இறை வழிபடலாம்

Standard

ஆலயங்களுக்கு சென்று இறைவனை வழிபடும் போது, முதலில் நாம் இருகரங்களையும் தலைமேல் குவித்து கோபுரங்களை தரிசிக்க வேண்டும். உள்ளே சென்று கணங்களுக்கெல்லாம் அதிபதியாக விளங்கி, காரிய வெற்றிக்கு கை கொடுத்து உதவும் விநாயகப் பெருமானை வழிபட வேண்டும். அதன் பிறகு நந்தி தேவரிடம் சென்று அவரை வணங்கி சிவபெருமானையும் உமா தேவியையும் வணங்க அனுமதி பெற வேண்டும், உமா மகேஷ்வரை வழிபட்டு பிரகாரம் சுற்றி வருவது நல்லது,
அப்படி பிரகாரஙகள் சுற்று வருவர். சிலர் ஒன்று முதல் 9 தடவைகள் கூட சுற்றுவது உண்டு, சுற்றும் போது வலங்கொண்டு தான் சுற்ற வேண்டும். மேலும் கொடி மரம் அருகில் சென்று அதன் வலது பக்கத்தில் விழுந்து நமஸ்காரம் செய்யவேண்டும் பலிபீடத்தின் அருகில் நின்று நம்மிடம் உள்ள ஆறு வகையான தீய குணங்களை பலிகொடுத்ததாக உறுதி செய்து கொள்ள வேண்டும், அவை காம,குரோத,லோப,மோக,மத, மாத்சரியம் என்பன ஆகும்.
விநாயகருக்கு முன் தேங்காய் உடைப்பதன் மூலம் நமது சிரமங்கள் எல்லாம் சிதறுகாய் உடைவதைப் போல் விநாயகரின் அருளால் துன்பஙகள் அகன்று விருப்பங்கள் நிறைவேறும். இறைவனை வழிபடுவதைப் போல் மூலஸ்தான மூர்த்திகளையும் வணங்க வேண்டும், தென்முகக் கடவுள் தட்சிணாமூர்த்தியை வணங்க வேண்டும், பின் முருகப்பெருமானையும் அவரது துணைவியார்களையும் பின் நடராஜர் உமையாள் – சிவகாமி- வழிபட வேண்டும், துயரங்களை போக்கி தெம்பும் தைரியமும் அளிப்பவளான அன்னை துர்க்கா தேவியையும், பின் தடைகளை போக்கும் பைரவரையும், சண்டிகேஸ்வரையும், பின் நவக்கிரங்களையும் அதற்குரிய காயத்திரி மந்திரத்தை கூறி வழிபடலாம், முடிந்த வரை இறை நாமத்தை உச்சரிப்பதே சாலச் சிறந்தது . அதே போல் தட்சணாமூர்த்தியை – அதாவது குருவை நேராக நின்றும் சனி பகவானை சாய்வாக நின்றும் கும்பிடவேண்டும் என்று முன்னோர்களின் தெய்வ வாக்கு, கல்வி செல்வம் வழங்கும் சரஸ்வதி தேவியையும், செல்வம் பொழிய லட்சுமி தேவியையும் தேவிமந்திரங்களை கூறி வழிபடவேண்டும், ஆலய வழிபாட்டில் ஆர்வம் காட்டினால் அன்றாட வாழ்க்கை நன்றாக அமையும் என்பது ஆன்றோரின் அருள்வாக்கு, ஆலயம் தொழிவது சாலவும் நன்று என்ற அவ்வையின் அருள் வாக்கு,

Advertisements