திருமூலரும் திருமந்திரமும் – உபதேசம் 20 எந்தையும் தாயும்

Standard

திருமூலரும் திருமந்திரமும் – உபதேசம் 20
எந்தையும் தாயும்
எம் தாய் எல்லையற்ற மகாசக்தி அவளை உபாசனா சவுகரியம் கருதி, அவள் இயற்றும் தொழிலுக்கேற்ப அல்லது அவர்கள் பிரியத்திற்கேற்ப பேதப்படுத்தி வழிபடுகிறார்கள், அவளே திருமகள் , அவளே கலைமகள், மலைமகள், எல்லாம் மும்மண்டலங்களின் தலைவி, என்பதால் அவள் ஈசனுடன் வேறுபடாதிருப்பதால் திரிபுரசுந்தரி, பிரிப்பின்றி விளங்கி ஐந்தொழில் புரிகிறாள்.
திரிபுரையே ஓம் எனற பிரணவத்தின் உள்ளொளியாகவும், மந்திரமாகவும், மூர்த்தியாகவும் அவற்றைக் கடந்தும் விளங்குகிறாள என்கிறார் திருமூலர்,
அவள் பேரழகி, வானவடிவினள், அநேக நிறத்தனள், தன்னைநினைப்பவர் நெஞ்சில் நிலைத்தருப்பவள், மகேசுவரனின் சக்தியாய் கருநிறம் காட்டுவாள், உலகத்தை காக்கும் செவ்வொளி வீசுவாள், அன்புடன் தழுவி அறிவை வழங்குவாள், திரிபுரை – முப்புரநாயகி பேரழகி என்பதால் அவள் சுந்தரி, வானவடிவினள் என்பதால் அந்தரி, நினைப்பவர் நெஞ்சில் நிலைத்திருப்பதால் அவள் மனோன்மணி.
அவளே இராசேசுவரியாய் சிவந்த பட்டுடுத்தி மார்பில் கச்சணிந்து காலில் சிலம்பணிநது மலர் அம்பும்அரும்பு வில்லும் தாங்கி அங்குச பாசத்துடன் கரிய நீல நிற குண்டலத்துடன் காட்சியளிப்பாள், தியானத்தில் வசியமானவள். அன்னை திருபுரை உயிர்கள் ஈடேறவேண்டும் என்பதற்காகவே உயிர்களுடன் கலந்து நிற்பாள், அவள்மாசற்ற அழகு வாய்ந்தவள், ஆதியானவள் ஞானச்சுடர் வீசும் கண்கள் அவளுடையவை. எத்திக்கிலும்இருப்பவற்றை தன்பக்கம் இழுக்கும் ஈர்ப்பு தன்மை கொண்டவள், அவளை சுத்தவித்ததியாதேவி என்பார் சித்தர்கள்.
அவளை யறியா அமரரு மில்லை
அவளன்றி செய்யும் அருந்தவ மில்லை
அவளன்றி ஐவரால் ஆவதொன் றில்லை
அவளன்றி ஊர்புகுமாறறியேனே. என்கிறார் திருமூலர்
ஒளிமண்டலமான தேவியை உணராத தேவரில்லை. அவளை முன்னிட்டு கொள்ளாது தவமேதுமில்லை, படைத்தல்,காத்தல், அழித்தல் அருளல், மறைத்தல் என ஐந்தொழில்கள் செய்யும் பிரமனாதி ஐங்கடவுளாரலும் ஆவது ஒன்றுமில்லை. அவளை அறியாது திருவடிப் பேறு காணும் வழியும் இல்லை.
அவள் பரவெளியில் ( வான்கடந்து) விளங்குவது பராசக்தி, எத்தனை வடிவெடுத்தாலும், எத்தனை பெயர் படைத்தாலும், அவளோடு சிவனோடு இணைந்தே செயல்படுபவள், அந்த மகாசக்தியின் திருவுளப்பாங்கில் இயங்குகின்ற அன்ட சராசங்களும் அனைத்து உயிரினங்களும்,
அவளை அறிவ வடிவமாகவும் ஆனந்த வடிவமாகவும் ஞானியர் காண்பர். அவள் யாவற்றையும் தாங்கி நிற்கும் ஆதிபராசக்தி. ஊழிதோறும் புவன்ம் காத்து புண்ணியம் தருபவள் அவளே.
சித்தர்கள் அவளுடைய நடப்பாற்றலுக்காக பரை என்பர் வனப்பாற்றல் கண்டு பராபரை என்பர். அந்த கரணம் நான்கையும் ( மனம்,புத்தி, சித்தி, அகங்காரம்,) செயல்பட செய்வதால் ஸ்ரீவித்யை என்றும், மாறா இளமை கொண்டதால் அவள் வாலை ” வாலையடி சித்தருக்குத் தெய்வம்” என்பார்கள்
உச்சிட்ட தளத்தில் விளங்கும் பராசக்தி மனோன்மணியை உள்ளத்துள் நிறுத்தும் வழியை அறிந்தவர் எத்தனைபேர்? நான் பற்றற்றவனாக இருந்தேன், எனது இயல்பு நோக்கி அன்னை எனக்கு பக்குவமளித்து சிவகதி காட்டினாள்,தன் ஒளியில் என்னை ஒன்றாக்கி கொண்டாள் என்கிறார் திருமூலர்
அவள் பிணவத்தி, ஐந்தொழிலுக்கும் தலைவி பச்சை நிறத்தவள், ஐங்கடவுளரும் ( சதாசிவர்,மகேசுவர், உருத்திரர், திருமால், நான்முகன், ) அவளுடைய அம்சம், ஹ்ரீம் என்கிற மந்திர பீஜத்தில் அவள் வீற்றிருக்கிறாள்,என்கிறது இந்த பாடல்
ஒங்காரி என்பாள் அவளொரு பெண்பிள்ளை
நீங்காத பச்சை நிறத்தை யுடையவள்
ஆங்காரி ஆகியே ஐவரைப் பெற்றிட்டு
ரீங்காரத்துள்ளே இனிது இருந்தாளே,
அன்னையை பூசிக்கும் வழிமுறை: வாசமலர்களும் வழிபாடு செய்ததற்கான நறுமணப் பொருட்களும் புதிய ஆடைகளும் , இசை முழக்கமும் திருவைந்தெழுத்து மந்திரமும் கொண்டு செய்யப்படும் பூசையை அவள் விரும்புவாள்,
தையல் நாயகியான தலைவியை பணிந்தால் பிறவிப்பணி அண்டாது,
என்னை இயக்குகின்ற இணையற்ற தலைவி அவள் தன்னை இயக்க ஒருவரில்லாதவள், என்னுடைய ஆணவம், கன்மம், மாயை, அகற்றி என்னை விரும்பத்தக்கவனாய் ஆக்கி வைத்தாள் என்கிறார் கீழ் கண்ட பாடல் மூலம்:
இனியதென் மூலை இருக்கும் குமரி
தனியொரு நாயகி தானே தலைவி
தனிப்படு வித்தனன் சார்வு படுத்து
நனிபடு வித்து உள்ளம் நாடி நின்றானே.
தனக்கு முற்பட்டதாய் ஒன்றும் இல்லாமையால் அவள் தொன்மையானவள், அனைத்துக்கும் தானே காரணமாக, தன்கொ காரணம் இல்லாதிருப்பவள், ஒளிகளுக்கு மூலமான பேரோளி, இன்பத்தில் பேரின்பம், அவள் அமைதியையும் சிவசிந்தையையும் அருள்பவள், அந்த மங்கல குணமுடைய இறைவி என்னுள் பிரிப்பின்றி விளங்குகிறாள். பாடல்: ஆதி அனாதி, அகாரணி,காரணி………….
படிப்பறிவால் உண்டாகும் அகந்தை நீக்கி பற்றக்களை அகற்றிட, முதல்வியின் செவ்வொளி வீசும் கருணை முகம் நம்முன் விளங்கி நிற்கும் ஆன்மாக்களை பக்குவம் செய்யும், பராசக்தியை தரிசிப்பவர்க்கு முகப்பொலிவு உண்டாகும், நாடாளும் மன்னரும் வசமாகி நிற்பர், நாயகியின் திருவடியை பற்றினால் தெளிவு உண்டு. இன்பமும் துன்பமும் கலந்த நடைமுறை வாழ்வில் நாளும் இன்பமே விளைய நல்லருள் புரிவாள் அவள், காமம், வெகுளி மயக்கம் என்கிற மும்மலங்களை அவளால் நீங்கும் . அவளை வணங்கினால் உள்ளத்தில் மெய்பொருள் விளங்கும், மண்ணிலும் நீரிலும் காற்றிலும், ஒளியிலும் வானிலும் கண்ணின் மணியிலும் உடலிலும் அவளை காணலாம், அவள் வழியிலேயே நாம் செயல் படுகிறோம், சக்தியின் வடிவம் தாய், தாயாயிருப்பது சக்தி.
எங்கும் வியாபித்திருப்பது வானம் அவளே, தானே அனைத்து பொருளாகி தன்னுள் அனைத்தையும் அடக்கியிருப்பவள் அகில அண்டங்களையும் அவளே ஆழ்கிறாள், எனவே யாருக்கும் தாயாக ஆனாள் சக்தி
திருசிற்றம்பல்
மேலும் தகவலுக்கு
https://vpoompalani05.wordpress.com,
http://poomalai-karthicraja.blogspot.in,
http://poompalani.weebly.com

Advertisements

திருமூலரும் திருமந்திரமும் – உபதேசம் 19 தகுதி நிர்ணயம்

Standard

திருமூலரும் திருமந்திரமும் – உபதேசம் 19
தகுதி நிர்ணயம்

தான் பக்குவப்பட்டுவிட்டதாய் நம்புகிறான் சீடன் ” உனக்கு இன்னும் பக்கவம் வரவில்லை” என்கிறார் குரு. பக்குவம் என்பது தகுதியாதல் – ஏற்றநிலை அடைதல், தகுதியற்றவன் அபக்குவன். சமையலில் பக்குவம் போல ஆன்மீகத்திலும் அது உண்டு, பக்குவமில்லாத சமையல் உணவுக்கு ஏற்றதல்ல என்பது போல தகுதியற்றவர் ஆன்மீக நிலையை அடையமுடியாது, குருடன் ஒருவன் இன்னொரு குருடனைக் துணையாய் கொண்டால் நிலை தடுமாற குழியில் விழவேண்டும் அவன் பார்வையுள்ள ஒருவனின் பின்னே நடப்பதுதான் பாதுகாப்பு, பக்குவமில்லாத சீடன் அறிவாளி வழங்கும் உண்மையான குருவை தேடிப்போவதில்லை, அறியாமை நிரம்பிய பொய்யரையே குருவாய் கொள்வான் என்கிறது திருமந்திரம்.
பக்குமற்ற சீடனும் பக்குவமில்லாத குருவும் சேர்ந்தால் பாழான இருளில் உழன்று கொண்டிருக்க வேண்டியதுதான், மனம் துடைத்துவிட்ட கண்ணாடியாய் இருக்க வேண்டும், தூசி படிந்த கண்ணாடியில் எதையும் காணமுடியாது. எண்ண மற்றருங்கள், எண்ணங்களைப் பெருக்கி தூசிபடிந்த கண்ணாடி ஆகிவிடாதீர்கள் என்கிறது திருமந்திரம், எண்ணங்களை பெருக்கி கொண்டு போனால் தீமைகள் பெருகும், காமத்தை விரும்புகிறவன் கண்டபடி எண்ணமிடுவான். பாடல் : மனதில் எழுந்தது ஓர் மாயக்கண்ணாடி………………
பக்குவமற்றவன் யார்?
எண்ணுவது ஒன்றாய் சொல்வது பிறிதொன்றாய் , செய்வது வேறொன்றாய் இருப்பவன் அவனிடம் முக்கரணத் தூய்மை இருக்காது, (மனம், வாக்கு, காயம் இவை முக்கரணம் )
பக்குவன் யார்?
சினமயற்று எண்ணமற்று, செயலற்றிருப்பவன், அவன் உண்பதிலும், சுவையறிவதிலும், நாட்டமற்றவன், அவன் தீமை செய்வதில்லை, திருப்தியோ அதிருப்தியோ, அவனுக்கில்லை, அவனிடம் தற்பெருமை கிடையாது,
பக்குவமில்லாதவன் தான் எடுத்தற்கெல்லாம் கோபப்படுவான் எண்ணங்களை பெருக்குவான் செயலில் கருத்தூன்றிருப்பான், பெருந்தீனிப் பிரியன் அவன், நல்லது கெட்டது பாகுபடுத்தி பார்க்கமாட்டான், எதிலும் அதிருப்திக்கு முக்கியத்துவம்அளிப்பான், அவன் சுயதம்பட்ட பேர்வழியாகவும் இருப்பான்,
புறநோக்குடையவர்களே உங்கள் பார்வையை உள்நோக்கி திருப்புங்கள் என்பார் திருமூலர், அவர்கள் உலகியலில் இருந்து விடுபட்டு, உண்மையான பொருளை நாடவேண்டும் என்கிறார், அபக்குவனுக்கு அது சாத்தியமா? முத்தியில் விருப்பம் கொண்டு மும்மலக் குற்றம் ( ஆணவம், கன்மம், மாயை) நீக்கினால் அது சாத்தியமே,
ஞானம் பெறுவதில் மன அறுதியே முதன்மையாய் வேண்டப்படுகிறது, பக்குவம் உள்ளவன் தகுதி உடையவன் , அவன் வேதாகம முறை உணர்ந்து குற்றங்கள் ஏதும் இல்லாத குருவைத் தேடியடைவர், அவர் மூலம் வீடு பேறு பெற தகுதியை அவன் பெறுகிறான்.
அவன் பிறவித் துன்பம் கண்டு அஞ்சுகிறான், அவன் இறைவனின் திருவடியை இடைவிடாது தேடியலையகிறான், உலக வாழ்க்கை அவனுக்கு சலித்து விடுகிறது. இறைவா என் வினைகள் நீக்கி, கவலை போக்கி என்னை உவந்தேற்றி கொள் ” என்பதே அவனுடைய வேண்டுதலாக இருக்கும், நல்ல குருவிற்கு உன்னுடைய பொருளையும் உடலையும் ஏன் உயிரையும் கூட காணிக்கையாய் தரலாம் என்கிறார் திருமூலர். பாடல்: கொள்ளினு நல்ல குருவினை கொள்க……………….
குரு தன்னுடைய உபதேசத்ததின் மூலம் உங்கள்சிந்தையை தூயதாக்கிறார், ஒளிமயமான இறைவன் அங்கே எழுந்தருள்கிறான், அப்போதே சாதகனின் வினைகள் நீங்கி, இறைவனின் திருவடியில் அவனது சிந்தை தங்குகிறது. அவருடைய அருளுக்கு அவன் பாத்திரமாகி விடுகிறான்,
எது அழியும் பொருள் எது அழியாதிருப்பது என்பதை அறிந்து, சிவசக்தி உவந்தேற்கும்படியாய் தன்னை தயார்படுத்திக் கொள்பவேன நல்ல சீடன், அவனே ஞானமுடையவன், அவன் குருவை வழிபடுவதன் மூலம் இறைவனோடு இணைந்து கொள்கிறான்,, நற்பண்பு, வாய்மை, இரக்கம், நல்லறிவு, பொறுமை குருவினடி, நீக்காமை, மெய்யறிவால் இன்பம் பெறும் உணர்வு சிந்தித்து தெளிதல் , அற்புதம் என்பன பக்குவம் உடையானின் தகுதிகள் ஆகும்,
திருச்சிற்றம்பலம் – ஓம்நமசிவாயம்
மேலும் பல தகவல்கள் காண
https://vpoompalani05.wordpress.com,
http://poomalai-karthicraja.blogspot.in,
http://poompalani.weebly.com

சிந்தனைக்கு சில

Standard

சிந்தனைக்கு சில
துன்பம் அறியாமையால் விளைகின்றது
இன்பம் அறிவினால் விளைகின்றது
அமைதியான மனிநலையே ஞானம் எனப்படுகிறது

நம்மைப் பிறர் குறை கூறுவது நமக்கு பிடிக்கவில்லை
அதைப்போலவே நாம் பிறரை குறை கூறாமலிருக்க வேண்டும்

மலருக்கு நறுமணம் அவசியம் தேவை
கனிக்களுக்கு இனிமை அவசியம் தேவை
மனிதனுக்கு ஒழுக்கம் அவசியம் தேவை
விதையின்றி செடி இல்லை
வேர் இன்றி மரம் இல்லை
பால் இன்றி நெய் இல்லை
வினையின்றி துன்பம் இல்லை
ஒரு புனிதம் நிறைந்த புண்ணிய ஆத்மாவினால்தான் மற்றவரகைள புனித்படுத்த முடியும்
கோபம் வரும்போது அமைதியாக மெதுவாகப்பேசி பழகினால் கோபம் கட்டுப்படுத்தப்படும்
எல்லோரும் சுவர்க்கத்திற்கு போக ஆசைப்படுகிறோம், ஆனால் நரகத்திற்கு போவதற்குரிய செயல்களை எல்லாம் தவறாமல் செய்து கொண்டிருக்கிறோம், / காரணம் நல்லது எது ? தீயது எது என்று தெரியாமல் வாழ்வதுதான்
திருசிற்றம்பலம் ஓம்நமசிவாயம்
https://vpoompalani05.wordpress.com,
http://poomalai-karthicraja.blogspot.in,
http://poompalani.weebly.com

உண்மையான ஞானிக்கு உடமைகள் இல்லை

Standard

உண்மையான ஞானிக்கு உடமைகள் இல்லை

படம்
உண்மையான ஞானியான ஒருவர் தன் உடமைகளாக தனக்கென்று இரு வேஷ்டிகள் இரு துண்டுகள்,ஒரு பிச்சைப்பாத்திரம், தண்ணீர்வைக்க ஒரு மண்குடம் மட்டும் கொண்டு வள்ளுவரின் வாக்கிற்கு ஏற்ப மழித்தலும், நீட்டலும் இல்லாமல் உலகம் பழிக்கும் எந்த செயல்களையும செய்யாமல் ஒரு ஓலை குடிசையில் வாழ்ந்து வந்தார், அன்றாடம் சிவாலயம் சென்று தூய்மை செய்வார், மலர் பறித்து மாலை தொடுத்து மூன்று வேளையும் ஆலயம் தொழுவார், நண்பகலிலும், இரவிலும் வீடுகளில் யாசித்து உண்பார், தர்ப்பைப் புற்களின் மீது படுத்துறங்குவார், மக்களை ஏமாற்றி திரிவது இவருக்கு தெரியாத கலை,
இவரைக் காண்பதற்கு அண்டைமாநிலத்திலிருந்து மிக ஆடம்பரமாக வாழ்ந்த ஒருவர் வந்தார், அவரை தம் குடிசைக்குள்வரவேற்று அமரச்செய்தார்,தண்ணீர் கொடுத்து உபசரித்தார், நல்ல அறவுரைகளை கூறினார், இந்த குடிசைக் கண்டு வந்தவர், வியப்படைந்து, ” இவ்வளவு எளிமையான குடிசையில் பொருட்கள் எதுவும் இல்லையே ” என் கேட்டார், அதற்கு ஞானியார் ” உங்களிடம் கூட உடமைகள் ஏதும் இல்லையே ” என்றார், உடனே அண்டைமாநிலத்திலிருந்து வநதவர் ” இங்கே தங்களைக் காண்பதற்காக விருந்தினராக தானே வந்துள்ளேன் , சிறிது நேரத்தில் சென்று விடுவேன் அதனால் எனக்கு பொருட்கள் இங்கே தேவைப்படவில்லை, எனவே நான் எதுவும் என்னுடன் கொண்டுவரவில்லை “என்றார், இதனைக் கேட்ட ஞானியார் ” நானும் இந்த உலகில் விருந்தினராகத்தான் வந்திருக்கிறேன், இங்கேயே நிலையாக இருக்கப் போவதில்லை ” என்று பதில் அளித்தார்,
இவர்களின் உரையாடலின் உட்கருத்து :
உண்மைத்துறவிகள் உடைமைகள் வைத்துக் கொள்வதில்லை, கோடி மக்களின் அறியாமையைப் பயன்படுத்தி சொத்து சேர்ப்பவர்கள் போலிவேட தாரிகள் என்பதை நாம் கண்டு கொள்ளவேண்டும், நாம் எதைக் கொண்டு வந்தோம் எது நமது எதை நாம் இறுதியில் கொண்டு செல்லமுடியும்? மேலும் உடைமைகளைத் துறப்பவர்களே உண்மையான துறவிகள் கடமைகளை துறந்து நாட்டிற்கு பாரமாக இருப்பவர் துறவியர் அல்லர், பிறப்பெடுக்கும் அனைவருக்குமே இந்த உலகம் ஒரு சத்திரம் தான், அந்த காலத்தில் கால்நடைப்பயணம் செய்வதுதான் அதிகமாக இருந்தது, அதற்காக வேண்டி அங்கங்கே நடைப்பயணம் செல்வோர் தங்கிச் செல்வதற்கு என்று சத்திரங்கள் எனப்படும் தங்குமிடங்கள் கட்டிவைத்தனர், நடைப்பயணம் மேற்கொள்பவர்கள் அந்த சத்திரத்தில் ஒரிருநாட்கள் தங்கி இருப்பார்கள், பிறகு தங்களின் இருப்பிடத்திற்கு சென்று விடுவார்கள்,
இந்த உலகமும் ஒரு சத்திரம் தான், நாம் சில வருடங்கள் தங்கி இருப்போம், பிறகு இந்த உலகமாகிய சத்திரத்தை விட்டு போகத்தானே வேண்டும், இதைத்தான் அந்த ஞானியார் இந்த உலகத்திற்கு தான் ஒரு விருந்தினர் என்றார், நூற்றாண்டு வாழ்வோம்என்று எண்ணி வாழ்க்கையை எதிர் பார்த்து நடத்த வேண்டாம், ஆனால் மரணம் எப்போது வேண்டுமானாலும் வரலாம், என்று எண்ணி இருக்கும்போதே நற்காரியங்களை மட்டும் விரைந்து செய்துவிட வேண்டும் , இந்த உலகிற்கு நாம் விருந்தினராகவே வந்துள்ளோம் உடைமைகளைச் சேர்ப்பதே தொழிலாக வாழ்ந்து விடக் கூடாது என்பதை மனத்தில் கொண்டு வாழ்வோம், வளமும் நலமும் பெறுவோம்
திருச்சிற்றம்பலம் – தென்னாடுடைய சிவனே போற்றி – ஓம் நம சிவாய ஓம்
நன்றி : தமிழ் வேதம்
https://vpoompalani05.wordpress.com,
http://poomalai-karthicraja.blogspot.in,
http://poompalani.weebly.com

Aside

மனிதனின் மரணம் எப்போது ? அகத்தியர் அருளிய அபூர்வ குறிப்புகள்…

பிறப்பும், இறப்பும் நம் கையில் இல்லை. ஆனால், இன்னும் கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் நடக்கும் எந்த விஷயங்களும், நம் கையில் இல்லை.

எல்லாம் மாயை என்கிறார்களே , அதைப் போல – காலம் நம்மை வைத்து ஒரு கண்ணாமூச்சி விளையாட்டு நடத்துகிறது என்பதே உண்மை. மனித முயற்சிகள் இருப்பதற்கும், அவன் தலை விதி ஒத்துழைக்க வேண்டும். என்கிறார்கள். உங்கள் வாழ்வில் நடைபெறும் எந்த ஒரு முக்கியமான செயலுக்கும் , உங்கள் செயல் வினைகளே – பின்னிருக்கும். நல்ல படியாக யோசித்து நடந்து இருந்தால் , எத்தனையோ இழப்புகளை நீங்கள் சரி செய்து இருக்கக் கூடும்.

நல்ல மனதுடன், அடுத்தவருக்கு துன்பம் இழைக்காது – ஒரு நிம்மதியான வாழ்வு வாழ முடிந்தாலே , உங்களுக்கு அந்த இறைவனின் ஆசி உண்டு என்று நம்புங்கள். அப்படி இருக்க முடியவில்லை என்றால் , முறையான இறை வழிபாடு
ஆரம்பியுங்கள். நாம் தான் அந்த பரிகாரம் செய்து விட்டோமே, இறைவனை வழிபடுகிறோமே இன்னும் அந்த இறைவன் கருணை காட்ட வில்லையே என்று உடனடி பலனை
எதிர் பார்க்காதீர்கள். முறையான இறை வழிபாடு என்பது , ஒரு மரத்தை நட்டி – அதற்க்கு நீர் ஊற்றி , உரம் போட்டு வருவதற்கு ஒப்பானது. அதி விரைவில் , உங்களுக்கு அதற்குரிய பலன்கள் கிடைக்கும். ஒரு சந்ததிக்கே அதற்குரிய பலன்கள் கிடைக்கும்.

ஆண்டவன் அருளால் , எனக்கு தனிப்பட்ட முறையில் எவ்வளவோ நல்ல சம்பவங்கள் நடந்துள்ளன. வாழ்க்கை முழுவதும் வேதனைப் பட்டு இருக்க வேண்டிய சிலசம்பவங்களில் மயிரிழையில் தப்பித்து , ஆசுவாசப் பெருமூச்சு
விட்டுக்கொண்டு இருக்கிறேன். இதற்க்கு பின்னணியில் இருந்தது வெகு நிச்சயமாக அந்த ஆண்டவன் அனுக்கிரகம் தான். அந்த சக்தியின் மேல் எனக்கு இருந்த நம்பிக்கை , முழு மனதுடன் கூடிய வழிபாடு, சரணாகதி.

அதனால் , கொஞ்சம் கூட நம்பிக்கையை தளர விடாது , உங்கள் மனதை இன்னும் பலப்படுத்துங்கள். நிச்சயம் கருணைமழை பொழியும்.

சமீபத்தில் இணையத்தில் சில தகவல்கள் தேடியபோது – இந்த அரிய தகவல்கள் கிடைத்தன. உங்களிடம் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி . இதை தெரிஞ்சு என்ன பண்ணப் போறோம் ? பின்னாலே எப்போவாது இந்த தகவல் பயன்படலாம்… தெரிஞ்சு தான் வைச்சுப்போமே. உங்களுக்கு ரொம்ப வேண்டியவங்க
யாருக்காவது இந்த அறிகுறி இருந்தால், சீக்கிரம் உயில் ரெடி பண்ணவாது ஒரு சந்தர்ப்பம் அமையுமே.

உண்மை என்று நீங்கள் உணரும் பட்சத்தில், சித்தர்கள் பற்றி மேலும் ஒரு தேடல் உங்களுக்கு அதிகரிக்கலாம்…

மரணம் ஒருவருக்கு இயற்கையில் எப்போது நெருங்க்குகிறது என்பதை – அகத்தியமாமுனிவரின் – நயனவிதி கூற்றின்படி , மரணத்தை நெருங்கியவர்கள் உடலில் என்னென்ன அறிகுறிகள் காணப்படும் என்று சொன்னவற்றில் ஒரு சில தகவல்கள் :

“நாக்குச் சிவந்து முன்பிறந்த
நன்னீரி னிறம்போல் சிவந்திருக்கும்
தேக்கிக் காயும் தாகமுண்டு
தெளிந்தே வேர்வு சிகமென்னே
ஊக்கி உடலும் நொந்திருக்கும்
உலகோர் அறிய உரைத்தோம்
நாம் பாக்குத் தின்னும் துவர்
வாய் பரிந்தே நாளும் ஏலேன்னே”

நாக்கு சிவத்து மூளைக் கட்டுக்கள் முள்போலத் தோன்றி இரத்தம் போலச் சிவந்திருக்கும், காய்ச்சல் குறையாமல் தகிக்கும், அளவுக்கதிகமான தாகம் இருக்கும், உடல் வியர்க்கும் , உடல் முழுதும் வலிப்பது போல் இருக்கும் , பாக்கு தின்பது போல நாக்கில் துவர்ப்புச்சுவை தெரியும், இந்த அறிகுறிகள்
தெரிந்தால் ஏழு நாளில் உயிர் துறப்பார்கள் என்று உலகத்தவர்கள்
தெரிந்துகொள்ள சொல்கிறேன்.

“சிவேத சிவக்கச் சுரமுண்டாம்
சிதற வேர்வை மறுமையுண்டு
நீத நாக்கு பசுத்து முள்ளு
நிறைந்தே வெடித்து ரோகமுண்டாம்
ஓதத்தத் தொண்டை நேரிகுரலாம்
ஒளிசெர்நாளும் பதினைந்தாம்
நாதப் பண்சொல் மொழிமடவாய்
நாடிக் கொள்வாய் நாள்குறியே”

உடல் சிவந்து காணப்படும் சுரம் உண்டாகி , வியர்வை பெருகும், நாக்கு நிறம் மாறி முள் போல் முளைகள் நிறைந்து வெடித்து காணப்பட்டு அதிக வேதனை தரும்,

தொண்டை இறுகி குரல் மாறிவிடும், நாத மொழி பேசும் பெண்ணே இந்த அறிகுறிகள் கண்டால் பதினைந்து நாளில் மரணம் என்று அறிந்து கொள்.

“எண்ணியஅவத்தை சொல்வேன்
இனியகை மார்பும் மூக்கும்
நண்ணிய செவியினோடு
நலம்பெற குளிர்ந்து காட்டி
திண்ணமா உச்சி யங்கி
யாயிடிச் சிலேத்தும மோடி
மண்ணினிக் கடிகை ஐந்தில்
மரணமேன்றறிந்து சொல்லே”

கை, மார்பு, மூக்கு, காது, முதலான உறுப்புக்கள் குளிர்ந்து காணப்படும், உச்சந்தலையில் இடி இடிப்பது போல வலி ஏற்படும், சிலேத்தும நாடி மிகுந்து ஓடும் இவ்வகை அறிகுறிகள் காணப்பட்டால் இந்தப் புவியில் ஐந்து நாழிகையில் மரணம் என்று அறிந்துகொள். ( இரண்டரை நாழிகை என்பது – ஒரு மணி நேரத்தைக்
குறிக்கும் )

“அறிந்தபின் மமர்ந்து வாத
சிலேத்தும மதிக மாகில்
நிறைந்தோர் வார்த்தை தானும்
நேர்பட வெடிப்பாய் பேசும்
சிறந்திடு முகம்வெளுத்து
மார்ப்பது குடில்போல் சென்றால்
மறந்தனார்க்கடி கைதொண்ணுறா
மளவிலே மரண மெய்யே”

பித்த நாடி அடங்கி வாத சிலேத்தும நாடிகள் அதிகரிக்குமானால், நல்ல மொழிகளைப் பேசும் நிலையில் இருப்பவர் வார்த்தைகள் சீற்றத்தோடு அதாவது கோபமானவையாக இருக்கும், முகம் வெளுக்கும், மார்பானது குழல் போல் குறுகும், இத்தகு அறிகுறிகள் தோன்றினால் தொண்ணூறு நாழிகையில் மரணம் என்று அறிந்துகொள்

திருமூலரும் திருமந்திரமும் – உபதேசம் 18 அண்ணலின் அருளால் ஆகிறவை

Standard

திருமூலரும் திருமந்திரமும் – உபதேசம் 18
அண்ணலின் அருளால் ஆகிறவை
சிவனது அருள் சேர்ந்தால்செல்வங்கள் வாய்க்கும், அவனது அருளிருந்தால் நல்ல ஞானம் உண்டாகும், பெருந்தன்மை உண்டாகும், சிவமாம் பெருவாழ்வு உண்டு என்கிறது திருமந்திரம், அண்ணலின் அருள்வேண்டி தலங்கள் தோறும் செலவர் சரியையாளர், ஞானிகளோ தாங்கள் இருக்கிற இடத்திலேயே வழிபாடு செய்து பெரும்பயன் அடைகின்றனர், தங்கள் சரீரத்திலேயே சிவனை அவர்கள் உணர்கின்றனர், நடைமுறை வாழ்வின் நன்மை தீமைகள் நாம் செய்த புண்ணிய பாலங்களின் பலன்கள், வினையாகிய வேரினை அறுத்து தீயவிளைவுகளில் இருந்து தங்களைக் காத்துக் கொள்வர் ஞானிகள்,
“சிவனரு ளாற்சிலர் தேவருமாவர்
சிவனருளாற் சிலர் தெய்வத்தோ டொப்பர்
சிவனருளால் வினை சேரகி லாமை
சிவனருள் கூறில் அச்சிவலோக மாமே, “
சிவனருளால் சிலருக்குத் தேவவடிவம் கிடைக்கிறது சிலருக்கு தெய்வத்தன்மை வாய்க்கிறது, சிலருக்கு வினைகள் சேராது நின்று விடுகின்றன, இது பாடலின் பொருள்
விளக்கின் சுடராய் ஞானம் விளங்குவதும், மண்ணுலகில் ஞானிகளாவதும் விண்ணுலகில் தேவ உருவில் திகழ்வதும் என் அண்ணாலாகிய சிவன் வழங்கிய அருளால் அமைந்தவை என்கிறார் திருமூலர், பாடல்: புண்ணியன் எந்தை புனிதன் இணையடி……..
பிறப்புக்களில் மக்கட் பிறப்பும், தெய்வப் பிறப்பும் சிறந்தனவாகலின் அவற்றை அடைதலையே எடுத்துக் கூறினார்.
இதனால், `உயர்வு யாதும் சிவனருள் இன்றி ஆகாது` என்பது கூறும் முகத்தால் ஞானம் அவனருள் இன்றி வாராமை என்கிறார் திருமூலர் மேலும் மற்றொரு பாடலில் அன்பாகிய தேரில்

காயத்தேர் ஏறி மனப்பாகன் கைகூட்ட
மாயத்தேர் ஏறி மயங்கும் அவை உணர்
நேயத்தேர் ஏறி நிமலன் அருள்பெற்றால்
ஆயத்தேர் ஏறி அவன்இவன் ஆகுமே.

`உடம்பு` என்னும் நிலையில்லாத தேரின்மேல் ஏறி, மனமாகிய பாகன் தன் கைவன்மையைப் பொருத்தி, கண்ட இடங்களில் செல்லச் செலுத்துதலினால் வழியறியாது மயங்குகின்ற உயிர்கள் சிறிதே உணர்வு பெற்றுச் சிவன்மேற் செல்லும் அன்பாகிய தேரில் ஏறிச்சென்று அவனது அருளைப்பெற்றால், அங்ஙனம் அதனைப் பெற்றவரது குழாமாகிய தேரின்மேல் ஏறிச் சீவன் சிவனை அடைந்து அவனாய் விடும்.

காயத்தைத் தேராக உருவகிக்கின்றவர் அதன் இயல்பை உணர்த்தவேண்டி அதனை “மாயத் தேர்“ என்றும் கூறினார். கை, ஆகுபெயர். அன்றி, `கைகூட்டல்` என்பது, கையைப் பொருத்தி ஓட்டுதலாகிய காரியத்தைக் குறித்தது என்றலுமாம். “உணர்“ என்னும் முதனிலைத் தொழிற் பெயரில் `உணர்வால்` என உருபுவிரிக்க. `உணர்ந்த பொருளிலன்றி அன்பு நிகழாது` என்பதனை உணர்த்த, `உணர்வால் நேயத்தேர் ஏறி` என்றார். உணர்வு சிவனை உணர்தற்கு இருவினையொப்பில் நிகழும் சத்திநிபாதம் காரணமாம். “நல்லினத்தி னூஉங்கும் துணையில்லை“l என இன்பத்தை எய்துதற்கு நல்லினம் சாதனமாகக் கூறலின், அதனையும் தேராக உருவகித்தார், “அவன் இவன் ஆமே` என்றதனை, `இவன் அவன் ஆமே` என மாற்றியுரைக்க. இது நிமலன் அருள் பெற்றதன் பயனை விளக்குவதாய் வேறு முடிபாகலின், திணை வழுவும், பால் வழுவும் ஆகாமையறிக.
இதனால், `சிவனருளைப் பெற்றுச் சிவமாவதற்கு முதற்கண் அன்பு வேண்டும்` என்பது கூறப்பட்டது.
https://vpoompalani05.wordpress.com,
http://poomalai-karthicraja.blogspot.in,
http://poompalani.weebly.com

திருமூலரும் திருமந்திரமும் – உபதேசம் 17 தவத்தின் பயன்

Standard

திருமூலரும் திருமந்திரமும் – உபதேசம் 17
தவத்தின் பயன்
தவம் என்றால் விரதம், மனதின் நற்குணம் மூன்றில் இராசத குணத்தில் ஒன்றாகவும், சாத்துவிக் குணத்து ஒன்றாகவும் இது இடம் பெற்றது இராசதத்தில் கூறப்படும் ஞானத்தையும் ஊக்கத்தையும் உள்ளடக்கியது, சாத்துவிகத்தில் பொறுமையையும் மோனத்தையும் தன்னில் கொண்டது தவம், சாத்திரங்கள் தவத்தை புண்ணியத் தோற்றம் நான்கில் ஒன்றாகவும், குறிப்பிடுகின்றன, தவம், ஒழுக்கம் கொடை, கல்வி இவை புண்ணியத் தோற்றங்கள். தவத்தின் மிக்கார் இயல்பு இவையென திருமந்திரம் கூறும்,
“ஒடுங்கி நிலைபெற்ற உத்தமர் உள்ளம்
நடுங்குவது இல்லை நமனும் அங்குஇல்லை
இடும்பையும் இல்லை இராப்பகல் இல்லை
படும் பயன் இல்லை பற்றுவிட்டோர்க்கே ”
சிவத்திடம் மனதை வைத்த உத்தமர்கள் உலகத் துன்பங்களை கண்டு அஞ்சுவதில்லை, அவர்களுக்கு எமபயம் கிடையாது, அவர்கள் வாழ்வது சிவவாழ்க்கை, அதனால் எவ்விதத் துன்பங்களும் அவர்களை அணுகுவதில்லை, சிவனின் நினைப்பால் அவர்கள் இரவென்றும், பகலென்றும் வேறுபடுத்தி அறிகின்ற நிலையில்லை, பொருளின் மீது ப்ற்றில்லை, என்பதால் அவர்களுக்கு விளைவு பற்றியும் கவலை கிடையாது, தங்கள் பிறப்பின் நோக்கத்தை அறிவதோடு பிறப்பை நீக்கும் வழியையும் வியக்கத்தக்கது, எந்த வொன்றிலும் கவனத்தை சிதறவிடாமல் ஏகாந்தத்தில் இருந்து தங்கள் மனதை அவர்கள் இறைவன்பால் வைத்திருப்பர், இந்திராதி தேவர்களே நேரில் வந்தாலும் தங்கள் மனதை மாற்றிக் கொள்ள மாட்டார்கள்,
தவத்தின் தன்மையை அறியவும், தவத்தால் மேன்மை அடையவும் சிவத்தின் அருளை பெற்றிருக்க வேண்டும், தவசீலர்கள் தங்கள் மன உறுதியால் இயைவனை காண்கின்றார்கள், இவர்கள் தவத்தை வாழ்க்கையாய் கொண்டவர்கள், இல்லற ஞானிகள் வாழ்க்கையை தவமாய் கொள்வார்கள்,
திருமூலர் கூறுகிறார் ” நீங்கள் சாத்திரங்கள் கற்பதன் மூலம் பெருமையடையப் பார்க்காதீர்கள், ஒரு கணமேனும் புறத்தே திரிந்தலையும் உங்கள் மனத்தை தடுத்து அகத்தே நோககுங்கள், அகமுகப் பார்வை இறைவனின் அருளோடு உங்களை பொருந்தியிருக்க செய்யும் ” என்கிறார்,
தவம் என்பது ஞானத்தை அடைவதற்கு முயற்சி சமாதி நிலையடையும் தவமெல்லாம் இல்லறத்தில் இருப்பவர்களுக்கு தேவையில்லை, மனதை புலன் வழி போகாது தடுத்து நிறுத்தும் ஆற்றல் உடையவர் தனியொரு இடத்தில் இருந்து தவம் செய்யத் தேவையில்லை, பொறிகளை தன்வழிப்படுத்தி ஒடுங்கி இருப்பதே தவம், மனமாகிய உறையில் இருந்து மதியாகிய வாளையுருவி சினம் போன்ற மாயா சக்திகளை வென்று, சிவத்திடம் வேறுபாடின்றி பொருத்த வேண்டும், பொறிகள் ஐந்தினையும் உலக விசயங்களில் போகவிடாது தடுத்து தவத்தினால் சிவஒளி காணவேண்டும், அதுவே சுயஒளியாகும், பாடல் : மனத்திடை நின்ற மதிவான் உருவி…………
சித்தத்தில் இடையறாது சிவமந்திரம் ஒதி சிமாகும் தன்மையர்க்கு வேறு எத்தவமும் செய்ய வேண்டியதில்லை, சிவனை எண்ணி சிமாதலே தவத்தின் பயன், பாடல் : சிததம் சிவமாகச் செய்தவம் வேண்டாவால்………….
எப்போதுமே உயர்ந்ததையும் சிறந்ததையும் உலக பிரதியெடுத்துவிடும்,அசல் எது? போலி எது? என்று உஙகளால் கண்டு பிடிக்க முடியாமல் போகும் ஆன்மீகத்திலும் போலிகள் உண்டு, போலி ஆசாமிகள் போடுவது சிவவேடமும் அல்ல, தவமும் அல்ல, அவ வேடம், அவம் இழிவானது பயனற்றது, எப்போதும் நிலைத்திருப்பது உண்மை, இடம் தெரியாமல் ஒடி ஒளிவது பொய், அசலுக்குள்ள பொலிவு போலிக்கில்லை,
சிறதளவும் ஞானம் இல்லாமல் தவவேடம் பூண்டு தகாத செயல்களைச் செய்பவர்கள் நாட்டில் உண்டு, தங்கள் செயலால் நாளை தலைகுனிவு ஏற்படுமே என்று அவரக்ளமனக்குனிவு கொள்வதில்லை, ஆன்மீக சமுதாயந்தான்அவர்களுக்காக வெட்கி தலைகுனியும, சொர்க்கத்தைப் பற்றி பேசும் போலி ஆசாமிகள் போய் சேருகிற இடம் நரகம்தான் இருக்கும், அற்ப சுகங்களுக்காக ஆைச்ப்பட்டு போடுகிற வேடம் புண்ணியமாகாது, உண்மையான ஞானம் உள்ளவரே தவத்தின் பயனை அடைவர்,
உண்மையான ஞான வேடம் புனைவதில்லை, போலிகள் தவத்திற்குரிய குண்டலம், உருத்திராட்சம், பாதக்குகறடு, யோகதண்டம் சடை, திருநீறு, அவற்றின் தன்மையை அறிந்திருக்கமாட்டார்கள்,போலிகள் தங்கள் நிலையை நிறுவிக் கொள்ள வாதிடுவார்கள், அசலானவர்கள் எதையும் மூடிமறைக்கின்ற நிரூபிக்கின்ற அவசியம் கிடையாது அவர்கள் எப்போதும் மவுனமாகவே இருப்பார்கள், இதனை திருமூலர் ” யோகிக்கும், ஞானிக்கும் திருநீறு உத்திராட்சம் சடாமுடி, ஐந்தெழுத்து என்கிற நான்கு புறச்சாதங்கள் தேவையில்லை என்கிறார் பாடல் சிஞானிக்கு சிவயோகிகட்கும் அவமான சாதனமாகாது…………..
உண்மை ஞானி நடமாடும்கோயில் தன்பார்வையினாலோ, பரிசத்தாலோ அடுத்தவர்க்கு ஆன்ம பக்குவத்தை அவனால் வழங்க முடியும் – தீட்சத் வழங்க முடியும்
ஆணவத்தை விட வேண்டும் ஆணவத்தால் ஏற்படும்மயக்கத்தை விட்டோழிக்க வேண்டும், செயலற்றிருக்க வேண்டும், மவுனத்தின் சிறப்பை உணர்ந்திருக்க வேண்டும்,அப்போதே நீங்கள்தேடுகிற சிவமாம் இன்பபொருளை அடைய முடியும், என்கிறார் திருமூலர்,