panniru thirumurai

Standard

படம். இவை உலக வாழ்க்கையில் மக்கட்கு வேண்டும் நலங் களை அருளுவதோடு முடிவில் இறைவன் திருவடிப் பேற்றையும் நல்குவனவாகும். பன்னிரு திருமுறைகளைப் பக்தியோடு பாராயணம் செய்து நலம் பெறுமாறு நமது தருமை ஆதீன ஆதிபரமாசாரியர் ஷ்ரீகுருஞானசம்பந்தர் நமக்கு அறிவுறுத்துகின்றார்

திருப்பதிகம்:

பதிகம் என்பதற்குப் பத்துப் பாடல்களைக் கொண்டது என்பது பொருள். பெரும்பாலானவை பத்துப்பாடல்களைக் கொண்டும் சில கூடியும் குறைந்தும் இருப்பினும் அவை பதிகம் எனவே பெயர் பெறும். ஞானசம்பந்தர் பதிகங்கள் பத்துப் பாடல்களுக்கு மேல், பயன்கூறும் திருக்கடைக்காப்புடன் பதினொரு பாடல்களைக் கொண்டதாய் விளங்குவன.

இத்திருமுறையில் அற்புதப் பதிகங்களாக விளங்குவன ஏழு. அவை ஞானப்பால் உண்டது, பொற்றாளம் பெற்றது, முயலகன் நோய் தீர்த்தது, பனிநோய் போக்கியது, மதுரை அனல் வாதத்தின்போது எரியில் இட்டது, ஆண்பனையைப் பெண்பனை ஆக்கியது, வாசி தீரக் காசு பெற்றது ஆகிய நிகழ்ச்சிகளை உள்ளடக்கியனவாகும். பல நூற்றாண்டுகளாக ஓலைச் சுவடிகளிலிருந்த மூவர் தேவாரத் திருமுறைகளை, முதன் முதலில் காகித நூல்வடிவில் உலகுக்கு அளித்த பெருமை திருமயிலை சுப்பராய ஞானியார் அவர்களையே சாரும். திருஞானசம்பந்தர் அருளிய முதல் மூன்று திருமுறைகளை, திருவாவடுதுறை ஆதீனப் பிரதியை ஆதாரமாகக் கொண்டு, காஞ்சிபுரம் வித்துவான் சபாபதி முதலியார் அவர்களைக் கொண்டு ஆய்வு செய்வித்து, அப்பாவுப்பிள்ளை, நமச்சிவாய முதலியார் ஆகியோரின் பொருள் உதவியுடன், குமாரய்யர் அவர்களின் அச்சுக் கூடத்தில், ருத்ரோத்காரி ஆண்டு ஐப்பசித் திங்கள் (கி.பி. 1864)இல் பதிப்பித்து இவர் தமிழுலகிற்கு வழங்கினார்.

சுந்தரர் அருளிய ஏழாம் திருமுறையினை திருவாவடுதுறை ஆதீனப் பிரதியை அடிப்படையாகக் கொண்டு காஞ்சிபுரம் வித்துவான் சபாபதி முதலியார் அவர்களைக் கொண்டு ஆய்வு செய்வித்து, கலாநிதி அச்சுக் கூடத்திலும், சண்முக விலாச அச்சுக் கூடத்திலுமாக குரோதன ஆண்டு (கி.பி. 1865) பதிப்பித்து உதவி னார். திருஞானசம்பந்தர் தேவாரம் அச்சில் வெளிவந்த எட்டுத் திங்களுக்குள் சுந்தரர் தேவாரம் அச்சேறிவிட்டது.

திருநாவுக்கரசர் அருளிச்செய்த நான்கு, ஐந்து, ஆறு ஆகிய மூன்று திருமுறைகளையும் திருவாரூர்ச் செப்பேட்டின்படி பனை ஓலையில் எழுதுவித்துத் தருமை ஆதீனத்தில் இருந்த பிரதியை ஆதார மாகக் கொண்டு, சபாபதி முதலியார் அவர்கள் ஆய்வுடன், ஆதி நாராயணப் பிள்ளை அவர்கள் உதவியால் கலாநிதி அச்சுக்கூடத்தி லும், புட்பரத செட்டியாருடைய கலாரத்னாகர அச்சுக் கூடத்திலுமாக அக்ஷய ஆண்டு புரட்டாசித் திங்கள் (கி.பி. 1866) இல் பதிப்பித்து வெளியிட்டார். சுந்தரர் தேவாரம் வெளிவந்த பதினைந்து திங்களுக்குள் திருநாவுக்கரசர் தேவாரம் பதிப்பிக்கப் பெற்றது.

Advertisements

Kolaru pathigam

Link

Kolaru pathigam

வேய் உறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன் மிக நல்ல வீணை தடவி மாசறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்து என் உளமே புகுந்த அதனால் ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழம் வெள்ளி சனி பாம்பிரண்டு முடனே ஆசறு நல்லநல்ல அவை நல்ல நல்ல அடியார‌ வர்க்கு மிகவே. தேனமர் பொழில்கொள் ஆலை விளைசெந்நெல் துன்னி வளர் செம்பொன் எங்கும் திகழ நான்முகன் ஆதியாய பிரமா புரத்து மறைஞான ஞான முனிவன் தானுறு கோளும் நாளும் அடியாரை வந்து நலியாத வண்ணம் உரைசெய் ஆன சொல்மாலை யோதும் அடியார்கள் வானில் அரசாள்வர் ஆணை நமதே.

சிவ மந்திரம்

Standard

சிவ மந்திரம்
தெய்வ வழிபாடுகள் ஒன்பது வகையாக பிரிக்கப்பட்டுள்ளன, அவையாவன
கேட்டல், சொல்லுதல், நினைத்தல், பாதசேவை,கோவில் வழிபாடு, பிரர்த்தித்தல், பணிதல், நட்புகொளல், சமர்ப்பணம் செய்தல்
இதில் கேட்டல், சொல்லுதல் நினைத்தல், ஆகியவற்றிக்கு தோத்திரப்பாடல் தான் முதன்மை பெறுகிறது, தோத்திரங்கள் மூலம் தான் வழிபாட்டிற்கு ஆதாரமாக அமைந்தது தான் தேவார – திருமந்திர பாடல்கள் கொண்ட பன்னிரு திருமுறை ஆகியன,
இந்த தோத்திர பாடல்களை சுருக்கி இறைவனை வேண்டுவதற்கு குறுகியசொற்களால் உறுவேற்றி ஆராய்ந்து கொண்டு வரப்பட்டவைகள் தான் மந்திர சுலோகங்கள் மற்றும் மந்திரங்கள் அனைத்தும்,இவை மந்திரங்களை உருவேற்றி மனித உடம்பில் மின் காந்த சக்தியை கூட்டிக் கொள்ளவேண்டும்
மந்திரங்களில் பிரதானமானது ” ஓம்” என்ற பிரணவ மந்திரம், இது எல்லா நாம வழிகளிலும் சேர்த்து பிரணவ ஒலியை எழுப்ப சேர்க்கப்படுகிறது,உலகம்முழுவதும்சுற்றி வரும் நாமம்
ஓம் நமச்சிவாய, ஓம் நாமோ நாராயணா, ஒம் சக்தி, ஓம் குரு தேவ, என எல்லா சைவ, வைஸ்னவ நாம வழிகளில் பிராத்தனைக்காகவும் சேர்க்கபடுகிறது, இந்த ஓம் பிரண மந்திரத்தை சிவ மந்திரங்கள் உருவாக்கப்பட்டன, இந்த மந்திரங்களை ஒவ்வொரு சித்தர் பெருமக்களும் அவரரவர் ஆராய்ச்சிக்கு ஏற்ற சிவ மந்திரங்களை உருவாக்கியுள்ளனர், அகத்தியர், கஜபுஜண்டர் ஆகியோர் நமச்சியவாய மந்திரங்களை வெவ்வேறுகோணங்களில் ஆராய்ந்து தீர்க்கம் பெற்றனர்,அவைகளில பிரதானவானவை ஓம் நம சிவாய!ஓம் சிவய நம! போன்றவை ஓம் சிவ சிவ ஓம்! ஓம் என்பது சிவத்தையும் ரீம் என்பதற்கு சக்தியை இணைப்பதற்கு ஓம் ரீம் இணைத்து வேண்டிய செயலுக்கான மந்திர சொற்களை உருவேற்றினர்
இதில் அகத்தியர் மகிரிஷி ஒவ்வொரு செயலுக்கும் தனிதனி மந்திரம் கண்டுள்ளார் அவை எட்டு வகையாவன :
1)மோக சக்தி பெற – மோகன மந்திரம் : ஓம் ரீம் மோகய! மோகய!
2)வசிகம் செய்ய – வசிகமந்திரம் : ஓம் ரீம் வசி!வசி!
3) மனதை ஒருநிலைப்படுத்த – கெட்ட ஆவிகளைவிரட்ட – ஓம் ரீம் சம்பைய! சம்பைய!
4) ஆக்ஸ்யம் – பிரிந்தவர் ஒன்று சேர நம்னை வெறுத்தவர் வெறுப்புணர்வு மாற: ஓம் ரீம் ஆகஸ்ய !ஆகஸ்ய !
5) உச்சாடனம் நோய் கள் தீர – சுக வாழ்விற்கு : ஓம் ரீம் உச்சாடய! உச்சாடய!

6) வேதனம்: ஓம் ரீம் சேர்ந்தவர்கள் பிரிப்பதற்கு
7) செளபாக்கியம் பெற: ஓம் ரீம் சிவசிவ!
8) தெய்வ அருள் பெற ஓம் சிவ சிவ ஓம்!
மேற்கண்ட மந்திரங்களை தங்கள் தேவைகளுக்கு ஏற்ப ஒரு லட்சம்தடவை உருவேற்றி ஜெபிக்க வேண்டும் மந்திரம் நன்மை செயலுக்குத்தான் பயன்படுத்த வேண்டும் இந்தமந்திரம் நன்கு செயல்பட சைவ உணவினை நன்று