டென்ஷன் டென்ஷன்

Standard

டென்ஷன் டென்ஷன்.

நரம்புகள் விம்மிப் புடைக்கும் அளவுக்குச் சில நிகழ்ச்சிகள் நம்மை டென்ஷனாக்கி விடுகின்றன. பல சமயத்தில் படபடப்பு உச்சக்கட்டத்துக்குப் போய் கைகால்களெல்லாம் உதற ஆரம்பித்து விடுகின்றன.  இன்னும் சில சமயம் இரண்டடி தள்ளி நிற்பவனுக்குக் கேட்கும் அளவுக்குக்கூட நம் இதயம் வேகமாகத் துடிக்கிறது.  ஏதோ இனம் புரியாத கவலைக் கடலுக்குள் மூழ்குவது போன்ற பீதி நம் நெஞ்சைக் கவ்விக்கொள்கிறது. எல்லாவற்றுக்கும் காரணம் டென்ஷன்!

பல சமயங்களில் நாம் டென்ஷன் ஆவதே தேவையில்லாத விஷயங்களால்தான்  உதாரணத்துக்கு ஒரு சம்பவம்.. .

பேராசிரியர் ஒருவர் மாற்றலாகி வேறு ஊரிலிருக்கும் கல்லூரிக்குப் போகிறார்.

அவரை வழி அனுப்புவதற்காக அவருடன் பணிபுரியும் நான்கு பேராசிரியர்களும் ரயில் நிலையத்துக்கு வந்திருக்கிறார்கள். ரயில் புறப்பட கொஞ்சம் நேரம் இருக்க.. . பேராசிரியர்கள் பிளாட்பாரத்தில் நின்று ஜாலியாக பேச ஆரம்பிக்கிறார்கள். பேச்சு சுவாரஸ்யத்தில் ரயில் நகர ஆரம்பித்துவிட்டதையும் அவர்கள் கவனிக்கவில்லை.

சடாரெனப் படபடப்பு வந்துவிடுகிறது. எந்த கம்பார்ட்மெண்ட்டில் ஏறினாலும் பரவாயில்லை…

அடுத்த ஸ்டேஷனில் சரியான கம்பார்ட்மெண்ட்டுக்கு வந்துவிடலாம்  என்று நெரிசலில் முட்டிமோதி நான்கு பேராசிரியர்கள் எப்படியோ ரயிலேறி விடுகிறார்கள்.

ஆனால், கையில் பெட்டி படுக்கையுடன் இருந்த ஒரு பேராசிரியரால் மட்டும் ரயிலில் ஏற முடியவில்லை.  அவரைப் பார்த்துப் பரிதாபப்பட்ட போர்ட்டர் ஒருவர், கவலைப்படாதீர்கள்… பத்து நிமிடத்தில் இன்னும் ஒரு ரயில் இருக்கிறது. அதிலே நீங்கள் போய்விடலாம் என்று ஆறுதல் வார்த்தைகள் சொல்கிறார்.

அதற்கு அந்தப் பேராசிரியர், “அடுத்து பத்து நிமிடத்தில் இன்னொரு ரயில் இருப்பது எனக்குத் தெரியும். ஆனால், நான் என்னைப் பற்றிக் கவலைப்படவில்லை. என் சக பேராசிரியர்களை நினைத்தால்தான் கவலையாக இருக்கிறது. காரணம், அவர்கள் என்னை வழியனுப்ப வந்தவர்கள். ஆனால், இங்கே ஏற்பட்ட அமளி துமளியில் அவர்கள் ரயிலில் ஏறிவிட்டார்கள்” என்றார்.

இப்படித்தான் படபடப்பும் டென்ஷனும் சாதாரண விஷயங்களைக்கூட நம் கண்ணிலிருந்து மறைத்து விடுகின்றன.  நாம் பதட்டத்தில் இருக்கும்போது, எத்தனை கஷ்டப்பட்டு ஒரு வேலையைச் செய்தாலும் சரி, அதனால் ஏற்படும் பலன் பெரும்பாலும் பூஜ்யமாகத்தான் இருக்கும்.

ஒரு சமயம் நான்கு குடிகாரர்கள் ஒன்றாக மது அருந்தப் போனார்கள். போதை தலைக்கேறும் மட்டும் குடித்த அவர்கள், வீட்டுக்குத் திரும்புவதற்காகப் புறப்பட்ட நேரத்தில் நன்றாக இருட்டிவிட்டது. ஆற்றைக் கடந்துதான் மறு கரைக்கும் போக வேண்டும்  எனவே பரிசல்காரனைத் தேடினார்கள். அவனைக் காணவில்லை.

ஆனால் பரிசல் மட்டும் இருந்தது.

பரிசலைத் தாங்களே ஓட்டிச் சென்றுவிடலாம் என்ற நம்பிக்கையில், பரிசலில் ஏறி உட்கார்ந்து துடுப்புப் போட ஆரம்பித்தார்கள். ஒரு மணி நேரம் ஆனது.. . இரண்டு மணி நேரமானது.. . மூன்று மணி நேரமும் ஆனது ஆனால் மறுகரை மட்டும் வரவே இல்லை.  அதற்குள் மெல்லப் பொழுதும் விடிந்து… போதையும் மெல்லத் தளிய… அப்போதுதான் கரையில் இருக்கும் மரத்தில் பரிசல் கட்டப்பட்டிருப்பதை அந்த குடிகாரர்கள் கவனித்தார்கள்.

குடிகாரர்கள் கண்களை போதையும் இருட்டும் மறைத்தது போல, பதட்டம் நம்முடைய கண்களைப் பலசமயம் உண்மையையும் நிதர்சனத்தையும் பார்க்கவிடாமல் மறைத்துவிடுகிறது.

புத்த மதத்தில் ஒரு பிரிவாக விளங்கும் ஜென் இலக்கியத்தில் உள்ள ஒரு கதை இது.

ஒர் அரசர் தன் நாட்டுக்கு முதலமைச்சர் ஒருவரைத் தேர்ந்தெடுக்க நினைத்தார். சம தகுதிபெற்ற நான்கு பேர் அவரது அமைச்சரவையில் இருந்ததால், ஏதாவது ஒரு பரீட்சை வைத்து அந்த நால்வரில் ஒருவரை முதலமைச்சராக தேர்ந்தெடுக்க முடிவெடுத்தார்.

ஒரு நாள் அந்த நால்வரையும் அழைத்து, ”என்னிடம் ஒரு பூட்டு இருக்கிறது. கணித முறைப்படி வடிவமைக்கப்பட்ட இந்த விஞ்ஞானப் பூட்டைத் திறக்க நாளை காலை உங்கள் நால்வருக்கும் ஒரு வாய்ப்பு வழங்கப்படும். யார் இந்தப் பூட்டைக் குறைவான நேரத்தில் திறக்கிறாரோ அவரே நாட்டின் முதலமைச்சர் ” என்று அறிவித்தார்.

முதலமைச்சராக வேண்டும் என்ற ஆசையில், அன்று இரவு முழுதும் விடிய விடியப் பூட்டு பற்றிய ஓலைச்சுவடிகளையும் கணிதம் பற்றிய எல்லாக் குறிப்புகளையும் அந்த அமைச்சர்கள் தேடினார்கள். எதுவும் கிடைக்கவில்லை.

அந்த நால்வரில் ஒருவர் மட்டும், ஒரு சில ஓலைச்சுவடிகளைப் புரட்டிவிட்டுத் தூங்கப் போய்விட்டார்.

மறுநாள் அரசவையில். . .

கணிதத் தந்திரத்தால் மட்டுமே திறக்கக்கூடிய பூட்டை அரசரின் சேவகர்கள் தூக்கிக் கொண்டு வந்து நால்வரின் முன்பும் வைத்தார்கள். எதிரே அரசர் வீற்றிருந்தார்.

பூட்டின் பிரமாண்டம் எல்லோரின் படபடப்பையும் இன்னும் அதிகரித்தது. கையோடு எடுத்து வந்த ஓலைச்சுவடிகளை அவர்கள் முன்னும் பின்னும் புரட்டிப் பார்த்தார்கள்.

ஆனால், கணிதப் பூட்டைத் திறக்கும் வழி மட்டும் அவர்களுக்குப் புலப்படவில்லை தோல்வியை ஒப்புக்கொண்டார்கள்.

இரவிலே நன்றாகத் தூங்கிய அந்த ஓர் அமைச்சர், கடைசியாக எழுந்து வந்தார். அவர் பூட்டின் அருகில் வந்து பார்த்தார். என்ன ஆச்சரியம்  பூட்டு பூட்டப்படவே இல்லை. சாவியே இல்லாமல், சூத்திரமே இல்லாமல் அவர் பூட்டை எளிதாகத் திறக்க, அரசர் அவரையே முதலமைச்சர் ஆக்கினார்.

பிரச்னையைத் தீர்க்க வேண்டுமானால், முதலில் பிரச்சனையைப் புரிந்து கொள்ள வேண்டும். பிரச்சனையைப் புரிந்து கொள்ள வேண்டுமென்றால், மனம் பதட்டம் இல்லாமல் சமன் நிலையில் இருக்க வேண்டும்.

நன்றி ;

மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் சுவாமி சுகபோதானந்தா

தொகுப்பு ; வை.பூமாலை, சுந்தரபாண்டியம்

Advertisements

திருவாசகத்தில் மாணிககவாசகர் காட்டும் சிவனாரின் வரலாறுகள்

Standard

திருவாசகத்தில் மாணிககவாசகர் காட்டும் சிவனாரின் வரலாறுகள்

1, சிவனாரின் கிராத வேடம்

தவம் செய்து கொண்டிருந்த அரிச்சுணனின் தவத்தைக் கலைக்க பன்றி உருவுடன் வந்த மூகாசுரனைச் சிவபிரான் வேட்டுவ உருவுடன் வந்து அம்பு எய்திக் கொன்ற வரலாறு கிராத வேடம் எனப்படும். இதன் பொருட்டு விழித்த விஜயனும் தானும் அம்பு விட இருவரின் அம்பும் அசூரனான மூகாசுரன் ேமல் பட பன்றிக்காக இருவரும் சண்டையிட விஜயன் வில்லால் அடித்தது  இதுவே  ” இறைவனை வில்லால் அடித்தான் விஜயன் ” என்ற கூற்று  காணப்படுவதைக் காணலாம்.

2, மெர்கணி அருளிய மேனி

சிவதரிசனம் ெசய்த பின்னரே உண்ணும் நியமத்தை வைத்திருந்த செட்டியார் ஒருவர் வெளியூர் சென்ற போது சிவ பூசை செய்ய சிவலிங்கம் எங்கே தேடியும் இல்லாத போது  அவருடைய மைத்துனர் அவருக்கு தெரியாமல் குதிரைக்கு கொள் வைக்கும்  பையை ஓர் இடத்தில் வைத்து சிவலிங்கம் போல் காட்சி தரும்படி அமைத்து அந்த செட்டியாருக்கு இதோ சிவலிங்கம் என்று காட்டி, சிவ பூசை செய்ய செய்தனன். செட்டியார் பூசை முடித்து உணவு உண்ட பின், மைத்துனன் நகைத்து இது சிவலிங்கம் மன்று, குதிரை உணவு தின்னும் உணவு கொள்ளுப் பை  என்று கூறி நகைத்து கொள்ளுப்பையை எடுக்க  முயன்றான். ஆனால் அக்து அசையாமல் உண்மையான சிவலிங்கமாகவே காணப்பட்டது. மொக்கனி என்பது குதிரையின் கொள்ளுப்பை  எனவே மொக்கனி / சிவலிங்கமாக ஆன பின் மொக்கனிஈசனார் என்னும் பெயர் பெறறது. இதுவும் ஒரு மணிவாசகர் கூறும் மொக்கனிஈசர் வரலாறு.

3. ஐயாறப்பர் தனிற் சைவனானது.

திருவையாற்றில் ஐயாறப்பருக்கு  பூசை செய்யும் ஆதி சைவர்  ஒருவர் தனியாக காசிக்கு சென்றார். திரும்பி வர நெடுநாள் ஆகியும், அவர் வராமையால் அவருக்கு  உரிய காணி ( நிலம்) முற்றும் தமக்கு உரிமை ஆகும் படி அவருடன் வசித்த மற்ற 28 ஆதி சைவர்களும் உரிமை யாக்கிக் கொண்டனர். காசிக்கு சென்ற ஆதி ைசவரின் மனைவியும் மைத்துனனும் மிக வருத்தத்துடன் ஐயாறப்பரிடம் வேண்டினார்.  பெருமான் காசிக்கு சென்ற ஆதி சைவராகவே  கங்கை நீருடன் காசியிலிருந்து வருவது போலவே நேரில் வந்து, சிவலிங்கத்திற்கு பூசை செய்தார். பின் சான்றோர்கள் முன்னிலையில் ஆதிசைவருக்கு நேர்ந்த துயர நிகழ்வு ஆன காணி நிலத்தை மற்ற ஆதி சைவர்களிடமிருந்து மீட்டிக் கொடுத்தார். இது கண்டு ஆதிசைவரின் மனைவியும் குடும்பத்தாரும் மகிழ்ச்சி அடைந்து போது, காசிக்கு சென்ற ஆதிசைவரே அவர்கள்  முன் வந்து சேர , அந்த அதிர்ச்சியில் மூழ்கியிருந்த அவர்தம் மனைவி மற்றும் ஏனையோர் தங்களுக்கு காணி நில்த்தைத மீட்டிக்கொடுத்தது, ஐயாறப்பர் என்பதை கண்டனா்.  அப்போது பெருமான் அடியார் குறை தீ்ர்க்கும் ஐயாறப்பர் என்ற வரலாறு காணும் படி மணிவாசகர் தம் திருவாசகத்தில் காட்டுகின்றாா்.

4. குற்றாலத்தில் குறியாய் இருத்தல்

முன் ஒருகால் திரு முற்றம் என்னும் பெயர் கொண்ட தலத்திற்கு அகத்திய முனிவர் சென்றார். அத்தலத்தில் திருமால் கோயில் கொண்டிரு்ந்தார்.  அகத்தியரை கண்ட திருமாலின் அடியார்கள் அவருடைய திருநீற்று பட்டையினையும் கண்டிகையையும் பார்த்து நீர் இத் தலத்தில் அணுகல் ஆகாது  நீர் ஒரு சைவர், எ்னறனர். நீர் இங்கிருந்து நீங்குக. என்று அவரை வெரட்டினா். வெரட்டப்பட்ட அகத்தியர், திருமாலின் அடியார் போல் வேடம் கொண்டு, அந்த தலத்திற்கு மறுபடியும்,வந்தார். யாம் அழகர் மலையிலிருந்து வருகிறோம். வைணவர்கள்  உடனே பூசைக்கு வேண்டிய பொருட்களை கொண்டு வந்தனா். பூசைக்கு அகத்தியரிடம் கொடுத்தனா். அப்போது அகத்தியர் அவர்களை பார்த்து, ” யாம் செய்யப்போகும் பூசையைப் பாருங்கள்  ” என்று சொல்ல சிவபொருமானை மனதில் கொண்டு, திருமாலின் திருமுடிமேல் தனது கையை வைத்து, ” குறுகு, குறு ” கென அழுத்தினார். உடனே திருமாலின் உருவம்,சிவலிங்கமாக   குறுகியது. இதைக் கண்ட வைணவர்கள், இவன் முன் வந்த அகத்திய முனிவனே என்று கண்டு கொண்டனா். அவரை வளைத்துக் கொண்டனா். அப்போது முனிவரின் வெகுளித்தீ அவர்களை சுட்டெரிக்க அவர்கள் ஒடி மறைந்தனர். என்பது வரலாறு. அத்தலம் தான் இப்போது குறுகு குறுகென ஆன குற்றாலம்  என வழங்கப்படுகிறது.

இவ்வரலாற்றினை வரிவை கந்த பூராணம் 2/28 திருக்குற்றால படலத்தில் காணலாம்.

6, புலி முலை புல்வாய்க்கு அருளியது

ஒரு காட்டில் ஒரு பெண்மான் தன் கன்றை ஒரு புதரில் மறைத்து வைத்துவிட்டு, நீர் பருகும் போது வேடன் ஒருவன் அம்பால் கொல்லப்பட்டு மாண்டது. தாயை இழந்த மான் கன்றை ஒரு பெண்புலி பால்கொடுத்து வளர்க்கும் படி சிவபிரான் அருளினார். இவ்வரலாறு திருவிளையாடல் புராணத்திலும் காணலாம்.

7. உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலம்

இராவணன் மனைவி வண்டோதரி சிவபக்தி மிக்கவள். அவர் ஐந்தெழுத்து மந்திரம் ஓதுபவள். தான் விரும்பிய போதெல்லாம் சிவபிரான் தனக்கு காட்சி தந்தருள ேவண்டு மென வரம் பெற்றவள். ஒரு நாள் தனது பள்ளி யறையில் இருந்து கொண்டே சிவதரிசனம் காண விரும்பினாள். ெபருமானும் பள்ளிக் குப்பாயத்தினராய் காட்சி கொடுத்தார். வண்டோதரி ஆனந்த பரவசம் அடைந்தவளாய் உரத்த குரலில் தோத்திரம் செய்தனள். இந்த ஆரவாரத்தை அடுத்த அறையில் இருந்த இராவணன் கேட்டு என்ன ஆரவாரம் என வினவிக் கொண்டே அங்கு வர இறைவர் குப்பாய ஆடவன் உருவை நீக்கி குழந்தை உருவெடுத்தனர்.

அங்கு வந்த ராவணன் ” இக் குழந்தையின் ஆரவாரம் தானா? என்று வினவினான். வண்டோதரி தனது சேடி ஒருத்தி மறு நாட்காலையில் வருவதாகச் சொல்லி அக் குழந்தையை தன்னிடம் அடைக்கலமாக கொடுத்துச் ெசன்றனள் எனக் கூற  இலங்ேகசன் தன் பள்ளி அறைக்கு மீண்டனன். உடனே குழந்தையும் மாயமாகி மறைந்தது.

இதன் குறிப்பு “எவ்வுருவும் தன்னுருவாய்  இலங்ைக அழகமா வண்டோதரிக்கு பேரருள் இன்ப மளித்த பிரானை ”

என குயில் பத்து பதிகத்திலும், பள்ளிக்கு பாயத்தர்  என அன்னை பத்து பதிகத்திலும் உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலம் என திருவெம்பாவையிலும் பித்த வடிவு கொண்டு இவ்வுலசிற் பிள்ளையுமாய்  உத்திரகோசமங்கை வள்ளல் புத்தி புகுந்த வா  என்று திருப்பூ வல்லியிலும் காணக் கிடைக்கின்றன.

8. தாயான தத்துவன்  வரலாறு

சுவாமி இடத்தில் அன்பு மிக்க ஒரு மாது பிரசவ காலத்தில் தன் தாய் வந்து உதவப் பெறாமல் சங்கடப்படும் ேபாது, சுவாமியே அவள் தாய் போல் வந்து மருத்துவம் பார்த்து ஆதரித்து பிரசவம் பார்த்தார். என்பது வரலாறு  அந் நிகழ்வு நடந்த இடம் திருச்சிராப்பள்ளி, இதனால் சுவாமிக்கு தாயுமானவன் எனப் பெயர் வந்தது. இதுவே தாயான தத்துவன் வரலாறு.

9. இந்திரனை தோள் நெரித்தது

முன்பு ஒரு காலத்தில் இந்திரன் சிவபிரானை மதியாமல் திருமாலை வைத்துக் கொண்டு யாகம் ெசய்ய ஆரம்பித்தான். இதனால் சிவபிரான் கோபம் முற்று இந்திரனை மமதையை அடக்க அவனது தோளை நெெரித்தார்.  இதன் வரலாறு திருவுந்தியார்  பாடலில் காணலாம்..

10. அத்தி உரித்தது.

பிரேதவரிடம் வரம் பெற்ற கயாசுரன் என்பவன் ேதவர்களை அழிக்க தொடங்கினான். பெருமான் யானை உருவம் கொண்ட அவனை கிழித்து யானையின் தோலை போர்வையாக ேபார்த்தி கொண்டார்.

11. பாலகனார்க்கு பாற்கடல் ஈந்தது

உபமன்யு முனிவர் குழந்தை பருவத்தில் பால் வேண்டி அழுத போது, சிவபெருமான் திருப்பாற்கடலையே அவர் பருக  வரவழைத்து தந்தனர்.

” பாலுக்கு பாலகன் வே்ண்டி அழுதிட  பாற்கடற் ஈந்த பிரான் ”  என்ற பாடல் வாயிலாக அறியலாம்

12. பிரமன் தலை அறுபட்டது

பிரமனுடைய தான் தான உயர்ந்தவன் என்ற அகந்தயை அடக்க பிரான் பிரமனுடைய உச்சித்தலையில் உள்ள வாய் சிவபிரானை இகழ்ந்து பேச பெருமான் வைரவர் கடவுளை ஏவி அவர் உச்சி தலையை நகத்தால் களைந்தனா்.

13.  வெள்ளம் தரும் ……..  வள்ளல்

சிவபுரம் என்னும் ஊருக்கு  திருப்பெருந்துறை என்ற  பெயரும் உ்ண்டு. சிவபுரத்து அந்தணர்களுக்கு பாண்டிய மன்னன் அளித்த நிலங்களை சில ஆண்டுகளுக்கு பின் அவ் வூர் அதிபன் என்ற ” லுண்டாக்கன் ” என்பவன் ைகப்பற்றிக் ெகாண்டான். அந்தனர்கள இந்த அநீதியை அப்போதுள்ள பாண்டிய மன்னனிடம் முறையிட்டனா். இந்த விசாரனையில்  அந்த நிலங்கள் அனைத்தும் தனக்கு உரியது என்றும், இதற்கு உறுதி சான்றாக இந் நிலங்களில் எங்கு , எவ்வளவு ஆழத்தில் வெட்டினாலும், நீர் வராது என்று வாதித்தான். அப்போது அந்தணர் பிள்ளைகளுக்கு வேத பாடம் சொல்லிக் கொடுத்த வாத்தியார் சாட்சியாக வந்து, இந்த  நிலங்களில் எங்கு வெட்டினாலும், ஒரு முழ ஆழத்திற்குள் தண்ணீர் வந்து விடும் என்று கூற, அதன்படி ஒேர  வெட்டில் நீர் பொங்கி கிளம்பி  எங்கும் வெள்ளமாய் பரவியிற்று இதைக்கண்ட  லுண்டாக்கன் அச்சம் உற்றான். இவ்வேளையில்  சாட்சி சொன்ன வாத்தியார் யாரும் காணா வண்ணம் மறைந்தார்.. அந்த வாத்தியார் சிவபிரானே என தெளிந்த பாண்டியனும் அந்தணரும் வியப்புற்றனர். எங்கும் வெள்ளமாய் பரவிய  காரணத்தால் சிவபுரம் ெபருந்துறை ஆயிற்று. இதுவே தற்போது திருப்பெருந்துறை என வரக் காரணமாய்  ஆயிற்று.

திருச்சிற்றம்பலம் \ ஒம் நமசிவய ஓம்\

தொகுப்பு ;வை.பூமாலை, சுந்தரபாண்டியம்

நன்றி.  திருவாசக ஒளி நெறிக்கட்டுரை

ேமலும் பல ஆன்மிகத்தகவலுக்கு

http://vpoompalani05.blogspot.in/

https://vpoompalani05.wordpress.com

http://www.vpoompalani05.weebly.com

பிறவி நோய் நீங்கும் வழி

Standard

பிறவி நோய் நீங்கும் வழி

கல்லோடுகட்டிக் கடலில் இட்டாலும் நற்றுணையாவது நமச்சிவாயவே

இந்து சைவ மதத்தின் சின்னங்களான விபூதி, ருத்ராக்ஷம் தரிப்பது எவ்வளவு முக்கியமானதோ அதைப்போலவே பஞ்சாக்ஷர ஜபம் செய்வதையும் நாம் ஒவ்வொருவரும் மேற்கொள்ள  வேண்டும். அதைக் காட்டிலும் உயர்ந்த மந்திரம் எதுவும் இல்லை. நான்கு வேதங்களுக்கு நடுவில் இருக்கும் ஸ்ரீ ருத்ரத்தின் மத்தியில் இருப்பது இதன் பெருமையைக் காட்டுகிறது. அதுவே மெய்ப்பொருளாகவும் விளங்குகிறது. அதனால் தான் சம்பந்தரும், ” வேதம் நான்கினும் மெய்ப்பொருள் ஆவது நாதன் நாமம் நமச்சிவாயவே” என்று அருளினார். எப்படிப்பட்ட பாதகங்கள் செய்தவரையும் உய்விக்கும் மகா மந்திரம் இது.    ” உ(ன்)னை நான் மறக்கினும் சொல்லும் நா  நமச்சிவாயவே” என்றார் சுந்தரர். இப்படிப்பட்ட   உயர்ந்த மந்திரத்தை ஜபம் செய்யாமல் இருப்பவர்கள் இக்காலத்தில் ஏராளம் உண்டு அல்லவா?

நம்முடைய திருமுறைகளில் பெரும்பாலனவை வினை நீக்கம் பற்றியே அருளப்பட்டுள்ளன. வினை கழிய என்ன செய்வது என்று நமது அருளாளர்களே குறிப்பிட்டுள்ளார்கள். அது கைவினை செய்து எம்பிரான் கழல் போற்றுவதே ஆகும். கைவினை செய்தல் என்றால், திருக்கோவில்களில் அலகிடுதல், மெழுகுதல், பூப்பறித்து பூமாலை சாற்றுதல், பாமாலை பாடுதல், தலையார கும்பிடுதல், கூத்தாடுதல், போன்ற தொண்டுகளை செய்து இறைவன் திருவடியை போற்றி பரவுதன் மூலம் வினைப்பயின்று இன்னும் பிறவாமை என்ற  நீக்கம் பெறலாம், எ்னபது தெளிவு், நாம் இந்த மானிடப்பிறப்பு பிறந்ததன் பயன் பெற உடலுறுப்புக்ள நலமடையவும், நம் உடல் உறுப்புக்ளால் வழிபாட்டிற்கு எவ்வாறு பயன்பட செய்ய வேண்டும் என்று திருமுறைகள் கூறுவதைப் பார்ப்போம்.

யாக்கை ஆகிய நம் உடம்பு இறைவன் நிமித்தம் பயன்பாட்டுத்தன்மை எத்தகையது என்பதை திருமுறைகள் காட்டும் நெறி

தலை; தலையை தாழ்த்தி வணங்க வேண்டும் ” தலையே நீ வணங்காய் ………….. தலைவனை ” ,,,,, அப்பர்

” சிரங்குவிவார் ஓங்குவிக்கும் ……… ”  சிவபுராணம்

கண்கள் ;  கண்காள் காண்மின்களோ …. கடல் நஞ்சுண்ட கண்டனை தன்னை …………….”   அப்பர் அடிகள்

செவி ; “செவிகாள் கேண்மின்களோ ….. எரிபோல் மேனிபிரானை”

வாய் ; வாயே வாழ்த்து கண்டாய் ….. மதயானை உரிபோர்த்தானை

மூக்கு ; மூக்ேக நீ முரலாய் ….. முது காடுறை முக்கண்ணனை

நெஞ்சு ; நெஞ்சே நீ நினையாய் ……. நிமிர் புன்சடை நின்மலனை

கைகள் ; கைகாள் கூப்பி தொழீர் ……. பாம்பணிந்த பரமனை ஆக்கை (உடல்) ; ஆக்கையால் பயன் என் ….. அரன் கோவில் வலம் வருதல்

கால்கள் ; கால்களால் பயன் … கோவில்கோபுரங்களை வலம் வரல்

அரிது, அரிது மானிடராய் பிறத்தல் அரிது, அவ்வாறு பிறந்தக்கால் கூன், செவிடு, முடம் அற்று பிறத்தல் அரிது. இவ்வாறு ஒச்சமின்றி பிறந்த நம் உடல் ெகாண்டு ஈசனை வணங்க பயன்படுத்தாத இந்த ஆக்கையினால் பயன் என்ன? ” உற்றார் ஆர் உளரோ … உயிர் கொண்டு போம் பொழுது குற்றாலத்துறை கூத்தன் அல்லால் நமக்கு உற்றார் ஆர் உளரோ ” அப்பர்  திருமுறை பாடல்

இதனையே பட்டினத்து அடிகளும் “ஊரும் சதமல்ல , உற்றார் சதமல்ல, …………………………. கச்சியப்பா நீ யே சதம் ” என்கிறார், எனவே இப்பிறப்பின் பிறவி பயனை அடையவும், இன்னும் பிறவா நிலை பெறவும் நம் பெற்ற ஆக்கையால் ஆலவாய் சுந்தரனை வணங்கி பாடி பிறவி பயன் பெற்று இனி பிறவாத தன்மை வந்து ஏய்தல் வேண்டும்.

சுந்தரரர் இதனையே ” ….. பெற்றலும் பிறந்தேன் இனிப் பிறவாத தன்மை வந்தெய்தினேன் …………. ” என்னிறார்.

பெருமானது புகழைப் பேசாத வாயும் ஒரு வாயா? அவனை வாழ்த்துவதற்காகவே  மனிதப் பிறவிக்குப் பேச்சினைக் கொடுத்த இறைவனுக்கு நன்றி செலுத்த வேண்டாமா? வாயற்ற ஜீவனுக்கும் நமக்கும் பிறகு என்னதான் வித்தியாசம்? இன்னும் சொல்லப்போனால் உண்ணுவதும்  உறங்குவதும்  தமது இனத்தைப் பெருக்குவதும் மட்டுமே செய்யும் அவை நம்மைப் போன்று  மனம்,மெய்,மொழிகளால் பாதகங்கள் (தீவினைகள் ) செய்வதில்லையே! எனவே அவை நம்மைக் காட்டிலும் உயர்ந்தவை எனக் கொள்வதில் என்ன  தவறு?

” பெரும்பற்றப் புலியூரானைப் பேசாத நாள் எல்லாம் பிறவா நாள் ” என்றார் அப்பர் பெருமான். அவ்வாறு பேசாதவர்கள் வாய் இருந்தும் ஊமைகள் அல்லவா!

தினந்தோறும் இறைவனது திருக்கோயிலுக்குச் சென்று  அலகிட்டு,மெழுகி, உழவாரத் தொண்டு செய்து, பூமாலைகளும்,நறும் சாந்தமும்,நீரும் சமர்ப்பித்து, வாயார அவனைத் துதித்து வந்தால் வாழ்க்கை நிலைபெறும். ஈடேறும். நமது வாழ் நாட்கள் எவ்வளவு என்று யாருக்குத் தெரியும்? எனவே ஒவ்வொரு நாளையும் இறைத் தொண்டுக்கு அர்ப்பணிக்க வேண்டும் என்பார் சம்பந்தர்.

நாம் உண்ணும் உணவு இறைவன் அருளால் கிடைத்தது என்பதை மறக்கலாகாது. மழை இறைவனது அருட்கொடை. வானம் பொய்த்தால் உலகே அழியும். ஆகவே, “பயிர் காட்டும் புயலாக ” விளங்கும் பெருமானை நன்றியறிதலுடன் உண்பதன் முன் மலரிட்டு அர்ச்சித்து, நிவேதித்து, அதன் பிறகே உணவு உட்கொள்வதை நியமமாகக் கொள்ள வேண்டும்.

நமது வினையின் பயனாக உடல் ரீதியாகத் துன்பப்படுகிறோம். எத்தனையோ நோய்கள் நம்மைத் தாக்குகின்றன. அதனைத் தாங்கும் ஆதிக் கவசமாகத் திருவெண்ணீறு அணிய வேண்டும். முன்பெல்லாம், நோய்வாய்ப் பட்டவர்களுக்கு மந்திரித்து விபூதி கொடுத்து வந்தார்கள். மருந்தையே நாடிஇருக்கும் இக்காலத்தில் அவ்வழக்கம் குறைந்து புதுப் புது நோய்கள் நம்மைத் தாக்குகின்றன. அதனால் நாம்  மன அமைதி இழந்து தவிக்கிறோம்.

மொத்தமாகச் சொல்லப்போனால், பஞ்சாக்ஷரம் சொல்லாமலும், பெருமான் புகழை வாயாரச் சொல்லாமலும் ,நித்தலும் திருக்கோயிலுக்குச் செல்லாமலும், உண்பதன் முன் பெருமானை மலரிட்டு வணங்காமலும் , திருநீறு அணியாமலும் பிறவியைக் கழிப்பவர்கள் மீண்டும் பிறவி எடுத்துத் துன்பப் படுவர். நோய்கள் நலியப் பெறுவர். இவ்வாறு பிறப்பதும் இறப்பதுமே தொழிலாகக் கொள்பவர்கள் ஆகி விடுகிறார்கள் என்பதைப் பின்வரும் அப்பர் தேவாரப் பாடல் அழகாக நமக்கு உணர்த்துகிறது:

“திருநாமம் அஞ்செழுத்தும் செப்பாராகில்

தீவண்ணர் திறம் ஒருகால் பேசாராகில்

ஒருகாலும் திருக் கோயில் சூழாராகில்

உண்பதன் முன் மலர் பறித்து இட்டு உண்ணாராகில்

அரு நோய்கள் கெட வெண்ணீறு அணியாராகில்

அளியற்றார் பிறந்தவாறு ஏதோ என்னில்

பெருநோய்கள் மிக நலியப் பெயர்த்தும்

செத்துப் பிறப்பதற்கே தொழிலாகி இறக்கின்றாரே. ”

பிறவியாகிய பெரும் பிணி வராமல் இருக்க அப்பர் பெருமான் நமக்கு உபதேசிக்கும் நல்வழியை நாம் பின்பற்றிப் பிறவாமையாகிய பெரு வரம் பெறுவோம்.

திருச்சிற்றம்பலம்.

தொகுப்பு ;வை.பூமாலை, சுந்தரபாண்டியம்