கீதை காட்டும் “யோகியின் அடையாளங்கள்”

Standard

கீதை காட்டும் “யோகியின் அடையாளங்கள்”
எவன் எவ்வுயிரிடத்தும் பகைமை இல்லாதவனாய், நட்பு பூண்டவனாய், கருணை உடையவனாய், எல்லாம் என்னுடையது என்ற எண்ணம் இல்லாதவனாய், இன்பத்தையும் துன்பத்தையும் சமமாய் கருதுபவனாய், பொறுமை உடையவனாய், எப்போதும் மகிழ்ச்சி பெற்றிருப்பவனாய், யோகத்தில் விருப்பமுடையவனாய், அடங்கிய மனத்தினனாய், திடமான சித்தம் உடையவனாய், மனத்தையும் புத்தியையும் இறைவனிடம் அர்ப்பணம் செய்தவனாய் உள்ளவனாய், இருப்பவன் இறை பக்தி உள்ளவன், எவனிடமிருந்தும் உலகம் துன்பம் பெறுவதில்லையோ, எவன் மகிழ்ச்சி , சினம், அச்சம், மனக்கிளர்ச்சி, இவற்றினின்று விடுபட்டு விட்டவனோ, அவனே இறைவனுக்கு பிரியமானவன்,
எவன் எதையும் விரும்பாதவனாய், தூயவனாய், சுறுசுறுப்பு உடையவனாய், துன்பம் வரினும், இன்பம்வரினும் ஒரு போதும் துயரப்படாதவனாய், தனது நலனைப் பெருக்குவதற்கு முயற்சி விட்டவினாய், இகழ்ச்சியையும், புகழ்ச்சியையும், சமமாக கொள்பவனாய், மெளனியாகவும், ஆழ்ந்த சிந்தனை உடையவனாய், இருப்பவனாய், கிடைத்ததைக் கொண்டு திருப்தி பெற்று களிப்புடன் இருப்பவனாய், வீடுவாசல் இல்லாதவனாய், யாதும் தன் ஊரே, உலகமே தன் வீடு என்று நினைப்பவனாய், தன் கொள்கையில் திட சித்தம் உள்ளவனாய், இருக்கிறானோ அவனே எனக்கு (இறைவனுக்கு) பிரியமான பக்தன். இவ்வாறு கீதையில் கூறியபடி இவ்வகை மனிதனே யோகி ஆக தகுதியுள்ளவன்
திருச்சிற்றம்பலம்
மேலும் ஆன்மீக தகவலுக்கு
http://vpoompalani05.blogspot.in/
https://vpoompalani05.wordpress.com
http://vpoompalani05.blogspot.in/
http://www.vpoompalani05.weebly.com.

மெய் அறிவே பேரின்பம்

Standard

மெய் அறிவே பேரின்பம்
மனிதனாக பிறந்த எவனுக்கும் வினை விடாது பற்றும், அந்த வினைப்பயனை, துயரங்களை பிறவி யெடுக்க வைக்கும் வினை இந்த ஸ்தூல சரீரத்தினால் சாதனை புரிந்தால், சுட்சும சரீரத்தில் , பிறவி மறுபடியும் பிறக்காது செய்து விடும். சிந்திக்கும் ஆற்றல் வாய்ந்தவன் மனிதன், அப்படி சிந்திக்கத் தெரிந்த மனிதனின் சிந்தனை முழுவதும் செயலாவதில்லை. கோடிக்கணக்கான மக்களுள் சிலரது சிந்தனை வளம்தான் செயலாகிறது,அத்தகைய செயற்கரிய செயல்கள் புரிந்தவர்கள்தான் ஞானியர்களும் சித்தர்களும்.
இப்பிரபஞ்ச இயக்கத்தில் சிறந்தது வாயு ஆகும். இந்த வாயு நின்று விட்டால் உலக இயக்கமும் உயிர் வாழும் சீவராசிகளும் தாவர ஐங்கமங்களும் அழிந்து விடும். ஓடும் மனம் ஒடுங்கிவிட்டால் உள்ளம் அமுத கடலாகும். ஒடுங்குவது எங்ஙனம்? அலைபாயும் மனதை அலைய விடாது ஒருநிலைப்படுத்தும் சாதனை யோகமாகும். இதுவே நம்முள் தெய்வீகத் தன்மையை ஏற்படுத்தும்.
மனிதன் மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாைசை ஆகிய மூன்று ஆசைகள் மீது பற்றுக் கொண்டவன். இந்த ஆசையே அவன் உணர்ந்த தெய்வீக அடைய தடையாகும், மண்ணாசை வளர்ந்தால் கொலையில் விழுகிறது. பொன்னாசை வளர்ந்தால் களவில் முடிகிறது, பெண்ணாசை வளர்ந்தால் பாபம் நிகழ்கிறது, மூன்று ஆசைகளையும் அற்றவர்கள் மனிதர்களில் குறைவே ஆகும், ஆகவேதான் பற்றற்ற வாழ்க்கையை இந்து மதம் போதிக்கின்றது.ஆசையில் பற்று இல்லாதவனுக்கு மறுபிறவி இல்லை. அவன்தான் பிறவி பெருங்கடலை தாண்ட முடியும். எனவேதான் அருணகிரி நாதர் திருப்புகழில் மாவேழ் சன்னங்கெட மாயைவிடா மூவேவடனை ” என்று பாடுகிறார், எனவே பிறந்து இந்த உலகில் வாழ்வதற்கு ஆசையே காரணமாகும்.
செல்வம் நிலையான காரணமாக துக்கத்தையே தருகின்றன. எனவே எதிலும் அளவுடன் சம்பாதித்து, அளவுடன் வாழக் கற்றுக் கொள்ளவேண்டும். நேர்மை, ஒழுக்கம், தெய்வ வழிபாடு, பெருந்தன்மை உயிர்களிடம்இரக்கம், போன்ற உத்தம குணங்களுடன் வாழ்பவனுக்கு துன்பம் ஏது? ஒழுக்கத்திலும், அறிவிலும், அன்பிலும் உயர்ந்த பெரியோர்கள் நட்பைப் பெறுவதும், செல்வம் வந்தபோது ெசெருக்கு அடையாமல் தெய்வ திருவருள் பெற்ற மெய் அன்பர்கள் நூல்களை ஆராய்ந்து அதன்படி நடப்பதும், மற்றவர்குளுக்கும் போதிப்பதும், தான் பெற்ற இன்பத்தை மற்றவர்களுக்கும் அளித்து பேரின்ப நலையை அடைய வேண்டும். உத்தம குணத்தவனாய் இருக்க வேண்டும். வீணாக வேண்டாத கேள்விகளை கேட்டு தெய்வத்தை பற்றி எதுவும் புரியாதவர்கள், விதண்டாவாதம் செய்து தானும் குழம்பி, நம்மையும் குழப்பிவிடும் மனிதர்களிடம் பழகாது இருக்க கற்றுக் கொள்ளவேண்டும். எல்லா சீவன்களிடத்தும் அன்பு காட்ட வேண்டும், சீவனிடம் கருனை வந்தால் ஈஸ்வரனிடம் பற்று உண்டாகும், ஈஸ்வரப் பற்றால் ஆசாபாசங்கள் தோசங்கள் அகன்று விடும். ஆசை முதலிய தோசங்கள் அகன்று விட்டால் நிராசை என்ற நிலைபெறும், சீவாத்மாவினை அறியும் தன்மை உண்டாகும். அறிவு வடிவமான பேரின்ப நிலையை அடைந்து துன்பம் ஒழிந்து இன்பம் பெறலாம். அருள் கடாட்சம் பெற்று பேரின்ப ம் அளித்து பேதமற்ற சொரூபமாமனந்தத்தில் அமருவர் என்பது விதியாகும்.
மனிதனுக்கு உயர்ந்த நிலை எய்த பல அறிவான வழிகள் உண்டு. அவை இசையறிவு, இயலறிவு, சுயஅறிவு, ஐயஅறிவு, உடலறிவு, உயிரறிவு, உலகறிவு முதலியன. இவற்றில் மேன்மையான மெய்அறிவை அறிபவனே அழியாத சீவமுத்தியைஅடைகின்றான். அந்த பேரின்ப பெரிய நிலை அடையவது எப்படி? என்று பக்தி மார்க்கத்தில்வாழ்நது முக்தியடைந்த நாயன்மார்கள் சித்தர்கள், ஆழ்வார்கள் வாழ்ந்து காட்டி நமக்கு வழிகாட்டி சென்றுள்ளார்கள். அந்த பக்தி மார்க்கமே முதல்படியாகும், மேன்மையடைய விரும்பும் மனிதனுக்கு சத்ஸங்கம் தேவார இசைப்பாடல்கள், பசனை போன்ற இறை வழிகளே முக்திக்கு வழி வகுக்கின்றன. பக்தியின்று முக்திக்கு வழிவகுக்காது.
பரமார்த்திக்க மார்க்கத்தை கடைபிடித்து, பிறருக்கு போதித்து முக்தி அடைந்த சைவ சமய குரவர்கள் அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆவர்கள், இவர்களின் தேவார பண்ணிசையகளையும் பக்த சேவைகளையும் செய்து மேன்மையடைய வழிகோள வேண்டும். இறைவனுடைய அரிய, பெரிய திருவிளையாடல்களையும்,அடியார்களை ஆட்கொண்ட கதைகளையும் கூறி நம்மை பரவசப்படுத்தி அவ்வழி நடக்க வழிகோழியுள்ளார்கள். அவ்வழியே நடந்தவர்களுக்கு இறைவனே குருபகவானாக வந்து உபதேசித்தார்கள் என்பது உண்மை. இதுபோன்ற அதிசயங்கள் அனேகம் உண்டு.
இறைவனின் கருணையால் பிறப்பது அருள், அன்பின்றி அருள் சுரக்காது. அருளினால் இம்மை மறுமை என்ற இரு பயனும் அடையலாம், ஞானம்பெற்ற மகான்கள் தமக்குரிய நாள் வரும் வரை நம்மோடு நடமாடி நல்ல வழிகாட்டியாக இருந்து பிறவிப் பயனை பெற வழி வகுப்பார்கள். அவர்களை இனம் கண்டு தரிசித்து அவர்களின் அன்பையும் ஆசியையும்இறையருளையும் பெற்றுய்வோம்.
திருச்சிற்றம்பலம் தென்னாடுடைய சிவனே போற்றி
மேலும் பல ஆன்மீகத் தகவலுக்கு
http://vpoompalani05.blogspot.in/
https://vpoompalani05.wordpress.com
http://vpoompalani05.blogspot.in/
http://www.vpoompalani05.weebly.com.

Standard

ஆைசயினால் வரும் துன்பம்
நம்ைம ஆட்டிப்பைடப்பது நம் மனேம. உருவமற்ற இந்த மனம் ெபrய உருவம்
பைடத்த நம்ைம எப்படிெயல்லாம் ஆட்டிப் பைடக்கிறது என்று ேயாசித்துப்
பாருங்கள். மனதுடன் நடத்தும் ேபாராட்டம் என்றும் ஓய்வதில்ைல. விழிப்பு
நிைலயில் மட்டுமல்ல, உறக்க நிைலயிலும் கூட மனதின் ேபாராட்டம் நம்ைம
விட்டு ஒருேபாதும் நீங்குவதில்ைல.
* அைனத்து சாஸ்திரங்களும், ேவதநூல்களும் மனைத அடக்கும்
வழிமுைறகைளேய நமக்கு எடுத்துக் காட்டுகின்றன. மனைத அடக்கும் திைய
ஆண்டவனிடம் ேகட்டுப் ெபற ேவண்டும்.
* உடலுக்கு கிைடக்கும் இன்பத்ைத எவ்வளவு தான் அனுபவித்தாலும்
ஒருவனுக்கு நிரந்தரமான திருப்தி கிைடக்கப் ேபாவதில்ைல. இருந்தாலும், மனம்
அந்தஆைசைய விட்டு விட இடம் தருவதில்ைல.
* காய்ந்த எலும்புத் துண்ைடக் கடித்த நாய், தன் வாயிலிருந்து வழிந்த ரத்தத்ைத
எலும்பிலிருந்து வருவதாக எண்ணி ேமலும் அழுத்தமாகக் கடித்து துன்பத்ைத
அைடயும். அதுேபால் மனிதனும் ஆைசகைளப் ெபருக்கிக் ெகாண்டு துன்பத்ைத
அனுபவிக்கிறான்.
* பாைலவனத்தில் தூரத்தில் ெதrயும் கானல்நீர் அருகில் ெசன்றதும் மைறவது
ேபால, மனதில் வாழ்வில் உண்டாகும் இன்பங்களும் நம்ைம
ஏமாற்றக்கூடியைவேய. அைவ நிரந்தரமானதல்ல

இந்து சமய சம்பிராதயங்கள் 3

Standard

இந்து சமய சம்பிராதயங்கள் 3
இந்து சமய சம்பிராதயங்களில் பெண்கள் கவனிக்க வேண்டிய சில சாஸ்திர சம்பிரதாயங்களாக வழிமுறைகளை வகுத்துள்ளனர், இந்த சம்பிரதாயங்கள் யாவும் இன்றளவும் சில சைவ சமய வகுப்பினர்கள் கட்டாயம் இன்றளவும கையாண்டு கடைபிடித்து வருவதை நாம் காணலாம், இருப்பினும் இன்னும் இலைமறை காய்மறையாக உள்ள சிலவற்றை மங்கையர்கள் கவனத்திற்கு கொண்டு செல்லவேண்டியது அவசியப்படுகிறது,
1) பெண்கள் கணவன் தூங்கிய பின்பு தூங்கி கணவன் விழிப்பதற்கு முன்பு எழுந்துவிட வேண்டும்.
2, சூரிய உதயத்துக்கு முன்பு எழுந்து முற்றத்தில் பெருக்கி பசுஞ் சாணந் தெளித்து கோலமிட வேண்டும்.
3, கோலமிடுவதற்கு மஞ்சள் கலந்த அரிசிமாவு, பச்சிலைப் பொடி, குங்குமம் கலந்த அரிசி மாவு இவற்றால் கோலமிட வேண்டும்,
4, சுபகாரியங்களுக்கு ஒரு கோடும், அசுப காரியங்களுக்கு இரண்டு கோடும் போட்டு கோலம் போடக்கூடாது.
5, பூஜை அறை, சமையறை, சாப்பிடுமிடத்தை நாள்தோறும் கழுவுதல் வேண்டும்
6, அமாவாசை, பெளர்ணமி, கார்த்திகை, மாதப்பிறப்பு வெள்ளிக்கிழமை, பிற விசேச தினங்களில் வீடு முழுவதும் கழுவ வேண்டும்,
7. மண் பாண்டங்களை குளிக்கும் முன்பு தொடக்கூடாது.
8. தாமிரப் பாத்திரங்களை புளியினாலும், வெஙகலம் பித்தளை பாத்திரங்களை சாம்பலாலும் ஈயப் பாத்திரங்களை சாணத்தாலும், எவர் சில்வர் பீங்கான் பாத்திரத்தை அரப்பு பொடியினாலும் சுத்தப்படுத்தவேண்டும்,
9. குளித்த பின்பு தான் குடிநீர் எடுக்க வேண்டும்
10. தண்ணீர் குடத்தை இடுப்பில் வைத்துக் கொண்டு வர வேண்டும் தோளிலும், தலையிலும் சுமக்கக் கூடாது.
11. சூரிய அஸ்தமன சமயங்களில் மாலை நேரங்களில் கைகால் கழுவி கட்டாயம் விளக்கேற்றி வைக்க வேண்டும்
12. உரல் ,அம்மி, முறம், வாசற்படி உலக்கை இவற்றின் மீது உட்காரக் கூடாது.
13, வீட்டுவிலக்கான முதல் 3 நாட்கள் வீட்டு வேலை ஒன்றும் செய்யக்கூடாது. 5வது நாளில் கணவனை வணங்கி விட்டு வீட்டுப் பணிகளில் ஈடுபடலாம், அன்று கணவனோடு சேர்வது சிறப்பு.
14. விருந்து மற்றும் விசேச நாட்கிளில் வாழையில் உணவு படைத்து பரிமாருதல் மிக சிறப்பு
15. வாழையிலையில் அடியில் சிறிது அரிந்துரிட்டு ( தடிமனான தண்டு) கழுவி விட்டு இலையை போட வேண்டும், சாப்பிடுவர்களின் வலதுபக்கம் இலையின் அடிப்பாகமும், இடக்பக்கம் இலையின் நுனிப்பாகம் இருக்கும்படி போட வேண்டும்.
16, எதையும் கையால் படைக்கக் கூடாது.
17, சாதம், கறி, முதலியவற்றை மண்பாண்டத்தில்வைத்தோ, அல்லது அடுப்பில் வைத்த பாத்திரத்தை வைத்தோ படைத்தல் கூடாது.
18. வீட்டுக்கு வந்த புது மறுமகளையும், நோயாளிகள், கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள், வயதானவர்கள் இவர்களை முதலில் சாப்பிட சொல்ல வேண்டும்
19. சாப்பிடும் போது நீர் குடிக்கக் கூடாது. உண்ட பின் தான் குடிக்க வேண்டும்.
20. உணவு அருந்திய பின் குளிக்க கூடாது, மிகவும் தேவைப்பட்டால் 5 நாழிகை (2மணி) கழித்து குளிக்கலாம்
21,ஒருவர் தலையில் முடிந்த பூவைத் தன்தலையில் வைக்கக் கூடாது.
22. தலையில் சூடிய மலரை தானே எடுத்தெரியக் கூடாது
23. கணவரோடு இருக்கும் பெண்கள் தனியாக தாங்கள் மட்டும்விரதம் இருக்கக் கூடாது, கணவரோடு சேர்ந்தே விரதம் இருக்க வேண்டும்.
24. தர்ம சிந்தனை, ஆன்மீக ஆர்வம், தவம், வாய்மை, மன்னித்தல், கருணை, பிறர் பொருளை விரும்பாமை, இக்குணங்கள் பெண்கள் பெரிதும் பின்பற்ற வேண்டிய குணங்கள்.
25. தீபம் ஏற்றுதல்:
காலையில் உதய காலத்திலும், மாலையில் சூரிய அஸ்தமனதுக்கு முன்பும் வீட்டில் விளக்கேற்ற வேண்டும்
விளக்கின் திரி 2 திரியினை இணைத்து ஏற்றுவது உத்தமம், தீபத்தை கிழக்கு முகமாக இருக்கும் படி வைத்து தீபமிடேண்டும். எக்காரணம் கொண்டும் தெற்கு பார்த்து தீபம் ஏற்றக்கூடாது. தீபம் ஏற்றுபவர் எப்போதும் கிழக்கு நோக்கியே இருக்க வேண்டும்.
தீபத்திரிகள் வகைகளும் குணங்களும்
பஞ்சுத்திரி – மங்களம்
வாழைத்தண்டு திரி – புத்திர பாக்கியம்
பட்டு நூல்திரி – எல்லாவித சுபங்களும்
தாமரை நூல் திரி – லட்சுமி கடாட்சம்
எண்ணெய் வகைகள்
நல்லெண்ணை – யமபயம் அகலும்
தேங்காய் , இலுப்பை எண்ணெய் – தேக ஆரோக்கியம்,செல்வம் தரும்
நெய் தீபம் – சகல செளபாக்கியம்
விளக்கு வகை:
வெங்கல விளக்கு – பாவம் தீரும்
அகல் விளக்கு – சக்தி தரும்
குத்து விளக்கு – சகல செளபாக்கியம்
தீபம் ஏற்றிவிட்டு மூன்று சக்திகள் மற்றும் குலதெய்வங்களை மனதில் தியானித்து நமஸ்காரம் செய்ய வேண்டும்.
தீபத்தை வாயால் ஊதி அணைக்காமல் , ஒரு பூவின் காம்பால் அணைக்க வேண்டும்.
சுப மங்கலம்
திருச்சிற்றம்பலம்
மேலும் பல ஆன்மீகத் தகவலுக்கு
http://vpoompalani05.blogspot.in/
https://vpoompalani05.wordpress.com
http://vpoompalani05.blogspot.in/
http://poompalani.weebly.com

நம் உடலே ஆலயம்

Standard

நம் உடலே ஆலயம்
” உள்ளம் பெருங்கோயில் ஊன் உடம் பாலயம்
வள்ளல் பிரானார்க்கு வாய்கோ புரவாசல்
தெள்ளத் தெளிந்தோர்க்கச் சீவன் சிவலிங்கம்
கள்ளப் புலன் ஐந்தும் கான மணிவிளக்கே. ” திருமூலர் திருமந்திரம்,
ஆலய அமைப்பு ஆண்டவன் இருப்பு யாவும் நம்உடலிலேயே உள என்பது இம்மந்திரக் கருத்து. இறைவன் ஆன்மாக்களின் பக்குவம் அறிந்து தேவைகளை கொடுத்து உதவுவதால் வள்ளல் எனப்பட்டான். களை என்னும் சொல்லுக்கு அழகு எனபது பொருள் அச்சொல் காள என ஈண்டு திரிந்தது, நமது மனமே கோவில் அக் கோவிலின் மூலட்டானம் தசையால் ஆன உடம்பு , இறைவருக்கு வாயே கோபுர வாசல், நன்கு அறிந்த ஞானிகட்குஆன்மாவே சிவலிங்கம், மனத்தை திருட்டு வழியில் இழுத்துச் செல்லும் ஐந்து புலன்களும் அழகிய விளக்காகும்.
பக்தியின் பெருக்கு பேரின்ப நிலை அந்த பேரின்பத்தை அடைந்த மகான்கள், தான் காண்பவைகளையெல்லாம் சிவ வடிவமாகவே காண்பார்கள். சேரமான் அரசர், தன் பரிவாரங்களுடன் யானை மீது ஏறி நகர்வலம் வரும்போது, சிவனடியார்களை காண நேரிடும்போது உடனே கீழே இறங்கி ஓடோடி சென்று வணங்கி வரவேற்பார், அப்படிப் பட்ட அரசர் தான் ஒரு மன்னன் என்பதையும் மறந்து உவர்மண் சுமந்து வரும் வண்ணான், மழையினால் நனைந்த , அவன் தலையிலிருந்து உவர்மண் மழைக்கு கரைந்து, தேகம் முழுவதும் விபூதி பூசியது போன்ற தோற்றம் கண்டு, யானை மீது வந்த அரசர், அடியார் தான் வருகின்றார் என்று யானையை விட்டு இறங்கி ஓடோடி சென்று அவரை வணங்கினார், அவ் வண்ணான் ” ஐயா நான் ஒரு அடி வண்ணான் நீங்களே மன்னர் ” என்று அலறி கூனிக் குறுகி நின்கின்றான், அம்மன்னன் தேவரீர் திரு நீற்று வடிவத்தை அடியேனுக்கு நினைப்பித்தீர்களே, ” அடியேன் அடி சேரன் என்றார் அரசர். அவரின் பக்தியின் பேரின்பத்தை கண்ட பரிவாரங்களும் மந்திரிகளும் பேருவகை கொண்டார்கள். என்று பெரிய புராண வரலாறு கூறுகிறது. எந்த நிலையிலும் இறைவனை காணும் நிலைதான் பக்தி நிலையாகும்,அருணகிரியார் திருப்புகழில் தன்னை உருக்கி பாடுகின்றார், பக்தியால்யான் உன்னை பலகாலும் பற்றியே மா திருப்புகழைப் பாடியே உனைக் காண வேண்டும் என்கிறார்.
அந்த பக்தியே, முக்தி எனும் பிறவா நிலைகக்கு கொண்டு செல்லும், பிறவா நிலையினை அடைய சாதனை தத்துவம் தேவை, இந்த உடலையேஆலயமாக பரிமளிக்க வேண்டும். சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும் என்ற கிராமப்படி, இந்த திரேகத்தையும், அதனுள் ஒளிரும் ஆத்மாவையும் போற்ற வேண்டும் . எனவே தான் நம்முடன் வாழ்ந்த சித்தர்கள் அவ்வகையில் தன் மெய் அறிவினால் கற்பங்களை உண்டு பல்லாயிரக்கணக்கான, ஆண்டுகள் வாழ்ந்து இந் பிரபஞ்ச்ததுக்கும் வருங்கால சந்ததியார்க்கும் அரும்பெரும்அறிவு களஞ்சியங்களை பரம்பரையாக குரு சீடர் மூலமாகவோ பனை ஓலைகள் மூலமாகவோ தந்துவிட்டு போய் உள்ளார்கள். அவற்றின் உட்பொருளை அறிவின் திறன் கொண்டு ஆராய்ந்து, மற்றவர்களுக்கும் உபதேசித்தும், அறிவின் உட்பொருளை அறிய செய்ய வேண்டுமென்றும், யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்று கூறி வழிவகுத்து சென்றுள்ளார்கள்.
நம் உடம்பில் ஐம் புலங்களில் எது மூலசத்தியாக விளங்குகிறதோ அதுதான் ஆத்மா, ஒருவன் இறந்து விட்டால் இவை இயங்குவது இல்லை. எனவே சரீரத்தை போற்றி காத்து இந்த சரீரத்தின் மூலம்பல அரிய பெரிய சாதனைகள் புரிய வேண்டும், எனவே உடல் எந்தவிதமான உபாதைகளின்றம் பிணிகளிலிருந்தும்பாதுகாத்து வாழ்ந்து வந்துள்ளார்கள். இதைத்தான் திருமூலர் தனது திருமந்திரத்தில்
” உடம்பார் அழியின் உயிரார் அழிவர்
திடம்பட மெய்ஞானம்சேரவும் மாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தேன்
உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேன் ” என்று உடலை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை விளக்கியுள்ளர். உடம்பும், உயிரும் மிகமிக இன்றியமையாதன ஆதலின் அவற்றின் சிறப்பு நோக்கி உடம்பையும் வளர்த்தேன் உயிரையும் வளர்த்தேன் என்கிறார்.
தேகத்திலுள்ள ஆத்மா வானது அழிவற்ற பொருள், தேகத்தோடு பிறந்த தேகம் நீங்கியவுடன் மறுபடியும் பஞ்ச பூத சக்திகளில் சம்பந்தப்பட வேண்டியுள்ளது. அதை தேகத்தோடு கலப்பிக்க வேண்டும். இது வித்தை போதிக்கும் தந்திரமாகும், அந்த கர்மத்தை செய்வதினால் தேகம் அழியாது, செத்தால் பிறக்க வேண்டும், பிறந்தால் இறக்க வேண்டும். உலக வழக்கத்தை சொற்கள் அறிந்து பிறந்த தேகத்தை, காப்பாற்ற வேண்டிய தந்திரங்கள் அறிவதே, ஆத்மாவை அறிந்து தேகத்தை லயிக்க செய்யும் கர்மமாகும்.அது முடியாவிட்டால் சாவது நிச்சயம்,
செத்தால் பிறக்க வேண்டும், அதை தடுப்பதற்கு தேகத்திலிருந்துதான் அந்த கர்மத்தை செய்யமுடியும், புழு , பூண்டு வடிவத்தில் இருந்தால் இந்த கர்ம வினைகளை செய்ய இயலாதல்லவா? அப்படி சாதனையால் செய்து இந்த சூச்சும தேககத்தை பிரிக்கும் தந்திரத்தை அறிய வேண்டும்.சித்தர்களும் ஞானிகளும் இதை கண்டு கொண்டு உலகத்தில் சஞ்சாரம் செய்து கொண்டிருக்கிறார்கள். எனவேதான் உடலையும் உள்ளத்தையும் கட்டுபாடுகளுடன் உட்படுத்தி தன்னை மேலான இயல்புடையவனாக மாற்ற வேண்டும், சிந்தையிலும் சொல்லிலும், செயலிலும் கோணல் இல்லாத தன்மையே நேர்மை அடைய வழிபிறக்கும், தேக சுகத்திற்கு வசப்பட்டு புற இச்சைகளையும் சாஸ்திரத்தின் ஆணை மீறி நடப்பவனுக்கும் ஏது மேன்மை? அவன் சுகம் பெற முடியாது, முக்தி என்னும் பேரின்பம் அடையமுடியாது.
” உடம்பினை பெற்ற பயனாவதெல்லா
முடம்பினிலுத்தமனைக் காண் ” என்கிறார் அவ்வையார்.
தேகம் எடுத்ததின் பயன், புற இச்சைகளையும் மனை, மக்கள், காசு பணம், போன்ற சொத்துக்களை சம்பாதித்து அவற்றிலே மூழ்கி வயதான காலத்தில தள்ளாமையாலும், வியாதியினாலும் பிடிக்கப்பட்டு உழல்வதற்கல்ல, உன்னிலே ஒருவன் உள்ளான், அவனை நீ கண்டால் அறிவு சுடர் விட்டு, மூப்பு பிணி, சாக்காடு என்ற அவத்தை நீக்கி ஆணவம் கன்மை, மாயை நீக்கி பேரின்ப பெருவாழ்வு வாழலாம், என்கிறார்,
இந்த ஊன் உடம்பே ஆலயம் என்றாலும், அச்சரீரம் தன் அளவில் தேவ ஆலயம் ஆகிவிடாது, இந்த சரீரத்தை எப்படி மனிதன்பயன்படுத்துகின்றானோ அதை அனுசரித்து உடல் தேவ ஆலயமாக ஆகிறது. எனவே தான் உடம்புக்கு ஊறு வராது நேர்மைக்கு பங்கம் இலாது வாழ வேண்டும், எனவே உண்ணும்உணவு குடிக்கும்பானம் இவைகளை நெறிப்படுத்த வேண்டும். இந்த உடம்பை பயன்படுத்திக் கொள்ளவேண்டுமே யொழிய இந்த உடம்பை நினைக்க கூடாது. உடலில் உள்ள அபூர்வ செயல்கள், செயல் இழந்துவிட்டால் இந்த உடல் பயனற்றதாகிவிடும். ஆகவேதான் இந்த உடலை கொண்டே நாம் மேலான நிலையை அடைய வேண்டும். என்ற குறிக்கோளினைக் கொண்டு நல்ல சிந்தனையுடன் இந்த உடம்பை இயற்கை விதிகளுக்கு புறம்பாக ஓம்ப வேண்டும்,

உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்து, உடம்பை வளர்த்தேன், உயிர் வளர்த்தேன்

திருசிற்றம்பலம் ஒம் நமசிவாயம்
மேலும் பல ஆன்மீக தகவலுக்கு
http://vpoompalani05.blogspot.in/
https://vpoompalani05.wordpress.com
http://vpoompalani05.blogspot.in/
http://www.weebly.com/weebly/main.

Standard

இந்து தர்ம சாஸ்திரங்கள் கூறும் பயனுள்ள சம்பிரதாயங்கள்:2
இந்து தர்ம சாஸ்திரங்களில் நம் முன்னோர்களால் வகுத்தறியப்பட்டு சில சாஸ்திர சம்பிரதாயங்கள் இன்றளவும் நம்மால் பின்பற்றப்பட்டு வருகின்றன, இருப்பினும் நம் முன்னோர்களால் சாஸ்திர ரீதியாக கடைப்பிடிக்கப்பட்டவை தற்போது இக்கால சூழ்நிலைக்கு ஏற்ப சற்று ஏறக்குறையவும் இன்றளவும் நடைபெறுகிறது, சாஸ்திர முறைப்படி கூறப்பட்ட சம்பிரதாயங்களை அன்றாட வாழ்க்கைக்கு ஆன்மீக ரீதியாக கடைபிடிப்பது அவசியமாகிறது,
“அரிது அரிது மானிடாய் பிறப்பது அரிது” என்கிறார் அவ்வைப் பிராட்டியார், ஆறறிவு பெற்ற மனிதனால் மட்டுமே சிந்தித்து செயல்பட்டு ஆன்மீக வழி நடந்து, பிறவிப் பெருங்கடலைக் கடக்க இயலும், மறுபிறவியில்லாத நிலையை அடைய உதவுவது இந்த மானிடப்பிறவியின் வாயிலாகத்தான் முடியும், சைவ சித்தாந்த பெரியோர்களும் முற்பிறவியில பெற்ற கர்ம வினைகளை தீர்க்க இந்த மானிடப் பிறவி நமக்கு அளிக்கப்பட்டுள்ளது, இந்த அரிய பிறவியில் ஆன்ம ஞானம்பெற்று வீடு பேறு என்ற பிறவா நிலையை அடையமுடியும்,
” கலையாத கல்வியும் குறையாத வயதும் ஓர் கபடுவாராத நட்பும்
கன்றாத வளமையும் குன்றாத இளமையும் கழுபிணி இலாத உடலும்
சலியாத மனமும் அன்பு அகலாத மனைவியும் தவறாத சந்தானமும்
தாழாத கீர்த்தியும் மாறாத வார்த்தையும் தடைகள் வாராத கொடையும்
தொலையாத நிதியமும் கோணாத கோலும் துன்பமில்லாத வாழ்வும்
துய்யநின் பாதத்தில் அன்பும் உதவிப் பெரிய தொண்டரோடு கூட்டு கண்டாய்”,
என்று அபிராமி பட்டர் பாடினார்,ஒவ்வொரு மனிதனும் தனக்கு கிடைக்க வேண்டுவதெல்லாம் அவர் கேட்ட இத்தனை வரங்களையெல்லாம் தான் இத்தனை இன்பங்களையும் செல்வங்களையும் பெற்று ஒரு மனிதன் ஆன்மீக நிலையை அடையவும் ஒழுக்க நெறி நடந்து, பிறர்க்கு சான்றாக நடந்து பின்வரும் தலைமுறைக்கு வழிகாட்டவும் தனது ஆன்மீக நிலையை மேம்படுத்தவும் வேத காலந் தொட்டு , நமது முன்னோர்களும் ரிசிகளும் சோதிட வல்லுநர்களும் சமயப் பெருந்தகைகளும் நமக்கு எத்தனையோ தத்துவங்களையும் உபதேசங்களையும் சாஸ்திரங்களையும் அருளி யிருக்கிறார்கள். ஒரு மனிதன் பிறந்தது முதல் பள்ளிக்கு சென்று வித்தை பயின்று திருமணம் புரிந்து காதல் விளையாடி, குழந்தை பெற்று , செல்வம் தேடி, ஆன்மீக பாதையில் சென்று மறுமையடையும் வரை, அவன் அன்றாடம் செய்யவேண்டிய கடமைகளையும் பின் பற்ற வேண்டிய நம் இந்து மத சம்பிரதாயங்கள் என்னென்ன வென்றும் எப்படி செய்ய வேண்டுமென்றும் கூறியிருக்கிறார்கள், இறந்தவுடன் அவனுடைய உடலுக்கு செய்ய வேண்டிய கடமைகளையும் அவன் ஆத்மா சாந்தி அடைய வேண்டி செய்ய வேண்டிய சாஸ்திரங்களையும் தெள்ளத் தெளிவாக விளக்கியிருக்கிறார்கள்.

மனித உடல் உயிர் பிரியும தருவாயில் செய்யவேண்டிய சம்பிரதாயங்கள்:
இறக்கும் தருணம் வந்துவிட்டால் மரணப்படுக்கையில் இருந்தால் அவனை கட்டிலில் படுக்க விடக் கூடாது, உள் வீட்டிலும் படுக்க வைக்க கூடாது, தரையில் தர்ப்பையை போட்டு அதன் மீது அவனை படுக்க வைக்க வேண்டும், கட்டிலில் படுத்து கொண்டே உயிரை விட்டால் நரகதி அடைவர், ஒரு மனிதன் பிறக்கும் போதும் இறக்கும் போதும் பூமாதேவியின் மடியிலேயே நடக்க வேண்டும், தற்காலத்தில் வசதிக்காக எளிதாக பிரசவம் பார்க்க பெரும்பாலும் பிரசவ விடுதிகளில் கட்டிலில் தான் பிரசவங்கள் நடக்கின்றன, இறக்கும் போகும் மனிதனுக்கு துளசி, சாளக்கிராமம் போன்ற உத்தம பொருட்களை கண்ணில் காட்டவும், சிவ நாமத்தை அவரது வலது காதில் ஓத வேண்டும்,
புண்ணிய சாலிகளுக்கு முகத்திலுள்ள துவாரங்கள் மூலமாகவும், சித்தர் ஞானிகளுக்கு சிரசு வழியாகவும், பாவிகளுக்கு மலஜல துவாரம் வழியாகவும் உயிர் பிரியும்,
உயிர் பிரிந்த பின் செய்ய வேண்டி சடங்குகள்:
பிராணன் போன பின்பு, தலையை தெற்குப் புறமாக வைத்து படுக்க வைக்க வேண்டும், பெண்கள் தலையை விரித்துக் கொண்டு தெற்கு நோக்கி நமஸ்காரம் செய்ய வேண்டும், ஒருவன் இறந்தவுடன் ஒரு யாமம் (சுமார் 3 மணி நேரம்) கழிந்த பின்பு அப்புறப்படுத்த வேண்டும், இரவு 9 நாழிகைக்கு மேல் தகனம் செய்யக் கூடாது,
இறந்த உடலுக்கு கொள்ளி வைப்பது யார்?
பிறவியில் மூத்தவனே கொள்ளி வைக்க வேண்டும், அவன் இல்லாவிடில் இருப்பவர்களுள் மூத்தவன் கர்மஞ் செய்ய வேண்டும், எல்லா பிரேத காரியங்களிலும் ஈரத்துணியுடன் இருக்க வேண்டும், கொள்ளி வைப்பவர் அக்கினியை சட்டியில் எடுத்துக் கொண்டு முதலில் புறப்பட வேண்டும் அக்கினிக்கு பின் பிணத்தை எடுத்துச் செல்ல வேண்டும்,மற்றவர்கள் பிரேத்ததை தொடர்ந்து வரவேண்டும், பிள்ளைக்கு 2 வயதுக்குள் கர்மஞ் செய்ய நேரிட்டால் பக்கத்திலிருக்கும் வேறொருவர் செய்யலாம், 3 வயது முதல் 7 வயது வரை கொள்ளியை பையனே கொள்ளி வைக்க சொல்லி, பிற காரியங்களை நெருங்கிய உறவினர்கள் செய்யலாம், தகனம் செய்யுமிடத்தில் பிரேதத்தை தெற்குப்புறம் தலையிருக்கும்படி வைக்க வேண்டும், இதற்கான காரியம் செய்பவர்களும் அவருடைய தாயாதி வழியினரும் இறந்தவருக்கு வாய்கரிசி 3 முறை போட வேண்டும், சிதையின் கிழக்குப் புறத்தில் மேற்கு நோக்கி நின்று கொண்டு பிரேதத்தின் மார்பில் அக்கியை இட வேண்டும், பிறகு சிதையின் வடக்கு புறம் தெற்குநோக்கி நின்று கொண்டு அக்கினியை தொழுது மூன்று முறை ஓம் என் உச்சரிக்க வேண்டும், சிதைக்கு தீயிட்ட பின் திரும்பி பார்க்காது சென்று விட வேண்டும், பின் தலைமுழுகி ஸ்தானம் செய்ய வேண்டும், பின் உறவின்களுடன் வீட்டுக்கு செல்ல வேண்டும், பின் 10 வது நாள், அல்லது 16 வது நாள் கழித்து உரிய காரியங்களை செய்ய வேண்டும், காரியங்கள் செய்யும் வீட்டில் பசுஞ் சாணத்தால் மெழுகி புன்யாக வசனம் செய்யவும்,
சித்தி பெற்ற உடல், ஞானிகள் உடலை புதைக்கத்தான்வேண்டும், அதாவது சமாதி செய்தல் வேண்டும், சிறு குழந்தைகள் இறந்தாலும் புதைக்கத்தான் வேண்டும், தகனம் செய்தல் கூடாது,
ஒருவனுக்கு பெற்ற தாய் தந்தை இறநதால் ஒரு வருடம் வரை தீட்டு உண்டு. மனைவி இறந்தால் 3 மாதமும் சகோதர்களுக்கு ஒன்றை மாதமும் தாயாதிகள் இறந்தால் ஒரு மாதமும் தீட்டு உண்டு, இந்த தீட்டு நாட்களில் கோவில்களுக்கு செல்லக் கூடாது, சுபகாரியம் செய்யக் கூடாது, நேர்த்திக் கடன் செலுத்தக் கூடாது, தீட்டுக்காலம் முடிந்த பின் சிராத்தம் செய்ய வேண்டும், சிரார்த்தின் போது மனைவியும் உடன் இருக்க வேண்டும், இறந்த திதியை கணக்கிட்டு சிரார்த்தம் வருடாவருடம் பித்தருக்களுக்கு செய்ய வேண்டும, பிதுர்தர்ப்பணம் செய்ய முடியாதவர்கள் சிறிது எள்ளும் தண்ணீரும் விட்டு தர்ப்பணம் செய்ய வேண்டும்,
திருச்சிற்றம்பல்
ஒம் நமசிவாயம்
பிற ஆன்மீக தகவல்களுக்கு

இந்து தர்ம சாஸ்திரங்கள் கூறும் பயனுள்ள சம்பிரதாயங்கள்:

Standard

இந்து தர்ம சாஸ்திரங்கள் கூறும் பயனுள்ள சம்பிரதாயங்கள்:
1), கோவில் இல்லாத ஊரில் குடியிருக்கக் கூடாது.
2, தனது இடது கையால் எண்ணெய் தேய்த்தல், இடது கையால் அன்னம் இடுதல், இடது கையால் படுக்கை விரித்தல் கூடாத பழக்கவழக்கம்,
3, குரு, நோயாளி, கர்ப்பிணி,மருத்துவர் சந்நியாசி முதலியோர்களுக்கு ஆபத்துக் காலத்தில் கண்டிப்பாக உதவி செய்தால் மிகுந்த புண்ணியம் கிடைக்கும்.
4,சகோதர, சகோதரிகள் தாழ்ந்த நிலையில் இருந்தால் அவர்களுக்கு உதவ வேண்டும்.
5,பசு, தேர், நெய்குடம், அரசு, வில்வம், அரசுடன் சேர்ந்த வேம்பு இவைகள் குறுக்கிட்டால் அதனை வலது புறம் சுற்றி செல்ல வேண்டும்,
6, குடும்பஸ்தன் ஒரு கையை தரையில் ஊன்றியக் கொண்டு உணவு உண்ணக் கூடாது. துணியில்லாமல் குளிக்கக் கூடாது,
7, கன்ளுக்குட்டியின் கயிறை தாண்டக்கூடாது,தண்ணீரில் தன் உருவத்தைப் பார்க்க கூடாது.
8, நெருப்பை வாயால் ஊதக்கூடாது,
9, குழந்தை யில்லாதவன், திருமணம் ஆகாமல் ஒரு பெண்ணுடன் வாழுபவன், மனைவியை இழந்தவன் இவர்களை சுப காரிய நிகழ்வுகளில் முன்னிறுத்தக் கூடாது,
10, சாப்பிடும் போது முதலில் இனிப்பு, உவர்ப்பு , புளிப்பு, கசப்பு பதார்த்தங்களை வரிசையாக சாப்பிட்டு பின்பு நீர்அருந்த வேண்டும்,
11, கணவன் சாப்பிட்ட பின்பே மனைவி சாப்பிட வேண்டும், திருமணத்திலும் பந்தியிலும், பிரயாணத்திலும் சேர்ந்து சாப்பிடலாம்,
12, உள்ளாடை யின்றி வீட்டின் நிலைப்படியை தாண்டக்கூடாது, ஆன்மீக சடங்குகளில் கலந்து கொள்ளவோ, கோவிலுக்கு செல்லவோ கூடாது.
13, சாப்பிட்ட பின் குடும்பஸ்தன் வெற்றிலை போட வேண்டும், வெற்றிலையின் நுனி, நரம்பு, காம்பு கிள்ளி எறிந்து விட வேண்டும்,
14, சுண்ணாம்பு இல்லாத வேற்றிலையோ, வெறும் பாக்கோ போடக்கூடாது, சுண்ணம்பு வெற்றிலையின் பின் பக்கம்தான் தடவ வேண்டும்.
15, குரு,சோதிடர், வைத்தியர், சகோதரி, ஆலயம் இவற்றிக்கு செல்லும் போது வெறுங்கையுடன் செல்லக்கூடாது,
16, தலையையோ, உடம்பையோ வலக்கையினால் மட்டும் சொறிய வேண்டும், இரண்டு கையாலும் சொரிதல் கட்டாயம் கூடாது,
17, இருகையாலும் தலைக்கு எண்ணெய் தேய்க்கக் கூடாது,
18, வலது உள்ளங்கையில் எண்ணெய் ஊற்றி தலையில் தேய்க்க வேண்டும்.
19, பேசும் போது துரும்பைக் கிள்ளக் கூடாது, பேசுவர் துண்டிப்பாதாக தோன்றும்,
20, ஈரக்காலுடன் படுக்கக் கூடாது.
21, வடக்கிலும், கோணத்திசையிலும், தலைவைத்து படுக்கக் கூடாது, நடக்கும் போது முடியை உலர்த்தக் கூடாது,
22, குடும்பப் பெண்கள் தலைமுடியை விரித்து போட்டுக் கொண்டு வெளியில் செல்லவோ சுபகாரியங்களிலுக்கு செல்லவோ கூடாது,
23, ஒரு காலினால் இன்னொரு காலை தேய்த்துக் கழுவக்கூடாது,
24, சிகரெட், பீடி தீ துண்டுகளை அணைக்காமல் தரையில் போட்டு காலால் தேய்க்கக் கூடாது,
25, பகைவன், அவனது நண்பர்கள், கள்வன், கெட்டவன், பிறர் மனைவி இவர்களுடன் உறவு கொள்ளக்கூடாது, இவை அனைத்தும் கூடா நட்பு
26, பெற்றதாய் சாபம், செய்நன்றி கொல்லுதல், பிறர்மனைவி கூடுதல் இவை மூன்றுமே பிராயசித்தமற்ற பாவங்கள்
27,அங்ககீனம் உள்ளவர்வரகள், வறுமையில் உள்ளவர்கள் இவர்களது குறையை குத்திக் காட்ட கூடாது,
28, பிறர் தரித்த உடைகள், செருப்பு, மாலை, படுக்கை ஆசனம் இவற்றை நாம் உபயோகிக்கக் கூடாது.
29, பிணப்புகை, இளவெயில் தீப நிழல் இவை நம்மீது படக்கூடாது.
30, பசுமாட்டினை காலால் உதைப்பது, அடிப்பது கூடாது,
31, பசு மாட்டிற்கு ( கோமாதா) பசும்புல் ஒரு கைப்படியாவது கொடுப்பது சிறந்தது, ” யாவர்க்கும் ஆம் பசுவுக்கு ஒரு வாய் உறை ” திருமூலர் மந்திரம்
32, உண்ணும் போது பிறர் பார்த்திருக்க உண்ணக் கூடாது, ” யாவர்க்குமாம் உண்ணும் போதொரு கைப்பிடி” பிறருக்கு ஈந்து உண்ணல் வேண்டும்,
33, பகலில் உறங்குவது , உடலுறவு கொள்வது கூடாது,
34, தூங்குபவரை தீடீரென்ற எழுப்பக் கூடாது, தூங்கும் குழந்தையை பார்த்து ரசிக்கக் கூடாது.
35,தலை, முகம் இவற்றின் முடியை காரணமில்லாமல் வளர்க்கக் கூடாது.
36, வீட்டிற்குள் நுழையும் போது வாசல் வழியாகத்தான் நுழைய வேண்டும்
37, கையால் மோரை குழப்பக் கூடாது.
38, தாம்பத்திய சுகம் அனுபவிக்கும் நேரம் தவிர மற்ற நேரங்களில் மனைவியுடைய மர்ம, உறுப்புக்களையும், பிற பெண்களுடையதையும்பார்க்க கூடாது.
39, நம்மை ஒருவர் கேட்காத வரையில் நாம் அவருக்கு ஆலோசனை கூறக்கூடாது,
தொகுத்தவர்
வை, பூமாலை, சுந்தரபாண்டியம்
மேலும் ஆன்மீகச் செய்திகளுக்கு

சுயநலம் உள்ளவைர கஷ்டேம!

Standard

சுயநலம் உள்ளவைர கஷ்டேம!
பக்திேவறு, கர்மம் ேவறு அல்ல; கர்மம் ேவறு, ஞானம் ேவறு அல்ல. அைனத்தும்
ஒேர குறிக்ேகாளான இைறவைன அைடவதற்கான வழிகேள ஆகும். அவரவர்
தன்ைமக்கு ஏற்ப எந்த வழிையப் பின்பற்றினாலும் இறுதியில் அைடயேவண்டிய
லட்சியம் எல்ேலாருக்கும் ஒன்றுதான்.
* வாழ்வில் நாம் படும் துன்பங்களுக்கும், இன்னல்களுக்கும் அடிப்பைட காரணம்
நான் ேவறு, நீ ேவறு என்ற இரட்ைட மேனாபாவம் தான். மனதில் சுயநலம்
இருக்கும் வைர துன்பத்திலிருந்து விலக முடியாது. சுயநலம் உள்ள இடத்தில்
என்றும் அைமதி இருப்பதில்ைல.
* குரு ஒருவைரத் ேதடு. அவரது திருவடித் தாமைரகளில் திடமான பக்தி
ெகாண்டவனாகிப் பிறவித் துன்பத்திலிருந்து விைரவில் விடுபடு. குருவருளில்
நம்பிக்ைக ெகாண்டு மனைத அடக்கப் பழகினால், உள்ளத்தில் உைறந்திருக்கும்
ெதய்வத்ைதக் காணலாம்.
* ெசல்வத்தாலும், சுற்றத்தாலும், இளைமயாலும் யாரும் கர்வம் ெகாள்ளாதீர்கள்.
என்ைறக்காவது ஒருநாள் இைவெயல்லாம் நம்ைம விட்டு விலகிச் ெசன்று
விடும். அதனால், வாழ்நாளுக்குள் கடவுைள அறிய முற்படுங்கள்.
* குழந்ைதகள் விைளயாடிக் களிக்கிறார்கள். வாலிபர்கள் ெபண்ணின்பத்ைத
நாடுகிறார்கள். வேயாதிகர்கள் கவைலயில் கழிக்கிறார்கள். ஆனால், கடவுளின்
மீது பற்றுைவக்க மறந்து விடுகிறார்கள்.