பகவான் இரமணாஷிரமம் காட்டும் அண்ணாமலை

Standard

பகவான் இரமணாஷிரமம் காட்டும் அண்ணாமலை

அருணாசலா
அண்ணாமலை

நினைக்க முக்தி அளிக்கும் திருத்தலம் திருவண்ணாமலை. இது அனைத்து உயிர்களுக்கும் பக்குவத்தைத் தந்து மேலான வீடுபேற்றினைக் கொடுக்கக் கூடியது.

‘நான் இந்த உடம்பே’, என்ற அறியாமையால் தன்னை இறைவனிடமிருந்து வேறுபடுத்தி உயிர்கள் பிறவிச் சுழலில் உழல்கின்றன. ‘எங்கும் நிறைந்த பரம்பொருளே நாம்’, என்று அனுபவத்தில் உணர்த்தி அதில் நிலை நிறுத்துவதே பல்வேறு சமயங்களின் மற்றும் தத்துவங்களின் நோக்கமாகும்.

இந்திய சமய, சமுதாய, கலாச்சாரங்கள் அனைத்தும் இதன் அடிப்படையிலேயே நிர்ணயிக்கப்பட்டு உள்ளன. ‘ஆலயம் தொழுவது சாலவும் நன்று’ என்பது தமிழ் பழமொழியாகும்.

கலைகளின் கூடங்களாகக் கோயில்கள் விளங்குகின்றன. ‘கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்’ என்பது இதனை நினைவுறுத்தும்.

இந்த உடலானது பஞ்சபூதங்களால் ஆனது. ‘உள்ளம் பெருங்கோயில் ஊன் உடம்பு ஆலயம்’ என்று இறைவனது இருப்பிடமாக உடல் கருதப்படுகிறது. இதனை நினைவூட்டவே, திருவண்ணாமலை (அக்னி) காளஹஸ்தி (காற்று) சிதம்பரம் (ஆகாசம்) காஞ்சி மற்றும் திருவாரூர் (மண்) திருச்சி (நீர்) ஆகிய நகரங்களில் பிரமாண்டமான ஆலயங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இவற்றுள் திருவண்ணாமலை நெருப்பு அதாவது ஞான அக்னியாக விளங்குகிறது.

ஞானத் தபோதனரை வா! என அழைக்கும் மலை அண்ணாமலை. தேவாரமும் இதனை ‘ஞானத் திரளாய் நின்ற பெருமான் நல்ல அடியார் மேல் ஊனத் திரளை நீக்கும் அதுவும் உண்மை பொருள் போலும்’ என்று புலப்படுத்துகிறது. தன்னை மறந்து தனுவே (இந்த உடம்பே) தானாக எண்ணி எண்ணற்ற பிறவிகள் எடுத்து உழலும் ஜீவர்களைக் கடைத்தேற்றவே அண்ணாமலை, அதன் ஆலய மற்றும் திருவிழாக்கள் ஏற்பட்டுள்ளன.

அருணாசல மகிமை

சிதம்பரத்தை தரிசிக்க; காசியில் இறக்க; திருவாரூரில் பிறக்க முக்தி; ஆனால் ‘அருணாசலத்தை நினைக்க முக்தி ‘.

கிரிவடிவான இந்த இலிங்கம் அண்ணாமலை என்று பெயர் பெற்றதாம். வணங்கிய பக்தர்களைக் காப்பவரும், எண்ணிய உடனேயே பாவங்களைப் போக்குபவருமான அருணாசலேசரது பஜனம் அளவற்ற புண்ணியங்களைத் தருவதாகும். அவரைப் போற்றிப் பயன் அடைவாயாக!’ என்று ஸ்காந்த புராணத்தில் கெளதம ரிஷி பார்வதிக்கு உபதேசம் செய்கிறார்.

அருணாசல மகத்துவத்தை ஸ்காந்த மகாபுராணம், சிவரகஸ்யம், சிவபக்த விலாசம், சிவமகா புராணம் மற்றும் பல்வேறு வடமொழி நூல்கள் எடுத்துக்காட்டுகின்றன.

தமிழில் சைவ எல்லப்ப நாவலர் 649 பாடல்களில் அருணாசல மகிமையை வெளிப்படுத்துகிறார்.

திருவண்ணாமலையின் முக்கிய திருவிழாவாகிய கார்த்திகை தீப உற்சவ சமயத்தில் இந்த நூல்களில் காணப்பட்ட விஷயங்களில் சிலவற்றை மனனம் செய்து மரணமில்லா பெருவாழ்வு பெற்று நாமும் நித்திய அனந்த நிலையினை அடைவோமாக!

என்றுமே பதினாறு வயது உடைய மார்க்கண்டேய முனிவர், பல முனிவர்கள் சூழ, நந்தி தேவரை வணங்கி “சுவாமி! நாங்கள் பேரின்பத்தை அடைவதற்கு தக்க வழியினை உபதேசிக்க வேண்டும்” என்று வேண்டிக் கொண்டார்.

‘பூவுலகில் உள்ள புண்ணியத் தலங்களில் திருவண்ணாமலை நினைத்தவுடன் பேரின்ப முக்தியைத் தர வல்லது; இதில் தேவர்களும் மகத்தாகிய தபசிகளும் முக்தியை அடைந்துள்ளனர். இத்தலத்தில் உள்ள மலை இலிங்க சொரூபமாகப் பிரகாசித்துக் கொண்டுள்ளது.’

‘இதன் கிழக்கே இந்திரனும், தெற்கில் உள்ள தேளிர் மலையில் யமனும், தண்டமலையில் (தண்டராம்பட்டு) வருணனும், வடக்கே குபேரனும் மற்ற நான்கு திக்குகளில் அந்தந்த திக்பாலர்களும் அண்ணாமலையாரைத் தோத்திரம் செய்து வருகின்றனர்’ என நந்தி கூறினார்.

கார்த்திகை தீபம்

சர்வ சம்ஹார (ஊழிக்) காலத்தில் எல்லா உயிர்களும் ஒடுங்கின. பின், மறுபடியும் உலகம் உண்டாக வேண்டும் என்று பரம்பொருள் எண்ணம் கொண்டது. உடனே குடிலை எனும் சக்தித் தத்துவமும், ஐந்தொழில்களை இயற்ற பிரம்மன், விஷ்ணு, ருத்திரன், மகேஸ்வரன், சதாசிவன் முதலிய ஐவரும் முன்பு ஒடுக்கிய முறையிலேயே வெளிப்பட்டனர்.

இவர்களுள் பிரம்மாவானவர் தன்னால் உலகங்கள் படைக்கப்படுவதால்; ‘தானே பரம்பொருள்’ என அகங்காரம் கொண்டார். எனவே விஷ்ணுவிடம் சென்று ‘நான் உயிர்களைப் படைக்காவிட்டால் உனக்குத் தொழில் எது? எனவே, நான்தான் பரம்பொருள்’ என்று வாதிடத் தொடங்கினார்.

விஷ்ணுவானவர், ‘என்னிடத்தில் பிறந்த நீ முன்பு பரமன் (சிவன்) உனது ஐந்து தலைகளில் ஒன்றை அறுத்தபோது அதைப் படைத்துக் கொள்ளத் திறமை அற்றவன் ஆனாய்; நீயோ பரம்பொருள்’ என்று ஏளனம் செய்தார்.

இவர்களது வாதம் அண்ட சராசரங்களும் வெடிக்கும் அளவுக்குச் சண்டையாக முற்றியது. மற்ற தேவர்கள் இதைப் பற்றிப் பரமனிடம் முறையிட்டனர். உடனே அவர்கள் இருவரின் மத்தியில் பரம்பொருள் பெரும் தூண் போன்ற ஜோதிப் பிழம்பாக எழுந்தருளினார். அந்த ஜோதியின் அடி முடிகளைக் காண்பவரே பெரியவர் என பிரம்மாவும் விஷ்ணுவும் உடன்பாடு செய்து கொண்டனர்.

விஷ்ணு, வராக அவதாரம் எடுத்து ஜோதியின் அடியைக் காண முயன்று, முடியாமல் பரம்பொருளைச் சரணடைந்தார். பிரம்மா அன்னப் பட்சியாக ஆகாயத்தில் பறந்து ஜோதியின் முடியைக் காண முயன்று, முடியாமல் பொய் சாட்சியுடன் தான் முடியைக் கண்டதாக விஷ்ணுவிடம் வாதிடவும் ஜோதிப் பிழம்பில் இருந்து வெளிப்பட்ட பரமன் பிரம்மனுக்குச் சாபமும், விஷ்ணுவுக்கு அனுக்கிரகமும் பரிந்தார்.

நான் பெரியவன் என்ற எண்ணம் கொள்ளும் அனைவரும் தங்கள் அகங்காரத்தால் அல்லல்பட வேண்டியதுதான் என்பதை நினைவூட்டும் வகையில் இந்த ஜோதி சொரூபம் பூமியில் நிலைகொள்ள வேண்டும் என்று தேவர்கள் விரும்பினர். எனவே பரம்பொருளிடம் அவர்கள் பிரார்த்தனை செய்தனர்.

‘கார்த்திகைக்குக் கார்த்திகைநாள் ஒரு ஜோதி மலை நுனியில் காட்டி நிற்போம்;

வாய்த்த அந்தச் சுடர் காண்போர் பசிப்பிணி அல்லாது உலகில் வாழ்வர்;

இது பணிந்தோர், கண்டோர் கோத்திரத்தில் அருபத்தியோர் தலைமுறைக்கு முக்திவரம் கொடுப்போம்’ எனவும்

‘ஜோதி மலையாகிய இந்த அருணாசலத்தை ஒருமுறை நினைத்தாலும் மூன்று கோடி நமச்சிவாய மந்திர ஜப பலனைப் பெறுவர்’ என்றும் பரமசிவன் அருள் புரிந்தார்.

ரமண பகவான் காட்டும் அண்ணாமலையின் சிறப்பு

பகவான் ரமண மகரிஷிகள் அறிவறு சிறுவயது முதல் அருணாசல ஸ்புரணம் விளங்கப் பெற்று மரணானுபவத்தின் மூலம் மரணம் இல்லாப் பெரு வாழ்வு அடைந்து அருணாசலத்தில் தனது தேகவாழ்வை மையமாகக் கொண்டு அனைவரும் பேரின்பப் பெருவாழ்வு வாழ வழிவகுத்துள்ளார்.

அருணாசல-ஜோதி தத்துவங்கள் அவரது நூல் திரட்டில் முதல் இரண்டு பாடல்களாக வடிக்கப்பட்டு உள்ளன.

புத்தி அகங்காரம் புலம்எய்த ஓங்கும்

மத்தி இதயம்தான் மறையவனும் மாலும்

நத்த அறியாது நலம்குலைய அன்னார்

மத்தி ஒளிர் அண்ணாமலையினது மெய்யே.

திருச்சிற்றம்பலம்

Advertisements

செல்வ வளம் தரும் வடக்கு நோக்கிய சிவன் கோவில்

Standard
செல்வ வளம் தரும் வடக்கு நோக்கிய சிவன் கோவில்
தமிழகத்திலுள்ள சிவன் கோவில்கள் கிழக்கு நோக்கி இருப்பது மரபு. மேற்கு நோக்கியும் சில சிவன் கோவில்கள் உள்ளன. ஆனால் வடக்கு நோக்கிய நிலையில் குளித்தலை கடம்பவனநாதர் மட்டுமே இருப்பது குறிப்பிடத்தக்கது. வடக்கு குபேர திசையைக் குறிக்கும். சிவராத்திரியன்று கடம்பவன நாதரை தரிசித்தால் செல்வவளம் பெருகும்.
தல வரலாறு: தூம்ரலோசனன் என்ற அசுரன் தங்களை துன்புறுத்துவதாக அம்பிகையிடம் புகார் கூறினர். அம்பிகை துர்க்கை வடிவம் எடுத்து அசுரனை அழிக்கச் சென்றாள். அசுரன் தான் பெற்ற வரத்தால் துர்க்கையுடன் சம பலமுடன் மோதவே சப்த கன்னியராக உருவெடுத்து அசுரனுடன் போர் புரிந்தாள். அவர்களை எதிர்க்க முடியாத அசுரன் வனத்திற்குள் ஓடி காத்தியாயன மகரிஷியின் ஆசிரமத்திற்குள் ஒளிந்து கொண்டான். சப்தகன்னியரும் ஆஸ்ரமத்திற்குள் சென்றனர்.
தூம்ரலோசனனே முனிவரைப் போல உருமாறி அமர்ந்திருப்பதாக கருதிய சப்தகன்னியர் அவரை அழித்து விட்டனர். இதனால் அவர்களுக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடித்தது. அறியாமல் செய்த இப்பாவம் தீர சிவனை வேண்டி தவமிருந்தனர். சிவன் அவர்களுக்கு காட்சி தந்து சாப விமோசனம் அளித்ததுடன் அசுரனையும் அழித்தார்.
சப்த கன்னியர்: கோவில்களில் சப்த கன்னியர் தனி சன்னிதியில் இருப்பர். ஆனால் இங்கு கருவறையில் லிங்கத்திற்கு பின்புறம் சாப விமோசனம் பெற்றவர்களாக வீற்றிருக்கின்றனர். சுவாமிக்கு நேர்பின்புறத்தில் இருக்கும் சப்த கன்னியரில் ஒருத்தியான சாமுண்டியை துர்க்கையாக கருதி வழிபடுகின்றனர். எனவே இங்கு துர்க்கைக்கு தனி சன்னிதி கிடையாது. பெண்கள் ராகு நேரத்தில் சிவன் சன்னிதியிலேயே எலுமிச்சை தீபமேற்றி வழிபடுகின்றனர்.
தட்சிண காசி: பாவம் போக்குவதில் காசிக்கு நிகரான தலம் என்பதால் இது தட்சிண காசி (தெற்கிலுள்ள காசி) எனப்படுகிறது. இங்கு சிவன் வடக்கு நோக்கி இருக்கிறார். கோமுகம் வலது புறமாக திரும்பி உள்ளது. கோவிலுக்கு எதிரே காவிரி ஓடுகிறது. சப்த கன்னியருக்கு சிவன் தைப்பூசத்தன்று காட்சி கொடுத்ததாக ஐதீகம். எனவே அந்த நாளில் இவர் காவிரியில் அம்பிகையுடன் எழுந்தருள்கிறார். இவருடன் சுற்றுப் பகுதியில் உள்ள ஏழு சிவன் கோவில்களில் இருந்தும் சப்பரம் பவனி வரும். ஐப்பசியில் துலா ஸ்நான விழா கொண்டாடப்படுகிறது. இந்த ஊரின் அருகே ரத்தினகிரி, ஈங்கோய் மலை சிவன் கோவில்கள் உள்ளன. “காலையில் குளித்தலை கடம்பர், மதியம் ரத்தினகிரி சொக்கர் கோவில் (8 கி.மீ.,), மாலையில் ஈங்கோய்மலை மரகதநாதர் கோவில் (5 கி.மீ.,) என்ற வரிசையில் வழிபட்டால் குறைவிலாத பலன் கிடைக்கும். அம்பாள் முற்றிலா முலையம்மை கிழக்கு நோக்கி இருக்கிறாள். சிவராத்திரியன்று இரவில் நான்கு கால அபிஷேகம் உண்டு.
சல்யூட் அடிக்கும் கடவுள்: பரமநாதர் என்ற காவல் தெய்வம், வலது கையை நெற்றி மேல் வைத்து இங்கு வரும் பக்தர்களுக்கு சல்யூட் அடிக்கும் விதத்தில் வித்தியாசமான கோலத்தில் இருக்கிறார். இவருக்கு தேன் அபிஷேகம் செய்து பாசிப் பருப்பு பாயசம் படைத்து
வழிபட்டால் குடும்பத்திற்கு பாதுகாப்பாக இருப்பார் என்ற நம்பிக்கை உள்ளது.
இரண்டு நடராஜர்: சூரபத்மனை வதம் செய்த தோஷம் நீங்க முருகன் இங்கு சுவாமியை வழிபட்டுள்ளார். இவர் ஆறுமுகத்துடன் வள்ளி, தெய்வானையுடன் இருக்கிறார். ஆறுபடைகளிலும் இருக்கும் முருகனைப் போன்ற அமைப்புடையவர் என்ற பொருளில் இவரைக் குறித்து அருணகிரிநாதர் பாடியுள்ளார். இக்கோவிலில் இரண்டு நடராஜர் உள்ளனர்.
ஒருவரது பாதத்தின் கீழ் முயலகன் இல்லை. தெற்கு நோக்கி இருக்கும் சண்டிகேஸ்வரர் மேற்கு முகமாகவும், வடக்கு பார்த்திருக்கும் பிரம்மா கிழக்கு முகமாகவும் உள்ளனர்.
இருப்பிடம்: கரூரில் இருந்து 35 கி.மீ.

மகாசிவாரத்திரி

Standard
நமசிவாய என சொல்வோமே…. நன்மைகள் ஆயிரம் கொள்வோமே…!
மார்ச் 7ல் மகாசிவாரத்திரி வருவதை ஒட்டி சிவனை வழிபடும் விதத்தில் இந்த வழிபாடு தரப்பட்டுள்ளது. சிவராத்திரியன்று இரவில் நான்கு கால அபிஷேகத்தை தரிசிக்கும் போது இதைப் படியுங்கள்.

* உலகாளும் சிவனே! காதுகளுக்கு அமிர்தமான நமசிவாய என்னும் திருநாமம் சொல்பவர்களுக்கு நன்மைகளை வாரி வழங்குபவனே! பிறைச்சந்திரனை முடியில் தரித்தவனே! கற்பூரம் போல் பிரகாசிப்பவனே! ஜடாமுடி கொண்டவனே! பிறவிக்கடலைத் தாண்டச் செய்பவனே! நன்மைகளை வாரி வழங்குபவனே! எங்களை காத்தருள்வாயாக.
* பார்வதி பிரியனே! பாம்பைக் கழுத்தில் சூடியவனே! கங்கையைத் தலைமேல் கொண்டவனே! பக்தர் மேல் பாசம் கொண்டவனே! பயத்தைப் போக்குகிறவனே! அன்பு மயமானவனே! எங்கள் இல்லங்களை மங்களகரமாக்குவாயாக.
* ஜோதியாய் ஒளிர்பவனே! சிவனே என்ற திருநாமம் சொல்வோரைக் காப்பவனே! எதிரிகளின் எதிரியே! நெற்றிக்கண் கொண்டவனே! காதுகளில் ரத்ன குண்டலம் அணிந்தவனே! எங்கள் நெஞ்சத்தில் நிரந்தரமாக குடி கொள்ள வருவாயாக.
* ஐந்து முகம் கொண்டவனே! தங்கமயமான புலித்தோல் உடுத்தியவனே! மூவுலகுக்கும் அதிபதியே! பிறவிக்கடலில் தவிக்கும் பக்தர்களை கரை சேர்ப்பவனே! நீலகண்டனே! கைலாயநாதனே! பிரபஞ்சத்தை இயக்குபவனே! பிரம்மனால் பூஜிக்கப்பட்டவனே! உன்னை என்றும் மறவாத மனதைத் தருவாயாக.
* புண்ணியம் செய்தவர்களுக்கு அருள்புரிபவனே! சூலாயுதம் கொண்டவனே! மானும், மழு என்னும் கோடரியும் ஏந்தியவனே! சிவந்த நிறம் கொண்டவனே! சூரியனுக்குப் பிரியமானவனே! எங்களுக்கு தீர்க்காயுளையும், நல்ல குழந்தைகளையும் தந்தருள்வாயாக.
* தேவாதி தேவனே! மகாதேவனே! விரும்பிய பொருட்களைத் தருபவனே! கவுரியுடனும், மகாகணபதியுடனும் காட்சி அளிப்பவனே! வேல் முருகனின் தந்தையே! மகனிடம் உபதேசம் பெற்ற மாணவனே! எங்களுக்கு கல்வியறிவையும், சிறந்த பணியையும், நற்புகழையும்
தந்தருள்வாயாக.
* திரிபுர சம்ஹாரம் செய்தவனே! அகத்தியரை பொதிகைக்கு அனுப்பியவனே! வாக்குக்கு எட்டாத பெருமை உடையவனே! நாட்டியத்தின் நாயகனே! எங்கள் மனதிலுள்ள தற்பெருமை, ஆணவம் ஆகிய குணங்களை நீக்குவாயாக.
* கிரகதோஷம் போக்குபவனே! சிவசிவ என்பவரின் தீவினையை மாய்ப்பவனே! சிந்தனைக்கு எட்டாதவனே! பாரெல்லாம் ஆளும் பரம்பொருளே! சங்கரனே! நாங்கள் எங்கு வசித்தாலும் அங்கெல்லாம் வந்து எங்களோடு இருந்து பாதுகாப்பாயாக.
* இன்பத்தின் எல்லையே! இகபர சுகமே! உலக பாரத்தை தாங்குபவனே! பாவம் தீர்ப்பவனே! பூலோகத்துக்கும் வானுலகத்துக்கும் நெருப்பாய் உயர்ந்து நின்றவனே! அண்ணாமலையாய் உயர்ந்தவனே! சரணடைந்தவரைக் காப்பவனே! நல்லவர் நெஞ்சில் வாழ்பவனே! எங்கள் மனம் நிறையும் வண்ணம் பொருள்வளம் தந்தருள்வாயாக.
* மங்கள குணம் உடையவனே! பயத்தைப் போக்குபவனே! பூதகணங்களின் தலைவனே! சங்கீதத்தில் விருப்பம் கொண்டவனே! காளையை வாகனமாகக் கொண்டவனே! யானைத்தோல் போர்த்தியவனே! மகேஸ்வரனே! எங்கள் நாடும், வீடும் நலமுடன் திகழ அருள்புரிவாயாக.

நமசிவாய என சொல்வோமே…. நன்மைகள் ஆயிரம் கொள்வோமே…!

ஸ்ரீரமண மகிரிஷி

Standard

ஸ்ரீரமண மகிரிஷி

(பால பருவம் ெதாடர்ச்சி)

அண்ணாமலை வாசம்
தனிமையான ஒர் இடத்தை நாடி கோயிலிலே பாதாளலிங்கம் என்ற ஒர் இருட்டுக் குகையை தேர்ந்து எடுத்து ஏகாந்த நிஷ்டானுபூதியில் ஆழ்ந்தார். முற்காலத்தே வால்மீகி முனிவர் தம்மைச் சுற்றிலும் கறையான் புற்றுக்கள் எழுந்து மூடிக் கொண்டதையும் உணராது வருடக் கணக்காக நிஷ்டானுபூதியில் இருந்ததாகக் கூறுவர். பாலயோகியின் நிஷ்டானுபூதிநிலை அதை ஒத்திருந்தது. பின்னர் சுப்ரமணியர் கோயிலருகே சிலகாலம்; அதன் பக்கத்தில் உள்ள பூந்தோட்டத்தில் சில தினங்கள்; பின்னர் வாகன மண்டபத்தில் சில தினங்கள்; அதன்பின் அன்பர் ஒருவன் வேண்டுகோளுக்கு இசைந்து திருவண்ணாமலைக்கு அருகே உள்ள குருமூர்த்தத்தை அடைந்து ஒன்றரை வருடகாலம் அங்கே சமாதி நிஷ்டையில் இருந்தார்.

இவ்விவரங்கள் விரைவில் ஊரெங்கும் பரவி மதுரைக்கும் எட்டி விட்டது. மூத்த பிள்ளை நாகசாமியுடன் தாயும் திருவண்ணாமலைக்குப் புறப்பட்டனர். அப்போது பவழக்குன்றில் உள்ள ஒரு பாறையின்மீது சுவாமி படுத்திருந்தார். அண்ணனும் அம்மையும் சுவாமியை அடுத்து விடாப்பிடியாக வேண்டினர். அவர் மனத்தைக் கலைக்க எவ்வளவோ முயன்றனர். அன்னையின் அன்பு முழுவதும் வெளிப்பட்டது. அழுதார், அரற்றினார், வேண்டினார், இறைஞ்சினார். ஒன்றும் பலிக்கவில்லை. எதற்கும் ஒரே நிச்சலமான மெளனம்!

பக்கத்தில் உள்ளவர்களுக்கு அது மகாபதாபக் காட்சியாக இருந்தது. தாயின் அன்பு அவர்கள் மனத்தைக் கரைத்தது. பெற்றெடுத்த தாய்க்கு மறுமொழியாவது கொடுக்கும்படி அவர்களும் சேர்ந்து மன்றாடினார்கள். கடைசியில் சுவாமி ஒரு காகிதத்தில் பின்வருமாறு எழுதிக் கொடுத்தார்.

‘அவரவர் பிராரப்தப் பிரகாரம் அதற்கானவன் ஆங்காங்கிருந்து ஆட்டுவிப்பன். என்றும் நடவாதது என் முயற்சிக்கினும் நடவாது; நடப்பது என் தடை செய்யினும் நில்லாது. இதுவே திண்ணம். ஆதலின் மெளனமாயிருக்கை நன்று.’

அதன்பின் சுவாமிகள் மலைமேல் பல குகைகளில் மாறி மாறித் தங்கி வந்தார். விரூபாக்ஷ குகையில் இருந்தார்.

விரூபாக்ஷ குகையில் இருந்தபோது, பக்திரசம் ததும்பும், ‘அருணாசல அக்ஷரமணமாலையி என்னும் துதியை அவர் அருளினார். சுவாமிகளை அடுத்துள்ள அடியார்கள் பிகை்ஷக்காக ஊருக்குள் செல்லும்போதெல்லாம் இப்பாடல்களைப் பாடி வரலாயினர்.

முதல் வருகையிலேயே மகர்ஷிகள் தமது அன்னையிடம் உலகியல் பாசம் அற்றுவிட்டதென அறிவித்துவிட்ட போதிலும், அவ்வம்மையார் அடிக்கடி திருவண்ணாமலைக்கு வந்து போய்க் கொண்டிருந்தவர் பின் நிரந்தரமாய் வந்து தங்கலானார்.

சற்று விசாலமான ஸ்கந்தாசிரமத்தில் பகவான் வசிக்கத் தொடங்கிய பின் அன்னை சமையல் கைங்கயத்தைத் தாமே மேற்கொண்டு தசனத்திக்கு வந்த பக்தர்களுக்கும் அன்னமிடலானார்.

அதிதிகள் அனைவருக்கும் அன்னமளிக்கும் வழக்கம் இதன் பின்னரே ஆச்ரமத்தில் ஏற்பட்டது. நாளுக்கு நாள் பக்தர்களின் தொகை அதிகத்துக் கொண்டே வந்த போதிலும் இவ்வழக்கம் இன்றும் குறைவில்லாமல் நடந்து வருகிறது. சிறிது காலத்திற்கு பின் அன்னையின் விருப்பத்திற்கு இணங்க, கடைசி குமாரரும் துறவியாகி ஆசிரமத்திற்கு வந்து சேர்ந்தார்.

அழகம்மாளின் அந்திம காலத்தின் ஆறு வருடங்கள் அமைதியாகக் கழிந்தன. முடிவு நெருங்க நெருங்க, அன்னையும் பகவானிடம் பூரண நம்பிக்கை வைத்து அனைத்தையும் தத்தம் செய்துவிட்டதால், மகர்ஷிகளே பக்கத்திலிருந்து அவருக்கு பூர்ணமான ஞானத்தைப் புகட்ட முடிந்தது.

நோய்வாய்ப் பட்டிருந்த அன்னைக்கு 1922 -ஆம் ஆண்டு மே மாதம் 19 ஆம் நாள் இறுதி நாளாயிற்று. மேல் மூச்சு, கீழ் மூச்சு வாங்கும் அன்னையின் மார்பில் வலது கையையும் தலையில் இடது கையையும் வைத்துக் கொண்டு பகவான் நாள் முழுவதும் கண்கொட்டாமல் உட்கார்ந்திருந்தார். இரவு எட்டு மணிக்கு அன்னையின் பிராணன் இருதயத்தில் ஒடுங்கியது; அதாவது முக்தியுற்றது.

மறுநாள் காலையில் சமாதிக் கியைகள் தொடங்கின. உறவினர்கள் வந்தனர். ஆயிரக்கணக்கான பக்தர்களும் வந்து கூடினர். பகவானும் அவர்களுள் ஒருவர் போலவே தோன்றினர். அன்னையின் புனிதவுடலை மலைக்கு தனித்து உள்ள பாலிதீர்த்தம் என்னும் இடத்துக்கு அன்பர்கள் எடுத்துச் சென்றனர். பிரதர்ண வழிக்கு வடக்கே ஓர் இடத்தில் குழி செய்து, திருமேனியை அதனுள் இருத்தி விபூதி, கற்பூரம், உப்பு முதலியவற்றை மேலே குவித்தனர். அதன் மேல் சமாதி கட்டி மஹர்ஷிகளின் திருக்கரத்தால் அதன் மீது லிங்கம் ஸ்தாபித்தனர். மாத்ருபூதேஸ்வரர் என்ற பெயருடன் விளங்கும் அதற்கு இன்றும் சிறப்பாக பூஜை நடைபெற்று வருகின்றது.

திருச்சிற்றம்பலம்