நமச்சி வாயப் பதிகம்

Standard

3.49 – நமச்சி வாயப் பதிகம்
சம்பந்தர் பாடியதுபடம்

காத லாகிக் கசிந்துகண் ணீர்மல்கி
ஓது வார்தமை நன்னெறிக் குய்ப்பது
வேதம் நான்கினும் மெய்ப்பொரு ளாவது
நாதன் நாமம் நமச்சி வாயவே.

உள்ளன்பு கொண்டு மனம் கசிந்து கண்ணீர் பெருகி தன்னை ஓதுபவர்களை முத்திநெறியாகிய நன்னெறிக்குக் கூட்டுவிப்பதும், நான்கு வேதங்களின் உண்மைப் பொருளாக விளங்குபவனும், அனைவருக்கும் தலைவனான சிவபெருமானின் திருநாமம் ` நமச்சிவாய ` என்ற திருவைந்தெழுத்தாகும்.

நம்பு வாரவர் நாவி னவிற்றினால்
வம்பு நாண்மலர் வார்மது வொப்பது
செம்பொ னார்தில கம்முல குக்கெலாம்
நம்பன் நாமம் நமச்சி வாயவே.

சிவபெருமானின் திருவடிகளையே பற்றுக் கோடாக நம்பும் பக்தர்கள் திருவைந்தெழுத்தைத் தங்கள் நாவினால் உச்சரித்தால் , நறுமணம் கமழும் நாள்மலர்களில் உள்ள தேன்போல இனிமை பயப்பது , எல்லா உலகங்கட்கும் செம்பொன் திலகம் போன்றது நம்முடைய சிவபெருமானின் திருநாமமான ` நமச்சிவாய ` என்னும் திருவைந்தெழுத்தே ஆகும்

உள்ளம் நெகிழ்ந்து அன்புமிகப் பெருக சிவபெருமானைச் சிந்தித்து , தமது அழகிய கையில் உருத்திராக்க மாலையைக் கொண்டு திருவைந்தெழுத்தை விதிப்படிச் செபிப்பவர்களைத் தேவர்களாக்கும் தகுதியைப் பெறும்படிச் செய்வது ஆடையில்லாத சிவபெருமானின் திருநாமமாகிய ` நமச்சிவாய ` என்னும் திருவைந்தெழுத்தேயாகும் .

தன்னை நாடோறும் தியானித்து வழிபடும் அடியவர்கட்கு என்றும் நன்மை செய்பவனும் , நெற்றிக்கண்ணை உடையவனுமான சிவபெருமானின் திருநாமம் ` நமச்சிவாய ` என்ற திருவைந்தெழுத்தாகும் . இனிமையான சொற்களால் திருவைந்தெழுத்தை நயம்பட ஓதவல்லவர்களை எவரேனும் அண்டினால் , அங்ஙனம் அண்டியவர்களையும் அணுக இயமன் தூதன் பயப்படுவான் .

கொலைத்தொழிலில் ஈடுபட்டவர்களாக இருப்பினும் , நற்குணமும் , பல நல்லொழுக்கங்களும் இல்லாதவர் ஆயினும் ஏதேனும் சிறு பூர்வ புண்ணியத்தால் திருவைந்தெழுத்தை உச்சரிப்பார்களேயானால் எல்லாவிதமான தீங்குகளினின்றும் நீங்குவர் என்று பெரியோர்கள் கூறுவர் . அத்தகைய சிறப்புடையது எல்லோருக்கும் நன்மையே செய்பவனாகிய சிவபெருமானின் திருப்பெயரான ` நமச்சிவாய ` என்னும் திருவைந்தெழுத்தேயாகும் .

Advertisements
Aside

பன்னிரு திருமுறை / முதலாம் திருமுறை
திருஞானசம்பந்தர் பாடல் 

படம்
எல்லாரும் இருவினையொப்பு எளிதில் எய்துதற்குத் தோத் திர பாராயணத்தைக் கைக்கொள்ளலாம் என்றனர். தோத்திரங்கள் ஆன்மாக்களாகிய நமக்கு இறைவன் செய்த பரமோபகாரங்களைப் பலகாலும் சொல்லி, கருத்து ஊன்றச் செய்து மனத்தைக் கனியவைக் குங் கருவிகள். மனித மனத்தைத் தெய்வமனமாக்கும் மருந்து; கவலை மனத்தைக் களிப்புமனமாக்கும் குளிகை. 
தோத்திரங்களில் சிறந்தன எவை? 
ஏதோ ஒவ்வொருகால் ஒன்றிய மனத்தோடு ஒரு மனிதன் புலமை நிலைமையினின்று புகன்றவற்றைக்காட்டிலும், உலகத்தைப் பண்படுத்துவதற்கென்றே திருவருள் வயத்தால் அவதரித்து, சிந்தையைச் சிவமாக்கி, திருவருளோடு வளர்ந்து, சென்ற சென்ற இட மெல்லாம் திருவருளைக்கண்டு, அது உள்நின்று உணர்த்த உரைக்கப் பெற்ற தோத்திரங்களே மிகமிக உயர்ந்தது என்பதில் ஐயமுண்டோ! ஆதலால், “எனதுரை தனதுரையாக” வந்த தோத்திரங்களாய்ச் சிறந் தன தேவார திருவாசகமாகிய பன்னிரு திருமுறைகளே. அவற்றுள் தேவாரம் என்ற சிறப்புப் பெயருக்குரியன முதல் ஏழு திருமுறைகள். அவற்றுள் முதல் மூன்று திருமுறைகள் திருஞானசம்பந்தப்பெருமான் அருளிச்செய்தவை. 
திருஞானசம்பந்தப்பெருமான் அறிவாற் சிவனேயென்பது திண்ணம். அதிலும் முதிர்ந்து விளைந்த சிவபுண்ணிய மேலீட்டால் இளமையிலேயே சிவஞானம் கைவரப்பெற்ற செம்மல். ஆதலால், ஆண்டில் இளைஞரான இவர் திருவாயிலிருந்து தோன்றி முதிர்ந்து விளைந்த சுவையமுதம் முதன் மூன்று திருமுறைகள். அதிலும் திரு வருட்பராசத்தி சிவஞானத்தின்னமுதம் குழைத்தருளி `உண் அடிசில்’ என ஊட்ட, உண்டவாய் புலர்வதற்கு முன்னே சிவஞானத்தோடு ஒட்டி வந்த பெருமையையுடையது `தோடு’ என்ற பாடலை முதற்கண் கொண்டுள்ள முதல் திருமுறை. 

“தோடுடையசெவி யன்விடையேறியோர் தூவெண்மதிசூடிக்
காடுடையசுட லைப்பொடிபூசியென் னுள்ளங்கவர்கள்வன்
ஏடுடையமல ரான்முனை நாட்பணிந் தேத்தவருள்செய்த
பீடுடையபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே.”

தோடணிந்த திருச்செவியை உடைய உமையம்மையை இடப்பாகத்தே உடையவனாய், விடை மீது ஏறி, ஒப்பற்ற தூய வெண்மையான பிறையை முடிமிசைச்சூடி, சுடுகாட்டில் விளைந்த சாம்பற் பொடியை உடல் முழுதும் பூசி வந்து என் உள்ளத்தைக் கவர்ந்தகள்வன், இதழ்களை உடைய தாமரை மலரில் விளங்கும் நான்முகன், படைத்தல் தொழில் வேண்டி முன்னை நாளில் வழிபட அவனுக்கு அருள்புரிந்த பெருமை மிக்க பிரமபுரத்தில் எழுந்தருளியுள்ள பெருமானாகிய இவன் அல்லனோ!

ஸ்ரீமத் செப்பறைச் சுவாமிகள் அவர்கள், `தோடுடைய செவியன்` முதலாயின இறைவனது எண்குணங்களாகிய சிறப்பு இயல்புகளை உணர்த்துவன என்றும், `பிரமாபுரம்` `விடையேறி` முதலியன இறைவனது தசாங்கங்களைக் குறிப்பால் உணர்த்தி நிற்பன என்றும், `விடையேறி` `பொடிபூசி` `உள்ளங்கவர்கள்வன்` என்பன முறையே இறைவனுடைய மூன்று திருமேனிகளாகிய உருவம் அருஉருவம் அருவம் என்ற மூன்றையும் குறித்து நிற்பன என்றும், எழுதியுள்ளார்கள். சேக்கிழார் சுவாமிகள் `மறைமுதல் மெய்யுடன் எடுத்த எழுதுமறை` என்பதால் பிரணவத்தின் முதலாகிய ஓங்காரத்தைச் சிவசக்தியின் உண்மைச்சொரூபமாகிய தகரவித்தையின் அடையாளமாகிய `த்` என்பதோடு சேர்த்து `தோ` என்று தொடங்கியதாகக் குறிப்பிடுவார்கள். பன்னிரண்டாம் திருமுறையில் `உலகெலாம்` என்று முடிவதனையும் இதனோடு சேர்த்துத் திருமுறை முழுவதுமே வேத மூலமாகிய பிரணவத்துள் அடங்கியது என்பது குறிப்பு.
தேவாரத்திற்கும் வேதத்திற்கும் உள்ள ஒற்றுமையை உணர்த்த, வேதம் பயின்ற மரபில் வந்து தமிழ்வேதம் தந்த இவர்கள், தத் ஸவிதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி தியோ யோ ந: ப்ரசோ தயாத் என்ற காயத்திரி மந்திரத்தின் முதலெழுத்தாகிய தகரத்தின் மீது பிரணவத்தின் முதலெழுத்தாகிய ஓகாரத்தைச் சேர்த்துத் தொடங்கியிருப்பது அறிந்து இன்புறற்குரியது.
குருவருள்: `தோடுடைய செவியன்` என்றமையால் அம்மையப்பரே உலகுக்கு அம்மையப்பர் என்பதை முதலில் உணர்த்தி, அதனால் ஒருதெய்வ வழிபாட்டை நிலைநிறுத்துகிறார் ஞானசம்பந்தர். தோடுடைய செவியே `ஓம்` என்ற பிரணவ சொரூபமாய் உள்ளதையும் காட்டி அருளுகிறார்

யோகியின் அடையாளங்கள்

Standard

யோகியின் அடையாளங்கள்

 

படம்
” எவன் எவ்வுயிரிடத்தும் பகைமை இல்லாதவனாய் நட்பு பூண்டவனாய் கருணை உடையவனாய், என்னுடையது என்ற எண்ணமே இல்லாதவனாய், இன்பத்தையும், துன்பத்தையும் சமமாய் கருதுபவனாய், பொறுமை உடையவனாய், எப்பொழுதும் மகிழ்ச்சி பெற்றிருப்பவனாய், யோகத்தில் விருப்பமுடையவனாய், அடங்கிய மனத்தினாய், திடமான சித்தம் உடையவனாய், மனத்தையும் புத்தியையும் என்னிடம் ( பகவானிடம் ) அர்ப்பணம் செய்தவனாய் உள்ளானோ, அவனே எனது பக்தர் . எவனிடமிருந்து உலகம் துன்பம் அடைவில்லையோ எவன் மகிழ்ச்சி சினம் அச்சம், மனக் கிளர்ச்சி இவற்றினின்று விடுபட்டவனோ, அவன் எனக்கு பிரயமானவன்,.
எவன் எதையும் விரும்பாதவனாய் தூயவனாய், சுறுசுறுப்பு உடையவனாய், துன்பம்வரினும் இன்பம் வரினும் பொருட்படுத்தாவனாய் , ஒரு பொழுதும் துயறப்படாத வனாய் தனது நலனை பெருக்குவதற்கு முயற்சி விட்டவனாய் இகழ்ச்சியையும் புகழ்ச்சியையும் சமமாக கொள்பவனாய், மெளனியாகவும், ஆழ்ந்த சிந்தனை உடையவனாய் இருப்பவனாய், கிடைத்ததைக் கொண்டு திருப்தி பெற்று களிப்புடன் இருப்பவனாய், வீடு வாசல் இல்லாதவனாய், யாதும் தன் ஊரே, உலகமே தன்வீடு என்று நினைப்பவனாய், தன் கொள்கையில் திட சித்தம் உள்ளவனாய் இருக்கின்றனோ, அவனே எனக்கு பிரயமான பக்தன் ( பகவான் ) – பகவத் கீதை

சிவபெருமானாருடைய உயர்நலன்கள் – தொடர்ச்சி

Standard

சிவபெருமானாருடைய உயர்நலன்கள்
தொடர்ச்சி
தூய உடம்பினன் / ஒளிவடிவானவன்
இயற்கை உணர்வினர்
தன்வயத்தனானவர்
காலத்தைக் கடந்தவர் ( மெய்ப் பொருளானவர்)
காலனை வென்றவர்
காமனை எரித்தவர்
முத்திைய அளிக்க வல்லவர்
மனத்தினுள் மாசு நீக்குபவர்
நற்குணங்களை கொடுப்பவர்
பாவங்களை அழிப்பவர்
தொண்டர்களை நரகத்திலிருந்து காப்பவர்
ஆசை தீரக் கொடுக்கும் கருணாகரர்
உடல், பிறவி பிணி தீர்ப்பவர்
பூவும் நீரும் அளிப்பவர்க்கு புண்ணியம் அளி்ப்பவர்
ஈபவர்க்கு அருளுபவர்
கஞ்சத்தனத்தவருக்கு கடும் நரகமளிப்பவர்
பொய் நின்றவருக்கு பொய்யன்
மெய்ைம உடடையவருக்கு மெய்யன்
கருதுவார் கருதும் காட்சி அளிப்பவர்
ஐந்து பூதங்களையும் அடக்குபவர்
ஐந்தெழுத்து உருவானவர்
எல்லா பொருளாயும் விளங்குபவர்
எல்லா பொருள்களையும் கடந்து நிற்பவர்
தாயும் தந்தையுமாய் விளங்குபவர்
தன்னை அைடந்தாருக்கு இன்பம் அளிப்பவர்
அறமே வடிவானவர்
நவ்கோள்கள் தீது தாராமல் காப்பவர்
சித்தரமார நினைவினருக்கு உள்ளத்தில் உறைபவர்
உருகும் மனம் உடைத்தோருக்கு தேனாய் இனிப்பவர்
அஞ்சடக்கம் உள்ள அடியாருக்கு எளிதில் அருளுபவர்
அடியவரை அமருலகம் ஆள்விப்பவர்
உருகாதார் உள்ளத்து நில்லாதார்
உகப்பார் மனத்தென்றும் நீங்கார்
தமக்கு அன்பு பட்டவர் பாரமும் பூண்பர்
வஞ்சகர் பால் அணுகாத இயல்பினர்

திருச்சிற்றம்பலம்
நன்றி ; தமிழ் வேதம்

சிவபெருமானாருடைய உயர்நலன்கள்

Standard

சிவபெருமானாருடைய உயர்நலன்கள்

படம்

சிவபெருமானாருடைய உயர்நலன்கள் யாவற்றையும் அறிந்தோர் இல்லை எனலாம். அறிவினால் உணரமுடியாத செம்பொருள் சிவம். சிவபெருமான் அழிப்பவர் சோதனை செய்பவர், அவர் உருவப் படத்தை வீட்டில் வைத்து வழிபட கூடாது என்ற தவறான கருத்துக்கள் மக்களிடையே இன்றும் உள்ளது.இவை உண்மைக்கு புறம்பானவை. கடவுளைக்கண்டு அம்மயமாய் விளங்கிய அருளாளர்கள் பன்னிரு திருமுறைகள் மூலம் கூறியுள்ள நல்லுரைகளுள் ஒரு சிலவற்றை இங்கே காண்போம். இறைவர் என்றும்  அடியார்க்கு எளியவர் அடைந்தவர்களை காப்பவர் அன்பினால் உணரப்படக் கூடியவர் அடியவர்களுக்கு அடைககலமாக விளங்குபவர் அற்றார்க்கும்அலந்தார்க்கும் அருள் செய்பவர் அற்பர்களால் அடைய முடியாதவர் ஆலகால விடத்தை உண்டு உலகை காத்தவர் ஆணவம் உடைய எவரும் அணுக இயலாதவர் ஆணவம் அடங்கிய ஆன்மாக்களுக்கு ஆதாரமானவர் இயல்பாகவே பாசங்களிலிருந்து நீங்கியவர் இறப்பும் பிறப்பும் இல்லாதவர் இன்பனாய் துன்பங்களை களைபவர் இன் அடியார்களுக்கு இன்பம் விளைவிப்பவர் வேண்டாத்தக்கதை அறிந்து வேண்ட முழுவதும் தருபவர் கருணையே வடிவானவர் பேராற்றல் உடையவர் பேரறிவு உடையவர் ( தெடாரும் )  நன்றி ; தமிழ் வேதம்

சிவபெருமானாருடைய உயர்நலன்கள்

Standard

சிவபெருமானாருடைய உயர்நலன்கள் யாவற்றையும் அறிந்தோர் இல்லை எனலாம். அறிவினால் உணரமுடியாத செம்பொருள் சிவம். சிவபெருமான் அழிப்பவர் சோதனை செய்பவர், அவர் உருவப் படத்தை வீட்டில் வைத்து வழிபட கூடாது என்ற தவறான கருத்துக்கள் மக்களிடையே இன்றும் உள்ளது.இவை உண்மைக்கு புறம்பானவை. கடவுளைக்கண்டு அம்மயமாய் விளங்கிய அருளாளர்கள் பன்னிரு திருமுறைகள் மூலம் கூறியுள்ள நல்லுரைகளுள் ஒரு சிலவற்றை இங்கே காண்போம். இறைவர் என்றும்
அடியார்க்கு எளியவர்

படம்
அடைந்தவர்களை காப்பவர்
அன்பினால் உணரப்படக் கூடியவர்
அடியவர்களுக்கு அடைககலமாக விளங்குபவர்
அற்றார்க்கும்அலந்தார்க்கும் அருள் செய்பவர்
அற்பர்களால் அடைய முடியாதவர்
ஆலகால விடத்தை உண்டு உலகை காத்தவர்
ஆணவம் உடைய எவரும் அணுக இயலாதவர்
ஆணவம் அடங்கிய ஆன்மாக்களுக்கு ஆதாரமானவர்
இயல்பாகவே பாசங்களிலிருந்து நீங்கியவர்
இறப்பும் பிறப்பும் இல்லாதவர்
இன்பனாய் துன்பங்களை களைபவர்
இன் அடியார்களுக்கு இன்பம் விளைவிப்பவர்
வேண்டாத்தக்கதை அறிந்து வேண்ட முழுவதும் தருபவர்
கருணையே வடிவானவர்
பேராற்றல் உடையவர்
பேரறிவு உடையவர்
( தெடாரும் )

நன்றி ; தமிழ் வேதம்

மகாசிவராத்திரியும் சிவ வழிபாடும்

Standard

மகாசிவராத்திரியும் சிவ வழிபாடும்

படம்
” சிவம் ” என்ற சொல்லுக்கு துன்பத்தை நீக்கி இன்பத்தை அளிப்பவர் என்ற பொருள். சிவபெருமானார் கோபக்காரர் அழிப்பவர் என்று சொல்வதெல்லாம் பெரிய பொய் என்பதை நாம் உணர வேண்டும். மாசி மாதம் அமாவாசைக்கு முன்னாள் ( சதுர்த்தசி திதி )சிவராத்திரி எனக் கொள்ளப்படுகின்றது. சிவராத்திரி சிவ பெருமானார் வழிபாட்டிற்கு உரிய இரவு என்பது பொருளாகும். ஏன் இந்த நாளை சிவராத்திரி என்கிறோம் என்று சிந்திப்போம்.
திருமாலும், பிரமனம் தாேம உயர்ந்தவர்கள் என்று சண்ைடயிட்டுக் கொண்டார்கள். இவர்களது ஆணவத்தை போக்குவதற்காக , அன்பே வடிவமான சிவ பரம்பொருள் அவ்விருவருக்கும் இடையே அடியும், முடியும் காணமுடியாத ஒரு சிவசோதியாய் / பேரொளிப் பிழம்பாய் நின்றார். அந்த நாள் தான் சிவராத்திரி என்ப்படுகிறது. அக்காலம் மாசி மாதம், அமாவாசைக்கு முன் நாள் ( சதுர்த்தசி திதி) , திருவோண நட்சத்திரம் கூடிய மேலான புண்ணிய காலம். அப்படி பேரொளிப் பிழம்பாய் பரம்பொருள் எழுந்தருளிய காலம் இரவு 11.30. மணி வரையான காலமாகும்.
சிவராத்திரி நாள் முழுவதும் சிவபெருமான் சமீபத்தில் இருக்க வேண்டும் என்பதைத்தான் சிவராத்திரி விரதம் / உபவாசம் எனப்படுகிறது. அன்று முழுவதும் நமது மனம் இறைச் சிந்தனையிலேயே இருக்க வேண்டும். மனம் மொழி, மெய் இம்மூன்றும் சிவராத்திரி நாளான்று சிவத்திடமே இருக்க வேண்டும் அன்று முழுவதும் கண் விழித்து சிவ சிந்தனையுடன் இருக்க வேண்டும். அன்று சிவாலயம் வருதல் திருமறைகள் ஒதுதல், திரு ஐந்தெழுத்தை செபித்தல், கூட்டு வழிபாடு செய்தல் ஆகியவற்றால் அன்று இரவைக் கழித்தல் நலம். இந்த ஒருநாள் வழிபாடு ஆயிரம் நாள் சிவபூசை செய்த பலன் அளிக்கும் என்பது அருளாளர்கள் அறிந்த உண்மையாகும்.சிறிய வழிபாட்டினால் பெரிதும் மகிழ்ச்சி அடைபவர் சிவபெருமானார். அதிலும் சிவ ராத்திரி போன்ற புண்ணிய நாட்களில் வழிபடுதல் அளவிலா நலன்களை அளிக்கும்.
எல்லா உயிர்களும் ஒடுங்கும் கற்ப முடிவின் இரவில் நான்கு யாமத்தும் உமையம்மை சிவபெருமானாரை விதிப்படி பூசித்து மகிழ்ந்த இரவே மகாசிவராத்திரி என வழங்கப்பெறுகின்றது. இந்நாளில் வழிபடுகின்ற அனைவரும் எல்லா நன்மைகளையும்அருள வேண்டும் என்று இறைவி வேண்ட , இறைவரும் அவ்வாறே அருள்புரிந்து. காத்தருள் புரிவதாக திருவாய் மலர்ந்தருளினார். மகா பாதகம் செய்த கொடியவனும் சிவராத்திரி அன்று சிவ பெருமானாரை வணங்கி முக்தி பெற்ற வரலாறு உண்டு.
பயன்கள்;
சிவராத்திரி வழிபாட்டினால் நீண்ட ஆயுளை பெறலாம். நிறைந்த செல்வத்தை பெறலாம். நல்ல மக்கட்பேறு பெறலாம். தீராத நோய்கள் நீங்கப் பெறலாம். முடிவாக இனிப் பிறவாமையையும் பெறலாம்.தீராத பாவ வினைகள் நீங்கும்.
நாம் செய்ய வேண்டியது;
சிவராத்திரி அன்று அதிகாலையில் எழுந்து நீராடி, திருநீறு அணிந்து, சிவபூசை செய்து ஐந்தெழுத்து மந்திரம் ஒதுதல் வேண்டும். அன்று முழுவதும் உபவாசம் இருத்தல் வேண்டும்.
இரவில் நான்கு யாமங்களில் சிவபூசை செய்யலாம் அல்லது சிவலாயங்களில் பூசைகளில் கலந்து கொள்ளலாம். சிவராத்திரி வழிபாடு செய்து பிரமன் படைப்பு தொழிைலயும், திருமால் காத்தல் தொழிலையும் இந்திரன் பொன்னுலகத்தையும் குபேரன் அளகாபுரரியையும் பெற்றனர் என்று இதிகாசங்கள் கூறும் செய்தி. எத்தகைய தீவினையும் நிங்கிவிடும் நலமே பெறலாம். உலகில் அமைதி விளங்கும்
திருச்சிற்றம்பலம்
தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

நன்றி ; தமிழ் வேதம்