தமிழே ஈசன்- ஈசன் உள்ள இடமே செல்வ செழிப்பு

Standard
தமிழே ஈசன்- ஈசன் உள்ள இடமே செல்வ செழிப்பு

தமிழின் நீர்மை பேசித்தாளம் வீணை பண்ணி நல்ல
முழவமொந்தை மல்கு பாடல் செய்கை இடம் ஓவார்
………..
………..
கமழும் சோலைக் கானூர் மேய பவள வண்ணரே.
( நீர்மை – இனிமை, மேன்மை) ……. திருஞான சம்பந்தர் தமிழ் வேதம் 1
எந்த இடத்தில் தமிழின் மேன்மைகளைப் பேசி வீணை முழவம், தாளம், மொந்தை முதலிய துணைக்கருவிகளுடன் தமிழ் வேதப் பாடல்கள் பாடப்படுகின்றனவோ, அந்த இடத்தில்( பவள வண்ணர்) பவளம் போன்ற சிவந்த மேனியுடைய சிவபெருமான் எழுந்தருளுவார் என்பது இறந்தாரை எழுப்பும் திறம் பெற்ற திருஞானசம்பந்த பெருமானுடைய அனுபவ அருளுரையாகும்.
இறைவர் தமிழாய் இருக்கின்றார் என்பது ஞான சம்பந்தருடைய அனுபவம்,
” பண்ணும் பதம் ஏழும் பலவோசைத் தமிழ் அவையும்
…………
விண்ணும் முழுதானான் இடம் வீழிம் மிழலையே,” தமிழ் முதல் வேதம்
எனவே தமிழன் பெருமையை பேசுவது என்பது பரம்பொருளைப் பற்றி பேசுவதே ஆகும். நம்முடைய வீடுகளில் வாரம் ஒருநாள் அன்பர்கள் சேர்ந்து கூட்டு வழிபாடு நடத்தலாம், வந்துள்ள அன்பர்கள் யாவரும் சேர்ந்து தமிழின் பெருமைகளைப் பேசியும், திருமுறைகளை இசையுடன் பாடியும் வழிபடலாம். அவ்வாறு தமிழால் தமிழ் திருமுறை பாடல்கள் பாடும் போது ஈசன் சிவபெருமான் அங்கு விளங்கி தோன்றுவார், அவ்வாறு ஈசனே அங்கு தோன்றும் போது, அவரின் கீழ் உள்ள அனைத்து தேவாதி தேவர்களான, குபேரன், இந்திரன், வருணன் ஆகிய அனைவரும் வருவர், அப்போது அங்கு செல்வ செழிப்பும், வளமும் பெருகும் என்பதில் ஐயமில்லை. ஏனெனில் ஒரு உயர்ந்த பதவியில் உள்ள அதிகாரி வரும் போது அவரின் கீழ் உள்ள ஏனைய அதிகாரிகளும் வருவதுதானே இயல்பு. எனவே எங்கு தமிழ் பாடல் தமிழ் இயல் இசை நடமாடுகிறதோ அங்கு ஈசனும், அனைத்து வளங்களும் வந்து சேரும் என்பது அருளாளர்கள் வாக்கு.
வாழ்க தமிழ்! வளர்க தமிழ் வேதம்.!!
திருச்சிற்றம்பலம்
தொகுப்பு வை. பூமாலை, சுந்தரபாண்டியம்

 

Advertisements

தமிழரின் வாழ்வில் வேதம் திருமுறைகளின் பங்கு

Standard

தமிழரின் வாழ்வில் வேதம் திருமுறைகளின் பங்கு

குமரகுருபரர் இதழ் – தலையங்கம்

சைவ சமயம் புராதனமான சமயம். சைவத் திருக்கோயில்கள் பாரம்பரியப் பெருமை உடையவை. நம் திருக்கோயில்களில் உள்ள இறை திருமேனிகள் வேத மந்திரங்களால் உருவேற்றப்பட்டவை. கும்ப தீர்த்தத்தில் சான்னித்தியங்களை, பிம்பத்தில் அபிஷேகித்து, பக்தர்களுக்கு அருள்பாலிக்கச் செய்யும் அதி சூட்சம முறையையே கும்பாபிஷேகம் என்கிறோம். வேத வேள்விகள் இறைவனையும் தேவதைகளையும் அவிர்ப் பாகத்தால் திருப்திப்படுத்தும் நுணுக்கமான தேவகன்மங்கள் ஆகும். இச்செயல்களால் திருக்கோயில் இறை திருமேனிகளில் சான்னித்தியம் பிரகாசிக்கிறது. அப்படிப்பட்ட திருமேனிகளின் முன் சென்று பயபக்தியுடன் வேண்டும் அடியார்களின் வேண்டுதல்கள் யாவும், வேண்டியாங்கு நிறைவேற்றப்படுகின்றன.
இறை திருமேனிகளின் சான்னித்தியத்தை மந்திரங்களாலும், நித்திய நைமித்திக வழிபாடுகளாலும் காப்பதும், மேம்படுத்துவதும் சமயச் சான்றோர்களின் கடமையாகும். இது, வரங்கள் வேண்டி ஏங்கிக் கிடக்கும் பல்லாயிரம் கோடி பக்தர்களின் நலன் சம்பந்தப்பட்டது. இது விஷயத்தில் கவனக்குறைவோ, மரபு மீறலே ஏற்படுத்திப் பக்தர்களுக்குப் பலன் கிடைக்காதபடிக்கு ஆக்கி, அவர்களின் தெய்வ நம்பிக்கையைப் பாழ்படுத்திவிடக் கூடாது.
வேதம் பொதுவானது. தனியொரு பிரிவினருக்கு என்றில்லாமல், தெய்வத்திற்கே உரிய மொழியில் வேதங்கள் உள்ளன. “வேதங்கள் இறைவனே அருளியவை” என்பதே நம் சைவத்தின் அசைக்க முடியாத நம்பிக்கை. இறைவன் அருளிய வேதங்களில் இறைவனே போற்றப்படுகிறான். “தன்னை ஒப்பார் பிறர் இல்லாமையால் தாமியற்றிய வேதங்களில் இறைவன் தன்னைத் தானே புகழ்ந்து கொண்டா” என்று, 300 ஆண்டுகளுக்கு முன்னரே கங்கைவரை சென்று, காசியில் சைவமும் தமிழும் பரப்பிய அருட்கவிஞர் ஸ்ரீ குமரகுருபர சுவாமிகள் அதற்குக் காரணம் சொல்கிறார்.
தமிழர்கள், ஆதியிலிருந்தே வேதங்களைப் போற்றி வந்துள்ளனர். மறை (வேத) வழக்கம் இல்லாதாரை “மாபாவிகள்” என்றே நம் சைவம் கடிந்து பேசுகிறது.
“வேதத்தில் உள்ளது நீறு”, “வேதம் நான்கினும் மெய்ப்பொருளாவது நாதன் நாமம் நமசிவாயவே” என வேதத்தை ஏற்றுப் போற்றும் சைவத்தின் முதல் ஆச்சார்யர் திருஞானசம்பந்தப் பெருமான், “வேத வேள்வியை நிந்தனை செய்துழல் ஆதமில்லி அமனொடு தேரரை”, “ஆகமத்தொடு மந்திரங்க ளமைந்த சங்கதபங்கமா…….. ஆகதர்” என்றெல்லாம் வேதாகமங்களை வெறுத்த சமண சாக்கியர்களைப் பதிகந்தோறும் பத்தாவது பாடலில் சாடிப் பாடியுள்ளமையும், “மாசுமெய்யர் மண்டைத்தேரர், குண்டர், குணமிலிகள், பேசும் பேச்சை மெய்யென்றெண்ணி யந்நெறி செல்லன்மின்” என்று நமக்கு அறிவுறுத்தி யுள்ளதையும் எண்ணிப் பார்க்க வேண்டும்.
சமயங்கள் யாதாயினும் அதன் மரபுகளைக் கடைப்பிடிப்பதே அச்சமயிகளின் கடமை. அதில் மாறுபடுபவர்கள் அச்சமயத்திலிருந்து நீங்கியவராவர்.
“அனுச யப்பட் டதுஇது வென்னாதே
கனிம னத்தொடு கண்களும் நீர்மல்கிப்
புனித னைப்பூவனு னூரனைப் போற்றுவார்
மனித ரில்தலை யான மனிதரே.”
– திருநாவுக்கரசர்.
கி.மு. ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்த நூலாகிய தொல்காப்பியத்தைக் கேட்டு அங்கீகரித்தவர் என்று அதன் பாயிரத்தில் “அதங்கோட்டாசான்” என்பவரை, பாயிரம் பாடிய தொல்காப்பியரின் ஒரு சாலை மாணாக்கராகிய பனம்பாரர் குறிப்பிடுகிறார். அதில் அவர் அதங்கோட்டாசானை “நான்மறை முற்றிய அதங்கோட்டாசான்” எனக் குறிப்பிடுகிறார். சதுர்வேத பண்டிதராகக் கி.மு. ஏழாம் நூற்றாண்டிலேயே சேரநாட்டுத் தமிழர் ஒருவர் விளங்கியிருந்தார் என்பதை நாம் மறக்கக்கூடாது. தொல்காப்பியமும் வேதத்தை “அந்தணர் மறை” என்றே குறிப்பிடுகிறது.
இடைச்சங்க காலத்துப் பாண்டிய மன்னனாகிய முதுகுடுமிப் பெருவழுதி, வேத வேள்விகள் பல செய்வித்தமையால் “பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி” என்ற சிறப்புப் பெயர் பெற்றான்.
தமிழின் மிகப் பழம்பெரும் அறநூலாகிய திருக்குறளும் “அந்தணர் நூ”, “ஓத்து” என்று வேதத்தைச் சொல்கிறது; “அவிஉணவு” என்று அவிர்ப்பாகத்தை – வேள்வி உணவைச் சொல்கிறது. திருக்குறள் “அறுதொழிலோர்” என்று குறிப்பிடுவதில் உள்ள ஆறு தொழில்களில், “வேதம் ஓதுதல், வேதம் ஓதுவித்தல், வேத வேள்வி செய்தல், வேத வேள்வி செய்வித்தல்” என்பன அடங்கும். திருக்குறளைத் “தமிழ் மறை” என்கிறோம். “மறை என்ற சொல் வடமொழி வேதத்தையே குறிக்கும். ஆகையினால் “தமிழ்” என்கிற முன் ஒட்டுச் சேர்த்துச் சொல்கிறோம்.
சங்க இலக்கியங்களாகிய பத்துப்பாட்டு, எட்டுத்தொகை நூல்களில் அக்காலத்தில் வேத வேள்விகள் பரவலாக நடந்தமைக்கான சான்றுகள் பல உள்ளன.
காப்பிய இலக்கியமாகிய சிலப்பதிகாரத்தில், கண்ணகியின் திருமணம் வேத முறைப்படி, “மாமுது பார்ப்பான் மறைவழி காட்ட நடந்தது” என்று வருகிறது. கண்ணகி கோட்டத்திற்குச் சேரன் செங்குட்டுவன் வேத விதிப்படி குடமுழுக்குச் செய்வித்தான்; அத்திருவிழாவில் வேள்விச் சாலைக்கு மாடல மறயோனும் செங்குட்டுவனும் சென்ற காட்சி இளங்கோவடிகளால் விவரித்துச் சொல்லப்படுகிறது.
இவையெல்லாம் ஆயிரத்து எழுநூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட ஆயிரம் ஆண்டுகளில், தமிழ் நிலத்தில் – தமிழரின் வாழ்வில் வேதங்கள் – வேள்விகள் கொண்டிருந்த தொடர்புகள் பற்றிய ஆவணக் குறிப்புகள். தமிழில் வேதங்கள் என்றோ, தமிழில் வேள்விகள் என்றோ கூறுவதற்குச் சான்றே இல்லை.
தேவாரங்கள் வேதசாரங்கள். அவை கைகாட்டுவது வேதங்களி – ஆகமங்களை – வேத வேள்விகளை. திருமுறைகளில் வேத வேள்விகள் பற்றிய நூற்றுக்கணக்கான புகழுரைகள் உள்ளன. வேத வேள்விகளை நிந்தனை செய்வதை பெரும் குற்றமாகவே நம் திருமுறைகள் அறிவிக்கின்றன. அப்படிச் செய்பவர்களைப் புறச்சமயத்தார்களாகவே அவை புறந்தள்ளுகின்றன. திருமுறைகளில் மிகப் பழமையானது எனப்படும் திருமந்திரம், “வேதத்தைவிட்ட அறம் இல்லை” என்றதுடன், வேதம் பற்றித் தர்க்கவாதம் செய்தல் கூடாது எனவும் எச்சரிக்கிறது. வேதம், ஆகமம் பற்றித் தனித் தலைப்பிட்டே திருமூலர் கொண்டாடுகிறார். தன்னை நன்றாகப் படைத்தது, சிவனை நன்றாகத் தமிழ் செய்வதற்காக என்று குறிப்பிட்ட அவர், வேதங்களைப் புகழ்ந்ததை மட்டும் கண்டும் காணாமற்போவது எப்படி முறையாகும்?
தமிழருக்கென்று தனியொரு வேள்வி இருந்ததாக எவ்விதச் சான்றும் இல்லை. சமயாசாரியர்கள், சந்தானாசாரியர்கள் போன்ற அருளாளர்கள் வாழ்ந்த காலங்களில் தமிழில் வேள்வி, தமிழில் கும்பாபிஷேகம் என்றெல்லாம் மரபை மாற்றி யாரும் பேசவுமில்லை, செய்யமுற்படவும் இல்லை. எனவே அவை “மரபு மீறல்” எனச் சுட்டிக்காட்ட வேண்டிய தேவை, அவர்களுக்கு எழவில்லை.
நாம் பேசுவது தமிழ். திருஞானசம்பந்தப் பெருமான் பாடிய திருமுறைப் பாடல்கள், “திருநெறிய தமிழ்” என்றும், அது இறைவன் தனது வாக்கென்றும் குறித்துள்ளதை எண்ணிப் பார்க்க வேண்டும். பாடுவார்க்கும் கேட்பார்க்கும்; அவர்க்கும் தமர்க்கும், இம்மைக்கும் மறுமைக்கும் நற்பயன் உண்டென்றும்; எல்லியும் பகலும் இடர் இல்லை என்றும், எல்லாப் பேறுகளும் கிட்டுமென்றும் அருளியுள்ளதை எண்ணிப் பார்க்க வேண்டும். திருமுறையைக் கொண்டு வேள்வி செய்ய யாண்டும் அருளியதில்லை. திருஞானசம்பந்தப் பெருமான் அனல்வாதப் புனல்வாதங்களால் திருநெறியத் தமிழ்த் திருமுறைகள் “வெந்தழலில் வேகாது, வெள்ளத்தால், போகாது” என்று மெய்ப்பித்துக் காட்டிய பின்னும், திருமுறைகளை குண்டத்திலும் குடத்திலும் செலுத்துவது நெறியல்லா நெறி என்று உணர வேண்டும். இறைவன் திருச்செவியில் நேரே சென்று சேர்ந்து பயனும் அளிக்கும் தமிழை – திருமுறைகளை ஊடகங்கள் வழி செலுத்துவதுதான் தமிழுக்கும் திருமுறைக்கும் பெருமையா? என்று எண்ணிப் பார்க்க வேண்டும். இவ்வாறெல்லாம் சொல்வது இடையாயினார்க்கு, மறைகள் நிந்தனை சைவ நிந்தனைபொறா மனத்தினார்க்கு.
ஆங்கிலக் கல்வியை உயர்த்திப் பேசினால் அப்படிச் சொல்டவரை, யாரும் “தமிழ்த் துரோகி” என்று சொல்வது இல்லை. “தமிழும் வடமொழியும் சைவத்தின் இரு கண்கள்; திருமுறைகளும் வேதங்களும் நம் கண்மணிகள்” என்று ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக இருந்துவரும் மரபைச் சொன்னால், சிலர் தமிழ்ப் பற்றில்லாதவர்கள் என்ற ஆதாரவிரோத வார்த்தைகளை அள்ளிவிடுகிறார்கள்.
திருமுறைகள் ஓதுவதற்கு உரியன. அப்படித்தான் திருமுறை ஆசிரியர்களே நமக்கு உத்தரவிட்டிருக்கிறார்கள். திருமுறை ஓதினால் நிச்சயம் பயன் உண்டு. வேதங்களில் வேள்விச் சடங்குகள் உள்ளன. அந்தத் தேவை உள்ள இடங்களில் அதைத்தான் பயன்படுத்த வேண்டும். இவையெல்லாம் தெரிந்துவைத்துக் கொண்டும் தமிழ்ப் பற்று என்னும் போர்வையில் புகுந்து கொண்டு, வசதிக்காக – புகழுக்காக – பொருளுக்காக – கூட்டம் சேர்ப்பதற்காக – மரபுகளை மறைத்துப் பேசலாமா? செயற்படலாமா?
எதற்கு எது உரியதோ, அதற்கு அதைப் பயன்படுத்த வேண்டும். அறிவாற்றல்களால், ஞானத்தால் பழுத்த நம்முன்னோர்கள் எப்படிச் சொன்னார்களே அப்படி நடக்க வேண்டும்; அவர்களுக்கு இல்லாத தமிழ் பற்று நம்மில் யாருக்கு இல்லை.
வேதங்களை உடன்படுபவர்களுக்குத்தான் “வேள்வி” என்ற சொல்லை உச்சரிக்கவே தகுதி வரும்.
மழையை வரவழைக்க வேள்விகள் உள்ளன. அவை வேத வேள்விகள். ஆனால், சுந்தரமூர்த்தி சுவாமிகள், ஏயர்கோன் கலிக்காம நாயனாருடன் திருப்புன்கூர் தலத்தைத் தரிசனம் செய்தபோழ்து, “வையகம் முற்றும் மாமழை மறந்து வயலில் நீரில்லாத காலத்தில் மழை பெய்ய” பன்னிருவேலி நிலம் இறைவர்க்குக் கொடுத்ததும், பெய்த பெருமழையால் உண்டாகிய பெருவெள்ளத்தை நீக்கி, அதன்பொருட்டு ஏயர்கோன் கலிக்காமரிடம் மீண்டும் ஒரு பன்னிரு வேலி நிலத்தை இறைவன் பெற்றருளினான் என்ற வரலாற்றைத் திருப்புன்கூர்த் தேவாரத்தில் பதிவு செய்துள்ளார்.
பெருமழையைத் தருவித்ததும், நிருத்தியதும் பக்தியே ஆகும். எனவே திருப்பதிகங்கள், ஓதிப் பயன்பெற உரியன என உணர வேண்டும். திருமுறைகளை ஓதினாலே பயனுண்டு என்ற சைவத்தின் அரிச்சுவடித் தத்துவத்திலே நம்பிக்கை வேண்டும். “பெயர்த்தும் பன்னிருவேலி கொண்டு” (ஏயர்கோன் கலிக்காமர் வரலாறு) மழையை நிறுத்தினார் – திருமுறையைக் கொண்டு வேள்வி செய்து மழை பெய்யவில்லை.
வேள்வி செய்ய வேண்டும் என்ற உந்துதல் வந்துவிட்டால் வேத வழிப்பட்டதாக ஆகிவிடும். வேதத்தில் நம்பிக்கையில்லை. ஆனால் வேள்வியில் நம்பிக்கை உண்டு! அதையும் திருமுறைகளைக் கொண்டு செய்வது என்பது செய்யத்தக்க செயல் அல்ல என்பதை உணர வேண்டும். இத்தகு செயல்களை, கடந்த 50 ஆண்டுகட்கு முன்னர்வரை யாரும் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை. வித்தியாசமாக ஏதாவது செய்ய வேண்டும். இத்தகைய “மரபு மீறும் செயல்கட்கு மறைகளோ, திருமுறைகளோ எந்த வழியும் வைக்கவில்லை” என்று தெரிந்தே அவ்வாறு செய்வது, திருமுறைகளில் ஆழங்காற்பட்ட பயிற்சி இல்லாத, தமிழ் ஆர்வம் என்ற மாயைக்கு உட்பட்ட, எளிய மக்களின் பலவீனத்தைப் பயன்படுத்தி, அதன்மூலம் புகழ், பொருள் சேர்க்கும் நோக்கமாகவே கருதப்படும். தமிழ்ப் பற்று – திருமுறைப் பற்று என்று கொள்ளப்பட்டாது.

திருச்சிற்றம்பலம்
தொகுப்பு ;வை.பூமாலை, சுந்தரபாண்டியம்

சிவசொரூபம்

Standard

சிவசொரூபம்

நாம் எப்படி வாழவேண்டும் என்பதை காட்டுவதே சிவசொரூபம்.

சந்திரன் ; ஈசனின் ஜடாமுடியில் உள்ள சந்திரன் நம்முடைய வாழ்வில் வரும் இன்பமும், துன்பமும் மாறி மாறி  வளர்பிறையாகவும், தெய்பிறையாகவும் வரும் என்பதைக் காட்டுகிறது.

கங்கை; தலையில் இருக்கும் கங்கை  எப்போதும் தூய்மையாக இருக்க வேண்டும் என்பதை குறிக்கிறது. ஆசாபாசங்கள் நம்மை அலைக்கழித்தாலும் நம்முடைய மனம் அதனால் கெட்டுப்போய்விடக்கூடாது என்பதை உணர்த்துகிறது.

கழுத்திலிருக்கும் பாம்பும் விசமும் ; ஒவ்வொரு நிமிடமும் ந்ம்மைப் பாவக்குழியில் தள்ள நச்சுப்பாம்பாக சூழ்நிலை சுற்றிக்கொண்டு காத்திருக்கிறது. ஆனால் அந்த விசம் உள்ளே இறங்க நாம் விட்டுவிடக்கூடாது. இதையே பரமனின் கழுத்தைச்சுற்றிய பாம்பும் அவர் விஷத்தை கண்டத்தில் தேக்கி வைத்திருப்பதும் உணர்த்துகிறது.

புலித்தோல்;மிருக உணர்ச்சிகள் நம்மை பாதிக்கலாம். ஆனால் அவற்றிலிருந்து நீங்கிட உயர்ந்த மனித உணர்வுடன் நாம் வாழ வேண்டும் என்பதை புலித்தோல் உடை அறிவுறுத்துகிறது.

உமையொருபாகம்; தேகத்தில் பாதியாக தேவியை வைத்துக் கொண்டிருந்தாலும் சிவபெருமான் காமத்தை வென்றவர். காமனையே எரித்தவர். அதைப் போல நாமும் உலகியலைப் பற்றி லெவ்விக வாழ்வில் பற்றி வாழ்ந்தாலும் காமத்துக்கு அடிமையாகாமல் அதை தூய்மைப்படுத்தி ஆன்மீகமாக வாழ பழகி்க் கொள்ள ேவண்டும்.

சிவம் உணர்த்தும் தத்துவங்கள் ;

1, வாழ வேண்டும்  ; சிவநெறி

2. வளர்க வேண்டும் ; அன்பு

3. ஓங்க வேண்டும் ; பண்பு

4.நிலைக்க வேண்டும் ; தர்மம்

5. ஜெயிக்க வேண்டும் ; சத்தியம்

6. தழைக்க வேண்டும் ; குடும்பம்

பிரபஞ்ச ரகசியம் ;

1. வழிபாடு, 2. தன்னை அறிதல், 3. பரபஞ்ச ரகசியம்

4.உணர்ச்சி  5. மன்னித்தல்   6. மன்னிப்பு கேட்டல்

7. நன்றி உணர்வு  8. தியானித்தல்,  9. சக்கரங்களின் சூட்சமம்

திருச்சிற்றம்பலம்

ஓம் நமச்சிவாய ஓம்

தொகுப்பு ; வை. பூமாலை. சுந்தரபாண்டியம்

மேலும் பல ஆன்மீகத்தகவலுக்கு

http://vpoompalani05.blogspot.in/

https://vpoompalani05.wordpress.com

http://www.vpoompalani05.weebly.com

அர்த்தமுள்ள இந்துமதம் – மனிதாபிமானம்

Standard

அர்த்தமுள்ள இந்துமதம் – மனிதாபிமானம்

 

சக்தியும் சிவனும், அர்த்தநாரீஸ்வரர் கோலத்தில் பாதியாக இருக்கிறார்களே, அவர்களது மீதிப் பாதி எங்கே போயிற்று’ என்று விநாயகப் பெருமானை யாரோ கேட்டார்களாம்.

அதற்கு விநாயகர் `சிவத்தின் பாதிதான் உலகத்தில் ஆண்களாகவும், சக்தியின் பாதிதான் உலகத்தில் பெண்களாகவும் அவதரிக்கிறார்கள்’ என்றாராம்.

இப்படி ஒரு கதை நான் படித்தேன்.

`தெய்வம் மனுஷ ரூபயனா’ என்பது வடமொழி சுலோகம்.

ஒவ்வொரு மனிதனும் பரமனின் அணுவில் தோன்றியவனே!

ஒவ்வொரு பெண்ணும் சக்தியின் அணுவில் பிறந்தவளே!

அதனாலேதான், பிறக்கும்போது குழந்தை வஞ்சகம், சூது, கள்ளம், கபடு அறியாததாக இருக்கிறது.

தெய்வீக அணுவின் அடையாளச் சின்னமே குழந்தை.

ஒவ்வொரு குழந்தையும் தெய்வமாகவே அவதரிக்கிறது!

பிறகு ஏன், சில குழந்தைகள் திருடர்களாகவும், சில குழந்தைகள் அறிஞர்களாகவும், வளர்கின்றன.

இறைவன் உலகத்தில் உணர்ச்சிக்களத்தை உருவாக்க விரும்புகிறான்; உலகத்தை இயக்க விரும்புகிறான்.

எல்லாக் குழந்தைகளும் பிறந்தபோது இருந்தது போலவே வளரும்போதும் இருந்துவிட்டால், உலக வாழ்க்கைக்கு அர்த்தம் இல்லாமற் போய்விடும்.

மாறுபட்ட உணர்ச்சி இல்லை என்றால், மோதல்கள் இல்லாமற் போய்விடும்.

மோதல்கள் இல்லை என்றால், உண்மை என்ற ஒன்று
அறியப்படாமற் போய்விடும்.

`நிழலருமை வெய்யிலிலே நின்றறிமின்’ என்றார்கள்.

நிழலை உணர வெயில் தேவை.

மழையை உணர வறட்சி தேவை.

மனிதாபிமானத்தை உணர மிருகத்தனம் தேவை.

தெய்வீகத்தை உணர மனிதர்கள் தேவை.

உமையும் மகேஸ்வரனும் படைத்த ஆண் பெண்கள் மூன்று வகையாக உருப்பெறுகிறார்கள்.

மிருகம்;

மனிதன்;

தெய்வம்.

கேவலமான உணர்வுக்கும், உயர்ந்த உணர்வுக்கும் நடுவே சராசரி மனிதன் நிற்கிறான்.

மிருகத்தைப் பார்க்கும்போது, மனிதாபிமானத்தின் மீது பற்று வருகிறது.

மனிதனைப் பார்க்கும்போது, தெய்வம் தேவைப்படுகிறது.

எல்லோருமே தெய்வங்களாகி விட்டால், தெய்வத் தத்துவம் செத்துப்போகும்.

எல்லோருமே மிருகங்களாகி விட்டால், தெய்வமே பயனற்றுப் போகும்.

நடுவே நிற்கும் மனிதனே, உலக இயக்கத்தின் பிதாவாகிறான்.

அவனைப் பார்த்தே தெய்வங்களும், மிருகங்களும் உணரப்படுகின்றன.

அதனால்தான் மிருகத்திற்கும் தெய்வத்திற்கும் நடுவே உள்ள மனிதனிடம் ஒரு அபிமானத்தை வளர்க்க இந்துமதம் முயற்சி எடுத்தது.

இதன் பெயரே மனிதாபிமானம்!

இதிகாசங்களில் வருகிறவர்கள் மனிதர்கள் தான். ராமன் என்ற மனிதன் தன் நடத்தையால் தெய்வமானான்.

இராவணன் என்ற மனிதன் தன் நடத்தையால் மிருகமானான்.

பாண்டவர்கள் தெய்வமானார்கள்.

கெளரவர்கள் மிருகமானார்கள்.

மனிதனுக்கு மனிதன் அபிமானத்தை வளர்த்தால் மனிதன் உள்ளத்திற்குள்ளேயே தெய்வம் தோன்றிவிடுகிறது.

மனத்தைக் `கோயில்’ என்கிறார்கள்; அதில் அமர்த்தப்படும் தெய்வமே மனிதாபிமானம்.

ஞானிகள் வானத்திலிருக்கும் தெய்வத்தைக் காண முயலவில்லை; மனிதனுக்குள்ளே தெய்வத்தைக் காண முயன்றார்கள்.

தர்மம்’ என்ற வார்த்தையின் மூலம், கோவிலிலிருக்கும் தெய்வத்தை மனிதனுடைய இதயத்திற்குள் கொண்டுவர முயன்றார்கள்.

அன்புள்ளவன் தெய்வம்.

கருணையுள்ளவன் தெய்வம்.

கற்புள்ளவள் தெய்வம்.

`பண்புள்ளவள் தெய்வம்’ என்று மனித நிலையின் மேம்பாடுகளைத் தெய்வ நிலைகளாகக் குறித்தார்கள்.

அதனால்தான், கீழ்த்தர உணர்வுகளிலிருந்து மனிதனை மேல்நோக்கிக் கொண்டு வருவதற்கு `மதம்’ என்ற ஒரு அமைப்பு தேவைப்பட்டது.

அந்த வகையில், முதலில் தோன்றிய மதம் இந்துமதமே.

சராசரிக் கடமைகளில் இருந்து மனிதனை அப்புறப்படுத்தாமல், அவன் இருக்கும் இடத்தையே கோவில் ஆக்க முடியும் என்று காட்டியது இந்து மதம்.

மழையை வரவழைப்பவளும், வாழை மட்டையை எரியச் செய்பவளும் மட்டுமே பத்தினியல்ல.

கணவன் கண்களில் மழை வராமலும், அவன் உள்ளத்தில் கனல் எரியாமலும் பார்த்துக் கொள்பவளே பத்தினி.

அத்தகைய பத்தினி இருக்குமிடம் குடிசையாயினும் அது கோயிலாகி விடுகிறது.

வெறும் கையில் விபூதியை வரவழைப்பவன் ஞானியல்ல; வெறும் உள்ளத்தில் விவேகத்தை வளர்த்துக் கொள்பவனே ஞானி.

வளர்த்த விவேகத்தைப் பயனுள்ள வகையில் விநியோகிப்பவனே விஞ்ஞானி.

இவர்கள் ஆண்டவன் வகுத்த சாலையையே அறியக் கூடியவர்கள்; எந்தப் பயணத்தையும் நிர்ணயிக்கக் கூடியவர்கள்.

அதனால்தான், மற்ற ஆத்மாக்களைவிட அவர்கள் மகாத்மாக்களாகக் காட்சியளிக்கிறார்கள்.

ஆகவே, இருக்கும் இடத்தைக் கோயிலாக்குவது மனிதாபிமானம். அந்த மனிதாபிமானத்தை உருவாக்குவது மதாபிமானம்.

அந்த வகையில், மற்ற மதத்திற்கு இல்லாத தனித் தன்மை இந்து மதத்திற்கு உண்டு.

`இத்தனை தடவை கோயிலுக்குப் போய், இத்தனை முறை நீராடினால்தான் புண்ணியம்’ என்று எந்தத் தத்துவமும் சொல்லவில்லை.

அவை நம்முடைய ஆத்ம திருப்திக்காக நாம் ஏற்படுத்திக் கொண்டவை.

குடும்பத்தைக் கோவில் ஆக்கிக்கொள்ள முடியாதவர்கள் துயரங்களைக் கொட்டி அழுவதற்காக ஏற்படுத்திக் கொண்ட இடங்களே, கோயில்கள்.

மனத்தைக் குளிப்பாட்டி மகேஸ்வரனைக் காணச் சக்தியற்ற உள்ளங்கள், உடலைக் குளிப்பாட்டி உமாபதியைக் காண ஏற்படுத்தப்பட்டவையே பொதுக் குளங்கள்.

அடக்க ஒடுக்கத்தோடு ஆயிரக்கணக்கானவர்களைச் சந்திப்பதால், மனோதத்துவப்படி அந்த அடக்கம் பிறர்க்கும் வரும் என்பதைக் காட்டுவதற்காகவே, தேர்த்திருவிழாக்கள்.

தனிமையில் ஒருமுகப்படுத்த முடியாத மனது, சந்நிதானத்தில் ஒருமுகப்படுத்தப்படுகிறது.

சிந்தனைக் குழப்பங்களில் ஆழ்ந்துவிடாமலிருக்கத் தேங்காய் உடைப்பதிலும், தீபாராதனை காட்டுவதிலும் சிந்தனை திருப்பி விடப்படுகிறது.

குறைந்த பட்சம், மனிதனை மனிதனாக வைப்பதற்கே இந்துமதம் பெருமுயற்சி எடுத்தது.

எல்லோரும் சங்கராசாரிய சுவாமிகளாகி விட்டால், உபதேசத்திற்கு என்ன மரியாதை?

ஆனால், வசதியுள்ளவர்கள் பாரியாகலாம், பச்சையப்பராகலாம், அழகப்பராகலாம்.

மன நிலையில் தெளிவுள்ளவர்கள் தலைவர்களாகலாம்.

உடல் நிலையில் வலுவுள்ளவர்கள் தொண்டர்களாகலாம்.

ஒன்றும் முடியாதவர்கள், நான்கு சுவர்களுக்குள் அடங்கியுள்ள தங்கள் குடும்பத்தை நாணயமான முறையில் காப்பாற்றலாம்.

எறும்பைக்கூட மிதிக்காத அளவுக்குக் கொல்லாமை; இருப்பதைப் பகிர்ந்து கொடுக்குமளவுக்கு வள்ளல் தன்மை; மனிதாபிமானத்தை இப்படி வளர்க்கிறது இந்து மதம்.

இயலாமையிலும் திருடாமையைப் போதிக்கிறது இந்துமதம்.

மந்திரிக்குப் பதவி போனால் வீட்டைக் காலி செய்கிறான்.

மனிதன் பதவி போனால் உலகைக் காலி செய்கிறான்.

ஆனால், உயிருள்ளவரை ஒவ்வொரு மனிதனும் மனிதப் பதவியில் இருக்கிறான்.

மந்திரிப் பதவி தவறு செய்தால் விசாரணைக் கமிஷன் போடலாம்; மனிதப் பதவி தவறு செய்தால் மகேஸ்வரன்தான் விசாரிக்க வேண்டும்.

அந்த நீதிமன்றத்தில் மனிதன் கைகட்டி நிற்காமல் இருக்க, இகலோகத்திலேயே அவனது தஸ்தாவேஜுகளைச் சரி செய்து கொடுப்பதே இந்துமதம்.

அது சொல்லும் மனிதாபிமானத்தின் சுருக்கம் என்ன?

நன்மை செய்தவனுக்கு நன்றி காட்டு; தீமை செய்தவனை மறந்துவிடு.

நீ முடிந்தால் நன்மை செய், தீமை செய்யாதே. ஒவ்வொரு மனிதனும் இதைக் கடைபிடிக்க ஆரம்பித்தால் பகையும் நோயும் இல்லாத சமுதாயம் உருவாகும்.

அந்தச் சமுதாயத்தை உருவாக்குவதே இந்துமதத்தின் நோக்கம்.

இன்று வரையிலே நிரூபிக்கப்பட்டுள்ள ஒரு உண்மை `ஒரு நல்ல இந்து நல்ல மனிதனாகத்தான் இருப்பான்’ என்பதே.

திருச்சிற்றம்பலம்
ஓம் நமசிவய
தொகுப்பு ; வை.பூமாலை, சுந்தரபாண்டியம்

சிவபெருமானும் ஐந்துக்கும்

Standard

 • சிவபெருமானுக்கும் ஐந்துக்கும் பல தொடர்புகள் இருக்கின்றன. அவற்றுள் சில…
 •  
 • பஞ்சாட்சரம்
 •  
 • நமசிவாய – தூல பஞ்சாட்சரம்
 •  
 • சிவாயநம – சூக்கும பஞ்சாட்சரம்
 •  
 • சிவயசிவ – அதிசூக்கும பஞ்சாட்சரம்
 •  
 • சிவசிவ – காரண பஞ்சாட்சரம்
 •  
 • சி – மகா காரண பஞ்சாட்சரம்
 •  
 • சிவமூர்த்தங்கள்
 •  
 • பைரவர் – வக்கிர மூர்த்தி
 •  
 • தட்சிணாமூர்த்தி – சாந்த மூர்த்தி
 •  
 • பிச்சாடனர் – வசீகர மூர்த்தி
 •  
 • நடராசர் – ஆனந்த மூர்த்தி
 •  
 • சோமாஸ்கந்தர் – கருணா மூர்த்தி
 •  
 • பஞ்சலிங்கத் தலங்கள்
 •  
 • முக்திலிங்கம் – கேதாரம்
 •  
 • வரலிங்கம் – நேபாளம்
 •  
 • போகலிங்கம் – சிருங்கேரி
 •  
 • ஏகலிங்கம் – காஞ்சி
 •  
 • மோட்சலிங்கம் – சிதம்பரம்
 •  
 • பஞ்சவனத்தலங்கள்
 •  
 • முல்லை வனம் – திருக்கருகாவூர்
 •  
 • பாதிரி வனம் – அவளிவணல்லூர்
 •  
 • வன்னிவனம் – அரதைபெரும்பாழி
 •  
 • பூளை வனம் – திருஇரும்பூளை
 •  
 • வில்வ வனம் – திருக்கொள்ளம்புதூர்
 •  
 • பஞ்ச ஆரண்யத் தலங்கள்
 •  
 • இலந்தைக்காடு – திருவெண்பாக்கம்
 •  
 • மூங்கில் காடு – திருப்பாசூர்
 •  
 • ஈக்காடு – திருவேப்பூர்
 •  
 • ஆலங்காடு – திருவாலங்காடு
 •  
 • தர்ப்பைக்காடு – திருவிற்குடி
 •  
 • பஞ்ச சபைகள்
 •  
 • திருவாலங்காடு – இரத்தின சபை
 •  
 • சிதம்பரம் – பொன் சபை
 •  
 • மதுரை – வெள்ளி சபை
 •  
 • திருநெல்வேலி – தாமிர சபை
 •  
 • திருக்குற்றாலம் – சித்திர சபை
 •  
 • ஐந்தொழில்கள்
 •  
 • படைத்தல்
 •  
 • காத்தல்
 •  
 • அழித்தல்
 •  
 • மறைத்தல்
 •  
 • அருளல்
 •  
 • ஐந்து தாண்டவங்கள்
 •  
 • காளிகா தாண்டவம்
 •  
 • சந்தியா தாண்டவம்
 •  
 • திரிபுரத் தாண்டவம்
 •  
 • ஊர்த்துவ தாண்டவம்
 •  
 • ஆனந்த தாண்டவம்
 •  
 • பஞ்சபூதத் தலங்கள்
 •  
 • நிலம் – திருவாரூர்
 •  
 • நீர் – திருவானைக்கா
 •  
 • நெருப்பு – திருவண்ணாமலை
 •  
 • காற்று – திருக்காளத்தி
 •  
 • ஆகாயம் – தில்லை
 •  
 • இறைவனும் பஞ்சபூதமும்
 •  
 • நிலம் – 5 வகை பண்புகளையுடையது (மணம், சுவை, ஒளி, ஊறு, ஓசை)
 •  
 • நீர் – 4 வகை பண்புகளையுடையது (சுவை, ஒளி, ஊறு, ஓசை)
 •  
 • நெருப்பு – 3 வகை பண்புகளையுடையது. (ஒளி, ஊறு, ஓசை)
 •  
 • காற்று – 2 வகை பண்புகளையுடையது. (ஊறு, ஓசை)
 •  
 • ஆகாயம் – 1 வகை பண்புடையது. (ஓசை)
 •  
 • ஆன் ஐந்து
 •  
 • பால்
 •  
 • தயிர்
 •  
 • நெய்
 •  
 • கோமியம்
 •  
 • கோசலம்
 •  
 • ஐங்கலைகள்
 •  
 • நிவர்த்திக் கலை
 •  
 • பிரதிட்டைக் கலை
 •  
 • வித்தைக் கலை
 •  
 • சாந்திக் கலை
 •  
 • சாந்தி அதீத கலை
 •  
 • பஞ்ச வில்வம்
 •  
 • நொச்சி
 •  
 • விளா
 •  
 • வில்வம்
 •  
 • கிளுவை
 •  
 • மாவிலங்கம்
 •  
 • ஐந்து முகங்கள்
 •  
 • ஈசானம் – மேல் நோக்கி
 •  
 • தத்புருடம் – கிழக்கு
 •  
 • .அகோரம் – தெற்கு
 •  
 • வாம தேவம் – வடக்கு
 •  
 • சத்யோசாதம் – மேற்கு
 •  
 • ஐந்து நிறங்கள்
 •  
 • ஈசானம் – மேல் நோக்கி – பளிங்கு நிறம்
 •  
 • தத்புருடம் – கிழக்கு – பொன் நிறம்
 •  
 • அகோரம் – தெற்கு – கருமை நிறம்
 •  
 • வாம தேவம் – வடக்கு – சிவப்பு நிறம்
 •  
 • சத்யோசாதம் – மேற்கு – வெண்மை நிறம்
 •  
 • பஞ்ச புராணம்
 •  
 • தேவாரம்
 •  
 • திருவாசகம்
 •  
 • திருவிசைப்பா
 •  
 • திருப்பல்லாண்டு
 •  
 • பெரியபுராணம்
 •  
 • இறைவன் விரும்ப பக்தகள் செய்யும் ஐந்து
 •  
 • திருநீறு பூசுதல்
 •  
 • உருத்ராட்சம் அணிதல்
 •  
 • பஞ்சாட்சரம் ஜெபித்தல்
 •  
 • வில்வ அர்ச்சனை புரிதல்
 •  
 • திருமுறை ஓதுதல்
 •  
 • பஞ்சோபசாரம்
 •  
 • சந்தனமிடல்
 •  
 • மலர் தூவி அர்ச்சித்தல்
 •  
 • தூபமிடல்
 •  
 • தீபமிடல்
 •  
 • அமுதூட்டல்
 •  
 • பஞ்ச பிரம்ம மந்திரங்கள்
 • ஓம் தனியொளி தலைவா போற்றி ( ஓம் ஈசானமூர்த்தியே நம)
 • ஓம்உயிரொளி பிரானே போற்றி ( ஓம் தத்புருஷ வக்தராயநம)
 • ஓம் அவிரொளி இயவுள் போற்றி (ஓம்அகோர இருதயாய நம)
 • ஓம்உமையொரு கூறா போற்றி ( ஓம் வாமதேவ ஹற்யாய நம)
 • ஓம் மன்னொளி முதலே போற்றி ( ஓம்சத்யோஜாத மூர்த்தியே நம)
 •  
 • திருச்சிற்றம்பலம்
 • தொகுப்பு ; வை.பூமாலை, சுந்தரபாண்டியம்

யார் பெரியவர்?

Standard

யார் பெரியவர்?

அவ்வையாருக்கு புலமை கர்வம் இருந்தது. அதை உணர்த்த முருகன் நடத்திய திருவிளையாடல்இது. அவ்வை நடந்து வந்ததின் சோர்ந்து ஒரு மர நிழலில் அமர்ந்தார். மரத்தின் மேலே ஆடு மேய்க்கும் சிறுவன் ” பாட்டி சோர்வு நீக்க பழம் சாப்பிடுகிறீர்களா? என்றான். சரி என்றார் அவ்வை. உடனே அவன் பாட்டி சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா? என குறும்பாகக் கேட்டான். அவ்வை குழம்பினாள். இருப்பினும் சுடும் பழம் சுடாத பழம் பற்றி இவனிடம் நாம் சந்தேகம் கேட்டால் நம் புலமைக்கு இழுக்கு என்று கருதி , அவன் பறித்து போடட்டும் என்றிருந்தார். சிறுவன் பழுத்த பழத்தை போட்டான். கீழே விழுந்த பழத்தில் மண் ஒற்றிக் கொண்டிருந்ததை அதை அவ்வை ஊதினார். பாட்டி ரொம்பவும் பழம் சூடாக இருக்கிறதா? இப்படி ஊதிக்கொண்டிருக்கிறீர்களே என்று நகைத்தான். அவ்வைக்கு புலமை கர்வம் அந்த கணமே ஒழிந்தது. அப்பா , என் கர்வம் ஒழிந்தது என்று கூறினார். சிறுவனாக இருந்தவன் முருகனாக தோன்றி அவ்வையே உங்களுக்கு இருக்கும்அறிவே பெரிதென நினைத்ததை திருத்த செய்த சிறு குறும்பு இது என்றான். இந்த உலகத்தில் தான்தான் பெரியவன் என்று பலர் அகந்தையில் இருக்கின்றார்கள் உண்மையில் உலகில் பெரிவர்கள் என்பவர்கள் இறைவனையே வணங்கி இறைவனையே நினைத்துக்கொண்டிருப்பவர்களே, இது பற்றி ஒரு பாட்டு பாடு என்றார் முருகன். அவ்வை பாடினார். அந்த பாட்டின் கருத்து இது.

 

உலகில் மிகப்பெரியது இந்த உலகம் தான்

இந்த உலகமோ பிரம்மாவால் படைக்கப்பட்டது எனவே பிரம்மா பெரியவர்

பிரம்மா திருமாலின் தொப்பில் குழியில் தோன்றினார் எனவே திருமால் பெரியவர்

திருமாலை கடல்தான் தாங்கிக் கொண்டிருக்கிறது,எனவே கடல்தான் பெரியது

கடலை அகத்தியர் உள்ளங்கையில் அடக்கினார், எனவே அகத்தியர் பெரியவர்

அகத்தியர் சிறு மண்குடத்தில் அடங்கியவர் எனவே மண் குடம் பெரியது

மண்குடமோ பூமியிலுள்ளது எனவே பூமி பெரியது

பூமியை அதிசேடன் என்ற பாம்பு தாங்கிக் கொண்டுள்ளது எனவே பாம்பு பெரியது

அந்த பாம்பு உமையம்மையின் மோதிரத்தில் உள்ளது எனவே உமையம்மைதான் பெரியவர்

அந்த உமையம்மையோ சிவனாரின் பாதியாக ஒடுங்கி உள்ளார் எனவே சிவன்தான் பெரியவர்

அந்த சிவனோ அடியார்களின் உள்ளத்தில் உள்ளார்.

எனவே இறைவனையே சர்வ காலமும் நினைத்து வணங்கும் அடியார்களின் உள்ளத்ததில் குடிகொண்டிருக்கும் அடியார்களே பெரியவர்கள், அடியார்களின் பெருமையே உலகில் சிறந்தது, பெரியது

திருச்சிற்றம்பலம்

தகவல் : பிரதிலிப் ஆன்மீக மலர்

எது கெளரவம்?

Standard

எது கெளரவம்?
நம்மைவிட உயர்ந்தவர்களைப் பார்த்து பொறாமைப் படாமலும், நம்மைவிட தாழ்ந்தவர்களைப் பார்த்து அவர்கள் மீது வெறுப்பு ஏளனம் காட்டாமலும், எவராக இருந்தாலும், சமமாக பாவித்து அன்பு செலுத்துவது ஒரு வகை பண்பு நன்று, இத்தகையஇனிய பண்பு நலன்கள் நம் மனத்தின் அடி ஆழத்தில் நீர் ஊற்றுப்போல் இருக்கிறது, நம் மனதில் நாம் சேர்த்துக் கொண்ட போட்டி, பொறாமை, வறட்டுக் கெளரவம், போன்றவை அந்த ஊற்றை மூடி விடுகின்றன. பெரிய மகான்கள், ஞானிகள், குருமார்கள் தொண்டுள்ளம் படைத்தவர்களைப் பாருங்கள், அவர்கள் கொஞ்சம் கூட கவுரவம் பார்க்காமல், ஏற்றத் தாழ்வு காணாமல் சாதி இனம் பேதம் பாராமல் மக்களை மகேசனாக பாவித்து அன்பு காட்டுவார்கள். நமக்கு தான் எத்தனை ஆணவம், அகம்பாவம், வறட்டுக்கெளரவம் உள்ளது. சக மனிதர்களையே பேதம் பிரித்து பார்க்கிறோம். ஆனால் நம்மை விட மேலான இறைவன் மட்டும் நம்மை பேதம் பார்க்காமல் நமக்கு அருள்புரிய வேண்டும்என ஆசைப்படுகிறோம். இது நியாயம் தானா?

இது பற்றிய சிறிய வரலாற்கு கதையை காண்போம்
பாரதப் போர் முடிவடைந்த தருணம், கிருஷ்ணன் களைபடிந்து தன் கண்களில் ஒளியிழந்து உடல் சோர்உற்று காணப்பட்டார், இதற்கு காரணம் , பாரதப் போருக்காக , துரியோதனனும் அர்ச்சுனனும் கிருஷ்ணனிடம் நாடியபோது, கிருஷ்ணனிடமிருந்து துரியோதனன் தனக்கு கிருஷ்ணனின் அனைத்து சேனைகளையும், அர்ச்சுனன் தன்னையும் பெற்றார்கள், இறுதியில் வெற்றியும் கண்டனர் பாண்டவர் வம்சவழியினர், தனது படைகள் போரில் மடிந்தன, இந்த பாவம் அவரைத் தாக்கியது, இதன் பொருட்டு கிருஷ்ணன் ஒரு விருந்துக்கு ஏற்பாடு செய்தார், விருந்தில் எல்லோரும் கலந்து கொண்டனர். அப்போது விருந்துண்பவர்களிடம் கிருஷ்ணன் ஒரு வரம் கேட்டார், அதற்கு யாவரும் சம்மதம் தெரிவித்தனர். திடீரென்று விருந்து முடிந்தவுடன் கிருஷ்ணன் விருந்துண்டவர்களின் இலையை எடுத்துக் கொண்டிருந்தார் அதை எல்லோரும் தடுத்தனர். அதற்கு கிருஷ்ணன் எனக்கு தாங்கள் எல்லோரும் வரம் கொடுத்துள்ளீர்கள் அதனை மறக்கக் கூடாது. அதுதான் இது, என்றார். எனவே தான் நானே இலையை எடுக்கிறேன் என்றார். இச்செயல்கள் முடிந்தவுடன் கிருஷ்ணன் உற்சாகம் கொண்டவராக காணப்பட்டார். அவர் முகத்தில் அழகு கலை பிறந்தது. தன் பாவம் நீங்கியது நான் ஒவ்வொரு இலையை எடுக்கும் போது பாவம் நீங்கி புண்ணியம் கிடைத்தது. உண்ண உணவு கொடுப்பதைவிட உண்ட இலையை எடுப்பதில் பாவம் விலகி புண்ணியம் பெருகிறது என்பதை எல்லோருக்கும் விளக்கினார். இதனை உணர்த்தவே இச்சம்பவம் உருவாக்கப்பட்டது. நாம் வறட்டு கெளரவம் சாதி இனம் ஏழை செல்வ ஏற்றத்தாழ்வு பார்க்காதிருக்கவே இந்த நிகழ்வை நடத்தி உணர்த்தினார் பகவான்.
திருச்சிற்றம்பலம்