கரு முதல் திரு வரை

Standard

கரு முதல் திரு வரை

படம்
” அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது, மானிடராய் பிறந்த காலை கூன் செவிடு அற்று பிறத்தல் அரிது ” என அவ்வை பாடி பாடலின்படி மனிதராகப் பிறந்த நாம் மண்ணில் நல்ல வண்ணம் வாழ்ந்து இறைவன் திருவடியில் ஆனந்தமாய் இருக்க வேண்டும். நம்வாழ்வில் சந்திக்கும் நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு வாழ்க்கை பகுதிகளை பன்னிரண்டு பகுதிகளாக பிரித்து பன்னிரு திருமறை நூலின் அடிப்படையில் நம்தேவைகளுக்கு ஏற்ப அந்தந்த நிலைகளில் வாழ்வில் தடுமாறா வண்ணம் நம் சைவ நெறி ஞானப் பெருமக்கள் கூற்றின்படி வாழ்க்கையை நடத்திச் சென்றால் மண்ணில் நல்ல வண்ணம் வாழ்ந்து முடிவில் திரு என்னும் ஞானத்திருவடியை அடைந்து மீண்டும் பிறாவாநிலை பெற்று வீடுபேற்றை அடையலாம் என்கின்றனர் சைவநெறி அருளாளர்கள் ,
மனித வாழ்வை கீழ்கண்டவாறு 12 பகுதிகளாக பிரிக்கலாம்,
1, குழந்தைப் பேறு
2.குருவருள்
3. வினை நீக்கம்.
4. நோயின்றி பாதுகாப்பு
5.கல்விச் செல்வம்
6. செல்வம்
7, திருமணம்
8. திருத்தலச் செலவு ( திருத்தல பயணம்)
9.திருமேனி காண்டல்
10. இறைவனை போற்றி பரவுதல்
11. அடியார்களை வழிபடுதல்
12. வீடு பேறு
மனிதராகப் பிறந்த ஒருவர் எவ்வாறு வாழ்வை அமைத்துக் கொள்ளவேண்டுமெனில்
நம் வாழ்க்கையில் பெறும் பேறுகளில் தலையாய பேறு மக்கட் பேறு. அதுவும் திருவருளை சிந்திக்கும் ஞானக் குழந்தையை பெறுதல் வேண்டும். ஞானமுள்ள அக்குழந்தைக்கு ஏழு வயதில் முறைப்படி குருநாதரிடம் தீக்கை பெறுவது. அவ்வாறு பெறுவதன் மூலம் திருவருளை எளிதில் பெறலாம்.
குரு உபதேசத்தின் பயனாக குழந்தையின் வினை நீக்கம் செய்யப்படுகிறது. வினை நீக்கம் செய்யப்பட்டதின் பலனாக உடலில் ஏற்படும் நோய்கள் நீக்கப் படுகிறது. நோயிலிருந்து நீக்கப்பட்ட குழந்தைகள் நல்ல கல்வி கிடைக்க பெறுவது நன்கு கற்றுத் தேறி வாலிபப் பருவத்தில் நேர்மையாக உழைத்து செல்வத்தை சேர்க்க மார்க்கம் பெறப்படும்.
சேர்த்த செல்வத்தை கொண்டு நல்ல இல்வாழ்க்கை துணையை தேர்ந்தெடுத்துத் திருமணம் செய்வது, திருமணத்தின் பின்பு தான் தேடிய செலவத்தின் பயனாக திருத்தல செலவுகள் மேற்கொள்ளவதன் பயனாக இறைவனது திருமேனியை கண்டு வழிபடுவது, திருமேனியை கண்ட ஆனந்தத்தில் அன்பால் போற்றுவது, திருவடியைப் போற்றியதன் பயனாக அவனடி மறாத திருத்தொண்டர்களை சிவமாகவே ( சிவனடியார்களை) கண்டுஅவர்களை உள்ளும் புறமும் போற்றுவது.
அடியார்கள் நடுவுள் இருக்கும் அருளை பெற்றதின் பயனாக இறுதியில் சிவபெருமானின் திருவடியை அடைவது என வாழ்க்கையை அமைத்துக் கொள்ளவது நம்மை பெற்ற தாயை விட மிகச் சிறந்தவர் நமது சிவபெருமான் நாமும் சிவமாம் தன்மையை பெற வேண்டும். அதன் பெருட்டே அந்த சிவனாரும் ஒன்றாய், உடனாய், வேறாய், இருந்து இடையறாது அருள் செய்து கொண்டே இருக்கிறார். நாம் எத்தகைய குற்றம் செய்திருப்பினும் மனம் திருந்தி உண்மையான அன்போடு திருவடியை வணங்கி சரணடைந்து, ஓம் நமசிவாய, சிவாய நம, சிவ சிவ எனச் சொல்லி வழிபாட்டால் அக்குற்றங்களிலிருந்து நம்மை காப்பாற்றுவார் மேலும் இனிமேல் நாம் தவறுகள் செய்யாமலும் தடுப்பார்.
“தேவா சிறியோம் பிழையைப் பொறுப்பாய் பெரியோனே
ஆவா என்று அங்கு அடியார் தங்கட்கு அருள் செய்வாய் ” ஞான சம்பந்தர்

பண்ணிய உலகினில் பயின்ற பாவத்தை
நண்ணி நின்று அறுப்பது நமச்சிவாயவே ………………. திருநாவுக்கரசர்

பின்னை என் பிழையை பொறப்பானைப்
பிழையெலாம் தவிரப் பணிப்பானை ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, சுந்தரமூர்த் தி சுவாமிகள்

பிழைத்தால் பொறுக்க வேண்டாவோ ……………….. மாணிக்க வாசகர்

மண்ணுலகில் வாழ்வார்கள் பிழைத்தாலும் வந்தடையின்
கண்ணுதலான் பெருங்கருனை கைக் கொள்ளும்…………………. பெரிபுராணம்

ஓம் நமசிவாயம் திருச்சிற்றம்பலம் ஓம் நமசிவாயம்

Advertisements

ஒளவையின் மூதுரை

Standard

ஒளவையின் மூதுரை

தமிழின் சிறப்பு

தேவர் குறளும் திருநான் மறைமுடிவும்
மூவர் தமிழும் முனிமொழியும் – கோவை
திருவா சகமும் திருமூலர் சொல்லும்
ஒருவா சகமென் றுணர்.

இல்லானை இல்லாளும் வேண்டாள்

கல்லானே ஆனாலும் கைப்பொருள்ஒன் றுண்டாயின்
எல்லாரும் சென்றங் கெதிர்கொள்வர் – இல்லானை
இல்லாளும் வேண்டாள்(;) மற் றீன்றெடுத்த தாய்வேண்டாள்
செல்லா(து) அவன்வாயிற் சொல். 34

சேமிப்பில்லா குடும்பம் சாகும் வரை சஞ்சலமே

உண்பது நாழி உடுப்பது நான்குமுழம்
எண்பது கோடி நினைந்து எண்ணுவன – கண்புதைந்த
மாந்தர் குடிவாழ்க்கை மண்ணின் கலம்போலச்
சாந்துணையும் சஞ்சலமே தான்.

நீறில்லா நெற்றிபாழ்

நீறில்லா நெற்றிபாழ்(;) நெய்யில்லா உண்டிபாழ்
ஆறில்லா ஊருக் (கு) அழகுபாழ் – மாறில்
உடன்பிறப் பில்லா உடம்புபாழ் (;) பாழே
மடக்கொடி இல்லா மனை.

 

ஓம் என்னும் பிரணவ மந்திரத்தின் மகிமைகள்

Standard

ஓம் என்னும் பிரணவ மந்திரத்தின் மகிமைகள் தெரியுமா?

படம்

ஓம் என்னும் மந்திரத்திற்கு பல விளக்கங்கள் உள்ளன. ஆதிபகவானாகிய இறைவனே! ஜீவனாகிய என்னை சேர்த்துக்கொள், என்பது இதன் பொருள். ஒவ்வொரு தடவையும் ஓம் என்று சொன்ன பிறகு, விஷ்ணுவே, சிவனே, சக்தியே, விநாயகா, ஐயப்பா, முருகா என்றெல்லாம் அவரவர் இஷ்டதெய்வத்தை அழைக்கிறோம். 

ஓம் முருகா, ஓம் விநாயகா, ஓம் விஷ்ணு, ஓம் சிவாயநம என்று சொல்லும் போது, அந்தந்த தெய்வங்களிடம் என்னை உன்னோடு சேர்த்துக்கொள் என்று பொருள் தெரிந்தோ, தெரியாமலோ கெஞ்சுகிறோம். காலம் வரும்போது, இந்த மந்திரம் சொன்னதற்குரிய பலன் உறுதியாகக் கிடைக்கும். பிறப்பற்ற நிலையும் பரமானந்தமும் ஏற்படும்.

ஓம் என்னும் மந்திரத்திற்குள் சிருஷ்டி கர்த்தாவான பிரம்மாவும்,, காக்கும் கடவுளான விஷ்ணுவும்,சம்ஹார மூர்த்தியாகிய ருத்திரனும் அடக்கம். ஓம் என்னும் மந்திரம் ஜபிப்பதன் மூலம் உடலையும் உள்ளத்தையும் சீராக வைத்துக்கொள்ள முடியும்.எடுத்த நியாயமான கோரிக்கைகள் நிறைவேறும். எதிர்ப்பு சக்திகள் நீங்கும்.மன சாந்தி ஏற்படும்.உலகத்தோடு ஒட்டி வாழலாம், வயது முதிர்ந்தோர் இந்த ஏகாட்சரத்தால் ஏகாந்த நிலையை அடையலாம்.

வாய்விட்டு ஜபிக்காமல் மனதிற்குள் “ஒம்”, “ஓம்”, “ஓம்” என ஜபிக்க வேண்டும். இல்லாவிட்டால் ஓ. . . ம் என நீட்டியும் மனதால் ஜபிக்கலாம். கிழக்குப் பார்க்க அமர்ந்து கண்களை மூடி ஜெபிப்பது நன்று. மாடி வீட்டில் இருந்து ஜபித்தால் பலன் கூடும். மலை மேல் இருந்து ஜெபித்தால் பல மடங்கு சக்தி கிடைக்கும். 

எந்த மந்திரம் ஜபிக்க ஆரம்பித்தாலும், குறைந்தது ஒரு லட்சம் உரு ஏற்றியபின் தான் பலன் கிடைக்க ஆரம்பிக்கும். உங்கள் உடலின் மின்சக்தி மற்றும் காந்த சக்தி ஏற்படும். வியாதியஸ்தர் முன் ஜெபித்தால் அவர்களின் நோய் நீங்கும். 

வேப்பங்குச்சியால் குழந்தைகள் நாக்கில் “ஓம்” என எழுத அவர்கள் கல்வி மேம்படும். 

சுத்தமான பசுஞ்சாண விபூதியில் “ஓம்” என எழுதிக்கொடுக்க வயிற்று நோய்கள் நீங்கும். 
ஒரு எலக்ட்ரானிக் எலக்ட்ரோ மீட்டர் மூலமாக சாதாரண மனிதனின் மின் சக்தியை அளக்க வேண்டும். பின் ஒம் ஓம் ஒம் என்று ஒரு லட்சம் முறை ஜபித்தவரின் மின்சக்தியை அளக்க வேண்டும்.அப்போது இருவருக்குமுள்ள வேறுபாடு நன்கு தெரியும். 

வாகனம் ஓட்டும்போதும், தெருவில் நடக்கும்போதும் எந்த மந்திரமும் ஜபிக்கக் கூடாது.

பட்டினத்தார்

Standard

பட்டினத்தார் பாடல்

 

இளமை முதலே இவர் வாழ்வில் அற்புதங்கள் பல நிகழ்ந்ததாய்ச்
சொல்லப்படுகின்றது. வானுலக தேவர்களில் ஒருவரான குபேரன் தான்
இப்பூவுலகில் பட்டினத்தாராக அவதரித்தார் என்று திருவெண்காட்டுப்
புராணம் கூறும். இவரது பெற்றோர்கள் சிவநேசன்-ஞானகலாம்பை ஆவர்.
இவர்களின் தவப்பயனாய்ப் பிறந்தவரே பட்டினத்தார். இவருக்குப் பெற்றோர்
வைத்த பெயர் திருவெண்காடர்.

கப்பல் வணிகம் மூலம் பெரும் பொருள் ஈட்டிய சிவநேசர் காலமாக
உரிய வயதில் ஞானகலாம்பை சிதம்பரச் செட்டியார் சிவகாமியம்மையின்
புதல்வியான சிவகலை என்பவரை திருவெண்காடருக்கு மணமுடித்தார்.

இல்லற வாழ்க்கை இனிதே நடந்தாலும் குழந்தையில்லா ஏக்கம்
திருவெண்காடரை வாட்டியது. இறைவனிடம் முறையிட்டார். இறைவன் தாமே
குழந்தை வடிவாய் சிவசருமர் என்ற சிவபக்தர் மூலம் திருவெண்காடரைச்
சேர்ந்தார். அன்பு மகனை மருதபிரான் என்று பெயரிட்டு வளர்த்தார்.

குழந்தை பெரியவனானதும் வியாபாரம் செய்ய அனுப்பினார்.
திரைகடலோடித் திரவியம் தேடிச் சென்ற மருதவாணன் கப்பல் நிறையத்
தவிடு மூட்டையும் வரட்டிகளையும் ஏற்றிக்கொண்டு திரும்பி வந்தான்.
மருதவாணனுக்குப் பித்துப் பிடித்து விட்டதோ என்றஞ்சிய அவர்
வீட்டினுள்ளே சிறை வைத்தார். வரட்டிகளை வெளியே எறிய வரட்டிக்குள்
வைரக்கற்கள் சிதறின. தவிடெல்லாம் தங்கமாக மின்ன திகைத்துப்போன
திருவெண்காடர் தம் மகனைப் பாராட்டத் தேடுகையில் அவரோ தம்
அன்னையாரிடம் சிறு பேழையைக் கொடுக்கச் சொல்லிக் கொடுத்து விட்டு
மறைந்து விட்டிருந்தார்.

மைந்தன் கொடுத்துவிட்டுச் சென்றிருந்த பேழையில் காதற்ற ஊசியும்
ஓர் ஓலைச்சீட்டும் இருந்தது. அதில் ‘காதற்ற ஊசியும் வாராது காண்
கடைவழிக்கே’* என்று எழுதப்பட்டிருந்தது. வாழ்க்கையின் நிலையாமையை
உணர்ந்து கொண்ட திருவெண்காடர் தமது மைந்தனாக இதுநாள் வரை
இருந்தது திருவிடைமருதூர் பெருமான்தான் என்பதை உணர்ந்து மனம்
வருந்தித் துறவறம் பூண்டார்.

*“காதற்ற ஊசியும் வாராதே காணும் கடைவழிக்கே” பட்டினத்தாரின்
இந்த வாசகமும் பாடலும் புதுச்சேரி கருவடிக்குப்பம் சுடுகாட்டில் உள்ள
அரிச்சந்திரன் கோவிலில் கல்வெட்டாய் பதிக்கப்பட்டு உலக நிலையாமையை
உணர்ந்து நடக்க வேண்டுகிறது.

இந்தத் துறவு நிலை வருவதற்கு முன் தன் மனம் இருந்த நிலையை
பொருளாசை, பெண்ணாசை, வித்தையாசை என்று மனம் ஆசையின்
வாய்க்கப்பட்டு அலைக்கழிப்புற்ற நிலையை அழகிய கண்ணிகளாகப்
பாடுகின்றார்.

“அறியாமை யாம் மலத்தால் அறிவுமுதல் கெட்டனடா
பிறியா வினைப் பயனால் பித்துப் பிடித்தனடா”

“மாமாயை என்னும் வனத்தில் அலைகிறண்டா”
“மண்ணாசைப் பட்டேனை மன்ணுண்டு போட்டதடா”

“பொன்னாசை பெண்ணாசை போகேனே என்குதே”

“மக்கள் சுற்றத் தாசை மறக்கேனே என்குதே;
திக்கரசாம் ஆசையது தீரேனே என்குதே”

“வித்தை கற்கும் ஆசையது விட்டொழியேன் என்குதே;
சித்து கற்கும் ஆசை சிதையேனே என்குதே”

“மந்திரத்தில் ஆசை மறக்கேனே என்குதே
சுந்தரத்தில் ஆசை துறக்கேனே என்குதே”

“கட்டுவர்க்கத்து ஆசை கழலேனே என்குதே
செட்டுதனில் ஆசை சிதையேனே என்குதே”

இதுமட்டுமா, இந்த ஆசையைத் தூண்டும் ஐந்து புலனும் அவருக்கு
அடங்கா நிலையையும் தெரிவிக்கின்றார்.

“ஐந்து புலனும் அடங்கேனே என்குதே;
சிந்தை தவிக்கிறதும் தேறேனே என்குதே”

காமக் குரோதம் கடக்கேனே என்குதே
நாமே அரசென்று நாள்தோறும் எண்ணுதே
அச்சம் ஆங்காரம் அடங்கேனே என்குதே

என்று அழுகிறார்.

சித்தர் தாயுமான சுவாமிகளின் இறைவேட்கை

Standard

சித்தர் தாயுமான சுவாமிகளின் இறைவேட்கை

 

படம்
அகங்காரம் ஆணவத்தைக் காட்டிலும் கொடியது, இந்தஇயல்பினை கட்டுபடுத்த இயலாது என வருந்தி இறைவனிடம் முறையீடு செய்தவர் தாயுமானவ சித்தர், மெய்யறிவு பெறுவதற்கு எவ்விதப் பயிற்சியும் பெறாமை கருதி வருந்தியவர், இறையருள் பெறும் பக்குவம் எப்போது வாய்க்குமோ என்று ஏங்குகிறார், ” எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்று அறியேன் பராபரமே” என்னும் கொள்கையுடைய தாயுமானவ சித்தரின் அருள் வேட்கை அளப்பரியதாகும்.
திருச்சியில் கேடியப்ப பிள்ளையின் மைந்தராக இறையருளால் பிறந்த தாயுமானவர் தந்தை காலமானபோது திருச்சி மன்னராக இருந்த விஜயரங்க சொக்கநாத நாயக்க அரசில் கணக்கராகப் பணியமர்த்தப்பட்டார், சிவபிரான போதம் அறிந்த தாயுமானவரால் அரசாங்க கணக்குகளில் ஈடுபாடு கொள்ள முடியவில்லை, சிவநெறிச் சிந்தனையும் சித்தர் ஈடுபாடும் காலாவதியாகும் மனித வாழ்வின் அற்பக் கணக்குளின் கூட்டல் கழித்தலில் இருந்து பலநேரம் தாயுமானவரை ஒதுங்கியிருக்க செய்தன,
அரசு அலுவலோடு இறைப்பணியையும் செய்து வந்தார், மெளனகுரு சுவாமிகளிடம் தன்னை மாணாக்கராக ஏற்றுக் கொள்ளும்படி வேண்டி தாயுமானவரை சீடராக ஏற்று அவருக்கு யோக ஞான முறைகளையும் உபதேசித்தருளினார். அரண்மனை உத்தியோகத்திலிருந்து நீங்கி விராலிமலைக்கு வந்து நிஸ்டையில் ஆழ்ந்தார் தாயுமானவர். விராலிமலை சித்தர்களின் வாசஸ்தலமாக அந்நாளில் விளங்கி வந்தது. சித்தர் பலரும் தங்கள் சித்திகளுக்கான பயிற்சிக்களமாக அங்கே வாழ்ந்து கொண்டிருந்தபோது சித்தர்களின் தொடர்புகளால் தாயுமானவரும் சித்தரானார்.
இறவாமை பற்றி சாகாக்கலை கண்டறிந்த சித்தர்களின் ரகசியம் பலவற்றை அவர்களின் அனுபவ வெளிப்பாடாக தாயுமானவர் கண்டறிந்தார். ஆன்மா முக்தியடைய உடம்பு அதற்கு ஒரு கருவியாக வந்தது முக்தியடைவது ஆன்மா மட்டுமே என்பதை உணர்ந்தார் தாயுமானவர். மனமடக்க தியான நிலையே மாற்று என உணர்ந்து தாயுமானவரின் மனம் மோகனத்தில் பற்றிக் கொண்டது, வெயிலின் ஒளியிலே காய்ந்த பலகாலம் சிதையாமலிருப்பது போல சூரியப் பிரகாசமான சிவஜோதியில் திளைப்பவரும் உடலும் ஆன்மாவும் ஒருநாளும் அழிவதில்லை, முக்திக்கு வழி அறியாமல் ஐம்புலங்களைக் காத்து வாழ்வதுதான், ஐம்புலங்களின் உணர்வுகளை வழியோடு தெரிந்து தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்க கற்றுக் கொண்டு விட்டால் இந்த உடலுக்கு இறப்பே இல்லை என்பதை உணர்ந்தார் தாயுமான சித்தர். உணர்வும் நினைவும் நடுங்கிய பின்னர் மனமானது சுத்த சூனியமான பரவெளியில் திளைத்திருக்கும் இந்நிலையில் மனம் செயலாற்று வெறுமையாக இருக்கும், மெய்யுணர்வாக விளங்கும் பரம்பொருளை தரிசிப்பதற்கு இந்த மன வெறுமை நிலையே தேவைப்படுகிறது என்பதை அறிந்து தெரிந்தார். தாயுமானவர் என்றைக்கும் அழியாத சிவராஜயோகம் வேண்டினார். சிவராஜயோகம் என்பது யோகத்தை கருவியாக கொண்டு சிவத்தியானம் சமாதி என்பனவற்றை முயன்று அடைதலாகும்.
அகங்காரம் ஆணவத்தை காட்டிலும் கொடியது இந்த இயல்பினை கட்டுபடுத்த இயலாது என வருந்தி இறைவினிடம் முறையீடு செய்தார். மெய்யறிவு பெறுவதற்கு எவ்வித பயிற்சியும் பெறாமை கருதி வருந்தினார். இறையருள் பெறும் பக்குவம் எப்போது வாய்க்குமோ என்று ஏங்கினார். மனம் இறைவனின் திருவடியில் இடும் பலியாகவும் அன்பு அபிசேக நீராகவும் உயிர் நைவேத்தியமாகவும் பிராணனையும் அறிவையும் தூபதீபமாகவும் கொண்டு துதிப்பாதாக கூறுகிறார் தாயுமானவர். உடலும் உயிரும் உடைமைகளும் மனிதனுக்கு சொந்தமானவையல்ல அவை இறைவனுக்கு சொந்தமானவை அவனிடம் ஒப்படைக்கப் படவேண்டியவை என்று கூறித் தன்னை சேர்த்து கொள்ளும்படி இறைவனிடம் முறையிடுககிறார் தாயுமானவர். தாயில்லாச் சேய் போல் அலைந்து துன்புற்ற தன்னை தாயைக் காட்டிலும் கருனை காட்டி மீட்கும்படி சிந்தை நைந்துருக இறைவனிடம் முறையிட்டவர் தாயுமானவர். இறப்பதும், பிறப்பதும் ஆன்மாவின் முடிவல்ல. உடல் மாயை அழிக்கூடியது இந்தச் சித்த தத்துவத்தை உணர்ந்து உலகுக்குரைத்தவர் ஞானாசிரியர் தாயுமானவர்
அவருடைய அருட்புலம்பல்களில் சில:
என்னை மாயையினின்றும் நீக்கி ஆணவலக் கட்டை அறுத்து நேரே அறிவு வொளியில் எம்மை சேர்த்து வைக்கும் தூக்கி திருவடியை வணங்கும் நாள் எந்நாளே?

கருப்கைக்கு இனிஇடம் காட்டாமல் எப்போதும் கருப்பூர மணம் வீசும் கடத்தப் பெருமானின் திருமுகத்தையேகண்டு என் குற்றத்தை ஒழிப்பது எந்நாளோ?

மண் முதலிய ஐந்து பாதங்களான உடலுடன் கூடி உலகில் அலைந்து வருந்திய துன்பம் ஒழிய பிரகணத்தலைவரான சிவபெருமானின் திருவருளை நாடும் நாள் எந்நாளே?

தீமை விளைவிக்கும் காரணமான பேராசையாம் புலைத்தொழிலியல் பின் அறிவு சென்று விடாது திருவருளால் நன்னெறியில் சேரும் நாள் எந்நாளே?

குருடனுக்கு உலகம் முழுவதும் இருள் மயமாக இருக்கும் அதுபோல என் அறிவில் ஆணவ தொடர்பால் விளைந்த அஞ்ஞான மயமாக இருட்கடல் வற்றிப் போவது எந்நாளோ?

உலகத் தொடர்புடன் ஆசையின்றி முற்றத் துறந்த சிவனாரும் செல்வம் பெற்ற நல்லதவததவரான பட்டினித்தாரும் அவருடைய மாணவரான பத்திரகிரயார் ஆகியோரின் பண்பை உணர்வது எந்நாளோ?

கண்ணால் கண்டவை நிலையில்லாமை என்றும், எங்கும் நிறைந்துள்ள சிவமே நிலையானது என்றும் கூறிய சிவவாக்கியரின் திருவடியை அடையும் நாள் எந்நாளோ?

காக்கை, நரி, செந்நாய், கழுகு என்ற இவை சுடுகாட்டில் கூட்டாக கூடி ஒரு நாள் தின்று ஏப்பம் இடுவதற்கு விருந்தாய் இருக்கும் இந்த உடலை “சீ” என்று வெறுப்பது எந்நாளோ.?

என் அறிவை ஐம்பொறிகளின் வழியே செல்லவிடாது அடக்கி என்னை போலவே மனித வடிவம் கொண்டுவந்த மவுன குருவின் திருவருள் நிறைவிலே அடியேன் கலந்திடும் நாள் எந்நாளோ?

கொடிய பிறப்பிணியை ஒழித்து உலகத்து அடியார்களை ஆட்கொள்ளும் ஞான அரசன் திருஞானசம்பந்தரின் திருவருளை பெறும் நாள் எந்நாளோ?

மயக்கும் மாதரால் மயங்கிய நிலைப்பற்றி அருட் புலம்பல்:
இளமைப் பருவத்தில் பசுமையான கொங்கைகளால் ஆடவரை மயக்கும் மாதரின் பாழான மயக்கம் நஞ்சு என்று உணர்ந்து வெறுத்து ஒதுக்கி இறைவன் திருவருளை அடையும் நாள் எந்நாளோ?

கச்சினால் கட்டப்பட்டுள்ள முலையையும் கரும்புசாறு போன்ற இனிய சொல்லையும் உடைய மங்கையர் மயக்கத்தை நீங்குவது எந்நாளோ?

மன்மதனை போன்ற மிக்க காமம் உடையவனை வா என்று சாடை காட்டி இருண்ட கண்களான வலையில் சிக்கிக் கொள்ளுமாறு வீசும் மின்னல் போன்ற மங்கையர் பெயரை மறந்து இறைவன் திருவருளை அடைவது எந்நாளோ?

கற்கண்டின்னைப் போன்று இன்சொல்லைப் பேசி ஆடவரின் மனக்கருத்தை உணர்ந்து அடிமையாக்கும் மான் விழியுடைய மங்கையரின் நடிப்பை நீங்குவது எந்நாளோ?

விழிகளில் உண்டாகும் வெண்மையான பூழை மறைந்திட அறியாமையைத் தீட்டிய பெண்களின் மயக்கத்தினின்று தப்பி பிழைக்கும் நாள் எந்நாளோ?

கரைவைத்த புடவையின் கொச்சத்தில் ஆடவரின் உள்ளத்தையெல்லாம் பிணித்து வைத்துக்கொள்ளும் வஞ்சத்தில் வல்ல மாதர் கட்டினின்று நீங்குவது எந்நாளோ?

ஆடவரின் வறுமையைக் காட்டி வஞ்சம் செய்யும் அணிகளைஅணிந்து மங்கையரிடத்து விருப்பம் என்ற பாழ் நிலத்தை நீக்கி பரமன் திருவருளான நிலத்ததில்வளர்ச்சி யடைவது எந்நாளோ?

ஆணவம், கன்மம், மாயை, என்னும் மும்மலச சேற்றில் உண்டான முழுக் கம்பீர பாகம் என்னும் நரகத்தை போன்ற மலவுடலில் வெறுப்பு அடைவது எந்நாளோ?

உடலில் உண்டாக்கின்ற தீய நாற்றம் அனைத்தையும் மஞ்சளை பூசி நாற்றத்தை மறைத்து பொய்யைப் பேசும் வாயுடைய மங்கையரின் பொல்லாங்கை நான் நீங்குவது எந்நாளோ?

ஆடவரின் உறுதியான மனம் என்ற பறவை அகப்பட்டு கொள்ளும்படி கூந்தலான காட்டில் மலர் மாலையான வலையை வைக்கும் மங்கையரின் தந்திரத்தை கடக்கும் நாள் எந்நாளோ?

அன்பும் பற்றும்

Standard

அன்பும் பற்றும்
” பிள்ளையாரப்பா…….. ! நான் இந்த தேர்தலில் வெற்றி பெற்று விட்டால் உனக்கு பாலாபிசேகம் செய்கிறேன்,”
” என்மகள் திருமணம் நடந்து விட்டால் நான் பழனிக்கு வந்து மொட்டை போட்டுக்கொள்கிறேன்.” என பலர் தங்கள் விருப்பங்களுக்கேற்ப ஆண்டவனிடம் வேண்டுதல் ைவ்பபர், இந்த வேண்டுதல்கள் அனைத்தும் இறைவன் பால் கொண்ட அன்பாக கருதமுடியாது. அவையெல்லாம் வேண்டுதல்கள் அவையே அந்தந்த தேவையின் பொருட்டு ஏற்பட்ட பற்றைத்தான் காட்டும், இவற்றில் முன்னது ” தான்” என்ற பற்று. பின்னது தன் மகள் மீது உள்ள பற்று , நம் வழிபாடுகள் உறவுகள் அனைத்தும் இன்ற பற்றை அடிப்படையாக வைத்தே அமைந்துள்ளன.
அன்பு வேறு, பற்று வேறு
தன்னைப் பெற்ற தாயிடம் பால் குடித்த ஞானசம்பந்தர் உமையிடமும் ஞானப்பால் உண்டார். பின் அவர் சமணத்தை அறத்து, சைவத்தைக் காக்க மதுரை வருகின்றார். மதுரைக்கு அரசி மங்கையர்கரசி அவரே ஞானசம்பந்தரை எதிர்கொண்டு அழைக்கின்றார், “அச்சிறு குழந்தையைக் கண்டதும் அன்பின் மிகுதியால் மங்கையர்கரசியிடமும் பால் சுரந்ததாம் !” இப்படிப் பாடுகிறார் கற்பனைக் களஞ்சயம் சிவப்பிரகாசர். இதுதான் உண்மை அன்பு.
எதையும் எதிர்பாராது விளைவது அன்பு,
மறு தேவையை ( பிரதி பிரயோஜனம் ) எதிர்பார்த்து உண்டாவது பற்று. அதுவே பாசம் எனப்படுகிறது, நாம் மற்றவர் மீது கொண்டுள்ளது பற்று.
பற்றையே பாசத்தையே அன்பு என எண்ணி வாழ்கிறோம். ஆம் பற்றைப் பெருக்கி அதனையேய அன்பு என மயங்கி வாழ்கிறோம்
இவ்வுலகமே பற்று என்கிறார் மாணிக்க வாசகர்.
” வைத்த நிதி, பெண்டீர், மக்கள் குலம், கல்வி, என்னும்
பித்த உலகில் பிறப்போடு இறப்பு என்னும்
சித்த விகாரக் கலக்கம் தெளித்த …….. ” என்றும்

” எந்தை எந்தை சுற்றம் மற்றும் எல்லாம்
என்னுடைய பந்தம் அறுத்து ………….. ” என்றும் பாடியுள்ளார்,

நாம் பெற்ற கல்வி, செல்வம், உறவு அனைத்தும் பற்று. அந்த மனக் குழப்பத்தைத் தெளித்தவன் இறைவன் என்று அவர் பாடுகிறார்.
இவ் உலகப் பொருள் அனைத்தும் பறறு, பாசம், இவற்றை விட்டு விலகுவோம், இதைக் கடந்து அன்பு உள்ள நெகிழ்வு மனஇளக்கம், இது எல்லோரிடத்தும் எல்லா உயிரிடத்தும் காட்டக் கூடியது. இதற்கு மட்டுமே கட்டுப்பட்டவன் இறைவன்,
அதனால்தான் ஏழையின் சிரிப்பில் இறைவனைக் கண்டனர், முல்லைக்கு தேர் கொடுத்தான் பாரி, மயிலுக்கு தன்னுடைய அங்கியை வழங்கினான் ஒரு மன்னன். அந்த உள்ள நெகிழ்வு அது, அன்பினால் தான் அவனை அடைய முடியும், “அன்பே சிவமாகிறது ” என்றார் திருமூலர். மாணிக்கவாசகரும் ” அன்பாய அன்பருக்கு அவரினும் அன்ப போற்றி ” எனப்பாடுகிறார். அன்பை உடையவர் அன்பர். அவரிடத்தும் அன்பாக இறைவன் இருப்பார் இருக்கின்றார்.
ஞானசம்பந்தரது பல்லக்கை அப்பர் சுமந்தார். தொண்டருக்கு தொண்டர் ஆனார் அவர் , அவருக்கும் தொண்டன் இறைவன் அப்பரின் பால் அன்பு கொண்டு அவரை காணாமலே அவர்மீது அன்பு கொண்டு அவர் நாமத்தைக் கொண்டே உழவாரப்பணிகள் செய்துவந்தார் அப்பூதியடிகள், இப்படி போட்டி போட்டுக் கொண்டு அன்பை பொழிபவன் இறைவன்.
அதுபோல அடியாருக்கு நான் அடியேன் என்றார் சுந்தரர், அவருக்கும் அடியாரானார் சேரமான் பெருமான், அவருக்கும் அடியவன் இறைவன், இவரில் யாருக்கு யார் அடியார்? அன்பினால் விளைந்த இணைப்பு இது. எதையும் எதிர்பாராத அன்பு இது.
” அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவலார்
அன்பே சிவமா வதாரும் அறிகலார்
அன்பே சிவமாவதாரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருப்பாரே. ” திருமூலர்

எனவே நாமும் பற்றைவிட்டு எதையும் எதிர்பாராது அன்பை அனைவரிடமும் காட்டுவோம். அவ்வன்பே இறையைக் காட்டும், அவ் அன்பே இறையாக வரும்,
அன்பே சிவம் – சிவமே அன்பு
திருச் சிற்றம்பலம்