Aside

காயகல்பம் மூலமாக என்றும் இளமையுடன் வாழ்ந்து, உரிய காலம் வந்தவுடன் தமது உடலை உயிருடன் ஜீவ சமாதியாக்கிக் கொண்டவர்கள் சித்தர்கள். அவர் கள் ஜீவசமாதியாகும்போது அங்கே என்ன ஆற்றல் விளைய வேண்டும் என்று எண்ணி முடிவு செய்தார் களோ, அந்த ஆற்றல் அவ்விடங் களில் இன்றும் அவர்களது சக்தியுடன் எழும்பிக் கொண்டிருக்கிறது என் பதுதான் விசேஷ தத்துவமாகும். அப்படி சித்தர் கள் ஜீவசமாதி அடைந்த இடங்கள் பல உள்ளன. அவற்றில் சிலவற்றை இங்கே தருகிறோம்.

 

கமலமுனி- திருவாரூர்.

கும்பமுனி- கும்பகோணம்.

அகப்பேய் சித்தர்- எட்டுக்குடி.

இடைக்காடர்- திருவண்ணாமலை.

திருமூலர்- சிதம்பரம்.

சட்டைமுனி- சீர்காழி.

மச்சமுனி- திருப்பரங்குன்றம்.

போகர்- பழனி.

குதம்பைச் சித்தர்- மயிலாடுதுறை.

கொங்கணர்- திருப்பதி.

அகத்தியர்- திருவனந்தபுரம்.

கோரக்கர்- பேரூர்.

 இப்படிப்பட்ட தலங்களில் உள்ள தீர்த்தங் களில் நீராடி, சித்தர்களின் ஜீவசமாதிகளைத் தரிசிப்பது சிறப்பான நன்மைகளைத் தரும்.

 தானங்களால் பலவிதமான புண்ணிய பலன்கள் ஏற்படுகின்றன என்று சாஸ்திரங் கள் கூறுகின்றன.

Advertisements
Aside

வழிபாடு:
இறைவழிபாடு இரு வகையாக ஆன்மீக வாளர்கள் பிரித்துள்ளார்கள். அவை 1) புற வழிபாடு 2) அகவழிபாடு. என்பன
கடவுளைத் தன்னின்றும் வேறுபடுத்தி வழிபடுவது புறவழிபாடு.
கடவுடளை தன்னின்றும் பிரியாத தன்மை கொண்டு வழிபடுவது அகவழிபாடு
நம் உடலில் உயிர் இருப்பது போல, இயற்கையில் இறைமை கலந்துள்ளது.இயற்கையைக் கடந்தும் உள்ளது.
நம் உடலில் உயிர் இருக்கிறது. அதைக் காணமுடியாது. காணமுடியாத காரணத்தால் உயிர் இல்லை என்று சொல்ல முடியாது. உயிர் இருப்பதால் உடல் இயங்குகிறது.எனவே காணமுடியாத உயிரை காணக்கூடிய உடலைக்கொண்டு உணர்கிறோம். உடலை தவிர்த்து உயிரைக் காணமுடியாது.
இதைப்போல இயற்கை உடல் போன்றது, கடவுள் இயற்கைக்கு உயிர் போன்றவர். உடலாகிய இயற்கையைக் கொண்டு உயிராகிய கடவுள் உணர்தல் வேண்டும். கடவுளை அல்லது இயற்கையை உணர்த்தும் ஆற்றல் இயற்கைக்கு உண்டு. இறைமையை உணர்வதற்கு அதன் உடலாக விளங்கும் இயற்கையை பற்ற வேண்டும். இயற்கைையுடன் ஒன்ற வேண்டும். இயற்கையின் வாயிலாக அதன் உயிராக உள்ள கடவுளை வழிபட வேண்டும்.
கடவுள் எல்லாவற்றையும் கடந்தவர். இயற்கையை உடலாக தாங்கும் மற்றொரு நிலையும் கொண்டது இறைவருடைய அருளாகும்.இதனையே புறவழிபாடு என்கின்றனர் ஆன்மீக சான்றோர்கள்.
கடவுளை தன்னின்று பிரியாத தன்மை கொண்டு வழிபடும் அகவழிபாட்டினை எடுத்துக் காட்ட மாணிக்க வாசகரும் தனது சிவபுராண பாடலில் இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க ! எனக் கூறியுள்ளார்.
திருநின்ற பெருமான் திருநாவுக்கரசரும் தனது பாடலில் நெஞ்சம் உமக்கே இடமாக வைத்தேன் நினையாது ஒருபோதும் இருந்தறியேன் என்கிறார்.
புறவழிபாட்டில் தொடங்கி அகவழிபாட்டிற்குச் செல்லவேண்டும். புறவழிபாட்டின் நோக்கமே அகவழிபாட்டை அடைவதுதான். நாம் புறவழிபாட்டிலேயே நின்றுவிடுகிறோம்.
அகவழிபாட்டிற்கு யோகம் என்று பெயர். யோகம் என்றால் ஒன்றுதல் என்று பொருள். சீவன் சிவத்துடன் ஒன்றுவது யோகம் எனப்படுகிறது.
இறைமையின் உடலாக விளங்கும் இயற்கையை மாசுபடுத்துவது பெருங்குற்றம் என்பதை நாம் உணர வேண்டும், இயற்கைக்கு துணை போவது புண்ணியமே ஆகும். இயற்கையும் இறைமையை இவ்வாறு உணர்த்தப்டுகிறது. இயற்கை வளம் காப்போம் இறையருள் பெறுவோம்

Aside

ஜீவ சமாதி – ஸ்ரீமாதவானந்தா ஜீவ ஐக்கிய வரலாறு
ஞானபிதா சிவானந்த பரமஹம்ஸர் …… சித்த சமாஜ ஸ்தாபகர் அவர்கள் தமது ஊர்த்துவதியின் மூலம் பெறப்பட்ட சித்த வித்தையினைஉலகில் உள்ள மக்கள் அனைவரும் சாந்தியும், சமாதனமும் அடையும் பொருட்டு, எல்லோரும்வாரி வழங்கினார்கள்,அப்படிப்பட்ட நல்வித்தில் முளைத்து, ஞானத்தை அடைந்துவரும் ஞானபிதாவிடம்ஆனந்தா பட்டம் பெற்ற பன்னிரண்டு சீடர்களில் ஒருவரான சித்த சிவராஜயோகி ஸ்ரீமாதவானந்தா கேரளா மாநிலம் ஆலப்பிழை கொடுங்கலூரில் பிறந்தார், என்று தெரியவருகிறது, இமயமலைச் சாரல்களில் பலகாலம் தவம் புரிந்து, தமது இறுதிக்காலத்தில் தாம் சமாதியாக வேண்டுமென்ற உள்ளுணர்வு ஏற்பட அதற்கு ஏற்ற இடம் பாம்புகோவில் சந்தையைஅடுத்த வெள்ள மடத்து விநாயகர் கோவில் அருகில் தான் என்பதை உணர்ந்தார். சித்த சிவராஜயோகிமாதவானந்தா பாம்புகோவில்சந்தையை அடுத்த வெள்ளை மடத்து விநாயகர் கோவிலுக்கு 6-2-1964ம் தேதி வந்துசேர்ந்தார். விநாயகர் கோவில் அர்ச்சகரிடம் தாம் இன்னும் நான்கு நாட்களில் சமாதி அடையப்போவதாகக் கூறி, அதற்கு உரிய ஏற்பாடுகளை செய்ய சொன்னபோது, அதை நம்பமறுத்த அர்ச்சகரின் கடந்த கால நிகழ்வுகளை எடுத்துக்கூறி அவரை நம்ப வைத்தார், பின், சுவாமிகள் குறிப்பிட்ட அதே இடத்தில் அதே நேரத்தில் 10-2-1964ல் பத்மாசனத்தில் அமர்ந்து மகாசமாதி அடைந்தார்கள், அருகிலுள்ள கிராம மக்கள் அனைவரும், சுவாமி சொன்னபடி சமாதி வைத்தார்கள். பிரம்ம ஸ்ரீ மாதவானந்தா அவர்கள் கூறியபடியே கருடன் பறந்து வந்து, சுற்றிக் கொண்டிருந்தது, அன்ன ஆகாரமமின்றி இருந்து மூன்றாம் நாள் சமாதி அடை, அது சுவாமிகளின் அருகிலேயே சமாதி வைக்கப்பட்டது, சில நாட்களுக்கு பிறகு சுவாமி சங்காரானந்தா அவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர் வந்து சமாதியை மீண்டும் தோண்டிய போது, அவரின் உடல் சிதையாமல் பொன்னிறமாக ஒளிர்ந்தது. பின் சமாதியை சுற்றி கல்லினால் கட்டிடம் கட்டி 1969 அக்டோபர் மாதம் 13ம் தேதி உயர்திரு ஸ்ரீ கிருஷ்ணரெட்டி ஹைகோர்ட் ஜட்ஜ் அவர்கள் தலைமையில் ஐந்தருவி தவத்திரு சங்கரானந்தா சுவாமி அவர்களால் திருப்பணி செய்து , அவ் ஜீவ சமாதியில் ஒவ்வொரு மாதமும் பெளர்ணமி அன்று கூட்டு ஜெபமும் அன்னதானமும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்த ஜீவ சமாதி பிரம்ம வழிபாட்டு முறைகளையே கடைபிடிக்கப்பட்டு வருகிறது, இங்கு தியானம் என்பதற்கு ஜபம் என்றும் மூச்சுபயிற்சிதான் பிதானம் என்றும் ஜபம் செய்பவர்கள் மேலாடை அணியலாகாது என்றும் சிவ மந்திரங்கள் ஒதுவது தவிர்க்கப்படுகிறது, மேலும் சைவ ஜீவ சமாதிகளில் லிங்கம் பிரதிஷ்டைக்கு பதில் பிரம்ம குமாரிகள் சபை போன்று சமாதியில் தாமரை மலர் பீடம் அமைக்கப்பட்டுள்ளது, ஓம் என்ற ஒலிக்கோ அல்லது சிவ நாமங்களுக்கோ இடம் இல்லை, மேலும் முற்றிலும் இது ஒரு பிரம்ம ஞான சபையைச் சேர்ந்த ஜீவ சமாதியாகும்படம்படம்

 

அரியமாணிக்கவல்லி கோவில்

Standard

ஏழுர் சாலியர் சமூக பட்டைய கோவில் என்று அழைக்கப்படும் அரியமாணிக்கவல்லி கோவில் பற்றிய அறிந்தும் அறியாததும், தெரிந்தும் தெரியததுமான சில விசயங்கள்
தற்போது சென்ற 2012 நவம்பர் 13 அன்றைய தினமணி மற்றும் இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்திதாள்கள் மூலம் வெளிவந்த ஏழுர் சாலிய சமூகத்தாரர்களின் வம்சாவழி கோவிலான மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த மேலத்திருமாணிக்கம் கிராமத்தில் உள்ள அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் ஆலத்தைச் சேர்ந்த அருள்மிகு அரியமாணிக்கவல்லி தற்போது ஏழுர் சாலிய இனமக்களால் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி நாளொரு மேனியும் அவ்வலகத்திற்கு சென்று வழிபாடுகள் நடத்தி வருகின்ற சூழ்நிலை மிக பரபரப்பை ஏற்படுத்தி சிற்ப்படைந்தும் வருகிறது, இக் கோவிலைப்பற்றி தெரிந்தும் தெரியாத- அறிந்தும் அறியாத சில வரலாற்று செய்திகளை காணலாம்.
மதுரைமாவட்டம் மேலத் திருமாணிக்கம் என்ற கிராமம் சதுரகிரி மலையின் வடக்கப்பக்க அடிவாரத்தில் சேர மன்னர்களால் கட்டப்பட்ட நேர்த்தியான ஆகம விதிகளின்படி 234 பாடல் பெற்ற திருத்தலங்களைப்போலவே அமைக்கப் பெற்ற சிவத்தலமாகும், இங்குள்ள மீனாட்சி சுந்தரேசுவரர் சுயம்புலிங்கமாக காட்சியளிக்கிறார், இக் கோவில் அமைப்பு சிறயதாக இருந்தாலும் மூன்று சுற்று பிரகாரங்களுடன் பெரியசிவத்தலங்களின் அமைப்பை பெற்று சிறப்புற்று இருந்து வந்துள்ளது, பாண்டியமன்னார்களால் இக்கோவில் பராமரிப்பு செய்து பேணி பாதுகாப்பு பெற்று வந்துள்ளது, காலப்போக்கில் சற்று சிதைவுடைந்த நிலையில் அறநிலைத்துறையினால் மராமத்து செய்யப்பட்டு மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் ஆலயத்தின் துணைக்கோவிலாகவே செயல்பட்டு வருகிறது, நித்திய அன்னதானமும் நடைபெற்று வருகிறது, எல்லாக் கோவில்களிலும் காணப்படும் சித்தர்களின் சமாதியும் இக்கோவிலிலும் ஒரு சித்தர் சமாதி நிலை அடைந்த வரலாற்றுடன் ஆதிமூர்த்தி ஐயர் என்ற சித்தர் சமாதியும் உள்ளது, இக்கோவிலுக்கு திருஞானசம்பந்தர் வருகைதந்ததாகவும் இச்சமாதி இருக்கும் இடத்தில் வாந்தி எடுத்தாகவும் வரலாற்று செய்திகளாக கூறப்படுகின்றது, இக்கோவிலின் வெளிப்புறத்தில் இதன் துணைக்கோவிலாக அரியமாணிக்கவல்லி அம்மன் அமைந்துள்ளது, இது மேலத்திருமாணிக்க கிராமத்தின் கிராம தெய்வமாக வழிபட்டு வருகின்றனர் இவ் அம்மனை நெசவு தொழில் செய்யும் ஏழூர் சமூகத்தாரோடு தேவாங்க செட்டியார்களும் தற்போது வழிபட்டு வருவதாக கல்வெட்டுகள் மூலம் அறியப்படுகிறது, மொத்தத்தில் மிகவும் சக்திவாய்ந்த தெய்வீக அருளை அள்ளித்தரும் அம்மனை அதன் கம்பீரத்தோற்றத்தினையும் கண்டு வணங்கி அம்மன் அருள் பெறுவோம்
அன்பன் சு,வை.பூமாலை சுந்தரபாண்டியம்படம்படம்படம்

ஓம் என்ற சொல்

Standard

ஓம் என்ற சொல் தமிழில் பிரனவ மந்திரமாக குறிக்கபட்டதின் காரனம் அதற்க்குள் அடங்கிய பாசிட்டிவ் வைப்ரேஷன் எனப்படும் ஒரு நல்ல விஷயங்களுக்கான அதிர்வு தான் அந்த வார்த்தை. ஆம் ஒரு சில கோயில்களிலும், அரன்மனைகளிலும், சில வீடுகள் மடங்கள் இந்த மாதிரி இடத்திலும் நீங்கள் காணக்கூடிய ஒரு ஸ்ரீ சக்கரம் (யந்த்ரம்) என்னவென்று பலருக்கு தெரியாது. பலர் இதை ஒரு செப்பு தகடின் கிருக்கல்கள் என நினைத்திருக்கலாம். ஓம் என்ற சொல்லின் உருவம் அல்லது படிவம் தான் என்று சயின்ஸ் நிருபித்துள்ளது. ஆம் ஹான்ஸ் ஜென்னி என்னும் விஞ்சானி ஸ்விஸ் நாட்டை சேர்ந்தவர் தான் ஒலியின் பரிமானத்தை நம் பார்வைக்கு கொண்டுவந்தவர். இவர் கண்டுபிடித்த சாதணம் தான் டோனோஸ்கோப் (Tonoscope) என்னும் ஒரு வரலாற்று முக்கிய கருவி. இந்த டோனோஸ்கோப்பில் ஓம் என்று உச்சரித்தால் ஸ்ரீ சக்ரா எனப்படும் யந்திர உருவத்தை .காண முடியும் அதன் படத்தையும் இங்கு இணைத்துள்ளேன். நீங்களும் உச்சரித்து பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். ஆனால் இந்த உருவத்தை நாம் வரைந்து வைத்த்ருப்பதை அதுவும் பல ஆயிரகணக்கான ஆண்டுகளூக்கு முன் ஒம் என்ற உச்சரிப்பின் பரிமானம் இது தான் என்று வேத ரிஷிகளும் முனிவர்களும் இந்தன் அர்த்ததை உணர்ந்திருப்ப்து மெய் சிலிர்க்க வைக்கும் ஒரு பெரிய உண்மை………

நன்றி : ரவி நாகராஜன்

Aside
எழுதப்படாத வரலாற்றுக்கு முன்பிருந்தே இந்த பூமி முழுவதும் ஹிந்து தர்மம் பரவியிருந்தது;மஹாபாரத காலத்தில்,பஞ்சபாண்டவர்களில் ஒருவரான அர்ஜீனனின் மனைவியரில் ஒருத்தி மெக்ஸிகோ நாட்டைச் சேர்ந்தவள் ஆவாள்.வரலாறு என்பதை மேல்நாட்டினர் எழுதத் துவங்கியதால் தான் ,நமது ஹிந்து தர்மத்தின் பெருமைகளை வேண்டுமென்றே மறைத்துவிட்டனர்;அதை உணரும் பக்குவத்தை நாம் இன்றும் அவ்வளவாகப் பெறவில்லை;இந்த அறியாமையால் தான் கொள்ளையடிப்பவர்களெல்லாம் நமது ஆட்சியாளர் நிலைக்கு உயர்ந்துவிட்டனர்;எப்போது ஹிந்து தர்மத்தின் பெருமைகளை இந்தியாவின் ஒவ்வொரு இளைஞனும்,இளம் பெண்ணும் உணர்ந்துகொள்கிறார்களோ,அப்போது முதல் இந்த தேசத்தை நேசிப்பவர்கள் மட்டுமே ஆள முடியும் என்ற சூழ்நிலை  உருவாகும்.இந்த இலக்கை அடையவே ஆர்.எஸ்.எஸ்.இயக்கம் செயல்பட்டுக்கொண்டு வருகிறது.சுதந்திரம் வாங்கியது முதல் ஐம்பது ஆண்டுகளுக்கு அனைத்து கடவுள்களையும் வழிபடுவதையும் நிறுத்திவிட்டு பாரதமாதாவை மட்டுமே நாம் வழிபட வேண்டும்;அப்படி வழிபட்டால் தான் நாம் இந்த உலகிற்கே வழிகாட்டும் குருவாக ஆக முடியும்.நமது சந்ததியினர் வளமான,சிறப்பான,தன்னம்பிக்கை நிறைந்தவர்களாக வாழ முடியும் என்பதை சுவாமி விவேகானந்தர் தெரிவித்திருக்கிறார்.
 
12.1.1863 அன்று இன்றைய கொல்கொத்தாவில் விஸ்வநாத தத்தர் என்ற வழக்கறிஞருக்கும்,புவனேஸ்வரிக்கும் காலை ஆறு மணி முப்பத்து மூன்றாம் நிமிடம்,முப்பத்து மூன்றாம் விநாடியில் தனுசு லக்னம்,கன்னி ராசி,ஹஸ்தம் நட்சத்திரம்,கிருஷ்ண சப்தமி திதியும்,பொங்கல் திருநாளும் கூடிய சுபயோக சுபதினத்தில் நரேந்திரன் சிவபெருமானின் அம்சமாகப் பிறந்தார்.காசி வீரேசுவர சிவபெருமானின் அருளால் பிறந்தமையால்,இவரது பெற்றோர்கள் இவருக்கு வீரேசுவரன் என்று பெயர் வைத்தனர்.இவரைச் செல்லமாக பிலே என்று அழைத்தனர்.
 
 
ஷண்மதக்கொள்கையே ஹிந்து தர்மத்தின் அடிப்படை! விநாயகரை வழிபடும் முறைக்கு காணபத்தியம் என்று பெயர்;குமரக்கடவுளை வழிபடும் மதத்திற்கு கவுமாரம் என்றும்,சிவனை வழிபடும் முறைக்கு சைவம் என்றும்,விஷ்ணுவை வழிபடும் மதத்தை வைஷ்ணவம் என்றும்,அம்மனை வழிபடும் முறைக்கு சாக்தம் என்றும்,சூரியனை வழிபடும் முறைக்கு சவுரம் என்றும் ஆறு மதப்பிரிவுகளாக இறைவனை அடையும் வழிமுறைகள் இருந்தன;இந்த ஆறு வழிபாட்டுமுறைகளும் சில லட்சம் ஆண்டுகளில் எழுபத்தாறு முறைகளாக பெருகிவிட்டன;இந்த எழுபத்தாறு வழிமுறைகளையும் மீண்டும் ஆறு மத வழிபாடாக மாற்றுவதற்கு சதாசிவனின் ஆணைப்படி பூமியில் பிறந்தவரே ஆதி சங்கரர் ஆவார்.தனது 33ஆம் வயதுக்குள் ஆதிசங்கரர் இந்தியாவை மூன்று முறை வலம் வந்தார்;அக்கால வழக்கப்படி,இந்த எழுபத்தாறு மத ஆச்சாரியார்களிடம் வாதம் செய்து அனைவரையும் தனது சீடர்களாக ஏற்றுக்கொண்டார்.இதன் மூலம் இந்து தர்மம் மீண்டும் புத்துயிர் பெற்றது.
அவருக்கு அடுத்தபடியாக,உலகத்திற்கு இந்து தர்மத்தின் பெருமைகளை புரிய வைப்பதற்காக சிவ கணங்களாக இருந்தவர்களை ஸ்ரீராமகிருஷணராக முதலில் அவதரிக்க வைத்தார் சதாசிவன்;அடுத்தபடியாக சுவாமி விவேகானந்தரை பிறக்க வைத்தார்;ஸ்ரீராமக்ருஷ்ணர் தமது தவ ஆற்றல் முழுவதையும் தனது சீடரான சுவாமி விவேகானந்தருக்கு வழங்கினார்.
 
 
சுவாமி விவேகானந்தர் ஆரம்ப காலத்தில் நாத்திகராக இருந்தவரே! தனது சிறுவயதிலிருந்தே மணிக்கணக்காக தியானம் செய்து வந்தவர்;சுவாமி விவேகானந்தர் கடவுளை நேரில் பார்க்க விரும்பினார்;எனவே,ஆன்மீகத்தைப் பற்றியும்,கடவுளைப் பற்றியும் தன்னிடம் யாரெல்லாம் பேசுவார்களோ,அவர்களிடம் அவர்களிடம் கடவுளை நீங்கள் நேரில் பார்த்திருக்கிறீர்களா? என்றும்,நீங்கள் பார்த்திருந்தால்,எனக்கு காட்டுவீர்களா? என்றும் கேள்வி கேட்பார்.சரியான பதில் பலரிடம் கிடைக்கவில்லை;
 
 
இந்த சூழ்நிலையில் ஒருவர் சுவாமி விவேகானந்தரிடம் , தட்சிணேஸ்வரத்தில் காளி கோவில் பூசாரியாக இருக்கும் ராமகிருஷ்ணரை சந்தித்தால்,உன் கேள்விகளுக்கு விடை கிடைக்கும் என்று வழிகாட்டினார்.
ஸ்ரீராமகிருஷ்ணரை நேரடியாக சந்தித்த சுவாமி விவேகானந்தர்,
“நீங்கள் கடவுளை நேரில் சந்தித்திருக்கிறீர்களா?” என்று கேட்டார்.
“ஆம்.”
“அவரை எனக்கு காட்ட முடியுமா?”என்று தனது ஆவலை  வெளிப்படுத்தியிருக்கிறார்.
அதற்கு ஸ்ரீராமக்ருஷ்ணர், “காட்டுவதென்ன; உன்னிடம் பேசுவது போல,அவரிடம் பேசியிருக்கிறேன்;அதே போல நீயும் கடவுளிடம் பேச முடியும்.நீ நினைக்கும்போதெல்லாம் பேச முடியும்” என்று சொல்லியிருக்கிறார்.
 
 
இவரது உறுதியான பதிலைக் கேட்டு நரேந்திரன்(சுவாமி விவேகானந்தரின் நிஜப்பெயர்!) திகைத்துப்போனார். பிற்காலத்தில் ஸ்ரீராமகிருஷ்ணரால் நரேன் கடவுளை நேரில் சந்தித்திருக்கிறார்.பேசியிருக்கிறார்.
இந்த உலகம் முழுவதும் வாழும் அனைத்து இன மக்களுக்கும் கத்தோலிக்க கிறிஸ்தவமே கதி மோட்சம் அளிக்கும் மதம் என்பதை அறிவிக்கவே சிகாகோவில்  11.9.1893 திங்கட்கிழமையன்று சர்வமத சபையை கூட்டினர்.
 
 
ஆனால்,அவர்களின் நோக்கம் நிறைவேறவில்லை;மாறாக ஹிந்து தர்மத்தின் பெருமைகள் உலகறிய ஒரு வாய்ப்பாகிவிட்டது.ஆதி சங்கரருக்குப்பிறகு,ஹிந்து தர்மத்தின் பெருமைகளை உலகம் அறியவும்,ஹிந்து தர்மத்தின் ஆபத்துக்களை ஹிந்துக்கள் புரிந்து கொள்ளவும் சுவாமிவிவேகானந்தரை சதாசிவன் பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்.
 
 

ஒரு ஹிந்து மதம் மாறிவிட்டால்,ஹிந்துக்களின் எண்ணிக்கையில் ஒன்று குறைந்துவிட்டதாக அர்த்தம் அல்ல;ஹிந்து எதிரி ஒருவன் அதிகரித்துவிட்டதாக அர்த்தம்.படம்

 

//

Standard

உங்களுக்காக

தேனி மாவட்டத்தில் உள்ள பல விவசாய குடும்பங்களின் வீடுகளில், தவறாமல் ஒருவர் படம் இடம் பெற்றிருக்கும்.
இன்றைக்கும் அங்கு பிறக்கும் பல குழந்தைகளுக்கு, அவரது பெயர்தான் வைக்கப்படுகிறது.
ஆங்காங்கே உள்ள இவரது சிலைக்கு, மாலை அணிவித்து மரியாதை செய்வதும், வழிபாடு செய்வதும் தொடர்கிறது.
விவசாயிகள் இன்றைக்கும், தங்களது கண்களில் ஆனந்த கண்ணீர் பெருக்கி நன்றியோடு நினைக்கும் அந்த பெரியவர், யார் தெரியுமா? அவர்தான் பென்னிகுக்.
தென் தமிழக மக்களின் வாழ்வாதாரமானதும், இன்றைய தேதிக்கு கேரள அரசால் பிரச்னை செய்யப்படும் இடமுமான முல்லை பெரியாறு அணையை கட்டியவர்தான் இவர்.
இங்கிலாந்தில், ஜனவரி 15, 1841ல் பிறந்த ஜான் பென்னிகுக், பொறியியல் மேற்படிப்பு முடித்த கையோடு, பொதுப் பணித்துறை பொறியாளராக பொறுப்பேற்று, ஆங்கில அரசால், சென்னை மாகாணத்திற்கு நியமனம் செய்யப்பட்டவர். அப்போது கடும் வறட்சியில் வாடிக்கொண்டு இருந்த தமிழக தென் மாவட்டங்களுக்கு, ஒரு நிரந்தரத் தீர்வு காண்பதற்கான முயற்சியில் இறங்கினார். மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்யும் மழை நீர், பெரியாறாக உருவாகி, அந்த தண்ணீர் வீணாக கடலில் கலப்பதை கண்டுபிடித்தார். அந்த தண்ணீரை அணைகட்டி தடுத்து, திருப்பி விடுவதற்காக கட்டப்பட்டதுதான், முல்லை பெரியாறு அணை.
கிட்டத்தட்ட 75 லட்ச ரூபாய் செலவில், 1887ல், அணை கட்டும் முயற்சி துவங்கியது.
அணையின் பெரும்பகுதி கட்டி முடிக்கப்பட்ட நிலையில், பெய்த பேய்மழையாலும், பெருகிவந்த வெள்ளத்தாலும் அணை அடித்து செல்லப்பட்டது. இதற்குமேல் பணம் ஒதுக்க முடியாது. ஆகவே, அணை கட்டும்…

View original post 223 more words