Thiruppuvana Thiruvilaiyadal

Standard

திருப்புவனம் என்ற திருத்தலம் மதுரையில் இருந்து 19 கிலோமீட்டர் தொலைவில் ராமேசுவரம் செல்லும் வழித்தடத்தில் உள்ளது. வைகை நதியின் மேற்குக்கரை ஓரம் உள்ள பெரிய கோவிலில் திருப்புவனாதர் என்னும் புஷ்பவனேசுவரர் சவுந்தர நாயகி அம்பிகையுடன் எழுந்தருளி உள்ளார். அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகியோரின் பாடல் பெற்ற பாண்டிய நாட்டின் 11–வது தேவாரத் தலம் என்ற பெருமைக்குரியது.

பக்தியில் ஒரு நடனமாது

புகழ்பெற்ற இந்த ஊரில் நாட்டியமாடும் பெண்கள் பலர் இருந்தனர். அவர்களுள் பொன்னனையாள் என்னும் நடன மங்கையும் வசித்து வந்தார். ஒழுக்கம், அறவழி ஆகியவற்றுடன் இந்தப்பெண் வாழ்ந்து வந்தார். சிவபெருமான் மீது அளவுகடந்த அன்பு கொண்டதுடன், தினமும் தனது வயதுள்ள பெண்களுடன் வைகை நதிக்குச்சென்று நீராடி, பின்னர் கோவிலுக்குச்சென்று சிவனை வணங்கி, இறைவன் முன்பு நடனம் ஆடி நாட்டியாஞ்சலி செலுத்துவது வழக்கம்.

அதுமட்டுமின்றி தினமும் தனது வீட்டில் உணவு சமைத்து அதை சிவனடியார்களுக்கு வழங்கி மகிழ்வதை பெரும்பேறாகக் கருதி வந்தார்.

ஒரு நாள் பூவனநாதர் கோவிலில் நடனமாடும் போது, இறைவனை உற்று நோக்கி வழிபட்டார். அப்போது, ‘இறைவா உன்னைப் பொன்னே மணியே என்று அடியவர்கள் பாடி மகிழ்கிறார்கள். அதன்படி உனக்கு சொக்கத்தங்கத்தால் சிலை செய்து பார்த்தால் எவ்வளவு அழகாக இருக்கும். ஆனால் உனக்கு தங்கத்தால் சிலை செய்ய இந்த ஏழையால் முடியாதே. அதற்கு மிகுந்த பொன்னும், பொருளும் தேவைப்படுமே. அதற்கு நான் என்ன செய்வேன் என்ற உள்ளம் மருகி உருகினார்.

ஒவ்வொரு பக்தருக்கும் ஒவ்வொரு விதமான ஆசைகள். சில ஆசைகள் சுயநலத்தோடு இருக்கும், சில பொதுநலத்தோடு இருக்கும். அதுபோல பொன்னனையாளுக்கு நடராஜப்பெருமானை பொன்னார் மேனியாகக்காண வேண்டும் என்பது அளவிடமுடியாத ஆசையாக இருந்தது.

சித்தராக வந்த சிவன்

பக்தர்களை சோதிப்பது மட்டுமல்ல, அவர்களின் விருப்பத்தையும் நிறைவேற்றி வைப்பதில் விருப்பம் உள்ளவன் எம்பெருமான் சிவன். அத்தகைய சிறப்பு மிகுந்த இறைவன் தனது பக்தையான பொன்னனையாளின் விருப்பத்தை நிறைவேற்ற முடிவு செய்தார். இதன்படி ஒரு நாள் திருநீறு பூசிய மேனியும், செம்பவளச் சடாமுடியும், எளிய உடையும், கட்டுவாங்கம் பிடித்த திருக்கரமும், யோகபட்டமும், விபூதிப்பையுடன் சித்தர் வேடமிட்டு பொன்னனையாளின் வீட்டுக்கு அமுது செய்யும் அடியார்களுடன் எழுந்தருளினார்.

அனைத்து சிவனடியார்களும் உணவு அருந்திவிட்டு சென்றபின்னர் இவர் மட்டும் உணவு உண்ணாமல் காத்திருந்தார். பின்னர் பொன்னனையாளை அழைத்து ‘உன் மனதில் ஏதோ கவலை இருப்பது போல தெரிகிறது. உன் முக வாட்டத்திற்கு காரணம் என்ன? நீ உண்மையை சொன்னால் தான் நான் உணவு உண்பேன்’ என்றார்.

சிவனடியாரிடம் தன்மனக் குறையை வெளிப்படுத்தினார் பொன்னனையாள்.

‘அய்யனே, என்னுடைய எண்ணம் எல்லாம் இறைவனை பொன்னால் செய்து பூஜிக்க வேண்டும் என்பது தான். ஆனால் அதற்கு ஏற்ற பொருளாதார வசதி எனக்கில்லை. என்ன செய்வது என்று தெரியாமல் கலங்கித்தவிக்கிறேன்’ என்றார்.

பக்தையின் ஆசையை நிறைவேற்ற திருவுள்ளம் கொண்டார் சித்தர் வேடத்தில் வந்த சிவன்.

‘அம்மா உன் ஆசையை நான் நிறைவேற்றுகிறேன். உன் வீட்டில் உள்ள பித்தளை, செம்பு, இரும்பு போன்ற உலோக பாத்திரங்களை எல்லாம் கொண்டு வா’ என்று சொன்னார். இதன்படி தனது வீட்டில் உள்ள பாத்திரங்களை எல்லாம் எடுத்து வந்து சிவனடியாரின் முன்பு வைத்தார் பொன்னனையாள்.

சித்தர் வேடத்தில் வந்த சிவன் அந்த பாத்திரங்கள் மீது திருநீறு தெளித்து ஆசீர்வதித்தார். பின்னர் பொன்னனையாளிடம், ‘அம்மா இந்த பாத்திரங்கள் அனைத்தையும் இன்றிரவு தீயில் இட்டு எடுத்தால் பொன்னாகி விடும். அதைக்கொண்டு உன் விருப்பப்படி இறைவனின் திருவுருவை பொன்னால் செய்து கொள்’ என்று அருளி மறைந்தார்.

பொன்னாய் மாறிய பாத்திரங்கள்

மதுரை சோமசுந்தரப்பெருமானே சித்தராய் வந்து ரச வாதம் எனும் திருவிளையாடல் செய்து அருளியதை அறிந்து நெகிழ்ந்து போய், அவர் சொன்னபடியே செய்தார் பொன்னனையாள். பாத்திரங்கள் எல்லாம் பொன்னாக மின்னின. அவற்றைக் கொண்டு சிவபெருமானின் தங்கத்திருமேனியை உருவாக்கி அதனை பிரதிஷ்டை செய்தார். அந்தச்சிலையின் பேரழகினை கண்களால் அள்ளிப்பருகியபின்னும் ஆவல் தீராமல் கன்னத்தில் செல்லமாகக் கிள்ளி முத்தமிட்டுத் தனது அன்பினை வெளிப்படுத்தினார். பின்னர் சில காலம் வாழ்ந்து சிவத்தொண்டு புரிந்த பொன்னனையாள் முக்தி பேறு பெற்றார்.

பக்தி உணர்ச்சி மேலிடும் இந்த காட்சி திருபுவனம் கோவிலில் நடராஜர் சன்னதி எதிரே ஒரு தூணில் புடைப்புச்சிற்பமாக இன்றும் காட்சி தருகிறது. கோவிலின் நுழைவு வாசலில் உள்ள பொன்னனையாள் உருவச்சிலையும் பார்ப்போரை பரவசப்படுத்துகிறது.

Advertisements

வீரத்துறவி விவேகானந்தர்

Standard

படம்

நேற்று என்பது இறந்தகாலமாகிவிட்டது. நாளை என்பது நமக்கு வராமலேயே போய்விடலாம். இன்று மட்டுமே நிச்சயம். அதனை வாழ்ந்து காட்ட வேண்டாமா? இன்றைய வாழ்க்கையே நாளைய வரலாறு. நாம் இதுவரை வரலாறு படித்தது போதும்; புதிய வரலாறு படைக்க வேண்டாமா?

“”இத்தகைய வீர இளைஞர்கள் நூறு பேர் முன்வரட்டும், இவ்வுலகத்தையே தலைகீழாக மாற்றிவிடலாம். இப்படிப்பட்டவர்களின் மனோசக்தி, பிரபஞ்சத்தில் உள்ள வேறு எதையும்விட வலிமை படைத்ததாகும். இவர்களின் மனோசக்திக்கு முன்னர் எதுவும் நிற்க முடியாது; பணிய வேண்டியதுதான்…” என்று பேசியவர் சுவாமி விவேகானந்தர்.

வீரத்துறவி விவேகானந்தர் தனது வெற்றிகரமான அமெரிக்கப் பயணத்தை முடித்துக்கொண்டு, 1897 ஜனவரி 26 அன்று தாயகம் திரும்பினார். சென்னையிலும், கொல்கத்தாவிலும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு அவர் பேசிய பேச்சுகள் இந்தியாவை எழுந்து நிற்க வைத்தது; இளைஞர்களை எழுச்சி பெற வைத்தது.

இந்திய இளைஞர்கள் உடல் பலமற்றவர்களாக இருப்பதைக் கண்டு வருந்தினார். அதனால் அவர்கள் சோர்வுமிக்கவர்களாக இருக்கின்றனர்; உழைக்க முடிவதில்லை. சோம்பலும், சுயநலமும் ஒழியாமல் மதநேயமும், மனிதநேயமும் எப்படி வளரும்?

“”எனது இளைய நண்பர்களே! பலமுடையவர்களாக ஆகுங்கள். அதுதான் நான் உங்களுக்கு அளிக்கக்கூடிய அறிவுரை. நீங்கள் கீதையைப் படிப்பதைவிட கால்பந்து விளையாடுவதன் மூலம் சுவர்க்கத்துக்கு அருகில் செல்வீர்கள். உங்கள் கை கால் தசைகளில் இன்னும் கொஞ்சம் பலம் வந்தால், கீதையை நன்றாகப் பொருள்புரிந்து கொள்வீர்கள்…” இவ்வாறு சென்னை வரவேற்பில் அவர் பேசினார்.

இந்தியாவின் புகழையும், இந்து மதத்தின் புகழையும் உலகம் முழுவதும் பரப்பிய விவேகானந்தர், இளைஞர்களின் மேல் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தார். “சுவரை வைத்துத்தான் சித்திரம் எழுத வேண்டும்’ என்பதுபோல இளைஞர்களைக் கொண்டுதான் இந்தியாவை எழுப்ப வேண்டும் என்று எண்ணினார்; எதிர்காலம் என்பது இளைஞர்கள் கைகளில்தான் இருக்கிறது என்று நம்பினார். அதனால்தான் அவர் பிறந்தநாள், “தேசிய இளைஞர் தின’மாகக் கொண்டாடப்படுகிறது.

உலகிற்கு வழிகாட்டும் சுவாமி விவேகானந்தர்!

மூன்றே வார்த்தைகளில் ஒரு நாட்டையும் மக்களையும் கவர்ந்து வெற்றிக்கொடி நாட்ட முடியுமா? அதுவும் அறிவில் சிறந்தவர்களும் பல மதத் தலைவர்களும் நிறைந்த சபையில், தனியொருவனாக நின்று அனைவரது உள்ளங்களையும் கொள்ளையிட முடியுமா?

இதை நடத்திக் காட்டியவர் சுவாமி விவேகானந்தர். இன்றைக்கு 120 ஆண்டுகளுக்கு முன், அமெரிக்காவின் சிகாகோ நகரில், 1893, செப்டம்பர் 11 ஆம் தேதி நடைபெற்ற உலக சர்வ சமயப் பேரவையில் பாரதத்திலிருந்து இந்து சமயப் பிரதிநிதியாகப் பங்கேற்றவர் விவேகானந்தர். அந்த மாநாட்டின் நோக்கங்களை வரையறுத்தவராக அவர் மாறியது ஓர் உலக அதிசயம்.

அப்படி என்ன அவர் புதிய விஷயங்களைச் சொல்லிவிட்டார்? உலகைப் பீடித்திருக்கும் பிரிவினைவாதமும், அளவுக்கு மீறிய மதப்பற்றும், மதவெறியும் உலகை ரத்தக்களரியாக்குகின்றன என்ற அவரது கருத்தில் புதுமை ஏதும் இல்லை. இதை பல நூற்றாண்டுகளுக்கு முன்னமே, சிலுவைப் போர்களின் போதே உலகம் உணர்ந்துவிட்டது. எனில், விவேகானந்தரை மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டியது எது?

இங்கு தான் பாரதத்தின் ஆன்ம வலிமை வெளிப்படுகிறது. விவேகானந்தர் உண்மையில் இந்து சமயப் பிரதிநிதியாக மட்டும் உலக சர்வ சமயப் பேரவையில் பங்கேற்கவில்லை. அவர் அங்கு ஆறு நாட்களில் நிகழ்த்திய உரைகளை வாசிக்கும் எவரும் அவரது தேசபக்தியால் புளகாங்கிதம் அடைவர்.

உலகில் மதவெறியால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவருக்கும் புகலிடம் அளித்த நாட்டிலிருந்து வந்தவன் என்றுதான் தன்னை முதல் நாள் பேச்சில் விவேகானந்தர் அறிமுகப்படுத்திக் கொண்டார். யூதர்களுக்கும் பார்ஸிகளுக்கும் அடைக்கலம் கொடுத்த நாட்டிலிருந்து வருபவன் நான் என்று அவர் நெஞ்சு நிமிர்த்திப் பேசினார். இந்த நெஞ்சுரத்துக்குத் தகுதி உடையவர்கள் வேறு எவரும் அங்கிருக்கவில்லை.

“எங்கெங்கோ தோன்றும் ஓடைகள் அனைத்தும் இறுதியில் கடலில் சங்கமிப்பதைப் போல அனைத்து மதங்களும் இறைவனிடம் சென்று சேர்கின்றன’ என்ற பொருள் தரும், பாரத மக்கள் அன்றாடம் பாடும் சிவ மகிமை ஸ்தோத்திரத்தை அந்தச் சபையில் விவேகானந்தர் பாடியபோது, அடிமை தேசத்தின் ஆண்மை மிக்க ஆன்மா பேசியதை சபை உணர்ந்தது.

இதுதான் அந்த மாநாட்டில் பேசிய பிற மதத் தலைவர்களிடமிருந்து விவேகானந்தரை வேறுபடுத்திக் காட்டியது. உலகம் முழுவதும் மதவெறி தலைவிரித்தாடுகையில் மானுடம் என்ன ஆகுமோ என்ற கவலையில் கூடிய அம்மாநாட்டிற்குத் தெளிவான வழிகாட்டுதலை, ஓர் இந்துத் துறவி என்ற முறையில் விவேகானந்தரால் கச்சிதமாகவும் உறுதியாகவும் வெளிப்படுத்த முடிந்தது.

அவரது பேச்சின் துவக்கமே அதை அடிக்கோடிட்டுக் காட்டியது. “அமெரிக்கா வாழ் சகோதர சகோதரிகளே’ என்ற மூன்றே வார்த்தைகளில், அங்கு கூடியிருந்த 7 ஆயிரம் பேருக்கும் தான் அடுத்து என்ன சொல்லப் போகிறேன் என்பதை அவர் தெளிவுபடுத்திவிட்டார்.

பரிபூரணமான இதயசுத்தியால் அமைந்த கம்பீரமான உடல்மொழியும், தியாகமும் துறவும் அமைத்துக் கொடுத்த அற்புதமான மனத்தெளிவும் அவருக்குப் பொலிவூட்டின. தனது இதய அன்பின் ஆழத்திலிருந்து அவர் கூறிய அச்சொற்கள் போலித்தனமானவை அல்ல என்பதை அந்த விநாடியே சர்வ சமயப் பேரவை உணர்ந்தது. அதனால் தான் வேறு யாருக்கும் கிட்டாத மிக நீண்ட கரவொலியும் வரவேற்பும் அந்த இளம் துறவிக்கு அங்கு கிடைத்தன.

அடுத்தடுத்த நாட்களில் சபையில் சோர்வு ஏற்பட்ட போதெல்லாம் விவேகானந்தரைப் பேச அழைத்து, சர்வ சமயப் பேரவை நிர்வாகிகள் பெருமை பெற்றனர். “இந்தியாவின் இளம்புயல்’ என்று அமெரிக்கப் பத்திரிகைகள் அவரை வர்ணித்தன. அதற்கடுத்த ஆண்டுகளில் அமெரிக்காவிலும் இங்கிலாந்திலும் அவர் நிகழ்த்திய தொடர்  பிரசாரம், வெளிநாடுகளில் இந்தியா குறித்து உருவாகியிருந்த தவறான கருத்துகளை மாற்றி அமைத்தது.

பல நூறு ஆண்டுகளாக பல்வேறு நாடுகளால் சூறையாடப்பட்ட போதும் இந்தியா தனது ஆன்ம வலிமையை இழக்கவில்லை. படையெடுத்து வந்தவர்களையும் சுவீகரித்து, ஜீரணித்து, அவர்களையும் அவர்களது புதிய மதங்களையும் மனமார அரவணைத்ததால் தான் பாரதம் உலகிற்கே வழிகாட்டும் தகுதி பெற்றது. இதற்கு பாரதத்தின் பன்னெடுங்காலப் பாரம்பரியமும் “யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற பண்பாட்டு விழுமியங்களும் தான் காரணம்.

அத்தகைய, உலகையே ஒரு குடும்பமாகப் பாவிக்கும் ’வசுதைவ குடும்பகம்’ என்ற உபநிடத மகாவாக்கியம் அல்லவா விவேகானந்தரை உருவாக்கியது? அதுவல்லவா பிற்காலத்தில் மகாத்மா காந்தியையும் உலகிற்கு ஈந்தது! இதை உலகம் மறந்ததால் அல்லவா, 2001ஆம் ஆண்டில் இதே செப்டம்பர் 11ஆம் தேதி அமெரிக்காவின் இரட்டைக் கோபுரங்கள் தகர்க்கப்பட்டு ஆயிரக் கணக்கான மக்கள் மடிந்து போயினர்!

இன்றும்கூட நாள்தோறும் உலகில் நிகழும் மதவெறி சார்ந்த நிகழ்வுகளும் அதற்கு பரிதாபமாகப் பலியாகும் மனித உயிர்களும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. இதற்கெல்லாம் தீர்வாக உலகிற்கு விவேகானந்தரின் போதனைகளை மீண்டும் முன்வைக்கும் பொறுப்பு பாரதத்திற்கே உள்ளது. சுவாமி விவேகானந்தரின் 150ஆவது ஜெயந்திக் கொண்டாட்டங்கள் நிகழும் இந்த ஆண்டைவிட அதற்கு மிகவும் பொருத்தமான தருணம் வேறு எது?

மனம் செம்மை பெற ஆன்மிகம்

Standard

மனம் செம்மை பெற ஆன்மிகம்
மனம் படைத்தவன் மனிதன், மனத்தை மறந்தால் மனித இயல்பு அகன்று விடும். மனத்தெளிவும் மன உயர்வும் பெற்றவன் வாழ்வின் சுவையை உணர்வான். ஆறறிவு அற்ற விலங்கினம் உடல் வளர்ப்புடன் நின்று விடும். ஆறறிவு பெற்றவனுக்கு மன வளர்ச்சி தேவை. லோகாய சுகங்கள் உடலோடு நின்றுவிடும். உள்ளத்தை தூய்மையாக்காது. இது நல்லது, இது கெட்டது, இது உண்மை-இதுபொய், இது இருப்பது- இது இல்லாதது, இது அழிவது – இது அழியாதது.இது இன்பபம் கொடுப்பது – இது துன்பம் கொடுப்பது இந்த பாகுபாடுகள் சிந்தனை வளம் பெற்றவனிடம் தென்படுஅ இதை விவேகம் அல்லது பகுத்தறிவு என்கிறோம். உடலை அக்குவேராக ஆனிவேராக ஆராய்ந்தால்இதில் சத்தான உண்மை யான அழிவற்ற ஆன்மாவை அடையாளம் காணலாம். ஆன்மாவைத்தவிர மற்ற உறுப்புகள் எல்லாம் அழிவைச் சந்திக்கும், அழியாதது ஆன்மா அழிவது உடல் , அது பகுத்தறியும் பக்குவ மனம் படைத்த சிந்தனையாளர்களுக்கு மட்டுமே இலக்காகும்.
சேசத்திரி சாஸ்திரிகள் சக்தி விகடன்

தங்கள்சிந்தனைக்கு
உடலில் சந்தனம் பூசினால் குளிர்ச்சியை மனம் உணரும். உடம்பில் அடிபட்டால் வேதனையை மனம் உணரும். உள்ளதை உள்ளபடி உணர மனத் தெளிவு வேண்டும். அதை அளிக்கும் திறன் பண்டைய அறநூல்களுக்கு உஉண்டு. மாற்று வழி இன்று வரை உருவாகவில்லை

சேசத்திரி சாஸ்திரிகள் சக்தி விகடன்

பூர்வ ஜென்ம பாவங்களை பூரணமாக கரைக்க – ஒரு அதி அற்புத பரிகார ஸ்தலம் விஜயாபதி

Standard

My guru Arulmigu Sri Sadhananda Swamigal

Rajarishi Vishwamithrar Temple at Vijayapathi 
ராஜரிஷி விசுவாமித்திரர் சந்நிதி விஜயாபதி

 

திலா ஹோமம் , ராமேஸ்வரத்தில் செய்வதைக் காட்டிலும், பல மடங்கு பயனுள்ள , உங்களின் பூர்வ ஜென்ம பாவங்களை பூரணமாக கரைக்க – ஒரு அதி அற்புத பரிகார ஸ்தலம் – இந்த விஜயாபதி. ப்ரம்ம ரிஷி , ராஜ ரிஷியான விஸ்வாமித்ர மகரிஷி – நெடு நாட்கள் தங்கியிருந்த ஸ்தலம்.

 

 இந்த பித்ரு தோஷம் நாம் சேர்க்கும் எந்த ஒரு புண்ணிய காரியத்தையும் நம்மிடம் சேர்க்காமல் தடுக்கும் சக்தி வாய்ந்தது; எனவே, பிதுர் தோஷம் நீக்கிட நெல்லை மாவட்டத்தில் ராதாபுரம் அருகில் இருக்கும் விஜயாபதி என்னும் கடலோர கிராமத்தில் இருக்கும் ஸ்ரீவிஸ்வாமித்ர மகாலிங்கசுவாமி திருக்கோவிலில் நவகலசயாகம் செய்ய வேண்டும். ஆன்மீக ஆராய்ச்சியாளர் மிஸ்டிக் செல்வம் ஐயா கூறுவது    

ஸ்ரீவிஸ்வாமித்ரமஹாலிங்கசுவாமி திருக்கோவில் . 17,50,000 ஆண்டுகளுக்கு முன்பாக,விஸ்வாமித்ர மகரிஷி அவர்களால் நிர்மாணிக்கப்பட்ட சிவாலயம் இது.சில நூறாண்டுகளுக்கு முன்பு,விஜயாபதி ஒரு மாபெரும் துறைமுக நகரமாக இருந்திருக்கிறது .இந்த விஸ்வாமித்ரர் மஹாலிங்க சுவாமி திருக்கோவிலில் மூலவராகிய ஸ்ரீ விஸ்வாமித்ர மஹாலிங்க சுவாமி சன்னதிக்குப் பின்புறம் இந்த சித்தரின் ஜீவ சமாதி அமைந்திருக்கிறது

எத்தனையோ பரிகாரங்கள் செய்தும், கடும் தோஷத்தால் அவதிப்படும் ஆத்மாக்களுக்கு – ஒரு மாபெரும் வரப் பிரசாதம் விஜயாபதி. இங்கு வந்து நவகலச யாகம் செய்த பலருக்கு , பூர்வ ஜென்ம ஞாபகங்கள்…

View original post 395 more words