சைவ சித்தாந்தத்தை அறிய ……… முதல்படி ஒரு கண்ணோட்டம்

Standard

சைவ சித்தாந்தத்தை அறிய ……… முதல்படி ஒரு கண்ணோட்டம்

உயிர்கள் /Soul

அறியும் தன்மை உடையது உயிர். உயிர்கள் எண்ணிறந்தனவாய் உள்ளன. அவை ஒரு காலத்தில் தோன்றியன அல்ல; இறைவனால் படைக்கப்பட்டனவும் அல்ல; இறைவன் என்று உண்டோ அன்றே அவையும் உள்ளன. தோற்றம் இல்லையாதலால் அவற்றிற்கு அழிவும் இல்லை. எனவே உயிர்கள் என்றும் உள்ளவையாகும்.

ஆணவம்

அத்தகைய உயிர்களிடம் அவற்றை மறைத்து நிற்பதாகிய ஓர் அழுக்கு இயற்கையாகவே உள்ளது. அரிசியை உமி மூடி மறைத்திருப்பதை போன்றது இது. அரிசி உள்ள அன்றே உமியாகிய குற்றமும் அதனுடன் பொருந்தியிருப்பதைப் போல உயிர்கள் உள்ள அன்றே அவ்வழுக்கும் உடனாய் உள்ளது அதனை ஆணவ மலம் என்ற பெயரால் குறிப்பர். மலம்–அழுக்கு.

உயிர்கள் முதற்கண் ஆணவ மலத்தோடு கூடியே இருந்தன. அது கேவல நிலை எனப்படும். அந்நிலையில் உயிர்கள் அறிவும் செயலும் இன்றித் தாயின் கருப்பையில் கிடக்கும் அறிவற்ற கண்ணிலாக் குழவியைப் போல முழு அறியாமையில் மூழ்கிக் கிடந்தன.

மாயை:

இவ்வாறு ஆணவ மலத்தால் மறைப்புண்டு அதனால் அறியாமை எய்தித் துன்புறும் உயிர்களின் நிலை கண்டு இரங்கிய இறைவன் அம்மலத்தை நீக்குதற்குத் திருவுளம் கொள்கிறான். அதன் பொருட்டு அவ்வுயிர்களை உலக வாழ்விற் செலித்துகிறான்; அவை தங்குவதற்கு உடம்பையும், அறிவதற்கு ஐம்பொறி முதலிய கருவிகளையும், இயங்குவதற்கு உலகத்தயும், நுகர்வதற்கு உலகப் பொருள்களையும் படைத்துக் கொடுக்கிறான்.

குடமாகிய காரியத்தைக் குயவன் களிமண்ணிலிருந்து செய்வது போல உடம்பு முதலிய இக்காருயங்களை இறைவன் மாயை என்னும் மூலப்பொருளிலிருந்து உண்டாக்குகிறான். அம் மாயை என்னும் பொருளும் என்றும் உள்ளதேயாம்.

அணவ மலத்தோடு கூடியுடுந்த உயிர்கள் இப்போழுது மாயையோடும் கூடி நிற்கின்றன. இதுதான் பிறப்புநிலை, சகல நிலை என்று கூறப்படும்.

இந்நிலையில் உயிர்கள் உடம்பாலும், உடம்பில் அமைந்த கருவிகளாலும், வாழ்க்கைச் சூழலாலும் ஓரளவு அறியாமை நீங்கி அறிவு விளக்கம் பெற்று வருவதைக். எனவே இவ்வுலகம் என்பது அறிவை வளர்க்கும் பள்ளிக்கூடம் போல்வது எனலாம்.

கன்மம்:

அறிவும் செயலும் இன்றிக் கிடந்த கேவல நிலையினின்றும் இறையருளால் சகல நிலைக்கு வந்த உயிர்கள் சிற்றிவும் சிறு தொழிலும் உடையனவாய், தம் மனம் மொழி மெய்களினால் நல்லனவும் தீயனவும் ஆகிய செயல்களைச் செய்கின்றன.அவையே கன்மம் எனப் பெயர் பெருகின்றன.

இறைவன் அவ்வவ்வுயிர்கள் செய்த கன்மத்திற்கு ஏற்ப அவற்றிகுப் பிறப்புக்களையும் இன்ப துன்பங்களையும் அளிக்கின்றான்.

உயிர்க்ள் தாம் பெற்ற மாயையின் காரியமாகிய கருவிகளால் மாயையின் காரியங்களாகிய உலகபொருள்களை அறிந்தும் நுகர்ந்தும் அவற்றை மேலும் மேலும் பெற வேண்டும் என முயன்றும் வினைகளைச் செய்து உலக வாழ்வில் கட்டுண்டு நிற்கின்றன.

உயிர்களை உலகத்தோடு பிணித்து நிற்பவை மாயையும் கன்மமும், அவை வருவதற்கு மூலமாகிய ஆணவமும் ஆகும். அது பற்றியே அம்மூன்றும் கட்டு, தளை, பாசம் என்னும் சொற்களால் குறிக்கப்படுகின்றன. இச் சொற்கள் யாவும் ஒருபொருள் உடையன.

ஒரு கட்டினை நீக்க இரு கட்டுகளை இடுதல்:

முதற்கண் உயிர்கள் ஆணவம் என்னும் ஒரு கட்டுடன் இருந்தன.அக்கட்டினை நீக்குவதற்காக மாயை,கன்மம் என்னும் இரு கட்டுகளைச் சேர்க்கின்றான் இறைவன்.

அவிழ்த்தற்கு அரிய ஒரு கட்டினை அவிழ்ப்பதற்கு நடைமுறையில் நாம்  கையாளும் வழி,அதனைக் காட்டிலும் இறுக்க்மாக மற்றொரு கட்டினைப் போடுவது தான்.அதனால் முதற்கட்டுத் தானே நெகிழ்ந்துவிடும் அல்லவா?அதுபோல இறைவன் ஆணவக் கட்டினை நெகிழ்விப்பதற்காகவே மாயை,கன்மங்களாகிய இரு கட்டுகளை இடுகின்றான் என அறியலாம்.

அழுக்கை அழுக்கால் நிக்குதல்:-

ஆணவம் அழுக்கு ஆதலின் அதனை நீக்குவதற்கு மாயை கன்மங்களாகிய இரண்டு அழுக்குகளைச் சேர்க்கின்றான் என்றும் கூறலாம். ஆடையிலுள்ள அழுக்கைப் போக்குவதற்கு சோப்புக்கட்டியை வைத்துத் தேய்க்கிறோம். அதுவும் அழுக்குத்தானே. அவ்வழுக்கு ஆடையிலுள்ள அழுக்கை நீக்க உதவுகிறது. அதுபோல,ஆணவமாகிய அழுக்கை நீக்குவதற்கு மாயை , கன்மங்களாகிய அழுக்குகள் உதவுகின்றன என அறியலாம். இவை முன்றும் அழுக்காதல் பற்றி மும்மலங்கள் என வழங்கப்படுகின்றன.

பாசம்,பசு,பதி:-

ஆணவம்,கன்மம்,மாயை என்ற மூன்றும் பாசம்[கட்டு]எனப் பார்த்தோம்.இப் பாசத்திற் கட்டுண்டு நிற்கும் உயிர்கள் பசுக்கள் எனப்படும்.’பசு’ என்ற சொல்லுக்குக் கட்டப்பட்டது என்பது பொருள்;இவ்வாறு கட்டுண்ட உயிர்களைக் காக்கும் தலைவன் ஆதலின் இறைவன் பதி எனப்படுவான்.பதி என்பதற்குக் காப்பவன் என்பது பொருள்.பதி,பசு,பாசம் என்னும் இவையே சைவ சித்தாந்தம் கூறும் முப்பொருள்களாகும்.அவை என்றும் உள்ளன என்பதனை,

‘பதி பசு பாசம் எனப் பகர் மூன்றில்

பதியினைப் போல் பசு பாசம் அனாதி’

என வரும் திருமந்தரப் பகுதி உணர்த்தும்

மேற்கூறியவற்றால் முப்பொருள்களின் இயல்பு ஓரளவு விளங்கும்.

திருச்சிற்றம்பலம்

நன்றி ; சைவ சித்தாந்தம்

Advertisements

பெருமிழலைக் குறும்பர்

Standard

பெருமிழலைக் குறும்பர் – Perumizaik Kurumbar

குருபூசை: ஆடி – சித்திரை நட்சித்திரம் (29,07,2017) சனிக்கிழமை

சுந்தரமூர்த்தி நாயனாரையே தொழுது அவரோடு சிவப்பேறு பெற்றவர்.

மிழலைநாட்டிலே பெருமிழலை என்னும் ஊரிலே, சிவபத்தி அடியார் பத்திகளிற் சிறந்த பெருமிழலைக்குறும்ப நாயனார் என்பவர் ஒருவர் இருந்தார். அவர் சிவனடியார்களைக் காணுந்தோறும் விரைந்தெதீர்கொண்டு வணங்கி, அவர்களுக்குக் குறிப்பறிந்து தொண்டு செய்பவர். அவர்களை நாடோறுந் திருவமுது செய்வித்து, அவர்களுக்கு வேண்டுந்திரவியங்களைக் கொடுப்பவர். அவர் சுந்தரமூர்த்தி நாயனாருடைய பெருமையை அறிந்து அவருடைய திருவடிகளை மனம் வாக்குக் காயங்களினாலே சிந்தித்துத் துதித்து வணங்குதலே பரமசிவனுடைய திருவடிகளை அடைதற்கு உரிய நெறியென்று அப்படிச் செய்து வந்தார். அதனால் அவர் அணிமா, மகிமா, இலகிமா, கரிமா, பிராத்தி, பிராகாமியம், ஈசத்துவம், வசித்துவம் என்னும் அஷ்டமகாசித்திகளையும் அடைந்தார். அடைந்து ஸ்ரீபஞ்சாக்ஷரத்தை ஜபித்து வந்தார்.

இப்படி நிகழுங்காலத்திலே, திருவஞ்சைக்களத்திற் சென்று திருப்பதிகம்பாடுஞ் சுந்தரமூர்த்திநாயனாருக்குப் பரமசிவனுடைய திருவருளினாலே உத்தரகைலாசத்தை அடையும் வாழ்வு கிடைப்பதைத் தம்முடைய ஊரிலிருந்து கொண்டே யோகப் பிரத்தியக்ஷத்தால் அறிந்து; “சுந்தரமூர்த்திநாயனார் உத்தர கைலாசத்தை நாளைக்கு அடைய நான் பிரிந்து இங்கே வாழ மாட்டேன்” என்று நினைந்து, “இன்றைக்கு யோகத்தினாலே சிவபிரானுடைய திருவடியை அடைவேன்” என்று துணிந்து, யோகமுயற்சியினாலே பிரமரந்திரந்திறப்ப உடலினின்றும் பிரிந்து, திருக்கைலாசத்தில் வீற்றிருக்கின்ற சிவபெருமானுடைய திருவடியை அடைந்தார்.இவரது குருபத்தி முதிர்ச்சி, சுந்தரமூர்த்தி நாயனார் உத்தர கைலாசத்தை அடைவதை முன்னுணர்ந்து, தாம் அவரைப் பிரிதலாற்றாமையால் முதனாள் யோக முயற்சியினாலே பிரமரந்திர வழியால் உடலினின்றும் பிரிந்து, திருக்கைலாசத்தை அடைந்தமையாலே செவ்விதிற்றெளியப்படும்.

திருச்சிற்றம்பலம்

திருக்கயிலை காட்சி பெற்ற மகான் அப்பர் அடிகள்

Standard

திருக்கயிலை காட்சி பெற்ற மகான் அப்பர் அடிகள்

 

திருமுனைப்பாடி என்ற தலத்தில் திலகவதியாரின் சகோதராய் தோன்றியவர் திருநாவுக்கரசர் என்ற அப்பர் அடிகளார். சிறு வயதிலேயே ஞானம் பெற்றிருந்த படியால் சமண மத்தினரால் ஈர்க்கப்பட்டு அம்மதத்தில் சிறந்த சாஸ்திர நூல்கள் பயின்று சமண மத்தின் ஒளிவிளக்காய் விளங்கினார், தன்னுடைய தாய் மதமான சைவத்தினை மறந்து சமணத்தினுள் ஒன்றி வாழ்ந்து வந்தார். அங்ஙனம் நிகழும் வேளையில் சகோதரி திலவதியார் தனது தம்பியை தம் மதத்திற்கு கொண்டுவர திருவீரட்டீணிஸ்வரிடம் தினமும் வேண்டி அழுது புலம்பினார். இதன் பொருட்டு மனம் இறங்கிய ஈசன் உனது சகோதரன் விரைவில் உன்னிடம் சேர்வார் என்றும் சைவ மதத்தின் பால் ஈர்க்கப்பட்டு உன்னுடன் இறைத்தொண்டுடன் உழவாரப்பணி செய்வார் என்று அசிரீரி வாக்கு அருளினார். அதன்படி சமண மதத்தில் தருமசேனராக இருந்த நாவுக்கரசருக்கு தீராத சூலை நோயினைக் கொடுத்தார். இக் கொடிய சூலை நோயினை தன்னால் தாங்க இயலாது துடித்த தருமசேனருக்கு சமண மதத்தினரால் செய்த மருந்து மந்திரங்களால் யாதொரு பயனும் இன்றி இனி செய்வதறியாது தனது தமக்கையினை அண்டினார். உடனே திலகவதியார் வீரட்டானீஸ்வரர் முன் அழைத்துச் சென்று அவருக்கு திருவைந்தெழுத்து ஓதி திருநீறு அணிவித்து சூலை நோயினை தீர்க்க இறைவனிடம் வேண்டிக் கொள்ள செய்தார். நாவுக்கரசர் பெருமானும் “கூற்றாயின வாறு விலக்கலீ்ர்” என்ற பதிகம் பாடி சூலை நோயிலிருந்து விடுதலை பெற்று அன்று முதல் சைவ மதமே சிறந்தது தான் இதுவரை இவ்வளவு வீணில் கழித்தது கண்டு மனம்பழுங்கி இனி ஈசன் தொண்டே எனது பணி, என் கடன் பணி செய்து கிடப்பதே என்று அன்றிலிருந்து ஈசனுக்கு உழவாரப்பணி செய்து தொண்டாற்றி வந்தார்.
தருமசேனராகிய அப்பர் பெருமான் இந்து சைவ மதம் வந்து அங்கு தொண்டாற்றி வருவதை அறிந்த சமண மதத்தினர் அவரை மீண்டும் சமண மதத்திற்கு ஈர்க்க பல சூழ்ச்சி நிறைந்த கொடுமைகள் நாவுக்கரசர் பெருமானுக்கு செய்தனர். அதற்கு உறுதுணையாக அந்நாளில் நாட்டை ஆண்ட மன்னர்களும் சமண மதத்தை சார்ந்தவர்களாக இருந்தபடியால் அப்பர் அடிகளுக்கு இழைத்த கொடுமைகள் கணக்கில் அடங்கா/ கொடுமையின் தன்மையும் வாயால் சொல்ல முடியாதவை. அடியாரை யானையைக் கொண்டு மிதிக்க வைத்தும், காெடிய மிருகங்களால் தாக்கச்செய்தும், சுண்ணாம்பு காலவாயில் அடைத்தும், கல்லில் கட்டி கடலில் போட்டும் இன்னும் சொல்லொன்ன துயரில் ஆழ்த்தினர், ஆனாலும் அப்படிகள் யாதையும் பொருட்படுத்தாமல், திருவைந்தெழுத்து மந்திரம் ஒன்றே பிரதானம் நமச்சிவாய என்று பதிகங்கள் பாடி தொல்லைகளிலிருந்து விடுதலை பெற்று சைவ மதத்தினை வேறூண்ற செய்தார். இதனால் சில மன்னர்களும் மதம் மாறி சைவம் தழைக்க காரணமானார்.
இவ்வாறு தனது சைவ பணியுடன் இறைவரைக்காண ஆவல் கொண்டு திருக்கயிலை மலை தன் கால்களால் நடந்தே சென்றார். வயது முற்றிய பருவத்தில் தன்னால் மலை ஏற முடியாத சூழலிலும் தவண்டு சென்று திருக்கயிலை நெருங்கிய நேரத்தில் இறைவர் ஒரு சிவனடியார் வடிவில் வந்து உமக்கு திருவையாற்றில் கயிலைக் காட்சி அளி்ப்பேன் என்று இக்குளத்தில் முழ்கி திருவையாற்றில் எழுவாயாக என்று வாக்கு கொடுத்தார், அதன்படி அப்பர் அடிகள் அக்குளத்தில் மூழ்கி திருவையாற்றில் எழுந்தார், அன்று ஆடி அமாவாசை தினமாகும், அந்நாளில் திருவை யாற்றிலேயே அப்பர் அடிகளுக்கு திருக்கயிலை காட்சியே கிடைத்தது. அதுமட்டுமன்றி இறைவருடன் முப்பத்தி முப்பது தேவர்களூம், இறைவர் உமையொரு பாகனாக தேவியாரோடு காட்சி தந்தது கிடைத்ததரிய காட்சி. அக்காட்சியின் நினைவாகவே இன்றும் திருவையாற்றில் அப்பர் கயிலை கண்ட காட்சி திருவிழாவாக கொண்டப்படுகிறது.இதன் நினைவே இன்று ஆடி அமாவாசையில் இராசபாளையம் நகரில் பிரபஞ்ச யோகா அமைப்பின் மூலம் திருக்கயிலை காட்சி விழா சிறப்புடன் கொண்டாடப்பட்டு இறைப்பணியில் நமது பங்காக அப்பர் அடிகளையும் திருக்கயிலை நாதரையும் கண்டு மனம் குளிர வாய்ப்பு அடியேனுக்கும் கிடைத்தது.

திருகயிலை மலையானே போற்றி
எந்நாட்டவருக்கும் இறைவா ேபாற்றி
ஈசா போற்றி இறைவா போற்றி
ஓம் நமசிவாய

திருச்சிற்றம்பலம்

 

 

ஆடி அமாவாசை

Standard

ஆடி அமாவாசை… வீடு தேடி வரும் முன்னோர்கள்

சூரியனும் சந்திரனும் ஒரே பாகையில் பூமிக்கு நேராக வரும் பொழுதும் அமாவாசை திதி உண்டாகிறது,மாதந்தோறும் வரும் அமாவாசை தினமானது, இறந்த நமது முன்னோர்களை நினைத்து விரதம் அனுஷ்டிக்க ஏற்ற நாளாகும். இவற்றில் தை அமாவாசை, ஆடி அமாவாசை, புரட்டாசி அமாவாசை போன்றவை முக்கியத்துவம் கொண்டவை. ஆடி மாதத்தில் சந்திரன் உச்சம் பெற்ற கடக ராசியில், சூரியன் சஞ்சரிப்பதே இதற்கு காரணம். சூரியன் சிவ அம்சம், சந்திரன் சக்தியின் அம்சம். இவ்விரண்டு அம்சங்களும் ஆடி அமாவாசை தினத்தில் ஒன்றிணைவதால் ஆடி அமாவாசை முக்கியத்துவம் பெறுகிறது.
இந்த விரதம் நமது முன்னோர்களை வேண்டி வணங்கும் விரதம் என்றாலும், இறந்த தந்தைக்காக பிள்ளைகள் அனுஷ்டிக்கும் விரதம் என்று கூறுவார்கள். காலையில் எழுந்து ஆற்றிலோ, குளத்திலோ நீராடிவிட்டு, கரையோரத்தில் அமர்ந்து அந்தணர்களைக் கொண்டு தர்ப்பணம் செய்ய வேண்டும். ஆற்றிலோ, குளத்திலோ நீராட முடியாதவர்கள் வீட்டில் நீராடிவிட்டு அருகில் உள்ள ஆலயத்துக்கு சென்று, அங்கு அந்தணர்கள் மூலம் தர்ப்பணம் செய்யலாம்.
இந்த விரதம் நமது முன்னோர்களை வேண்டி வணங்கும் விரதம் என்றாலும், இறந்த தந்தைக்காக பிள்ளைகள் அனுஷ்டிக்கும் விரதம் என்று கூறுவார்கள். காலையில் எழுந்து ஆற்றிலோ, குளத்திலோ நீராடிவிட்டு, கரையோரத்தில் அமர்ந்து அந்தணர்களைக் கொண்டு தர்ப்பணம் செய்ய வேண்டும். ஆற்றிலோ, குளத்திலோ நீராட முடியாதவர்கள் வீட்டில் நீராடிவிட்டு அருகில் உள்ள ஆலயத்துக்கு சென்று, அங்கு அந்தணர்கள் மூலம் தர்ப்பணம் செய்யலாம்.
இறை விருப்பப்படி மானிடருக்கு ஆசி கூறி இல்லறத்தை நல்லறமாக்கி நல்வாழ்வுக்கு வழிகாட்டும் அதிகாரம் படைத்தவர்கள் தேவர்களும், பித்ருக்களுமே! அமாவாசை தினம் பிதிர் கடன் செய்வதால் மூதாதையர், ரிஷிகள், தேவர்களின் ஆசி கிடைக்கின்றது என்பது ஐதீகம்.
நமது முன்னோர்களில் ஒருவர் இறந்த திதி, பட்சம், தமிழ்மாதம் அறிந்து, ஒவ்வொரு தமிழ்வருடமும் அதே திதியன்று(ஆங்கிலத் தேதிக்கு ஒவ்வொரு ஆண்டும் மாறிவரும்) குடும்பத்தார்கள் பிண்டம் செய்து வைத்து படைப்பதே சிரார்த்தமாகும். இதனால் குடும்பத்தில் சகல தோஷங்களும் நிவர்த்தியாகின்றன. இந்த தர்ப்பணத்தை இதேபோல அமாவாசைத் திதிகளிலும்செய்து வந்தால் மிகப்பெரும் நன்மைகள் உண்டாகும்.அமாவாசைத் திதி, மாதா மாதம் நிகழ்ந்தாலும் அவற்றுள் தைமாதத்திலும்,புரட்டாசி மாதத்தில் வரும் மகளாய அமாவாசைக்கும், ஆடி மாதத்தில் வரும் அமாவாசைத் திதிக்கு அதிக சிறப்பு உண்டு.

அமாவாசை என்பது நிறைந்த நாள்’ என்று சொல்லி நல்ல காரியங்களை ஆரம்பிக்கும் வழக்கம் சமீபகாலமாக உள்ளது. சாஸ்திரத்தில் இதற்கான ஆதாரம், சான்றுகள் இல்லை. அமாவாசை என்பது இருட்டு நாள். நீத்தார் நினைவு நாள் என்றே பல நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. பிரதோஷ கால பூஜையில் திரயோதசி திதி முதல் பிரதமை திதி வரை எந்த புது காரியமும் தொடங்க கூடாது என பிரதோஷ வழிபாடு வலியுறுத்துகிறது. ஆகையால் அமாவாசையை நீத்தார் நினைவு கூர்வதற்கு மட்டுமே பயன்படுத்துவது நலம் தரும். ஆடி அமாவாசையன்று முன்னோரை நினைத்து வழிபடுவோம். அவர்களது ஆசியையும், இறைவனின் அருளையும் பெறுவோம்.

 

இதேபோல் ஆடி அமாவாசை திருநாவுக்கரசருக்கு திருவையாற்றில் எம்பெருமான் கைலைக் காட்சி அளித்து முக்தியளித்ததும் இந்நாள்தான்
திருச்சிற்றம்பலம்

தலங்களும் தாண்டவங்களும்

Standard

தலங்களும் தாண்டவங்களும்

சிவபெருமானின் தாண்டவங்கள்

நடனக்கலைக்கு நாயகனாக திகழ்பவர் சிவன். அதனால்தான் அப்பெருமானை “ நடேசன் “ என்று போற்றுகின்றோம். இவர் 108 நடனங்களை ஆடியிருக்கிறார். இதில் அவர் மட்டும் தனித்து ஆடியவை 48. தேவியோடு சேர்ந்து ஆடியவை 36. திருமாலுடன் ஆடியது 9. முருகப்பெருமானுடன் ஆடியது 3. தேவர்களுக்காக ஆடியது 12 ஆகும். சிதம்பரத்தில் இவர் ஆடும் ஆனந்த தாண்டவத்தை தரிசிப்பவர்கள் முக்தி நிலையை அடைவார்கள். இதனை “ பார்க்க முக்தி தரும் தில்லை “ என்று கூறுவர். நம் ஆன்மாவை சிவகாமியாக எண்ணி நடராஜப்பெருமானின் நடனத்தை காண வேண்டும் என்பது ஐதீகமாகும்.

சிவ தாண்டவம்

 

1, பாண்டுரங்க நடனம் – முப்புரம் எரிக்க முற்பட்டபோது பிரமன் தேரோட்டியாக இருந்தார். கலங்கிய கலைமகளை தேற்றி கலக்கத்தை போக்க ஆடியது {திருவதிகை} கொடிகுகாட்டி நடனம்-திரிபுரம் எரித்த பின் ஆடியது.

2, கொடுகொட்டி நடனம் – திரிபுரம் எரித்த பின் மகிழ்ச்சியோடு தாளமாட சிவனார் தன் கரங்களை கொட்டி ஆடியது.

3, சந்தியா நிருத்தம் – ஆலகால விஷம் உண்டு. அறிதுயிலில் இருந்த சிவன், தேவர்கள் வழிபட்ட பின் மறுநாள் பிரதோஷத்தில் {திரயோதசி திதி} டமருகம் ஏந்தி, சூலத்தை சுழற்றி ஒரு ஜாம நேரம் ஆடியது.

4, சண்டா தாண்டவம் – திருவாலங்காட்டில் காளியின் செருக்கை அடக்க, பைரவர் மூர்த்தங்கொண்டு ஆடியது.

5, கௌரி தாண்டவம் – தாருகாவனத்தில் மோகினி வடிவெடுத்த திருமாலுடன் ஆடியது போல கௌரிக்கு கயிலையில் ஆடிக்காட்டியது.

6, வீரட்டகாச நடனம் – குமரக்கடவுள் பிரணவப் பொருளை உணர்த்தியபோது தானும் குமரனும் ஒன்றே என்று வீரம் புலம்பட ஆடியது.

7, ஆனந்த தாண்டவம் – பதஞ்சலி, வியாக்ரபாதர் காண சிவகாமியம்மை உளம் மகிழ முயலகன் முதுகுமிதித்து சிதம்பரத்தில் ஆடியது.

8, அனவரத நடனம் – ஆன்மாக்களுக்குப் போக முக்திகளை அளிக்கும் பொருட்டு படைப்பு முதலான செயல்களை செய்து எப்போதும் ஆடும் நடனம்.

9, மஹா சங்கர நடனம் – மஹா பிரளய காலத்தில் உலகம் அனைத்தும் பராசக்தியில் ஒடுங்க, பராசக்தி பரமசிவத்தில் ஒடுங்க, பரமசிவன் ஒருவனே தானாக இருந்து ஆடியது.

நடராஜர் சுற்றி திருவாசி உள்ளது. அதில் 51 சுடர்கள் இருக்கும். திருவாசி என்பது ஓம் என்ற பிரணவ மந்திரத்தையும் 51 சுடர்கள் 51 எழுத்துக்களையும் சுட்டிக்காட்டக்கூடியது. ஆண் ஆடுவது – தாண்டவ நடனம், பெண் ஆடுவது – லாஸ்ய நடனம். நடராஜர் கால்மாறி ஆடியது மதுரை, கீள்வேளூர், திருவக்கரை. தூக்கிய திருவடி இடுப்புக்குமேல் நிறுத்துவது வக்ர தாண்டவம் ஆகும்.

ஈசன் நடனம்

 

 

 

1, மதுரை – வரகுன பாண்டியனுக்கு காலமாறி {வலதுபாதம்} தூக்கி ஆடியது.

2, கீள்வேளூர் – அகத்தியருக்கு 10 கைகளுடன் நடராஜர் கால்மாறி {வலதுபாதம்} தூக்கி ஆடியது.

3, திருவாலங்காடு, சிதம்பரம் – இறைவன் காளியுடன் நடனமாடியது.

4, மயிலாடுதுறை – அம்பாள் மயில் வடிவம் கொண்டு ஈசன் முன்பு கௌரி தாண்டவம் ஆடினார்.

5, திருப்புத்தூர் – சிவன் லட்சுமிக்கு கௌரி நடனத்தை ஆடி காட்டியது.

6, திருவிற்கோலம் – காளி அம்மன் ஆலங்காடு பெருமானோடு தர்க்கித்து ரக்ஷா நடனம் ஆடி மகா தாண்டவம் ஆடியது.

7, திருவாவடுதுரை – இறைவன் வீர சிங்க ஆசனத்தில் சுந்தர நடனம் மகா தாண்டவம் ஆடியது.

8, திருக்கூடலையாற்றார் – பிரம்மனுக்கு நர்த்தனம் செய்து காட்டியது.

9, திருவதிகை – சம்பந்தருக்கு இறைவன் திருநடனம் ஆடிகாட்டியது. இறைவி பாட இறைவன் ஆடியது.

10, திருப்பனையூர் – ஊரின் புறந்தே சுந்தரமூர்த்திக்கு நடன காட்சி தந்தது.

11, திருவுசாத்தானம் – விஸ்வாமித்திரருக்கு நடன காட்சி தந்தது.

12, திருக்களர் – துர்வாச முனிவருக்கு பிரம்ம தாண்டவம் ஆடி காட்டியது.

13, திருவான்மியூர் – வான்மீகி முனிவர்க்கு இறைவன் பிரம்ம தாண்டவ நடன காக்ஷியும் கல்யாண காட்சியும் அருளியது.

14, கொடுமுடி – சித்ரா பௌர்ணமியில் பரத்வாச முனிவருக்கு நடராஜர் சதுர்முகத்தாண்டவ நடன காட்சி அருளியது.

15, திருமழபாடி – மார்கண்டேயருக்கு மழு ஏந்தி நடன காட்சி தந்தது.

16, கஞ்சனூர் – பராசர முனிவர்க்கு முக்தி தாண்டவம் அருளியது.

17, திருக்காறாயில் – பதஞ்சலி முனிவருக்கு 7 வகை தாண்டவங்களை காட்டியது. கபால முனிவருக்கு காட்சி தரல்.

18, அரித்துவார மங்களம் – உபமன்யு மகரிஷிக்கு இறைவன் திருநடனமாடி அருள் புரிந்தது.

19, திருவொற்றியூர் – மாசி மாதத்தில் நந்திக்கு நாட்டிய காக்ஷி.

20, திருக்கச்சூர் – திருமாலுக்கு நடன காட்க்ஷி தியாகராஜர் அருளியது.

21, திருப்பைஞ்ஜிலி – வசிட்ட முனிவர்க்கு நடராஜர் நடன காட்க்ஷி அருளியது.

22, கொடுமுடி, கூடலையாற்றூர், திருகளர், திருமுருகன்பூண்டி – பிரம்மனுக்கு ஈசன் நடன காட்க்ஷி.

23, திருத்துறைபூண்டி – நடராஜர் சந்திர சூடாமணி தாண்டவமாடுகிறார். அகத்தியர் நடனத்தை கண்டும் வேதாரயேஸ்வரரின் மணக்கோலத்தையுக் கண்டார்.

திருச்சிற்றம்பலம்!