பூம்பாறை குழந்தை வேலப்பர் கோவில்

Standard

பூம்பாறை குழந்தை வேலப்பர் கோவில்

 

இயற்கை அழகு இராணி கொடைக்கானல் வண்ண அழகு நகரில்

இந்தியாவில் உள்ள எல்லா கோவில்களிலும் ஐம்பொன் வெங்கலம் கற்களால் ஆன சிலைகள்தான் உள்ளன. ஆனால் இந்தியாவில் உள்ள இரண்டு கோவில்களில் மட்டுமே நவ பாஷானத்தால் உருவாக்கப்பட்ட அபூர்வமான சிலைகள் உள்ளன, அவை

1, பழனி மலை மீதுள்ள தண்டாயுதபாணி முருகன் சிலை,

2. பூம்பாறை மலையில் உள்ள குழந்தை வேலப்பர் முருகன் சிலை.

உலகிலேய நவபாஷான சிலையை உருவாக்கி பிரதிஷ்டை செய்தவர் மாமுனிசித்தர் போகர் என்ற மாமுனிவராகும்.  இவர் உருவாக்கிய பழனி மலை முருகன் மட்டும் தான் என்று எல்ேலாரும் அறிவர் ஆனாலும் பூம்பாறை முருகன் சிலையும் அவர்தான் நவபாஷானத்தால்உ ருவாக்கியவர் என்பது அறியாத தெரியாத செய்தியும் கூட, அதுபோல் அருள் பாலிப்பதிலும் பழனி முருகன் போன்று அருள் தர வல்லவர் என்பது அந்த கோவிலு்க்கு சென்று அனுபவ ரீதியாக பயன் அடைந்தவர்களுக்குத்தான் தெரியும்.

சுமார் 10/12ம் நூற்றாண்டு வாக்கில் மாமுனி சித்தர் போகர் தமிழ் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். பாண்டவர் வனவாசம் மேற்கொண்டபோது கடைசி 12வது வனமான பழனி கொடைக்கானல் மேற்கு தொடர்ச்சி மலையாகும். பழனி மலைக்கும், பூம்பாறை மலைக்கும் நடுவில் உள்ள யானை முட்டி குகையையில் அமர்ந்து, தான் கற்று வந்த கலைகளை சோதிக்க அதற்கான மூலிகைகள் ராசாயண பொருட்கள் சேகரித்து முதலில் ஒரு முருகன் சிலையை உருவாக்கினார். அந்த சிலையைத் தான் பழனி மலை மீது பிரதிஷ்டை செய்தார். தண்டம் கொண்டு அச்சிலையை உருவாக்கியதால் அதற்கு தண்டாயுதபாணி என்று பெயர் சூட்டினார்.

அக்கோ விலை இறைவனிடம் வேண்டி சிவ பூதங்களால் கோவில் மற்றும் மண்டபகங்களை கட்ட செய்தார் என்பது வரலாறு.

பின்னர் மறுபடியும் சீீனநாட்டிற்கு சென்று பஞ்சபூத சக்திகளை மீண்டும் பெற்று யானை முட்டி குகைக்கு வந்து ஞான நிலையை அடையும் பிரம்மத்தை உணர்ந்து கொள்ளவும் ஆதிபராசக்தியின் துணைகொண்டு குருமூப்பு என்ற அருமருந்தை நிலைநிறுத்தவும் பஞ்சபூதங்களை நிலைப்படுத்தி அதன் மூலம் குருமூப்பு சிலையை உருவாக்கினார், அந்த சிலைதான் பூம்பாறை மலையுச்சியுள்ள சேர மன்னன் தவத்திற்கு பழனி முருகன் திருமண காட்சியளித்து ேசர மன்னனால் கட்டப்பட்ட திருமண மண்டபத்தில் பிரதிஷ்டை செய்தார்.

அருணகிரிநாதர் பூம்பாறை மலைக்கு வந்து முருகனை தரிசிக்க வந்தார். அப்போது இரவு நேரமானதால் கோவில் மண்டபத்தில் தங்கி தூங்கிவிட்டார். அப்போது ராட்சசி ஒருவள் அருணகிரிநாதரை கொல்ல வந்தபோது முருகன் குழந்தை வடிவம் கொண்டு காவியுடை அணிந்திருந்த  அருணகிரி     நாதர்           மீது             ஏறி விளையாடிக்கொண்டிருந்ததைக்கண்டு குழந்தையும் தாயும்தான் தூங்கிக்கொண்டிருக்கிறார்கள் என்று எண்ணி அருணகிரிநாதரைக் கொல்லாமல் சென்று விட்டதாம். ,இதனை தனது ஞான திருஷ்டியால் நடந்த சம்பவத்தை கண்டு குழந்தை வேடம் வந்து தன் உயிரை காப்பாற்றியதால் குழந்தை வேலர் என்று அழைக்கப்பட்டு குழந்தை வேலப்பராக இன்றும் அருள் பாலித்து வருகிறார். அவரின் பக்கத்திலேயலே அருணகிரிநாதருக்கும் சிலையுடன் கோவில் உள்ளது.

வேண்டுவோரரின் பாவ வினைகள் தீர்த்து குழந்தை வடிவம் கொண்டு தன்னை வழிபடும் பக்தர்களை அருள் பாலித்து வருகிறார் குழந்தை வேலப்பர்.

கொடக்கானல் மலை வரும் பக்தர்கள் அருள்மிகு குழந்தை வேலப்பரையும் கண்டு வணங்கி வழிட்டு அருள் பெற அன்புடன் வேண்டுகிறோ ம்.

திருச்சிற்றம்பலம்

அன்புடன் வை.பூமாலை,

மேலும் பல ஆன்மீகத்தகவலுக்கு

https://vpoompalani05.blogspot.in/

https://vpoompalani05.wordpress.com/

Advertisements

ஆதி விநாயகர்

Standard

ஆதி விநாயகர்

விநாயகர் என்றாலே, யானை முகத்தோனாகத் தான், தரிசித்துள்ளோம். அவரை மனித முகத்துடன் தரிசிக்க, திருவாரூர் மாவட்டம் செதலபதி முக்தீஸ்வரர் கோவிலுக்கு தான் செல்ல வேண்டும்.
பார்வதி தேவி, தன் உடலில் இருந்து ஆண் குழந்தை ஒன்றை உருவாக்கி, அதற்கு, ‘விக்னேஷ்வரன்’ என்று பெயரிட்டாள். ஒரு நாள், மனித முகத்துடன் இருந்த விக்னேஷ்வரரை அழைத்து, தன் இருப்பிடத்திற்குள் யாரையும் அனுமதிக்க வேண்டாம் என்று கட்டளை பிறப்பித்தாள். விக்னேஷ்வரன் வாசலில் காவலுக்கு இருந்த போது அங்கு வந்தார், சிவன். அவரை, அன்னையின் இருப்பிடத்திற்குள் அனுமதிக்கவில்லை, விக்னேஷ்வரர். தான் பார்வதியின் கணவர் என்று கூறியும், அனுமதி மறுத்து விட்டார்.
இதனால், சிவனுடன் வந்த நந்தீஸ்வரர், விநாயகருடன் சண்டையிட்டார். அவரையும், மற்ற பூத கணங்களையும் விரட்டியடித்தார், விக்னேஷ்வரன். கோபமடைந்த சிவன், விக்னேஷ்வரனின் தலையை வெட்டி விட்டார். விபரமறிந்து ஓடி வந்த பார்வதி, தன் மகனை உயிர்ப்பிக்க வேண்டும் என்று அழுதாள். தன் பூத கணங்களிடம், ‘வடக்கு நோக்கி யார் படுத்திருக்கின்றனரோ, அவர்களின் தலையைக் கொய்து வாருங்கள்…’ என்றார், சிவன்.
யானை ஒன்று வடக்கு நோக்கி படுத்திருக்க, அதன் தலையைக் கொய்து வந்தனர், பூதக்கணங்கள். அந்த தலையை குழந்தைக்கு பொருத்தி, உயிர்ப்பித்தார், சிவன். அத்துடன், அக்குழந்தையை, தன் பூதக்கணங்களுக்கு தலைவனாக்கி, ‘கணபதி’ என்று பெயர் வைத்தார். மேலும், எந்த பூஜை செய்தாலும், அவரை வழிபட்ட பின் துவங்கினால் தான்,வெற்றி கிடைக்கும் என்ற சிறப்பு அந்தஸ்தை அளித்தார். இதனால், கணபதியை, விநாயகர் என்றனர். ‘வி’ என்றால், வெற்றி; ‘நாயகர்’ என்றால், தலைவன். வெற்றி நாயகன் ஆனார், விநாயகர்.
மற்றொரு வரலாறும் உண்டு. கஜமுகாசுரன் என்பவன் யானை முகத்துடன் அட்டகாசம் செய்தான்; அவனை வென்ற கணபதி, அவனது முகத்தை தனக்கு பொருத்திக் கொண்டதாகவும் தகவல் உண்டு.
விநாயகருக்கு யானை முகம் கிடைப்பதற்கு முன், மனித முக விநாயகருக்கு செதலபதியில் சன்னிதி அமைக்கப்பட்டது.
இந்த ஊருக்கு வந்த ராமபிரான், தன் தந்தை தசரதர் மற்றும் சீதையைக் கடத்திய ராவணனுடன் போரிட்டு மடிந்த, கழுகரசர் ஜடாயு ஆகியோருக்கு சிராத்தம் செய்தார். அவர் பிடித்து வைத்த நான்கு பிண்டங்களும் லிங்கங்களாக மாறின. அவற்றை வணங்கும் நிலையில் ராமர் சன்னிதி ஒன்று பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. மூலஸ்தானத்திலுள்ள சிவன், முக்தீஸ்வரர் எனப்படுகிறார்.
சூரியனும், சந்திரனும் சந்திக்கும் நாளே அமாவாசை; இங்கே இருவரும் இணைந்திருப்பதால், இக்கோவிலை, ‘நித்ய அமாவாசை’ தலம் என்பர். இங்கு, பிதுர் தர்ப்பணம் செய்ய அமாவாசை, திதி, நட்சத்திரம் பார்க்கத் தேவையில்லை. எந்த நாளில் வேண்டுமானாலும் சிரார்த்தம், தர்ப்பணம் செய்யலாம்.
செதலபதி முக்தீஸ்வரர் கோவில் இதுவும் பாடல் பெற்ற சிறப்பு தலமான கோவிலுடன் சேர்ந்தது. திருவாரூர் – மயிலாடுதுறை சாலையில், 20 கி.மீ., தூரத்திலுள்ள பூந்தோட்டம் சென்று, அங்கிருந்து பிரியும் சாலையில், 4 கி.மீ., சென்றால் கோவிலை அடையலாம்.

திருச்சிற்றம்பலம்

ர் கோவிலு

அட்டமா சித்திகள்

Standard

அட்டமா சித்திகள்

சித்தம் என்பது மனமாகும். தன்னிச்சையாகத் திரியும் மனதினை அடக்கி, இறைவனிடம் செலுத்துகின்றவர்கள் சித்தர்கள் ஆவார். சித் – அறிவு, சித்தை உடையவர்கள் சித்தர்கள். “சித்தர்” என்ற சொல்லுக்கு சித்தி பெற்றவர் என்பது பொருள். மருத்துவம், யோகம், சோதிடம், மந்திரம், இரசவாதம் போன்ற அரிய அறிவியலையும் தந்தவர்கள் சித்தர்கள். எட்டு வகையான யோகாங்கம் முலம் எண் சித்திகளை பெற்றவர்கள் சித்தர்கள் ஆவார். அத்தகைய சித்திகளைத் திருமந்திரம் விளக்குகிறது.

எண்வகை சித்திகள்:

1. அணிமா

2. மஹிமா

3. லஹிமா

4. கரிமா

5. பிராப்த்தி

6. பிரகாமியம்

7. ஈசத்துவம்

8. வசித்துவம்

விளக்கம் தரும் பாடல்

“அணுவினும் நுண்ணுருவு கொளல் அணிமாவாம்,அவற்றின்

அதி வேகத்து இயங்கியும் தோய்வற்ற உடல் லகிமா,

திணிய பெருவரை என மெய் சிறப்புறுகை பகிமா,

சிந்தித்த பலம் எவையும் செறிந்துறுகை பிராப்த்தி,

பிணை விழியர் ஆயிரவரொடும் புணர்ச்சி பெறுகை

பிரகாமி,ஈசிதை மாவலியும் அடி பேணி

மணமலர் போல் எவராலும் வாஞ்சிக்கப்படுகை

வசி வசிதை வலியாரால் தடுப்பரிய வாழ்வே!”

நூல் – சிவதருமோத்தரம், சிவஞானயோகவியல், 90 சிவதருமோத்தர உரை மேற்கோள், 16 ஆம் நூற்றாண்டுப் பாடல்.

1. அணிமா:

பெரிய ஒரு பொருளை தோற்றத்தில் சிறிய தாகக்காட்டுவது/ ஆக்குவது.

முடிந்திட்டு வைத்து முயங்கி ஓர் ஆண்டில்

அணிந்த அணிமாகை தான் ஆம் இவனும்

தணிந்த அப் பஞ்சினும் தான் ஒய்யது ஆகி

மெலிந்து அங்கு இருந்திடும் வெல்ல ஒண்ணாதே.

2. லஹிமா:

கனமான பொருளை இலேசான பொருளாக ஆக்குவது

Laghima: becoming almost weightless

ஆகின்ற அத் தனி நாயகி தன்னுடன்

போகின்ற தத்துவம் எங்கும் புகலது ஆய்ச்

சாகின்ற காலங்கள் தன்வழி நின்றிடின்

மாய்கின்றதை ஆண்டின் மால் அகு ஆகுமே.

3. மஹிமா:

சிறிய பொருளைப் பெரிய பொருளாக்குவது.

Mahima: expanding one’s body to an infinitely large size

மெய்ப்பொருள் சொல்லிய மெல் இயலாள் உடன்

தன் பொருள் ஆகிய தத்துவம் கூடிடக்

கைப் பொருள் ஆகக் கலந்திடும் ஓர் ஆண்டின்

மைப் பொருள் ஆகும் மகிமா அது ஆகுமே.

4. பிராப்த்தி:

எவ்விடத்திலும் தடையின்றி சஞ்சாரம் செய்வது.

Prāpti: having unrestricted access to all places

நின்றன தத்துவ நாயகி தன்னுடன்

கண்டன பூதப் படை அவை எல்லாம்

கொண்டவை ஓர் ஆண்டு கூட இருந்திடில்

விண்டதுவே நல்ல பிராத்தி அது ஆகுமே.

5. கரிமா:

இலேசான பொருளை மிகவும் கனமான பொருளாக ஆக்குவது.

Garima: becoming infinitely heavy

ஆகின்ற மின் ஒளி ஆவது கண்டபின்

பாகின்ற பூவில் பரப்பவை காணலாம்

ஏகின்ற காலம் வெளிஉற நின்றது

போகின்ற காலங்கள் போவதும் இல்லைஏ

6. பிரகாமியம்:

வேண்டிய உடலை எடுத்து நினைத்தவரிடத்தில் அப்போதே தோன் றுதல்.

Prākāmya: realizing whatever one desires

அறிந்த பராசத்தி உள்ளே அமரில்

பறிந்தது பூதப் படை அவை எல்லாம்

குவிந்து அவை ஓர் ஆண்டு கூட இருக்கில்

விரிந்தது பரகயம் மேவலும் ஆமே.

7. ஈசத்துவம்:

ஐந்து தொழில்களை நடத்துதல்.

Iṣṭva: possessing absolute lordship

நின்ற சதாசிவ நாயகி தன்னுடன்

கண்டன பூதப் படை அவை எல்லாம்

கொண்டவை ஓர் ஆண்டு கூடி இருந்திடில்

பண்டை அவ் ஈசன் தத்துவம் ஆகுமே.

8. வசித்துவம்

ஏழுவகைத் தோற்றமாகிய தேவ, மானிட, நரக, மிருக, பறப்பன, ஊர்வன, மரம் முதலிய வற்றைத் தம்வசப்படுத்துதல்.

Vaśtva: the power to subjugate all.

தன்மை அது ஆகத் தழைத்த கலையின் உள்

பன்மை அது ஆகப் பரந்த ஐம் பூதத்தை

வன்மை அது ஆக மறித்திடில் ஓர் ஆண்டின்

மென்மை அது ஆகிய மெய்ப் பொருள் காணுமே.

திருச்சிற்றம்பலம்

மேலும் பல ஆன்மீகத்தகவலுக்கு

https://vpoompalani05.blogspot.in/

https://vpoompalani05.wordpress.com/

சித்த மருத்துத்தில் ஒரு காயகல்ப மருந்து ” முப்பு குரு”  / முப்பூ  /  குரு மருந்து ”  பற்றியசிறு குறிப்பு 

Standard

சித்த மருத்துத்தில் ஒரு காயகல்ப மருந்து ” முப்பு குரு”  / முப்பூ  /  குரு மருந்து ”  பற்றிய சிறு குறிப்பு

muppu guru neer

முப்பு அல்லது முப்பு குரு என்பது தமிழ் சித்த மருத்துவம் உயர் வரிசையில் அமைந்த மருந்தாகும் . முப்பு குரு நெய்முப்பு அனைத்து நோய்களையும் குணப்படுத்தக்கூடிய பனேசா சித்த மருத்துவ  மருந்தாகும்,  சித்த மருத்துவ முறையாகக் கருதப்படுகிறது. முப்பத்து  சித்த மருத்துவ ஆராய்ச்சியாளர்கள்  மற்றும்  பின்தொடர்பவர் அல்லது சித்த பயிற்சியாளர் அல்லது அவர்களது தொழில்முறை மற்றும் ஆன்மீக தேடலுக்கான ஒரு இரசவாதிக்கு மிகவும் விரும்பப்பட்ட மருந்தகளி்ன்      இலக்குகளில் ஒன்று.

முப்பு, உயிரின் அமிலம் என அழைக்கப்படுகிறது (கற்பூரம் கர்பா மருண்), ஏனென்றால் அது ஒருவருடைய வாழ்க்கையை நீட்டிக்கக்கூடிய திறனைக் கொண்டுள்ளது. முப்பவு அதன் இருபது செயல்பாட்டிற்கு முக்கியமாக குறிப்பிடப்பட்டுள்ளது, ஒரு தங்கத்தின் அடிப்படை உலோகங்களை தங்கம் மற்றும் மனித அமைப்புகளின் புத்துயிர் ஆகியவை ஆகும். மூப்பு முக்கியமாக யோகிகள் அல்லது சித்தர்கள்  மூலம் புத்துணர்ச்சியையும், அழியாமையையும் அடைவதற்காக பயன்படுத்தப்படுகிறது. இது “தத்துவ வாதியின் கல்” யின் இந்திய பதிப்பாகவும் அழைக்கப்படுகிறது, ஏனென்றால் பாதரசம், தாமிரம் தங்கம் அல்லது வெள்ளி போன்ற அடிப்படை உலோகங்களை மாற்றுவதற்கான திறனைக் கொண்டிருப்பதாக நம்பப்படுகிறது.

Muppu பாதரசத்தை உறுதிப்படுத்துவதற்கும், “rasamani” தயாரிப்பதற்கும் பயன்படுத்தப்படுகிறது, இது திடமான வடிவத்தில் பாதரசம் தவிர வேறு ஒன்றும் இல்லை.  mani, manthira Oushadam மனி, மந்திரா ஓஷதம் கருத்துக்களின் படி பெரு நோய்களை குணப்படுத்துவதில் ரசாமணி பயன்படுத்தப்படுகிறது.

முப்புவை குரு மருந்தாக குரு மருந்து மருந்து என்றும்  உலகளாவிய உப்பு எனவும் அழைக்கப்படுகிறது. ஏனென்றால், முப்பூவின் எந்தவொரு மருந்துக்கும் கூடுதலாக மருந்துகள் பல மடங்காக அதிகரிக்கும். எனவே, முப்பூவின் முறையான தயாரிப்பு முறையை தெரிந்துகொள்வது அல்லது புரிந்து கொள்ளாமல்,   நீண்டகால வியாதிகளுக்கு சிகிச்சையளிப்பதில் வெற்றிகரமான சித்தர் அல்லது சித்த பயிற்சியாளர் இருக்க முடியாது.

சித்தா மருத்துவத்தில்   ஒரு முக்கிய பங்களிப்பாகவும் கருத்துரையாகவும்  முப்பு சுண்ணம்   குறிப்பிடபபடுகிறது.   இது ஒரு  காயகல்ப மருந்து ஆக சித்த மருத்துவ  சிகிச்சையிலும், புற்றுநோய், முடக்கு வாதம், எய்ட்ஸ் மற்றும் பிற நோயெதிர்ப்பு சம்பந்தமான நோய்கள் போன்ற நீண்டகால சிதைவு நோய்களுக்காகவும் பயன்படுத்தப்படுகிறது.

அவரது மருத்துவப் பணியில் சித்தர் நந்தீஸ்வரர், குரு மருந்தின் முக்கியத்துவத்தை பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.

குருக்காணா மூடரப்பா கோடாகோடி

கும்பித்துத் தம்பித்து மாண்டார்கோடி

–நந்தீசர் நிகண்டு 300

யார் முப்பாவை தயாரிக்க முடியும்? சித்தர்களின் கூற்று

தானென்ற அண்டபிண்டக் குருவைச் செய்ய

தவம்வேணுஞ் செபம்வேணுந் தயவு வேணும்

மானென்ற அக்கினியா முறையைக் காண

மதிவேணும் விதி வேணும் வாசம் வேணும்

நானென்ற ஆணவத்தை யடக்கவேணும்

நல்லரிவாற் சாத்திரத்தை உணரவேணும்

–அகத்தியர் முப்புவழலை சூத்திரம்.

எப்படி தாயரிக்கப்படுகிறது?

மூன்று வகை உப்பு சேர்ந்த ஒரு உயரிய தமிழ் சித்த மருந்து. பூநீர் சம்பந்தமான ஓர் வகைப்பிரயோகம்; சல உப்பு , வாயு உப்பு, அக்கினி உப்பு ஆகிய மூன்று வகை உப்பு சேர்ந்தது. முறையே பூநீர் + நவச்சாரம் + வெடியுப்பு ஆகிய இவ்வுப்பின் சம்பந்தாமாயும் செய்யும் ஓர் உப்பு.

முப்பு வின் வகைகள்:

யோக முப்பு  அல்லது ஞான முப்பு Gnanamuppu.

வைத்திய முப்பு Vaithiyamuppu.

வாத(ரசவாதம்) முப்பு Vaathamuppu.

muppu for yoga meditation vaasiyogam

முப்பு  மற்றும் அதன் தயாரிப்பின் முக்கியத்துவத்தை பற்றி பேசும் பல்வேறு சித்தர்களின் இலக்கிய படைப்புகளில் சில.

முப்பூவினாலே முடிக்கலாம் வாதம்

முப்பூவினாலே முடிக்கலாம் யோகம்

முப்பூவினாலே முடிக்கலாம் ஞானம்

முப்பூவை விட்டால் முடியாது பாரே

–சட்டைமுனி குரு சூத்திரம் 20

 

முப்பூ வழலை முடிக்க அறிகிலார்

முப்பூ வழலை முடிக்க வல்லார்க்கு

முப்பூவில் தீட்சை முப்பதிரண்டுடன்

முப்பூவில் சோடசம் மூல்முங் குருவே.

–மச்சமுனி ஞானதீட்சா விதி 100

 

பொற்பாந்த முப்பூவைப் போதம் பொசித்தவர்

கற்பாந்தம் வாழ்வாரடி – குதம்பாய்

கற்பாந்தம் வாழ்வாரடி

வேவாத முப்பூவை வேண்டியுண்டால் பாரில்

சாகாமல் வாழ்வாரடி – குதம்பாய்

சாகாமல் வாழ்வாரடி

–குதம்பை சித்தர்

என்னவே வானத் திடியினி லொன்று

சொன்னதோர் பூமிச் சூலினி லொன்று

கன்னிற மான கடலினி லொன்று

முன்னர் சொன்ன மூன்று முப்பூவே.

–நந்தீசர் சூத்திரம் 30

 

“ஆச்சடா உடம்பிலுள்ள வியாதி எல்லாம்

அனுபோல உண்டிடவே பறந்து போகும்

வாச்சடா தேகசித்தி அதிக மாச்சு

வத்துடனே கூடியுந்தான் வாழ லாச்சு”

–காக புசுண்டர்

 

நேரப்பா அணுப்போல சரக்குக் கெல்லாம்

நிச்சயமாய் பூசியுந்தான் புடத்திற் போடு

வீரப்பா நீறுமடா நவலோகந்தான்

வேதைஎன்ற வித்தையெல்லாம் கைகுல்லாச்சு.

–காக புசுண்டர்

காய கல்பம் வேண்டுவர்களுக்கான முக்கிய பதிவு

திருச்சிற்றம்பலம்

நன்றி ; சித்தா மருந்து வலைத்தளம்

மேலும் பல ஆன்மீகத்தகவலுக்கு

https://vpoompalani05.blogspot.in/

https://vpoompalani05.wordpress.com/

கண்பார்வை பெற  பாடவேண்டிய  பதிகம் 

Standard

கண்பார்வை பெற  பாடவேண்டிய  பதிகம்

திருக்கச்சி ஏகம்பம்  7ம் திருமுறை

 

சங்கிலியாரை விவாகஞ்செய்த சுந்தரமூர்த்திநாயனார் சங்கிலியாரோடு கூடி அவ்வூரிலே வாழ்ந்திருந்தார். இருக்கும் நாளிலே, ஒரு நாள் திருவாரூரிலிருக்கின்ற வீதிவிடங்கப் பெருமானுடைய வசந்தோற்சவகாலம் சமீபித்ததை அறிந்து, “வன்மீக நாதரை இவ்வளவு காலமும் மறந்திருந்தேன்” என்று துக்கித்து அவர்மேலே “பத்திமையு மடிமையையுங் கைவிடுவான் பாவியேன்” என்னுந் திருப்பதிகத்தைப் பாடியருளினார். பின்னொரு நாளிலே அவரை மிக நினைந்து, திருவாரூருக்குப் போகக் கருதி, ஆலயத்திலே புகுந்து சுவாமி தரிசனஞ் செய்துகொண்டு, திருவொற்றியூரை நீங்கியபொழுது, சுந்தரமூர்த்திநாயனாருக்கு, அவர் சபதந்தவறினமையால், இரண்டு கண்களும் மறைந்தன. அப்பொழுது நாயனார் திகைத்து நெடிதுயிர்த்து, “சபதந்தவறினமையால், எனக்கு இது நிகழ்ந்தது” என்று நினைந்து, “இந்தக் கொடுந்துயரத்தை நீக்கும்பொருட்டு நமது கடவுளைப் பாடுவேன்” என்று துணிந்து “அழுக்கு மெய் கொடுன் றிருவடி யடைந்தேன்” என்னுந் திருப்பதிகத்தைப் பாடினார். பாடியும், கடவுள் அத்துயரத்தை நீக்கினாரில்லை

திருவேகம்பத்தை அடைந்து ஏகாம்பரநாத சுவாமியை வணங்கி, “ஆதிகாலத்திலே திருப்பாற்கடலினின்று எழுந்து தேவர்களை வருத்தத் தொடங்கிய ஆலகாலவிஷத்தைத் திருமிடற்றிலடைத்து அவர்கள் அமுதுண்ண அருள்செய்த கருணாநிதியே! சிறியேன் செய்த பிழையைப் பொறுத்துச் சிறியேனுக்குத் தேவரீரைத் தரிசிக்கும் பொருட்டுக் கண்ணைத் தந்தருளும்” என்று பிரார்த்தித்தார். அப்பொழுது கடவுள் இடக்கண்ணை மாத்திரம் கொடுத்து, தமது திருக்கோலத்தைக் காட்ட; சுந்தரமூர்த்தி நாயனார் கண்டு பரவசமாகி அடியற்ற மரம்போல வீழ்ந்து எழுந்து, “ஆலந்தானுகந் தமுதுசெய்தானை”என்னுந் திருப்பதிகத்தைப் பாடி,தனது இடக்கண் பெற்று அங்கு சிலகாலம் வாழ்ந்து வந்தார். சுந்தரர் இடக்கண் பெற்ற தலமாதலால் இவ் இறைவனை வணங்கினால் கண் பார்வை இழந்தோ

ர் கண் பார்வை பெற இப்பதிக பாடல்கள் பாடி நலம் பெறலாம் என்பது சுந்தரர் வாக்கு

இதே அப்பதிகத்தின் முதல் பாடல்

ஆலந் தானுகந் தமுதுசெய் தானை

ஆதி யைஅம ரர்தொழு தேத்தும்

சீலந் தான்பெரி தும்முடை யானைச்

சிந்திப் பாரவர் சிந்தையு ளானை

ஏல வார்குழ லாள்உமை நங்கை

என்றும் ஏத்தி வழிபடப் பெற்ற

கால காலனைக் கம்பன்எம் மானைக்

காணக் கண்அடி யேன்பெற்ற வாறே

நஞ்சினைத் தான் விரும்பி உண்டு, அமுதத்தைத் தேவர்களுக்கு உரியதாக்கியவனும், யாவர்க்கும், முதல்வனும், தேவர்கள் வணங்கித் துதிக்கின்ற பெருமையை மிக உடையவனும், தன்னை நினைப்பவரது நினைவில் விளங்குபவனும், மயிர்ச்சாந்து அணிந்த நீண்ட கூந்தலையுடையவளாகிய, ` உமை ` என்னும் நங்கை, தான் எந்நாளும் துதித்து வழிபடுதலைப் பெற்றமைக்கு முதல்வனும், காலகாலனும் ஆகிய, திருவேகம்பத்தில் உள்ள எம் பெருமானைக் காணுதற்கு அடியேன், கண் பெற்றவாறு, வியப்பு!

இவ்விடத்து, சேக்கிழார், ` விண்ணாள்வார் அமுதுண்ண மிக்கபெருவிடம் உண்ட – கண்ணாளா ` ( தி.12 ஏயர்கோன். புரா. 286) என்று அருளுதலின், ` ஆலந் தான் உகந்து அமுதுசெய்தானை ` என்றதற்கு இதுவே, பொருளாதல் அறிக

` சீலம் ` என்பது, குணம் என்னும் பொருட்டாய், பெருமையைக் குறித்தது. திருவேகம்பத்தில் உள்ள உமையம்மைக்கு, ` ஏலவார் குழலி ` எனப் பெயர் வழங்குதல் இங்கு நினைக்கத் தக்கது. ` என்றும் வழிபட ` என இயையும் ; இனி வரும் திருப்பாடல்களிலும் அவ்வாறு இயைவனவற்றை அறிந்துகொள்க. கச்சி ஏகம்பம், உமையம்மை இறைவனை என்றும் வழிபடும் தலமாய் உள்ளது,

திருச்சிற்றம்பலம்

தொகுப்பு ; வை.பூமாலை, சுந்தரபாண்டியம்

மேலும் பல ஆன்மீகத்தகவலுக்கு

http://vpoompalani05.blogspot.in/

https://vpoompalani05.wordpress.com

http://www.vpoompalani05.weebly.com

ஊழ்வினை சிவனடியார்களை ஒன்றும் செய்யாது

Standard

ஊழ்வினை சிவனடியார்களை ஒன்றும் செய்யாது

“முந்திய வல்வினைகள் தீர்ப்பான் தன்னை” திரு நாவுக்கரசு சுவாமிகள் தி,மு,6

” பண்டை நம் வினை தீர்க்கும் பண்பினர் ” சம்பந்த சுவாமிகள் தி,மு, 2

பல பிறவிகளில் நாம் செய்துள்ள வினை பழவினை, ஊழ் வினை என்று சொல்கிறோம். இந்த ஊழ் வினை உருத்து வந்து ஊட்டும் என்றுசொல்கிறார்கள். சிலப்பதிகாரம் இதற்காகவே எழுந்தது.
ஆனால் கடவுள் நிலையறிந்து அம்மயமான நால்வர் பெருமக்கள் / சமயாச்சாரியார்கள், சிவபெருமானாரை மனம்உருகி வழிபடுவோரைப் பழவினை , ஊழ்வினை ஒன்றும் செய்யாது என்று உறுதியுடன் கூறியுள்ளார்கள்,
ஒருவர் பெற்ற கடனை கொடுத்தேயாக வேண்டும், ஆனால் பொருள் இல்லாதவர் மாதா மாதம் கடன் கொடுத்தவரிடம்வேலை செய்து உழைப்பாலே யே கடனை அடைத்து வருவது போல எனக் கொள்ள வேண்டும். சிவபெருமானாரை மனம் உருகி வழிபாடு செய்தும், உழைப்பால் சிவாலயத் திருத்தொண்டுகள் செய்தும் பழைய ஊழ்வினையை பழைய வினையை கழித்து கொள்ளலாம்.
” கொன்று செய்த கொடுமையால் பல சொல்லவே
நி்ன்ற பாவ வினைகள் தாம்பல நீங்கவே சென்று தொழுமின் ,,,,,,,, கழுக்குன்றமே // சுந்தரர் தி,7

” இறங்கி சென்று தொழமின் இன்னிசை பாடியே ” ….. கழுக்குன்ற பதிகம்

தலைவணங்கிச் சென்று தமிழ் வேதப் பாடல்களை பாடி த் தொழ வேண்டும் , வாய் மூடியவழிபாடு பயனில்லை ,
” நீள நின்று தொழுமின் நித்தலும் நீதியால் ” கழுக்குன்ற பதிகம் தி,மு, 7

நித்தலும் மனம் ஒன்றி வழிபாடு செய்யவேண்டும் , மனதை எங்கோ வைத்து கொண்டு தொழக் கூடாது

” வௌிறு தீரத் தொழுமின் வெண் பொடி யாடியை” / கழுக்குன்ற பதி

அறியாமை நீங்குதற் பொ
ருட்டு திருவெண்ணீறு அணிந்த சிவபெருமானாரை வழிபட வேண்டும் , மற்ற தெய்வங்களுடன் சேர்தது வழிபடக் கூடாது.சிவபெருமானாரே முழுமுதல் கடவுள் என்று உறுதியாக எண்ணி வழிபட வேண்டம்

” புலைகள் தீரத் தொழுமின் புன்சடைப்புண்ணியன் ”
நம்முடைய கீழான ஒழுக்கம் தீர வேண்டும் என்று எண்ணி வழிபட வேண்டும். நம்முடைய குற்றங்கள் எல்லாம் நீங்குதற் பொ
ருட்டு வழிபாடு செய்தல் வேண்டும். நம்முடைய வினைகள் தீர வேண்டும் என்று முழுமையாக எண்ணி பாடியும், தலை வணங்கியும் வழிபடுதல் வேண்டும்.
போலி வேடதாரிகளை நம்பி பெரும் பொருள் செலவு செய்து பொருளற்ற சடங்குளைச் செய்வதால் எந்த விதப் பயனையும் பெற முடியாது வினைகள் நீங்கிடா.

திருச்சிற்றம்பலம்
நன்றி , தமிழ் வேதம்

மேலும் பல ஆன்மீகத்தகவலுக்கு
https://vpoompalani05.blogspot.in/

 

Standard

முத்திரைகள்

முத்திரைகள்

இந்திய துணைக்கண்டத்ததில் பிறந்தவை இம்முத்திரைகள். கைவிரல்களை பயன்படுத்தியே காட்டப்படுவன.நாட்டிய சாஸ்திரத்தில் முக்கிய மானவையாக உள்ளனவாகும். தெய்வங்களின் சிலைகள் திருவுருவப்படங்களில் இந்த முத்திரைகள் இருப்பதைக் காணலாம்
 முத்திரைகள் உடல் நலத்திற்கும் மன நலத்திற்கும் பெரிதும் பயனி்ப்பதாக இருக்கிறது. இந்த முத்திிரைகள் யோகா, தியானங்களில் பயன்படுத்தும் போது கிடைக்கும் பலன்கள் மிக அளப்பரிதாகும்
   சில எளிய முத்திரைகளையும்அவற்றின்பலன்களையும் சற்று பார்ப்போம்.


ஞான முத்திரை;

பெருவிரல் ஆட்காட்டி விரல்
இணைக்கையில்
உள்ள முத்திரை

நினைவு  சக்தி, அதிகரிக்கும்,கவனகுறைவு குறைக்க, மன அமைதி பெற, மன அழுத்தம் விடுபட

வருண முத்திரை

பெருவிரல் , சுண்டிவிரல்
நுனி தொடுவது

உடலின் நீர் சம நிலை மாறினால் அதனால் ஏற்படும் தீய விளைவுகளை தடுக்கும்
நீர் சம்பந்த நோய்கள்தீரும், தோல் சுருக்கம் போக்கும்

சூன்ய முத்திரை


நடுவிரலை மடக்கி பெருவரலின் அடியில் உள் மேட்டில் வைத்து அழுத்தி செய்யும்முறை மற்ற விரல்கள் நீட்டி இருக்க வேண்டும்

காது வலி நீங்கும்,காது சம்பந்தமான உபாதைகள் நீங்கும்

பிராண முத்திரை


மோதிர விரல்,   கடைசி விரல் மடக்கி இதன் நுனியை பெருவிரலால் தொடுதல்

கண் பார்வை , கண் சம்பந்தமான உபாதைகள்  நீங்கும்

அபான முத்திரை

நடுவிரல் மற்றும்மோதிர விரல் மடக்கி  பெரு விரலால் தொ டுதல்

சக்கரை வியாதி, குணப்படுத்த,  மூலம் மலச்சிக்கல் நீங்க


அபான வாயு முத்திரை


அபான முத்திரையுடன் ஆட்காட்டி விரல் நுனியை பெருவிரல்  ஆரம்ப பாகத்தில் வைத்தல்
நடுவிரல் மோதிர விரலால்  ஆட்காட்டி விரலை அமுக்கி தொடுதல்

இதய சம்பந்தமான குறைகள் நீங்கும், வாயு தொந்தரவு குறையும்


லிங்க முத்திரைஇரு கை விரல்களை சேர்த்து பிடித்து இடது கை பெரு விரலை மட்டும் நீட்டிய நிலையில் வலது பெரு விரலால் இடது பெரு விரலை சுற்றி பிடித்து கொள்ளல்

சளி, கபம் கோளாறுகள்  நீங்கும்

மேற்கண்ட முத்திரைகள்  சுமார் 15  முதல் 30 நிமிடங்கள் செய்வது நன்று

தொகுப்பு  வை.பூமாலை சுந்தரபாண்டியம்