பிச்சைக்காரனும் அறிவாளியே

Standard

பிச்சைக்காரனும் அறிவாளியே
(வாரியார் அருள் அமுதத்தில் வழங்கியது)

Image may contain: 2 people

முந்தைய சோழநாட்டில் மன்னன் நகர்வலம் சென்று கிராமங்களில் சஞ்சாரம் செய்தபோது, வறட்சியான பகுதியில் சஞ்சாரம் செய்து வரும் ேபாது தனக்கு குடிக்க தண்ணீர் கூட அருந்த முடியாத நிலையில் வந்து கொண்டிருந்த போது ஊருக்கு பக்கத்தில் உள்ள ஓர் இடத்தில் மட்டும் பச்சை பசேரென உளள பயிரினைக் கண்டு மனம் மகிழ்ந்து அது என்ன பயிர் என்ன அறிய மந்திரியுடன் பார்க்க முற்பட்டபோது அது நல்ல தளீர் விட்ட வெள்ளரி என்று கண்டு மனம் மகிழ்ந்து அந்த வெள்ளரியின் பிஞ்சுகளை பறித்து மந்திரியிடம் வேண்டினான். அப்போது இதனைக் கவனித்துக் ெகாண்டிருந்த ஒரு குருட்டு பிச்சைக்காரன் மன்னன் கூறியதை ேகட்டு சிரித்தான். உடனே மன்னன் எதற்கு சிரிக்கிறாய் என்று ேகட்க அதற்கு அந்த குருடன் ” இது சாப்பிட கசப்புத்தன்ைம கொ ண்ட “போய் வெள்ளரி” இதை உண்ண முடியாது ” என்றான், உடனே அரசர் நீதான் குருடன் ஆயிற்றே உனக்கு எப்படி இது தெரியும் என கேட்க இதற்கு அந்த பிச்சைக்கார குருடன் ” ஊருக்கு அருகாைமயில் இருக்கும் இந்த வாழிப்பான வெள்ளரி யாரும் உண்ணாமல் விட்டு ைவத்திருப்பதிலிருந்தே இவ்வளவு செழிப்பான வெள்ளரிப்பிஞ்சு பேய் வெள்ளரி என்றும் இதனை உண்ண இயலாது என்பதைக் கண்டு கொண்ேடன், இது உங்களுக்கு தெரியவில்ைலயே என வியந்து சிரிக்கிறேன் என்றான், உடனே அரசர் இவ்வளவு புத்திசாலியான குருடன் பிச்சை எடுக்கிறானே என எண்ணி அரசர் தம் நகரில் உள்ள தர்ம சாலையில் தங்க வைக்கவும் அவனுக்கு ஒவ்ெவாரு நாளும் ஒருவேளைக்கு தயிர் சாதம் வழங்கவும் உத்தரவிட்டு அவனை தன்னுடன் அழைத்துச் சென்று தங்க வைத்தார். இவ்வாறு இருக்கும் பட்சத்தில் ஒரு நாள் மன்னரின் அரன்மனைக்கு ஒரு ரத்தின வியாபாரி அரசரிடம் இரு வைரக்கற்களைக் கொண்டு வந்து ” மன்னா இதில் இரண்டில் ஒன்றுதான் விலை மதிக்க முடியாத வைரம் மற்ெறான்னு போலி இதில் எது அசல் எது போலி என்று தங்களால் அறிந்து ெகாண்டால் இதனை தங்களிடமே ஒப்படைக்கிறேன் என்றான், அதனை அறிய தன்னாலும் தன் மந்திரிகளாலும் அடையாளம் காண இயலவில்ைல உடனே தன் பாதுகாப்பில் தர்மசாலையில் உள்ள அந்த குருட்டு பிச்சைக்காரனை அழைத்து வரக் கூறினார், அதன்படி அழைத்து வரப்பட்டு, இந்த வைரங்களில் எது அசல் எது போலி என்று கண்டறிய கூறினார் மன்னர், உடனே அந்த பிச்சைக்காரன் இந்த வைரங்களை சற்று ேநரம் வெயில் வைக்க கூறினான், பின் இதனை தொட்டு தடவிப்பார்த்தான், அதில் சூடான கல் போலி என்றும் சற்றும் சுடாத கல் வைரம் என்றும் அடையாளம் காட்டினான் இதனை அந்த வைர வியாபாரியும் ஒப்புக்கொண்டான் . இதனை எவ்வாறு அறிந்தாய் என்று மன்னன்
கேட்க அதற்கு குருடன் உண்ைமயான வைரம் வெயிலின் உஷ்ணத்தை தன்னுள் அடக்கிக் ெகாள்ளும் ேபாலி தன் உஷ்ணத்தை வெளியிட்டு விடும், இந்த தன்ைமயைக் கொண்டு அறிந்தேன். என்றான். உடனே மன்னன் அந்த பிச்சைக்காரனுக்கு தினமும் தயிர் சாதத்துடன் சாம்பார் சாதமும் வழங்க உத்தரவு இட்டார்.
சில் காலம் கழித்து மன்னன் அரன்மனைக்கு ஒரு சிற்ப வியாபாரி மூன்று ஒரே மாதிரியான தங்கப்பதுமைகளைக் ெகாண்டு வந்து இந்த பதுமைகளில் எது சிறந்தது? என்று கூறினால் இந்த மூன்று தங்கப்பதுமைகளும் தங்களுக்கே சொந்தம் என்றான். உடனே மன்னனுக்கு இதனை கண்டு எப்படியும் கண்டறிந்து அடைந்திட ஆசை ெகாண்டு தன் மந்திரி பிரதானிகளிடம் இது பற்றி கண்டறிய வினவினால் எல்லோரும் பார்த்தது விட்டு தங்களால் உண்மையை காண இயலவில்லை என்று கூறிவிட்டனா், உடனே தன் தர்ம சாலையில் உள்ள அந்த குருட்டு பிச்சைக்காரனை அழைத்து வரக் கூறினார், அதன்படி அழைத்து வரப்பட்டான், அவனிடம் இந்த தங்கப்பதுமைகளி்ல் எது சிறந்தது என்று கேட்டனா், உடனே அவனும் இந்த மூன்று பதுமைகளையும் தன் கைகளால் தடவிப்பார்த்தான் எல்லாம் ஒன்று போல் உள்ளது என அறிந்தான், பின் ஒரு சிறிய நூலைக் கொண்டு வரக்கூறினான், அந்த நூலின் ஒரு நுனியை ஒரு பதுமையின் ஒரு காதில் நுழைத்தான் அநத நூல் நுனி மறு காது வழியாக வந்தது பின் மற்றொரு பதுமையின் காதில் நூலின் நுனியை நுழைத்தான் அது அந்த பதுமையின் வாய் வழியாக வெளிவந்தது. பின் மற்றொரு பதுமையில் நூலின் நுனியை நுழைத்தான் அது உள்ளே செல்லவிலலை. உடனே மன்னா இந்த பதுமைதான் சிறந்தது என்றான். எப்படி சிறந்தது என்கிறாய் என்றனர், சபையோர், அதற்கு அந்த குருடன் முதலில் உள்ள பதுமையை ஒப்பானவர்கள் எந்த ெசய்தியையும் தன் காது வழியாக வாங்கி உடனே மறந்து விடுவார்கள் இவர்களால் எந்த பிரயோசனமும் கிடையாது, மற்ெறாரு பதுமையைப் போன்றவர்கள் தான் கேட்டதை உடனே தன் வாய் வழியாக எல்லோரிடம் கூறி பறைசாற்றி விடுவார்கள் எனவே இது போன்றோரும் சமுதாயத்திற்கு பயன் அற்றவர்கள், மூன்றாவதான பதுமைபோன்ற வர்கள் தான் கேட்டதை யாரிடமும் எளிதில் வெளியிட மாட்டார்கள் எனவே இவர்கள் தான் சிறந்தவர்கள் எனவே இந்த பதுமைதான் சிறந்தது என்றான், எனவே பதுமைவியாபாரியும் இதனை ஒப்புக்கொண்டு இந்த தங்கப் பதுமைகளை மன்னனிடமே ஒப்படைத்து விட்டான், உடனே மன்னன் இந்த பிச்சைக்காரனுக்கு இனி மூன்று வேளையும் உணவு கொடுங்கள் என்று பணித்தார், இருப்பினும் மன்னனுக்கு இவ்வளவு திறமைசாலியான இவனிடம் நிறைய திறமைகள் மறந்து கிடப்பதை அறிந்து தன்னைப் பற்றிய ஒரு உண்மையை அறிய அவனை தனது இரகிய அந்தரங்க அறைக்கு அழைத்தச் சென்று தன்னைப்பற்றி ஒரு உண்மையை அறிய எண்ணிணான், தன்னை ஒரு வேலைக்காரின் தாய்ப்பால் குடித்து வளர்ந்ததாக கூறிகிறார்களோ அது உண்மையா? என்பதை எனக்கு விளக்கு என்றான் அந்த பிச்சைக்கார குருடனிடம், மன்னா இதற்குத்தான இந்த பீடிகை , இதில் எந்த கருத்தும்வேறுபாடே கிடையாதே இது பரிபூர்ண உண்மை என்றான் , உடனே இதை எப்படி உறுதியாக கூறுகிறாய் என்றான்,. அதற்கு அந்த பிச்சைக்காரன் தங்கள் செயல்கள் மூலமே கண்டு ெகாண்டேன் என்றான், அது என்ன செயல் என்று கேட்க ” மன்னா தாங்கள் என்னிடம் ஒவ்வொரு நிகழ்விலும் உண்மைத்தன்மையினைக் கண்டறிந்தவுடன் எனக்கு அளிக்கும் பரிசு ஒரு பிச்சைக்காரி கொடுப்பது போன்று தான் எனக்கு ஆனையிட்டீர்கள்? ஒரு பரோஉபகாரி செயலின் கூற்றன்று, இதிலிருந்து தாங்கள் ஒரு பிச்சைக்காரின் பாலை அருந்திதான் வளர்ந்திருப்பீர்களென அறிந்து கொண்டேன், என்றான், எனவே பிச்சைக்கார குருடனும் அறிவாளியாக் கூட இருப்பான், அவன் சிறு வயதில் அருந்திய உண்ைமயான தாய்ப்பாலின் அன்பு வழியாகத்தான் அவன் குணம் அமையும்.
தாய்ப்பால் குடித்தால் ஞானம் வளரும்
சம்பந்தர் அன்னை பராசக்தியின் தாய் பால் அருந்தினார் அவர் சிறந்த ஞானியானார். தற்காலத்தில் குழந்தைகள் புட்டிப்பால் குடிப்பாதால் வயது பருவத்தில் புட்டியைத் தேடுகின்றனர்.

திருசிற்றம்பலம். ஓம் நமசிவாயம்

சிவனே உயர்வு “எல்லாம் சிவமயம்”

Standard

  “எல்லாம் சிவமயம்”

சிவனே உயர்வு என்பதற்கு பிருங்கிரிஷி ஸம்ஹிதை, சிவோத்கர்ஷப் பிரகரணத்தில் உள்ள ஒரு கதை

 மாளவ தேசத்தில் மகேந்திரவர்மன் என்னும் அரசனின் அவைக்கு வந்த ஒரு அதிசய வழக்கில் வைஷ்ணவர்களாலும் சைவர்களாலும் தன் தன் தெய்வமே உயர்ந்தது என்று வாதாடப்பட்டது. அதற்கு தீர்ப்பு வழங்க வேண்டி வந்து. அதற்கு மந்திரிகளின் அவையைக் கூட்டி அரசன் ஒரு யுக்தியைக் கையாண்டான். நீங்கள் இரு தரப்பினரும் ஒரு மாத காலத்திற்குப் பின் உங்களது தெய்வத்தை எமது முன் கொண்டு வாருங்கள் அதைக் கண்டு தீர்ப்பு வழங்குகின்றேன் என்று கூறி அனுப்பிவைத்தான். இரு தரப்பினரும் மகிழ்ச்சியுடன் சென்றனர். வைணவர்கள் அவ்வொரு மாத காலத்திற்குள் சேஷசாயியாக ஶ்ரீதேவி, பூதேவி சமேதராக, விஷ்ணு, உருவை அரண்மனைக்குள் புக முடியாத அளவிற்கு நீளமாகவும் அகலமாகவும், பெருத்ததாகவும் தயார் செய்து அவ்வுருவிற்கு மிகச்சிறந்த முறையில் அணிகளாலும் ஆடைகளாலும் மலர்களாலும் மிக அழகாக அலங்காரம் செய்து முடித்தனர். சைவர்களோ எனில் என்ன செய்வது என அறியாமல் கஷ்டத்துடன் இருக்குங்களால் ஒரு பெரியார் அவர்கள் முன் தோன்றி ஒரு சிறு பெட்டியைக் கொடுத்து இதைத் திறவாமல் அன்று அரசவைக்குச் சென்று அரசன் கையில் கொடுங்கள், பயமுற்று இருங்கள். உங்களுக்கே வெற்றி கிட்டும் என்று கூறிச் சென்று விட்டார். அப்பெரியாரின் வாக்கில் நம்பிக்கை இருந்தும், மனத்தில் கலக்கத்துடனேயே முப்பது நாட்களையும் கழித்தனர். வைணவர்களோ எனில் சந்தோஷத்துடன் நமது தெய்வம் தான் பெரிது என்பதற்கு எவ்வித ஆட்சேபனையும் இராது என்று வாளாவிருந்தனர். 31-வது நாள் பலசக்கரங்கள் பூட்டிய வண்டியில் பெட்டியில் வைத்து மூடிய திருமாலை வைத்து அரசவைக்கு முன் கொண்டு வந்து நிறுத்தினர். சைவர்களோ எனில் கையில் பெரியார் கொடுத்த பெட்டியை சிரமமின்றி எடுத்துக் கொண்டு அரசவைக்கு உள்ளேயே சென்று விட்டனர். வைணவர்கள் வாயிலில் பாதுகாப்பாக நின்று ஒருவரை மட்டும் உள்ளே அனுப்பி, தங்களது தெய்வத்தைக் காண அரசனை அழைத்து வர அனுப்பினர். அரசனும் அவர்கள் அழைப்பை ஏற்று வாசலில் வர வைணவர்கள் எல்லோருடைய முன்னிலையிலும் அப்பெட்டியடித் திறந்து, உலகையே மயக்கும் அழகு வாய்ந்த விஷ்ணுவை அரசனுக்குக் காண்பித்தனர். அரசனும் அவ்வழக்கைக் கண்டு மயங்கிவிட்டான். உடனே அருகில் உள்ள மந்திரியை அழைத்து விஷ்ணுவே பெரியவர் என்று எழுத ஆணையிட்டான். ஆனால் மந்திரிகள் ஒரு தரப்பு தீர்ப்பு நியாய விரோதம். மறுதரப்பாரையும் விசாரித்து அறிந்த பின் எழுதலாம் எனக் கூறிய பின் வேண்டா வெறுப்பாக அரசவை ஏகினான். சைவர்களைப் பார்த்து உங்கள் தெய்வம் எங்கே என்று கேட்க அப்பெரியவர் அளித்தா பெட்டியை அரசன் கையில் கொடுத்தனர். அரசனும் அப்பெட்டியை ஒன்றன் பின் ஒன்றாக 15 பெட்டிகள் திறந்த பின் 16-வது பெட்டி தங்கத்தால் ஆனதாயும் நவரத்தினங்கள் இழைக்கப்பட்டதாயும் மிகச்சிறிதாயும் அழகு வாய்ந்து ஒளி வீசுகின்றதாயுமிருந்தது. அதைத் திறந்தான். அதனுள் ஒரு தங்கச் சுருள் இருந்தது. அதைப் பிரித்தான். அதில் “சர்வம் சிவமயம் ஜகத்” (உலகம் யாவும் சிவன் உருக் கொண்டது) என்று எழுதியிருந்தது. அதைக் கண்ட உடனேயே அரசனுக்கு எங்கும் சிவன் உரு தோற்றமளித்தது. வெளியேயுள்ள விஷ்ணு வடிவத்திலும் சிவனுடைய உருவமே தோற்றமளித்தது. இதைக் கண்டு பயந்த அரசன் மந்திரிகளை அழைத்து நான் முதலில் கூறியது மிக மிகத் தவறு. உங்களுடைய அறிவுரையை கேளாதிருப்பின் நான் மகா பாவியாவேன். என்னைக் காப்பாற்றினீர்கள். சிவனைக் காட்டிலும் உயரிய தெய்வம் வேறு எதுவும் இல்லை. “எல்லாம் சிவமயம்” என்று தீர்ப்பளித்து சைவர்களை விசேஷ மரியாதைகளுடன் அனுப்பி வைத்து தன் அபராதம் நீங்க அன்று சிவனுக்கு விசேஷ பூஜைகள் செய்து கெளரவித்தான்

திருச்சிற்றம்பலம்

நன்றி சைவம் டாட் ஆர்க்