பிரச்னைகளுக்கும் நிவாரணி – ஓம் சிவசிவ ஓம்

Standard

My guru Arulmigu Sri Sadhananda Swamigal

 ஓம் சிவசிவ ஓம் – திரு.மிஸ்டிக் செல்வம் 

ஓம் சிவசிவ ஒம்

About ‘Om siva siva Om’ Manthira Speech (1hr mp3)

 om siva siva om 108 time Chat

எந்தக் கோவிலுக்குச் சென்றாலும் “சிவசிவ” என்று போட்டிருப்பார்கள்.இதில் அனேக உட்பிரிவுகள் உண்டு.அவைகள் சிவ தீட்சை பெற்றவர்களுக்குத்தான் தெரியும்.மந்திரங்களில் ஜெபிக்க எளிதானது சிவமந்திரம்தான். நமசிவாய, சிவாயநம, சிவாயசிவ,சிவசிவ :இவைகளை ஒரு பக்குவம் அடைந்தவர்கள் தான்,தகுதி பெற்றவர்கள் தான் ஜெபிக்க வேண்டும். இல்லாவிட்டால்,  எதிர்மறை விளைவுகள் உண்டாகும்.மந்திர சக்தியும் வேண்டும்; குடும்பத்திலும் இருக்க வேண்டும்; அனுஷ்டானங்களும் செய்யமுடியாத நிலை இக்கால வேகமான வாழ்க்கை நிலை என்பது அனைவரும் அறிந்ததே!!!

இது சம்பந்தமாக,பல சிவனடியார்களை அணுகி,அடிபணிந்து வேண்டிக் கொண்டதில் ஒரு எளிமையான மந்திரம் கிடைத்தது. அம்மந்திரம் தான் “ஓம் சிவசிவ ஓம்”

இதை ஜாதி மத இனப் பாகுபாடின்றி யார் வேண்டுமானாலும் ஜபிக்கலாம் .ஒரே தகுதி சைவ உணவு பழக்கமும், எந்த உயிரையும் துன்புறுத்தாத ஜீவகாருண்ய உணர்வும் மட்டுமே இருந்தால் போதும்.

இதற்கு தீட்சை பெற வேண்டியதில்லை; ஓம் என்னும் அட்சரத்தில் ஆரம்பித்து ஓம் என்னும் அட்சரத்தில் முடிவதால், குடும்பஸ்தர்களுக்கு ஏற்றது. அவர்களுக்கு அருளும் பொருளும் ஒருங்கே கிடைக்கும்.எல்லா மந்திரங்களும் இதில் அடக்கம் என்பதால்,வேறு எந்த மந்திரம் ஜெபிக்க வேண்டியதில்லை.

முதலில் குலதெய்வத்தை வணங்கிக் கொள்ள வேண்டும்.(அது தெரியாதவர்கள் இஷ்ட தெய்வத்தை வழிபடவேண்டும்) பிறகு விநாயகரை வழிபட…

View original post 354 more words

Advertisements

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கண்ணாடி மாளிகை:

Standard

My guru Arulmigu Sri Sadhananda Swamigal

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கண்ணாடி மாளிகை:

 

 

நமது பிரச்னையை தீர்க்கும் கண்ணாடி

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் அமைந்திருப்பது நாச்சியார் அம்மன் எனப்படும் ஸ்ரீஆண்டாள்.இங்கு ஒரு கண்ணாடி மாளிகை இருக்கின்றது. கண்ணாடி மாளிகை மெய்ஞானமும் விஞ்ஞானமும் கலந்தது என பலவித ஆராய்ச்சிகள் நிரூபிக்கின்றன.40 ஆண்டுகளாக ஆன்மீக ஆராய்ச்சி செய்த திரு.மிஸ்டிக் செல்வம் ஐயா அவர்களும் இதை உறுதிபடுத்தியுள்ளார்.

உங்களது நீண்டகாலப்பிரச்னைகள் தீர ஒரு சுலபப் பரிகாரம்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்குச் சென்று ஆண்டாளுக்கு அர்ச்சனை செய்யவும்.(நம் பெயரில்தான்).பின்னர் கண்ணாடி மாளிகைக்குள் கைகூப்பிய வண்ணம் உங்களது ரூபத்தைப் பார்த்தபடி 16 சுற்று சுற்றுங்கள்.பின்னர்,அதைவிட்டு வெளியே வந்து ஒரு மாட்டிற்கு(கோவில் அருகே அல்லது நமது தெருவில்/ஊரில்)6 பழங்கள் வாங்கிக் கொடுங்கள்.

இப்படி சௌகரியப்பட்ட நாட்களில் 9 நாட்கள் தொடர்ந்து அல்லது விட்டு விட்டோ செய்ய வேண்டும்.

அடுத்த சில வாரங்களில் எல்லாப்பிரச்னைகளும் தீர்ந்துவிடுகின்றன.

சிலருக்கு ஒரே தடவையிலும்,சிலருக்கு 9 தடவைக்குள்ளும்,சிலருக்கு 9 தடவை இப்படி செய்து முடித்தப்பின்னரும் பிரச்னைகள் தீர்ந்திருக்கின்றன.இதற்கு எந்த வித நாள், நட்சத்திரமும் பார்க்க வேண்டாம்.

Thank: http://www.aanmigakkadal.com/2010/12/srivilliputhur-mirror-room.html

View original post

நீங்கள் நினைத்ததையெல்லாம் சாதிக்கலாம்

Standard

Thiyananthin Moothanmai Thanam

My guru Arulmigu Sri Sadhananda Swamigal

சோடசக்கலை யைப் பின்பற்றுங்கள்

 – மிஸ்டிக்செல்வம் 

எப்படி சேட்டுக்கள்,மார்வாடிகள் எல்லாத் தலைமுறையிலும் செல்வந்தர்களாகவே  இருக்கின்றனர் ?

எப்படி டாடாவும் பிர்லாவும் கோடிக்கணக்கில் சம்பாதிக்கின்றனர்?

இப்படி ஒருநாளாவது நீங்கள் சிந்தித்ததுண்டா ?

அவர்கள் தங்களது மாத வருமானத்தில் ஒரு பங்கை அந்த மாதமே அன்னதானம் செய்வதற்கு ஒதுக்கி அந்த மாதமே அன்னதானம் செய்துவிடுகின்றனர்.

இரண்டாவதாக, வீட்டை எப்போதும் குப்பைக்கூளம் இல்லாமலும், கெட்ட வாசனை அடிக்காமலும் பார்த்துக்கொள்கின்றனர்.அதாவது, வீட்டில் நறுமணம் எப்போதும் கமழுமாறு பார்த்துக்கொள்கின்றனர்.( எங்கே நறுமணம் உண்டோ அங்கே அஷ்ட லட்சுமிகளும் வாசம் செய்கிறார்கள்)

மூன்றாவது தான் இப்போது நாம் பார்க்கப்போவது . . ,

அமாவாசை ஆண்களை அதிகம் பாதிக்கிறது.பவுர்ணமி பெண்களை அதிகம்பாதிக்கிறது. அனைத்து உயிரினங்களையும் இந்த இரண்டு திதிகளும் பாதிக்கின்றன .சந்திரன் ஸ்தூல உடலையும், சூரியன் சூட்சும உடலையும் பாதிக்கின்றது.

வளர்பிறையில் பிரதமை முதல் பவுர்ணமி வரை 15 திதிகளும், தேய்பிறையில் பிரதமை முதல் அமாவாசை வரை 15 திதிகள் உள்ளன. திதிகள் என்றால் கலைகள் என்றும் பெயர்ப்படும். 16 வதாக ஒரு கலை இருக்கின்றது.அதுதான் சோடேச கலை!

இந்த சோடேசக்கலையைப் பயன்படுத்தித்தான் சித்தர்கள், துறவிகள், மகான்கள்,செல்வந்தர்கள், சேட்டுகள், மார்வாடிகள்  என வாழையடி வாழையாக செல்வந்தர்களாக இருக்க முடிகின்றது.

தமிழர்களாகிய நாமும் ஏதாவது ஒரு சித்தர் அவர்களின் வழிவம்சமாகத்தான் இருக்கிறோம். இதை அறியும் வரை தின வாழ்க்கையே சோதனையாக இருக்கின்றது.அறிந்ததுமுதல் நிம்மதி,செல்வ வளம், மகிழ்ச்சி,என வாழ்க்கைப்பாதை திசைமாறிவிடுகின்றது.

பிரம்மா, விஷ்ணு,சிவன்…

View original post 320 more words

தமிழ் பன்னிரு திருமுறைகளில் பத்தாம் திருமுறை மந்திரமாக இருப்பது திருமுலரின்

Aside

தமிழ் பன்னிரு திருமுறைகளில் பத்தாம் திருமுறை மந்திரமாக இருப்பது திருமுலரின் திருமந்திரமாகும் அம்மந்திரத்திலிருந்து தினமும் ஒரு மந்திரமாக நம் வலைபதிவில் வெளியிட விரும்பி இச்செயலில் முனைகிேறன் தெய்வ நெறி தமிழ் மண்ணில் தளைத்தோங்க இக் கலியுகத்தில் பக்தி சிந்தனை பெருக அன்பர்கள் கண்டு பயன் பெற அன்புடன் வேண்டுகிேறன்,
அன்பன்
வை,பூமாலை, சுந்தரபாண்டியம்

 

தினமும் ஒரு மந்திரம்
திருமந்திரத்தில் முதல் பாடலாக விநாயகர் வணக்கமாக அமைந்த பாடல் நால்வர்கள் பாடிய தேவார திருமுறைகளில் விநாயகர் துதி இல்லை என்பதை உணரவும், சங்க நூற்களில் மற்றும் திருவாசகத்திலும் விநாயகப் பெருமானை பற்றிய தொடர்களோ பாடல்களோ இல்லாமையை உணரலாம்

ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை
இந்தின் இளம்பிறைபோலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே,

விளக்கம்,- ஐந்து கைகளையும் யானை முகத்தையும் இளம் பிறைச்சந்திரனைப் போன்ற வளைந்த தந்தத்தையும் உடைய சிவபெருமானின் திருமகனும், அறிவுக கொழுநதாக உள்ளவனுமான விநாயகனை உள்ளத்தில் வைத்து, அவன் திருவடிகளையும் பேர்ற்றி கின்றேன்