வாய்த்தது நந்தமக்கு ஈதோர் பிறவி

Standard

வாய்த்தது நந்தமக்கு ஈதோர் பிறவி

நம்முடைய நல்வினைப்பயனாக இந்த உயர்ந்த மனிதப் பிறவியாகி இப்பிறப்பு கிடைத்துள்ளது. இதனை மதித்துச் செயல் பட வேண்டும் நாம். இப்பிறப்பின் நோக்கமே அதுதான்.

வாய்த்தது என்றால் நம் வினைக்கு ஏற்ப இறைவரே அளித்தது இந்த மானிடப்பிறப்பு என்று கொள்ளவேண்டும். நாமே விரும்பிப் பிறந்தோமில்லை. பிறப்பும் இறப்பும் நம் கையில் இல்லை. அது இறைவன் அளித்த வரம்.

எண்ணாயிரம் கோடி உயிரினங்கள் உலகில் உண்டு. இவற்றுள் மனிதப்பிறப்பு பெற்றது பெரும் புண்ணியம். பேசும் திறத்தையும் நினைக்கும் ஆற்றலையும், இறைவர் அளித்துள்ளார். இவற்றை பயன்படுத்தி மேல்நிலை அடைய வேண்டும். இனி பிறவா நிலையை  அடையவேண்டும்.

ஆனால் நாம்என்ன செய்கிறோம். அழியக்கூடியதும் உடன் வராததுமான பொன் பொருள் போகங்கட்கே இப்பிறவியை பயன் படுத்துகிறோம். உலகியல் வாழ்வியற்கு பொருள் தேவைதான் ஆனால் பொருளுக்கே பிறப்பு என்பது கூடாது.

மானிடப்பிறப்பின் மாண்பினை உணராமல் மீண்டும் மீண்டும் பிறவியை அளிக்கக்கூடிய வேலைகளையே செய்கின்றோம். என்கிறார் அப்பர் அடிகள் 6ம் திருமறை தேவாரத்தில்

” திருநாமம் அஞ்செழுத்தை செப்பாராகில்

தீவண்ணர் திறம் ஒருகால் பேசாராகில்

ஒருகாலும் திருக்கோயில் சூழாராகில்

உண்பதன்முன் மலர்பறித்திட்டு உண்ணாராகில்

அருநோய்கள் கெட வெண்ணீறு அணியாராகில்

அளியற்றார் பிறந்தவாறு ஏதோ என்னில்

பெருநோய்கள் மமிக நலியப் பெயர்த்தும் செத்தும்

பிறப்பதற்கே தொழிலாகி இறக்கின்றாரே,

உலகவேலைகளில் காலத்தை கழிக்கும் நாம் இறைவருடைய திருநாமத்தையும், அவருடைய பெருமைகளையும் மனம் குளிரப் பேசுவதில்ைல. ஒரு நாளைக்கு ஒருமுறை கூட சிவாலயம் சென்று வலம் வர இயலவில்ைல. சிவபெருமானாருக்கு மலர் பறித்து இடுவதுமமில்லை. திருவெண்ணீறு அணியும் பழக்கமும் இல்லை , இந்த பிறப்பில் நோய்களால் துன்பபட்டு பிறப்பதற்கே இறப்பது என்பதை தொழிலாகவே கொண்டுள்ளோம். பிறப்பு இறப்பு சூழலில் இருந்து விடுபடுவதற்கு உரிய வழிகளை விட்டவரான பட்டணத்து அடிகளும் இதனை

மாடுண்டு கன்றுண்டு மக்ளளுண்டு என்று மகிழவதெல்லாம்

கேடுண்டு எனும்படி கேட்டுவிட்டோம் இனிக் கேள்மனமே

…………

தோடுண்ட கண்டன் அடியார் நமக்கு துணையும் உண்டே என்கிறார் அடிகள்

நாம் பெற்றுள்ள பொருட் செல்வம், உற்றார் உறவினர் யாவுமே நிலையான இன்பத்தை அளிக்கமுடியாது. இவற்றால் துன்பம்தான் வரும். மண்ணுலக வாழ்வில் ஏற்படும் அனுபவங்களால் நமக்கு உலகியலில் வெறுப்பும் இறையருளில் விரும்பும் வந்துவிட வேண்டும்.

இறைவர் நமக்கு அளித்த மனிதப்பிறவியை மதிக்க வேண்டும். என்று நாவுக்கரசர் சொல்வதன் பொருள் மனிதப் பிறவியை சிவ வழிபாட்டிற்கு பயன்படுத்தி பிறவா நிலையை அடைய வேண்டும் என்பதே ஆகும். உலகப்பொருள் மீது செல்லும் நமது பொறிபுலன்களை இறைமை மீது செலுத்தி பழக வேண்டும். இறைவர் பால் அன்பும் சிவ சிந்தனையும் கொண்டு பிறவா நிலையை உய்ய வழிசெய்வோம்.

திருச்சிற்றம்பலம்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s