Aside

“நான்” ” எனது” என்று சொல்லாதவர் யாரேனும் உண்டோ? நம்முடைய ஆணவமே ” நான் ” எனது ” என வெளிப்படுகிறது, நல்லவற்றை நானே செய்தேன் என்கிறாம். எதையும் எனது , என்னுைடயது எனக்கே உரியது இது” என்கிறோ ம். எதிலும் எங்கும் தானே நாயகனாக இருக்க வேண்டும் மாலை, மரியாதைகள் அனைத்தும் தனக்கே உரித்தாகவேண்டும் என்று ஆசை படுகின்றனர் இது நான் என்ற ஆணவத்தைக் காட்டுகிறது. எனது என்ற ஆணவம் எவ்வழியாவது தனது பெயர் பிரபல்யம் அடையவேண்டும் என்ற ஆசை. தனக்கு ஏற்பட்ட புகழ் தவறான வழியில் வந்துள்ளது என்பதைக்கூட பலர் உணர்வதில்லை, புகழும் ஓர் ஆணவந்தானே. ஆணவம் என்பது ஒவ்வொருவரிடமும் அவரவர் தகுதிக்கேற்ப வருவது. இது உள்ளிருந்து வெளிப்பட்டுக் கொண்டே இருக்கிறது. நான் என்பது தன்னையே உயர்த்தி காட்டும் பற்றாகும். எனது என்பது தன்னின் வேறான வீடு, வாகனம், வியாபாரம், பதவி, புகழ், எனப்புறப்பெயர்களை உயர்த்திக் காட்டும் புறப்பற்றாகும். இக் கருத்தை மாணிக்க வாசகர்
” கோனாகி யான்எனது என்று அவரவைரைக் கூத்தாட்டு வான் ஆகி” எனப்பாடுகிறார். நான் எனது என்பவரிடம் இறைவனும் அவ்வழியில் உள்புகுந்து அவர்களை பக்குவப்படுத்துவான் என்கிறார். இதனையே வள்ளுவரும்
” யான்எனது என்னும் ெசருக்கு அறுப்பான் வானேரர்க்கு
உயர்ந்த உலகம் புகும்,” என்கிறார். தன்னின் வேறான உடம்பை நான் என்று தன்னின் வேறான ெபாருட்களை எனது என்று சொல்லாதவனே ( ஆணவத்தை உணர்ந்து நீங்கியவனே வானோர்க்கும் உயர்ந்த வீடு என்னும் மோட்சத்தை அடைவான்என்கிறார் அவர். நான் எனது என்னும் ஆணவமே உலக ஆசைகளை கூட்டி உலகியலை நாட வைக்கிறது, இப் பற்றை இந்த ஆணவத்தை விட்டால் இறைவனை அடைய முடியும்.