தை அமாவாசை

Standard

தை அமாவாசை ஏன் புனிதமானது

தை அமாவாசை : தலைமுறைகள் செழிக்க முன்னோர்களைவழிபடுங்களேன்
தை அமாவாசை ஏன் புனிதமானது

முன்னோர் வழிபாட்டில் காகத்தின் பங்கு:
காகம் சனீஸ்வரருக்குரிய வாகனம் என்று தெரியும். ஆனால், பிதுர்எனப்படும் முன்னோர் வழிபாட்டிலும் காகத்திற்கு முக்கியத்துவம் உண்டு.காகம் எமலோகத்தின் வாசலில் இருக்கும் என்றும், எமனின் தூதுவன்என்றும் சொல்வதுண்டு. காகத்திற்குச் சாதம் வைத்தால் எமலோகத்தில்வாழும் நம் முன்னோர் அமைதி பெற்று நமக்கு ஆசியளிப்பர் என்பதுநம்பிக்கை. காகம் நாம் வைத்த உணவைத் தீண்டாவிட்டால் இறந்துபோனநம் முன்னோருக்கு ஏதோ குறை இருப்பதாகக் கருதுவதும் மக்களின்நம்பிக்கையாக இருந்து வருகிறது. பிதுர் தர்ப்பணத்திற்குரிய கயாவில் உள்ளபாறைக்கு காக சிலை என்று பெயர். அந்தப் பாறையில் தான் பிண்டம்வைத்து வணங்குவர். பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் என்று தன்னிடம்உள்ள பொருளை பிறருக்குப் பகுத்துண்டு வாழவேண்டும் என்று வள்ளுவர்நமக்கு போதித்திருக்கிறார். அப்பாடத்தை தவறாமல் பின்பற்றும் குணம்காகத்திற்கு இருக்கிறது. தான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்று பிறகாக்கைகளையும் கரைந்து அழைத்தபின்னரே, காகம் உணவு உண்ணும்.அப்படிப் பட்ட உயர்ந்த ஜீவனான காகத்திற்கு உணவிடுதன் மூலம்பிதுர்களின் ஆசியைப் பெற முடியும் என்று சாஸ்திரம் கூறுவது சரிதானே!

முன்னோர்களுக்கு மூன்று கை தண்ணீர்:
முன்னோர்களுக்கு நாம் செய்யும் திதி பலன்களை நம்மிடம்இருந்து பெற்றுபிதுர்தேவதைகளிடம் வழங்குபவர்சூரியன். அந்த தேவதைகளே மறைந்த நம்முன்னோரிடம் பலன்களைச் சேர்க்கின்றன. அதனாலேயே சூரியனைப்பிதுர்காரகன் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அமாவாசை நாட்களில்தீர்த்தக்கரைகளில் நீராடும் போது, பிதுர்காரகராகிய சூரியனுக்கு அர்க்கியம்செய்வது (இரு கைகளாலும் நீர் விடுவது) மிகுந்த நன்மை தரும்.சமுத்திரத்தில் அல்லது புண்ணிய நதிகளில் நீராடியவுடன் முழங்கால் அளவுநீரில் நின்றுகொண்டு, சூரியனைநோக்கி மூன்று முறை அர்க்கியம்செய்வதன் மூலம் இவர் அருளைப் பூரணமாக பெறமுடியும்.
பிள்ளைக்குரிய முழு தகுதி எது?
கிருதயுகம், திரேதாயுகங்களில் வருஷதிதி நாளில் முன்னோர்கள் நேரில்வந்து நாம் கொடுக்கும் உணவையும், வழிபாட்டையும் ஏற்றுக் கொண்டனர்.அந்த யுகங்களில் பூவுலகில் தர்மம் தழைத்திருந்தால் இந்நிலை இருந்தது.ராமன் அயோத்தி திரும்பி பட்டம் கட்டிய நாளில் தசரதர் நேரில் தோன்றி தன்பிள்ளையை ஆசியளித்து மகிழ்ந்ததாக ராமாயணம் கூறுகிறது. துவாபரயுகம்மற்றும் கலியுகத்தில் பிதுர்கள் நம் கண்ணுக்குத் தெரியாமல் போய்விட்டனர்.ஆனால், சூட்சும வடிவில் அவர்கள் நம்மை நேரில் பார்ப்பதாகவும்,ஆசியளிப்பதாகவும் சாஸ்திரநூல்கள் குறிப்பிடுகின்றன. ஒருவரின்வயிற்றில் பிறந்தால் மட்டும் பிள்ளையாகிவிட முடியாது. பிள்ளைக்குரியமுழு தகுதியை ஒருவன் பெற வேண்டுமானால், வாழும் காலத்தில்பெற்றோரைக் கவனிப்பதோடு, இறப்புக்குப் பிறகும் பிதுர்கடனைமுறையாகச் செய்யவேண்டும். தனது பித்ருக்களுக்கும் தனக்கும் எவ்விதசம்பந்தமும் இல்லை என்று எவன் நினைக்கிறானோ அவன் புத்தியில்லாதமூடனாவான் என்று கடோபநிஷதத்தில் எமதர்மன் நசிகேதனிடம் கூறுகிறார்.
இறந்த பின்னும் தொடரும் மனித வாழ்வு
சிரத்தையுடன் அதாவது அக்கறையுடன் செய்வதற்கு சிரார்த்தம் என்றுபெயர். இறந்த பின்னும் நம் வாழ்வு தொடர்கிறது என்ற உண்மையை நமக்குஇக்கடமை நினைவூட்டுகிறது. இறந்த முன்னோர்களின் நற்கதிக்காகவும்,அவர்களின் பூரண ஆசிவேண்டியும் சந்ததியினர் இக்கடமையைச்செய்கின்றனர். இச்சடங்கினைத் தீர்த்தக்கரையில் செய்வது வழக்கம்.இயலாதவர்கள் வீட்டிலேயே செய்து முடிப்பர். சிரார்த்தம் கொடுக்கும்போதுசொல்லும் மந்திரத்தின் பொருளைத் தெரிந்து கொண்டு சொல்லும்போதுதானே நிச்சயம் சிரத்தை (அக்கறை) உண்டாகும். கலியுகத்தில் ஜம்புத்தீவில்பரதகண்டத்தில், ….ஆண்டில்….. அயனத்தில்… ருதுவில்…. மாதத்தில்…பட்சத்தில்… திதியில்…. வாரத்தில்…. நட்சத்திரத்தில் எனது பெற்றோரான …பெயர் கொண்டவருக்கு சிவயோக பிராப்தம் சித்திப்பதன் பொருட்டு, அவரதுபிள்ளையாகிய நான் இந்த சிராத்தத்தை செய்கின்றேன். இதனை ஏற்றுக்கொண்டு ஆசியளிக்கும்படி வேண்டிக் கொள்கிறேன் என்பதேசிரார்த்தமந்திரம். மனிதவாழ்வு இறப்புக்கு பின்னும் தொடர்கிறது என்றஉண்மையை உணர்ந்து செய்யும் போது இச்சடங்கு பொருளுடையதாகும்.
தாயை பழித்தாலும், தண்ணீரை பழிக்காதே
தை அமாவாசைக்கு ராமேஸ்வரம், வேதாரண்யம், கோடியக்கரை,கன்னியாகுமரி ஆகிய கடல் ÷க்ஷத்ரங்களுக்கும், காவிரி, தாமிரபரணிநதிக்கும் பிற புண்ணிய தீர்த்தங்களுக்கும் மக்கள் தர்ப்பணம் செய்வதற்காகசெல்கின்றனர். அங்கு சென்றவுடனேயே தண்ணீரில் இறங்கி விடக்கூடாது.கரையில் நின்று தண்ணீரை முதலில் தெளித்துக் கொள்ள வேண்டும். புனிதநீர்நிலைகளும் கடவுளும் ஒன்றே. தாயை பழித்தாலும், தண்ணீரைபழிக்காதே என்று சொல்வர். புனித தீர்த்தங் களை நம் தாய்க்கும் மேலாககருதும் வழக்கத்தை நம் குழந்தைகளுக்கும் கற்றுத் தர வேண்டும். நதிகளைஅசுத்தமாக்கக்கூடாது.
தர்ப்பணம் செய்ய அமாவாசை சிறந்தது ஏன்?

பித்ருக்கள் எனப்படும் முன்னோர் உலகில் நமக்கு வளர்பிறை பகல்நேரமாகவும், தேய்பிறை இரவு நேரமாகவும் உள்ளது. அமாவாசை என்பதுபகல் ஆரம்பிப்பதற்கு முன்புள்ள விடியற்காலம் போன்றது. காலைப்பொழுதுபூஜைக்குச் சிறந்தது என்பதால், முன்னோர் வழிபாட்டுக்கு அமாவாசையைத்தேர்ந்தெடுத்தனர். இந்நாளில் புரோகிதர் மூலமாக தர்ப்பணம் செய்வதுசிறப்பு. (தர்ப்பணம் என்பதற்கு திருப்தியுடன் செய்வது என்று பொருள்.சிரார்த்தம் என்றால் சிரத்தையுடன் (கவனம்) செய்வது என்று அர்த்தம்)அவ்வாறு இயலாத பட்சத்தில், மந்திரம் ஏதும் சொல்லாமல் பக்தியுடன்மனதார பித்ருக்களை வழிபட்டு அவருக்கு கொடுக்க வேண்டிய அரிசி,காய்கறி, பழம், தட்சிணை, வஸ்திரம் முதலானவற்றை வேறு யாருக்கேனும்தானம் செய்யலாம். ஏழைகளுக்கு அன்னதானம் செய்யலாம். பசுக்களுக்குபழம், அகத்திக்கீரை கொடுப்பது இன்னும் நல்ல பலன் தரும். பித்ருபூஜையைச் சரியாகச் செய்யாவிட்டால் முன்னோர்களின் சாபம் ஏற்படும்.அவ்வாறு சாபம் பெற்ற குடும்பங்களில் தான் ஊனமுற்ற குழந்தைகள்பிறப்பதாக சாஸ்திரம் சொல்கிறது.

Advertisements

மெய் அறிவே பேரின்பம்

Standard

மெய் அறிவே பேரின்பம்
மனிதனாக பிறந்த எவனுக்கும் வினை விடாது பற்றும், அந்த வினைப்பயனை, துயரங்களை பிறவி யெடுக்க வைக்கும் வினை இந்த ஸ்தூல சரீரத்தினால் சாதனை புரிந்தால், சுட்சும சரீரத்தில் , பிறவி மறுபடியும் பிறக்காது செய்து விடும். சிந்திக்கும் ஆற்றல் வாய்ந்தவன் மனிதன், அப்படி சிந்திக்கத் தெரிந்த மனிதனின் சிந்தனை முழுவதும் செயலாவதில்லை. கோடிக்கணக்கான மக்களுள் சிலரது சிந்தனை வளம்தான் செயலாகிறது,அத்தகைய செயற்கரிய செயல்கள் புரிந்தவர்கள்தான் ஞானியர்களும் சித்தர்களும்.
இப்பிரபஞ்ச இயக்கத்தில் சிறந்தது வாயு ஆகும். இந்த வாயு நின்று விட்டால் உலக இயக்கமும் உயிர் வாழும் சீவராசிகளும் தாவர ஐங்கமங்களும் அழிந்து விடும். ஓடும் மனம் ஒடுங்கிவிட்டால் உள்ளம் அமுத கடலாகும். ஒடுங்குவது எங்ஙனம்? அலைபாயும் மனதை அலைய விடாது ஒருநிலைப்படுத்தும் சாதனை யோகமாகும். இதுவே நம்முள் தெய்வீகத் தன்மையை ஏற்படுத்தும்.
மனிதன் மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாைசை ஆகிய மூன்று ஆசைகள் மீது பற்றுக் கொண்டவன். இந்த ஆசையே அவன் உணர்ந்த தெய்வீக அடைய தடையாகும், மண்ணாசை வளர்ந்தால் கொலையில் விழுகிறது. பொன்னாசை வளர்ந்தால் களவில் முடிகிறது, பெண்ணாசை வளர்ந்தால் பாபம் நிகழ்கிறது, மூன்று ஆசைகளையும் அற்றவர்கள் மனிதர்களில் குறைவே ஆகும், ஆகவேதான் பற்றற்ற வாழ்க்கையை இந்து மதம் போதிக்கின்றது.ஆசையில் பற்று இல்லாதவனுக்கு மறுபிறவி இல்லை. அவன்தான் பிறவி பெருங்கடலை தாண்ட முடியும். எனவேதான் அருணகிரி நாதர் திருப்புகழில் மாவேழ் சன்னங்கெட மாயைவிடா மூவேவடனை ” என்று பாடுகிறார், எனவே பிறந்து இந்த உலகில் வாழ்வதற்கு ஆசையே காரணமாகும்.
செல்வம் நிலையான காரணமாக துக்கத்தையே தருகின்றன. எனவே எதிலும் அளவுடன் சம்பாதித்து, அளவுடன் வாழக் கற்றுக் கொள்ளவேண்டும். நேர்மை, ஒழுக்கம், தெய்வ வழிபாடு, பெருந்தன்மை உயிர்களிடம்இரக்கம், போன்ற உத்தம குணங்களுடன் வாழ்பவனுக்கு துன்பம் ஏது? ஒழுக்கத்திலும், அறிவிலும், அன்பிலும் உயர்ந்த பெரியோர்கள் நட்பைப் பெறுவதும், செல்வம் வந்தபோது செருக்கு அடையாமல் தெய்வ திருவருள் பெற்ற மெய் அன்பர்கள் நூல்களை ஆராய்ந்து அதன்படி நடப்பதும், மற்றவர்களுக்கும் போதிப்பதும், தான் பெற்ற இன்பத்தை மற்றவர்களுக்கும் அளித்து பேரின்ப நலையை அடைய வேண்டும். உத்தம குணத்தவனாய் இருக்க வேண்டும். வீணாக, வேண்டாத கேள்விகளை கேட்டு தெய்வத்தை பற்றி எதுவும் புரியாதவர்கள், விதண்டா வாதம் செய்து தானும் குழம்பி, நம்மையும் குழப்பிவிடும். மனிதர்களிடம் பழகாது இருக்க கற்றுக் கொள்ளவேண்டும். எல்லா சீவன்களிடத்தும் அன்பு காட்ட வேண்டும், சீவனிடம் கருனை வந்தால் ஈஸ்வரனிடம் பற்று உண்டாகும், ஈஸ்வரப் பற்றால் ஆசாபாசங்கள், தோசங்கள் அகன்று விடும். ஆசை முதலிய தோசங்கள் அகன்று விட்டால் நிராசை என்ற நிலைபெறும், சீவாத்மாவினை அறியும் தன்மை உண்டாகும். அறிவு வடிவமான பேரின்ப நிலையை அடைந்து துன்பம் ஒழிந்து இன்பம் பெறலாம். அருள் கடாட்சம் பெற்று பேரின்பம் அளித்து பேதமற்ற சொரூபமாமனந்தத்தில் அமருவர் என்பது விதியாகும்.
மனிதனுக்கு உயர்ந்த நிலை எய்த பல அறிவான வழிகள் உண்டு. அவை இசையறிவு, இயலறிவு, சுயஅறிவு, ஐயஅறிவு, உடலறிவு, உயிரறிவு, உலகறிவு முதலியன. இவற்றில் மேன்மையான மெய்அறிவை அறிபவனே அழியாத சீவமுத்தியைஅடைகின்றான். அந்த பேரின்ப பெரிய நிலை அடையவது எப்படி? என்று பக்தி மார்க்கத்தில்வாழ்நது முக்தியடைந்த நாயன்மார்கள் சித்தர்கள், ஆழ்வார்கள் வாழ்ந்து காட்டி நமக்கு வழிகாட்டி சென்றுள்ளார்கள். அந்த பக்தி மார்க்கமே முதல்படியாகும், மேன்மையடைய விரும்பும் மனிதனுக்கு சத்ஸங்கம் தேவார இசைப்பாடல்கள், பசனை போன்ற இறை வழிகளே முக்திக்கு வழி வகுக்கின்றன. பக்தியின்று முக்திக்கு வழிவகுக்காது.
பரமார்த்திக்க மார்க்கத்தை கடைபிடித்து, பிறருக்கு போதித்து முக்தி அடைந்த சைவ சமய குரவர்கள் அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆவர்கள், இவர்களின் தேவார பண்ணிசையகளையும் பக்த சேவைகளையும் செய்து மேன்மையடைய வழிகோள வேண்டும். இறைவனுடைய அரிய, பெரிய திருவிளையாடல்களையும்,அடியார்களை ஆட்கொண்ட கதைகளையும் கூறி நம்மை பரவசப்படுத்தி அவ்வழி நடக்க வழிகோழியுள்ளார்கள். அவ்வழியே நடந்தவர்களுக்கு இறைவனே குருபகவானாக வந்து உபதேசித்தார்கள் என்பது உண்மை. இதுபோன்ற அதிசயங்கள் அனேகம் உண்டு.