“அடியாருக்கு அடியவன்”

Standard

“அடியாருக்கு அடியவன்”

படம்
பசுவினிடம் பால் பெற வேண்டுமானால் கன்றுக்குட்டி அவசியமாகிறது, அதுபோல் இறையருள் பெறுவதற்கு குருவருள் அவசியமாகிறது, குருவானவர் நமது கண் போன்றவர், கல்லையையும் முள்ளையும் காட்டுவதும், வழியை யும் குழியையும் உணர்த்துவதும் கண், இதைப்போலவே நன்மை தீமைகளை உணர்ததுபவர் குருநாதர், இந்த பிறவியில் அளிக்கும் ஞானம் எடுக்கின்ற பிறவிகள் தோறும் தொடரும், பல பிறவிகளல் இறைவரை வேண்டி அந்த நிலையை அடந்தவர் குருநாதர், இறைவருடைய பரம கருணைக்கு பாத்திரமானவர் குருநாதர், அதனால் தான் சான்றோர்கள் இறைவருக்கு அடுத்த நிலையில் குருவை வைத்து போற்றினார்கள்,
குரு பக்தியே கோடி நன்மை தரும், குருவின் அடிபணிந்து கூடுவது அல்லாருக்கு அருவமாய் இருக்கும் சிவம் , இதனையே திருமந்திரத்தில் திருமூலரும் தனது பாடலில் ” குருவே சிவம்” இறைவன் கட்புலனுக்கு காணப்படாததோர் பொருள் கட்புலனுக்கு காணப்படும் பொருள் குருவே, அதனால் அவனையே இறைவனாக தம் தலைவனாகக் கொள்ளவேண்டும் , குரு தான் இறைவனாய் எவர்க்கும் எவற்றிக்கும் தலைவனாய் இருப்பவன் , என்கிறார், இவர்கூற்றின் படி சைவ சமய குறவர்களில் சிவனடியார்களையே அடியாருக்கு அடியேன் என போற்றி தனது குருவையே இறைவனாகக் கண்டவர் இருவர், ஓருவர் அப்பர் (திருநாவுக்கரசர்) பிராணை குருவாக போற்றி இறைவனாகக் கண்டவர் அப்பூதிகடிகள் மற்றொருவர் பெருமிழலைக் குறும்ப நாயனார், குறும்ப நாயனார் குருபக்தியால் திருவருளைப் பெற்றவர், இவர் புதுக்கோட்டைக்கு வடக்கே சுமார் நான்கு கல் தொலைவில் வெள்ளாற்றின் தென்கரையில் உள்ள தலம் பெருமிழலை ஏன்னும் ஊர், இவ்வூர் பெயரே இவரின் பெயருக்கு அடைமொழீயாகவும் தோன்றியது, எனவே இவரை பெருமிழலைக் குறும்ப நாயனார் ஆனார், இவ்வூரில் குறுநில மன்னராகிய பெருமிழலைக் குறும்பனார் என்ற பெரியார் இருந்தார், இந்த மரபில் வந்தவர் நாயனார், சிவனடியார்கட்டு ஏற்ற தொண்டுகளை யெல்லாம் குறிப்பறிந்து உள்ளன்போடு செய்து வந்தார், மங்கைபங்கருடைய ( சிவபெருமான்) மலரடிகளில் மாறாத அன்பு கொண்டவர்,
குருவின் திருவடிகளால் ஏற்படும் நன்மை இன்னது என்று அறிந்தபின், அவரது திருவுருவம், திருவார்த்தை திருநாமம் , திரு உடல் இவற்றை நல் மாணவர்கள் முறையே சிந்தனை செய்து கொண்டு கேட்டுக் கொண்டும், இருப்பதை திருமந்திரத்தில் திருமூலர் வாக்குப்படி ” தெளிவு குருவின் திருமேனி காண்டல், தெளிவு குருவின் திருநாமம் செப்பல், தெளிவு குருவின் திருவார்ததை கேட்டல், தெளிவு குருவுரு சிந்தித்தல் தானே, ” என்றபடி குருபக்தி கொண்டவர் பெருமமிழலை குறுப்பர்,
சுந்தரமூர்த்தி சுவாமிகளின் திருவடிகளை மனம் வாக்கு காயங்களால் சிந்தித்து துதித்து வணங்கி வந்தார், இதுவே இறைவரின் திருவடிகளை அடைவதற்கு ஏற்ற நெறியெனக் கொண்டார், இவ்விதமே நாள்தோறும் சுந்தரமூர்த்தி நாயனாரரின் திருநாமத்தை நவின்று வந்தார், இப்புண்ணியத்தின் பயனாக அணிமா, மகிமா, இலகிமா, பிராத்தி, பிராகாமியம் ஈசத்துவம், வசித்துவம் என்னும் அட்டாமா சித்திகள் யாவும் கைவரப் பெற்றார், இதன் பிறகு திரு ஐந்தெழுத்தினையே பற்றுக் கோடாக கொண்டவர், இதையே சேக்கிழார் பெருமானார் தனது பெரியபுராணத்தில் கூறய படி
” நாளும் நம்பி ஆரூரர் நாமம் நவின்ற நலத்தாலே
ஆளும் படியால் அணிமாதி சித்தியான அணைநதற்பின்
மூளும் காதலுடன் பெருக முதல்வர் நாமசத தஞ்செழுத்தும்
கேளும பொருளும் உணர்வுமாம் பரிசுவாய்ப்பக் கெழுமினார் ” பெரிய புராணம்
சுந்தரமூர்த்தி சுவாமிகள் ” திருஅஞ்சைக்களம் ” என்னும் தலத்திற்கு சென்று பெருமானை வணங்கி திருப்பதிகம் பாடிக் கயிலாயம் செல்ல இருக்கின்றார் என்பதை முன்கூட்டியே தனது யோக வலிமையால் உணர்ந்து கொண்டார் பெருமிழலைக் குறும்பர், ” வன்தொண்டர் சுந்தரமூர்த்தி நாயனார் திருக்கயிலாயம் அடையவும், கண்ணையிழந்து வாழ்வார் போல நான் அவரை பிரிந்து வாழமாட்டேன் என்று எண்ணி ” யோக நெறியில் மூலம் கபாலத்ததினைத் திறந்து ஒளி வடிவமாக திருக்கயிலாயம் சேர்ந்தார்,
இப்புணித வரலாற்றை படிக்கும் நமக்கு குருபத்தியின் மேன்மையை அதன் பயன்பாட்டை சீர்தூக்கலாம், திரு ஐந்தெழுத்து மந்திரத்தின் – சிவயநம – நம் உயிர் மூச்சாகக் கொண்டு எல்லா நலன்களும் பெற்று பொருளற்ற சடங்குகளில் சம்பிரதாயங்களில் கருத்தை செலுத்தி பிறப்பை பயனற்றதாக்க வேண்டாம் நாம் குருபத்தி கொண்டு அடியார்க்கு அடியானாக வாழ்ந்து இறையருளை பெறுவோம்,
திருச்சிற்றம்பலம் – ஓம் நமசிவாய நம –
நன்றி : கருத்து வடிவம் – தமிழ் வேதம்

Advertisements

கொண்டு வருவதும் கொண்டுபோவதும்

Standard

கொண்டு வருவதும் கொண்டுபோவதும்
“எதை கொண்டு வந்தாய்? எதை நீ இழப்பதற்கு? எது உண்டையது? அதுவே நாளை வேறு ஒருவருடையது ” என்ற கீதையின் வாக்கிற்கு ஏற்ப ஒரு ஊரில் சாதாரண குடும்பத்ததில் பிறந்த ஒருவன் முற்பிறவியில் செய்த நல்வினைப் பயனால் தான் ஏழையாக இருந்தபோதிலும், தனது உழைப்பினால் அவர் தொட்டதெல்லாம் துலங்கியது, நிறைய சம்பாதித்தார், நல்ல மனைவி மக்களையும் பெற்றார், நிற்க நேரம் இல்லாமல் வியாபாரம் செய்து பெரும் பொருள் ஈட்டினார், சில நேரங்களில் சாப்பிடாமல் கூட தொழிலில் ஈடுபட்டிருந்தார், பல கோடிகளுக்கு அதிபதி ஆனார், நிலபுலங்கள் வேலையாட்கள், பெரிய வீடு, வண்டிவாகனம் என்று எல்லாம் பெற்றிருந்தார். பெற்ற பொருட்கள் எல்லாம் தனது உழைப்பின்காரணமாகத்தானே கிடைத்தது, என்ற ஆணவமும் சற்று இருக்க தவறவில்லை, எல்லாம் அவன் செயலாலேயே வந்தது என்பதையும், தனது பூர்விக புண்ணிய கருமங்களால் தான் கிடைத்ததென்பதையும் மறந்திருந்தார், பொருளை அருளாக மாற்றி கொள்ள வேண்டும் என்பது மட்டும் அவருக்கு தெரியாமால் போயிற்று, பெரும் செல்வமிருந்தால் போதும் என்று வாழ்ந்தார். இல்லாதவர்க்கு கொடுத்து உதவும் பழக்கம் அவரிடம் எள்ளளவும் இல்லை. ஆதலால் யாரும் அவரிடம் எதை வேண்டியும் செல்லவும் இல்லை.
இவ்வாறு செல்வ செழிப்புடன் வாழ்ந்து வந்த நாளில் ஒருநாள், திடீரென்று மாரடைப்பினால் உயிர் பிரிந்தது எமன் தூதர்கள் அவனுடைய உயிரைப் பற்றிச்சென்றனர், அங்கே எமன் கேட்டார் ” கோடி கோடியாக இறைவர் உனக்கு கொடுத்த செல்வத்தை கொடுத்தாரே எதையாவது கொண்டுவந்தாயா? வெறுங்கையுடன் வந்திருக்கிறாயே? அடுத்த பிறப்பில் கனவில் கூட காசை பார்க்க முடியாத ஏழையாகத்தான் பிறக்க வேண்டும் நீ” என்றார், அதற்கு அவனோ நான் பிறக்கும் போது வெறுங்கையுடன் தான் பிறந்தேன், வெறுங்கையுடன் தான் வந்துள்ளேன்” என்றான், அதற்கு எமன் ” நீ கூறுவது தவறு, எல்லோரும் நல்வினை, தீவினை என்ற இரண்டையும் இருகை நிறைய கொண்டு போகிறார்கள், அதைப்போலவே இருகை நிறைய நல்வினை தீவினை கைநிறைய கொண்டு வருகிறார்கள், நீயே நல்வினை இல்லாமல் தீவினையுடன் மட்டும் வந்துள்ளாய் என்று கூறினார் எமன்.வேலை உழைப்பு என்று எப்போதும் காலம் கழித்தாய், ஆனால் சிறு பொழுதேயாயினும் இறைவனை நினைத்தாயா? பெரும் செல்வம் இருந்தும் சிறு துளியாவது மற்றொருவருக்கு – ஏழைகளுக்கு தருமமாக கொடுத்தாயா? நல்வினை யை – இறையருளை மட்டும் தேட மறந்து விட்டாய்? என்றார், அவரின் கூற்றுப்படி திருமூலர் வாக்கின்படி ” யாவருக்கும் ஆம் இறைவற்கொரு பச்சிலை, யாவர்க்கும் ஆம்பசுவுக்கொரு வாய்உறை, யாவர்க்கு ஆம் உண்ணும்போது கைப்பிடி, யாவர்க்கும் ஆம் பிறர்க் கின்னுரை தானே” என்ற படி நல்வினை என்ற இறையருளை சற்றேனும் இல்லாது தீவினைகளைமட்டும் கொண்டு சேர்ந்தான், இதனையே அப்பர் பெருமானார்,” இரப்பவர்க்கு ஈய வைத்தார், ஈயவர்க்கு அருளும் வைத்தார், கரப்பவர் தங்கட்கெல்லாம் கடு நரகங்கள் வைத்தார் ” என்கிறார்,
நல்வினை தீவினைகளைக் கொண்டு வருகிறோம், அவற்றுடன் செல்கிறோம், இரண்டையும் விட்டால் பிறப்பில்லாமல் ஒழியும் உயிர்க்குத் துணையாய் வருவது நாம் செய்யும் தான தருமங்களே ஆகும், அதிகமான பொருளை நம்மிடம் கொடுப்பதின் நோக்கமே இல்லாத எளியவர்களுக்கு கொடுக்கும் புண்ணியவானுக்கு இறைவர் தம்முடைய அருளை பூரணமாய் அளிக்கின்றார்,
கொலை, கொள்ளை , திருடுதல், போன்ற தவறுகளை செய்பவரை அரசாங்கம் சிறையில் அடைத்து தண்டிக்கிறது, ஆனாலும் அவர்களுக்கு உணவு, உடை, இருப்பிடம் யாவும் அளிக்கிறது. இதைப்போல கடந்த பிறவிகளில் பாவங்களைச் செய்தவர்கள் இப்பிறவியில் பரம ஏழையாக பிறக்கின்றனர், ஆடை உணவு, இருப்பிடம் ஆகியவற்றுக்கு திண்டாடுகின்றனர், தவறு செய்த தண்டனை கைதிகளும் நலமாக இருக்க வேண்டும் என்று இந்த அரசு நினைக்கிறது. பரம கருணை நிறைந்த இறைவர், பாவம் ெசெய்து ஏழைகளாக பிறந்துள்ளவர்களுக்குநலமாக வாழ வேண்டும் என்ற எண்ணுகிறார், இறைவரும் ஏழைகளுக்கு உதவ வேண்டி, கடந்த பிறவிகளில் புண்ணியம் செய்தவர்களிடம் தேவைககு மேல் செல்வத்தை அளித்து ஏழைகளுக்கு கொடுக்க , செல்வந்தர்கள் கடவுளின் பிரதிநிதிகளாக செயல்பட வேண்டும் அவர்களும் நலம் பெற செல்வந்தர்கள் மூலம் அருளச் செய்கிறார், எனவே இறையருள் பெற்றால் பரம ஏழைக்கும் இறைவரின் பிரதிநிதியான செல்வர்களுக்கும் இறையருளை கொடுத்து தான தர்மம் செய்தபடியால் அவர்களுக்கும நல்வினை என்ற இறையருளை வாரி வழங்குகிறார் இறைவர்,
திருச்சிற்றம்பலம், – ஒம் நமச்சிவாயம்,
நன்றி : படித்ததில் பிடித்த கருத்து : தமிழ் வேதம் 

ஞானம்

Standard

ஞானம்

படித்தறிவு என்பது வேறு அறிவு என்பது உலக பொது அறிவையையும் அறிவானந்த ஆற்றலையும் வளர்க்க வல்லது, அறிவு வேறு,ஞானம் வேறு, பலகைகளுடன் தலைவிரி கோலத்தில் சிவனே வந்து நின்றாலும் ” இது சிவன்தானா? ” என ஆராய்ந்தால் சிவன் போய் விடுவார் ஞானம் எழும் இடத்தில் அறிவுக்கு வேலை இல்லை. ஆராய்வது அறிவு. உள்ளதை உள்ளபடி உணர்வது ஞானம். நாம் படிப்பது அனைத்தும் அறிவு, அது பண வரவை அதிகரித்து நம் உடலை வளரச்செய்யும், அன்ற வேலைக் கல்வி என்றால் மருத்துவம், பொறியியல், சட்டம், எல்லாம், சில. இன்றோ நூற்றுக்கணக்கான படிப்புகள் எல்லாம் பணம் தருவன. நம் உடலை வளர்ப்பன. ஆனால் ஞானம் ஒன்றே உயிரை வளர்க்கும், உயிருக்குஇன்பம் தரும். ஞானம் என்றால் மெய்யறிவு, உண்மையறிவு.
பொருட்கள் மூன்று அவை இறை, உயிர், உலகு இதைனையே திருமந்திரத்தில் திருமூலர் பதி, பசு, பாசம் என்கிறார், இவற்றின் இயல்பை உள்ளதை உள்ளபடி உணர்வது ஒன்றே ஞானம், நாம் ஆடம்பரமாக இருந்தாலும், ஆராய்ச்சியில் இருந்தாலும், உள்ளதை உள்ளபடி உணரமாட்டோம், நம் தோதுக்கே பதில் சொல்வோம், ஆகவே தான் இத்தனை மதங்கள், சமயங்கள், தோன்றின. அவை அனைத்தும் அறிவுக்கு வேலை கொடுத்தள்ளன, அவரவர் அறிவுக்கு எட்டிய உரைகள் மதங்கள், ஞானம் பெற நிரம்பிய அறிவு வேண்டியதில்லை, நம்மிடம் உள்ள அறிவே போதுமானது, அதுவே ஞானமாக மாறுகிறது. அறிவின் முதிர்ச்சி ஞானமாகிறது,
ஒருவரைப் பார்க்கும் போது, இவர் சிரமப்படுகிறார் என்பது அன்பு, ” சிரமத்தை அனுபவிப்பதும் ஒர் உயிர்” என்று உணர்வது ஞானம், மாறாக ” அவர் நம் இனத்தவர், நமக்கு வேண்டியவர், பணக்காரர், பின்பு பயன்படுவார், நாமும் பழகிக் கொள்வோம்” என எண்ண வைப்பது அறிவு, நம் போன்றோருக்கு பின்னதே முந்தும், அறிவே எழும், ஞானம் எழாது, ஏனெனில் நாம் உலகப் பயன்களை எதிர்பார்தது வாழ்கிறோம், அதை ஆக்கித் தருவது அறிவுதானே,
நட்ட கம்பை சிவனாக உணர்ந்தார் ஒருவர், உவர்மண்ணை திருநீராக கண்டார் ஒருவர், கல்லை பூவாக எறிந்தார் ஒருவர், அங்கெல்லாம் அறிவு எழவில்லை, சிவலிங்கத்திற்கு கண்களில் இரத்தம் வழிந்தது அங்கும் அறிவு எழவில்லை, ஞானமே எழுந்தது. அறிவே ஞானமாக பழுத்துள்ளது. முதிர்ந்துள்ளது. ஆணவம் இல்லாத அறிவில் தெளிந்த நிலையில் ஞானம் உண்டாகும், அந்நிலையில் தான் அருளாளர்கள் அவனை கண்டிருக்கின்றனர், தனக்கு கிடைத்த ஞானக் காட்சியைக் கண்டு வியக்கிறார், அப்பர், ” கண்டேன் கண்டாறியாதன கண்டேன்” என்கிறார் அவர், அவரே திருபுவணத்தில் “வடிவேறு திரி சூலம் தோன்றும் தோன்றும்” எனத் தான் கண்டதை வருணிக்கிறார்,
நாமும் உலகியலைப் புறந்தள்ளுவோம், உள்ளதை உள்ளபடி உணர்வோம், பின் நமக்குள்ளும் ஞானம் பிறக்கும்,
திருச்சிற்றம்பலம் – ஓம நமச்சிவாயம் 

Aside

உள்ளத் துறவு

ஒருவருக்கு உடம்பில் சக்கரைச் சத்து அதிகமாக இருக்கும்போது, சக்கரை யற்ற காபி அருந்துவது, அல்லது காபியே அருந்தாமல் துறப்பது உள்ளத்துவன்று, நம்மனதில் ஆசையை வைத்துக்கொண்டு உடல் பாதுகாப்பிற்காக உணவின் பழக்கங்களை துறப்பது உள்ளத்துறவு ஆகாது, நாமே ஒன்றை விரும்பாது, நாடாது, பற்றாது இருக்க வேண்டும். நமது தேச தந்தை மகாத்மா காந்தியடிகள் நம்நாட்டு விடுதலைக்காக பாடுபட்டார். அவர் விடுதலைக்கு பின் எந்த பதவியும் வகிக்க வில்லை, அவர் உள்ளத்தால் ஆைச்பட வில்லை, அது உள்ளத் துறவு. உலகப் பொருட்கள் அனைத்தும் நம் உடனேயே இருக்கும், அருகிலேயே இருக்கும், நாம் அதைவிட்டு எங்கு ஒடி ஒளிந் கொள்ள இயலாது. காவி உடுத்தி காட்டுக்கு போக சைவம் சொல்லவில்லை. நாம் நம் உள்ளத்தால் எதையும் நாடாதிருப்பதே உள்ளத் துறவு.
இதற்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்தவர் நாவுக்கரசர். அழகிய பெண்களை அவர் முன் நடனமாட விடுகிறார் இறைவன். அவர்களை அவர் கண்டுகொள்ளவே இல்லை. நவ ரத்திங்களை அவர்முன் பெய்கிறார் இறைவர் அவற்றையும் குப்பையோடு குப்பையாகத் தள்ளிவிடுகிறார். நம் நிலையைத் தாண்டியவரல்லவா அவர்! அவரிடம் ஆசை என்பது அறவே இல்லை. பற்று இல்லாத வாழ்வு அது. இவையெல்லாம் நமக்காக இறைவன் நடத்திக்காட்டிய நாடகம். இதனை சேக்கிழார் , ” ஓடும் செம்பொன்னும் ஒக்கவே நோக்குவார்” என்கிறார். இதை உணர்ந்து நாம் ஆசைகளை துறந்து வாழ முயல வேண்டும், அதாவது எதற்கும் ஆசைப்படாமல் இருக்க வேண்டும், அனைத்து துன்பங்களுக்கும் ஆசையே காரணம், மண்,பொன், பெண் ஆகியவற்றின் மேல் ஆசை வைப்பதால் பல பாவங்களை செய்யும் மனிதன், விட்டில் பூச்சியைப்போல், மகுடிக்கு மயங்கும் பாம்பு போல, தூண்டில் விழும் மீன்போல சிக்கி சுகங்களில் மனதை வைத்து தனது வாழ் நாட்களை வீணாக்கிறான். ஆயுட்காலம் முடிந்த பின் தன் ஆசையால் சேர்த் அத்தனையும் விட்டு செல்கிறான். உலகப் பொருட்களில் பற்றில்லாது வாழ்வதே உள்ளத்துறவாகும். புளிய்ங்காயில் தோலும் சதையும் ஒன்றோடொன்று ஒட்டிக்கொண்டிருக்கும் ஆனால் அதுவே பழுத்த பின் ஓடு வேறு, பழம் வேறு என ஒன்றை ஒன்று பற்றாது இருக்கும், இதை “புளியம்பழம் ஒத்திருந்தேன்” என்கிறார் மாணிக்கவாசகர்.
இதையே உலகியலை நோக்கி,
” யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்” என்கிறார் வள்ளுவர், எந்த ஒன்றிலும் விலகியிருந்தால் அதன் வழியான துன்பங்கள் நம்மை அணுகா என்கிறார் அவர், இந்த குறளை படிக்கும் போது நம் உதடுகள் ஒன்டோன்று ஒட்டா, இது போல நாம் எதிலும் ஒட்டாதும் பற்றில்லாதும் வாழ வேண்டும். ( நோதல் என்றால் வருத்துதல்) எதிலும் பற்றவைக்காதும் அனைத்தும் உள்ளத்தால் துறந்தால் வாழ பழக வேண்டும். ” பற்றுக பற்றாற்றான் பற்றினை ” என்கிறார் வள்ளுவர். ஆனால் இன்றைய உலகில் உள்ளம் வேறு, வெளித் தோற்ம் வேறு, நாம் உள்ளத்தில் பற்று வைத்து, வெளியில் பற்றில்லாதவர் போல் நடிக்கிறோம், உள்ளமும் புறத்தோற்றமும் ஒத்துப்போகிறவர் ஆயிரத்தில் ஒருவர் தேறலாம், அவர் அமைதியாக ஆராவரமின்றி இருப்பார், அவரையே நாம் முன்மாதிரியாக கொள்ளவேண்டும்,
திருச்சிற்றம்பலம் – ஓம் நமச்சிவாயம் 

Aside

புண்ணியம்
நாம் பல புண்ணிய ஸ்தலங்களுக்கு செல்வோம் அங்குள்ள இறைவரை வணங்கிவிட்டு கோவிலைவிட்டு வெளியில் வந்தவுடன் கோவில் வாசலில் உள்ள பிச்சைக்காரர்களுக்கு நம்மால்இயன்ற காசுகளை போடும் பழக்கம் இன்றளவும் உள்ளது.இதை ” போகும் வழிக்கு புண்ணியம் தேடுவது ” என்பர். இதற்கும் புண்ணியம் உண்டு.
” பிச்சை இடுவது நான், பெறுவது பிச்சைக்காரர் ” என இறுமாந்து போட்டால் அது உயிர் நல்வினை. பசு புண்ணியம், “பசு” என்றால் உயிர் , மாறாக ” கொடுத்ததும் சிவன், பெறுவதும் சிவன், ( பிச்சை ஏந்தி இருப்பதும் சிவன்) எனப் பணிந்து , இட்டால் அது பதி புண்ணியம் ( இறை நல்வினை) , புண்ணியமே யானாலும் பசு புண்ணியத்திற்கு பிறவி உண்டு, நல்ல பிறவி வாய்க்கும், அனுபவித்தே அதையும் கழிக்க வேண்டும், பதி புண்ணியம் பெற்றால் அதனால் தேவராயும், சிவகணங்களாயும் பிறக்க வைக்கும்.
கோவில்கள் கட்டுவதும், அங்கு அபிசேக ஆராதனைக்ள் எல்லாம் நம் செலவிலே செய்வதும், எந்த ஒரு செயலுக்கும் தன்னுடைய பெயரை விளம்பரப்படுத்துவதும், பசு புண்ணியமே ஆகும், ஏன் தேங்காய் உடைத்து நம் பெயரிலே அல்லது நம் குடும்ப உறவின் பெயரிலோ அர்ச்சனை செய்வதும் அதுவும் பசு புண்ணியமே ஆகும்.

படம்

கோவில்களில் முடியிறக்கி காதுகுத்து நிகழ்வுகளின் போது அன்னதானம் நம் சொந்தபந்தங்களை அழைத்து அன்னதானம் இடுவதும் பசு புண்ணியமே ஆகும். நாம் எதிர்பாராது வரும் வழிப்போக்கர் அல்லது யாத்திரியர்கள், ஏழை எளியயோர் நம் அழைப்பின்றியே வந்து உணவருந்தி செல்வோர்க்கு வழங்கும் புண்ணியமே பதி புண்ணியமாகும், அதற்கு பெயர்தான் அன்னதானம், சொந்த பந்தம் நண்பர்களுக்கு வழங்கும் உணவு அன்னதானமாகாது, அது பசு புண்ணியமே ஆகும். ஒருவர் நம்மிடம் பொருளோ பணமோ வேண்டி உதவி கேட்டு வருகிறார் , அப்போது நாம் இராசத ( இரஜோ ) குணத்தில் இருந்தால் நம் தன்முனைப்பு என்ற ஆணவம் எழும்,நம்மிடம் வந்து கேட்டதற்கே நாம் பெருமைப்படுவோம். பணம் கொடுத்து வாழ்த்துவோம், நம் உயிருக்கு நல்வினையாகிறது. உயிர் நல்வினை நம் புத்தியில் இது பதிகிறது. நற்பயனை பின் அனுபவிப்போம். அப்போது சாத்வீக குணத்தில் நாமிருந்தால், ” இது இறைவன் செயல்” என்று எண்ணுவோம், பணம் இருந்தால் ” இறைவன் கொடுத்தது,” என எண்ணி கொடுப்போம். ” பெறுவதும் சிவன், கொடுப்பதும் சிவன் ” என்றெண்ணிக் போற்றுவோம், இது இறை நல்வினை. இறை சிந்தனையிலேயே இருப்பவருக்குத்தான் இந்த சாத்வீக குண உணர்வைத்தரும். இது தான் பதி புண்ணியம் ( இறைவன் தந்தது, இறைவனுக்கே) என்று உணர்வோம். எது எப்படியானாலும், நாம் செய்த பாவத்தை புண்ணியத்தையும் நாம் அனுபவித்தே கழிக்க வேண்டும். இது ஒரு நிலை.
அதற்கு மேனிலையாக எவ்வேண்டுதலும் இல்லாத வழிபாடு ஒன்று உண்டு, எந்த வேண்டுதலும் இல்லாது, அதாவது “நான்” என்ற எண்ணமும் இல்லாது, திருக்கோயிலைச் சுத்தம் செய்தல், கோலமிடல், கோவிலையும், இறைவரையும் அழகுபடுத்துத்ல அபிசேக ஆராதனைகள் செய்தல், அவன் அழகில் அருளில் மெய்மறத்தல், தேவார, திருவாசக் கருத்துக்களை தெளித்த்ல், மந்திரம் ஒதுதல், தியானித்தல், ஆகியவை இது ஒரு உயர்ந்த நிலை. இதனால் மட்டுமே மறுபடி பிறவாமை எய்த முடியும், இதற்குத்தான் முத்தி என்னும் வீடுபேறு உண்டு. எதனையும் வேண்டாது அவன் அருளைமட்டும் நாடவேண்டும், நமக்கு எந்த நேரத்ததில் எதை தரவேண்டும் என்பது அவனுக்கு தான் தெரியும், இதனை மாணிக்க வாசகர் தனது பாடலில் உயிர்களுககு தேவையானது இது என அறிவோய் நீ. மேலும் அவ்வுயிர்கள எவ்வற்றை வேண்டினாலும், அதனை அருளுபவனும் நீயே, உன்னை காண விரும்பி பிரம்மா, திருமால் ஆகியவோருக்கு காட்சி அளித்தவனும் நீயே, நீயாவே என்னை விரும்பி பணிகொண்டாய் என்பொருட்டு நீ விரும்பி அருள் செய்தனை , அதனையே நானாக விரும்புகின்ற பொருள் ஒன்று உண்டெனில் அதுவும் நான் உன்னிடத்தில் வைக்கின்ற அன்புதானே என்று கீழ்கண்டவாறு பாடுகின்றார்,
“வேண்டத்தக்கது அறிவாய் நீ
வேண்ட முழுதுந் தருவோய் நீ
வேண்டும் அயன் மாய் கரியோய் நீ
வேண்டி என்னை பணிகொண்டாய்
வேண்டி நீயாதருள் செய்தாய்
யானும் அதுவே வேண்டினல்லால்
ேவ்ணடும் பரிசொன்றுண்டென்னில்
அதுவும் உன்றன் விருப்பன்றே” மாணிக்கவாசகர்

இதனையே வள்ளுவரும் ” வேண்டங்கால் வேண்டும் பிறவாமை மற்றது
வேண்டாமை வேண்ட வரும்.” என்கிறார், இனி நாமும் எதனையும் வேண்டாது அவனருளை மட்டும் வேண்டுவோம், இறைவனே நாம் வேண்டுவன அறிவான் அருளுவான்,
திருச்சிற்றம்பலம் ஓம் நமசிவாய

Aside

மாயை

படம்
மாயை என்ற சொல் ஞான மார்க்கத்தில் அதிகம் சொல்லப்படுகிறது. உலகமே மாயை என்று ஞானிகள் சொல்வர். மாயையை நாம் தினந்தோறும் காண்கிறோம், உறக்கத்தில் நாம் காணும் கணவும் ஒருவகை மாயைதான். உறக்கத்தில் நாம் கனவு காணும் நேரம் சில நிமிடங்களே அந்த சில நிமிடக் கனவில் நீண்ட காலத்தில் நடப்பது போன்று நிறைய நிகழ்வுகள் நடக்கின்றன. அதில் நாம் பங்கு கொண்டு நிஜமாகவே சுகத்தையும், துக்கத்தையும், பயத்தையும், உணர்கிறோம். உறக்கம் கலையும் வரை நிஜமாகவும், விழித்த பின் நிஜமல்ல கனவு என்று உணர்கிறோம்,
நம்மிடம் பணம் இருந்தால் மனம் மகிழ்கிறது. இல்லையென்றால் கலங்கிறது.பணத்குள்ளேயே நம் வாழ்க்கை கழிகிறதே! ஆக பணம் மனிதனைமயக்கும்மாயை. திரைப்படத்தில் அதில் வருபவர் தீயவரும் நல்லவராகவும், நல்லவர் தீயவராக நடிப்பவரே தீயவராகவும் நம் கண்ணுக்கு தெரிவர், திரையில் உண்மையென நம்பிவிதே காரணம். மாயை நம்மை மயக்கிவிடுகிறது. இவைபோன்றே கல்வி, அழகு, பொருள், பதவி, புகழ், இவையும் நம்மை அதிலேயே ஆழ்த்திவிடும், நமக்கு எது பலமோ, அதுவே பலவீனம், அது மாயை என்று உணர்ந்து மீளவேண்டும். மாயை என்றால் முற்றிலும் பொய்யானது என்பதாக பலரும் நினைக்கிறார்கள், மாயை என்பது தற்காலிக தோற்றம், உதாராணத்திற்கு கானல் நீரைச் சொல்லலாம், கானல் நீர் கண்ணுக்கு தெரிவது நிஜம், அது காண்பவரின் கற்பனை அல்ல. ஆனாலும், அது நீர் பொருளாக பெற முடியாது, கண்ட காட்சி நிஜம். தாகத்திற்காகக அனுகினால் அதைப்பருக நினைப்பது ஏமாற்றம், அது காணல் நீராக உணர்வது தான் ஞானம்.- அறிவு –
‘” மா” என்றால் ஒடுக்குதல் , “ஆ” என்றால் வருவித்தல், அனைத்தையும் தன்னுள் ஒடுக்கியும், மீண்டும் வருவிக்கவும் செய்யும் சூக்குமப் பொருளை மாயை என்கிறோம். தமிழில் இது மருள் எனப்படுகிறது. நம்மை இது மயக்குகிறது. இது நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் என ஐந்தாக விரிகிறது. அவை நம் உடலாகவும், உலகாகவும், உலகப் பொருளாகவும், மாறுகின்றன. ஆணவ வழியில் நாம் இதனுள் அழுந்தி, உணர்ந்து, திருந்தவே மாயை வழிக் காரியங்கள் வருவிக்கப் பட்டன. ஆகவே இது நம் வாழ்வில் சிறிய ஒளிபோல் நம்மைத் திருத்த வந்தது. அதனுள் வீழும் நாம் உணர்ந்து திருந்தவும், திருவருள் துணை வேண்டும். ஆம் மாயை என்று உணர்வதற்கே இறையருள் துணை வேண்டும். ஒன்று மாயை பொருள் என்று விளங்கும் போது அதைப் பெற ஆணவ வழியில் நாம் எவ்வளவு தூரம் பயணப்பட்டுள்ளோம் என்பதையும் உணர முடியும். ஏனென்றால் இறைவனது அருள் மறைப்பு சக்தியாகவும், வந்து நம்மை மயக்கியுள்ளது. ஆக முன்பு நம்மை மயக்கியதும், பின்பு நமக்கு உணர்த்தியதும் இறைவனது கருணை என்பதும் பினனர் தெரியும்,
தவறு செய்வது மனித இயற்கை என்பர், மாயை நம்மை மயக்கித் தவறுசெய்யத் தூண்டும். தவறு உடலை வளர்க்கும், அது தவறு என உணரும்போது இறையருள் புரியும், இறையருளை உணரும் போது உயிர் வளரும், ஆகவே மாயை நம்மைத் திருத்த வந்தது.
திருச்சிற்றம்பலம்