ஆழ் மனதின் அற்புதங்கள் – 2

Standard

ஆழ் மனதின் அற்புதங்கள் – 2
ஆழ் மன சிந்தனைக்கு அதன் வெற்றிக்கு அடிப்படையாக அமைவது குறிக்கோளுடன் சேர்ந்த எண்ணமும் முக்கியத்துவம் பெறுகிறது, குறிக்கோளின் வலுவினை விளக்க கீழ்கண்ட எடுத்துக்காட்டு உதாரணமாக அமைகிறது, ஒரு தடவை அமெரிக்க ஜனதிபதி ஜான்கென்னடி ஒரு பள்ளியில் பள்ளி மாணவர்களுடன் சகசமான முறையில் உறையாடும் போது ஒரு மாணவனைப் பார்த்து புன்னகையுடன் – உன் எதிர்காலம் என்ன? – என்று கேட்டார் உடனே அவன் பளீரென்று இன்று நீங்கள் இருக்கும் இடத்தில் நாளை நான் இருக்க வேண்டும் இது தான் என் லட்சியம் என்றான், உடனே ஜனதிபதியும் நன்று என்று வாழ்த்தி சென்றார், அந்த பள்ளி மாணவனின் லட்சியம் – குறிக்கோள் – எண்ணம் ஜனதிபதியாகவேண்டுமென்ற உயர்ந்தஆழ்மன சிந்தனை அவனை அமெரிக்க ஜனதிபதியாகவே ஆக்கியது, அது வேறுயாருமல்ல ….. அவன்தான் புகழ்பெற்ற பில்கிளிண்டன் எனவே தீர்ககமான தீர்மாணமே புகழின் உச்சிக்கும் தான் நினைத்த செயலுக்கு கால்கோளாக அமைகிறது,மனம் இருந்தால் மார்க்கம் உண்டு என்ற பழமொழியும் இதனையே விளக்கிறது.
எண்ணமே திண்ணமாகி அதுவே மனத்திரையில் ஆழமாக பதிந்து நம் எண்ண உணர்வுகளே – இந்தபிரபஞ்மென்ற வாயுமண்டலத்தில் எலக்ட்ரானிக் – அலைவரிசைகள் போல நம் மூளைியின் அலை வரிசைகளினால் தூண்டப்பட்டு அது வே செயலாக மாறுகிறது. ஒருவரின் எண்ணங்கள் முற்பிறவியில் தான் எதன்பால் மிகுந்த அன்பு செலுத்தி அதனையே சர்வ சதா காலமும் எண்ணிக்கொண்டவனின் எண்ணங்களே அடுத்த பிறவியில் அதுவாகவே பிறப்பான் என்பது மூததையர்கள் கண்ட உண்மை இதனையே விஜய் டிவி மகான்கள் என்ற நிகழ்ச்சியில் மான – மீன் கதையாக ஒரு ஆச்சாரியார் விளக்குவது ஒளிபரப்பட்டது, அதில் ஒரு மகா முனிவர் கடுமையாக தவங்கள் பெற்று காட்டில் தனியாக ஒரு ஆஸ்ரமத்தில் வாழ்ந்து வரும்போது அதிகாலையில் அருவியில் நீராட சென்றுள்ளார் அப்போது அவர் பார்வையில் அருவியின் அருகிலுள்ள சுனையில் நிறைமாத மான் ஒன்று நீர் அருந்திக் கொண்டிருந்தது இதனை ஒரு சிறுத்தை பார்த்து விட்டது அதனைக் கண்ட மான் உடனே உயிர் பதறி பாறையின் இடுக்குக்ள வழியாக தாவித்தாவி சென்றது, இதன் வேகத்திலும் பயத்திலும் தன் குட்டியை ஈன்றுவிட்டது பின்னும் ஓடும் போது தாய்மானை சிறுத்தை கடித்து உணவாக்கி விட்டது, இந்த நிகழ்வை கண்டு கொண்டிருந்த முனிவர் அனாதையாக உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் குட்டி மானை தானே எடுத்து வந்து ஆசிரமத்தில் வைத்து வளர்த்து வந்தார், தானே நேரிடையாக உணவழித்து அதனுடன் தன் வாழ்நாள் முழுவதும் அதனுடனயே கழித்து வந்தார், மான் வளர்ச்சி பெற்றது, முதிர்ச்சி பெற்ற முனிவரோ நமக்கு பின் இந்த மானின் கதி என்ன? என்பது பற்றி கவலையிலேயே தன் உயிர் பிரிந்தது, அன்னாரின் ஆழ்மனம் அந்த மான் மீதே இருந்ததால் அடுத்த பிறவியில் மானாகவே பிறந்தார் என கதையை சிந்தனையின் வழியே செயல் என்று கதையை முடித்தார், இது போன்று மீன் கதையை கூறுகையில் யோக ஆசனநிலை – தவ நிலை என்ற அடிப்படையில் ஒரு முனிவர் தன் ஆழ்மனதை உள்ளடக்கி நீருக்கு அடியில் தவம் செய்து கொண்டிருந்தார், அப்போது அவரின் எண்ண அலைகள் தனது ஞான உலகிலிருந்து பிரிந்து சுற்றுப்புறத்தின் பால் கவனம் ஈர்க்கப்பட்டது. அப்போது தனது உடலை சுற்றி ஒரு மீனின் சந்ததிகள் சுமார் ஆயிரக்கணக்கான மீன்கள் உணவை தேடுவதும், சந்தோசமாக அங்குமிங்கும் கூட்டமாக அலைவதைப் பார்த்து அந்த நிலை வாழ்க்கையின் பால் மனம் ஈர்க்கப்பட்டார். உடனே தான் செய்த தவத்தை விட்டுவிட்டு திருமணம் செய்யவேண்டுமென்ற எண்ணம் கொண்டு தான் பெற்ற தவ வலுமையால் இளமை உருவம் கொண்டு ஒரு மன்னனின் பெண்களான சுமார் 100 பேரை மனமுடித்து இல்லரத்தில் தன் முழு வாழ்க்கையையும் அர்ப்பணித்து தான் எண்ணம் கொண்ட மீன் குஞ்சுகள் போல் சுமார் ஆயிரக்கணக்கான வம்சா வாரிசுகளை பெற்றார், எனவே இந்த தவ முனியின் எண்ணமும் சிந்தனையும் ஆழ்மன சிந்தனையின் செயலாகவே வெற்றி கண்டது. என்று விளக்கமளித்தார் ஆச்சாரியார்,
எனவே ஆழ்மனதின் சிந்தனைகள் குறிக்கோள்களாகவும்,குறிக்கோள்கள் சிந்தனை படலங்களாகவும் அதுவே காந்த அலைகளாகவும் மாறி உண்மை நிகழ்வுகளாகவே அமைய வழி செய்கிறது. எந்த காரியமும் என்னால் முடியும் அது நடந்தே தீரும் என நம்பிக்கை உண்டு என்று மீீண்டும் மீண்டும் கூறி ஆழ்மனதை திடப்படுத்தினால் அதுவே மந்திர சக்தியாக மாறி அற்புதமாக மாற்றிக் காட்டுகிறது, இந்த முன்னேற்ற பாதையில் பயணிக்க குறுக்கீடுகளாக மூன்று எதிரிகளை சந்திக்கலாம், அதில் ஒன்று உங்களது எதிர்மறையான சிந்தனைகள் – நன்மையையோ நோக்கி பயணிககையில் நன்மையான பயன்கள் எவ்வாறு உருவாகிறதோ அது போலவே உங்களின் எதிர்மறை ஆழ்மனச்சிந்தனையால் எதிர்மறை விளைவுகளையும் சந்திக்க முடியும், எனவே இதனை முறியடிப்பது உங்கள் சிந்தனையில்தான் உள்ளது. இதற்கு அடுத்தாற்போல் – அவ நம்பிக்கை – பொதுவாக மனிதர்கள் அவநம்பிக்கையில் – நம்பிக்கையுடையவர்களாகவும், நம்பிக்கையில் அவநம்பிக்கை யுடையவர்களாகவும் வாழ்கின்றனர், எனவே அவர்களின் தோல்விக்கு இதுவும் காரணமாகிறது. அடுத்து முன்னேற்றத்திற்கு தடையாக இருப்பது – தன்பயம் – தன்பயம், மனிதன் உயர்ந்த குறிக்கோள் கொள்ளாமல் இருப்பதற்கும் பெரிய காரியங்கள் செய்யாமற் போவதற்கும் காரணம் அவன் உள்ளத்தில் புதைந்திருக்கும் அச்சமே. மற்றவர்களின் விமர்சனத்தால் நம் அச்ச உணர்வு மிகப்படுகிறது. இதுவே ஆழ்மன சிந்தனைக்கு தடைகல்லாகவும், உஙகள் மனக்கவலைக்கு ஆஸ்திவாரமாகவும் செயல்படுகிறது.
இநத தடைகள் எல்லாம் மீறி எதனையும் என்னால் சாதிக்க முடியும் இறைவன் கருணை மிக்கவன் நாம் விரும்பியதை நிச்சயம் குறைவற்று கொடுப்பார் எனக்கு இறைவன் தந்த வலிமை இருக்கிறது என்ற உங்கள் கருத்தை ஆழ்மனக் கட்டளையாக கொடுத்து கொண்டே மனச்சித்திரத்தை ஒடவிட்டு நீங்கள் வணங்கும் இறைவனிடம் உங்கள் கனவை நிறைவேற்ற விண்ணப்பம் செய்யுங்கள். இரவில் உறங்குவதற்கு முன், படுக்கையில் அமர்ந்தவாறே கண்களை மூடி கவனத்தை உங்கள் மூச்சில் குவியுங்கள் சில நொடிகளில் உங்கள் எணண அலைகள் அடங்கி கவனம் ஒரிடத்தில் குவியும் இதுவே தியான நிலைக்கு வந்துவிட்டிர்கள் இந்நிலையில் எவ்வளவுக் கெவ்வளவு உணர்ச்சியோடு நிறைவேற போகிறது என்ற நம்பிக்கையோடு கட்டளை கொடுக்கிறீர்களே அவ்வளவு விரைவில் உங்களுக்கு தேவையான அறிவு,திறமை,ஆற்றல், வசதி, வாய்ப்பு முதலீடு போன்ற அனைத்தும் உங்களை தேடி வரும்
அன்பன்
வை,பூமாலை
சுந்தரபாண்டியம்

Advertisements

சைவமு…

Aside

சைவமும், சாலிய சமுதாயமும்
சைவ மதத்தின் தூண்கள் என்று போற்றப்படும் சமயக்குறவர்கள் வாழ்ந்த காலத்திலிருந்தே சாலியர் சமுதாயம் சைவ மதத்தில் வேறூண்றி தழைத்து, ஆன்மிகத்தில் – சிவத்தொண்டு செய்யும் சிவனாடியார்களாகவே வாழ்ந்து வந்துள்ளனர், சாலியர் சமுதாயத்தின் வம்சாவழி சாலிய மகரிஷி வழித்தோன்றவர்களே எனவே சாலியர்களின் கோத்திரம் சாலியமகிரிஷி கோத்திரம் என்று வழங்கப்பட்டு வருகிறது,இதன் வசம்சாவழியில் தான் சாலிய இனத்தை சேர்ந்தவரான 63 நாயன்மார்களில் ஒருவரான நேசநாயனாரும், இவரும் அக்காலத்தில் தற்போது சாலிய இனத்தவரின் குலத்தொழிலான நெசவு தொழிலையே செய்து சிவனாடியார்களுக்கு கோவனம் என்றளக்கப்படும் சிற்றடையை சிவனடியார்களுக்கு வழங்கி சிறப்புடன் சிவத்தொண்டு புரிந்து வந்துள்ளது பெரியபுராணம் காட்டுகிறது, இதன் மூலம் சாலியரின் சைவத் தன்மைக்கு முத்திரை பதிக்கப் பட்டுள்ளது. அந்நாள் முதல் இந்நாள் வரை சைவ மதத்தில் சாலியர் சமூகம் முக்கிய பங்கினைக் கொண்டு சிவனடியார்களுக்கு சிவத் தொண்டும், சிவன் கோவில்களையே அடிப்படையாகக் கொண்டே குல தெய்வங்களும் அமைத்து வழிபாடு செய்து வருகின்றனர், அக்காலத்தில் சாலிய சமூக முன்னோர்கள் சைவ மதத்தின் அடையாளங்களான ருத்ராட்சம் அணிதல், பூணுல் போடுதல் போன்ற சைவ அடையாளங்களுடன் வாழ்ந்து கொண்டு தேவாரம் திருவாசகம் இசையுடன் பஜனைப்பாடல்கள் பாடுவதற்கென்றே ஏழுர் சாலிய சமுதாய ஊர்களில் பஜனை மடங்களும் நாயன்மார்கள் பெயரில் திருச்சபை மன்றங்களும் இன்றளவும் இயங்கி வருவதை நாம் காண்கிறோம். இதற்கு உதாரணத்திற்கு கூற வேண்டுமானால் ஸ்ரீவில்லிபுத்தூரில் மாணக்கவாசகர் திருச்சபை, முகவூரில் நாவுக்கரசர்-அப்பருக்கு மன்றமும், சுந்தரபாண்டியத்தில் சுந்தரமூர்த்தி நாயனார் திருசசபை, ஸ்ரீவி,மற்றும் சத்திரப்பட்டியில் தேவார- திருவாச பக்த சபா போன்றவை இன்றளவும் நடைபெற்றுக்கொண்டு வருகிறது, சாலிய சமுதாயத்தில் இன்றளவும் சிவ வழிபாட்டுத்தளங்களில் தேவார பாடகள் பாடும் ஓதுவார்கள் போன்று தேவார – திருவாசப்பாடல்களை இராஜபாளையம்,ஸ்ரீவி,சத்திரப்பட்டி, வ,புதுப்பட்டி, சுந்தரபாண்டியம் மற்றும் ஏழுர் சாலிய சமுதாய மக்களால் பாடப்பட்டு வருகிறது, இதற்கு தேவார இன்னிசை மாமணி திரு, புதுப்பட்டி மோகன் என்பவரே முன் உதாரணமாகும் அவருடைய தேவார இன்னிசையில் மயங்காதார் யார் உளர்.
சுந்தரபாண்டியம் சாலியர் சமூகமும்-சுந்தரமூர்த்தி நாயனாரும்
இதன் அடிப்படையில் சுந்தரபாண்டியத்தில் சைவ மத சிவத் தொண்டாக பெரிய புராணத்தின் பாட்டுடைத்தலைவான சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருச்சபை என்ற அமைப்பு பாக்கியநாதசாமி கோவில் பஜனை மடத்தில் உருவாக்கப்பட்டு ஒரு நூற்றாண்டை நெருங்கி நடைபெற்று வருகிறது, இவ்விடத்தில் தான் சிவ ஆலய முக்கிய விழாக்களில் ஒன்றான மகளாய அமாவாசை கழித்த நவராத்திரி விழாவின் சதுரகிரி கொழுபூஜை விழாவின் அங்கமான சிவனடியார்கள் திருக்கூட்டம் சதுரகிரி மலைக்கு செல்லும் அங்கு கொழு பூஜை முடிந்து மலையிலிருந்து அடிவாரம் வந்தது முதல் சுமார் ஒரிரு மாதங்கள் வரை சாலிய சமுதாயம் அமைந்துள்ள ஏழுர் – மற்றும் அதைச்சார்ந்த சிற்றூர் மற்றும் அதன் ஒவ்வொரு பகுதியிலும் திருக்கூட்ட சிவனடியார் திருக்கூட்ட பூஜை சிற்ப்புடன் முடிந்து இவ்வூரில் தான் முடிவு பெறும், இந்நிகழ்ச்சி இன்றுவரை நடைபெறுகிறது ( தற்போது காளிமுத்து சுவாமிகள் ஆஸ்ரமத்தில் நடைபெறுகிறது) சதுரகிரி மலையிலும் ஒவ்வொரு நாளும் அங்கு தங்கியிருந்து சமையல் செய்து விரதம் இடுவோர் முதலில் திருக்கூட்டத்திற்கு சமையல் செய்த அன்னத்தின் ஒருபங்கு அன்னத்தை திருக்கூட்டத்திற்கு ( சுந்தரமூர்த்தி சுவாமி கோவிலுக்கு முன்பாக) வழங்கி விட்டுத்தான் தாங்கள் விரத நோண்பு மேற்கொள்வார்கள், இது போன்று சுந்தரபாண்டியத்தில் இந்த பஜனை மடத்தில் எப்போதும் சிவனடியார்கள் கூட்டம் இருந்து கொண்டே இருக்கும் இவர்களுக்கு சிவனடியார்களில் ஒரிருவர் தினமும் அந்திப்பொழுதில் அன்னக்காவடி எடுத்துச்சென்று சுந்தரபாண்டியம் சாலிய சமுதாய இல்லங்களில் அன்னம் பெற்று உடனிருக்கும் சிவனடியார்களுக்கும் வயதுமுதிர்ந்த இயலாதவர்களுக்கும் இந்த அன்னம் அன்னதானமாக வழங்கப்பட்டுவந்தது, அந்த அன்னக்காவடி எடுக்கும் சிவனடியார்கள் காவடியை சுமந்து கொண்டு ஐந்தெழுத்து மந்திரமான ஓம் நமச்சிவாயத்தையும் சாம்போ சதா சிவ சாம்போ சிவ என்ற சிவநாமங்களை பாடிக்கொண்டு அன்னம் பெற்று வருவார்கள், அப்போது அநேக இல்லங்களில் அன்னக்காவடிக்கு உணவு போட்ட பின்தான் இரவு உணவு உண்பார்கள் அப்படி அன்னக்காவடி வர நேரம் ஆகிவிட்டலும் அந்த அன்னத்தை எடுத்து தனியாக வைத்து விட்டுத்தான் தாங்கள் உணவு உண்பார்கள்.அந்த அன்னக்காவடியின் மணியுடன் கூடிய தாண்டாயுதமும் அதன் குண்டாபாத்திரமும் இன்னும் சிவனடியார்கள் நினைவு சின்னமாக சுந்தரபாண்டியம் பஜனை மடத்தில் உள்ளது,இவ்வாறு சிவனடியார்கள் சிவத்தொண்டு வளர்ந்து வரும் நாட்களில் தான் பெரியபுராணத்தின் பாட்டுடைத்தலைவன் என்று போற்றப்படும் சுந்தரருக்கு திருச்சபை நிருவி அவருக்கு வருடாவருடம் குருபூஜை நடத்த திருச்சபை முயன்றது, இதன் பொருட்டு சுந்தரரையே தனது குருவாக கொண்டு நேசித்து அவரையே தியானித்து தனது குருவான சுந்தர மூர்த்தி சிவபொருமானால் ஆட்கொள்ளப்படப்போகிறார் எனவே அவருக்கு முன்னரே தான் முத்தி பெற வேண்டுமென்று தனது தவவண்மையால் ஆடித்திங்கள் 10ம் நாள் சித்திரை நட்சத்திரத்தில் முத்தி பெற்ற பெருமிழலைக் குறும்ப நாயனாருக்கும், ஆடித்திங்கள் 11ம் நாள் சுவாதி நட்சத்திரத்தில் முத்திபெற்ற சுந்தரமூர்த்தி நாயனாருக்கும் அவருடைய ஆன்மீக நண்பரும் சிவத்தொண்டருமான சேரமான் பெருமாள் நாயனருக்கும்( சுந்தரரின் வேண்டுகோளின்படி சேரமான் பெருமானையும் சிவனிடம் ஆட்கொள்ளவேண்டியதின் பெயரில் முக்தி பெற்றவர்) ஆகிய மூவருக்கும் இவ்விரு நாட்களிலும் சுந்தரபாண்டியம் ஸ்ரீசுந்தரமூர்த்தி சுவாமிகள் சபையின் திருமாடலாயத்தில் இத்துடன் கூறப்பட்ட அழைப்பிதழில் கண்டவாறு சிறப்பு பூஜைகளும் தேவார இன்னிசை நிகழ்ச்சியும், ஆன்மீக சொற்பொழிவுகளும் நடைபெற்றது, மேலே கூறப்பட்ட மூவருக்கும் இங்குதான் உற்சவ மூர்த்தி விக்ரகங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டு இரண்டாம் நிகழ்ச்சியில் அலங்கார சப்பரத்தில் சுந்தரபாண்டியம் திருவீதிகளில் ஊர்வலமாக திருவீதி உலா நடைபெறுகிறது, அன்னார்களின் திருவுருவ விக்ரங்களை இங்கு காணலாம் இந்த சிறப்பு வாய்ந்த சிவ விழா நூற்றாண்டை நோக்கி பயனிக்கிறது, வளரட்டும் சிவத்தொண்டு!பெறுவோம் சிவனருள்!!