Standard

எங்கள் ஊரின் மண்ணின் மைந்தர் முதல் பட்டதாரி

சுந்தரபாண்டியம் திரு பிடிஓ கருப்பசாமி அவர்களின் 80 வயது தாண்டி சதா அபிசேக விழா கொண்டாடிய போது முகநூலில் வெளியிடப்பட்ட கட்டுரைDSC_0000086.jpgவாழ்த்துவோம் ! வணங்குவோம்!!

சுந்தரபாணடியம் பிடிஒ கருப்பசாமி-பார்வதி தம்பதியரின் சதாபிசேக விழா

விருதுநகர் மாவட்டம் -ஸ்ரீவில்லிபத்தூர் வட்டம் சுந்தரபாண்டியம் மண்ணிற்கு பெருமை சேர்த்தவர்களில். சுந்தரபாண்டியம் சாலியர் மூக வம்சா வழியில் முதல் பட்டதாரி ஆகி தான் பெற்ற கல்வியின் பயனை கற்றறிவு இல்லாதவ்ர்கள் எல்லோரும் பய்ன்பட வேண்டுமென்ற நல்லெண்ணம் கொண்டு. தான் பெற்ற வறுமை. க்ஸ்டங்களை வரும் சந்ததியர்களும் வம்சாவழியினிர்களும் கஷ்டப்படக்கூடாது என்ற எண்ணத்தில் தன்க்கு கிைட்த்த வாய்ப்பு தனது திறமை. பொருள் உதவி கள் வழங்கி, இன்றுவரை தன்னால் இயன்ற அளவில் முடியாது என்று மறுக்காத நிலையில், ஆடம்பரமற்ற உதவிகள் செய்து, அதனால் முன்னேறிய குடும்பங்களை கண்டு தானும் மகிந்து, இன்று 80 அகவை கடந்து சதாபிஷேக விழா காணும் ” சுந்தரபாண்டியம் பட்டியாவீட்டு பிடிஒ கருப்பசாமி ” என்ற புகழோடு சுந்தரபாண்டியத்திற்கு பெருமை சேர்த்து, ஏழுர் சாலியர் குலத்தில் ஆண்டிபட்டி என்றால் சடையாண்டி, ஸ்ரீவி என்றால் தரகனார் மற்றும் பிஏ கோவிநத்ன், புனல்வேலி என்றால் கிருஷ்ணமூப்பர், சத்திரபட்டி என்றால் பண்ணையார் என்பது போல் சுந்தரபாண்டியம் என்றால் பிடிஒ கருப்பசாமி என்ற அளவிற்கு சுந்தரபாண்டியத்திற்கு பெருமை சேர்த்து கொடுத்த இம்மண்ணின் மைந்தர் உயர்திரு க,கருப்பசாமி – உமையாள்பார்வதி தம்பதியரின் 80 அகவை தாண்டி சதாபிஷே விஷா காணும் இம்மண்ணின் மைந்தரிடம் 3,6,2013 அன்று சுந்தரபாண்டியம் சாலியர் சமுதாய திருமண மண்டபத்தில் நடைபெறும் சதாபிஷேக விழாவில் நாமும் கலந்து அன்னாரை வாழ்த்தி , வணங்கி ஆசி பெறுவோம்,

இன்று 80 அகவை தாண்டி சதாபிஷேகம் காணும் மதிப்பிற்குரிய பெரியவர் திரு,பிடிஒ கருப்பசாமி அவர்களின் நற்குண்ங்களை இந்நாளில் நினைவுகொள்வது அன்னாரின் பெருமை சேர்ப்பதாகும், இளம் வயதில் மிகவும் ஏழை-வறுமை படிப்பறிவற்ற குடும்பத்தில் தோன்றியதால் தான் பெற்ற வறுமை, படிப்பறிவின்மை என்பது தங்களின் சந்ததியர்களுக்கு அறவே இருக்கக் கூடாது என அன்றே முழு முயற்சி,தன்னம்பிக்கை விடாமுயற்சி போன்ற எண்ணங்களின் சிந்தனையுடன் பேராடி சுந்தரபாண்டியம் நெசவாளர் – சாலியர் மக்களின் முத்லபட்டதாரியாகி,அரசுப்பணியில் சேர்ந்து, வெற்றி கண்டு தன் வறுமைக்கும், படிப்பறிவற்ற தனது குடும்பத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்தார், இளம் பருவத்தில் தொட்கக கல்வி கூட பள்ளி மூலம் தொடர முடியாத சூழ்நிலையில் தனியார் ஆசிரியர் ஒருவர் மூலம் இஎஸ்எல்சி என்ற 8வகுப்பு அரசு தேர்வு எழுதி அதன் பின் ஸ்ரீவி, சிஎம்எஸ் பள்ளியில் எஸ்எஸ்எல்சி பயின்று இன்டர் மிடிேய்ட மதுரை தியாகராஜா கல்லூரியில பயின்று பின் அங்கேயே பிஏ பட்டம் பெற்றார்,இவ்வாறு பள்ளி வாழ்க்கை தொடர இதுதான் வழி என வழிகாட்டல் வழியின்றி தானே தனக் கென்று வழிசெய்து தாய் தந்தையரின் குறைந்த வருவாய் பொருளாதார நிலையில் படிப்பதற்கென்று சரியான ஒளிவிளக்கோ இடவசதியோ இல்லாத சூழலில் அன்றைய வசதி கொண்ட தெறகுகீழ்த்தெருவிலுள்ள அழகு மூப்பனார் அவர்களின் வீட்டு மேல் மாடி வரண்டாவில் சிறிய மண்ணெண்ணை சிமினி விளக்குடன் தனது படிப்பு காலத்தை கழித்து வெற்றி கண்டார், அன்னார் கல்லூரி வாழ்க்கையில் இருந்த போதும் எளிய உடை எல்லோரிடமும் அன்பாக பழகும் தன்மை தனது வயதிற்கு குறைந்தவர்கள் பள்ளி படிப்பை முடிகக கையாளும – வழிகாட்டல் முயற்சி என்பது அன்றிலிருந்து இன்றுவரை மாறா தன்மை கொண்டது,

அன்னாரின் உயர்ந்த பண்புகளை சீரிய நல்வழிகளையும் பெற அவர் குருவாகவும், நான் சிஷ்யனாகவும் அடைய இரண்டு வாய்ப்புகள் எனக்கு கிடைத்தது,அதை இன்றளவும் என்னால் மறக்கமுடியாது. அதில் ஒன்று நான் சுந்தரபாணடியம் அரசு உயர்நிலைப்பள்ளியில் 5வது படிவம் (அதாவது 10ம்வகுப்பு)படிக்கும் போது எங்கள் பள்ளியில் எஙக்ள வகுப்பிற்கு ஆங்கிலப்பாடம் நடத்தும் துணை ஆசிரியராக பணியாற்றிய போது, அவரிடம் பயிலும் மாணவனாக இருந்த பெருமை எனக்கு சேரும், அன்னார் அன்றைய நாளில் பாடம் நடத்திய விதம் எல்லோரையும் ஆங்கிலப் பாடத்தின் மேல் கொண்ட பயம் விலகியது, 2வது முறையாக அன்னார் பஞ்சாயத்து யுனியன் வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றிய காலத்தில் அன்னார் காரியபட்டி வட்டார வளர்ச்சி அலுவலகராக இருந்த போது நான் அங்கு வேளாண்மை பண்டகசாலையில் உதவி வேளாண்மை அலுவலராக பணியாற்றிய காலத்தில் அன்னரின் நிர்வாக கட்டுபாட்டில் பணிபுரியும் வாய்ப்பு கிடைத்து, அன்னார் காரியபட்டியில் பிடிஒ வாக பணியாற்றிய போது அன்னார் அருப்புககோட்டை கோட்டத்திற்கே கோட்ட வளர்ச்சி அலுவலராக நியமனம் செய்யப்பட்டார், பின் நானும் அக்கோட்டத்தில் அருப்புக்கோட்டையில் உதவி விதை அலுவலராக பணியாற்ற வாய்ப்பு கிடைத்து,அன்னார் உயர் அலுவலராக பணியாற்றிய போது சக பணியாளர்களிடம் தன் க்டடுப்பாட்டில் உள்ள பணியாள்ர்களிடமும் எப்போதும் அன்புடனும் அரவணைப்புபடனும் நேர்மை, காந்திய கொள்கையான சத்திய சமதர்ம கடமை உணர்வுடன் பணியாற்றிய சிறப்பு அன்னாரின் புகழுக்கு பெருமை சேர்ததது, அவர் சென்று பணியாற்றி ய இடமெல்லாம் சீரும் சிறப்பும் பெற்றவர்

” ஊருனி நீர்நிறைத் தற்றே உலகவாம்

பேரறி வாளன் திரு,

என்ற வள்ளுவர் வாக்கினுக்கிணங்க அன்னார் தான் பெற்ற கல்வி பயன் சுந்தரபாண்டியம் சாலிய வம்ச வழியினரும் அடைய வேண்டுெம்ன்ற தனியாத தாகத்தால் எங்கள் தெருவிலுள்ள இளம் வயதினரை அவர் கல்விக்காக வழிகாட்டிய நிகழ்வுகள் எங்களால் மற்கக முடியாது, அவரவர் வசதிக்கேற்ப என்ன படிப்பு எங்கு படிக்கலாம் என்ற வழிகாட்டும் தூண்டிதல் அன்னாருக்கேஉயரிய பண்பாக அமைந்தது, அதும்ட்டுமன்றி தன்னால் முடிந்த பொருள் உதவிகளும்செய்து அன்பு காட்டியுள்ளார், எஙக்கள் பகுதியில் வாசகசாலையுடன் இணைந்த பொது மண்டபம் கட்ட ஆலோசனை பெற அன்னாரிடம் சென்ற போது அன்னார் குடும்பமே தானே முன்வந்து மண்டபத்திற்காக பெரும் தொகை வழங்கி அன்னாரின் தாய்தந்தையரின் நினைவாக மண்டபம் கட்ட உதவி செய்தது அவருடைய ஈகை குணத்தை தெள்ளத தெளிவாக காட்டும்,

அது ம்டடுமன்றி அன்னார் இன்று வரை பணியாற்றும் கலசலிங்கம் பல்கலையில் உயர் கல்விக்காக செல்லும் ஏழை எளிய விபரமற்ற மாணவர்களுக்கு உகந்த துறையினை எடுத்துக் கூறி படிப்பதற்கும் கல்வி வள்ளல் அவர்களிடம் அறிமுகப்படுத்தியும்,குறைந்த நன்கொடையில் சேர்த்து அவர்களை சிறந்த பட்டதாரிகளாக ஆக்கிய பெருமை அவருக்கேசேரும், மேலும் உடலால், உழைப்பால் இயலாதருக்கு வயதான முதியோருக்கு தன்னால் முடிந்த உதவிகளை இன்றளவும் செய்து வருகிறார், நெசவு தொழில் நலிவடைந்த போது கல்வி தந்தையிடம் நேரிடையாக கூறி பல்கலை கல்லூரிகளில் வேலை வாய்ப்புகளை பெற்றுத்தந்துள்ளார்

அய்யா அவர்கள் சிறந்த பகுத்தறிவு சிந்தனையாளர் எழுத்தாசியர் தன்னை கொண்டவர், அன்னார் தன் இளமைப்பருவத்திலேயே எழுத்தாளாராக இருந்தவர் தன்னுடைய மைத்துனர் ஆர்,வி,பி, கரிகாலன் அவர்கள் நடத்திய திரைமுழக்கம் என்ற திங்கள் இதழில் எழுதிய பெருமை படைத்தவர், அன்னார் இன்றளவும் இதனை தொடர்ந்து வருகிறார் நம் கல்வி வள்ளலின் சாலியர் குரலில் இன்றளவும் அன்னாரின் சிற்ந்த க்டடுரைகளை காணலாம்,அப்பணி இனறும் தொடர்கிறது, அதும்ட்டுமன்றி பெரியாரின் முற்போக்கு சிந்தனையாளர், சுயமரியாதை சிந்தனையில் மிகுந்த நாட்டம் உள்ளவர் தன்னுடைய திருமணத்தை அக்காலத்திலேயே ஆன்மீக முறைப்படி நடப்பதை தவிர்த்து புரோகிதர்,ஒதுவார்கள் இல்லாமல் கட்டிமேளம் சடங்கு சாஸ்திர முறைகள் இல்லாமல் பேராசிரியர் தலைமையில், பெரியோர்கள் முன்னிலையில் மேடை நிகழ்ச்சியாக மணமக்கள் மாலை மாற்றும் முறையில் திருமணத்தை நடத்தி சீர்திருத்த முறை கல்யாணமாக ஆக்கி சீர்திருத்த சிந்தனையாளர், முற்போக்கு கருத்தில் தீவிர சிந்தனை இருந்தாலும் ஊர் நடைமுறை பழக்க வழக்கங்களுக்கு ஏற்ப தெய்வீக காரியங்களுக்கும் மரியாதை கொடுப்பவர், கோவில் திருப்பணிகளுக்கு நன்கொடை வழங்க்ல் தெய்வீக நிகழ்வுகளில் ஊரார் உறறார் மனம் சுழியாது அதற்கேற்ப பங்கு கொள்ளும் தன்மை கொண்டவர்,

பொது வாழ்வு மற்றுமன்றி தனது சொந்த வாழ்விலும் தனது வாரிசுகளை வளமுடன் வாழச் செய்தவர்,

“தந்தை மகற்காட்டும் நன்றி அவையத்து

முந்தி இருப்பச செயல்” என்ற வள்ளுவன் வாக்கிணங்க தனது புதல்வர்கள் புதல்விகளை நன் முறையில் ஏனையோருக்கு எடுத்துக்காட்டாக விளங்கச் செய்தவர்,

அதற்கொப்ப அன்னர் புதல்வ மக்களும்

” மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவண்தந்தை

என்றோற்றான் கொல் ” என்ற வள்ளுவன் வாக்கிற்கிணங்க அன்னாரின் மக்களும் இன்று கல்வி தொழில் பதவிகளில் உயர்ந்து குன்றின்மேல்இட்ட தீபமாக திகழ்கின்றனர், எனவே அன்னார் தற்போதும் எந்த கவலையும் இன்றி சேவை மனபான்மையில பணியுடன் அமாந்த பணியை இன்னும் செய்து கொண்டு சிற்ப்புடன் வாழ்ந்து வருகிறார்,

சுந்தரபாண்டியம் சாலியர் தெற்குத் தெருவில் அவர்களின் கொடைத்தன்னைக்கு எடுத்துக்காட்டாக அவருடைய விடாமுயற்சியால் ஓட்டுக்கட்டிடமாக இருந்த பொதுச்சாவடியை தனது அரிய சாதனையால், பக்கா கட்டிடமாக ரூபாய் ஒரு லட்சம் நன்கொடை வழங்கி வாசக சாலையாகவும், சமுதாய கூடமாகவும், அமைத்து கருப்பசாமி பார்வதி அம்மாள் கட்டிடமாக கட்டிக்கொடுத்த பெருமை அவரின் குடும்பத்தாரையே சாரும், இந்த தெரு, சமுதாய மக்கள் இதனை இன்னும் நினைவு கூறும்படி அமைந்துள்ளது.

கட்டிட திறப்பு விழாவின் போது எடுத்த புகைப்படம்Picture 347.jpgPicture 364.jpg

அன்னார் இன்னும் நுாறு அகவை தாண்டி நூற்றாண்டு விழா கொண்டாடும் வாய்ப்பினை அளிக்க ஆண்டவனை வேண்டி நாமும் அன்னாரிடம் ஆசிபெற்று நாமும் சிறக்க, அவரும் சிறக்க ஆசி பெறுவோம்,

இவருடைய பணியில் மிகவும் சிறப்பு அருள்மிகு கருப்பசாமி / பார்வதி அம்மாள் பொது நல அறக்கட்டளை சுந்தரபாண்டியம் என்ற அறக்கட்டளை மூலம் இன்றளவும் இலவச எல்லா நோய்களுக்கும், மருந்துகளுடன் மருத்துவ சேவை வழங்கி வருவது இது வரை யாரும் செய்திடாத ஒன்றாகவே எங்களுக்கு தெரிகிறது. அந்த அறக்கட்டளையின்  நோயாளியின் மருத்துவ சீட்டு இதோ !

அவர்களின் பணி தொடரட்டும், அவர்களின் குடும்பம் ஆலபோல் பெருகி, அருகுபோல் வேர் ஊன்றி செழிக்கட்டும், பேரரறிவாளன் ஊரணி போல் எப்போதும் நீர் நிறைந்து சாலிய சமுதாய மக்களின் துயர் துடைக்கவும் பணி சிறக்கவும் வாழ்த்தி வணங்குகிறேன்,

DSC_0000091.jpg இவண்: வை, பூமாலை சுந்தரபாண்டியம்

0014538789.fid.jpgகட்டுரையாளர் ; வை.பூமாலை, சுந்தரபாண்டியம்

Advertisements

ஆன்மீக பொன்மொழிகள்

Standard

காஞ்சி காமகோடி மகான் மகா சுவாமிகளின் சொற்பொழிவுகளிடமிருந்து எடுக்கப்பட்ட

ஆன்மீக பொன்மொழிகள், 

காஞ்சி காமகோடி மகான் மகா சுவாமிகளின் சொற்பொழிவுகளிடமிருந்து எடுக்கப்பட்ட ஆன்மீக பொன்மொழிகள்,

1) சாஸ்திரங்களைத் தெளிவாக அறிந்து அதன்படி மக்களை வழிநடத்தி அதை அஞுசரிப்பவர்தான் ஆசார்யார்

2) சாஸ்திரம் மட்டும் தெரிந்து கொண்டிருந்தால் அவர் வித்வான்தான்

3) சாஸ்திரம் மட்டடும் தெரிந்தால் அவர் – வித்வான். சாஸ்திரம் அஞுபவிப்பவர் – ஞானி சாஸ்திரம் உபதேசம் செய்பவர் – பிரசாரகர்

4) முதலில் அழகாகத் தோன்யதுதான் அப்புறம் உபத்திரமாக போகிறது

5) அவரவர்கள் இருக்கிற இடத்தில் இருந்தால் தான் செளக்கியம்

6) பரமாத்மாவிடம் நம்மையறியாமல் சித்தத்தை சேர்ப்பதுதான் பக்தி

7) உண்மை என்பது அறிவுதான் என்றால் அறிகிற அந்த சக்தியே உண்மை – அதுவே சத்தியம்

8) ஆசைகளை அடக்கி, மாயையை உடைத்தெறி

9) நிறைநது நின்ற ஒன்றை தெரிந்து விட்டால் நிறைந்து போகிறது.

10) சாதாரணமாக ஏதாவது ஓர் அங்கத்தில் ஊனம் உள்ளவர்களுக்கு இன்னோர் அங்கத்தில் அதிக தீட்சண்யம் இருக்கும்

11) மனத்தை அடக்கி, நிலைநிறுத்தி ஈசனிடம் சேர்ப்பது பிராணாயமம் , தியானம் நிஷ்னம் – இதை சொல்வது யோக பாதம்

12) மனத்தை வெற்றி கொண்டவர் உலகத்தை வெற்றி கொள்வான். அந்த வெற்றிக்கு உதவுவது ஞானம்,

13) ஈசனை தவிர வேறு பொருள் இல்லை என்ற அனுபவம் வந்து விட்டால் ஆசைக்கு இடமில்லை,

14) தினமும் கொஞ்ச நேரமாவது சிவ நாமம் சொன்னால் எல்லா சேமமும் கிடைக்கும்.

15) பிறக்கு உதவி செய்யும் போது, இருவரும் மனநிறைவு பெறுவர் 16) நல்ல எண்ணங்கள் இருந்தால் நல்ல செயல்கள் தானாகப் பெருகும்.

17) பரோபகாரம் எதுவும் செய்யாத நாளெல்லாம் நாம் இருந்தும் செத்த நாளே 18) அன்பில்லா வாழ்கை வீண் வியர்த்தம்.

19) சாந்தம் வந்தால் எல்லா பற்றும் போய்வடும்.

20) அழிவில்லாத கடவுடளிடம் செலுத்தும் அன்புக்க அழவேது?

21, நிறை வேறாத ஆசைகளின் இரண்டு உருவங்கள் தான் துக்கமும், கோபமும்.

22. நம்மிடமே ஏராளமான தோஷங்களை வைத்துக் கொண்டு பிறருக்கு உபதேசம் செய்தால் அது பிரயோசனப்படாது.

23. கல்விக்கு இரண்டு அம்சங்கள் உண்டு ஒன்று- குருபக்தி, மற்றொன்று விநயம் ,

24. தாய், தந்தை , குரு இம்மூவரிடமும் அசையா பக்தி கொண்டால் மேன்மை தரும்.

25. மான, அவமானம் பார்க்காமல் நம்மால் முடிந்த தொண்டை செய்தல் வேண்டும்.

26. எக்காலத்திலும், எவ்விஷயத்திலும் திருப்தியை ஏற்படுத்தக் கூடிய தானம் – ஞான தானம்.

27.உபகாரம் செய்தால் நமக்கு சித்திக்கிற சித்த சுத்தியே பிரயோசனம் 28. கீர்த்தனம் என்றால் பகவான் புகழைப் பாடுவது,

29. வழிபாடு தனியாகச் செய்வதைவிட கூட்டு வழிபாட்டில் உற்சாகம் இருக்கிறது.

30. வாக்கு, மனம், சரீரம், மூன்றும் ஒருவருக்கு சத்தியத்திலே நிலைதது விட்டால் அவர் சொல்வதெல்லாம் சத்தியமாகி விடும்.

31, பக்தியுடன் மனசை கடந்து விட்டால் ஞானம்

32. “தான்” என்பதே இல்லையேல் ஒருவன் பரமாத்வே ஆகிவிடுகிறான் அதுதான் அத்வைதம் .

33. சேக்கிழார் ரொம்ப அழகாக வேதத்தை ஒரு பெரிய நதியாகவும் அதிலே சைவம் வைஷ்ணவம் முதலிய சம்பிரதாயங்களை பல படித்துறைகளாகவும் சொல்லியிருக்கிறார்.

34. வியாதியை போக்க – வைத்தியன். யாகம் வாங்க – பணக்காரன். துக்கம், பிறவிப்பிணி நீக்க – பரமேஸ்வரன் .

35. நாம் செய்கின்ற காரியங்களை சுத்தமாக சித்த சுத்தியோடு தர்மமான முறையில் செய்ய ஈஸ்வர பக்தி வேண்டும்.

36. சேராததை முடித்து வைப்பது எதுவோ அதுதான் மாயை, எது இன்னதென்று சொல்ல முடியாததே அதுதான் மாயை.

37. பரன் என்றால் பெரியவர் பரம புருஷன் என்றால் பெரிய ஆள் – பெரிய ஆள் என்பதே பெருமாள் என்றானது.

38. பிறப்பு என்பது காமனால் உண்டாகிறது. இறப்பு என்பது காலனால் உண்டாகிறது.

39. பிறவி என்று எடுத்துவிட்டால் ஆனந்தம் எப்போதோ கொஞ்சம்தான் ஆனால் துக்கம்தான் அதிகமாக இருக்கிறது.

40, அழியாத வஸ்துவினிடத்தில் பரியம் வைத்தால் அந்த பரியம் அழியாமல் இருக்கும்.

41. ஒன்றை ஆராய்ந்து ஒன்றை அறிகிற ஒன்றை செய்கிற, சக்தி யெல்லாம் ஈஸ்வர சக்தியிலிருந்து பிரகாசிக்கின்றன.

42. குருவினடத்திலே அபசாரம் பண்ணி விட்டு ஈஸ்வரவனிடத்தில் போனால் ஒன்றும் நடக்காது.

43. தெய்வ பக்தி, குருபக்தி ஆகிய இரண்டும் ஒவ்வொருவருக்கும் அவசியம்.

44. விஞ்ஞான அறிவின் மூலம் வெளியில் இருக்கிற எத்தனையோ பூதங்களை அடக்கும் நாம் நம்மை ஆட்டி வைக்கும் மனம் என்னும் பூதத்தை அடக்க முடியவில்லை..

45, கஷ்டத்தையோ, துக்கத்தையோ, காமத்தையோ தெரிந்து கொள்ள அறிவு சக்தி இல்லையெனில் வாழ்வில் பிரயோசனம் இல்லை.

46. புறக்கண்ணால் பார்க்க முடியாததை எல்லாம் அகக் கண்ணால் எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் பார்த்து விடலாம்,

47. தவறுகளுக்கு எல்லாம் பிராயசித்தமாக இருப்பது காயத்ரி ஜபம்

48. ஓர் அழகியை பார்த்தால் காமம் வரும் துஷ்டனை நினைத்தால் கோபம் வரும் பரமனை நினைத்தால் மனசு சுத்தமாகும்

49. மனசு அடங்கினால் சுவாசம் அடங்கி உள் உணர்ச்சிக்கு ஏற்றபடி வெளிக் காரியங்கள் நடப்பதை பார்க்கலாம்.

50.பக்தி வர வேண்டுமானால் சாந்தம் வரவேண்டும், சத்தியம் வரவேண்டுமானால் சிவச் சின்னங்களை அணிய வேண்டும்.

51விதிப்படி மூச்சை வெளியே விடுவதானலும் உள்ளே அடக்குவதனாலும் அமைதி பெறும்.

52 தயை (ஈகை) உள்ள இருதயமே வெளியில் தெரியும் அழகு .

53 நாக்கை சுத்தமாக்க சிவநாமம். இருதயத்தை சுத்தமாக்க – சிவபக்தி – தியானம்.

54 சிவ என்ற இரண்டு எழுத்தை சொன்னாலே பாவம் விலகும்.

55 பஸ்மம், ருத்திராட்சம், வில்வம் ஸ்படிகம் ,லிங்கம் , பஞ்சாட்சரம் ஆகியஐந்தும் சிவ சின்னங்கள.

56 மூச்சி இல்லாமல் மனிதன் இல்லை வேதம் இல்லாமல் ஈசுவரன் இல்லை 57 ஞானம் என்ற நெருப்பினாலே உலகங்களை எல்லாம் எரித்து விடலாம் சிவம் தான் மிஞ்சும்.

58 காரியங்களுடைய காரணத்தை தேடிக் கொண்டு போனால் கடைசியில் கிடைப்பது மெய்யான பொருள்.

59 நாம் எத்தனையோ காரியங்களை செய்து வருகிறோம், ஆனால் நாம் செய்கிறோம் என்ற அகம்பாவம் நமக்கு வரக்கூடாது.

60 நமக்கு அகம்பாவம் இல்லை என நினைத்தாலேயே அகம்பாவம் இல்லாத உயர்ந்த குணத்திலிருந்தே அகம்பாவம் வந்து விடுகிறது.

61 உண்மை என்பது வெண்மை அந்த வெண்மை என்பது நீறு அந்த திருநீறு தான் ஆண்டவன்.

62 உண்மை பொருளை பூசிக் கொண்டால் உண்மை பொருளின் நினைவு வரும் அதனால்தான் நீறு பூச சொல்கிறது சைவம்.

63 சித்தம் என்ற நிலைக் கண்ணாடி மூலம் பரம்பொருள் என்ற உண்மை வஸ்துவை பார்க்கவேண்டும்.

64 நல்லது – காரணம் இல்லாத அருள். கஷ்டம் – காரணத்துக்காக ஏற்படும் அருள்.

65 உண்மையிலேயே நம்முடைய கெட்ட குணம் எவ்வளவு நல்ல குணம் எவ்வளவு என்று பிரித்துப் பார்த்தால் கெட்ட குணமே மலைபோல் இருக்கும்

66 ஒரு முகப்படுத்த சித்தம் ஆடாமல் இருக்க வேண்டும் கெட்ட எண்ணம் என்ற அழுக்கு படிந்திருந்தால் ஒன்றும் தெரியாது.

67 தினமும் படுக்கும் முன் அன்று நாம் செய்த தப்பை குறித்துக் கொண்டு நாளை முதல் பண்ணாமல் இருக்க பகவானை பிராத்திக்க வேண்டும்.

68 நாம் பண்ணின பாவத்திற்காக அழுது கொண்டிராமல் அந்தமாதிரி புத்தியைஇனி கொடுக்கவேண்டாம் என பிராத்திப்பது நமது கடமை.

69 ஆண்டவன்தான் இந்த உலகத்திற்கு எல்லாம் மேலான காரணம் அவன் ஒருவனே உண்மை பொருள்.

70 வாழ்வில் ஆனந்தம் வேண்டுமென்றால் உண்மையான அந்த பொருளுக்காகத்தான் வாழ வேண்டும் .

71 இந்த பொய்யான உடம்பிற்கு மெய் என்று பெயர் பெயராவது மெய் என்று இருக்கட்டும் இந்த உடம்பிற்கு,

72 ஒரே தெய்வத்தை பல ரூபத்தில் வழிபடுவது பல தெய்வங்கள் இருப்பதாக என்னுவதாகாது

73 அன்டை வீட்டுக்காரனை சகோதரானாக நினை

74 விரோதியை ந்ண்பனாக நினை ,

75 உன்னிடம் மற்றவர்கள் எப்படி இருக்க வேண்டுமென்று நினைக்கிறாயோ அப்படியே மற்றவர்களிடமும் நீயும் இரு .

76 சாப்பிடுகிறவனை விட சாப்பாடு போட்டவனுக்குத்தான் அதிக ஆனந்தம் இருக்கிறது.

77 மந்திரங்கள் எல்லாவற்றிக்கும் மூலமாக இருப்பது பிரணவம் .

78 திரு நீறும் திருமண்ணும் ஒரே தத்துவத்தைதான் காட்டுகின்றன.

79 நமக்கு சரீரம் தான், உயிர் தெரியவில்லை, அதனால் தான் சரீரத்திற்கு மெய் என்று பெயர் வைத்தார்கள் .

80 நமக்கு தெரியாமல் இருக்கின்ற உயிர் போய் விட்டதனால் அப்பவும் இந்த மெய் (உடம்பு) ஒன்றுக்கும் பிரயோசனமற்றபெர்ய்யாகி விடுகிறது.

81 பக்தி பண்ணுவதற்கு பலன் பக்தியால் கிடைக்கிற மன நிறைவுதான் .

82 சுக துக்கங்களில் சலனமடையாமல் தானும் மற்றவர்களையும் ஆனந்தமாக இருக்க செய்வது தான் யோகம் .

83 சித்த சுத்தி மோட்சத்திலேயே கொண்டு போய் சேர்க்கும்

84 தனது என்ற விருப்பு வெறுப்பில்லாமல் சாஸ்திரத்திற்கு கட்டுபடுவது முக்கியம்

85 ஒருத்தர் பரிகாசம் பண்ணுகிறார் என்று தர்மத்தை விடக்கூடாது,

86  நம் கோபம் எதிராளியை மாற்றாது அவனுக்கும் நம்மிடம் கோபத்தை உண்டாக்குவதுதான் அதன் பலன் .

87 ஒருவன் தப்புப் பண்ணிகிறான் என்றால் கோபம் கொள்கிறோமே அப்படியானால் நாம் தப்பு பண்ணாதவர்களா?

88 அன்பினாலேயே பிறரை மாற்றுவது தான் நமக்கு பெருமை அதுதான் நிலைத்து நிற்கும்

89 நாம் தப்பே செய்யவில்லை யென்றால் அன்பு மயமாகி விடுவோம்

90 நம் கோபத்தினால் நமக்கே தான் தீங்கு செய்து கொள்கிறோம்

91 அன்பு நமக்கு ஆனந்தம் எதிராளிக்கும் ஆனந்தம்.

92 ஆசை என்று அலைந்தால் சாந்தி என்பதே ஒருநாளும் இல்லை.

93 துக்கம் உன்னிடம் ஒட்டாமல் பிரிந்து தள்ளிவிட்டால் அதுவே யோகம்

94 கானல் நீர் போன்றதே உலக மாயையும்

95 ஆசைக்கும் துவேசத்துக்கும் காரணம் அகங்காரம் அது தொலைந்தால் எந்தக் காரியத்திலும் உயர்வு தாழ்வு தெரியாது

96 நமக்கு அது வேண்டும் இதுவேண்டும் என்று சதா அரிப்பு இருக்கிறவரையில் நாம் தரித்ததிரர்கள் தான் .

97 எது செய்யத்தக்கது, எது செய்யத்தகாது என்று நிச்சயிப்பதில் சாஸ்திரமே நமக்கு பிரமானம்.

98 தியானம் பண்ணாமல் வெறும் பூசை மட்டும் செய்தால் மதத்தை வளர்க்க முடியாது .

99 துக்கம், கோபம் இவற்றோடு உயிர் பிரிந்தால் அதே தன்மையோடே ஜனனம் வரும் .

100 ஜன்னம் எடுத்தது ஜன்மத்தை போக்கிக் கொள்ளத்தான்,

101 மூச்சு இல்லாமல் மனிதன்இல்லை சேதம் இல்லாமல் ஈஸ்வரன் இல்லை

திருச்சிற்றம்பலம்  … ஓம் நமசிவாய ஓம்.

தொகுப்பு ; வை.பூமாலை, சுந்தரபாண்டியம்

மேலும் பல ஆன்மீகத்தகவலுக்கு

http://vpoompalani05.blogspot.in/

https://vpoompalani05.wordpress.com

http://www.vpoompalani05.weebly.com