தமிழ் வேதங்களில் தனிமனித ஒழுக்கம்

Standard

தமிழ் வேதங்களில் தனிமனித ஒழுக்கம்
“கூறுமின் ஈசனைச் செய்மின் குற்றேவல் குளிர்மின் கண்கள்
தேறுமின் சித்தம் தெளிமின் சிவனைச் செறுமின் செற்றம்
ஆறுமின் வேட்கை அறுமின் அவலம் இவை நெறியா
ஏறுமின் வானத்து இருமின் விருந்தாய் இமையவர்க்கே, — பொன் வண்ணத்து அந்தாதி (தமிழ் வேதம் 11 )

தனிமனிதர்களின் தொகுப்பு அல்லது கூட்டம் தான் சமுதாயம் என்பது. வானுலகில் இன்புற்றிருப்பதற்கு உரிய வழி பொருளற்ற சடங்குகளும் சம்பிரதாயங்களும் இப்பாடலில் சொல்லப்படவில்லை என்பதை நாம் தெளிவாக கொள்ள வேண்டும்

சேரமான் பெருமாள் நாயனார் உடலுடன் கயிலையை அடைந்தவர். அவர் சொல்வதைத்தான் நாம் கொள்ள வேண்டும். அமெரிக்கா சென்றவர் சொல்லும் வழியைத்தான் அமெரிக்கா செல்ல இருப்பவர் கேட்க வேண்டும்.சமயக் கொள்கைகளை தங்களின் சுயலாபத்திற்காக வளைத்துக் கொண்டவர்களின் சொற்களை கேட்டு ஏமாந்து போகிறவர்கள் அப்பாவிகள்.

வளர்ந்த நாடுகளைவிட தமிழர்கள் ஆதிகாலம் தொட்டே உயர்ந்த பண்பாட்டுடனும், தனி மனித ஒழுக்கத்தை இறைவழிபாட்டுடன் இணைத்துக் கூறினார்கள் வாழ்ந்தும் காட்டினார்கள். காரணம் இறைவழிபாட்டினை மனித வாழ்விலிருந்து பிரித்து விடமுடியாது, இறையுணர்வு இல்லையானால் மனிதன் மிருகமாக வாழநேரிடும் என்பதை நன்கு உணர்ந்தவர்கள் நமது சிவஞானியர்கள். எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த சேரமான் பெருமான் நாயனார் தமிழகத்தில் மூவேந்தர்களில் சேரர் குடியில் தோன்றி சிவ வழிபாடு செய்து வந்தவர், இவருடைய சிவபூசையின் முடிவில் நடராசப் பெருமான் சிலம்பொலி கேட்கச் செய்தார். ஆழ்ந்த இறைபக்தியுடைய இப்பெருமானார் அருளியுள்ள இப்பாடலில் பொதிந்துள்ள தனி மனித ஒழுக்க கோட்பாடுகளைக்காண்போம்.

1,கூறுமின் ஈசனை: முழுமதற் பொருளாய் விளங்கும் சிவபெருமானாரைத் துதியுங்கள் பிற்ப்பும்,இறப்பும் இல்லா பெருந்தெய்வம் ஆகும். மற்றவையெல்லாம் சிறுதெய்வங்கள் எனப்படும், சிறு தெய்வங்கள் யாவும் பிறக்கும் இறக்கும் வேதனைப்படும் மேல்வினையும் செய்யும், ஒரு நாட்டிற்கு பிரதம மந்திர் இருப்பது போல அகில உலகங்களுக்கு எல்லாம் ஒரே கடவுள் தான். இரண்டு இல்லை, அந்த பிறப்பு இறப்பு இல்லாதவர் அவரே சிவம் என்கிறார், சிறுதெய்வ வழிபாடு மக்களிடையே பரவுமானால் உயர்ந்த பண்பாடு போய்விடும், சிறுதெய்வ வழிபாட்டால் உயிர்பலி இடுதல் போன்ற பண்பாடற்ற தலைதூக்கும் அதனாலேயே ஆரம்பத்திலேயே பெருந்தெய்வ வழிபாட்டைக் கூறியுள்ளார்.
2, செய்மின் குற்றேவல்: சிறு சிறு தொண்டுகளைச் செய்யச் சொல்கிறார். சிவாலயத்தை தூய்மை செய்தல், மலர் எடுத்தல் வலம் வருதல் போன்ற சிறுசிறு தொண்டுகள் செய்வதால் மனத்தில் அன்பு வளரும் தன்னலம் குறையும் ஆணவம் மறையும்.
3, குளிர்மின் கண்கள்: இறைவருடைய திருஉருவத்தைக் கண்டு கண்கள் குளிர வேண்டும் இதனால் நம்மிடம் உள்ள மிருகப் பண்பு குறையும் மனித நேயம் பெருகும்.
4,தேறுமின் சித்தம்: மனத்தை ஒரு நிலையில் நிறுத்துங்கள் என்பதை கவனிக்க வேண்டும் நாம். மனம் போகும் போக்கில் அலையவிடக் கூடாது, மனம் தான்மனிதனுடைய எல்லா செயல்களுக்கும் காரணம். அதை நம்கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும் என்கிறார்,
5, தெளிமின் சிவனை: முழுமுதற் பொருள் எது என்பதில் ஒரு தெளிவு வேண்டும், பிறப்பும்இறப்பும் இல்லாதவரும் காலத்தை கடந்து நிற்பவரும் சிவபெருமானார்ஒருவரே என்பதில் தெளிவு வேண்டும்.
” சிவனோடு ஒக்கும் தெய்வம் தேடினும் இல்லை
அவனோடுஒப்பார் இங்கு யாவரும் இல்லை — திருமூலர்

” அயனும் புடையும் எம் ஆதியை நோக்கில்
இயலும் பெருந்தெய்வம் யாதும் ஒன்றில்லை – திருமூலர்

இந்த தெளிவு இல்லாத பாமர மக்கள் சிறுதெய்வ வழிபாட்டில் சிக்கித் தவிப்பதை போலி வேடதாரிகளை நம்பி மோசம் போவதையும் இன்றை சூழ்நிலை. பெருந்தெய்வமான சிவபெருமானாரால் முடியாத ஒரு செயலை சிறுதெய்வங்கள் செய்து விட முடியாது என்னும் தெளிவு நமக்கு வேண்டும்.
6, செறுமின் செற்றம்: பகைமை உணர்வை நீக்க வேண்டும். பகைமை உணர்வுதான் இன்றைய காலத்தில் எல்லா கொடுமைகளுக்கும் காரணம் என்பதை நாம் அறிவோம். மனித இனம் மாதவ நிலையை அடைவதற்கு பெரும் தடையாக இருப்பது பகைமை உணர்வுதான். கணவன் மனைவியிடையே பிரிவு உற்றார் உறவினரிடையே சண்டை, சமுதாயத்தில் சண்டை மாநிலங்களுக்கிடையே சண்டை, மதவாதிகளிடையே சண்டை நாடுகளுக்கிடையே கடும் போர் ஆகிய யாவற்றிக்கும் காரணம் பகைமை உணர்வுதான்.ஆக சாதி,மதம்,மொழி, இனம் நாடு ஆகியவற்றால் மனித இனம் வேறபட காரணம் பகைமை உணர்வே.
7, ஆறுமின் வேட்கை : ஆசையை அடக்குங்கள் என்கிறார் நாயனார்
ஆசையுடையவன் விலங்கு
அன்புடையவன் மனிதன்
அருள் உடையவன் தேவன்

உரியது அல்லாதவற்றை விரும்புவது தான்மட்டும நலமாக வாழ வேண்டும் என எண்ணுவது ஆசையாகும், ஆசை வளர வளர மனித மனம் மிருகத்தன்மை அடையும் ஆசை மிகும் பொழுது நல்லது தீயது என்பதே தெரியாமல் போய்விடும்.
“ஈசனோடாயினும் ஆசையை அறுமின் – திருமூலர் ,,10
இவ்வுலக ஆசைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக இறைவழிபாடு கூடாது என்கிறார் திருமூலர்
பிறர் கெட்டாலும் தான் வாழ வேண்டும் என்னும் குறுகிய நோக்கம் தான் ஆசை எனப்படுகிறது, இதனால் சமுதாயச் சீரழிவே ஏற்படும் ,இத்தகைய ஆசையை ஒழிக்க வேண்டும்,
8, அறுமின் அவலம்: துன்பத்திலிருந்து நீங்க வேண்டும், துன்பத்தில் முழ்கிவிடக் கூடாது, இன்பமும் துன்பமும் பாலத்தின் கீழே ஓடும் நீர்போல் விரைவில் நீங்குவிடும்.
துன்படுவதால் உடலில் நோய் பெருகும் வாழ்நாள் குறையும்.
“இறைமை ” என்ற பேரின்ப வெள்ளத்திலிருந்து பிரிந்து வந்த ஒருதுளிதான் நாம், நமக்கு உள்ளும் புறமும் வள்ளலாய் இறைவர் விளங்குகின்றார், விரைவில் நலம் பெறுவோம் என்று உறுதியாக நம்பினால் துன்பத்திலிருந்து விடுபடுவது எளிதே ஆகும்.
இதுபோன்ற கருத்துக்கள் தமிழ் மக்களுக்கு மட்டுமா பொருந்தும்? உலகில் உள்ள எல்லா நாட்டு மக்களுக்கும் பொருந்தும்தானே. இத்தகைய கருத்துக்கள் சாதி, சமயம், இனம் மொழி நாடு ஆகியவற்றைக் கடந்ததல்லவா.
திருமுறைகளின் உயர்வை உணர்வதற்கு நம் அறிவு போதாது எனலாம்.
திருச்சிற்றம்
தென்னாடுடைய சிவனே போற்றி
நன்றி : தமிழ் வேதம்
மேலும் பல ஆன்மீகத் தகவலுக்கு
http://vpoompalani05.blogspot.in/
https://vpoompalani05.wordpress.com
http://www.vpoompalani05.weebly.com.

Advertisements

பாதாள லிங்கள்கள் எவ்வாறு தோன்றிருக்கலாம்

Standard

பாதாள லிங்கள்கள் எவ்வாறு தோன்றிருக்கலாம்
மனதை அடக்கத் தெரிந்தவன் மகான் என்று கூறுகிறோம், நம்மால் மனதை அடக்க முடியாதா என்ற கேள்வியும் எழுகிறது. சூழ்நிலை காரணமாக ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான கற்பனையில் மனதை சிதறவிட்டுக் கொண்டிருக்கிறோம், இன்றைய காலகட்டத்தில் மனதை அடக்கி ஆள்பவர்கள் ஒரு சிலரே இருக்கிறார்கள். அந்த காலத்தில் முனிவர்கள் சித்தர்கள் மனதை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து மகோன்னத நிலையை அடைந்தார்கள் என்று கேள்விப்படுகிறோம். தற்போதைய காலகட்டத்தில் சில சிவன் கோவில்களில் பாதாள லிங்கம் என்று பாதாளத்தில் ஒரு சன்னதி அமைக்கப்பட்டு இருப்பதை காணலாம். அப்படிப்பட்ட கோவில்களில் ஒரு சித்தர் ஐக்கியமாகி இருப்பது தெரியவருகின்றன, மானிட சரீர ரகசியம் அறிந்தவர்கள் உடலை பிறர் கண்களுக்கு புலப்படாமல் மறைத்துக் கொள்பவர்களாக இருக்கிறார்கள். மானிட சரீர ரகசியத்தை உலகத்துக்க யோக சூத்திரமாக அருளிய தவசித்தர் பதஞ்சலி முனிவர். முற்கால சித்தர்கள் தங்களின் தவயோக நிலையினை பாதாள குகைகள் அல்லது செயற்கையான குகைகள் அமைத்து அங்கு தங்களின் உடலை ஐக்கியமாக்கி கொண்டவர்கள் சித்திர் பெருமக்கள், இன்றைய காலகட்டத்திலும் அண்ணாமலையில் பாதாளலிங்கத்தில் யோகம் செய்தவர் தவ சீலர் ரமணர் என்பதை நாம் அறியலாம்,இவர்களுக்காக இறைவன் தன் காட்சிதந்து அவரைகள் முத்தியடையவும் சூச்சமயமான உலகில் இன்றும் உலகிவரவும் அருள்பாவித்துள்ளதை இன்றும்அறியலாம்,

தில்லையில் சிவத்தாண்டவம் காண்ட சித்தர்கள்

பாற்கடலில் பள்ளி கொண்டுள்ள விஷ்ணு பகவான் சிவபெருமானின் சிவத்தாண்டவத்தைக் கண்டு மகிழ்ச்சியடைந்தததைக்கண்ட ஆதிசேஷனும் தானும் அம்பலவாணனின் சிவத்தாண்டவம் காண ஆவல்கொண்டான், சிவன் அவருக்கு காட்சி கொடுத்து “பூமியில் பதஞ்சலி முனிவராகஅவதாரம் எடுக்கும்போது தில்லையம்பலத்தில் சிவத்தாண்டவம் காணும் பேற்றினை கொடுப்பேன், என்று அருள்பாலித்தார். அதேபோல்தவம் இருந்த வியாக்கிரபாத முனிவருக்கும் அருளினார். வியாக்மகிரபாத முனிவர் சிபிசக்கரவர்த்தியின் சாபத்தால் அவயம் இழக்கப்பட்டார், மனம் நொந்த அவர் தில்லைவனத்தில் நந்தவ பூக்களைக்கூட மரம் கொடிகளில் பறிக்க முடியாமல் அவயம் இழந்ததமையால் கஷ்டப்பட்டார், அப்போது ஒரு அதிசயம் நடந்தது. அவருக்கு புலிக்கால்களும் இருளை ஊடுருவி பார்க்கும் ஒளி மிகுந்த கண்களும் இறைவனால் கிடைக்கப் பெற்றார், அப்போது அங்கே வந்த பதஞ்சலி முனிவரும் வியாக்கிரபாதரும் தில்லைவனத்தில் நடராஜபெருமானை வழிபட்டு வந்ததால் அவர்களுடைய ஆசை நிறைவேறியது, சிவபெருமானின் சிவ தாண்டவத்தைக் கண்டு மகிழ்ந்தார்கள், இவர்கள் இருவரும் சித்தர்களாக போற்றப்படுகிறார்கள்.
திருச்சிற்றம்பலம்
மேலும் ஆன்மீக தகவலுக்கு
http://vpoompalani05.blogspot.in/
https://vpoompalani05.wordpress.com
http://www.vpoompalani05.weebly.com.

ஈசனை பேசா நாள் எல்லாம் பிறவா நாளே

Standard

ஈசனை பேசா நாள் எல்லாம் பிறவா நாளே
பெறுதற்கரிய பிறப்பு மானிடப்பிறப்பு, அரிது அரிது மானிடராய் பிறப்பது அரிது, அவ்வாறு பிறந்தாலும், கூன், செவிடு, குருடு அற்று பிறப்பது அரிது, என்பது அவ்வையின் திருவாக்கு. இப்படி பெறுதற்கரிய மானிடப் பிறப்பை பிறந்து விட்டால் அப்பிறப்பில் செய்யத பாவ கர்ம வினைகளையும், முற்பிறப்பில் பெற்ற பாவ கர்மங்களையும், இப்பிறப்பு புண்ணியத்தால் ஈசனை நினைந்து, தொழுது, புகழ்பரப்பி நம்பாவ கர்ம வினைகளை குறைத்துக் கொள்ள வேண்டும், வள்ளல் பெருமானும் ஈசனை ” அப்பா நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிய வேண்டும், எப்போதும் எங்கு சென்றாலும், எவ்வேளையிலும், உன்னை மறவாமலும், உனது புகழை சொல்லிக்கொண்டே இருக்க வேண்டுமென இறைவனிடம் வேண்டினார், இதன் நிமித்தமாக பட்டிணத்து அடிகளார் ஈசனை – நமச்சிவய மந்திரத்தை – நினையாமலும், கற்காமலும் சொல்லாமலும் இப்பிறப்பில் இருந்ததை மன்னித்து அருள கச்சியப்ப ஏகாம்பர நாதனை வேண்டும் பாடல்
” கல்லாப்பிழையும், கருதாப்பிழையும், கசிந்துருகி
நில்லாப்பிழையும் நினையாப்பிழையும் நின் அஞ்செழுத்தைச்
சொல்லாப்பிழையும் துதியாப்பிழையும் தொழாப்பிழையும்
எல்லாப்பிழையும் பொறுத்தருள்வாய் கச்சி யேகம்பனே.”

ஈசனுடைய திருநாமமாகிய நமசிவாய என்ற அஞ்செழுத்தை கல்லாததும், கருதாததும் கசிந்துருகாமலும் நினையாமலும், அனுதினமும் இமைப்பொழுதும் சொல்லாததும், துதியாததும், தொழாததும் ஆகிய எல்லாப்பிழைகளையும் பொறுத்தருள வேண்டுக்கூறுகிறார், எனவே இறைவனுடைய திருநாமத்தை எப்போதும் சொல்லாமல்இருப்பது பிழையாகும் , அப்படி பிழைகள் செய்து நம் கர்ம வினைகள் இப்பிறவியிலும் மேலும் மேலும் சேர்ப்பது பிறப்பின் பயனை ஏய்த முடியாது, நம் பாவ வினைகள் கழியாது, இப்பிறப்பிலும் முற்பிறப்பிலும் நம் பாவ கர்மங்களை களைய ஈசனை திருஐந்தெழுத்து மந்திரமான நமச்சிவ மந்திரத்தை இமைப்பொழுதும் சொல்லிக்கொண்டே இருந்தால் நம் கர்ம வினைகள் அதற்கொப்ப களையப்படும், இவ்வாறு இல்லை யெனில் அரிதற்கரிய இம்மானிட பிறப்பை பிறந்தும் பிறவா நிலையைத்தான் நாம் பெற்றதாவோம் என்று அப்பர் பெருமானார், 6ம் திருமுறையில் தில்லையம்பலனை வேண்டி பாடிய திருத்தாண்டப்பதிகம் பாடலில்
“கற்றானைக் கங்கை வார்சடையான் தன்னைக்
காவிரி சூழ் வலஞ்சுழியும் கருதினானை
அற்றார்க்கும் அலந்தார்க்கும் அருள்செய்வானை
ஆருரும் புகுவானை அறிந்தோம் அன்றே
மற்று ஆரும் தன் ஒப்பார் இல்லாதனை
வானவர்கள் எப்பொழுதும் வணங்கி ஏத்தப்
பெற்றானைப் பெரும்பற்றப் புலியூரானைப்
பேசாத நாள் எல்லாம் பிறவவா நாளே.

எல்லாம் வல்லவன் கங்கையை கொண்டவன், நீண்ட சடையை உடையவன், காவிரியால் சூழப்பட்ட திருவலஞ்சூழி என்ற திருத்தலத்தை உகந்தருளி இருப்பவன், பொருள் அற்றவருக்கும், அலந்தாருக்கும் அருள்பவன், தனக்கு உவமை இல்லாதவன், தேவர்களால் வணங்கி போற்றப்படுபவன், திருவாரூரில் உகந்து தங்கி யிருப்பவன் ஆகிய எம் பெருமானை எல்லோருக்கும் மேலானவன் என்று தெரிந்தும், அப்பேர்பட்ட எம்பிரானை – ஈசனை – அவன் நாமமாகிய நமச்சிவ எனும் மந்திரத்தை பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே,
திருச்சிற்றம்பலம்
மேலும் பல ஆன்மீகத்தகவலுக்கு
http://vpoompalani05.blogspot.in/
https://vpoompalani05.wordpress.com
http://www.vpoompalani05.weebly.com.

ஐந்தாம் தந்திரம் 10. சகமார்க்கம்

Standard
ஐந்தாம் தந்திரம்10. சகமார்க்கம்
1461. சன்மார்க்கந் தானே சகமார்க்க மானது
மன்மார்க்க மாமுத்தி சித்திக்குள் வைப்பதாம்
பின்மார்க்க மானது பேராப் பிறந்திறந்து
உண்மார்க்க ஞானத் துறதியு மாமே.

(ப. இ.) சன்மார்க்கத்துக்கு வழியாக இருப்பது சகமார்க்கமாகும். சகமார்க்கம் எனினும் தோழமைநெறி எனினும் ஒன்றே. நிலைபேறாகவுள்ள தோழமை நெறியின்பயன் சிறந்த பேறாகிய சித்தியுள் நிலைப்பிப்பதாகும். நன்னெறி வாயிலாம் நானெறி விடுத்து ஏனைய நெறிகளில் உழல்வோர் நீங்காப் பிறப்பு இறப்புகளுக்கு உட்பட்டு அதுவே உறுதி எனத் திரிவர். ஆருயிர்களைத் தோழமை நெறியில் இருத்துதற்கு இருந்து காட்டியவர் நம்பி ஆருரர்.

யோகச் சமாதியின் உள்ளே யகலிடம்
யோகச் சமாதியின் உள்ளே யுளரொளி
யோகச் சமாதியின் உள்ளே யுளசத்தி
யோகச் சமாதி யுகந்தவர் சித்தரே.

(ப. இ.) தோழமை நெறியாகிய சகமார்க்கத்தில் சமாதியாகிய நிட்டையிலிருப்போர்க்கு, அவர் உள்ளத்தின்கண் திருவருட்கண்ணால் பரந்த உலகங்கள் காணப்படும். அதுபோல் உள்ளொளியாகிப் பேரொளி தோன்றும். அவ் வுள்ளத்தின்கண் திருவருளம்மை காட்சியருள்வள். இச் சமாதியின் உயர்ந்தோர் அனைத்துச் சித்தியும் அடைவர். அவர்களே சித்தரெனப்படுவர்.

பக்தருள் மேலான பக்தர் யார்?

Standard

பக்தருள் மேலான பக்தர் யார்?
எவன் தன்னையே, கடவுளாகிய சொரூபத்தினிடத்தில்
தியாகம் செய்கிறானோ அவனே சிறந்த பக்திமான். ஆத்ம
சிந்தனையைத் தவிர வேறு சிந்தனை கிளம்புவதற்குச் சற்று
மிடங்கொடாமல் ஆத்ம நிஷ்டாபரனா யிருப்பதே தன்னை
ஈசனுக் களிப்பதாகும்.
ஈசன்பேரில் எவ்வளவு பாரத்தைப் போட்டாலும்,
அவ்வளவையும் அவர் வகித்துக் கொள்ளுகிறார். சகல
காரியங்களையும் ஒரு பரமேச்வர சக்தி நடத்திக்
கொண்டிருக்கிறபடியால், நாமு மதற் கடங்கி யிராமல்,
இப்படிச் “ செய்ய வேண்டும் அப்படிச் செய்ய வேண்டு மென்று சதா”
சிந்திப்பதேன்? புகை வண்டி சகல பாரங்களையும் தாங்கிக்
கொண்டு போவது தெரிந்திருந்தும் அதிலேறிக் கொண்டு
போகும் நாம் நம்முடைய சிறிய மூட்டையையும் அதிற்
போட்டுவிட்டுச் சுகமா யிராமல், அதை நமது தலையிற் றாங்கிக்
கொண்டு ஏன் கஷ்டப்பட வேண்டும்?

– தெயவத்திரு ரமண பகவான்

பன்னிரு திருமுறைகளின் பாடல்கள் பாடுவதன் பெருமை

Standard

பன்னிரு திருமுறைகளின் பாடல்கள் பாடுவதன் பெருமை
திருமுறை பாடல்கள் யாவும் அறிவு கொண்டு பாடப்பட்டவை அல்ல, அவை சிவபெருமானாரே தக்க அருளாளர்கள் மூலமாக பாடியவை என்பதை நாம் மனத்தில் கொள்ள வேண்டும்.
“வேந்தன் அருளாலே விரித்த பாடல் இவை”
இறைவரால் ஆட்கொள்ளப்பட்ட அருளாளர்கள் சீவபோதம் (மனித உணர்வு ) அகன்று , சிவபோதத்தில் ( இறை உணர்வு ) மூழ்கிய நிலையில் பிறந்தவை திருமுறைப்பாடல்கள். இந்த உண்மையை திருஞானசம்பந்தர் திருவாக்கினால் அறியலாம்.
“தன்இயல்பு இல்லா சண்பையர் கோன் சீர்ச்சம்பந்தன் இன்னிசை ஈரைந்து ”
முன்னைப் பழம் பொருட்கும் முன்னைப் பழம் பொருளாகிய சிவபரம் பொருளால் ஆட்கொள்ளப்பட்டு அவருடைய கருணை வெள்ளத்தில் மூழ்கி திளைத்த அருளாளர்கள் தாம் பெற்ற பேரின்பத்தினை நாமும் பெறுதல் வேண்டும் என்னும் நல்ல உயர்ந்த நோக்கத்துடன் அருளப்பட்டவைதான் தேவாரத்திருமுறைகள்.
அந்த அருளாளர்கள் பெற்ற பேரின்பம் அவர்களுடைய உள்ளத்தினின்றும் தோத்திரப்பாடல்களாக ஊற்றெடுத்து பெருவெள்ளமாக தமிழகம் எங்கும் பரவி ஓடியது. இப்பாடல்கள் யாவும் மனித இனம் நலம் பெறுவதற்காகவே இன்றளவும் நின்று நிலவுகின்றன. தமிழ் வேத திருமுறைப்பாடல்கள் பாடுவதால்,
1, இறையருள் தானே கைகூடும் என்கிறார் திருஞானசம்பந்தர்
” பாடி நின்று ஆடுவார் அழையாமே அருள் நல்குமே” என்கிறார்
தமிழ் திருமுறைப்பாடல்களை மனம் கசிந்து பாடியும் தம்மை மறந்து ஆடுதலையும் செய்யும் அன்பர்களுக்கு சிவபெருமானார் தாமே முன்னின்று அருள் புரிவார்.
2, நம்முடைய வினை விரைவில் நீங்கிவிடும்
” பாட்டினால் பணிந்து ஏத்திட வல்லவர் ஓட்டினார் வினை ஒல்லையே” – சம்பந்தர்
கடவுளை வணங்கம் பொழுது பாடல்கள் பாடி வணங்க வேண்டும் என்கிறார் சம்பந்தர், நமக்காக பிறரைப் பாட செய்வது வழிபாடு ஆகாது, நமக்காக பிறர் சாப்பிட முடியாதன்றோ!
நம் வாயினால் பாடி பணிந்தால் நம்முடைய வினைகள் விரைவில் நீங்கிவிடும்
3, சிவகதி (பிறவாமை ) கிடைக்கும்
” ஞானசம்பந்ன் சொல்
சித்தம் சேரச் செப்பு மாந்தர் தீவினை நோயிலராய்
ஒத்தமைந்த உம்பர் வானில் உயர்வினொடு ஓங்குவாரே”
” அந்திவண்ணன் தன்னை அழகார் ஞானசம்பந்தன் சொல்
சிந்தைசெய்து பாடவல்லார் சிவகதி சேர்வாரே”
மனம் ஒன்றே வேண்டும் என்கிறார் சம்பந்தர், மனம் பாடலில் திளைக்க வேண்டும், அப்படி பாடினால் தீவினைகள் நீங்கும், தேவர் உலகில் இன்பமாய் வாழ்ந்து பிறப்பும் இறப்பும் இல்லாத சிவப்பேற்றை (சிவகதி) அடையலாம்.
4. மறுபிறப்பு இல்லையாகும்,
திருஞானசம்பந்தரிடம் ஒருவர் ” இறவாமலிருக்க வழி சொல்லுங்கள் ” எனக் கேட்டார். அதற்கு சம்பந்தர் ” இது என்ன பெரிய காரியம் பிறவாமல் இருந்தால் இறப்பு வராது” என்றார்,
அவர் பிறவாமலிருக்க வழியை கூறுங்கள் என்றார் ” தமிழ் வேத திருமுறைப்பாடல்கள் பாடிக்கொண்டு வந்தால் மீண்டும் பிறப்பு இல்லையாகும், ” என்றார் சம்பந்தர்
“கடியார்ந்த பொழிற் காழிக் கவுணியன் சம்பந்தன் சொல்
மடியாது சொல்ல வல்லார்க்கு இல்லையாம் மறுபிறப்பே”
வந்தால் போக வேண்டும் வாங்கினால் கொடுக்க வேண்டும், பிறந்தால் இறக்க வேண்டும், பிறக்க வில்லை என்றால் இறக்க வேண்டியதில்லை அல்லவா?
5, பாடுவர்கட்கு அருளும் வகைகள் எல்லை இல்லாதன
விளக்கினாற் பெற்ற இன்பம் மெழுக்கினாற் பதிற்றி யாகும்
துளக்கில் நல்மலர் தொடுத்தால் தூயவிண் ஏறலாம்
விளக்கிட்டார் பேறு சொல்லின் மெய்ந்நெறி ஞானமாகும்
அளப்பில கீதம் சொன்னார்க்கு அடிகள் தாம் அருளுமாறே” – அப்பர் அடிகளார்
சிவாலயத்தை பெருக்கித் தூய்மை செய்பவர் வாழ்வில் துன்பம் ஒழிந்து இன்பமடைவர்
சிவாலயத்தை மெழுகினால் பெருக்குவதால் கிடைக்கும் பயனைவிட பத்து மடங்கு அதிக நலம் பெறலாம்
அன்று மலர்ந்த தூய, நறுமண மலர்களை எடுத்து மாலையாக்கி சாத்துவோர் மேலான சிவலோக வாழ்வை பெறுவர்
இறைவரை வாயார வாழ்த்தி பாடல்கள் பாடினால் அளவில்லா நலன்களை இறைவர் அருளுவார்
” கீதம் சொன்னார்க்கு அளப்பில் அடிகள் தாம் அருளுமாறே” என்றாகும்
6. எல்லாவகை செல்வங்களையும் பெறலாம்
“செல்வன்ஞானசம்பந்தன் செந்தமிழ்
செல்வமாம் இவை செப்பவே” – சம்பந்தர்
அருட்செலவராக விளங்கும் ஞான சம்பந்தர் அருளிய இச் செந்தமிழ் பாடல்களை பாடினால் எல்லா வகை செல்வங்ளையும் பெறலாம். அருட்செல்வம், பொருட்செல்வம், மக்கட் செல்வம, முத்திச் செல்வம் ஆகிய யாவற்றையும் பெறலாம்,
இம்மையில் பொருட்செல்வத்தையும் மறுமையில் முத்திச் செல்வத்தையும் அளிக்கும் அளவிலா ஆற்றல் உடையவை தமிழ் வேத திருமுறை தேவாரப் பாடல்கள்
வாயாரப்பாடுவோம்! வளங்கள் பல பெறுவோம் !!
திருச்சிற்றம்பலம்
நன்றி : தமிழ் வேதம்
மேலும் பல ஆன்மீகத் தேடலுக்கு
http://vpoompalani05.blogspot.in/
https://vpoompalani05.wordpress.com
http://www.vpoompalani05.weebly.com.

அகத்தியரை “நாடியில்” …

Standard

My guru Arulmigu Sri Sadhananda Swamigal

வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

எத்தனையோ எதிர்பார்ப்புடன் அகத்தியரை “நாடியில்” நாடி அருள்வாக்கு கேட்கிற மனிதர்கள் நம்மிடை உண்டு. அவர் சொல்கிற எத்தனையோ பரிகாரங்களை செய்தும், நாம் எதிர்பார்ப்பது நடக்க தாமதமாகலாம். வருத்தப் படுவது வேண்டாம். அகத்தியப் பெருமானே, ஏன் என்று, அதற்கான காரணங்களை, பல தருணங்களில் விளக்கியுள்ளார். இந்த வாரம், சித்தன் அருளில், அகத்தியரின் பல அறிவுரைகளை உங்களுக்கு வழங்கலாம் என்று எண்ணம்.

அகத்தியப் பெருமான் நாடியில் வந்து பலமுறை கூறிய அறிவுரைகளை, என் நண்பர் விவரித்த விஷயங்களை, எளிய முறையில், இங்கு தொகுத்து தந்திருக்கிறேன். அகத்தியப் பெருமான் அருள் தந்தும் ஏன் நடக்கவில்லை என்று நினைத்திருப்பவர்களுக்கும், நம்முள்ளே எழுந்து இன்றுவரை விடை கிடைக்காமல் இருக்கும் ஒரு சில கேள்விகளுக்கும், இங்கு கண்டிப்பாக பதில் இருக்கும். அதை சரியாக தரம் பிரித்து பார்த்து, உங்கள் சூழ்நிலைக்கு ஏற்ப, உங்களுக்கு அகத்தியர் கூறுகிற பதிலாக எடுத்துக் கொண்டு, அதன்படி நடந்து, பின்னர் அமைதி உங்களுக்குள் தவழ்ந்தால், இவைகள் உங்களுக்கென அகத்தியர் கூறிய பதில் என்று உணர முடியும்.

1 . அகத்தியர் ஒரு சித்தர். அவரை நாடிக் கேட்கும் பொழுது நல்வழி காட்டுவார். நூற்றுக்கு தொண்ணூறு பேருக்கு நல்ல வழி, நல்ல பயன் கிடைக்கிறது. மற்றவர்கள், பொறுமையாக , மறுபடியும், மறுபடியும் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால் நிச்சயம் அவர்களுக்கும் அருள் புரிவார். இங்கு நம் கடமை என்பது, பரிகாரங்களை செய்வதோடு மட்டும் அல்லாமல், பொறுமையாக, நிறைய…

View original post 569 more words