தேவதாசிகள் பற்றிய வரலாற்று உண்மைகள்

Standard

கடவுளுக்கு இறைப்பணியாற்ற அர்பணிக்கப்பட்ட
தேவரடியார்கள் தேவதாசிகள் ஆன வரலாறு
தேவதாசிகள் பற்றிய வரலாற்று உண்மைகள்

பண்டைக்காலத்தில் சைவ சமயம் தழைக்க கோவில்களில் தேவாரப்பதிகங்கள் பாடுதலும், ஆடல் பாடல் அமைத்து சைவ சமயத்தை வளர்த்து வந்தனர், அந்த வகையில் திருக்கோவில்களில் பல கோவில்களில் ஆடல் மகளிரும் பாடல் மகளிரும் இருந்து சமயப் பணியாற்றினர். இவருள் ‘பதியிலார்’ ஒருவகையினர் : ‘ரிஷபத் தளியிலார்’ (சிவன் கோவிற் பெண்டுகள்) மற்றொரு வகையினர்,

தேவரடியார்

கோவில்களிலிருந்து தொண்டாற்றிய மாதர்களுள் தேவரடியார் ஒரு வகையினர். இவர்கள் கோவிலில் திருவலகிடல், திருமெழுக்கிடல், திருவமுதுக்குரிய அரிசியைத் தூய்மை செய்தல், திருப்பதிகம் பாடல் முதலிய பணிகளைச் செய்து வந்தனர்; திருநீற்றுக் காப்புத்தட்டும் மலர்த்தட்டும் விழாக்களில் ஏந்தி வந்தனர்; விழாக் காலங்களில் அம்மனுக்குக் கவரிவீசினர்; அச்செயலால், ‘கவரிப்பிணா’ என்றும் அழைக்கப்பட்டனர். இங்ஙனம் தேவரடியார் நிலையை அடைந்த பெண்கள் ஒரு குறிப்பிட்ட சாதியரல்லர்; எல்லா இனத்து மகளிரும் இச் சைவப்பிணியை மேற்கொண்டு சூல முத்திரை பொறிக்கப் பெற்றுத் ‘தேவரடியார்’ என்னும் தகுதியைப் பெற்றுவந்தனர். அழகிய பாண்டிய பல்லவரையன் என்ற படைத்தலைவனொருவன் தன் குடும்பப் பெண்களைத் தேவரடியார் ஆக்கினான் என்று திருவல்லம் கோவிற் கல்வெட்டுத் தெரிவித்தலை நோக்க, இவ்வுண்மை இனிது புலனாகின்றது.
தேவரடியார்கள் தேவதாசிகள் ஆன வரலாறு
தேவதாசிகள் பற்றிய வரலாற்று உண்மைகள்
கோவில் திருப்பணிக்காகவும், சேவைக்காகவும் தங்களை முழுமையாக அர்பணித்துக் கொண்டவர்கள் தான் தேவதாசிகள் என அழைக்கப்படும் தேவர் அடியார்கள். இவர்கள் ஆன்மீக இலக்கியம் கோலோச்சி இருந்த ஆறாம் நூற்றாண்டிலிருந்தே மிக மரியாதையாக பார்க்கப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

காலப் போக்கில் இவர்களது பெயர் மட்டுமின்றி இவர்களது மரபும், கலாச்சாரமும் மரியாதையும் கூட மருவிவிட்டது. போதிய அங்கீகாரம் மற்றும் கவனிப்பு இல்லாமல் போனதால் தேவதாசிகள் மிகக் கீழ்த்தரமான முறையில் சித்தரிக்கப்பட்டனர்.

தேவதாசிகள் தமிழ் கலாச்சாரத்திற்கும், கலைகளுக்கும் செழுமை சேர்த்த ஓர் சமூக மரபு கொண்டிருந்தவர்கள்.

தேவதாசி என்பவர்கள் கடவுள் அல்லது கோவிலுக்காக அர்பணிக்கப்பட்ட பெண்கள் ஆவர்கள். இவர்கள் கோவில் மற்றும் கடவுளுக்கு திருப்பணிகள் செய்வதற்காக தானம் கொடுக்கப்பட்டவர்கள்.

தேவதாசியின் வாழ்க்கை என்பது ஆர்வம் நிறைந்த சுவாரஸ்யமான கதையாகும். ஒரு பெண் தேவதாசியாக வேண்டும் எனில், அவள் சில சம்ஸ்காரங்கள் அல்லது வழிச்சடங்குகள் சிலவற்றின் ஊடாகப் பயணித்து வர வேண்டும் எனப்படுகிறது.

சடங்குகள்…

1. சடங்கு பூர்வமான திருமணம்

2. அடையாளப்படுத்தும் புனித நிகழ்வு

3. நிகழ்த்து கலைகளில் ஈடுபடுத்த முன்முயற்சி எடுத்தல்

4. அரங்கேற்றம்

5. கடமைகள் மற்றும்

6. இறுதிச் சடங்காசாரக் கௌரவங்கள்

கி.பி. 900, பல கல்வெட்டுகளில் தேவர் அடியார்கள் எனப்படும் தேவதாசிகள் பெருமான் கோயிலில் கலைகளை காத்து வந்தவர்கள் என்றும். நடனம் மற்றும் பாடல்கள் இயற்றுதல் போன்றவற்றில் ஈடுபட்டு வந்தனர் என்றும் பல கல்வெட்டுகளில் கூறப்பட்டுள்ளன.

கி.பி. 1230 கி.பி 1230-40-க்கு இடைப்பட்ட காலத்தில், இப்போது மகாராஷ்டிரா என அழைக்கபப்டும் நிலத்தை ஆண்ட மன்னன் ராகவாச்சாரியார் தனது குறிப்புகளில் தேவதாசி என குறிபிடப்பட்டுள்ள தகவல்கள் தான் தேவதாசிகளின் தொடக்கமாக கருதப்பட்டு வருகிறது.

மேகதூத் தேவதாசி எனும் இந்த பெயர் முதன் முதலில் காளிதாஸ் எழுதிய மேகதூத் எனும் படைப்பில் தான் குறிப்பிடப்பட்டிருந்தது. தேவரடியார்கள் எனும் பெயரின் பொருளானது தேவர் (இறைவன்) + அடியவர்கள் (சேவகர்கள்) அதாவது இறைவனுக்கு சேவை செய்து வந்தவர்கள் ஆகும்.

அர்ச்சகர்கள் தேவதாசிகள் என்பவர்கள் சமூகத்தில் பெரும் புகழ் மற்றும் மரியாதையுடன் காணப்பட்டவர்கள். கோவில்களில் அர்ச்சகர்களுக்கு அடுத்த இடத்தில் வைத்து பார்க்கப்பட்டவர்கள் இவர்கள் எனவும் வரலாற்று குறிப்புகள் மூலம் அறியப்படுகிறது.

தேவதாசிகள் அவர்களது கலைக்கு கிடைத்த பரிசுகளை மக்களுக்கு நல்ல சேவைகளும் செய்து வந்துள்ளனர். கால்வாய் அமைப்பது, கிராமப்புற சேவைகள் செய்வது என நல்ல வாழ்க்கையை நடத்தி வந்தவர்கள் தான் இந்த தேவதாசிகள்.

விண்ணமங்கலம் என்ற கிராமத்தின் நீர்த்தேக்கம் ஆண்டு தோறும் ஆழப்படுத்தப்பட்டு மராமத்துப் பணிகளும் செய்து வரப்பட்டன. நாற்பத்தி எண்ணாயிரம் பிள்ளை மற்றும் அவருடைய சகோதரி மங்கையர்க்கரசி ஆகிய இரண்டு தேவதாசிகள் ஏரி நீரில் மூழ்கியிருந்த நிலங்களைத் தங்களின் செலவில் மறுபயன்பாட்டிற்குக் கொணர்ந்துள்ளனர்.

அன்னநாடு என்ற இடத்திலும் அவர்கள் திருந்திகை நதியை மூடச்செய்து, நீர்த்தேக்கத்தைத் தோண்டி ஆழப்படுத்தி, கால்வாய் அமைத்து பின் நிலத்தை மீட்டெடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சமூகத்தில் புனிதமாக காணப்பட்டு வந்த இவர்கள், ஆங்கிலேயே படையெடுப்பிற்கு பிறகு தான் களங்கப்படுத்தப்பட்டனர் என்றும் கூறப்படுகிறது.

சில அரசர்கள் மற்றும் சாம்ராஜியத்திலும் கூட கடவுள் திருப்பணிக்காக அர்பணிக்கப்பட்ட இவர்கள், தனிப்பட்ட அரசர்கள் அல்லது பெரும் நபர்களின் இச்சைக்காக இரையாக்கப்பட்டனர் எனக் கூறப்படுகிறது.

சாதிப்பிரிவுகள் வரத் துவங்கிய காலக்கட்டத்தில் இவர்கள் இக்காரணம் கண்டு கீழ் சாதி பிரிவில் சேர்க்கப்பட்டனர். மேலும், இவர்கள் காமத்திற்காக மட்டும் காணப்படுபவர்கள் எனும் சாயம் பூசப்பட்டது.

கடவுளுக்கு இறைப்பணியாற்ற அர்பணிக்கப்பட்ட இவர்கள், சிலரது இச்சை பசிக்கு இரையாகி, இப்போது இவர்களது பெயரே சமூகத்தில் ஓர் அவச்சொல்லாக மாறியிருக்கிறது.

திருச்சிற்றம்பலம்
நன்றி ;திரு, இராஜமாணிக்கம் அவர்களின் சைவசமய கட்டுரை மற்றும் யாழ்பாணம் ourjaffna.com

Advertisements

அருள் சேவடி

Standard

அருள் சேவடி
இறைவருடைய திருவடிகள் நம்முடைய வினைகளைப் போக்கி பிறவா நெறியை அருளும் திறன் உடையவை என்பதை சுந்தரமூர்த்தி மற்றும் நாவுக்கரசர் வாழ்வில் நடந்த நிகழ்வுகளை அவர்களே நமக்கு எடுத்துக்காட்டாக விளங்கினார்கள். அவர்களுக்கு இறைவரே தானே வலிய வந்து அவர்களுக்கு திருவடியைச் சூட்டினார்
சுந்தரர் உலகம் போற்றும் உத்தமராய் வாழ்ந்த திருநாவுக்கரசர் திருப்பணிகள் செய்த தலத்தை பெரிதும் மதித்து போற்றினார். அதனால் அவ்விடத்தை தம் கால்களால் மிதிக்க அஞ்சி அந்த ஊருக்கு வெளியே தங்கினார், திருஞான சம்பந்தர் அவதரித்த சீர்காழியையும்மிதிக்க அஞ்சினார். அந்த ஊரையே புனிதமாக நினைத்துவலம் வந்தார்.
இந்த பண்பாடு பெரியோரை போற்றும் பண்பாடு நம்மிடையே வளர வேண்டும். இந்த உயர்ந்த பண்பாட்டினால் சுந்தரர் பெருமானுக்கும் நாவுக்கரசருக்கும் தானே வலிய வந்து திருவடி சூட்டினார் இறைவர்.
இப்பண்பாட்டினை முதன் முதல் நமக்கு வழங்கியவர் காரைக்கால் அம்மையார்,கயிலையைத் தம் காலால் மிதிக்க அஞ்சி தலையால் நடந்து சென்றார். இதனால் தான் இறைவரே அம்மையே என்று அழைத்தும் அழியாத வரம் கொடுத்து திருவாலங்காட்டில் இன்றும் உறையவைத்துள்ளார்.
காரைக்கால் அம்மையார் காட்டிய வழியில் நின்றவர் திருஞான சம்பந்தர், அம்மையார் இன்றும் எழுந்தருளியுள்ள திருவாலங்காட்டு இறைவரை வழிபடுவதற்கு வந்தார் சம்பந்தர். அத்தலத்தை மிதிக்க அஞ்சி அருகில் உள்ள பழையனூரில் தங்கினார் அம்மையாரை தெய்வமேவே போற்றி கிறார்.
திருவாலங்காட்டு இறைவர் அன்றிரவு சம்பந்தருடைய கனவில் தோன்றி நம்மைப்பாட வருக என அழைத்தார்.
திருநாவுக்கரசு சுவாமிக்கு இறைவர் திருவடி சூட்டிய திறம்
திருநாவுக்கரசர் பல தலங்களை வழிபட்டு கொண்டு திருசக்திமுற்றம் எனும் தலத்தை வந்தடைந்தார். அங்கே எழுந்தருளியுள்ள சிவக்கொழுந்து பெருமானாரை வணங்கினார். பெருமானே கூற்றுவன் என்னுயிரைப் பற்றுவதற்கு முன்பாகவே தேவரீருடைய தாமரை மலர் போன்ற திருவடிகளை என் தலையில் சூட்டியருங்கள் என வேண்டி நின்ாறரர்
கோவாய் முடுகியடுதிறற் கூற்றம்குமைப்பதன் முன்
பூவார் அடிச் சுவடிஎன் மேல் பொறிந்துவை……. த,வே,4

நாவுக்கரசரின் வேண்டுகோளை செவிமடுத்த சிவபெருமானார் நல்லூருக்கு வா என்று பணிந்தார். அவ்வாறே திருநல்லூரை வந்தடைந்த நாவுக்கரசர் செந்தமிழ் பதிகங்கள் பாடி துதித்தார். நல்லூர் பெருமானாரை அப்போது சிவபெருமானார் உன்னுடைய நினைப்பதனை முடிக்கின்றேன் என்றருளி திருநாவுக்கரசரின் சென்னியில் தமது திரு பாதமலர் சூட்டியருளினார். இதன் பொருட்டே இன்றும் இக்கோவிலில் சிவ பக்தர்கள் அனைவருக்கும் அவர் பாதம் சூட்டப்படுகின்றதைக் காணலாம்.
இப்புண்ணியத்தின் பயனால் திருப்புகலூரில் நாவுக்கரசர் இறைவர் திருவருளில் கலந்து பேரின்ப வாழ்வு பெற்றார் என்பது வரலாறு,
திருச்சிற்றம்பலம்
நன்றி தமிழ் வேதம்

“எல்லாம் சிவமயம்” (“சர்வம் சிவமயம் ஜகத்” )

Standard

 “எல்லாம் சிவமயம்”  (“சர்வம் சிவமயம் ஜகத்” )

     சிவன்தான் சிறந்தவர் என்பதற்கு மற்றும் சில காரணங்களைப் பார்ப்போம்.

1. மந்திரங்களுள் சிறந்த காயத்திரி தேவிக்குக் கணவர்.

2. இராமரால் இராவணனை அழிக்க வேண்டி தனுஷ்கோடியில் சிவலிங்கத்தை நிறுவி “ராமேச்வரம்” என்னும் தன் பெயரையே சூட்டி வழிபட்டு இராவணனைவென்று வெற்றி பெறச் செய்தவர்.

3. கண்ணன் கைலாச யாத்திரை சென்று சிவனை வழிபட்டமையால் உலகிலேயே சிறந்த அழகான மன்மதனைப் போன்ற மகனைப் பெறும் பாக்கியத்தை அவனுக்கு அளித்தவர்.

4. அதே மன்மதனை தன் பார்வையாலேயே அழித்தவர்.

5. உலகை அழிக்கத் தோன்றிய காலகூட விஷத்தை விழுங்கியவர்.

6. தனது பக்தன் மார்க்கண்டேயனைக் காக்க யமனின் திமிரை அடக்கியவர்.

7. திரிபுர அசுரர்களை அழித்தவர்.

8. தட்ச யாகத்தை நாசம் செய்தவர்.

9. அர்ச்சுனனுக்கு பாசுபத அஸ்திரம் வழங்கியவர்.

10. நரஸிம்மருடைய கர்வத்தை அடக்க சரப அவதாரம் எடுத்தவர்.

11. காசியில் வேத வியாசர் விஷ்ணு தான் சிறந்தவர் என்று கையை மேலே தூக்கியதை மடங்காமலே ஆக்கச் செய்தவர்.

12. பிரம்மாவினுடைய சிறு அபராதத்தால் தலையைக் கொய்து மாலையாக அணிந்தவர்.

13. வாமனாவதாரம் எடுத்த விஷ்ணுவின் கர்வத்தை அடக்க வாமனரின் தோலை உரித்து சட்டையாக அணிந்து கொண்டவர். சீகாழியில் இன்றும் சட்டைநாதரைக் காணலாம். இன்னும் பல உயர்வுகள் உள்ளன, விரிவஞ்சி இத்துடன் விடுத்தனம்.

மேலும் சிவனே உயர்வு என்பதற்கு பிருங்கிரிஷி ஸம்ஹிதை, சிவோத்கர்ஷப் பிரகரணத்தில் உள்ள ஒரு கதையைக் கூறி முடிப்போம். மாளவ தேசத்தில் மகேந்திரவர்மன் என்னும் அரசனின் அவைக்கு வந்த ஒரு அதிசய வழக்கில் வைஷ்ணவர்களாலும் சைவர்களாலும் தன் தன் தெய்வமே உயர்ந்தது என்று வாதாடப்பட்டது. அதற்கு தீர்ப்பு வழங்க வேண்டி வந்து. அதற்கு மந்திரிகளின் அவையைக் கூட்டி அரசன் ஒரு யுக்தியைக் கையாண்டான். நீங்கள் இரு தரப்பினரும் ஒரு மாத காலத்திற்குப் பின் உங்களது தெய்வத்தை எமது முன் கொண்டு வாருங்கள் அதைக் கண்டு தீர்ப்பு வழங்குகின்றேன் என்று கூறி அனுப்பிவைத்தான். இரு தரப்பினரும் மகிழ்ச்சியுடன் சென்றனர். வைணவர்கள் அவ்வொரு மாத காலத்திற்குள் சேஷசாயியாக ஶ்ரீதேவி, பூதேவி சமேதராக, விஷ்ணு, உருவை அரண்மனைக்குள் புக முடியாத அளவிற்கு நீளமாகவும் அகலமாகவும், பெருத்ததாகவும் தயார் செய்து அவ்வுருவிற்கு மிகச்சிறந்த முறையில் அணிகளாலும் ஆடைகளாலும் மலர்களாலும் மிக அழகாக அலங்காரம் செய்து முடித்தனர். சைவர்களோ எனில் என்ன செய்வது என அறியாமல் கஷ்டத்துடன் இருக்குங்களால் ஒரு பெரியார் அவர்கள் முன் தோன்றி ஒரு சிறு பெட்டியைக் கொடுத்து இதைத் திறவாமல் அன்று அரசவைக்குச் சென்று அரசன் கையில் கொடுங்கள், பயமுற்று இருங்கள். உங்களுக்கே வெற்றி கிட்டும் என்று கூறிச் சென்று விட்டார். அப்பெரியாரின் வாக்கில் நம்பிக்கை இருந்தும், மனத்தில் கலக்கத்துடனேயே முப்பது நாட்களையும் கழித்தனர். வைணவர்களோ எனில் சந்தோஷத்துடன் நமது தெய்வம் தான் பெரிது என்பதற்கு எவ்வித ஆட்சேபனையும் இராது என்று வாளாவிருந்தனர். 31-வது நாள் பலசக்கரங்கள் பூட்டிய வண்டியில் பெட்டியில் வைத்து மூடிய திருமாலை வைத்து அரசவைக்கு முன் கொண்டு வந்து நிறுத்தினர். சைவர்களோ எனில் கையில் பெரியார் கொடுத்த பெட்டியை சிரமமின்றி எடுத்துக் கொண்டு அரசவைக்கு உள்ளேயே சென்று விட்டனர். வைணவர்கள் வாயிலில் பாதுகாப்பாக நின்று ஒருவரை மட்டும் உள்ளே அனுப்பி, தங்களது தெய்வத்தைக் காண அரசனை அழைத்து வர அனுப்பினர். அரசனும் அவர்கள் அழைப்பை ஏற்று வாசலில் வர வைணவர்கள் எல்லோருடைய முன்னிலையிலும் அப்பெட்டியடித் திறந்து, உலகையே மயக்கும் அழகு வாய்ந்த விஷ்ணுவை அரசனுக்குக் காண்பித்தனர். அரசனும் அவ்வழக்கைக் கண்டு மயங்கிவிட்டான். உடனே அருகில் உள்ள மந்திரியை அழைத்து விஷ்ணுவே பெரியவர் என்று எழுத ஆணையிட்டான். ஆனால் மந்திரிகள் ஒரு தரப்பு தீர்ப்பு நியாய விரோதம். மறுதரப்பாரையும் விசாரித்து அறிந்த பின் எழுதலாம் எனக் கூறிய பின் வேண்டா வெறுப்பாக அரசவை ஏகினான். சைவர்களைப் பார்த்து உங்கள் தெய்வம் எங்கே என்று கேட்க அப்பெரியவர் அளித்தா பெட்டியை அரசன் கையில் கொடுத்தனர். அரசனும் அப்பெட்டியை ஒன்றன் பின் ஒன்றாக 15 பெட்டிகள் திறந்த பின் 16-வது பெட்டி தங்கத்தால் ஆனதாயும் நவரத்தினங்கள் இழைக்கப்பட்டதாயும் மிகச்சிறிதாயும் அழகு வாய்ந்து ஒளி வீசுகின்றதாயுமிருந்தது. அதைத் திறந்தான். அதனுள் ஒரு தங்கச் சுருள் இருந்தது. அதைப் பிரித்தான். அதில் “சர்வம் சிவமயம் ஜகத்” (உலகம் யாவும் சிவன் உருக் கொண்டது) என்று எழுதியிருந்தது. அதைக் கண்ட உடனேயே அரசனுக்கு எங்கும் சிவன் உரு தோற்றமளித்தது. வெளியேயுள்ள விஷ்ணு வடிவத்திலும் சிவனுடைய உருவமே தோற்றமளித்தது. இதைக் கண்டு பயந்த அரசன் மந்திரிகளை அழைத்து நான் முதலில் கூறியது மிக மிகத் தவறு. உங்களுடைய அறிவுரையை கேளாதிருப்பின் நான் மகா பாவியாவேன். என்னைக் காப்பாற்றினீர்கள். சிவனைக் காட்டிலும் உயரிய தெய்வம் வேறு எதுவும் இல்லை. “எல்லாம் சிவமயம்” என்று தீர்ப்பளித்து சைவர்களை விசேஷ மரியாதைகளுடன் அனுப்பி வைத்து தன் அபராதம் நீங்க அன்று சிவனுக்கு விசேஷ பூஜைகள் செய்து கெளரவித்தான். இதன் கருத்தையே தான் ஶ்ரீமத் நீலகண்ட தீக்ஷிதர், சிவோத்கர்ஷ மஞ்சரியில் சிவன்தான் உலகத்தலைவன், அவரே தான் எனது வழிபாட்டு தெய்வம். அவரையன்றி வேறு எந்த தெய்வத்தின் பெயரையும் நான் கூற மாட்டேன் என்று 51 ச்லோகங்களால் மிக அழகாகப் போற்றியிருக்கிறார். இதையே தான் “சிவபத மணிமாலா” என்னும் நூலிலும் ஆதிசங்கரர் சிவபதத்தைக் காட்டிலும் வேறு உயர்ந்தது யாதும் இல்லை. உலகம் சிவமயம், அவ்வாறு நினைப்பவர்களுக்கு மங்களமே ஏற்படும் என்று உறுதியாக கூறுகிறார். எனவே சைவர்களுக்கு சிவனைத் தவிர எந்த தெய்வமும் உரித்தது அல்ல, உயர்ந்தது அல்ல என்னும் எண்ணம் ஏற்பட இது போன்ற சிவஞான பூஜா மலர்கள் மிக மிக அவசியமானதாகும்

திருச்சிற்றம்பலம்

நன்றி ; சைவம் டாட் காம் சிவபூசனம்

திருவாரூர் தியாகராஜர் கோயில்

Standard

நம்_நாட்டின்_மிகப்_பெரிய #கோயில்_எது_தெரியுமா?thiruvarur thiyagarajar temple க்கான பட முடிவு

365 லிங்கங்கள் நிறைந்த இந்தியாவின் மிகப்பெரிய தியாகராஜர் திருவாரூர் கோயில்தான் நம் நாட்டிலுள்ள கோயில்களில் மிகப் பெரிய கோயிலாகும்.

திருவாரூர் தியாகராஜர் கோயில் இந்தியாவிலுள்ள மிகப்பெரிய கோயில்களுள் ஒன்று.

திருவாரூரில் இந்த கோவில் எப்போது தோன்றியது என்பதைக் கூற இயலாது என்று திருநாவுக்கரசர் வியந்து இத்தலத்தின் தொண்மை மற்றும் அதன் சிறப்பைப் பற்றி தனது பதிகத்தில் பாடியுள்ளார். இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

தியாகராஜர் என்றால் கடவுள்களுக்கெல்லாம் ராஜா என்று பொருள்.

தியாகராஜர் கோயிலும் கோயில்களில் எல்லாம் முதன்மையானதாக விளங்குகிறது.

9 ராஜ கோபுரங்கள்,
80 விமானங்கள்,
12 பெரிய மதில்கள்,
13 மிகப்பெரிய மண்டபங்கள்,
15 தீர்த்தக்கிணறுகள்,
3 நந்தவனங்கள்,
3 பெரிய பிரகாரங்கள்,
365 லிங்கங்கள்
(இவை வருடத்தின் மொத்த நாட்களை குறிப்பதாக சொல்கிறார்கள்),

100க்கும் மேற்பட்ட சன்னதிகள்,
86 விநாயகர் சிலைகள்,
24க்கும் மேற்பட்ட உள் கோயில்கள் என பிரமாண்டமாக விளங்குகிறது.

இக்கோயிலை பெரியகோயில் என்றும் சொல்வர். திருவாரூரில் தியாகராஜரின் முக தரிசனம் காண்பவர்கள், 3 கி.மீ. தொலைவிலுள்ள விளமல் சிவாலயத்தில் பாத தரிசனம் காண்பது சிறப்பு.

கிழக்கு கோபுரத்தின் உள்புறம் உள்ள 1000 கல்தூண்கள், முன்காலத்தில், திருவிழாக்காலங்களில் பந்தல் போடுவதற்காக அமைக்கப் பட்டுள்ளது.

தியாகராஜ சுவாமிக்கு தினமும் அபிஷேகம் கிடையாது.

இந்திரன் பூஜித்த, சிறிய மரகதலிங்கத்திற்கு (வீதி விடங்க லிங்கம்) தான் காலை 8.30, 11மணி, இரவு 7 மணிக்கு அபிஷேகம் நடக்கும்.

அபிஷேகத்திற்கு பின் சிறிய வெள்ளிப்பெட்டியில் மலர்களுக்கு நடுவே இந்த லிங்கம் வைக்கப்படும். அதன் மேல் வெள்ளிக்குவளை சாற்றி, அதிகாரிகள் முன்னிலையில் பெட்டி பூட்டப்படும். மற்ற நேரங்களில், பூட்டிய இந்த பெட்டி தியாகராஜரின் வலதுபுறத்தில் இருக்கும்.

திருவாரூர் கோவிலுக்கு அழகு தருவது சுமார் 120 அடி உயரமுள்ள அதன் ராஜகோபுரமாகும். தெற்கு வடக்காக 656 அடி அகலமும், கிழக்கு மேற்காக 846 அடி நீளமும், சுமார் 30 அடி உயரமுள்ள மதிற்சுவரை நான்கு புறமும் கொண்டுள்ள நிலப்பரப்பில் ஆலயம் அமைந்துள்ளது.

நான்கு புறமும் கோபுரங்களையும், தேர் ஓடும் வீதியையும் சேர்த்து ஐந்து பிராகாரங்களுடனும் இவ்வாலயம் அமைந்துள்ளது.

திருவாரூர் கோவில், அதன் முன்புறமுள்ள கமலாலயம் குளம், கோவிலைச் சார்ந்த தோட்டம் ஆகியவை ஒவ்வொன்றும் 5 வேலி நிலப்பரப்பில் அமைந்துள்ளதான சிறப்பு இத்தலத்திற்கு உண்டு.

கோயில் ஐந்து வேலி, குளம் ஐந்து வேலி, செங்கழுநீர் ஓடை ஐந்து வேலி என்ற பழமொழி மூலம் இதன் சிறப்பை உணரலாம். (ஐந்து வேலி என்பது 1000 அடி நீளம் 700 அடி அகலம்). இவ்வளவு பிரமாண்டமான ஆலயத்தை முழுமையாக தரிசனம் செய்து முடிக்க வேண்டு மானால் ஒரு நாள் முழுவதும் செலவிட்டால் தான் முடியும்.

தல வரலாறு :🌿🌿🌹🌿🌹

ஒருமுறை இந்திரனுக்கு அசுரர்களால் ஆபத்து ஏற்பட்டது. அதை முசுகுந்த சக்கரவர்த்தி என்பவரின் உதவியுடன் இந்திரன் சமாளித்தான்.

அதற்கு கைமாறாக முசுகுந்த சக்கரவர்த்தியிடம் “என்ன வேண்டும்?’ என கேட்க, திருமால் தன் நெஞ்சில் வைத்து பூஜித்த விடங்க லிங்கத்தைக் கேட்டார்.

தேவர்கள் மட்டுமே பூஜிக்கத்தக்க அந்த லிங்கத்தை ஒரு மானிடனுக்குத் தர இந்திரனுக்கு மனம் வரவில்லை.

தேவசிற்பியான மயனை வரவழைத்து, தான் வைத்திருப்பதைப்போலவே 6 லிங்கங்களை செய்து அவற்றைக் கொடுத்தான்.

முசுகுந்தன் அவை போலியானவை என்பதைக் கண்டு பிடித்து விட்டார். வேறு வழியின்றி, இந்திரன் நிஜ லிங்கத்துடன், மயன் செய்த லிங்கங்களையும் முசுகுந்தனிடம் கொடுத்து விட்டான்.

அவற்றில், நிஜ லிங்கமே திருவாரூரில் உள்ளது. மற்ற லிங்கங்கள் சுற்றியுள்ள கோயில்களில் உள்ளன.

இவை “சப்தவிடங்கத்தலங்கள்’ எனப்படுகின்றன. “சப்தம்‘ என்றால் ஏழு.

திருவாரூரில் “வீதி விடங்கர்’, திருநள்ளாறில் “நகர விடங்கர்’, நாகப்பட்டினத்தில் “சுந்தர விடங்கர்’, திருக்குவளையில் “அவனி விடங்கர்’, திருவாய்மூரில் “நீலவிடங்கர்’, வேதாரண்யத்தில் “புவனி விடங்கர்’, திருக்காரவாசலில் “ஆதி விடங்கர்’ என்ற பெயர்களில் விடங்க லிங்கங்கள் அழைக்கப்படுகின்றன.

இந்த லிங்கங்கள் கையடக்க அளவே இருக்கும். சப்தவிடங்கத்தலங்கள் உள்ள கோயில்களில் சுவாமியை “தியாகராஜர்’ என்பர்.

வழிபாடு நேரம் :🌹🌿🌹🌿🌹

காலை 6 மணி – திருப்பள்ளி எழுச்சி ,பால் நிவேதனம்
காலை 7.30 மணி – மரகத லிங்க அபிஷேகம்
காலை 8 மணி – முதற் கால பூஜை
மதியம் 11.30 மணி – மரகத லிங்க அபிஷேகம்
பகல் 12 மணி – உச்சிக்கால பூஜை
பகல் 12.30 மணி – அன்னதானம்
மாலை 4 மணி – நடை திறப்பு
மாலை 6 மணி – சாயரட்சை பூஜை
இரவு 7.30 மணி – மரகத லிங்க அபிஷேகம்
இரவு 8.30 மணி – அர்த்தசாம பூஜை

பிரதான மூர்த்திகள்

திருவாரூர் ஆலயத்தின் மூலவர் வன்மீகர். அவர் அருகே அன்னை சோமகுலாம்பிகை இருக்கிறாள். இறைவன் சூரிய குலம்; அம்பிகை சந்திர குலம். வன்மீகரின் வலப்பக்கத்தில் – தனிச் சந்நிதியில் ஸ்ரீதியாகராஜர்

ஓம் நமசிவாய
திருச்சிற்றம்பலம்..

திருஉத்தரகோசமங்கை

Standard

திருஉத்தரகோசமங்கை

       

இறைவர் திருப்பெயர்   : மங்களேசுவரர், மங்களநாதர், காட்சி கொடுத்த நாயகர், பிரளயாகேசுவரர்.

இறைவியார் திருப்பெயர் : மங்களேசுவரி, மங்களாம்பிகை, சுந்தரநாயகி.

தல மரம்   : இலந்தை.

தீர்த்தம்   : அக்கினி தீர்த்தம்.

வழிபட்டோர்   : மாணிக்கவாசகப் பெருமான், வேதவியாசர், காகபுஜண்டரிஷி, மிருகண்டு முனிவர், வாணாசுரன்,

மாயன் முதலியோர் வழிபட்டுப் பேறு பெற்றுள்ளனர்.

திருவாசகப் பாடல்கள்   : திருவாசகம் – “நீத்தல் விண்ணப்பம்”

தல வரலாறு

பாண்டிய நாட்டில் உள்ள தலம்.

மிகவும் பழமையான திருக்கோயில். இத்தலத்தின் பழமையை உணர்த்துவதாக “மண் தோன்றியபோதே மங்கை தோன்றியது” என்னும் பழமொழி இப்பகுதியில் வழங்குகிறது. மேலும், இத்தலத்தின் வரலாற்றுப் புராணத்தில் இராவணனின் மனைவி மண்டோதரியின் பெயர் குறிக்கப் படுவதாலும்; சுவாமி மூலத்தான மதிலில் உள்ள கல்வெட்டுக்களில் மண்டோதரியின் பெயர் பொறிக்கப்பட்டிருப்பதாலும், இக்கோயிலின் பழைமை புலனாகிறது. இத்துடன், சங்க இலக்கியத்தில் குறிக்கப்படும் “இலவந்திகைப் பள்ளி” என்பது உத்தரகோச மங்கையைக் குறிக்கும் என்பாரும் உளர். மேற்குறித்த கல்வெட்டில் இலவந்திகைப் பள்ளித்துஞ்சிய நன்மாறன் பெயரும் செதுக்கப்பட்டுள்ளது.

உத்தரம் – உபதேசம்; கோசம் – ரகசியம்; மங்கை – பார்வதி. பார்வதி தேவிக்கு இறைவன் வேதாகமங்களின் ரகசியங்களை உபதேசித்தமையால் இத்தலம் உத்தரகோசமங்கை என்னும் பெயர் பெற்றது.

மாணிக்கவாசகருக்கு உருவக் காட்சிதந்த சிறப்புடைய தலம்.

இலந்தை மரத்தடியில் எழுந்தருளிய மங்கைப்பெருமான் என்று இப்பெருமான் போற்றப்படுகிறார்.

இத்தலத்தில் சுவாமியை அம்பாள் பூசிப்பதாக ஐதீகம்.

சொக்கலிங்கப் பெருமான் பரதவர் மகளாகச் சபித்துப் பின் சாபவிமோசனம் செய்து அம்பாளை மணந்துகொண்டு இத்தலத்திலேயே அம்பாளுக்கு வேதப்பொருளை உபதேசம் செய்து, இங்கிருந்த அடியார் சிவயோகிகள் முதலிய பல்லாயிரவர்க்கும் ஞானோபதேசம் செய்து முத்தி நல்கி, பின்னர் அம்பிகையுடன் மதுரை சேர்ந்ததாக மதுரைப்புராணத்தில் சொல்லப்பட்டுள்ளது.

இராமேஸ்வரம், உத்தரகோசமங்கை ஆகிய இரு கோயில்களும் முதலில் இலங்கையில் இருந்த கண்டி மகாராஜாவால் கட்டப்பட்டு, பின்பு பலராலும் திருப்பணிகள் செய்யப்பட்டு – ஆதிசைவர்கள் வசமிருந்து பின்னரே இராமநாதபுரம் ராஜாவிடம் ஒப்படைக்கப்பட்டதாம். அதுமுதல் இன்றுவரை இராமநாதபுர சமஸ்தான ஆளுகைக்கு உட்பட்டதாகவே இருந்து வருகிறது இத்தலம்.

இத்தலத்தில் நடராசர் கோயிலுக்குப் பக்கத்திலேயே சஹஸ்ர லிங்கக் கோயிலும் தனிக் கோயிலாக உள்ளது. இக்கோயில் எழுந்ததற்கான வரலாறு வருமாறு : – ஆர்கலிசூழ் தென்இலங்கை அழகமர் மண்டோதரிக்கு, அவளுடைய தவத்தை ஏற்றுக் காட்சி தந்தருளப் பெருமான் உள்ளங்கொண்டார். தன்பாலிருந்து ஐம்புலனும் அடக்கி அருந்தவம் புரிந்து வந்த ஆயிரம் முனிவர்களைப் பார்த்து “மண்டோதரிக்கு (வண்டோதரி) அருள் செய்ய யாம் இலங்கை மூதூர் செல்கின்றோம். நீவிர் அனைவரும் இத்தலத்தை விட்டு அகலாது இருப்பீராக! எம்மால் ஒப்படைக்கப்படும் இவ்வேதாகமச் சுவடிகளை கைவிடாது காத்து வருவீராக! இலங்கையரசன் இராவணனால் எப்போது எம்திருமேனி தீண்டப்படுகிறதோ, அப்போது அதற்கு அடையாளமாக, இத்திருக்குளத்தின் நடுவே அக்கினிப் பிழம்பு தோன்றும்” என்று வானொலியாக அருள் செய்தார்.

மாதர்குலத் திலகமாக விளங்கிய மாதரசி மண்டோதரி (வண்டோதரி) தன் உள்ளத்தில் எவ்வடிவில் இறைவனை நினைத்துத் தவமிருந்தாளோ அவ்வடிவத்தையே ஏற்று, அழகிய திருவுரக் கொண்டு இறைவன் சென்று அவளுக்குக் காட்சி தந்தார். தரிசனம் பெற்ற மாதரசி, தன்னை மறந்து, பரவசமாகி, கண்களாரக் கண்டு கைகளாரத் தொழுது பிரமித்துப்போய் அசையாது நின்றாள். அப்போது வௌ¤யே சென்றிருந்த இராவணன் உள்ளே வந்தான். இறைவனும் அழகான குழந்தையாக மாறிக் காட்சித்தர்அவன் அக்குழந்தையைக் கண்டு அதன் அழகில் மயங்கி ‘யார் பெற்றதோ இது’ என்று வினவினான். வண்டோதரி, “யாரோ ஒரு தவமகள் வந்து இக்குழந்தையைத் தந்து சென்றாள்” என்றாள். குழந்தையின் உடம்பில் மாறிமாறித் தோன்றிய வண்ணத்தைக் கண்டு உள்ளம் வியப்புற்ற இராவணன் அக்குழந்தையைக் கையாலெடுத்துத் தழுவி மகிழ்ந்தான். அவ்வளவில் – இறைவன் திருமேனியை இராவணன் தீண்டியதால் – குளத்தில் அக்கினிப் பிழம்பு தோன்றியது. அதுகண்ட முனிவர்கள் செய்வதறியாது திகைத்து, அதில் வீழ்ந்து மறைந்தனர். அவர்களுள் ஒருவர் மட்டும் தம் அறிவால் உணர்ந்து, இறைபணியில் நிற்றலே கடமையென்று முடிவு செய்து, அத்தீர்த்தத்தின் கரையிலேயே அமர்ந்திருந்தார்.

மூதாட்டி ஒருத்தி வந்து மண்டோதரி (வண்டோதரி)யிடமிருந்து குழந்தையைப் பெற்றுச் சென்றாள்.இறைவன் திரும்ப வந்து குளக்கரையில் இருந்தவர் மூலமாகச் செய்தியறிந்தார்.மூழ்கிய 999 பேர்களுக்கும், மூழ்காதிருந்தவருக்குமாக ஆயிரவருக்கும் இறைவன் உமையோடு விடைமீதமர்ந்து காட்சி தந்து தம் சந்நிதியில் தம்முடன் அவர்களை இருத்திக் கொண்டார்.இதனால் பெருமானுக்குக் “காட்சி கொடுத்த நாயகன்” என்ற பெயரும் வழங்கலாயிற்று.ஆயிரவர்களும் ஒவ்வொரு இலிங்கவடிவில் இறைவனோடு ஒன்றினர் – அதுவே சஹஸ்ரலிங்கமாகத் தரிசனம் தருகின்றது.இக்கோயிலை வலம் வந்து வழிபடுவோர் எல்லாச் சித்திகளையும் அடைவர் என்பது தலவரலாறு.

இங்குள்ள நடராசமூர்த்தி ஆதிசிதம்பரேசர் என்றழைக்கப்படுகிறார். இங்குள்ள சபை இரத்தினசபை எனப்படுகிறது.

அருணகிரிநாதரின் திருப்புகழ் பெற்றபதி.

தட்சிண கயிலாயம், பத்ரிகாரண்யம் (இலந்தைவனம்) வியாக்ரபுரம், ஆதி சிதம்பரம், பிரமபுரம், சதுர்வேதபுரி, மங்களபுரி முதலியன இத்தலத்திற்குரிய வேறு பெயர்கள்.

மூலவர் தரிசனம். சதுர ஆவுடையார்.

சிவபெருமானுக்குத் தாழம்பு ஆகாதது, ஆனால் இங்கு அதற்கும் சாப நிவர்த்தி ஏற்பட்டதால் மங்களேசுவரருக்குத் தாழம்பு சார்த்தப்படுகிறது நினைவில் கொள்ளத் தக்கது.

நடராசருக்குரிய ஆறு அபிஷேகக் காலங்களிலும் இச்சந்நிதியில் இறைவன் தாண்டவமாடிக் காட்சித் தரும் ஐதீகம் நடைபெறுகிறது.

பிராகார அழகு இராமேஸவரத்தை நினைவூட்டுகிறது. தூண்களில் பிட்சாடனர், ஊர்த்துவர் சிற்பங்கள் உள்ளன.

நடராசப் பெருமானுக்கு ஆதிசிதம்பரம் எனப்படும் அற்புதத் தனிக்கோயில், கோயிலுக்கு உள்ளேயே குளத்தின் எதிரில் உள்ளது. இக்கோயில் அகழி அமைப்புடையது. எனவே சந்நிதிக்கு உட்செல்ல மரப்படிகள் அமைக்கப்பட்டுள்ளன. தெற்கு நோக்கிய சந்நிதி. அக்கினி மத்தியில் நடராசப் பெருமான் ஆடுவதாகச் சொல்லப்படுகிறது.

மார்கழித் திருவாதிரையில் இப்பெருமானுக்கு மிகப்பெரிய அபிஷேகம் சிறப்பாக நடைபெறுகிறது. இதைச் செய்பவர்கள் திருப்புத்தூர் வள்ளல் ஆறுமுகம் பிள்ளையவர்களின் குடும்பத்தினர். அன்று ஒரு நாள் மட்டுமே சந்தனக்காப்பு முழுவதும் களையப்பட்டு, இரவு அபிஷேகங்கள் கண்கொள்ளாக் காட்சியாக – அற்புதமாக நடைபெறுகின்றன. வாழ்நாளில் ஒருமுறையேனும் இந்நாளில் கட்டாயமாகச் சென்று தரிசிக்க வேண்டும்.

அபிஷேக ஆராதனைகள் முடிந்த பிறகு மீண்டும் சந்தனக்காப்பு சார்த்தப்படும். அக்காப்பிலேயே அடுத்த மார்கழித் திருவாதிரை வரை பெருமான் காட்சித் தருகிறார்.

நாடொறும் உச்சிக் காலத்தில் நடைபெறும் ஸ்படிகலிங்க, மரகதலிங்க, அன்னாபிஷேகம் காணக் கொடுத்து வைக்க வேண்டும்.

திருச்சிற்றம்பலம்

“அர்ச்சனை பாட்டே ஆகும்”

Standard

“அர்ச்சனை பாட்டே ஆகும்”
ஆண்டவனை வணங்கி அருள் பெற தேங்காய் பழம் கற்பூரம் முதலியவற்றைக் அர்ச்கரிடம் கொடுத்து, அர்ச்சனை செய்து நம் வேண்டிஅருள் பெறுவது வழிபாடு என்பதாகாது. இறைவனுடைய அன்பைப் பெறுவதற்கு நாம் வாயினால் பாடுதல் வேண்டும். அதுவும் தமிழால் , தமி்ழ் திருமுறைப்பாடல்களால் பாடவேண்டும், எந்த உயிருக்கும் கிடைக்காத ஆற்றல் நமக்கு மானிட பிறவிக்கு மட்டும்தான் ஆண்டவன் வழங்கியுள்ளான். அதனால் இறைவரை வாயினால் பாடித் துதித்திட வேண்டியது நமது தலையாய கடமையாகும். இக்காலத்தில் இரண்டு ரூபாய் கொடுத்து அருச்சனை சீட்டு வாங்கி விட்டால் நமது இறைவழிபாடு முடிந்து விட்டதாக எண்ணுகிறோம். இது மிகப் பெரிய தவறு என்றும் இதனால் யாதொரு பயனும் இல்லை என்றும நாம் உணர்தல் வேண்டும்.
வழிபாடு என்பது ஆன்மாவை ஆண்டவருடன் இணைக்கும் ஒரு செயலே ஆகும். உள்ளம் ஒன்றிப் பாடும் பொழுது தான் இது நடைபெறும். இதனால் தான் ஞானசம்பந்த பெருமான் ” வாயடைந்து பாடவல்லார் வானுலகு ஆள்பரே என்றருளிச் செய்தார்.
சுந்தரமூர்த்தி சுவாமிகளும் ” இன்னிசையால் பாடவல்லார் இரு நிலத்தில் ஈசன் என்னும் இயல்பினாேரே ” என்றருளினார்.
கல்லையும் கனிவிக்கும் தமிழ்வேதப்பாடல்களைப் பாடுங்கள் “அருச்சனை பாட்டேயாம் ” என்பது பெரியபுராணம் , இதனால் அளப்பில அடிகள் தாம் அருளுவார், அவரையே நமக்களிப்பார், அப்பெருமான் நம் உள்ளத்தில் எழுந்தருளுவார்.

” பாட்டினால் பணிந்தேத்திட வல்லவர் ஓட்டினார் வினையொல்லையே ” என்கிறார் சம்பந்தர்
” இன்னிசை பாடுவார் மன்னினார் ” (1,8,05) சம்பந்தர்
ஈசனுக்கு சூட்டும் வாசனை மலர் மாலைகள் வாடிவிடும் ஆனால் தமிழ் பாக்காளால் பாடிய பாமாலைகள் என்றும் இறைவனை வாழ்த்திக்கொண்டே இருக்கும் வாழ்த்துதலுக்கு மயங்காதார் யாரும் உண்டோ? நால்வர் பாடிய தேவாரப்பாடல்கள் தானே இன்றும் நமக்கு வழிகாட்டியாய் உள்ளது,
இறைவருக்கு தங்கம் வைடூரியம், ஆபரணங்கள் சாத்திவதை விட பாமாலைகொண்டு சாத்தி வணங்குங்கள் இதுவே ஈசன் விரும்பும் அணிகலங்களாகும் , ” பாடுமின் புலவீர்காள் ” என்கிறார் சுந்தரர், (7,34,1)

திருநாவுக்கரசர் பெருமான் தன் முதல் பதிகத்தில் தனது சூன்ம வலி நீங்க ” தமிழோடு இசைபாட மறந்தறியேன், ” என்றார். அவர் தேன்தமிழால் பாடி அருள் பெற்றார்.என்பதையும் நாம் நினைவு கொள்ள வேண்டும்.

வாயாரப் பாடுவோம் ! வளம் பெறுவோம்!!

திருச்சிற்றம்பலம்
நன்றி தமிழ் வேதம் ஆய்வுக்கட்டுரை