவ்ண்டும், பயிற்சி முடிந்த ஒரு மணி நேரம் கழித்தே நீர் குடிக்க வேண்டும்,
பிராணயாமத்தின் சாதனையால் சாதாரண நிலை மாறி உடலில் அபூர்வ புத்துணர்ச்சி பல சாதனைகள் புரிய வேண்டும் என்ற வைராக்கியம் இருக்க வேண்டும், இதனால் நோய் அணுகா நிலையும், நல்ல நினைவாற்றலும், நல் கிரகணமான சக்தியும் “தூர சிரவணங்கள் ” அதாவது வெகுதூரத்தில் நடக்கும் சம்பவங்களை கிரகித்து பார்க்கும் நிலையும் உண்டாகும், இந்த சக்தியும் உயர் சக்தியும் உயிர் ஒட்டமும் ஒன்றாகும், இந்த அபூர்வ சக்தியினால் ஜலத்தை பிராணவாயு , ஜல வாயு என்ற இரு வாயுக்காளாக பிரிக்கலாம், இதன் துணை கொண்டே ராமலிங்க அடிகள் தன் உடலை வாயுவில் கரைத்து மறைந்துள்ளார்கள் என்பது கூற்று. தினமும் காலை, மாலை அப்பியாசம் செய்து வருவதும், சிறிது சிறதாக பயிற்சியை அதிகரித்து, அதிகமாக்கி உடலில் புத்துணர்ச்சியை உண்டாக்கி பழக்கப்படுத்திக் கொண்டால் இதுவே மூலாதாரக் குண்டலியை எழுப்பி நம் உடம்பில் ஆத்ம சக்தியை உண்டாக்கும், என்பது தின்னம் எனவே உலகின் அரிய சக்தியான தியான பயிற்சியில் பிராணயாமம் பயிற்சி செய்து ஆத்ம நிலையை பெறலாம் வாழ்வில் எதையும் வெல்லும் சக்தி பெறலாம்,
திருச் சிற்றம்பலம் .. ஓம் நமச்சிவாயம் ஓம்
மேலும் பல ஆன்மீகத் தேடலுக்கு
http://vpoompalani05.blogspot.in/
https://vpoompalani05.wordpress.com
http://www.vpoompalani05.weebly.com.

அஸ்டமா சித்திக்ள்

Standard

அஸ்டமா சித்திக்ள்
கிடைத்தற்கரிய பிறவி மனிதப் பிறவி, இப்பிறவியில் நம் கரும வினைகளை குறைத்து பிறவா நிலை எனும் வீடுபேற்றை அடைய குரு அருள் கொண்டு திரு அருள் பெற, சரியை, கிரியை, யோகம், ஞானம் எனும் வழிகளை பின்பற்றி யோகிகளான ஞானிகள் அஸ்டாமா சிக்திகள் என்னும் 8 சித்திகளை பெற்ற சித்தர் பெருமக்களே ஆவர், இதனை திருமூலர் திருமந்திரத்தில்
அணிமாதி சிக்திகள் ஆனவ கூறல்
அணுவின் அணுவின் பெருமையின் நேர்மை
இணுகாத வேகார் பரகாயம் மேவில்
அணுவின் தனை எங்கும் தான் ஆதல் என்று எட்டே,
1) அணிமா: அணுவின் அணுவாகும், சித்தி அணுமா அடுத்தவர் கண்ணுக்கு தெரியாது இருத்தல்,அணுவைப் போல மிக நுன்னிய நிலைக்கு உடலைக் கொண்டு சென்று கண்களுக்கு புலப்படாதருத்தல்
2)மகிமா: ஒரே நேரத்தில் பல இடங்களில் தெரிவது, பெரியதினும் பெரியதாகும் சித்தி மகிமா,உடலை மலையைப் போல பிரமாண்டமாகப் பெரியதாக்குதல்
3)இலகிமா: உடலை லெகுவாக்கி கொளல், புகைபோல மிகமிக நொய்தாகச் செய்தலும், விளங்குவதும், கனமான பொருட்களை பஞ்சுபோல லெகுவாக செய்தலும்,உடையது இலகிமா. காற்றைப் போல உடலை லேகுவாக்கி, இந்நிலையில் காற்றில் மிதப்பதும், தண்ணீரில் நடப்பதும் சாத்தியமாகும் கொண்ட சித்தி.
4, கரிமா: அசைக்க முடியாத தன்மை, உடலை கடினமானதாக இயக்கிக் கொள்ளல்,இதுவே கரிமா சித்தி
5,பிராப்தி:நினைத்த நேரத்தில் எங்கும் செல்லல் மேலுள்ள ஆகாயத்தை தீண்டுதல், பூமியில் இருந்து கொண்டே விரல் நுனியால் சந்திரனை தொடும்தன்மை கொண்ட சித்தி. இயற்கை சக்திகளையும், மற்ற எல்லா பொருட்களையும் தன் வசப்படுத்துதல் தன்மன சக்தியினால் எதனையும் மாற்றுதலும், அடைதலும் கொண்ட சித்தி,
6, வசித்துவம்:எல்லாவற்றையும் தன் வசப்படுத்தி எங்கும் தானாக இருக்கும் சித்தி,அனைத்து உயிரினங்களையும்தன் வசம் வசியப்படுத்துதல்
7,பிரகாமியம்: ஐம் பூதங்களிலும் வியாபித்து எழுதல், கூடுவிட்டு கூடு பாயும் தன்மை கொண்ட சித்தி
8,ஈசத்துவம்: அனைத்தையும் தன்வசப்படுத்துதல் உயிர்கெல்லாம் தலைவனாகுதல், படைத்தல், காத்தல், அழித்தல் மறைத்தல், அருளல், ஆகிய ஐந்தொழில்களான செயல்களை செய்யும் சித்தி, இதுவே இறை சக்தி என்ற ஈசத்துவ சித்தி,
மேலும் பல ஆன்மீகத் தேடலுக்கு
http://vpoompalani05.blogspot.in/
https://vpoompalani05.wordpress.com
http://www.vpoompalani05.weebly.com.

காலபைரவாஷ்ட்டாமி

Standard

காலபைரவாஷ்ட்டாமி

பைரவ அஷ்டமி: பவுர்ணமியை அடுத்து வரும் தேய்பிறையில் அமையும் அஷ்டமி, சிவபெருமானை வழிபட மிகவும் உகந்த நாள். பைரவரை வழிபடவும் இந்த தேய்பிறை அஷ்டமியே சிறந்த நாள். பைரவர் பூஜைக்கு கைமேல் பலன் உண்டு எனச் சொல்வதுண்டு. பைரவரை, அஷ்டமி திதியில் தீபமேற்றி வழிபட்டால் இழந்த செல்வத்தை பெறலாம். சொர்ண பைரவருக்கு 108 காசுகளால் அர்ச்சனை செய்து அக்காசுகளை வீட்டில் வைத்துக்கொள்ள செல்வம் நிலையாகத் தங்கும். தீராத நோய்கள் தீர பைரவ ஹோமமும், அபிஷேகமும் செய்து வரவேண்டும். திருமணத்தடை நீங்க ஞாயிறு அஷ்டமி திதியில் விபூதி அபிஷேகம் செய்து, மிளகு வடை சாற்றி வழிபட திருமணம் கூடி வரும். இழந்த செல்வத்தைப் பெற 11 அஷ்டமி திதிகளில் பைரவ தீபம் ஏற்றி வர வேண்டும். பைரவ தீபம் என்பது மிளகை சிறுமூட்டையாகக் கட்டி எள் எண்ணெயில் ஊறவைத்து ஏற்றுவதாகும். சனிதோஷம் நீங்க பைரவருக்கு செந்நிற மலர்களால் அர்ச்சனை செய்து பைரவ தீபம் ஏற்றலாம். ஒன்பது சனிக்கிழமை இவ்வாறு செய்ய வேண்டும். குழந்தைப்பேறு இல்லாதவர்கள் பைரவரை பைரவ அஷ்டோத்திரம் சொல்லி சிவப்பு நிறப் பூக்கள் கொண்டு ஆறு தேய்பிறை அஷ்டமியில் அர்ச்சனை செய்து வர வேண்டும். நவக்கிரக தோஷத்தால் பாதிக்கப்பட்டு இருப்பவர்கள் செவ்வரளிப் பூக்களால் பைரவ அஷ்டோத்ர சதநாமாவளி பூஜை செய்ய வேண்டும். வறுமையில் பாதிக்கப்பட்டு இருப்பவர்கள் வளர் அஷ்டமி திதிகளில் ஸ்ரீபைரவ அஷடோத்ர சத நாமாவளி சொல்லி வில்வம் மற்றும் முல்லை மலர்களால் அர்ச்சனை செய்து 11 பைரவ தீபங்கள் ஏற்றி வரவேண்டும். 16 அஷ்டமி திதிகளில் இவ்வாறு செய்ய வேண்டும்.

சத்” “சித்” “ஆனந்தம்”

Standard

“சத்” “சித்” “ஆனந்தம்”
ஒரு முகப்பட்ட மனத்தினால் அறிய முடியாததை அறிந்து கொள்ளும் திறன் உண்டாகிறது. இது மனோதத்துவ ரகசியனம், ஜீவனை இயக்குவது மனம். இந்த மனம் பண்பட்டால் தான் உயர்வு, ஒன்றை தானாக அறிவது மனத்தினால்தான்.பிறரால் அறிவது வாக்குகளால், இவை இரண்டின் துணையில்லாமல் எதையும் அறியமுடியாது, இந்த மனத்தால் பிரம்மத்தையும் அறியமுடியாது. பிரம்மத்திற்கு மனம் , சரீரம் போன்றதே. மனத்தின் உள்ளேயிருந்து கொண்டு ஆள்வது பிரம்மமே.
எழுகின்ற எண்ணங்களை ஒய்வு பெறவைப்பதாலே சுகம் உண்டாகிறது. விருப்பு வெறுப்பாகிய எண்ணத் தோற்றமே துக்கம், எண்ண ஒடுக்கமே சுகம், எண்ணங்களே சுகத்திற்கு சத்ரு, எண்ணங்கள் ஒய்ந்தால்தான் சுகம், தானேதான் சுகம் என்பதை உணர்ந்தால் மனம் அடங்கும், சுகத்தை அனுபவிக்க வேண்டும், அற்ப காமனாய் இராதே. பூர்ண காமனாய் இரு, உன்னுள்ளே உனது இயல்பாகவே இருந்து “சத்” விளங்கிக் கொண்டிருக்கிறது. “சித்” தான் நீ. ஆனந்தத்தை அடையும் போது சச்சி தானந்தமாகிறாய். மனம் இரண்டு விதமாக ஒடுங்கும், தற்காலிகமாக ஒடுங்கும் நிலைக்கு மனோலயம் என்று பெயர், எண்ணங்களே மனம் எண்ணங்களே பல கோடி ” நான்” என்கிற எண்ணமே எல்லா எண்ணங் களுக்கும் ஆணிவேர், ” நான்” என்கிற இந்த எண்ணத்தை அழித்தால் எல்லா எண்ணங்களையும் அழித்து விடலாம், மனத்தினால் கேட்பது, பார்ப்பது, நுகர்வது போன்ற பல காரியங்கள் மனத்தால் நடைபெறுகிறது, மனம், புத்தி, சித்தம், அகங்காரம் என்று நான்கு பிரிவுகள்:
1 எந்த காரியத்தையும் செய்து முடிக்க காரணமாய் இருப்பதுவும் புத்தியின் தூண்டுதலால்,
2, நின்ற செயல்படுவது சித்தம்
3, நான் செய்கிறேன் என்று நினைப்பது அகங்காரம்
4, எப்படி முடியுமோ என்று தவிப்பது மனம்
மூன்று அவஸ்வதைகளின் குண பேதங்கள்
மனிதனுக்கு மூன்று நிலை இயற்கை மாறுதல்கள் உண்டு, அவையாதெனில்
விழிப்பு நிலை – ஜாக்ரத்
உறக்க நிலை – ஸுஷுப்தி
கனவு நிலை -ஸ்வப்னம்
கனவு நிலையில் உண்டாகின்ற மாறுதல்களை விஞ்ஞானிகள் பலவித ஆராய்ச்சி செய்துள்ளனர், இந்த ஆராய்ச்சியின் பயனாக இம்மூன்று நிலைகளில் தனியான வேறுபட்ட நிலையை இருப்பதை உணர்ந்தனர், ஒரு குணத்ததில் சாந்த குணம் இருக்கிறது. மற்றொரு நிலையில் கோபம் இருக்கிறது. ஆனால் இரண்டு நிலைகளிலும் இருப்பவர் ஒருவனே, இந்த மாதிரி அவஸ்தை பேதங்களில் ஒன்றுக்கொன்று விரோதமான காரியங்களை செய்தாலும் வேறு வேறு விதமான தேகமும், மனதும் இருந்தாலும், எல்லா அவஸ்தைகளிலும் இருப்பவன் ஒருவன் ஒருவனே யோகியானவன் இந்த மூன்று நிலைகளை கடந்து தெய்வ நிலை என்கிற தனக்குதானாய் இருப்பவன், ஒரு அவஸ்தை இருக்கும் போது மற்றொன்று அங்கு இருப்பதில்லை, விழிப்பு நிலையிருக்கும் போது கனவு நிலை இல்லை. கனவு நிலை இருக்கும் போது உறக்க நிலை இல்லை. உறக்க நிலை இருக்கும் போது விழிப்பு நிலை இல்லை. இந்த மூன்று அவஸ்தைகளிலும், தொடர்ந்து இருந்து , அவைகளிடமிருந்து வேறாக நின்று அவைகளின் இருக்கைக்கும், இன்மைக்கும் சாட்சியாய் இருப்பதுதான் துரியமாகிய ஆத்மா , ” நான் ” அது எக்காலத்திலும் அறிவில்லாதது. இந்த அவஸ்தை மூன்றம் ஒன்றாக நிகழ்வது இல்லை. ஆகையால் மித்தை – பொய் மாறாமல் தொடர்ந்து இருக்கும் இந்த அவஸ்தைகள் தோன்றப்பட்ன.
ஒரே தீபத்தில் மூன்று நிறங்கள் தோன்றுவது போல், விழிப்பு, நிலையில் கருவி காரணங்களும் சாட்சியாகவும், உறககத்தில் தனக்குத்தான் சாட்சியாகவும், துரியத்தில் அகண்டகாரமான சொரூப வடிவமாக விளங்கும், அதற்கு அன்னியமாக ஒன்றுமில்லை. இந்த மூன்று அவஸ்தைகளிலும் தொடர்ந்து எவ்வித அறிவாகிய ஆத்மா, தன்னிடம் ஆரோபமுல்லாமல் இருக்கும் நிலைதான் துரியவஸ்தை, இது நான்காவது உறக்கத்தில் அஞ்ஞானத்தின் மறைப்பு இருக்கிறது, இந் மறைப்பு இல்லாமல் தான்தானாக இருக்கும் சொரூப ஆனந்த அனுபவமே துரியம் என்பது, அதைத்தான் தூங்காமல் தூக்கம் என்பதாகும், ஆத்மா என்பதை உணர்த்துவதற்காக துரியம், இந்த துரியமான ஆத்மாவே, எல்லா உருவங்களிலும் ஊடுருவி இருக்கிறது, இப்படி இருப்பதாலேயே இதற்கு சத்தியம், ஞானம், ஆனந்தம், நித்யம்,பூரணம் என்று எல்லா மகரிஷிகளால் கொடுக்கப்பட்டது, எனவே மனதை ஒருநிலைப்படுத்த சாதனைகளை தவிர வேறு ஒன்றும் இல்லை. இந்திரியங்களை கட்டுபடுத்தி மனதை அடக்கினால் எல்லா காரியங்களுமே சித்திக்கம், புலனடக்கத்துடன் சத்யமும் அகிம்ஸை அவசியம் இருக்க வேண்டும், அஷ்டாங்க யோகத்தின் மூன்றாம் நிலை இதுவே. ஆஸனம் யமம், நியமம், எல்லாவற்றிக்கும் நிலையான இருப்பிடம் வேண்டும், உடலுக்கு வருத்தமில்லா இருக்கையை அமைத்துக்கொள்ள வேண்டும், அப்போதுதான் இந்திரியங்களை அடக்குவதற்கு ஒருவித வழியாகும், சரீரததில் பல மாறுதல்கள் தியானத்தின் போது ஏற்படும், இந்த மாறுதல்களே சச் சித் தானந்தம் என்பதாகும்,
மேலும் பல ஆன்மீகத் தேடலுக்கு
http://vpoompalani05.blogspot.in/
https://vpoompalani05.wordpress.com
http://www.vpoompalani05.weebly.com.

ஆன்மீக சிந்தனைகள் சில

Standard

ஆன்மீக சிந்தனைகள் சில
மனத்தூய்மை பெறுவதும், பிறருக்கு உதவி செய்வதும்தான் எல்லா வழிபாட்டின் சாரமாகும்
தாய்தந்தையரிடம் கடவுளைக் காணாதவர்கள் கோயிலில் காண முடியாது
இறைவழிபாடு அல்லது பிராத்தனை என்பது, இறைவருடன் நாம் தொடர்பு கொள்வதற்கான ஒரு சாதனமாகும்
ஒரு மதமும் நாடும் முன்னேற வேண்டுமானால் மூட நம்பிக்கை ஒழிய வேண்டும்
நல்ல எண்ணமோ நல்ல செயலோ என்றும் வீணாவதில்லை
இரக்கமற்ற அறிவை விட அறிவற்ற இரக்கமே மேலானது
இனிய வார்த்தை இரும்புக் கதவையும் திறந்து விடும்
நற்குணங்கள் யாவும் கடவுளை நெருங்க உதவும்  சாதனங்களாகும்
வளர்ச்சி அடைவதுதான் வாழ்க்கை, அந்த வளர்ச்சிக்கு அன்பு, நேர்மை, பொறுமை ஆகியன வேண்டும்
வெறுப்பு அரக்க குணம், மன்னிப்பது மனித குணம், மறப்பது தெய்வ குணம்
எப்பொழுதும் கொடுத்து வாழ வேண்டும், ஒருபோதும் கெடுத்து வாழக்கூடாது
பிறக்கு உதவி ெசய்ய நாம் எப்பொழுதும் தயாராக இருந்தால், நமக்கு உதவி செய்ய இறைவர் காத்திருப்பார்,
கஷ்டத்திலும் நேர்மையாக இரு, நீ ஏமாற்றப் பட்டாலும், பிறரை ஏமாற்றதே
தெய்வ நம்பிக்கை உன்னை கைவிடாது,
ஒருவனை நீ எந்த வார்த்தை சொல்லி திட்டுகிறாயோ, அதே வார்த்தையில் எப்போதாவது ஒருமுறை நீ திட்டப்படுவாய்
பாவம் என்பது நீ செய்யும் தீமை
புண்ணியம் என்பது நீ செய்யும் நன்மை,
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்,
திருச்சிற்றம்பலம்
மேலும் பல ஆன்மீகச் சிந்தனைக்கு
http://vpoompalani05.blogspot.in/
https://vpoompalani05.wordpress.com
http://www.vpoompalani05.weebly.com.