Happy New Year 2014

Image

Happy New Year 2014

Advertisements

சும்மா இரு ….. சொல் அற !

Standard

சும்மா இரு ….. சொல் அற !
நாம் யாரும் நிகழ்காலத்தில் வாழ்வதே கிடையாது. பழைய கால நினைவுகளை அசைபோடுகிறோம் , வருங்கால கனவுகளில் மிதக்கிறோம், நம்மனமும் உடலும் நிகழ்கால செய்கையில் ஒன்றுபடுதோ நிகழ்கால வாழ்வாகும்,அலைபாயும் மனத்தை நிகழ்காலத்திற்கு கொண்டுவருவதில் கடந்த கால, எதிர்கால கனவு நினைவு அலைகளிலிருந்து விடுபட்டால் தான் நம் மனம் முழுவதும் இறைவனிடம் நிலைபெறவும் அவன் அருள் பெறவும் வழிவகுக்கும், நம் மனம் பேசிக் கொண்டே இருக்கும் இயல் புடையது அதற்கு ஓய்வில்லை, அதனாலேயே பழங்கால நினைவுகளும் எதிர்கால கனவுகளும் நமக்கு ஏற்படுகின்றன, நாம் மனம்வழிப் பேச்சை குறைக்க வேண்டும். நம்மனம் அமைதியாக இருக்கும் சூழலை உருவாக்க வேண்டும். அப்போது தான் மனம் பேசாதநிலையை நாம் உணர முடியும்.
நாம் இறைவனது அபிசேக அலங்காரங்களை காணும் போதும் இறை மந்திரங்களை உச்சரிக்கும் போதும் நம்மனம் அதிலேயே ஒன்றியிருக்கும். அப்போது அது பேசுவதை தவிர்த்துவிடும். இதனையே ” சிந்தனை நிந்தனுக்கு ஆக்கி” என்கிறார் மாணிக்கவாசகர். நம்மனம் முழுவதும்இறையழகே நிறைந்திருந்தால் மறுபேச்சுக்கே அங்கு இடமில்லை அல்லவா? இப்படி மறு சிந்தனையே எண்ணித் தன்மனத்துள் அவனுக்குக் கோவில் கட்டி குடமுழுக்கும் செய்வித்து முத்தி பெற்றவர் பூசலார் நாயனார்.
பிராணாயாமம், தியானம் செய்பவர்கள் தங்கள் சிந்தனையை மூக்கின் முனியில் அல்லது இதயத் தானத்தில் இருத்தி செய்யும் போது மனஓட்டம் அடங்கும். மனமும் பேசாது ஒடுங்கும்.
இதனைச் ” சும்மா இரு சொல் அற ” என்கிறார் அருணகிரியார். ஆகவே இறைவனை வணங்கும் போதும் எண்ணும்போதும் தியானிக்கும் போதும் நாம் நம் மன ஓட்டத்தை நிறுத்தலாம். அவ் வழியில் நிகழ்காலத்தில் வாழலாம், இதுவே சும்மா இருந்து மன நிம்மதியுடன் சுகத்தை – பேரின்பத்தை காணலாம்,

தாயுமானவர் சித்தரின் அருள் வேட்கை புலம்கள் சில,:

Standard

தாயுமானவர் சித்தரின் அருள் வேட்கை புலம்கள் சில,:
எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாது வேறோன்று அறியேன் பாரபரமே எனும் கொள்கையுடைய தாயுமானவரின் அருள்வேட்கை அளப்பரியதாகும், அற்றில் சில
என்னை மாயையினின்று நீக்கி ஆணவத்தை அறத்து நேரே அறிவு வொளியில் எம்மை சேர்த்து, காலைத்தூக்கி மன்றத்தில் ஆடும் திருவடியை வணங்கும் நாள் எந்நாளோ?

தீமை விளைவதற்கு காரணமான பேராசையாம் புலைத்தொழியல் பின் அறிவு சென்று விடாது திருவருளால் நன்னெறியில் அறிவு சென்று அடையும் நாள் எந்நாளோ?

கண்ணால் கண்டவை நிலையில்லாதவை என்றும் எங்கும் நிறைந்துள்ள சிவமே நிலையானது என்றும் கூறியருளிய சிவ வாக்கியரின் திருவடியை அடையும் நாள் எந்நாளோ?

இளமைப் பருவத்தின் பசுமையான கொங்கைகளால் ஆடவரை மயக்கும் மாதரின் பாழான மயக்கும் நஞ்சு என்று உணர்ந்து வெறுத்து ஒதுக்கி இறைவன் திருவருளை அடையும் நாள் எந்நாள்?

கச்சினால் கட்டப்பட்டுள்ள முலையையும் கரும்பு சாறு போன்ற இனிய சொல்லையும் உடைய மங்கையர் மயக்கத்தை விட்டு நீங்குவது எந்நாள்?

பெருத்து உயர்ந்து சில நாட்களுக்கு பின் தளர்ந்து தொங்கும் முலைகளையுடைய மங்கையர் மீது படுத்து உறங்கும் காமத்தையுடைய சோம்பலை ஒழிக்கும் நாள் எந்நாள்?

மன்மதனை போன்ற மிக்க காமம் உடையவனை வா என்று சாடைகாட்டி இருண்ட கண்களான வலையில் சிக்கி கொள்ள வைக்கும் மங்ககையர் பெயரை மறந்து இறைவன் திருவருளை அடையும் நாள் எந்நாள்?

வாய் திறந்து கொஞ்சு மொழி பேசி ஆசை என்ற கள்ளை தம்மிடமிருந்து மொண்டு ஆடவர் ஊட்டும் விலைமாதர் கடைக்கண்ணில் அகப்பட்டு சுழல்விழியினின்று விடுபடுவது எந்நாள்?

கரை வைத்த புடவையின் கொய்சகத்தில் ஆடவரின் உள்ளத்தை எல்லாம் பிணித்து வைத்துக் கொள்ளும் வஞ்சகத்தில் வல்ல மாதர் கட்டினின்று நீங்குவது எந்நாள்?

ஆழ்ந்த கடைப் போன்ற அளவில்லா வஞ்சத்தை உடைய நெஞ்சம் பொருந்திய பயன் இல்லாத மங்கையர் மயக்கத்தினின்று நீக்குவது எந்நாள்?

இவ்வுடல் காரண தத்துவஙகள் முப்பத்தாறும், காரிய தத்துவங்கள் அறுபதும் ஆகிய தொண்ணூற்று ஆறு தத்துவங்கள் என கூறப்பட்டவர் , அவரவர் கன்மத்துக்கு தக்கவாறு தாமாகவே சென்று வாழ்ந்திருப்பது இந்தவுடல் என்ற நாட்டைப் பித்தனான நான், ” நான்” என்ற செருக்கு கொண்டு பிதற்றுதல் பிதற்றுதலை ஒழிப்பது எந்நாளோ?

ஆணவம், கன்மம், மாயை, என்னும் மும்மலச் சேற்றினால் உண்டான முழுக் கம்பீர பாகம் என்னும் நரகத்தை போன்ற மலவுடலில் வெறுப்பு அடைவது எந்நாள்?

ஆடவரின் உறுதியான மனம் என்ற பறவை அகபபட்டு கொள்ளும்படி கூந்தலான காட்டில் மலர் மாலையான வலையை வைக்கும் மங்கையரின் தந்திரத்தை கடக்கும் நாள் எந்நாள்?

த்யானம் பண்ணிப்பார்

Standard

த்யானம் பண்ணிப்பார்.
ஒருநாளில், காலை, வைகறை பொழுதினிலே, ஐந்து நிமிடம், வடகிழக்கு திசை நோக்கி அமர்ந்து கொண்டு, அல்லது கிழக்கு திசை நோக்கி அமர்ந்து கொண்டு, கண்ணை மூடிக்கொண்டு த்யானம் செய்து பார். முதலில் ஏகப்பட்ட குழப்பம் வரும். மறுநாள் அந்த ஐந்து நிமிடத்தை பத்து நிமிடமாக மாற்று. திரும்பவும் த்யானம் செய். கொஞ்சம் குறையும். அடுத்தநாள் பத்து நிமிடத்தை 15 நிமிடமாக மாற்று. நிமிடத்தை கணக்குப் போட்டு த்யானத்தை முடித்து விடாதே! த்யானத்தை கடிகார முள்ளுக்கு அப்பாற்பட்டு வை. எப்போது கடிகார முள்ளை பார்க்கிறாயோ, அப்போதே நீ த்யானத்துக்கு அப்பார்ப்பட்டவன் என்று அர்த்தம். நான் சொல்ல வந்தது, ஒவ்வொரு நாளும் த்யானத்தை 1 நிமிடம், 2 நிமிடம் என்று கூட்டிக் கொண்டு வந்தாலே போதும். த்யானம் என்பது அமைதியாக, மனதை அடக்கிக்கொள்ள சித்திக்கும். இதற்காக எத்தனையோ வழி முறைகள் இருக்கிறது. பெரியோர்கள் பலர் அதை சொல்லியிருக்கிறார்கள். ஞானிகள் பலர் பல்வேறு புத்தகங்களை எழுதி இருக்கிறார்கள். இத்தனையும் செய்து த்யானம் கைவல்யமாகவில்லை என்றால், நீ இன்னமும் சாதாரண மன நிலையில் இருக்கிறாய் என்று அர்த்தம். அதை எல்லாம் தாண்டி நிற்பது தானடா த்யானம். ஆகவே, நாளை முதலாவது, மனதை கட்டுப் படுத்திக்கொள், பல்லை கடித்துக் கொண்டு. உலகியல் வாழ்க்கையை சற்று ஒதுக்கிவிட்டு, உனக்கும் சூரிய வெளிச்சத்துக்கும் இடையில் எந்த விஷயமும் வராமல், ஒரு ஐந்து நிமிடம் கண்ணை மூடிக்கொண்டு, மனதை கட்டுப்படுத்தி, உன் எதிரில் ஒளி நெளிய வேண்டும். அதை கண்டு, மனதில் இறைவனை த்யானித்து, அடக்கிக்கொண்டு த்யானம் பண்ணிப்பார். த்யானம் வரும். உறுதி உண்டடா!”